வணக்கம்!
இராகு கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்தால் அந்த நபர் அதிகப்பட்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக தான் இருப்பார்கள். இராகு கிரகம் புத்தி கிரகமான புதனோடு சேரும்பாெழுது புத்தி சரியாக இருக்காது.
இராகு கிரகத்தோடு புதன் கிரகம் சேர்ந்து இருக்கும் நபர்கள் அதிகப்பட்சம் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டில் உருவாக்கிவிடும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் படி அமையும். இது ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் பல வகையில் பிரச்சினையும் கொடுக்கிறது.
ஒருவருக்கு புதன் கிரகம் ஐந்தாம் அதிபதியாக இருந்து அந்த கிரகம் இராகுவோடு சேர்ந்துவிட்டால் அவரின் வாரிசு மனநலம் பாதிக்கபட்டவர்களாக இருப்பார்கள். என்னிடம் ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக அது இருந்தது.
அவர்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தேன். குழந்தையின் தந்தைக்கு பூர்வபுண்ணியாதிபதியாக இருக்கும் புதன் கிரகம் இராகுவோடு சேர்ந்து இருக்கின்றது. அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அவரின் குழந்தைக்கு அவரின் ஜாதகம் கடுமையாக தாக்குகிறது.
பொதுவாக நான் பார்த்த வரையில் இப்படிப்பட்ட குழந்தைகளின் தாய் தந்தை அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். அவர்களின் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதால் இந்தியாவிற்க்கு வந்து நிறைய கோவில்களுக்கு சென்று வருவதற்க்காக வந்திருக்கின்றனர். நமது தளத்தை அவரின் குடும்பத்தினர் ஒருவர் படித்ததால் அதன் வழியாக என்னை சந்தித்தார்கள்.
ஜாதகத்தில் இருக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாக தான் இருக்கும். நீங்கள் தொடர்ச்சியாக கோவில்களுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லி அதனோடு பரிகாரமும் செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். பொதுவாக இப்படிப்பட்ட விசயத்திற்க்கு குழந்தையை அதற்க்கு என்று பள்ளியில் பயிலவித்து அதோடு பரிகாரமும் செய்தால் தான் ஒரளவு வரும் என்பதையும் சொல்லிஇருக்கிறேன்.
இராகு கிரகம் அப்படிப்பட்ட ஒரு கிரகம் எதில் வைத்து நம்மை சிக்க வைக்கும் என்பது கொஞ்சம் புரியாத புதிராக தான் இருக்கும். முடிந்தவரை முன்கூட்டியே இதனை சரி செய்துவிடவேண்டும் அப்படி சரி செய்துவிட்டால் இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
இராகு கிரகம் என்றாலே அதிபயங்கரமான ஒரு கிரகம். பல பேர் இராகு தசாவில் இருக்கின்றீர்கள். உங்களின் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு