Followers

Monday, February 29, 2016

தீர்வு பகுதி 11


ணக்கம்!
          நம்மிடம் வந்து சோதிட அனுபவத்தை கேட்கும் நண்பர்களிடம் நான் சொல்லுவது நான் பலனை சொல்லியுள்ளேன். அந்த பலன் நடக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு என்னை தொடர்ந்து வந்து உங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவேன்.

நான் சொல்லுகின்ற பலன் அனைவருக்கும் நடந்துவிடாது. ஏன் என்றால் எப்படி தான் நாம் கணித்து சொன்னாலும் ஒரு சில விசயங்களில் காலம் ஏமாற்றிவிடும். ஒரு சில விசயங்கள் மட்டும் தவறாக நடந்துவிடவும் வாய்ப்பு இருக்கும்.

அனைத்து பலனும் பல நண்பர்களுக்கு மிகச்சரியாக துல்லியமாக நடக்கும். அவர்கள் அனைவரும் பல வருடங்கள் என்னை தொடர்ந்து வருபவர்களாக இருப்பார்கள்.

அனைவருடைய ஜாதகத்திலும் ராகு கேது எப்படி இருக்கின்றது என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து ராகு கேது எப்படி அமைந்து இருக்கின்றது தற்பொழுது கோச்சாரப்படி எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ராகு கேது நம்மை ஆட்டிவைப்பதில் பெரும்பங்கு கொள்கிறது. அதனால் ராகு கேதுவை பார்க்க சொல்லுகிறேன். ராகு கேதுவை நாம் கணிப்பதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

நாம் எழுதுவது எல்லாம் பொதுப்பலனாக இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து தான் இதனை நாம் அறியமுடியும். நன்றாக அமைந்துவிட்டால் பிரச்சினை இல்லை. நன்றாக அமையவில்லை என்றால் நமக்கு பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுத்துவிடும். அதனால் அதனை பார்க்க சொல்லுகிறேன்

இன்று வயலூர் முருகனை தரிசனம் செய்ய செல்கிறேன். அதனை முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் நண்பர்களை சந்திக்கவும் முடிவு செய்து இருக்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 28, 2016

தீர்வு பகுதி 10


ணக்கம் !
          தீர்வு பகுதியில் இதுவரை நாம் பார்த்தது எல்லாம் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டதை பார்த்து வருகிறோம். அதனோடு உங்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தாலும் அதில் இருந்து பல விசயங்கள் உங்களுக்கு பிடிபடும்.

உங்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எடுத்து பார்த்தால் அதில் ஏதாவது ஒரு தவறு நமக்கு பிடிபடும்.  குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியாக தான் ஜாதகம் அமையும். அவர்களின் குடும்பத்தில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜாதகமும் வருகிறது.

ஒரு கிரகமும் மட்டும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிகப்படியான பிரச்சினையை கொடுக்கும் கிரகமாக மாறி அவர்களின் குடும்பத்தை போட்டு தாக்கிக்கொண்டிருக்கும். அதற்கு மட்டும் நீங்கள் பரிகாரம் செய்துக்கொண்டால் போதும் சரி அதற்கு பரிகாரம் செய்யமுடியாது என்று இருந்தால் அதனை காட்டும் விசயத்தில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.

சம்பந்தப்பட்ட கிரகம் காட்டும் அனைத்து விசயத்தையும் தவிர்த்துவிடவேண்டும். அதே நேரத்தில் அதுவாகே அந்த அமைப்பு சம்பந்தப்பட்டது வரும்பொழுது அமைதியாக இருந்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 27, 2016

பரிகாரம் செய்யும்பொழுது கவனிக்கவும்


ணக்கம்!
          ஒரு சில ஜாதகங்களுக்கு பரிகாரத்தை பரிந்துரைப்பது உண்டு அவர்களே செய்யக்கூடிய பரிகாரங்களையும் பரிந்துரைப்பது உண்டு. அதிகப்பட்சமாக தீபம் போடசெல்லுவது உண்டு அல்லது தீபம் ஏற்றி அவர்களின் பெயரில் ஒரு அர்ச்சனை செய்ய சொல்லுவேன்.

இதனை நமது நண்பர்கள் செய்யும்பொழுது ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது கோச்சாரப்படி சந்திரன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது இதனை செய்யுங்கள்.

சந்திரன் உங்களுக்கு நன்றாக இல்லாத நிலையில் இருக்கும்பொழுது உங்களின் பரிகாரம் எடுபடாது. ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் மனதுக்காரகன் உங்களுக்கு நல்ல மனதை உருவாக்கும்பொழுது மட்டுமே நீங்களும் நல்ல மனதோடு பரிகாரம் செய்வீர்கள்.

சந்திரன் பிரச்சினையை தரக்கூடிய நிலையில் இருந்து நீங்கள் பரிகாரம் செய்தால் அந்த பரிகாரம் கண்டிப்பாக எடுப்படாது. பரிகாரம் செய்பவர்களுக்கு தேவையான விசயம் நடக்காது. அதனால் உங்களின் ராசிக்கு எப்படி சந்திரன் இருக்கிறார் என்பதை பார்த்து செய்யவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தானாக வேலை செய்யும் பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தைப்பற்றி இதுவரை பார்த்து வந்து இருக்கிறோம். பாக்கியஸ்தானத்தைப்பற்றி நாம் சொல்லும்பொழுது ஒரு விசயத்தைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அதாவது நாம் சொல்லி தான் இதனை எல்லாம் செய்யவேண்டும் என்பதை மீறி இயற்கையே நம்ம இப்படி செய்ய தூண்டுகிறது.

நம்மிடம் வரும் நண்பர்களிடம் கடைசியில் நான் சொல்லுவது ஏதாவது குழந்தைகளை படிக்க வைக்க உதவுங்கள். அதாவது நீங்களே நேரிடையாக உதவுங்கள் என்று சொல்லுவது உண்டு.

நான் இப்படி சொன்னவுடன் அவர்கள் சார் நாங்கள் இதனை செய்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். அவர்களே இப்படி செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களுக்குள் இருக்கும் ஏதாே நல்ல விசயம் இப்படி நல்லதை செய்யவேண்டும் என்று அவர்களே செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது எல்லாம் ஏதாவது செய்யுங்கள் என்று நான் சொல்லுவதை விட்டுவிட்டேன். அவர்களே செய்யும்பொழுது நாம் ஏன் இதனை கேட்கவேண்டும் என்பதால் விட்டுவிட்டேன். இதனை விட அனைவருக்கும் பாக்கியஸ்தானம் ஏதாவது விதத்தில் வேலை செய்ய தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.

கூடுதலாக சம்பாதித்து நிறைய செய்யும்பொழுது நிறைய பாக்கியம் பெற்று நமது குடும்பத்தை நன்றாக வாழ வைக்கும். நமது வாரிசுகளும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 26, 2016

வெயிலை சமாளிக்க தத்துவம்


ணக்கம்!
          அக்னி வெயில் ஆரம்பித்துவிட்டது. பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. வெயில் ஆரம்பித்தாலே எனக்கு அந்தளவுக்கு ஒத்துக்கொள்ளாது. நமக்கு இருக்கும் வேலை பளு அதிகம்.

இதனையே தொழிலாக செய்வதால் நமக்கு நிறைய வாடிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்கின்றது. இதனை எல்லாம் வெயில் என்று பாராமல் பல ஊர்களுக்கு சென்று செய்துக்கொண்டு இருக்கிறேன்.

தொழில் என்று வரும்பொழுது வெயில் என்ன மழை என்ன தொழிலை செய்தால் போதும். அவ்வளவு மழை இந்த வருடத்தில் பெய்யும்பொழுது கூட நாம் பல இடங்களுக்கு சென்று தொழிலை கவனித்துக்கொண்டு தான் இருந்தோம்.

நேற்று வெயிலில் வெளியில் செல்லும்பொழுது ஒருவரிடம் என்ன வெயில் என்று அலுத்துக்கொண்டேன். அவர் என்னிடம் வந்து சொன்னார் நெருப்பு தின்னும் உடல் தானே தம்பி. வெயில் என்ன செய்துவிடபோகின்றது என்று சொன்னார். 

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதன் வழியாக ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு தத்துவத்தை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். கடும்வெயிலில் செல்லும்பொழுது இதனை நாம் நினைத்துக்கொண்டு தான் இந்த கோடையை சமாளிக்கவேண்டும்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீர்வு பகுதி 9


ணக்கம்!
          உங்களுக்கு கடுமையான பிரச்சினை இருக்கின்றது. என்னால் எழுவதற்க்கே முடியவில்லை என்று நினைப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தை எடுத்து அதில் மூன்றாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடுகளில் ராகு கேது சம்பந்தப்படுகிறதா என்பதை பாருங்கள்.

ராகு கேது கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்கும். பித்ருதோஷம் இருப்பவர்களுக்கு வாழ்வில் போராட்டம் அதிகமாக இருக்கும். போராடியே தன்னுடைய வாழ்க்கையை நிர்ணிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வு என்பது பிற்பகுதியில் தான் அதிகமாக இருக்கும். முப்பது வயதிற்க்கு பிறகு தான் நல்ல வாழ்க்கை அமையும். 

பித்ருதோஷம் என்பதை நீங்கள் தெரிந்துக்கொண்டால் நீங்களாவே அதிகமான கோவிலுக்கு சென்று வாருங்கள். புண்ணிய நதியில் நீராடிவிட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வழி கிடைக்கும்.

தற்பொழுது பித்ருதோஷம் இல்லாதவர்களும் தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று கோவிலுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். பித்ருதோஷம் இருப்பவர்கள் அதிகமாக கோவிலுக்கு செல்லவேண்டும் இது தான் இவர்களுக்கு தீர்வு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 25, 2016

வாஸ்து


ணக்கம்!
          வாஸ்து சாஸ்திரத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு கடந்த ஒரு நாள் முன்பு ஒரு சம்பவம் நடந்தது. அதனை உங்களிடம் சொல்லுகிறேன்.

எந்த ஒரு சாஸ்திரமும் நமக்கு நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அதனை விட்டுவிடவேண்டும். அனைத்தும் நாம் வாழ்வதற்க்கு தானே தவிர சாஸ்திரத்திற்க்காக நாம் வாழக்கூடாது என்பதை நான் அடிக்கடி சொல்லுவது உண்டு.

பழையகாலத்தில் கிராமபுறங்களில் எல்லாம் அடுப்பை ஈசானிய மூலையில் அமைத்து இருப்பார்கள். தற்பொழுது வாஸ்து என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அனைத்தையும் அக்னி மூலையில் அமைத்துவிட்டார்கள்.

பழைய காலத்தில் உள்ளவர்கள் நன்றாகதானே வாழ்ந்தார்கள். இன்றைய காலத்தில் பொறாமையால் மனிதன் சாகுறான். இன்றைய காலத்தில் வாஸ்துவை பிடித்துக்கொண்டு பல விசயங்களை மாற்றிவிட்டார்கள். 

வாஸ்துபடி அமைக்கிறேன் என்று பல வீட்டை இடித்து கூட நம்ம ஆட்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது எல்லாம் தேவையில்லை. ஒரளவு பார்க்கவேண்டியது தான். அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 24, 2016

தீர்வு பகுதி 8


ணக்கம்!
          அம்மனுக்கு விஷேச ஹோமம் நடத்திக்கொண்டு இருக்கிறேன் அந்த காரணத்தால் பதிவுகள் குறைவாக கொடுக்கிறேன். விரைவில் ஹோமம் முடிந்துவிடும் அதன் பிறகு அதிக பதிவுகளை தருகிறேன்.

ஒருவர் நன்றாக முன்னேறி வருகின்றார் என்றால் அந்த நபரைக் கண்டு நாம் பொறாமைக்கொள்ளகூடாது. ஒருவர் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவரை உயர்த்துவது அவருக்கு நல்ல கிரக அமைப்பு. அந்த நல்ல கிரக அமைப்பால் அவர் உயர்ந்துக்கொண்டு இருக்கிறார்.

நாம் எதையாவது செய்தால் அவரின் கிரகங்கள் நம்மை தாக்கிவிடும். வலுவான கிரக அமைப்பு இருப்பதால் அவரைப்பற்றி தவறாக பேசினால் கூட நமக்கு எதிராக அமைந்துவிடும். இதனை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்கலாம் கண்டிப்பாக நடக்கிறது. பல பணக்காரர்களிடம் மோதி வீழ்ந்த நபர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 23, 2016

தீர்வு பகுதி 7


ணக்கம்!
          நான் இந்த பதிவை எழுதும் முன்பு பல கிராமங்களுக்கு சென்று சோதிடம் பார்த்து இருக்கிறேன். அப்படி பார்க்கும் ஊர்களில் பல தகவல் நமக்கு கிடைக்கும் அதனை தான் நான் அனுபவமாக உங்களுக்கு சொல்லி வருகிறேன்.

ஒரு சில கிராமங்களில் அந்த கிராமத்தில் உள்ள அதிகபடியான நிலத்தை வைத்திருந்தது அந்த ஊரில் இருந்த பிராமணர்களின் குடும்பமாக இருக்கும். பிராமணர்கள் அந்த ஊரை விட்டு சென்று நகரத்தில் வசிக்க தொடக்கிவிட்டனர். அவர்களின் நிலத்தை அங்குள்ள மக்கள் ஆட்டைப்போட்டு அதாவது அவர்களுக்கு தெரியாமல் அந்த நிலத்தை பயன்படுத்துவது உண்டு.

ஒரு சில இடத்தில் அவர்களை மிரட்டி கூட வாங்கி இருக்கிறார்கள். நம்ம ஆட்கள் தான் வயலுக்கு ஒரு வருடம் சொந்தகாரன் செல்லவில்லை என்றால் அந்த வயலை தன் வயல் என்று சொல்லுவார்களே. அப்படி பல இடத்தை எடுத்து இருக்கிறார்கள்.

இவர்களின் குடும்பங்கள் எல்லாம் தற்சமயம் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பல பேர் அதனால் இறந்துகூட இருக்கிறார்கள். பல இடங்களில் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

இது எல்லாம் நடக்குமா என்று கேட்காதீர்கள் கண்டிப்பாக நடந்து இருக்கிறது. நடந்துக்கொண்டும் இருக்கின்றது. பிராமணர்கள் எல்லாம் சத்தியவான் என்று நான் சொல்லவில்லை அவர்கள் சொன்ன மந்திரம் அவர்களை காக்கிறது. 

இதனை நீங்கள் நம்பவில்லை என்றாலும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபராவது இதனை நம்புவார்கள். அவர்களுக்கு பயன்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிலத்தில் எதுவும் செய்யாமல் விட்டுவிடுங்கள். நிறைய பிராமணர்களுக்கு உதவுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 22, 2016

தீர்வு பகுதி 6


ணக்கம்!
          ஒவ்வொரு பிரச்சினையும் நாம் வெளியில் சொல்லி அதற்கு தீர்வை சொல்லுகிறோம். இப்படி சொன்னாலும் அவர் அவர்களுக்கு உள்ளே என்ன பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒவ்வொரு மனிதனின் உள்பக்கம் மற்றும் வெளிபக்கம் இருக்கும் அதில் வெளிதோற்றத்திற்க்கு நல்லவராக தெரிந்தாலும் உள்ளே இருக்கும் கருப்பு பக்கம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அந்த கருப்பு பக்கத்தில் மனிதன் என்ன செய்தான் என்பதை அவனுக்கு தான் தெரியும். 

ஒவ்வொருரின் கருப்பு பக்கத்திலும் ஒவ்வொருவரும் தாம் இந்த தவறை செய்தோம் என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் தேடும்பொழுது தான் அவர்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

கருப்பு பக்கத்தை நாம் சோதிடத்தில் ஒரளவு சொன்னாலும் அதனைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் அதிகம் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் மிருககுணம் செய்த தவறு என்ன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை தேடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 21, 2016

மகாமகம்


ணக்கம்!
          மகாமகத்தை குறித்து ஜாதககதம்பத்தில் எந்த ஒரு தகவலையும் கொடுக்கவில்லை என்று ஒரு நண்பர் போன் செய்து கேட்டார். மகாமகத்தை பற்றி எல்லா பதிவுகளிலும் தொலைக்காட்சியிலும் வந்த காரணத்தால் அதனைப்பற்றி நான் சொல்லவில்லை.

மகாமகம் என்பது உங்களின் ஊரில் ஒரு காேவிலில் ஏதாவது ஒரு கோவிலில் தீர்த்தவாரி நடப்பது போல் கும்பகோணத்திலும் நடக்கும் ஒரு தீர்த்தவாரி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனை ஊதி பெரியதாக செய்துவிட்டார்கள்.

நமது சோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரத்திற்க்கு அதிக அந்தஸ்து கொடுத்து திருவிழாக்களை நடத்துவார்கள். மகம் நட்சத்திரம் வரும்பொழுது தான் தீர்த்தவாரி நடைபெறும். அந்த நேரத்தில் நீராடினால் நல்லது.

ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் அதிகளவு கூட்டம் வந்தால் ஆபத்தான ஒன்று. என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருங்கள். கும்பகோணம் எனக்கு அருகில் இருந்தாலும் நான் புனிதநீராட செல்லவில்லை. நீங்கள் சென்றால் பத்திரமாக பாதுகாப்போடு சென்று வாருங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 19, 2016

சனிப்பிரதோஷம்


ணக்கம்!
               புண்ணியம் சேர்க்கவேண்டும் பாக்கியஸ்தானம் பலப்பெற்று நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் நாளை சனிப்பிரதோஷம் வருகின்றது. அந்த பிரதோஷத்தில் கலந்துக்கொண்டு ஈசனை வழிபடுங்கள்.

ஒரு வருடகாலம் பிரதோஷத்தில் கலந்துக்கொள்ளாதவர்கள் கூட நாளை நடக்கும் பிரதோஷத்தில் கலந்துக்கொண்டால் போதும் அனைத்து பிரதோஷத்தின் புண்ணியத்தையும் பெற்றுவிடலாம். 

பிரதோஷத்திற்க்கு தேவையான சாமான்களை வாங்கிக்கொடுத்துவிடுங்கள். பொதுவாக பெரிய கோவில்களில் எல்லாம் நிறைய பேர் வாங்கிக்கொடுப்பார்கள். பல கோவில்கள் செய்வதற்க்கு ஆள்கள் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களை பார்த்து சாமான்களை வாங்கிக்கொடுங்கள்.

பூஜைப்பொருட்களை வாங்கிக்கொடுக்க முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. அமைதியாக இறைவனிடம் அந்த நேரத்தில் வேண்டினால் போதும் உங்களுக்கு அருள் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீர்வு பகுதி 5

ணக்கம்!
          ஒரு குடும்பம் நன்றாக வாழ்ந்து இருக்கும். அந்த வாழ்ந்த குடும்பத்தை பார்த்து பல பேர் பொறாமைப்படுவார்கள். பொறாமைப்பட்ட காரணத்தால் அந்த குடும்பம் நிறைய சறுக்கலை சந்தித்து கடைசியில் அழிவை சந்தித்து இருக்கும்.

ஒரு சிலரின் வாசாப்பு என்ற கிராமத்தில் சொல்லுகின்ற வாய்ச்சொல்லை பெற்று குடும்பங்கள் நிறைய அழிந்து இருக்கின்றன. இது அதிகமாக கிராமபுறங்களில் நடக்கும்.

பல பேர்க்கு ஒரே நேரத்தில் ஒரு கொடுமையான தசா நடந்து வந்திருக்கும் அதனாலும் கடுமையான பாதிப்பை அடைந்து ஏழ்மையை நோக்கி செல்வார்கள். 

இவர்கள் அனைவரும் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்தால் மட்டுமே அதில் இருந்து விடுபட வழி பிறக்கும். வாழ்ந்த குடும்பத்திற்க்கு எப்படியும் ஒரு பிடிப்பு எங்காவது இருக்கும். அதனை பிடித்து மேலே வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 18, 2016

ராகு பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்பதில் ராகு சனியைபோலவும் கேது செவ்வாயை போலம் வேலை செய்யும் என்பது தான் சரி என்று நண்பர் சொல்லிருந்தார். அவர் சொன்னது சரி என்றாலும் அனுபவத்தில் ராகு செவ்வாய் போலவும் சனி கேதுவை போலவும் வேலை செய்கிறது.

ராகு கிரகம் அதிவேகமாக வேலை செய்யகூடிய ஒரு கிரகம். செவ்வாய் கிரகமும் அப்படி தான் வேலை செய்யும். கேது கிரகம் மெதுவாக வேலை செய்யும் அதே போல் சனியும் மெதுவாக வேலை செய்யக்கூடிய ஒரு கிரகம்.

உயரத்தில் மிகப்பெரிய ஆட்கள் எல்லாம் ராகு செவ்வாய் போன்ற கிரகத்தின் சாயல் போலவே இருப்பார்கள். கேதுவும் சனியும் மிக குறைவான உயரத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

எது எப்படி இருந்தாலும் நான்கு கிரகமும் அடிப்பேன் என்று முடிவு செய்துவிட்டால் அடித்தே தீரும். அனைத்தும் ஒன்றுவிட்டு பங்காளிபோல தான் வேலை செய்யும்.

ராகுவும் செவ்வாயும் ஒரே அடியில் கொன்றுவிடும். சனியும் கேதுவும் கொஞ்ச கொஞ்சமாக கொல்லக்கூடிய கிரகங்கள். நான்கு பேரும் பெரிய ஆட்கள் தான் என்பது என்னுடைய கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 17, 2016

தீர்வு பகுதி 4


க்ம்!
          ஜாதகம் எப்படி இருந்தாலும் உங்களின் தந்தையாரின் செயலப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். தந்தையாரிடம் உள்ள தவறான செயலால் யாராவது பாதிக்கப்பட்டார்களாக என்பதை பற்றியும் செய்தியை சேகரித்து பார்த்தால் அதனால் பிரச்சினை வந்திருக்கும் என்பதை தெரியும்.

ஒரு சிலருக்கு அவர்களின் தாத்தா ஏதாவது பிரச்சினை செய்திருந்தால் கூட ஒரு சிலரின் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் இருக்கும். தற்பொழுது தான் ஒரளவு நவீன வசதி எல்லாம் வந்து தவறுகள் செய்யாமல் இருக்கின்றனர். அந்த காலத்தில் ஒரு தெருவில் நடந்த சண்டையை அடுத்த தெருவில் உள்ளவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும். தவறு நிறைய நடப்பதற்க்கு வாய்ப்பு இருக்கும்.

ஏதாவது பிரச்சினை செய்திருந்தால் வெளியில் தெரியாமல் இருந்திருக்கும் நன்றாக விசாரித்து பார்த்தால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உண்மையான பிரச்சினை இது தான் என்பதை அறிந்துக்கொண்டால் அதற்கு தீர்வை நாம் எளிதில் கண்டுபிடித்து ஏதாவது செய்து நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

மேலே சொன்ன விசயங்களை நீங்கள் படிக்கும்பொழுது இது எல்லாம் சரிப்பட்டுவருமா என்று நினைக்கலாம். உண்மை சொன்னால் நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று இருந்த இடமே தெரியாமல் பாேனதற்க்கு காரணம் அவர்களின் குடும்பத்தில் இப்படி ஏதாவது ஒரு தவறுகளை செய்த சாபத்தால் வந்த வினையாக இருக்கின்றது. எதற்கும் இதனை நீங்கள் ஆராய்ந்தால் ஒரளவு உங்களுக்கு பிடிபடும் என்பதற்க்காக சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீர்வு பகுதி 3


ணக்கம்!
          நமக்கு ஏன் ஒன்றும் நல்லதாக நடக்கவில்லை என்றால் நாம் வைத்துள்ள அவநம்பிக்கை தான் காரணமாக இருக்கமுடியும். நான் அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள் என்று சொல்லுவேன். ஒரு தடவை வேண்டிப்பார்ப்பார்கள். நடக்கவில்லை என்றவுடன் அடுத்த தடவை அப்படியே விட்டுவிடுவார்கள். இலவசமாக வேண்டிக்கொள்வதில் என்ன நஷ்டம் வந்துவிடபோகின்றது. சரி இதனை விடலாம்.

நம்ம மனது நம்மளை ஏமாற்றிவிடும். உண்மையை சொன்னால் இதனை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் பிறரை குறைச்சொல்லிக்கொண்டிருப்போமே தவிர நமது மனதால் தான் நாம் இந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு நல்ல நம்பிக்கையை அதாவது நேர்மறையான நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயல்படுவதில்லை. எப்படியும் நடந்துவிடும் என்ற நம்பிக்கையை வைப்பதற்க்கு பதில் எப்படியும் இது நடக்காது என்று நாம் நினைப்பதால் முக்கால்வாசி வெற்றி தோல்வியாக மாறிவிடுகிறது.

அஷ்டமசனி நடந்தாலும் சரி ஏழரை சனி நடந்தாலும் சரி வேறு கிரக பாதிப்பு வந்தாலும் சரி நமது குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் நம்மை காப்பாற்றும் என்ற மனஉறுதி இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம்.

முக்கியமான ஒரு தகவலை பகிர்கிறேன். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் முதலில் கோவிலுக்கு எல்லாம் செய்துவிடுவேன். என்னால் முடிந்த உதவியை செய்துவிட்டு அந்த காரியத்திற்க்காக காத்திருப்பேன். அந்த காரியம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும். இதனை நீங்களும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 16, 2016

ராகுவின் பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்பதைப்பற்றி இரவு நேரத்தில் பார்த்து வருகிறோம். ராகு கிரகம் செவ்வாய் கிரகம் போல் செயல்படும் என்பதை பலர் சொல்லுவார்கள். இரண்டும் அதிக வேகமாக செயல்படும் கிரகங்கள் தான். அதனால் அந்த கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

செவ்வாய் தோஷத்திற்க்கு ஒரு சில இடத்தில் படு பயங்கரமான உருவத்தை உடைய தெய்வங்களை வணங்க சொல்லுவார்கள். செவ்வாய் தோஷத்திற்க்கு பரிகாரமும் அங்கு நடைபெறும். காளி துர்க்கை போன்ற தெய்வங்களை வைத்து பரிகாரம் செய்வார்கள்.

ராகு தோஷத்திற்க்கு பரிகாரமும் இப்படிப்பட்ட தெய்வங்களை வணங்க சொல்லுவார்கள் ஆக இரண்டும் ஒரே மாதிரி செயல்படும் கிரகங்கள் என்று நாம் வைத்துக்கொள்ளலாம்.

ராகுவும் செவ்வாயும் ஒரே பலம் பெற்ற கிரகம் என்பதால் முருகனை வணங்கினால் கூட ராகுவின் தாக்கம் குறையும் என்று எனது நண்பர் ஒருவர் தற்பொழுது சொன்னார். அதனையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். எதனை வணங்கினாலும் இரண்டும் ஒன்றே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீர்வு பகுதி 2


வணக்கம்!
          ஒரு குடும்பத்திற்க்கு என்னை அழைத்து சென்றனர். அவர்கள் நாங்கள் நன்றாக சாமி கும்பிடுகிறோம் ஆனால் நாங்கள் நினைக்கு வாழ்க்கை எங்களுக்கு அமையவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.

ஜாதகத்தை மீறிய பல செயல்கள் இருக்கின்றன. அதனை நாம் ஜாதகம் பார்த்து தெரிந்துக்கொள்ள முடியாது. அவர்களை பார்த்து தான் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். கோவிலுக்கு மட்டும் சென்றால் ஒரு சில விசயங்கள் நடந்துவிடாது நம்மையும் நாம் சுயபரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். நம்மை கொஞ்சம் மாற்றினால் தான் நல்லது நடக்கும்.

அவர்களின் குடும்பத்தில் இருக்கும் நபர் ஐந்து பேர். இந்த ஐந்து பேரும் படுகோபகாரர்கள் ஒருவரிடமும் பொறுமை என்ற குணம் இல்லை. அவர் அவர்களுக்கு கோபபட்டு ஏதாவது செய்துக்கொண்டு இருப்பார்கள்.

கோபபட்டு அடித்துக்கொள்வது கிடையாது. ஏதாவது பொருட்கள் மேல் காட்டிக்கொள்வது, என்ன இந்த சனியன் இப்படி செய்கிறது என்று ஏதாவது பொருட்கள் மீது காட்டுவது அவர்களி்ன் குணமாக வைத்து இருந்தனர். 

பொறுமை என்ற ஒன்று இருந்தால் ஜாதகத்தில் இருக்கும் பல நல்ல விசயங்கள் நடைபெறும். பொறுமை இல்லை என்றால் என்ன தான் கோவில்களை கும்பிட்டாலும் நல்ல பலனை எதிர்பார்க்கமுடியாது. உங்களின் குடும்பத்தில் இப்படி இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள். நல்ல காலம் விரைவில் பிறக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீர்வு பகுதி 1


ணக்கம்!
                நேற்று காலையில் வந்த பதிவைப்படித்துவிட்டு ஒரு சில நண்பர்கள் தொடர்புக்கொண்டனர். நேற்று நான் எந்த ஒரு போனையும் எடுக்கவில்லை காலையில் வெளியில் சென்றுவிட்டேன். நம்ம ஆட்கள் இதனை சொல்ல போனை அடி அடி என்று அடிப்பார்கள் என்பதால் அமைதியாக வேறு வேலையை பார்த்தேன். முதல் தீர்வாக ஒன்றை பார்க்கலாம்.

பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள் என்று சொல்லிருந்தேன். உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு குலதெய்வ வழிபாடான பச்சைப்பரப்புதலை செய்து வருகின்றீர்களாக என்பதை முதலில் உங்களை நீங்களே கேட்டுபாருங்கள்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்துவந்தாலே ஒரு நல்ல வழியை காட்டும். குலதெய்வ அருள் இருந்தால் குலம் செழிக்கும்.

பல நண்பர்கள் அமாவாசை அல்லது பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து இதனை செய்து வந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கின்றது.

ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் தெய்வத்தை வணங்குங்கள் என்று தான் சொல்லிருந்தேன். இதனை கூட நீங்கள் செய்யவில்லை என்றால் பிற தெய்வத்தை நீங்கள் எப்படி வணங்குவதற்க்கு நேரம் இருக்கும்.

அடுத்த பதிவில் அடுத்த ஒரு தீர்வை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 15, 2016

ராகு பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்று மனதில் திடீர் என்று ஒரு எண்ணம் வந்தது நேற்று இரவு அதனைப்பற்றி ஒரு பதிவை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்றும் அதனைப்பற்றி பார்க்கலாம்.

ராகு பலம் பெறுவது நல்லது என்று சொல்லிருப்பேன். ராகு பலம் பெறும்பொழுது அதன் பாதிப்பு ஒரு சில நேரங்களில் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் திசை மாறி செல்வார்கள். 

இன்றைய காலத்தில் அவர் அவர்களின் குடும்பத்தை பார்ப்பதே கடினம் என்ற நிலையில் இருக்கும்பொழுது தேவையில்லாமல் அடுத்த குடும்பத்தில் நுழையும் வேலையை ராகு செய்துவிடுவார்.

உண்மையான குடும்பம் தெருவிற்க்கு வரவேண்டிய சூழ்நிலையை உருவாகிவிடும். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு ஒரு சில அறிவுரையை சொன்னாலும் அவர்களால் அதனை பின்பற்றி வரமுடியவில்லை. ராகுவை மீறி அவர்களால் வரமுடியாமல் இருக்கின்றனர். 

நான் சொன்னதை போல் உங்களின் குடும்பங்களில் நடந்தால் அதற்கு எப்படியும் தீர்வு காணவேண்டும் என்று முனைப்போடு அதற்குரிய வழியை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புண்ணியம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எனக்கு பிரச்சினை கொடுக்க நான் விடுவதில்லை அதற்கு காரணம் நான் செய்யும் தான தர்மம் போன்ற பாக்கியஸ்தானம் சம்பந்தப்பட்ட விசயமாக அதிகம் இருக்கும்.

பொதுவாக ஒரு காரியம் நடைபெறவேண்டும் என்றால் அதற்கு நான் முன்கூட்டியே பல நல்ல காரியத்தை செய்துவிடுவேன். என்னிடம் பரிகாரம் செய்யும் நபர்களுக்கு கூட அவர்களிடம் இருந்து பணத்தை அல்லது பொருளை வாங்கி கோயில் ஏதாவது ஒரு புண்ணியகாரியத்திற்க்கு கொடுத்துவிட்டு தான் செய்வேன்.

என்னுடைய வருமானத்தில் கூட பல நல்ல காரியங்களுக்கு செய்துவிடுவது உண்டு. இது எல்லாம் எனக்கு குரு கற்றுக்கொடுத்த பாடமாக இருப்பதால் அதனை அப்படியே பின்பற்றி வருகிறேன்.

உங்களுக்கும் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் இப்படி செய்துக்கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் உங்களிடம் இந்த செயல் இருந்தால் எந்த ஜென்மத்திற்க்கும் பாக்கியஸ்தானம் குறை வைக்காது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அன்பான அழைப்பு


ணக்கம்!
          ஜாதககதம்பத்தை பல வருடங்களாக படித்துவந்து அதனை பின்பற்றி வரும் நண்பர்கள் பல பேர் இருக்கின்றீர்கள். பல வருடங்களாக படித்து வரும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசி வருவார்கள். இவர்களில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் எனக்கு ஏற்படவில்லை என்று நினைப்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசுங்கள்.

கண்டிப்பாக பல வருடங்கள் படித்தவர்கள் என்னை எப்படியும் தொடர்புக்கொண்டு பேசி வருவார்கள். புதியதாக வந்து நான் பல வருடம் படித்துக்கொண்டு வருகிறேன் என்றால் நான் நம்புவதற்க்கில்லை.

உங்களை என்னை தொடர்புக்கொண்டு பேசுங்கள் என்று சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை நாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வை பற்றி யோசிக்கலாம்.

புதியதாக வந்தவர்கள் எப்படியும் என்னிடம் சோதிட ஆலோசனை கேட்பவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு அந்த ஆலோசனையே போதுமான ஒன்றாக இருக்கும். சொன்ன யோசனையை பின்பற்றி வாருங்கள்.

நிறைய ஆன்மீகவாதிகளை சந்தித்துக்கொண்டு இருந்த நண்பர்களை என்னால் எளிதில் அடையாளம் காணமுடியும். அவர்கள் என்னை தொடர்புக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அதாவது சந்தித்து ஆலோசனை கேட்பது வேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 14, 2016

ராகு பலம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை பொறுத்தவரை ஒன்பதில் ராகு இருந்தால் பித்ருதோஷம் என்று சொல்லுவார்கள். அதே நேரத்தில் ஒன்பதில் அமையும் ராகு நல்ல வலுவாக அமைந்துவிட்டால் அந்த நபருக்கு அனைத்தும் நல்லதாகவே அமையும்.

ஒரு சில காலங்கள் வரை மிகவும் கஷ்டப்பட்டுவிட்டு அதன் பிறகு மிகவும் ஒரு நல்லதோறு வாழ்க்கையை வாழ்வார்கள். முப்பது வயது வரை கடுமையான கஷ்டம் இருக்கும் அதன் பிறகு ஒரளவு தெளிவு ஏற்படும். முப்பந்தைந்து வயதை கடந்தவுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆரம்பிப்பார்கள்.

ஒரு சிலருக்கு அதிகபட்சமான வாழ்வு கூட அமையும். ராகு பலம் பெற்றுவிட்டால் அந்த நபருக்கு ஆண்குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் இருக்கும். பொதுவாக ஒன்பதில் ராகு இருக்கும் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். வலுவாக அமைந்த ராகு ஆண் குழந்தையை கொடுக்கிறது.

ராகு ஒன்பதில் அமைந்து இருப்பவர்களுக்கு அதிகமான வெளிஇனத்தவர் தொடர்பு இருக்கும். வெளிநாடுகளில் கூட தொடர்பு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவி செய்து அதன் வழியாக முன்னேற்றம் அடைந்தவர்களாக கூட இருப்பார்கள்.

ராகு கிரகம் மிக வலிமையான ஒரு கிரகம். ஜாதகத்தில் ராகு வலிமையாக அமைந்த நபர்கள் எதையும் துணிந்து செய்பவர்களாக இருப்பார்கள். வெற்றி மேல் வெற்றியாக குவிக்கும் நபர்களுக்கு எல்லாம் ராகு பலம் பெற்றவர்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கார் கலர்


வணக்கம்!
          ஈராேடு சென்று வந்ததை சொல்லிருந்தேன். அதில் ராசக்கோவில் சென்று வந்ததை சொல்லிருந்தேன் அந்த கோவிலுக்கு நிறைய பேர் காரில் வந்து இருந்தார்கள். நமது நண்பர் சொன்னார் இங்கு இருக்கும் கார்களை பாருங்கள் அனைத்தும் வெள்ளை கலரில் இருக்கும் என்றார். 

அனைத்து கார்களும் வெள்ளை கலரில் இருந்தது. அவர் சொன்னார் எல்லாம் சோதிடகாரர்கள் செய்த வேலை என்றார். கருப்பு கலர் காராக இருந்தால் அது நல்லது இல்லை வேறு எந்த கலரும் நல்லது இல்லை என்று சோதிடர்கள் சொன்னதால் இவர்கள் அனைவரும் வெள்ளை கலர் கார் வாங்கிருக்கிறார்கள் என்றார்.

ஒருவருக்கு குரு தசா நடந்து அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அமைவது எல்லாம் மஞ்சள் நிறமாக அமையும். குரு தசா நடப்பவர் சென்று வெள்ளை கலர் கார் வாங்கினால் குரு கோபப்படமாட்டாரா ?

பொதுவாக உள்ள கருத்தை எடுத்துக்கொண்டு அனைவரும் அதனை செய்வது என்பது நல்லது அல்ல. அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எந்த கலர் ஏற்றதாக வரும் என்பதை பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

எல்லாேரும் வெள்ளை கலர் வாங்குகிறார்கள் நானும் வாங்குகிறேன் என்றால் தேவையில்லைதா பிரச்சினையை வந்து சேர்ந்துவிடும். நீங்களே சென்று ஒரு காரை தேர்ந்தெடுக்கும்பொழுது உங்களின் ஜாதகப்படி நல்லது நடந்துவிடும். நீங்கள் இது தான் வேண்டும் என்றால் பிரச்சினையை நீங்களே விலைக்கு வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஞானத்தை தேடி


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டு அதிபதி விரையாதிபதி வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். விரையவீட்டில் இருப்பதால் நாம் அனைத்திற்க்கும் கஷ்டப்படபோகிறார் என்று நினைப்போம். 

பாக்கியாதிபதி ஆன்மீ்கத்தை தருபவர். ஆன்மீகத்தை நாடி பல தேசங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பல தூரதேசங்களுக்கு சென்று ஆன்மீகஸ்தலங்களை பார்க்கும் வாய்ப்பு அமையும். ஞானமார்க்கத்தை எளிதில் அடையும் நபர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு கஷ்டமான வாழ்க்கை அமைந்து அதன் வழியாக கூட ஆன்மீகத்தை நாடி செல்வார்கள். பொதுவாக பல தேசங்களுக்கு நடந்து சென்று தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் விமானத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றார்கள் அந்த காலத்தில் நடந்துச்சென்றுக்கொண்டு இருந்தார்கள். எப்படி செல்கின்றார்கள் என்பதில்லை ஆனால் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கும் நிலை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 13, 2016

அண்ணன் என்னடா


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி லாபஸ்தானஅதிபதியோடு தொடர்புக்கொள்ளும்பொழுது என்ன மாதிரி பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். லாப ஸ்தானம் என்பது மூத்த சகோதர சகோதரிகளை காட்டும் இடமும் என்பதால் மூத்த சகோதர அல்லது சகோதரிகள் வழியாக நல்லது நடக்கும் என்பதை சொல்லலாம்.

இன்றைய காலத்தில் ஒரு சிலருக்கு அண்ணன் நல்லபடியாக அமைந்துவிடுவது உண்டு. மீதி உள்ள அனைவருக்கும் அண்ணன் என்பவர் சொத்தை அதிகம் ஆட்டை போட்டவர்களாக தான் இருப்பார்கள்.

பல குடும்பங்களை நான் பார்த்து இருக்கிறேன். அண்ணன் குடும்பத்திற்க்கு மாடாக உழைத்து போடுவார்கள். தம்பிக்கு ஒரு திருமணம் நடத்தகூட அண்ணன் நினைப்பதில்லை. அப்படியே திருமணம் நடந்தாலும் கூட தம்பி குடும்பத்தை பார்க்க கூட அண்ணன் நினைப்பதில்லை.

வேலையை வாங்கிக்கொண்டு அவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார். அண்ணன் ஒரு சுயநலக்காரர்களாகவே இருக்கிறார்கள். முக்கால்வாசி பேருக்கு சரியில்லை என்று சொல்லலாம்.

அண்ணன் குழந்தையை தம்பி அப்படி ஒரு நல்லவிதமாக வளர்பார். அவர் குழந்தையை தூக்கி கொஞ்சகூட ஆள் இருக்காது. அண்ணன் பிள்ளையை வளர்ப்பதை விட தென்னம்பிள்ளையை வளர்க்கலாம் என்று சும்மாவா சொன்னார்கள்.

உங்களின் பாக்கியாதிபதி லாபஸ்தான அதிபதியோடு சம்பந்தம் இருக்கும்பொழுது அண்ணன் ஒரு நல்ல வழிகாட்டியாக உங்களுக்கு தோள்கொடுப்பவர்களாக இருப்பார். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


ணக்கம்!
          ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஒரு குழந்தை போதுமா சார் அல்லது கூடுதலாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டார். பொதுவாக நல்ல கருத்தை எதிர்பார்த்து எந்த ஒரு விசயத்தையும் என்னிடம் கேட்பது நமது நண்பர்களின் வாடிக்கையான ஒரு விசயம் அதனால் நான் சொல்லுவேன்.

அரசாங்கம் பொதுவான ஒரு சட்டத்தை நிறைவேற்றி இது அனைவருக்கும் ஒரு சட்டம் தான் என்று சொன்னால் அதனை மீறி நாம் சொல்லக்கூடாது. நம்ம சட்டம் எப்படி இருக்கின்றது என்பதை நான் சொல்லதேவையில்லை.

அதிக குழந்தை பெற்ற குடும்பம் எல்லாம் வீணாக போய்விட்டது என்று ஒரு குடும்பத்தை கூட நாம் காட்டமுடியாது. குழந்தை அதிகம் இருக்கும் வீட்டில் கலகலப்பாக இருக்கும். 

ஒரு குழந்தையோடு இருக்காமல் அதனாேடு இன்னோன்றும் பெற்றுக்கொள்ள நான் அறிவுரை சொல்லுவேன்.உங்களால் கூடுதலாக பெற்றும் அதனை சமாளிக்கமுடியும் என்றால் தாராளமாக பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட தனிகவனம் செலுத்தி நான் பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கு காரணம் அனைவருக்கும் குழந்தைபாக்கியம் கிடைக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் செய்கிறேன். ஒரு குழந்தை இருக்கும் ஆள்கள் எல்லாம் அடுத்ததும் பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 12, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் தொடர்ச்சி






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 10, 2016

அம்மன் பூஜை

ணக்கம்!
          அம்மன் பூஜை 11/02/2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் 


சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ராஜ்கண்ணா அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வீரேஷ் அவர்கள்
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்
பெரம்பலூரை (USA) சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
துறையூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்

மற்றும் பல நண்பர்கள் காணிக்கையை செலுத்தியுள்ளனர்

அம்மன் பூஜை நாளை காலை நடைபெறும் அம்மன் பூஜை நேரத்தில் புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 9, 2016

பயண அனுபவம்


ணக்கம்!
          நேற்று ஈரோடு அருகில் இருக்கும் சென்னிமலை முருகனை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். சென்னிமலை முருகனை பார்த்து தரிசனம் செய்யவேண்டும் என்று நீண்ட நாள்களாக ஒரு ஆவல் இருந்தது. 

நேற்று ஈராேடு சென்றப்பொழுது நண்பர் தீபன் சென்னிமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று கூப்பிட்டார். நானும் சரி முருகனே நம்மை அழைத்தது போல் எண்ணிக்கொண்டு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தேன். 

மலையின் மீது அமைந்துள்ள அற்புதமான கோவில் தற்பொழுது தான் இதற்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார்கள். இதில் ஒன்றைச்சொல்லவேண்டும் ஆலயத்தை கருங்கற்களைக்கொண்டு எழுப்பியுள்ளார்கள். பழமையான கோவிலுக்கு பழமையான ஒரு நல்ல விசயத்தை கொண்டு கோவில் கட்டியிருப்பதால் அருமையாக இருக்கின்றது.

சித்தர் காேவிலும் ஒன்று இருக்கின்றது. முருகன் கோவிலுக்கு மேலே சித்தர் கோவில் உள்ளது. அதனை தரிசனம் செய்தோம். சித்தர் பெயரிலேயே பல குழப்பம் இருப்பதால் அதனை எல்லாம் நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள். 

சென்னிமலை சென்று திரும்பும் வழியில் ராசக்கோவில் என்ற ஊரில் ராசக்கோவில் என்று ஒன்று இருக்கின்றது. அதனையும் தரிசனம் செய்தோம். இந்த சாமி பெயரில் இந்த ஊரும் அமைந்து இருக்கின்றது. இது ஒரு குலத்திற்க்கு குலதெய்வமாக இருக்கின்றது. தற்பொழுது தான் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கின்றார்கள். ஏதோ முன்ஜென்ம தொடர்பு நமக்கும் இந்த கோவிலுக்கும் இருந்து இருக்கலாம் அதனால் இதனை தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நேற்று அமாவாசை என்பதால் ராசகோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. தள்ளுமுள்ளு செய்து சாமி தரிசனம் செய்தோம். இன்று காலை தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 7, 2016

பாக்கியஸ்தான சோதனை


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் லாபஸ்தானத்தோடு சம்பந்தப்படும்பொழுது அவர்களுக்கு எல்லாமும் பாசிடிவ்வாகவே நடைபெறும். ஒரு வேலை நடைபெறவேண்டும் என்றால் இப்படிப்பட்ட அமைப்பு உள்ளவர்களை கூப்பிட்டு அவர்களின் கையால் அந்த வேலையை ஆரம்பித்தால் அது உடனடியாக நடைபெற்றுவிடும்.

அடுத்தவர்களை நம்பி நாம் காலத்தை தள்ளமுடியாது நம்மாலே அது நடைபெறவேண்டும் என்றால் என்ன செய்வது என்று கேட்கதோன்றுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை ஒவ்வொருவரும் பாக்கியஸ்தானத்தில் சொல்லப்பட்ட கருத்தை எடுத்து செய்தாலே போதும்.

நான் இதனை எல்லாம் செய்கிறேன் ஆனாலும் என்னால் அப்படி வரமுடியவில்லை என்று நினைப்பவர்கள் கவலைப்படவேண்டும். ஆன்மீகம் உடனே பலனை தராது. காலம் தாழ்த்தி தான் பலனை தரும் அதுவரை உங்களை சோதிக்கும் அதன் பிறகு அதுவாகவே நல்லது நடைபெறும்.

உங்களின் தந்தை எப்படி வாழ்ந்தார் என்பதை கொஞ்சம் சோதனை செய்து பாருங்கள். அவர் நல்லது செய்து இருக்கிறா அல்லது கெடுதல் செய்து இருக்கிறா என்று பாருங்கள். அப்படி பார்க்கும்பொழுது  நமக்கு ஏதாவது ஒன்று கிடைத்துவிடும். 

நல்லது செய்து இருந்தால் பிரச்சினை இல்லை. கெடுதல் செய்து இருக்கிறார் என்றால் உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு என்னை சந்தியுங்கள். அதற்கு ஒரு தீர்வை தருகிறேன்.

இன்று மதியம் ஈராேடு பயணம். நாளை ஈரோடு மற்றும் பவானி பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 6, 2016

பாக்கிய லாபம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானமும் லாபஸ்தானமும் சம்பந்தப்பட்டால் என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம். லாபஸ்தானம் என்றவுடன் நாம் பணத்தை தான் முதலில் நினைப்போம். பணம் ஒரு கருத்தாக இருந்தாலும் ஒவ்வொருவரின் குடும்பமும் நல்ல முறையில் இருந்தாலே அது லாபமாக தான் இருக்கும்.

விஞ்ஞானி ராக்கெட் ஏவுவதை விட ஒரு குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு வருவது என்பது அதனைவிட சாமர்த்தியம் வேண்டும். கொஞ்சம் தவறு நடந்துவிட்டாலும் குடும்பம் பிரச்சினையை சந்தித்துவிடும்.

குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் ஒன்று சேர்த்து வாழ்க்கையை நடத்துவது என்பது ஒரு சாதாரணமான காரியம் கிடையாது. இன்றைய காலத்தில் பல குடும்பங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கின்றது. அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களின் அனுபவத்தை கேட்டு தான் இதனை எல்லாம் சொல்லுகிறேன்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒத்துசைத்து நடத்தினால் பிரச்சினை வருவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையாக இருந்தால் ஒன்றும் சொல்லுவதற்க்கில்லை. இதனை எல்லாம் அனுபவமாக பார்க்கும்பொழுது தான் உங்களுக்கு புரியும்.

பல நண்பர்களுக்கு இது அனுபவமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு இன்னும் வராமல் இருக்கலாம். பல வருடங்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் ஒரு தலைமுறையை கடப்பதே நாம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த பாக்கியமாக தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 5, 2016

புண்ணியகாரியம்


ணக்கம்!
           பாக்கியஸ்தானத்தில் பத்தாவது வீட்டு அதிபதியோடு சம்பந்தம் ஏற்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்த்தோம். மேலும் ஒரு சில தகவல்களை அதனைப்பற்றி பார்க்கலாம்.

ஒரு சிலர் சம்பாதித்த பணத்தைக்கொண்டு ஏதாவது டிரஸ்ட் அமைத்து அதன் வழியாக மக்களுக்கு நல்லதை செய்துக்கொண்டே இருப்பார்கள். பல இடங்களில் நீங்கள் இதனை பார்த்து இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

பிறர் பணத்தை வாங்காமல் தன்னுடைய சம்பாதித்த பணத்தை எல்லாம் பிறர்க்கு உதவி செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு தொழிலும் நன்றாக இருக்கும். அவர்கள் வழியாக ஏழை மக்களும் பயன்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

பொதுவாகவே ஒரு தொழில் செய்தால் அதன் வழியாக பல பேர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுவே ஒரு புண்ணிய செயல் தான். ஒன்பதாவது வீடும் பத்தாவது வீடும் சம்பந்தம் ஏற்பட்டால் நல்லதை செய்வார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 4, 2016

தை அமாவாசை


வணக்கம்!
          தற்பொழுது பார்த்துக்கொண்டு வரும் பாக்கியஸ்தானத்திற்க்கு பரிகாரம் செய்வதற்க்கு ஒரு வாய்ப்பாக தை அமாவாசை வருகின்றது. தை அமாவாசை அன்று நமக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் விலக நம் முன்னோர்களின் ஆசி கிடைக்க பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

நம் முன்னோர்களுக்கு உங்களால் முடிந்த விரதம் அல்லது தர்பணம் அல்லது ஏதாவது ஏழைகளின் குடும்பங்களை வாழ வைக்க உதவுவதும் வழியாக முன்னோர்களின் ஆசியை பெறமுடியும்.

நம் முன்னோர்களின் ஆசியை பெற்றுவிட்டால் இந்த பிறவியை நீங்கள் கடந்துவிடலாம். நம் மதத்தில் முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டை தான் அதிகம் வைத்திருப்பார்கள். தெய்வங்களை விட முன்னோர்களின் வழிபாடு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் கூட முன்னோர்களுக்கு செய்வதை நிறுத்திவிடாதீர்கள். இந்த பிறவியை கடக்கவும் முன்னோர்களின் ஆசி அவசியம் தேவைப்படுகிறது. அதற்காகவும் நிறுத்தாமல் செய்யவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 3, 2016

பாக்கியஸ்தான பரிகார விளக்கம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சொல்லப்படும் கருத்தை ஒத்து இன்று ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் அதனை சொல்ல வாய்ப்பாக அமைந்தது. பாக்கியஸ்தானம் பாதிக்கப்படும்பொழுது அது பித்ருதோஷம் என்று சொல்லப்படுகிறது.

பித்ருதோஷம் என்றவுடன் நாம் முன்னோர்களுக்கு செய்வதை வழக்கமாக எடுத்துக்கொள்வோம். அதில் எள்சாதத்தை மக்களுக்கு கொடுப்பது ஒரு பழக்கமாக வைத்து இருப்பார்கள். நம் பாவம் மக்களுக்கு சேருவதற்க்கு இது ஒரு வழியாக இருக்கின்றது. உண்மையில் இப்படி செய்யும்பொழுது ஒரு ஆள் பாதிக்கப்படுகிறான்.

குடும்பத்தில் வாழ்பவர்களுக்கு கொடுக்கும்பொழுது நமது பாவம் அவர்களின் குடும்பத்தை சேரும். நம்மால் அடுத்த குடும்பம் பாதிக்கப்படைய கூடாது. நம்மால் வாழ்ந்ததாக தான் இருக்கவேண்டும்.

எள் சாதத்தை பொறுத்தவரை சாமியார்களுக்கு கொடுக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கலாம் அதனை தவிர வேறு யாருக்கும் கொடுக்கவேண்டாம்.

நண்பர் நெட்டில் படித்ததாக சொன்னார். யார் சொன்னாலும் அதனை அப்படியே நம்பவேண்டாம். நான் சொன்னால் கூட நம்பாதீர்கள். அதனை உங்களின் வாழ்வில் ஈடுபடுத்தி பார்த்துக்கொண்டு அதன் பிறகு செயல்படுத்தலாம்.

திருவள்ளூவர் கூட இப்படி தான் சொல்லியுள்ளார்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள் விளக்கம்

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

நல்ல முறையில் சிந்தித்து பார்த்துவிட்டு அதன் பிறகு செயல்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 2, 2016

அம்மன் பூஜை


ணக்கம்!
         இந்த மாத அம்மன் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பும் நண்பர்கள் தங்களின் காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் பங்களிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். புதியதாகவும் நண்பர்கள் வருகின்றனர் இப்படிப்பட்ட பூஜையில் எங்களாலும் கலந்துக்கொள்ள எங்களுக்கு வாய்ப்பை கர்மா அளிக்கிறதே என்று நினைத்து கலந்துக்கொள்கின்றனர்.

ஒரு நல்ல செயலுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வதற்க்கு கர்மா விலகினாலே போதும் நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும். அப்படி பணம் அனுப்புவர்கள் தொடர்ந்து இந்த மாதிரியான பூஜைகளில் கலந்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பூஜையில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள் வேண்டுதல் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன் பணத்தை செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு