Followers

Tuesday, November 19, 2013

தொழில் அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                     எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது அது என்ன என்றால் முடிந்தவரை நடந்தே செல்வது. இப்படி நடந்து செல்லும்பொழுது எனக்கு நிறைய அனுபவம் கிடைக்கின்றது. ஒவ்வொரு இடத்தை பற்றியும் ஒவ்வொரு மக்களை பற்றியும் அந்த மக்கள் பின்பற்றும் நடைமுறைகள் பற்றியும் நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

சென்னை பொருத்தவரை அதிகமாக நடந்தே சென்றுவிடுவேன். இப்படி நடந்துச்செல்லும்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் எப்படி வியாபாரம் நடக்கிறது என்ன வியாபாரம் நடக்கிறது என்றும் பார்ப்பேன். ஒரு பகுதியில் போகும்பொழுது அந்த பகுதியில் புதிதாக என்ன கடை திறந்து இருக்கின்றார்கள் என்று பார்ப்பது உண்டு. பிறகு ஒரு சில மாதங்கள் சென்ற பிறகு அந்த கடை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்றும் பார்ப்பது உண்டு.

ஒரு சில இடங்களில் இந்த மாதம் புதிதாக ஒரு கடை திறந்தால் அதிகப்பட்சம் மூன்று மாதங்களில் அந்த கடையை மூடிவிடுகிறார்கள். ஒரு சில கடைகள் திறந்து இருக்கின்றது. அதுவும் வியாபாரம் எல்லாம் சுமாராக சென்றுக்கொண்டு இருக்கின்றது. 

வியாபாரத்தில் வெற்றி பெறுவது என்பது நூற்றில் பத்து சதவீதம் இருக்கலாம். மீதி எல்லாம் வியாபாரத்தில் நஷ்டம் செய்வதற்க்கென்றே இறங்கியவர்களாக இருக்கின்றார்கள். இது எதனால் என்றால் சோதிடத்தில் அப்படிப்பட்ட கிரகநிலைகள் இருக்கும்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற பழமொழியில் போல் ஜாதகத்தில் நல்ல நிலையில் கிரகங்கள் இருந்தால் தொழில் சிறக்கும் அப்படி இல்லை என்றால் தொழிலால் அனைத்தையும் இழக்கவேண்டிவரும்.

தொழிலை நிர்ணனிக்கும் பத்தாவது வீடு நன்றாக இருக்கவேண்டும். லாபத்தை காட்டும் பதினோராவது வீடு நன்றாக இருக்கவேண்டும். நமக்கு அமையும் தொழிலார்களை காட்டும் ஆறாவது வீடு நன்றாக இருக்கவேண்டும். தினமும் தொழில் செய்ய பணம் தினமும் வரவேண்டும் அதற்க்கு இரண்டாவது வீடு நன்றாக இருக்கவேண்டும். ஒரு தொழில் நடத்த சனிக்கிரகம் நன்றாக இருக்கவேண்டும். ஒவ்வொரு தொழிலை பொருத்து அந்தந்த கிரகம் நன்றாக இருக்கவேண்டும். இத்தனையும் நன்றாக இருந்தால் தான் ஒரு தொழில் வெற்றி பெறும்.

இதில் எந்த வீடு அடிப்படுகிறதோ அந்த இடத்தில் பிரச்சினையில் தொழில் மாட்டிக்கொள்ளும்.நீங்களே சொல்லுங்கள் இத்தனை வீடு ஒருத்தருக்கு நன்றாக இருக்குமா? கண்டிப்பாக இருக்காது. ஒரு தொழில் அதிபர் ஒரு தொழிலை நன்றாக நடத்த அவர் கும்பிடும் தெய்வம் தான் வழிவகுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் ஆன்மீகவாதி வழிவகுக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே தொழில் சிறக்கும்.

தொழிலை நன்றாக நடத்துபவர்களை பார்த்துவிட்டு அதனையே பின்பற்றியே தொழில் ஆரம்பிப்பவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிடமுடியாது. ஊரில் ஒருத்தர் வெற்றி பெறுவார். மீதி உள்ளவர்கள் நஷ்டம் அடைவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear,


Nice Topic Thanks
I have one doubt .Why so many illegal business grow well.What is the power is supporting?
Antony