வணக்கம்!
சனி தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். அதில் இன்று கடகத்தில் சனி அமர்ந்து தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சந்திரனின் வீடு என்றாலே அது தாயைதானே குறிக்கிறது. தாய்க்கும் ஜாதகருக்கும் சனியின் தசாவில் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். சந்திரன் மனக்காரகன் என்பதால் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவார். நீர் வழியாக செய்யும் வியாபாரத்தை ஜாதகருக்கு சனிபகவான் ஏற்படுத்தி தருவார்.
எனது நண்பர் ஒருவருக்கு தனுசு லக்கினம் கடகத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தியது. சுயபுத்தியில் நல்லதை தந்த சனிபகவான் அதன் பிறகு நல்லதை செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். அவரது அம்மாவிற்க்கும் அவருக்கு சண்டை ஏற்பட்டு அவரின் அம்மாவை பிரித்துவிட்டது. இருவரும் தனி தனியாக குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.
ஒரு வாடிக்கையாளருக்கு மகரலக்கினம் கடகத்தில் சனிபகவான் இருந்து தசாவை நடத்தினார். அவர் திருமணம் செய்தது அவரின் தாயின் வழியில் உள்ள பெண்ணை. சனி தசா முழுவதும் அவருக்கு நல்ல வருமானத்தை பெற்று தந்தது. சனி தசாவில் அவரின் மனைவிக்கு வேலை கிடைத்தது. அவரின் வழியாகவும் பெண் வீட்டாரின் வழியாக வருமானத்தை அடைந்துக்கொண்டு இருக்கிறார். தற்சமயம் அவருக்கு சனி தசா நடந்துக்கொண்டு இருக்கிறது.
ஒரு வாடிக்கையாளருக்கு சனி பகவான் கடகத்தில் இருக்கிறார். அவருக்கு லக்கினத்திலேயே அமர்ந்து சனி பகவான் தசாவை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு நரம்பு தளர்ச்சி அவ்வப்பொழுது ஏற்படும். இன்னும் பல அனுபவங்கள் இருக்கின்றன அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு