Followers

Friday, April 30, 2010

ராசிகள்


மேஷம்

இந்த ராசியின் அதிபதி செவ்வாய்.இந்த ராசி வானத்தில் ஆடுபோல் காட்சி அளிக்கிறது.இது செவ்வாய்க்கு மூல திரிகோண ராசி.இந்த ராசிக்கு நண்பன் (அதாவது நட்பு வீடு) குரு. இந்த ராசிக்கு வில்லன் ராகு கேது(அதாவது பகை வீடு).சூரியன் மேஷத்தில் உச்சம்.சந்திரன் சுக்கிரன் புதன் சமம்.சனி கிரகம் இந்த ராசியில் நீசம்.இந்த ராசிக்கு புதன்,சனி ,குரு.ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

ரிஷபம்

இந்த ராசியின் அதிபதி சுக்கிரன்.இந்த ராசி வானத்தில் காளையின் வடிவமாக காட்சி அளிக்கிறது . புதன்,சனி இந்த ராசிக்கு நட்பு வீடு . சூரியன்,குரு இந்த ராசிக்கு பகை வீடு .சந்திரனுக்கு இந்த வீடு மூல திரிகோண ராசி.சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார். ராகு, கேது ஆகிய கிரகங்கள் நீசம்.செவ்வாய் சமம்.இந்த ராசிக்கு குரு.செவ்வாய் ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

மிதுனம்

இந்த ராசியின் அதிபதி புதன். இந்த ராசி வானத்தில் ஆண்,பெண்களின் இரட்டை வடிவம்போல் காட்சி தருகிறது.சுக்கிரன்,சனி,ராகு, கேது இந்த ராசிக்கு நட்பு வீடு. குரு,செவ்வாய் இந்த ராசிக்கு பகை வீடு.சூரியன் சமம். இந்த ராசிக்கு செவ்வாய்,குரு ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

கடகம்

இந்த ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசி வானத்தில் நண்டு போல் காட்சி அளிக்கிறது. குரு.செவ்வாய் இந்த ராசிக்கு நட்பு வீடு. புதன்,சுக்கிரன்,சனி,ராகு,கேது இந்த ராசிக்கு பகை வீடு.இந்த ராசிக்கு சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

சிம்மம்

இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசி வானத்தில் சிங்கம் போன்று தெரிகிறது. சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு.சனி,ராகு,கேது ஆகிய கிரகங்கள் பகை வீடு. சூரியனுக்கு இது மூல திரிகோண ராசி. இந்த ராசிக்கு புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

கன்னி

இந்த ராசியின் அதிபதி புதன் இது வானத்தில் பெண் வடிவத்தில் தெரிகிறது. சந்திரன்,குரு,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு. செவ்வாய்க்கு இது பகை வீடு. புதனுக்கு மூல திரிகோண ராசி.சூரியன் சமம். சுக்கிரன் நீசம் இந்த ராசிக்கு செவ்வாய்,குரு ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

துலாம்

இந்த ராசியின் அதிபதி சுக்கிரன்.இது தராசு போல் காட்சி தருகிறது. புதன்,ராகு,கேதுவுக்கு நட்பு வீடு. குரு இது பகை வீடு. சுக்கிரனுக்கு மூல திரிகோண ராசி.சனி உச்சம்.சந்திரன்,செவ்வாய் சமம். சூரியன் நீசம்.குரு இந்த ராசிக்கு மரணத்தை தருபவர்.

விருச்சகம்

இந்த ராசிக்கு அதிபதி செவ்வாய்,இது தேள் வடிவம் கொண்டது. சூரியன்,குருவுக்கு இது நட்பு வீடு, சனிக்கு இது பகை வீடு. புதன்,சுக்கிரன் சமம். ராகுக்கு,கேதுக்கு உச்சம். சந்திரன் நீசம். புதன், சுக்கிரன்,சனி ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

தனுசு

இந்த ராசிக்கு அதிபதி குரு,இது வில் வடிவம் கொண்டது. சூரியன், செவ்வாய்,சுக்கிரன்,ராகு,கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு. குருவுக்கு மூல திரிகோண ராசி.சந்திரன்,புதன்,சனி சமம். சுக்கிரன்,சனி ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

மகரம்

இந்த ராசிக்கு அதிபதி சனி.இது மான் வடிவம் பாதியிம்,மீன் உருவம் மீதியும் கொண்டது. சுக்கிரன், இராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு.சூரியனுக்கு பகை வீடு சந்திரன்,புதன் சமம். செவ்வாய் உச்சம். குரு நீசம். குரு ,செவ்வாய் ஆகிய கிரகங்கள் மரணத்தை தருபவர்கள்.

கும்பம்

இந்த ராசிக்கு அதிபதி சனி.இது கும்ப வடிவம் கொண்டது.
சுக்கிரனுக்கு இது நட்பு வீடு, சூரியனுக்கு, ராகு, கேதுக்கு பகை வீடு. சந்திரன் புதன் குரு சமம். சனிக்கு மூல திரிகோண ராசி.செவ்வாய் மரணத்தை தருபவர்.

மீனம்

இந்த ராசிக்கு அதிபதி குரு. இது இரண்டு மீன்களின் வடிவம் கொண்டது.சூரியன்,செவ்வாய்,ராகு,கேதுக்கு இது நட்பு வீடு. சுக்கிரன் உச்சம். புதன் நீச்சம். சந்திரன்,சனி சமம். புதன்,சனி,சுக்கிரன் ஆகிய கிரகணங்கள் மரணத்தை தருபவர்கள்.

Wednesday, April 14, 2010

முதல் வணக்கம்




ஜாதக கதம்பம் மூலம் நான் சோதிடத்தை பற்றி படித்ததை எழுத போகிறேன். இதைபோல் நிறைய blog வந்தாலும் சோதிடம் என்பது மிகப்பெரிய கடல் அதில் எவ்வளவு தேடினாலும் அவ்வளவு முத்துகள் அதில் உள்ளன.அதில் நான் எடுத்த முத்துகளை உங்களுக்கு தருகிறேன் . நல்ஆதரவை தாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.