Followers

Friday, November 8, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 77


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். இப்பதிவில் ராகு புதனோடு சேர்ந்து தசா நடைபெறும்பொழுது எப்படி பல்ன் இருக்கும் என்று கொஞ்சம் பார்க்கலாம்.

ராகு புதனோடு சேரும்பொழுது ஏஜென்சி தொழிலில் கொடிகட்டி பறக்கலாம். மாமன் வழியில் பெரிய உதவி கிடைக்கும். வியாபாரம் நடத்துபவர்கள் உங்களை தொடர்புக்கொள்வார்கள். நகர வாழ்க்கையை அதிகம் விரும்புவீர்கள்.

உடலில் தேமல் விழும். தோல்வியாதிகள் அதிகமாக வரும். அலர்ஜி போன்றவையும் வரும். உடலில் ஒரு வித துர்நாற்றம் அடிக்கும். குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் யாத்திரை செல்வதையும் ஏற்படுத்திதரும்.காதில் சீழ் வடியும். தொலைத்தொடர்புகள் வழியாக நல்ல செய்திவரும்.

தாய்வழி உறவினர்கள் சொந்தம்கொண்டாடுவார்கள் அதன் வழியாக உங்களுக்கும் ஏற்றம் ஏற்படும்.. உங்களின் உறவில் ஏதோ ஒரு மாமன் உங்களுக்கு நல்லதை செய்வார்.ராகுவோடு புதன் சேர்ந்து இருந்து ராகு தசா நடைபெற்றால் உங்களின் உடலில் உள்ள தோல்களின் மீது அதிக கவனம் தேவை.

ஆள் கொஞ்சம் வில்லங்கமாக இருந்தால் போலியாக பேப்பர் தயார் செய்து அனைத்திலும் வில்லகம் செய்து சுருட்டிவிடுவார். போலி செக் கொடுப்பது எல்லாம் இப்படியோரு காம்பினேஷனில் தான் நடைபெறும்.

தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். 


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: