Followers

Tuesday, November 5, 2013

ஆன்மீக அனுபவங்கள் 132


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலர் என்னிடம் நான் ஒரு குருவை வணங்கிவருகிறேன். அவரின் நாமத்தை மட்டும் எப்பொழுதும் சொல்லிவருகிறேன். வேறு எந்த தெய்வத்தையும் நான் வணங்குவது கிடையாது. இப்படி செய்து வரலாமா என்று கேட்பார்கள்.

குரு என்பவர் உங்களுக்கு கடவுளை காட்டுபவர் தானே தவிர கடவுள் கிடையாது. அவர் உணர்ந்த கடவுளை உங்களிடம் காட்டுகிறார். குரு என்பவர் ஒரு பாலம். அந்த பாலம் கடவுளை சென்றுடைய ஒரு வழி அவ்வளவுதான். குரு இந்த உலகதை படைக்கவில்லை கடவுள் தான் படைத்தார். உங்களின் குரு உங்களோடு வாழ்ந்துக்கொண்டு இருப்பார். அவர் கடவுள் கிடையாது. குருவை மட்டும் வணங்கினால் போதாது கடவுளையும் வணங்க வேண்டும்.

என்னுடைய குரு நல்ல நிலையில் இருப்பவர் தான் அவரை நான் வணங்குவேன். அவருக்கு மரியாதை மட்டும் செலுத்துவேன். அவரின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறேன். அவரை மட்டும் வணங்குவது கிடையாது. அம்மனையும் எந்த நேரமும் துதிக்கொண்டு இருக்கின்றேன். 

நான் எனது குருவின் போட்டோவை வைத்து வணங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவரே தவிர்ப்பார் ஏன் என்றால் நான் ஒன்றும் கிடையாது. இறைஅருளை உணர்ந்திருக்கிறேன் அது மட்டும் என்னுடைய சக்தி. இந்த உலகத்தை படைத்து நம்மை எல்லாம் காத்துக்கொண்டு இருக்கிறானே அந்த கடவுளை வணங்கு என்று சொல்லுவார்.

நீங்கள் குருவை மட்டும் வணங்கிக்கொண்டு இருந்தால் ஒரு அளவோடு தான் நீங்கள் இருக்கமுடியுமே தவிர கடவுளிடம் நேரிடையாக செல்வது கொஞ்சம் கடினமான ஒன்று மட்டுமே. குருவை வணங்குங்கள் அதோடு குரு காட்டிய கடவுளையு்ம் வணங்குங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: