Followers

Thursday, November 21, 2013

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி


ணக்கம் ண்பர்களே!
                    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே... இந்த பாடலை நீங்கள் கேடடு இருக்கலாம் அல்லது படித்து இருக்கலாம். உண்மையாக வரிகள் இது. 

நாம் ஊரு முழுவதும் தேடினாலும் அந்த பரம்பொருளை நம்மில் தான் காணமுடியுமே தவிர வெளியில் காணமுடியாது. நான் ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள சக்தி வெளிபடுகிறது என்பதையும் என்னுள்ளே அது நடைபெறும். அப்படி தான் கண்டுக்கொள்வோம். அந்த கோவிலின் சக்தி  நம் உடலில் காட்டிக்கொடுக்கும்.

ஒரு தெய்வம் வெளியில் தெரிவது எல்லாம் சாதாரணமான காரியம் இல்லை. தெய்வத்தின் அருளை நமது உடலில் தான் பார்க்கவேண்டுமே தவிர வெளியில் இல்லை. சாதனை செய்பவனின் முதலில் கோவில்களை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசிக்க வேண்டும் பிறகு அதனை தவிர்த்து நமது உடலில் அனைத்தையும் கண்டுக்கொள்ளமுடியும்.

பழமையான காலத்தில் நமது ஆன்மீகவாதிகள் யாரும் கூட்டத்தை கூட்டமாட்டார்கள். பிற மதங்களில் கூட்டம் கூட்டி அந்த மக்கள் வெளியில் எங்கும் சென்றுவிடகூடாது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். நம்மிடம் விசயம் இருக்கும்பொழுது நம்மை தேடி அனைவரும் வருவார்கள். கூட்டம் கூட்டி அங்கு வாருங்கள் இங்கு வாருங்கள் என்று சொல்லவேண்டியதில்லை. காசிக்கு சென்றாலும் இராமேஸ்வரத்திற்க்கு சென்றாலும் உங்களுக்குள் தான் தெய்வம் காட்சிளிப்பது நடக்குமெ தவிர வெளியில் ஒருபோதும் நடைபெறாது. உங்களுக்குள் தேடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: