Followers

Monday, May 28, 2012

எங்க குலதெய்வ பூஜை


வணக்கம் நண்பர்களே!  இப்பதிவு எனது சொந்த ஊரில் இருந்து எழுதுகிறேன். எனது குலதெய்வ பூஜை அதனால் எனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. குலதெய்வத்தை பற்றி ஏற்கனவே நான் பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன். நான் சென்னை வந்ததும் உங்களின் ஆவலை பூர்த்தி செய்கிறேன். 

இந்த பதிவே பட்டுக்கோட்டையில் ஒரு நெட் சென்டரில் டைப் செய்து பதிவு ஏற்றியுள்ளேன். எனது குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. எனது சோதிட சேவையின் மிக மிக்கிய காரணகர்தாவாக இருப்பவள் இந்த அன்னை தான். உங்களுக்காக நான் அவளிடம் வேண்டிக்கொள்கிறேன். 

இது இருப்பது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு் தாலுக்கா ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் உள்ளது. இது இருக்கும் தெரு பெயர் பாலாயிக்குடிக்காடு. இந்த கோவில் ஒரு சில குடும்பத்திற்கு சொந்தமான கோவில். ஆனால் இவள் செய்யும் கருணையால் பல குடும்பங்கள் இந்த கோவிலை தன் குலதெய்வமாகவே கும்பிட்டுவருகிறார்கள். இந்த அன்னை செய்த செயலை வைத்து பதிவு எழுதவேண்டும் என்றால் ஆயிரம் பதிவு போடலாம் அந்த அளவுக்கு சிறப்பு இருக்கிறது இதனைப் பற்றி நான் எழுதுகிறேன்.

உங்களுக்கு தேவையான அனைத்து வளத்தையும் அவள் அளிப்பாள். நமது பதிவு வரும் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அதே நேரம் எனது நேர பற்றாக குறைவால் உங்களை நான் கூப்பிடமுடியவில்லை. உங்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அன்னையின் அருளால் அடுத்த வருடம் நடைபெறும் பூஜை யில் உங்களை நான் கூப்பிடுகிறேன். இடையில் ஏதும் சிறப்பு விழா நடந்தாலும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.

நமது சோதிட ஆலோசனைக்காக தொடர்பு கொண்டவர்கள் இரண்டு நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். சென்னை வந்தவுடன் உங்களின் தேவையை நிறைவேற்றுகிறேன்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, May 27, 2012

தசா பலன்கள் 1



வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் பார்க்கபோவது தசாபலன்களைப் பற்றிதான். தசாபலனின் பதிவின் தொடர்ச்சி இது ஒருவனுக்கு முதல் தசை என்பது அந்த ஜாதகனின் பிறந்த நட்சத்திரத்தையொட்டி தான் ஆரம்பம் ஆகும். ஒருவன் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு சந்திர தசை தான் முதல் தசையாக ஆரம்பம் ஆகும். ஒருவன் மகம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு முதல் தசையாக கேது தசா தான் முதல் தசாதான் ஆரம்பம் ஆகும். 

ஒவ்வொருவருக்கும் ஆரம்பமாகும் முதல் தசை ஜன்ம நட்சத்திரத்தின் முழு காலமும் இருக்காது. ஒருவருக்கு திருவோன நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம். அந்த தசை முழுமையாக சந்திரன் பத்து வருடம் இருக்காது ஒரு சிலருக்கு 1 வருடம் இருக்கலாம் அல்லது குறைந்த நாட்களாக இருக்கலாம். 

திருவோணம் நட்சத்திரம் ஆரம்பித்து முதல் விநாடியில் பிறந்தால் சந்திரன் தசை 10 வருடமும் இருக்கும். தசா நாட்களை முடிவு செய்வது அந்த நட்சத்திரம் கடக்கும் விநாடியை பொருத்தது. கர்ப்ப செல் இருப்பை கணிப்பை வைத்துதான் தசா நாட்கள் கண்டறிய முடியும். இந்த கணக்கு எல்லாம் கொஞ்சம் காலம் சென்றவுடன் நான் எழுதுகிறேன். இப்பொழுது எழுதினால் புதியவர்களுக்கு கடினமாக இருக்கும். 

புக்தி

புக்தி என்பது தசையில் ஒரு பாகம்( Sub-period) எனப்படும். உதாரணமாக சந்திரன் தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரன் 10 வருடமும் முழுமையாக ஆட்சி நடத்தாது. சந்திரன் தசாவில் ஒன்பது கிரகமும் ஒவ்வொன்றாக சந்திரனுக்கு கீழ் ஆட்சி நடத்துவார்கள். ஒருவருக்கு பிறந்தபோது சந்திரன் தசா ஆரம்பித்தால் முதல் புக்தி சந்திரன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது. அவர் சந்திரன் தசாவில் எந்த புக்தியிலும் பிறந்து இருக்கலாம்.

முழுமையாக ஒரு தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தசாவின் நாயகன் தான் முதல் புக்தி நாதனாக வருவார். உதாரணமாக ஒருவனுக்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் தசாவில் செவ்வாய் புக்தி தான் ஆரம்பம் ஆகும். அதன் பிறகு ராகு புக்தி என்று வரும். இவ்வாறாக ஒவ்வொன்றாக புக்தி வரும். ஒன்பது கிரகத்தின் புக்தியும் வரும்.

புக்தியின் பலன் என்ன ? 

ஒரு ஜாதகனுக்கு ஒரு கிரகத்தின் கெடுதல் தசா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த கிரகத்தின் தசா முழுவதும் கெடுதல் நடக்காது. இடையில் வரும் புக்தி நாதன் அந்த கெட்ட கிரகத்தின் கெடுபலனை குறைத்து நல்ல பலனை தருவார். அதைபோல் ஒருவருக்கு ஒரு கிரகத்தின் நல்ல தசா நடக்கும்போது அந்த கிரகத்தின் முழுகாலமும் நன்மை நடக்காது இடையில் வரும் கெட்ட புக்தி நல்ல பலனை குறைத்து கெடு பலனை தருவார். இதுதான் புக்தியின் பலன்.

என்ன தெரிகிறது என்றால் ஒரு நன்மை நடந்தால் அடுத்து உனக்கு ஆப்பு தான் டா என்று கடவுள் சோதிடம் மூலமாக நமக்கு சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். அதுதான் நம் மதம் இரண்டு நிலையிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

நான் பார்த்த ஜாதகங்களில் ஒரு சிலருக்கு ஒரு நல்ல இடத்தில் இருக்கும் நல்ல கிரகத்தின் தசா முழுவதும் நன்மை தந்து இருக்கிறது. ஒரு சிலருக்கு கெட்ட இடத்தில் இருக்கும் தசா முழுவதும் கெடுதலும் செய்தும் இருக்கிறது. இது என் அனுபவம். 

என்ன நண்பர்களே இப்பதிவில் தசாவைப் பற்றி தந்தது போதும் என்று நினைக்கிறேன். நல்ல செய்தியுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




அடிப்படை தகவல்கள்



வணக்கம் நண்பர்களே ! 
 கட்டண சோதிடம் ஆரம்பித்தவுடன் ஒரு சிலர் மட்டும் தொடர்பு கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு விரைவில் ஆலோசனை தருகிறேன். இலவச சோதிட ஆலோசனையில் வந்தவர்கள் தான் கட்டண சோதிடத்திற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கிறேன். 

இந்த பதிவில் சோதிடத்திற்க்கு தேவையான சில அடிப்படை தகவல்களை பார்க்கலாம்.இதனைப் பற்றி நான் முன்பே பதிவில் எழுது இருக்கவேண்டும் இருந்தாலும் பரவாயில்லை இப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பில் கேந்திரம், மூலத்திரிகோணம், பணபரம் ஆகியவை முக்கியமானவை. இவற்றில் தங்கி இருக்கும் கிரகங்கள் நல்ல பலனை ஒருவருக்கு தரும்.

 நாம கடந்த பதிவில் தசாபலன்களைப் பற்றி பார்த்தோம் அல்லவா. ஒருவருக்கு மிக கெடுதலான தசாபலன் நடந்தாலும் கேந்திரம், மூலத்திரிகோணம், பணபரம் ஆகியவை நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் கவலைபட தேவையில்லை கெட்ட நேரத்திலும் தப்பித்துவிடுவார்.  

உங்களுக்கு எந்த நல்ல பலனையும் தருவது லக்கனம் தான் மிக முக்கியம்.  லக்கினாதிபதி நன்றாக இருந்தால் அனைத்தையும் பெற்றுவிடலாம்.  எந்த சோதிட கணக்கையும் லக்கனத்தை வைத்துதான் மதிப்பிட முடியும். 

கேந்திரம்

லக்கினமே முதல் கேந்திரம் ஆகும். அதற்கு நான்காவது வீடு இரண்டாவது கேந்திரம். ஏழாவது வீடு மூன்றாவது கேந்திரம். பத்தாவது வீடு நான்காவது கேந்திரம் இந்த நான்கு வீடுகளே கேந்திரம் ஆகும். இந்த நான்கு வீட்டிலும் கிரகங்கள் தங்கினால் நல்லது ஒருவருக்கு நான்கு வீட்டிலும் கிரகங்கள் தங்குவது என்பது மிக அரிது. நான்கு வீட்டிற்க்கு இரண்டு வீட்டில் தங்கினாலும் நல்லது தான் பரவாயில்லை.

மூலத்திரிகோணம்

லக்கினமே முதல் திரிகோணம் ஆகும். ஐந்தாவது வீடு இரண்டாவது திரிகோணம் ஆகும். ஒன்பதாவது வீடு மூன்றாவது திரிகோணம் ஆகும்.

பணபரம்

இரண்டாவது வீடு முதல் பணபரம். ஐந்தாவது வீடு இரண்டாவது பணபரம், எட்டாவது வீடு மூன்றாவது பணபரம் ஆகும். பதினோன்றாவது வீடு நான்காவது பணபரம் ஆகும்.  இந்த வீட்டில் தீயகிரகங்கள் தங்கினால் நல்லது என்று சோதிட சாஸ்திரம் கூறுகிறது. 


கேந்திரம், பணபரம் ஆகிய இரண்டு இடங்களிலும் தீய கிரகங்கள் தங்கி திரிகோணத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் முதல் தரம் என சொல்லலாம். 

கேந்திரம், பணபரம் ஆகிய இரண்டிலும் நல்ல கிரகங்கள் தங்கி திரிகோணத்தில் தீயகிரகங்கள் இருந்தால் ஐம்பது சதவீதம் நல்ல பலன் நடக்கும் என சொல்லலாம். 

கேந்திரம்,திரிகோணம்,பணபரம் ஆகியவற்றில் எந்த கிரகமும் தங்காமல் இருந்தால் மிக குறைந்த நற்பலன் மடடுமே நடைபெறும் என சொல்லலாம்.

இவை அனைத்தும் பொதுபலனே சில நேரங்களில் இவை அனைத்தும் பொய்யாக்கி நல்ல பலனை கொடுக்கும். அதுதான் சோதிடத்தின் ரகசியம். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Thursday, May 24, 2012

கட்டண சோதிட சேவை

ணக்கம் ண்பரே!
           கட்டண சேவையில் வருவதற்கு தங்களை  அன்போடு வரவேற்கிறேன்.

ஒரு ஜாதகத்திற்க்கு Rs 500 மட்டுமே கட்டணமாக நீங்கள் செலுத்தவேண்டும். நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் பலனை அனுப்பமுடியும். 

ஜாதக திருமண பொருத்தம் பார்க்க Rs 500.

ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை நடத்தப்படும். நண்பர்களின் விருப்பபடும் காணிக்கையை செலுத்தலாம். ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் இந்த பூஜை செய்யப்படும்.


நவ அம்மன்(சண்டி) யாகம். ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஒரே குடும்பத்திற்க்கு செய்யப்படும். அதிக சக்தி வாய்ந்த யாகம் இது. அனைவரும் வாழ்வில் ஒரு முறை அல்லது பலமுறை செய்துக்கொண்டு பயன்பெறலாம். கட்டணத்திற்க்கு என்னை தொடர்புக்கொள்ளவும்.

பணப்பிரச்சினையில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு லட்சுமி பூஜை செய்து தரப்படும். இதற்கு கட்டணமாக Rs 3000 கட்டணமாக செலுத்தவேண்டும். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பூஜை செய்யப்படும். 

மேலே சொன்ன கட்டணம் அனைத்தும் பூஜைகளுக்கு செய்யப்படும் செலவுகளை வைத்து தான் சொல்லிருக்கிறேன். சேவை நோக்கத்தோடு அனைத்தும் செய்யப்படுகிறது. அனைவரும் பங்குக்கொள்ளலாம்.

வங்கி கணக்கு விபரம்

KVB


Bank :  Karur Vysya Bank

Branch : Pattukkottai

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470


IFSC Code : KVBL0001623


மேலும் விபரங்களுக்கு என்னுடைய E-Mail யில் தொடர்பு கொள்ளுங்கள்.

E-Mail ID : payrajeshsubbu@gmail.com

Cell No : 9551155800,8940773309
Whatapp : 9551155800

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

தசாபலன்கள்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்கபோவது தசாபலன்களைப் பற்றி தான். இதனை நான் நீண்ட நாட்களாகவே தசா பலன்களை எழுதவேண்டும் அதற்கு நேரம் எப்பொழுது வரும் என்று நினைத்து இருந்தேன் கடவுளின் புண்ணியத்தினால் இப்பொழுது அதற்கு நேரம் வந்துவிட்டது.

தசாபலன்களை நீங்கள் தெரிந்து கொண்டுவிட்டால் ஒரளவுக்கு நீங்கள் சோதிட பலனை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். நாம் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு ஜாதகருக்கும் ஜன்மநட்சத்திரம் என்று ஒன்று வரும்.  அந்த நட்சத்திரத்தில் செல் இருப்பை நீக்கி வரும் வருடம்,மாதம்,நாள் என்று வரும். உங்கள் ஜாதகத்தில் ராசி கட்டத்திற்க்கு கீழே பார்த்திர்கள் என்றால் அதன் விபரம் தெரியவரும்.

உதாரணமாக தசா இருப்பு= சந்திரன் 5 வருடம்,8 மாதம், 12 தேதி என்று வரும் இது தான் தசா புத்திகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள உதவும் வழி. இதில் இருக்கும் தசா இருப்புயை வைத்துதான் நாம் தசா கணக்கை காண வேண்டும். 

ஒரு மனிதனுக்கு பலன்களை வழங்குவதில் முதன்மை இடத்தில் இருப்பது தசா நாதர்கள் தான். ஒருவனுக்கு ஒரு விஷயம் நடக்குவேண்டிய காலத்தை தெரிவிப்பது தசா பலன்கள் நிலை வைத்துதான் சொல்லமுடியும். 


ஜன்ம நட்சத்திரத்தை கொண்டுதான் தசாபலன்கள் கண்டறியமுடியும். முதலில் ஒவ்வொரு நட்சத்திரன் அதிபதி யார் என்று பார்க்கவேண்டும் அவருடைய தசாபலன்கள் எத்தனை வருடங்கள் என்று தெரிந்தால் நீங்கள் எளிதில் கண்டறிந்துவிடலாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

நட்சத்திரங்கள் : கார்த்திகை,உத்திரம், உத்திராடம் 
நட்சத்திர அதிபதி :       சூரியன் 
தசா வருடங்கள் :  6

நட்சத்திரங்கள் : ரோஹிணீ, ஹஸ்தம், திருவோணம்
நட்சத்திர அதிபதி : சந்திரன்
தசா வருடங்கள் :  10

நட்சத்திரங்கள் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்
நட்சத்திர அதிபதி : செவ்வாய்
தசா வருடங்கள் :   7

நட்சத்திரங்கள் : திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திர அதிபதி : ராகு
தசா வருடங்கள் :  18

நட்சத்திரங்கள் : புனர்பூசம், விசாகம் ,பூரட்டாதி
நட்சத்திர அதிபதி : குரு
தசா வருடங்கள் : 16

நட்சத்திரங்கள் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திர அதிபதி : சனி
தசா வருடங்கள் : 19

நட்சத்திரங்கள் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திர அதிபதி : புதன்
தசா வருடங்கள் : 17

நட்சத்திரங்கள் :  அசுவதி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி : கேது
தசா வருடங்கள் : 7

நட்சத்திரங்கள் : பரணீ, பூரம், பூராடம்
நட்சத்திர அதிபதி : சுக்கிரன்
தசா வருடங்கள் : 20


ஆக மொத்த வருடங்கள் 120 என பிரித்துள்ளார்கள். 

இதை வைத்துதான் தசாபலன்களை முடிவு செய்யவேண்டும்.

நம் பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிககுறைவு இப்பொழுது தான் நம் பதிவுகளை பல நண்பர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் சோதிட துறைக்கு புதியவராகவும் இருக்கலாம். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தசாபலன்களை எளியமுறையில் தருகிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Wednesday, May 23, 2012

தெய்வ பலன்



வணக்கம் நண்பர்களே சில நாட்களாக வெளியூர் பயணத்தினால் பதிவு எழுதமுடியவில்லை அங்கு சென்று பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் போனவேலை இழுத்து அடித்துவிட்டது நெட் பக்கம் போகவில்லை. 

சென்னை வந்து இதுவரை வந்த இலவச சோதிட ஆலோசனையை பலன் கூறிவிட்டு பதிவை எழுதுகிறேன். இலவச சோதிட ஆலோசனை பாதி பேருக்கு இன்னமும் கூறவில்லை. அனைத்து பேருக்கும் கூடிய விரைவில் பலனை சொல்லுவதற்க்கு கடவுள் அருள் புரியவேண்டும்.

இலவச சோதிட ஆலோசனை பெறுபவர்கள் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நான் மட்டும் பயன் அடைந்தால் போதும் அடுத்தவன் எப்படி கெட்டால் நமக்கு என்ன என்று இருக்காமல் உங்களால் முடிந்தவர்களுக்கு தெரியபடுத்துங்கள். அது உங்களுக்கு பெரும் புண்ணியமாக இருக்கும். 

இந்த பதிவை படிக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். நான் கூறும் பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் தான் அந்த பலன்களை நீங்கள் படித்துவிட்டு எனக்கு ஏழில் சனி இருக்கிறது எனக்கு இரண்டு தாரம் அல்லது ஐந்தில் கெட்ட கிரகம் இருக்கிறது எனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்று நீங்களாகவே நினைத்து கொள்ளவேண்டாம் என நான் உங்களுக்கு கூறிகொள்ள ஆசைபடுகிறேன்.

 நான் சொல்லும் பலன்களும் அல்லது வேறு சோதிடர்கள் கூறும் பலன்களும் அனைத்தும் பொதுபலன்களாகதான் இருக்கும் நாங்கள் ஐந்தில் சனி இருந்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது அல்லது தத்துபிள்ளை யோகம் என்று கூறுவோம் ஆனால் அந்த ஜாதகருக்கு நல்ல குழந்தை சில காலங்களில் பிறந்துவிடும். அது வேறு நிலைகளை வைத்து குழந்தைபாக்கியம் கிடைத்துவிடும்.

ஒன்பது கிரகங்கள் இருப்பத்தி ஏழு நட்சத்திரங்கள் பனிரென்டு ராசிகளை கட்டி ஆளும் கடவுள் அனைத்திலும் உயர்ந்தவர் அவரை நாம் சரண் அடைந்தால் அனைத்தும் கிடைத்துவிடும் முதலில் அவரை நம்புங்கள். கிரகங்கள் எப்படி இருந்தாலும் கடவுளை நம்பினால் அவன் உங்களுக்கு வழிகாட்டுவான்.

வழக்கமாக நாம் குரு பெயர்ச்சி அல்லது சனி பெயர்ச்சி பற்றி படிப்போம் அதில் குருவும் சனியும் நல்ல இடத்திற்க்கு வரும்போது நமக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். அதுபோல நல்லது நடக்கும்.

அதில் மறைந்திருக்கும் உண்மை என்ன என்றால் குரு, சனி பெயர்ச்சி நடக்கும் போது நல்ல நிலைக்கு குருவும் சனியும் வரும்போது நமக்கு கடவுளின் முழு பலம் நமக்கு கிடைக்கிறது. அது உங்களுக்கு நல்ல பலனை தருகிறது.

 நீங்கள் தொட்ட அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கிறது. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுவது என்ன என்றால் கடவுளின் பலம் நமக்கு கிடைக்க வேண்டும் அப்பொழுது தான் அனைத்திலும் வெற்றிக்கொள்ள முடியும்.

கெட்ட நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் நமக்கு கெடுதல் நடப்பதும் கடவுளின் பலம் நமக்கு கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம்.  நமக்கு தேவை கடவுளின் பலம் தான். 

இதனை படிக்கும் நீங்கள் கடவுளின் பலத்தை நாம் நம்பினால் அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான்.  நீங்கள் இதனை படிக்கும்போது நினைக்கலாம் கடவுள் பார்த்துக்கொள்வான் என்று சொன்னால் ஏன் சோதிடத்தை பார்க்க வேண்டும் என்று கேட்க தோன்றும்.

 சோதிடம் என்பதே நாம் முன்பிறவியில் செய்த பாவத்தை இந்த பிறவியில் அனுபவிக்க நாம் மனித பிறப்பு எடுத்துள்ளோம் அதில் உங்களுக்கு என்ன என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிவிக்கும் ஒரு உபகரணம் தான் சோதிடம். 

அந்த பிரச்சினையில் இருந்து விடுபட என்ன வழி உள்ளது என்று பார்த்தால் தெரிந்துவிடும். அதனை கொண்டு இந்த பிறவியை கடந்துவிடலாம். என்ன நண்பர்களே நான் சொன்னது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  



Tuesday, May 15, 2012

நடைபயணம்



வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்க போவது சோதிடத்தில் ஒரு சுவாராசியமான மேட்டர் நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது சொந்த ஊருக்கும் பள்ளிகூடம் இருக்கும் இடத்திற்க்கும் தொலைவு சுமாராக நான்கு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அப்பொழுது நான் எனது நண்பர்களுடன் நடைபயணமாகத்தான் சென்றுவருவேன். நடைபயணம் செல்லும்போது அடிக்கும் அரட்டை இருக்கிறதே அது அவ்வளவு இனிமையானது வழி நெடுகிலும் அவ்வளவு சுவாராசியமாக இருக்கும். அதை நினைத்தாலே அவ்வளவு இனிமை . அந்த நாள்கள் கிடைப்பது அவ்வளவு அரிது. 

பள்ளி கல்வியை முடிக்கும் வரையிலும் நடைபயணம் தான். அதன் பிறகு தபால் வழியில் தான் கல்வியை பயின்றேன். ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு படிப்பை தொடர்ந்தேன். அப்பொழுதும் அந்த நிறுவனத்திற்க்கு செல்வதற்க்கு இரண்டு கிலோ மீட்டர் பஸ்யை விட்டு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த கம்பெனியில் வேலை செய்வதில் வெளி இடங்களுக்கு செல்வது நடந்துதான் செல்வேன். 

அதன் பிறகு சென்னை வந்தேன் சென்னையில் வேலை பார்த்த இடங்களில் நான் தங்கி இருந்த அறையில் இருந்து பஸ் ஏறுவதற்க்கு எனது பஸ் நிறுத்தத்தில் இருந்து அடுத்த பஸ் நிறுத்தத்தில் தான் போய் பஸ் ஏறுவேன். அதைபோல் பஸ் இறங்குவதற்க்கு எனது பஸ் நிறுத்தத்தில் முன் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வருவேன் அப்பொழுது தான் எனக்கு இரவு நித்திரை வரும். 

இப்பொழுது நான் தங்கி இருப்பது அடையாரில் நமது ஆபிஸ் இருப்பது கொட்டிவாக்கத்தில் அங்கு நான் தினமும் நடந்து தான் சென்று வருவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். இதில் நான் மாதம் தோறும் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவேன். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு செல்லவில்லை. என்னவென்று தெரியவில்லை அந்த அண்ணாமலையான் என்னை கூப்பிடவில்லை. 

நான் சோதிடம் தெரியாத நாட்களில் சிந்தித்தது உண்டு ஏன் நமக்கு நடப்பதற்க்கு இவ்வளவு பிடிக்கிறது நாம் எங்கு சென்றாலும் நடையாக செல்ல விருப்பம் ஏற்படுவது எதற்காக என்று நினைத்திருந்தேன். நான் சோதிடம் படித்து சோதிட தொழில் செய்து வந்தபோதும் இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. 

ஒரு சமயம் ஒரு பழைய சோதிட புத்தகத்தை படிக்க நேர்ந்தது அந்த புத்தகத்தின் பெயர் தெரியவில்லை அந்த புத்தகத்தில் லக்கனத்தில் சந்திரன் இருக்கபெற்றால் அவர்களுக்கு நடைபயணத்தின் மீது அதிகம் ஆர்வம் ஏற்படும் என்று இருந்தது. பல நாள் தேடிய விஷயத்திற்க்கு அப்பொழுதுதான் விடைகிடைத்தது. எனக்கு லக்கினத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். 

நமக்கு நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் சோதிடத்தில் செல்லபட்டு இருக்கிறது. அதை நாம் தான் கவனிப்பதற்க்கு நேரம் இல்லை. அமைதியாக இருந்து ஜாதகத்தை அலசி ஆராய்ந்தால் உங்களுக்கு நடக்கும் நிகழ்விற்க்கு அனைத்திற்க்கும் உங்கள் ஜாதகத்தில் பதில் இருக்கும்.

நண்பர்களே சோதிடம் மற்றும் ஒரு திருமண நிகழ்ச்சிகாக தஞ்சாவூர் செல்வதால் நான்கு நாட்களுக்கு பதிவு போடமுடியாது என்று நினைக்கிறேன். அங்கு நேரம் இருந்தால் பதிவை எழுதுகிறேன். தஞ்சாவூரில் இருப்பவர்கள் நேரில் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  



Sunday, May 13, 2012

இலவச சோதிடம்


வணக்கம் நண்பர்களே பல வேலைகளால் பதிவு எழுதாதற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய இலவச சோதிட வாசகர்களுக்கு ஒருமுறை மட்டுமே சோதிட பலன்களை வழங்கமுடியும். இலவச சோதிடம் பார்ப்பவர்கள் மீண்டும் வேறு பெயர்களில் என்னை தொடர்புகொண்டு பலன் கேட்க முயலுகிறார்கள் அவ்வாறு கேட்பதை தவிர்க்கவும். ஒருமுறை சொல்லுவதே உங்களுக்கு போதுமான தகவல் கிடைக்கும். மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம். புதியதாக வருபவர்களுக்கு அது நன்மை பயக்கும். 

இலவச சோதிடம் பார்ப்பவர்கள் நமது பிளாக்கில் உறுப்பினராக சேர்ந்துவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த பிளாக்கை பற்றி தெரியபடுத்துங்கள். எனக்கு கொடுக்கும் தட்சிணையாக அது இருக்கும்.

இன்று தேய்பிறை அஷ்டமி (13-5-12) காலபைரவர் தரிசனம் செய்யலாம்.  ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டம சனி, சனி திசை நடப்பவர்கள் காலபைரவரை வணங்குவது சனியின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Wednesday, May 9, 2012

திருமண வாழ்க்கை 2



வணக்கம் நண்பர்களே திருமண வாழ்க்கை என்ற கடந்த பதிவில் திருமணத்திற்க்கு தடை மற்றும் பிரச்சினைகளை பார்த்துவந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்பதிவிலும் திருமண விஷயத்தைப் பற்றி பார்க்கலாம்.

என்னிடம் ஒரு வெளிநாட்டில் இருப்பவர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு  ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவர் தமிழர் தான். அவருடைய பெண்  ஜாதகத்தை காண்பித்தார். அந்த பெண்னுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. அவரின் கணவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். அவர்களின் திருமண வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக ஒரு குழந்தை ஒன்று உள்ளது.

திருமண வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் அவர்களின் வாழ்க்கையில் புயல் வந்தது இருவருக்கும் தினமும் சண்டை நடந்தது இந்த நிலை முற்றி அவன் தனியாக சென்று வசித்துவந்தான். கொஞ்ச நாள்கள் எல்லாம் அவன் விவாகரத்து கேட்டு இந்த பெண்ணிற்க்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டான் விவாகரத்தும் கிடைத்துவிட்டது.

அந்த பெண் ஜாதகத்தில் லக்கினத்தில் சனி பகவான் அமர்ந்து இருந்தார். அந்த பெண்ணின் கணவன் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை குழந்தையை நான் வளர்க்கமாட்டேன் என்று கூறிவிட்டான். அதனால் தாயாருடன் தான் குழந்தை வளர்கிறது.

ஏழாம் அதிபதி நன்றாகதான் இருக்கிறார் ஆனால் லக்கினத்தில் இருந்து சனி ஏழாம் வீட்டை பார்த்ததால் திருமண வாழ்க்கையில் இப்படி பிரச்சினையை உண்டு செய்துவிட்டார். பொதுவாக லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பது பிரச்சினையை உண்டு செய்துவிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை உருவாக்கிறது.

திருமண வாழ்கைக்கு மிக பெரிய உதவி செய்யும் வீடு இரண்டாம் வீடு. குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் இடம் அதனால் இந்த வீட்டையும் நன்றாக கவனிக்க வேண்டும். நமக்கு திருமணம் நடைபெறும் போது என்ன நடக்கும் நமது குடும்பத்திற்க்கு புதிதாக ஒருவர் வரவேண்டும். அப்பொழுது அந்த குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாகிறார் என்று அர்த்தம். புதியதாக ஒருவர் வர வேண்டும் என்றால் குடும்பஸ்தானம் அவரை அனுமதிக்க வேண்டும். இரண்டாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்தால் அந்த நபரை அனுமதிக்காது .அனுமதி அளித்தால் தானே திருமணம் நடைபெறும். இது திருமணம் செய்வதற்க்கு முன்பே நமக்கு அடிக்கும் ஆப்பு.

பெண்களாக இருந்து இந்த வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவ்வளவுதான் இங்கு அமர்ந்து கொண்டு எட்டாம் வீட்டை பார்ப்பார்கள். பெண்களுக்கு எட்டாம் வீடு என்பது மாங்கலிய பாக்கியம் தரும் வீடு. மாங்கலியத்திற்க்கு பிரச்சினை பெண்களை பொருத்தவரை மாங்கலிய பாக்கியம் இருந்தால் தான் கட்டும் தாலி நிலைக்கும். எட்டாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் மாங்கலியத்தை பறித்துவிடும் இரண்டாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை தீயகிரகங்கள் பார்த்தால் கணவன் வாழ்நாள்கள் குறைந்துவிடும்.

கடவுள் பெண்களுக்கு சிறந்த பக்தியை வைத்திருக்கிறார் அதனால் தான் பல பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். நான் பல குடுபங்களை பார்த்து இருக்கிறேன் அவர்களின் ஜாதகங்களில் நிறைய பிரச்சினை இருந்தும் அந்த வீட்டின் இல்லறதலைவி நன்றாக ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் இருந்தால் எந்த பிரச்சினையும் வராது.

ஒரு ஆண் மகன் சாமி கும்பிடுவதற்க்கும் ஒரு பெண் சாமி கும்பிடுவதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பெண்கள் சாமி கும்பிட்டு வேண்டினால் அந்த பிரத்தனையை கடவுள் உன்னிப்பாக கேட்கிறார் என்று தோன்றுகிறது அதை நிறைவேற்றி வைக்கிறார்.

ஒரு ஆண் ஒரு குலத்தெய்வத்தை மட்டும் தான் வணங்குகிறோம் ஆனால் ஒரு பெண் இரண்டு குலத்தெய்வத்தை வணங்குகிறாள். பிறந்த வீட்டில் ஒரு குலதெய்வம் புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் என்று இரண்டு குலதெய்வத்தை வணங்குகிறாள். உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை கடவுளிடம் வேண்ட சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

தொடரும்...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Tuesday, May 8, 2012

திருமண வாழ்க்கை 1



திருமண வாழ்க்கை என்ற பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு இடையில் சுக்கிரனின் கோச்சார பலன்களை பார்த்துவிட்டோம் பரவாயில்லை அவரும் களத்திரகாரகன் என அழைக்கப்படுபவர் தானே இப்பதிவில் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நிலை என்ன என்று பார்த்துவிடலாம்.

மனிதனின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு ஜாதகத்தில் அனைத்து வீடுகளும் சேர்ந்து வேலை செய்தால் தான் ஒரு நிகழ்வு நடைபெறும் அதைபோலதான் திருமணமும். நாம் களத்திர இடத்தில் கெட்ட கிரகம் உள்ளது என்று அதற்கு பரிகாரம் செய்துகொண்டு இருப்போம் ஆனால் உண்மையில் தடை ஏற்படுத்தும் கிரகம் வேறு ஒரு வீட்டில் உக்கார்ந்து கொண்டு செய்யும் அதனால் ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பிறகு திருமண ஏற்பாட்டிற்க்கு செல்வது உத்தமம். பொருத்தம் பார்ப்பதை விட அவர் அவர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்வது நன்மை பயக்கும்.

முதலில் களத்திர வீடான ஏழாம் வீட்டைப்பற்றி பார்த்துவிடலாம். ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்து திருமணம் இளம்வயதில் நடைபெற்றால் திருமண வாழ்க்கை பிரச்சினை சந்திக்கும். திருமண வாழ்க்கைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியது முப்பது வயதிற்க்கு மேல் இருக்கலாம். திருமண வாழ்க்கை இளம்வயதில் ஆரம்பித்தால் அந்த திருமணவாழ்க்கை பிரிவு ஏற்படும்.

ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடுமையான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும். இருவரும் சண்டை சச்சரவு இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ள நபரை திருமண துணைவராக திருமணம் செய்தால் நன்மை பயக்கும். ஏழில் உள்ள செவ்வாய் அதிகபடியான காமத்தை தருவார்.  அதிக காமத்தை திருப்தி படுத்துவராக துணைவர் அமையவேண்டும்.

ஏழில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிபோகும். திருமண பேச்சு முப்பது வயதுக்கு மேல் தான் ஆரம்பிக்கும். வரும் துணைவர் அழகாக இருக்கமாட்டார். வயது மூத்தவர் போல் தெரியும். நான் பார்த்தவரை ஏழில் சனி இருப்பவர்கள் பிரச்சினையை சந்திப்பது அவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் தான் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் மனதில் தீய எண்ணம் ஏற்பட்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனால் பிரிவும் ஏற்படுகிறது. இது திருமணத்திற்க்கு முன்பு தான் பல தடைகளை ஏற்படுத்துகிறது. இதை நம்ம ஆட்கள் முடிந்தவரை கோயில் சென்று பரிகாரம் செய்து திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.

ஏழில் தீயகிரகம் மட்டும் தீங்குசெய்வதில்லை நல்ல கிரகங்கள் அமர்ந்தாலும் பிரச்சினை ஏற்படுத்தும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிக மிக முக்கியம் அந்த இடத்தில் எந்த கிரகமும் அமர்ந்தாலும் பிரச்சினை தான். நான் பார்த்த விதவை ஜாதகங்களில் எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் அந்த பெண் விதவை ஆகிவிடுகிறாள். நீங்களே இதை சோதனை செய்யலாம். நீங்கள் திருமண ஏற்பாட்டாளர்களின் வெப்சைட்டில் தேடி பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை தெரியவரும்.

ஏழாம் வீட்டை வைத்து திருமண பிரச்சினையை பார்த்தோம். அடுத்தபடியாக லக்கினத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தில் கிரகங்கள் அமர்ந்துக்கொண்டு ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் வைக்கும் ஆப்பு இருக்கிறதே இது எல்லாத்தையும் விட கொடுமை இந்த மனிதனை திருமண வாழ்க்கையில் ஏன் தான் கடவுள் இந்த அடி அடிக்கிறாறோ தெரியவில்லை. 
பொதுவாக லக்கினத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினை அதிகம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கைப்பற்றி பதிவு தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

கோச்சார பலன் சுக்கிரன் நிறைவு பகுதி



வணக்கம் நண்பர்களே நேற்று சுக்கிரனின் கோச்சார பலனின் ஆறு வீட்டிற்க்கு மட்டும் பார்த்தோம். இப்பதிவில் மீதம் உள்ள வீடுகளின் சுக்கிரன் வரும்போது என்ன பலன் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் ஏழாம் வீட்டில் வரும்போது சுக்கிரன் களத்திரகாரகன் என அழைக்கப்படுகிறார் ஆனால் அவர் களத்திர வீட்டிற்க்கு வரும்போது களத்திரதோஷத்தை ஏற்படுத்துவார் கணவன்,மனைவி இருவரும் சண்டை இட்டுக்கொள்வார்கள். வீணாக கோபம் ஏற்பட்டு உங்களிடம் உள்ள நண்பர்கள் உற்றார் உறவினர்களிடம் சண்டை சச்சரவு ஏற்படும். கூட்டுதொழிலில் அதிக நன்மை ஏற்படும்.

சுக்கிரன் எட்டாம் வீட்டிற்க்கு வரும்போது நீங்கள் இந்த காரியம் நான் செய்தால் வாழ்க்கையில் மிகுந்த செல்வசெழிப்புடன் இருப்பேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றால் அந்த காரியம் ஊத்திக்கொள்ளும். மனதிற்க்கு பிடிக்காத வேண்ட வெறுப்புடன் ஒரு காரியத்தில் இறங்கினால் அந்த காரியம் வெற்றி அடையும். பணவரவு நன்றாக இருக்கும்.

சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். செல்வநிலை உயரும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிக்கொள்ளலாம். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். செய்கின்ற தொழிலில் வெற்றிக்கொள்ளலாம். முன்னோர்களின் ஆசிகிடைக்கும்.

சுக்கிரனின் பத்தாம் வீட்டிற்க்கு வரும்போது இந்த வேலை தான் செய்வேன் டா என்று பிடிவாத குணம் பிடித்து ஒரு வேலையை செய்து அந்த வேலை வெற்றி காரியமாக அமையும். விரோதிகள் செய்யும் காரியம் உங்களுக்கு நல்ல வாய்ப்பு தரும். 

சுக்கிரன் பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது நல்ல வருமானம் வரும். மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் வருமானம் வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.  புதுத்தொழில் தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை பார்க்கலாம். மூத்த சகோதரிகளின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்திற்கு வரும்போது பெண்களால் பிரச்சினை வரும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அவர்கள் மூலம் பணம் போய்விடும்.  வீணான கெட்ட பெயர் கிடைக்கும். திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பம் ஆகும். ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  



Monday, May 7, 2012

கோச்சார பலன் சுக்கிரன்





வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்கபோவது சுக்கிரனின் கோச்சார பலனை பற்றி தான் கோச்சார பலனில் சுக்கிரனின் பலன்களை அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அனைத்து கிரகங்களின் கோச்சார பலன்களை நாம் எடுத்துக்கொண்டு ஒரு சோதிட பலன்கள் சொல்லும் போது துல்லியமான பலன்களை நாம் சொல்லலாம் அதனால் சுக்கிரனின் கோச்சார பலன்களையும் நான் எழுதுகிறேன். படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


சுக்கிரன் சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். செல்வ வளம் சேரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உதவி கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் அமையும். புது துணிகள் வாங்குவார்கள். குடும்பத்தில் பெரியோர்கள் இருந்தால் அவர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

இரண்டாம் வீட்டிற்க்கு சுக்கிரன் வரும்போது செல்வ நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் விழா சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நிலையில் நல்ல ஆரோக்கியம் இருக்கும். தொழிலில் பணவரவு நன்றாக இருக்கும். முன்னோர்களின் சொத்து கிடைக்கும்.

மூன்றாம் வீட்டிற்க்கு சுக்கிரன் வரும்போது சிலருக்கு திருமணம் நடைபெறும். புதிய தொழில் ஒப்பந்தம் ஆகும். எதிர்கள் உங்களை கண்டு பயப்படுவார்கள். எதிரிகளால் உதவி கிடைக்கும். குழந்தை பிறப்பு நடக்கும். புதிய நபர்களால் பிரச்சினை உண்டாகும். புதிய நபர்களை பார்த்து நடந்துக்கொள்வது நல்லது.

சுக்கிரன் நான்காம் வீட்டிற்க்கு வரும்போது வாகனங்கள் வாங்கலாம். வாகன தொழில் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பார்க்கும் நேரம் இது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு வாங்கலாம். புதுமனை குடி போகலாம். நண்பர்களால் உதவி கிடைக்கும். ஏதும் வழக்குகள் இருந்தால் அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும்.

சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும்போது எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவியும் அன்புடன் நடந்துக்கொள்வார். தெய்வ வழிபாடு கூடும். தெய்வ வழிபாடு மூலம் இந்த நேரத்தில் பல விஷயங்களை சாதிக்கலாம்.

சுக்கிரன் ஆறாம் வீட்டிற்க்கு வரும்போது எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் திடிர் என்று பகைவர்களாக மாறிவிடுவார்கள். உறவினர்களுக்குள் சண்டை சச்சரவு இருக்கும். உடல் நலக்குறைவு ஏற்படும். கடன் தொல்லை வாட்டி எடுத்துவிடும்.  பொதுவாக ஆறாம் வீட்டிற்க்கு சுக்கிரன் வருவது அவ்வளவு நல்லது அல்ல.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Friday, May 4, 2012

திருமண வாழ்க்கை




வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் திருமணத்தை பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக களத்திர பாவத்தை பற்றி பார்க்கலாம். ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கோ திருமண வாழ்க்கை அமைவது எப்படி என்று பார்ப்பதற்க்கு இந்த களத்திர பாவத்தை வைத்துதான் பார்க்க முடியும். தனக்கு வருவது தேவதையா அல்லது பிசாச என்று பார்க்கலாம். அந்த பாவம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.


பொதுவான ஒரு விதி என்ன என்றால் ஏழாம் வீட்டில் நல்ல கிரகங்களும் இருக்ககூடாது. தீய கிரகமும் இருக்ககூடாது . சுத்தமாக இருக்க வேண்டும். ஏழாம் வீட்டு அதிபதி நல்ல இடத்தில் அமரவேண்டும். குருவின் பார்வையில் இருந்தால் நல்ல சிறப்பு. இப்படி எல்லாம் அமைவது என்றால் லட்சத்தில் ஒருவருக்குதான் அமைய வேண்டும். ஏதோ அவன் அவன் செய்த புண்ணியம் திருமண வாழ்க்கை நல்ல முறையில் ஒடிக்கொண்டிருக்கிறது.

இதில் அப்பா அம்மா செய்த புண்ணியம் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு சில இடங்களில் அப்பா அம்மா செய்த பாவங்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வாழ்வில் மிக பெரிய பிரச்சினை உருவாகின்றது. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அவர்களின் தாய் தந்தை செய்த பாவங்களாக தான் இருக்கிறது.

ஏழாம் அதிபதி ஆட்சியில், உச்சத்தில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. குருவின் பார்வையில் ஏழாம் அதிபதி இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. ஏழாம் வீட்டு அதிபதி உச்சம் அடைந்து அந்த பெண்னை திருமணம் செய்தால் திருமணத்திற்க்கு பிறகு அந்த பையன் புகழின் உச்சிக்கே சென்றுவிடுவான்.

ஏழாம் வீட்டை எந்த ஒரு பாவகிரகங்களும் பார்வை செலுத்தகூடாது அப்படி இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். களத்திர காரகன் என்று சுக்கிரனை அழைப்பார்கள். சூரியனுடன் சுக்கிரன் அஸ்தங்கம் ஆககூடாது. சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, May 2, 2012

திருமண கனவு



வணக்கம் நண்பர்களே திருமண சம்பந்தமாக ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன் உடனே ஒரு நல்ல எண்ணம் தோன்றியது அதுவே இப்பதிவு வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள ஒரு விஷயம் என்ன என்றால் அது திருமணமாகதான் இருக்கும்.

 ஒவ்வொரு மனிதனும் மிகுந்த கனவு காண்பது இந்த விஷயத்தில் தான் அதுதான் என்னவோ இந்த விஷயத்தில் பாதி மனிதருக்கு கடவுள் ஆப்பு அடித்துவிடுகிறார் ஏன் என்றால் இவன் கனவு காண்பதற்க்கும் வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது.

ஒரு ஆண் கனவு காண்பது சிறந்த பெண்ணாக வரவேண்டும் இப்பொழுது இருக்கும் மிகப்பெரிய நடிகை மாதிரி அழகில் இருக்க வேண்டும். சிறந்த புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறான் ஆனால் அவ்வாறு தேடி தேடி அலைந்து கடைசியில் வயதும் ஏறிவிடுகிறது. 

ஏதாவது ஒரு பெண்னை காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இவன் கனவை மட்டும் நிறுத்தவில்லை வந்த மனைவிக்கும் இவனுக்கும் ஒத்துபோவதில்லை. பிரச்சினை தான். நான் ஒரு முறை சோதிட விஷயமாக சென்னையில் உள்ள மாதவரம் சென்றேன் அங்கு வழியில் ஒருவர் பேச்சு துணையாக அறிமுகம் ஆனார்.

உங்களுடைய வயது என்ன என்று கேட்டார் நான் எனக்கு 32 வயது ஆகிறது என்றேன். திருமணம் முடிந்து விட்டதா என்று கேட்டார் நான் இன்னும் நடைபெறவில்லை என்றேன். அப்பொழுது அவர் 32 வருடம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை அவர் அந்தளவுக்கு திருமண வாழ்க்கையில் நொந்து உள்ளார் என்று தெரிகிறது. இப்படி பல அனுபவங்கள் என்னிடம் இருக்கிறது.

நமது வாழ்க்கையில் நமக்கு தேவையான ஒரு சில விஷயங்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை கடவுள் நமக்கு அளித்துள்ளார். அதில் ஒன்று தான் திருமணம். ஒரளவு தேர்ந்தெடுக்கலாம் அதற்கு என்று எனக்கு இந்த மாப்பிள்ளை தான் வேண்டும். இந்த பெண் தான் வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒரு சில கண்டீஷனுடன் திருமண வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள். 

நான் சோதிடத்தை தொழிலாகவே செய்து வந்ததால் பல அனுபவங்களை நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த அனுபவங்கள் தான் உங்களுக்கு தந்து கொண்டு இருக்கிறேன். பல ஊர்களுக்கு செல்வது அங்கு போய் சோதிடம் பார்ப்பது கிடைக்கும் பணத்தை எனக்கு செலவுக்கு எடுத்துக்கொள்வது  மீதியை அங்கு இருக்கும் ஏழை மக்களிடம் பணத்தை கொடுத்துவிடுவது இதுதான் எனது வேலையாக பல காலங்கள் இருந்து வந்தது. நான் போகாதா ஊர்கள் மிகுந்த குறைவு தான் அந்த அளவுக்கு ஊர் சுற்றி உள்ளேன்.அத்தனை அற்புதமான அனுபவங்கள்.

திண்டிவனம் அருகில் ஒரு சிறு கிராமத்திற்க்க சென்று வந்தேன. அந்த ஊரின் பெயர் சரியாக தெரியவில்லை திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது. அங்கு ஒரு பையனின் ஜாதகத்தை பார்த்தேன். அந்த பையனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. நம்ம மக்களுக்கு தான் பரிகாரம் என்றால் சர்க்கரை மாதிரி இனிக்கிற விஷயமாச்சே தேவையான பரிகாரம் செய்தும் ஒன்றும் நடைபெறவில்லை.

நான் ஜாதகத்தை பார்த்தவுடன் உங்கள் பையனுக்கு பெண் அமையும் இடம் அந்த பெண் திருமண நிச்சயதார்த்தம் நடந்து அது ரத்து ஆகி இருக்கும் அந்த பெண் தான் உங்கள் பையனுக்கு அமையும் என்று கூறிவிட்டு ஏதும் பரிகாரம் செய்ய தேவையில்லை தானாகவே நடைபெறும் என்று கூறி வந்துவிட்டேன்.

 பிறகு ஒரு 10 நாட்களில் எனக்கு போன் செய்து திருமண பெண் அமைந்துவிட்டாள் நீங்கள் கூறியது போல அந்த மாதிரி பெண் தான் அமைந்தாள் என்று கூறினார்கள். அவர்களின் பெற்றோருக்கு மிகுந்த சந்தோஷம். இந்த மாதிரி பல பேர்களின் சந்தோஷம் தான் நான் சம்பாதித்த சொத்து வேறு சொத்து என்று எனக்கு ஒன்றும கிடையாது.

பையனின் ஜாதகத்தில் களத்திர இடத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தார்கள். அதனால் அவ்வாறு நடந்தது. இது புனர்பூ தோஷம் ஆகும். திருமணம் நிச்சயதார்த்தவுடன் நின்றுவிடும் அதனால் திருமண நிச்சயதார்த்தம் நடந்து அது திருமணத்திற்க்கு முன்பே ரத்தாகி   பெண்னை திருமண செய்தால் நன்றாக திருமண வாழ்க்கை அமையும். அவ்வாறே அது நடந்தது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Tuesday, May 1, 2012

குல தெய்வ வழிபாடு



கடந்த வாரம் தஞ்சாவூருக்கு சென்று இருந்தேன். அங்கு சென்ற வந்ததை ஒரு பதிவாக போடலாம் என்று நினைத்து இருந்தேன் இன்று தான் அதற்கு நேரம் வந்தது.

தஞ்சாவூரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன் அங்கு சில சோதிட வாடிக்கையாளர்களை ஒரு நாள் சந்தித்துவிட்டு ஒரு நாள் ஒரு குடும்பத்தின் குலதெய்வ பூஜை நடத்தினார்கள் அதில் கலந்துக்கொண்டேன். குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும். 

இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள். அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது.

இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா.

நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். முக்கால் வாசி சோதிடர்கள் இந்த விஷயத்தில் காலைவாரிவிடுவார்கள். அவர்களால் குலதெய்வ குறைகளை கண்டறிய மாட்டார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.

எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.இதை நான் எனது சோதிட வாடிக்கையாளருக்கு சொல்லும் முதல் செய்தியாகும்.

ஒரு சில குடும்பங்களில் சண்டை சச்சரவு காரணமாக குலதெய்வ பூஜை நிறுத்திவிடுவார்கள் அவ்வாறு நிறுத்தகூடாது கூடியவரை நீங்கள் சமாதானம் செய்து நடத்தப்பாருங்கள் நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.

ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம்.

ஒவ்வொரு மனிதனும் இன்றைய இருக்கின்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி அவர்களின் குலத்தெய்வத்தை வணங்குவது தான். உங்களுக்கு உங்கள் குலதெய்வம் நல்ல அருள் வழங்குதா அல்லது அந்த அருள் இல்லையா என்று பார்க்க சோதிடத்தில் ஐந்தாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் வைத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சில பேர் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று அங்கு போய் பழைய நண்பர்களுடன் உல்லாசமாக தண்ணி அடித்துவிட்டு அந்த பூஜையில் கலந்து கொள்ளாமல் வந்துவிடுவார்கள் அவ்வாறு செய்வது தவறு. அங்கு நடக்கும் பூஜை சில நேரம் விடிய விடிய நடக்கும் தூங்காமல் கண் விழித்து சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள். 

குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம். நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும்.

இப்பொழுது பல ஊர்களில் இந்த மாதம் அடுத்த மாதம் குலதெய்வ பூஜை நடைபெறும் எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக உள்ளது அதனால் போய் வர முடியாது என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்காமல் சென்று வாருங்கல் நல்லது நடக்கும். பல விபத்துக்களில் இருந்து உங்களை காப்பாற்றியது உங்கள் குலதெய்வமாக தான் இருக்கும். அதை மனதில் வையுங்கள்.

சில நேரங்களில் நாம் புண்ணிய தல தரிசனம் செய்ய செல்வோம் அப்பொழுது நீங்கள் குலதெய்வத்தை சாமி கும்பிட்டு தான் செல்ல வேண்டும் அவ்வாறு செல்லவில்லை என்றால் அங்கு போய் ஒரு புண்ணியமும் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள்.

உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள். நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

எப்பொழுது விடியும்



வணக்கம் நண்பர்களே என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்விகள் எனக்கு நல்ல காலம் இருக்கா இல்லையா இப்படியே போய் சேர்ந்துவிடுவேனா என்று தான் கேட்கிறார்கள் இன்னும் சில பேர் நான் இறக்கும் போதாவது நல்ல நிலையில் இருந்து இறப்பேனா என்று தான் கேள்வியாக இருக்கிறது. 

அவர்களுக்கு நான் சொல்லும் விடை இதுதான் ஒரு மனிதனின் வாழ்நாட்களை கடந்து கொண்டிருக்கும் போது அவனை வழி நடத்துவது மிக பெரிய பங்கு வகிப்பது அவனின் தசா புத்திதான். 

தசா புத்தி நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை அழகாக ஒடிக்கொண்டிருக்கும். தசா நாதன் சரியில்லை என்றால் அவன் அந்த அளவுக்கு படவேண்டும். சில தசா நாதன் இருக்கிறார்கள் எந்த புத்திநாதனின் பேச்சையும் கேட்கமாட்டார்கள் அவர்கள் இஷ்டத்திற்க்கு அவனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி விடுவார்கள். அவர்களின் பாடு திண்டாட்டம் தான். 

இந்த மாதிரி தசாநாதனின் நடப்பு வருசத்தில் தான் மேலை கண்ட கேள்விகள் மனிதனை கேட்க தோன்றுகிறது.  ஒரு சில தசாநாதன் இருக்கிறார்கள் அவர்கள் ஒருபடி மேலே போய் கடைசி காலத்தில் தற்கொலை எண்ணத்தை உண்டு செய்துவிடுவார்கள். ஆனால் அந்த மனிதன் அந்த கஷ்டத்தை தாக்குபிடித்து இருந்துவிட்டான் என்றால் ஒரு சில காலத்திலேயே நல்ல தசாநாதனின் தசா நடக்க ஆரம்பித்துவிடும். இழந்த பொருள் அனைத்தும் கிடைத்துவிடும். பட்ட கஷ்டத்திற்க்கு வழி பிறந்துவிடும் அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

இன்று கூட ஒரு நபர் என்னிடம் தொடர்பு கொண்டு அவரின் ஜாதக பலனை கேட்டார் அவர் வாழ்க்கையில் அந்த பாடு பட்டுக்கொண்டு இருக்கிறார். அவரின் ஜாதகத்தில் பிறந்தவுடன் சனி திசை நடந்திருக்கிறது அதன் பிறகு புதன் தசை புதன் எட்டாம் இடத்தில் இருந்திருகிறார். அவரை உண்டு இல்லை என்று பதம்பார்த்துவிட்டது. அதன் பிறகு கேது திசை சாமியார் லேவலுக்கு வந்துவிட்டார். 

ஆனால் பாருங்கள் அவரின் கெட்ட தசை முடிய இன்னும் ஒரு வருட காலமே உள்ளது அதன் பிறகு சுக்கிரனின் தசை ஆரம்பம் ஆகிறது. சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கிறார். அவருக்கு வாரி வழங்க முடிவு செய்துகொண்டு இருக்கிறார். 

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் கெடுதல் பலன் நடந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில காலங்களில் நல்ல காலங்கள் வரும். நாம் அவசரபட்டு தப்பான முடிவுக்கு வந்துவிடகூடாது. நல்ல பொழுது விடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.