Followers

Thursday, November 14, 2013

ஆன்மீக அனுபவங்கள் 133


வணக்கம் நண்பர்களே!
                     ஒவ்வொரு ஊர்களுக்கும் நான் செல்லும்பொழுது பல நண்பர்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். அவர்கள் வந்து சந்திக்கும்பொழுது சொல்லும் வார்த்தை என்ன என்றால் உங்களோடு பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். பேசுவதற்க்கு தயக்கமாக இருந்தது. ஊர்க்கு வந்தவுடன் பேசினேன் என்று சொல்லுகிறார்கள்.

நீங்கள் என்னிடம் பேசுவதற்க்கு தயக்க படதேவையில்லை.நீங்கள் நினைப்பது போல் எல்லாம் நான் இல்லை. சாதாரணமாக அனைவருடனும் பழககூடியவன் தான் நான். சாமியார் லிஸ்டில் என்னை சேர்த்துவிடாதீர்கள். ஆன்மீகம் என்றால் அனைவர்களையும் புரிந்துக்கொள்ளகின்ற பக்குவம் தான் ஆன்மீகம். வெளிவேஷங்கள் போட்டுக்கொண்டு திரிவது இல்லை. மனதில் ஆன்மீகம் இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். வெளியில் தெரிவது போல் ஆன்மீகம் தேவையற்ற ஒன்று.

உங்களுக்காக கீழே இறங்கிவருபவன் தான் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும். சிம்மாசனத்தில் அமர்ந்துக்கொண்டு இருப்பவன் ஆன்மீகவாதி கிடையாது.  உங்களை சிம்மாசனத்தில் அமர்த்தி வைப்பவன் ஆன்மீகவாதி.

இன்று ஒன்று சிந்தனைக்கு வந்தது. அது என்ன என்றால் ரிஷிகளின் சாபம். ரிஷிகள் தவம் செய்யும்பொழுது அவர்களை நாம் தொந்தவு செய்தால் அவர்கள் சாபம் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லுகிறார்கள்.

ஒரு சாதாரண மனிதன் பத்து நாட்களுக்கு கோவில் சென்றாலே அவனுக்குள் கடவுள் தன்மையை நாம் காணலாம். அந்த மனிதனை நாம் தொந்தரவு செய்தாலே எப்படி சொல்லுவார்கள் என்றால் அனைத்தும் கடவுள் செயல் என்று சொல்லுவார்கள்.  இது தான் கடவுளின் செயல் ஆனால் தவம் செய்யும் ரிஷிகள் கோபம் தாங்காமல் சாபம் செய்துவிடுவார்களாம். எப்படி இருக்கின்றது இது. ஒரு சாதாரணமனிதனுக்கு இருக்கும் குணம் கூட இந்த தவம் செய்தவர்களுக்கு இல்லாமல் இருந்து தானே சாபம் விட்டார்கள்.

சாபம் விட்டவர்கள் எழுதிய கருத்துக்கள் எப்படி இருக்கும். அதனை பின்பற்றும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதே உங்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

antonyarun said...

Those who have a wisdom only understand this topic thanks
antony

surya said...

முதல் முறை உங்களுடன் முரண்படுகிறேன். கோபம் என்பது கெட்டவர்களை அழிக்க தேவயான சக்தி. இதை தெய்வங்கள் பயன்படுத்தும் போது நரசிம்ம வதம் என்றும் சூர சம்ஹாரம் என்றும் சொல்லி பெருமைப்படும் நாம் , ரிஷிகளை ஏன் தவறாக கருத வேண்டும்? உங்களை போன்ற ஒரு நல்ல ஆத்மா , பெரியோர்களை பிழை சொல்வது வருத்தமாக இருக்கிறது.

siva said...

உங்களுக்காக கீழே இறங்கிவருபவன் தான் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும். சிம்மாசனத்தில் அமர்ந்துக்கொண்டு இருப்பவன் ஆன்மீகவாதி கிடையாது. உங்களை சிம்மாசனத்தில் அமர்த்தி வைப்பவன் ஆன்மீகவாதி.-100% True. I agree with this.