Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 63


வணக்கம் நண்பர்களே!
                    தீபாவளிக்கு எனக்கு போனிலும் மெயிலும் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நன்றி. ஊரில் இருந்து சென்னை வந்துவிட்டேன். இனி தொடர்ந்து நமது வேலையை பார்க்க வேண்டியது தான. 

ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இந்த ராகு தசாவும் அனைவருக்கும் நன்றாக போய்சேர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். அதிகப்பட்சமாக இதனை கேட்டு தான் தொடர்புக்கொள்கிறார்கள். எந்த ஒரு விசயத்தை எடுத்தாலும் முடிந்தளவு அதனை எளிமையாக சொல்லிவிடவேண்டும் என்று நினைப்பதால் மட்டுமே இது உங்களுக்கு போய் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

பல பேர்கள் என்னை தொடர்புக்கொண்டு ராகு இந்த வீட்டில் அமர்ந்திருக்கிறது அதற்கு என்ன பலன் என்பது போல் தான் கேட்கிறார்கள். ஒரு வீட்டை மட்டும் வைத்துக்கொண்டு நாம் பலனை சொல்லிவிடமுடியாது. ஜாதகத்தை வைத்து தான் பலனை சொல்லவேண்டும். முக்கியமான ஒரு விசயம் என்ன என்றால் லக்கினாதிபதி பலன் அதிகமாக இருக்கின்றதா அல்லது தசாநாதனின் பலம் அதிகம் இருக்கின்றதா என்று பார்த்து அதற்க்கு தகுந்தார்போல் நாம் பலனை சொல்லவேண்டும்.

லக்கினாதிபதி வலுவாக இருக்கும்பொழுது தசாநாதனின் பலம் குறைவாக இருந்தால் தசாவால் எந்த நல்லதும் நடக்க வாய்ப்பில்லை. அப்பொழுது நீங்கள் லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் புத்தி நாதன் நிற்கிறானே அதனை வைத்து சொல்லவேண்டும். தசாநாதன் நன்றாக இருந்தால் தசாநாதனுக்கு புத்தி நாதன் எங்கு நிற்கிறான் என்று பார்த்து பலனை சொல்லவேண்டும். ராகு ஆறில் நின்று நல்ல பலனை வழங்குகிறார் என்றால் ஆறாம் வீட்டை லக்கினமாக எடு்த்துக்கொண்டு பலனை சொல்ல வேண்டும்.

ராகு நமக்கு நல்லது மட்டுமே செய்வார் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டும் இருந்துவிடகூடாது. ஏன் என்றால் நல்லதை கொடுத்துக்கொண்டே இருப்பார் திடீர் என்று உடனே கெடுதல் பலனை கொடுக்க ஆரம்பித்துவிடுவார். அது எல்லாம் ஜாதகத்தில் பிற கிரகங்கள் செய்யும் வேலையால் மாட்டிக்கொள்வோம். உங்களின் முழுஜாதகத்தையும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ராகுவை பொருத்தவரை ஒரு அடியாவது அடிக்காமல் தசாவை முடிக்கமாட்டான். அவன் எப்படி நன்றாக இருந்தாலும் ஒரு அடியாவது நாம் வாங்கி தான் ஆகவேண்டும்.ராகு நமக்கு நல்லது மட்டும் செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். கொஞ்சம் விழி்ப்போடு இருப்பது நலம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: