Followers

Tuesday, November 19, 2013

தீபம்


வணக்கம் நண்பர்களே!
                     கார்த்திகை மாதம் என்பதால் என்னவோ வரும் கேள்விகள் எல்லாம் தீபத்தைப்பற்றியே இருக்கின்றது.

தெய்வங்களை ஒளிவடிவில் காண்பது சிறப்பு என்பதாலே அனைவரும் தீபத்திற்க்கு முதல் மரியாதை அளிக்கிறார்கள். தீபத்தை பார்ப்பதே நமக்கு புண்ணியம். 

வீட்டில் நான் சொன்னபடி தீபத்தை ஏற்றும்பொழுது அது மேற்கு அல்லது தெய்கு திசையாக வருகின்றது என்று பல நண்பர்கள் சொல்லியுள்ளனர். இதற்கு தீர்வு உங்கள் வீட்டில் பூஜை அறையை மாற்றுவதை விட வேறு வழி இல்லை என்பது மட்டுமே. 

மேற்கு திசை மற்றும் தெற்கு திசையில் விளக்கு ஏற்றும்பொழுது அந்த தெய்வம் உக்கிர தெய்வங்களாக இருந்தால் பரவாயில்லை விளக்கை ஏற்றலாம். சாதாரண தெய்வங்களாக இருந்தால் விளக்கை அப்படி ஏற்றாதீர்கள்.

விளக்கை ஏற்றுவது கிழக்கு மற்றும் வடக்கு பார்த்து எரியும் பொழுது அனைத்தையும் பெற்றுக்கொடுத்துவிடும். முதல் தரமான திசைகள் இது. கூடுமானவரை இப்படி அமைத்துக்கொள்வது நல்லது.

உங்களுக்கு மனது கஷ்டமாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே என்ன செய்யுங்கள் உங்களின் வீட்டில் அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு சென்று ஒரு தீபத்தை வாங்கி விளக்கை ஏற்றி ஐந்து நிமிடம் பிராத்தனை செய்துவிட்டு வந்தால் போதும். மனதில் சந்தோஷம் ஏற்பட்டுவிடும்.

காயத்ரி மந்திரத்தை செய்பவர்களுக்கு சொல்லும் கருத்து எந்த படத்தையும் வைத்து செய்யவேண்டியதில்லை. விளக்கை வைத்து மந்திரத்தை செய்யுங்கள் என்று சொல்லுகிறேன். விளக்கு தான் தெய்வம் என்பதால் அப்படி சொல்லுகிறேன். தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்தால் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: