Followers

Thursday, November 21, 2013

ஜாதகத்தின் அவசியம்


ணக்கம் ண்பர்களே!
                     நிறைய ஆன்மீக தகவல்களை எழுதினாலும் சோதிடத்தையும் அந்தளவுக்கு எழுதுகிறோம் இது எதனால் என்று ஒரு நண்பர் கேட்டிருந்தால். ஆன்மீகம் எழுதுகிறீர்கள் அப்புறம் ஏன் சோதிடத்தை நம்புகிறீர்கள் என்று கேடடு இருந்தார்.

நாம் என்ன தான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் அடுத்தவர்களுக்கு நம்மால் ஒன்று நடைபெறவேண்டும் என்றால் அதற்கு சோதிடம் என்பது கண்டிப்பாக தேவை. நான் முன்னேற்றம் அடைவதற்க்கு ஆன்மீகம் தேவை தான் இல்லை என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் என்னை நாடி வருபவர்களுக்கு என்னால் நம்மை நடைபெறவேண்டும் என்றால் அதற்கு அவர்களின் ஜாதகம் தேவை.

ஒரு மனிதனின் ஜாதகத்தை வைத்து தான் அவர்களுக்கு நம்மால் நிரந்தர நன்மையளிக்க முடியும்.கிரகங்களை மீறி செயல்படுவது என்பது கடினமான வேலை. அதன் விதியில் சென்றுக்கொண்டு இருக்கும். ஒரு அம்மனை அல்லது ஏதோ ஒரு தெய்வத்தை வைத்து செய்தால் அது ஒரு குறிப்பிட்ட நாள் வரை அவர்களுக்கு நன்மையளிக்கும். மறுபடியும் பழைய நிலைமையிலேயே அவர்களின் வாழ்க்கை திரும்பும். ஒரு ஜாதகத்தை வைத்து அதே அம்மனை அல்லது ஏதோ ஒரு தெய்வத்தை வைத்து அவர்களுக்கு செய்யும்பொழுது அவர்களுக்கு நிரந்தர தீர்வை கொடுத்துவிடும்.

ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் பல விசயங்கள் இருக்கின்றன அது எங்களுக்கு தென்படும் அதனை வைத்து வரும் நபர்களுக்கு நிவர்த்தி செய்துக்கொடுத்துவிடுவோம். இதனை செய்வதற்க்கு ஒரு சில கட்டுபாடு உண்டு.

இப்பொழுது என்னிடம் ஒரு கம்பெனி நடத்துபவர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரின் கம்பெனி மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர் அதனால் மூழ்க போகிறார் என்றால் உடனே அவரின் ஜாதகத்தை வைத்து ஒரு சின்ன வேலையில் அவரின் தொழிலை நிலை நிறுத்துவேன்.நஷ்டத்தில் இருந்து கம்பெனி மீளும்.

சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகம் இல்லாமல் எதனையும் நம்மால் செய்வது கடினம். ஜாதகம் இல்லாமல் செய்தால் சற்று பிரச்சினையை குறையும். நிரந்தரமாக பிரச்சினை குறையவேண்டும் என்றால் அதற்கு நமக்கு சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகம் வேண்டும்.

ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு கட்டங்கள் வெறும் கட்டங்கள் கிடையாது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து விசயமும் அதில் அடங்கி இருக்கின்றது. பல பிறவிகளை தாங்கி நிற்க்கும் கட்டங்கள் மற்றும் என்ன ஆகிப்போகின்றீர்கள் என்பதை காட்டும் கட்டங்களும் அது தான். ஜாதகம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆன்மீகத்தில் ஜாதகத்தை வைத்ததே அந்த காரணத்தால் மட்டுமே.

ஜாதகத்தை வைத்து தீர்வு கொடுப்பது என்பது ஒரு சிறந்த கலை. அதனை அனைவருக்கும் கொடுப்பதற்க்கு கொஞ்சம் கடினம் ஏன் என்றால் இதற்கு செலவிடும் நேரம் மற்றும் அதற்கு செய்யும் பணச்செலவு என்பது அதிகமாக இருக்கும். 

சம்பந்தப்பட்ட நபரை வைத்து எதனையும் செய்வதில்லை. நாங்களே செய்யும் வேலை இது. எப்படி பணம் கொடுப்பார்கள்.இதில் உள்ள சிக்கலே இது மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: