Followers

Thursday, April 23, 2020

அறிவிப்பு


வணக்கம்!
          தற்சமயம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உலகம் இருக்கின்றது. கொரோனா தடுப்பிற்க்காக ஜாதககதம்பத்தின் வழியாக  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நம்மை நோக்கி வரும் ஆபத்துகளை நீக்க இந்த மாதிரியான பூஜைகள் நல்ல வழி வகுக்கும். உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் இந்த பாதிப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்த பூஜைகள் உதவும்.

நீங்கள் உங்களின் தனிப்பட்ட குடும்பத்திற்க்காகவும் அல்லது உலக நன்மைக்காவும் சிறப்பு அம்மன் யாகத்தை செய்ய விரும்பினால் செய்யலாம். இதற்க்கு பூஜைக்கு செய்யும் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு இதனை செய்துக்கொடுக்கிறேன். கொரோனா முடியும் வரை இதனை செய்யலாம் என்று இருக்கிறேன். மிக மிக குறைந்த கட்டணத்தில் இதனை நாம் செய்துக்கொள்ளலாம்.

விருப்படும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். பூஜைக்கு செலவு ரூபாய் 2000 மட்டுமே ஆகும் என்பதால் இந்த கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளவும்.

வங்கி கணக்கு விபரம்
 KVB Bank :  Karur Vysya Bank 
Branch : Pattukkottai 
Name : RAJESH S 
Account Type : Savings account. 
A/C Number : 1623155000063470 
IFSC Code : KVBL0001623 

Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 14, 2020

இனிய நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதககதம்பம் இன்று பதினோராவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. இத்தனை வருடம் பதிவுகளை நான் தந்திருந்தாலும் அதனை படித்து என்னை ஊக்கவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடம் நாம் யூடிப் சேனலை தொடங்கி இருக்கிறோம் அதற்கும் தாங்கள் ஆதரவை அளித்து வருகின்றீர்கள் அதற்கும் நன்றி. தொடர்ந்து என்னோடு பயணம் நீங்கள் செய்யவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 11, 2020

இராகுவிற்க்கு அமாவாசை


வணக்கம்!
          கிரகங்களின் எதிர்மறையாக சுற்றம் கிரகங்கள் இராகு மற்றும் கேது. நல்ல எண்ணங்களில் இருந்து விலகி தீய எண்ணங்களுக்கு செல்லும் வகையில் இருந்தால் அது இராகு என்ற கிரகத்தால் மட்டுமே கொடுக்கமுடியும். மாந்தீரிகம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதனை செய்யும் நபர்கள் அனைவரும் இராகுவின் காரத்துவத்தில் இருந்து வருகின்றனர்.

உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் உங்களின் வளர்ச்சியை கண்டு வியக்கும் நபர்கள்  உங்களின் உறவினர்கள் அனைவரும் உங்களிடம் பொறைமையை காட்டுவார்கள். பொறாமை அதிகமாக சென்று அது மாந்தீரிம் செய்யும் நபர்களை நாடி சென்று அதற்கும் வழி செய்துவிட்டால் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக சென்றுவிடும். உங்களின் வாழ்க்கை முடங்கி போய்விடும்.

மாந்தீரி பாதிப்பில் இருந்து வெளிப்பட அமாவாசை அன்று நீங்கள் இராவிற்க்கு பரிகாரம் செய்யும்பொழுது அந்த பாதிப்பில் இருந்து வெளிவரலாம். அமாவாசை அன்று கிரகங்களின் தாக்கம் குறைவாக பூமிக்கு கிடைக்கும் அந்த நாளை பயன்படுத்திக்கொண்டு மாந்திரீகம் செய்யும் நபர்கள் பூஜையை செய்து எதிராளியை வீழ்த்த நினைப்பார்கள்.

அமாவாசை அன்று இராவிற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வது எப்படி என்றால் நாட்டுமருந்துகடையில் வெட்டிவேர் கிடைக்கும். வெட்டிவேரை வைத்து உங்களை சுற்றி அந்த வெட்டிவேரை நெருப்பில் போடும்பொழுது உங்களிடம் இருக்கும் மாந்தீரிக பாதிப்பு குறையும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன் பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 6, 2020

பரிகாரம் இல்லாத பாவம்


வணக்கம்!
                 ஒருவரின் வாழ்க்கையில் அவர் செய்த பாவத்தில் முதன்மையான பாவம் மற்றும் பரிகாரம் இல்லாத பாவமாக பார்க்கப்படுவது அவர் செய்த கருக்கலைப்பு மட்டுமே இருக்கும். பல குடும்பங்களில் வளர்ச்சி இல்லாத ஒரு நிலை எல்லாம் இருந்தும் நாம் ஏன் இன்னமும் முன்னேற்றம் இல்லாத ஒரு நிலையில் இருக்கின்றோம் என்று தேடவைப்பது குடும்பத்தில் வாரிசு வளர்ச்சி இல்லாமல் இருப்பது அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது அவர் செய்த இந்த கருக்கலைப்பு என்ற பாவமாகவே இருக்கும்.

கருக்கலைப்பு என்பது தெரிந்து செய்து இருக்கலாம் அல்லது இது பாவம் என்று தெரியாமல் செய்து இருக்கலாம் அது எப்படி இருந்தாலும் அந்த பாவத்தை செய்தால் அதற்க்கு நாம் பரிகாரம் தேடமுடியாது. அதற்க்காக நாம் செய்ய வேண்டியது நம்முடைய வாரிசுகளுக்கு இது தவறான ஒரு செயல் என்பதை தெரியப்படுத்துவது மட்டுமே இதற்க்கு தீர்வாக அமையும்.

உங்களுக்குடைய வாரிசுகளுக்கு இது தெரியவந்தால் அவர் இந்த தவறை செய்ய மாட்டார்கள். அவர்கள் இந்த தவறை செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுது அவர்களுக்கு நீங்கள் சொன்ன இந்த அறிவுரை அவர்களுக்கு ஞாபகம் வந்து அவர்களின் தவறை செய்யவிடாமல் தடுக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 5, 2020

பங்குனி உத்திரம்


வணக்கம்!
        பங்குனி உத்திரம் அன்று முருகன் கோவில் சென்று அனைவரும் வழிபட்டு வருவார்கள் ஆனால் தற்பொழுது கொராேனா பாதிப்பால் எந்த ஒரு கோவிலும் திறக்கப்படவில்லை அதனால் பங்குனி உத்திரம் அன்று வீட்டிலேயே இருந்து வழிபடும் முறையைப்பற்றி பார்ப்போம். பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு திருக்கல்யாணம் என்பதால் அதனை தரிசித்தால் அல்லது அதற்க்காக விரதம் இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

தற்சமயம் வீட்டிலேயே இருப்பதால் நீங்கள் முருகனுக்கு விரதத்தை மட்டும் செய்தால் போதும். காலையில் இருந்து எந்த ஒரு ஆகரமும் எடுக்காமல் இருந்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்துவிட்டு சமையல் செய்து மதியம் பூஜையறையில் பூஜை செய்துவிட்டு விரத சாப்பாட்டை சாப்பிடுங்கள். விரத காய்கறியில் வாழைக்காய் மற்றும் பரங்கிகாய் இருந்தால் சிறப்பான ஒன்று தற்சமயம் உங்களுக்கு காய்கறி கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் காய்கறியை வைத்து நீங்கள் சமையல் செய்துக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில் பூஜையறையில் தீபம் ஏற்றி மனதார முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

நீங்கள் கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்று கவலைப்படதேவையில்லை இந்த வழிபாட்டை செய்தாலே போதுமானது. ஜாதகத்தில் செவ்வாயால் நீசம் பெற்றால் அவருக்கு துணிவு மற்றும் நிலங்கள் இருக்காது. என்ன தான் பாடுபட்டாலும் ஒரு நிலம் தனக்கு இல்லையே என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கும். செவ்வாய் பலம் இழந்து காணப்படும் அனைவரும் இந்த வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு