Followers

Sunday, November 3, 2013

வெள்ளம் வரும் முன் அணை


வணக்கம் நண்பர்களே!
                    நான் பல நேரங்களில் நினைத்து பார்த்தது உண்டு. நம்மிடம் அம்மன் இருக்கும்பொழுதே பல பிரச்சினைகளை நாம் சமாளிக்க திணறுகிறோம். எந்த ஒரு சக்தியும் இல்லாமல் இருந்துக்கொண்டு சாதாரணமக்கள் எப்படி தான் அவர்களின் பிரச்சினையை சமாளிக்கிறார்கள் என்று நினைத்து பார்த்தது உண்டு.

இன்றைக்கு இருக்கும் காலத்தில் நிமிடத்திற்க்கு ஒரு பிரச்சினை முளைத்துக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு பிரச்சினையும் சமாளிக்க தனி ஆற்றல் வேண்டும். வரும் பிரச்சினையை சமாளித்தாலே போதும்.அதற்கு தான் ஆன்மீகம் வழி செய்யும். சரி எப்படி தான் ஆன்மீகத்தின் வழியில் சரிசெய்வது என்று கேட்டால் நீங்கள் ஒன்று சக்தியை எடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் ஆன்மீகவாதியின் துணையை நாடி அவர்களின் பிரச்சினையை சமாளிக்கவேண்டும். சரி முதலில் உள்ளது கடினமான ஒன்று. அடுத்தது எளிதான ஒன்று மட்டுமே.

ஆன்மீகவாதியை தொடர்பு வைத்துக்கொண்டு செய்துவிடமுடியும். ஆன்மீகவாதியை தொடர்பு வைத்துக்கொண்டு செய்வதைவிட நீங்களே ஆன்மீகவாதியாக மாறிவிடுவது நல்லது. 

இப்பொழுது என்னிடம் வியாபாரத்திற்க்கு என்று வந்தவர்களின் குடும்பங்கள் ஒரு சரியான பாதுகாப்பு வளையத்திற்க்குள் வந்துவிட்டார்கள். அவர்களின் குடும்பத்தை ஒரு கவசம் போல் போட்டு காத்து வருகிறேன். ஏன் என்றால் ஒரு நபரை வியாபாரத்திற்க்கு என்று தேர்ந்தெடுக்கும்பொழுது அவர்களின் வீட்டில் உள்ள மொத்த நபர்களின் ஜாதகத்தையும் வாங்கி அவர்களுக்கு என்று சிறப்பான முறையில் தயார் செய்யப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது.

உங்களின் குடும்பத்தினரின் ஜாதகத்தையும் அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டு அவர்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக பார்த்து தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். வெள்ளம் வரும்முன்பே அணைபோட்டுவிட வேண்டும். வந்த பிறகு அணைபோடுவது முடியாத காரியம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: