Followers

Thursday, November 27, 2014

ஆன்மீக அனுபவங்கள் 172


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று கூட ஒரு நண்பர் உங்களின் பதிவை எடுத்து வேறு ஒரு தளத்தில் போட்டுள்ளார்கள் என்ற தகவலை எனக்கு அனுப்பினார். நமது பதிவை எடுத்துபோட்டு தவறான செயலை தான் செய்கிறார்கள். அம்மன் அவர்களுக்கு தகுந்த சன்மானத்தை கொடுக்கும்.

நான் அம்மனிடம் பிராத்தனை செய்வது திக்கு தெரியாமல் இருந்த என்னை உன்னிடம் சேர்த்துக்கொண்டாய் நான் இனி எந்த நாளும் உன்னை துதிக்காமல் இருக்ககூடாது. எந்த நாளும் உன்னோடு தான் நான் இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்வேன்.

நமது ஆன்மீகத்தின் உண்மை என்ன என்றால் ஆன்மீகத்தை பிடித்துக்கொண்ட பிறகு அந்த ஆன்மீகம் நம்மை விட்டு சென்றுவிடகூடாது. நமது ஆன்மீகம் போலிகளை வைத்துக்கொள்ளாது அதுவே தூக்கி எறிந்துவிடும்.

நாம் கொஞ்சம் போலிதனத்தை செய்தால் அதுவே உங்களை கொஞ்ச காலத்தில் ஆன்மீகத்தில் இருந்து தூக்கிவிடும். நீங்களே பல சாமியார்களை ஆன்மீகவாதிகளை பார்த்து இருப்பீர்கள். கொஞ்ச காலத்திற்க்கு ஏதாவது செய்துக்கொண்டு இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்கள். 

நமது ஆன்மீகம் தன்னை தானே சுத்தம் செய்துக்கொள்ளும் ஒரு ஆன்மீகம். இதில் மாட்டிக்கொண்டால் இதனை கடைசிவரை கண்ணியமாக நடந்துக்கொண்டு கரை சேர வழியை தான் பார்க்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 26, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக இந்த காலத்தில் ஒரு சொந்தவீடு வேண்டும்.  அந்த வீடு எந்தளவுக்கு நமக்கு அமையும் என்று ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டு வருகிறோம்.

கோவிலில் என்ன சக்தி கிடைக்கிறதோ அந்த சக்தி ஒரு வீடு உங்களுக்கு கொடுக்கவேண்டும். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா உண்மையில் கண்டிப்பாக நல்ல முறையில் கட்டப்பட்ட வீடு அந்த சக்தியை கொடுக்கும்.

நல்ல முறையில் என்றால் என்ன என்று கேட்கிறீர்களாக வாஸ்து பார்த்து மட்டும் ஒரு வீடு நல்ல முறையில் அமைந்துவிடாது அதனை தாண்டி நிறைய விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் செய்யும்பொழுது மட்டுமே ஒரு வீடு நல்ல முறையில் அமையும்.

பழைய காலத்து பிரிட்டிஸ் கட்டடத்திற்க்குள் நீங்கள் சென்றால் மிக அமைதியாக நிறைந்த சக்தியை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். கோவிலில் எப்படி அமைதியாக இருக்கின்றதோ அதே அமைதி இந்த மாதிரி கட்டடத்தில் இருக்கின்றன. அதற்கு என்று விசேசமாக அவர்கள் கட்டடத்தை அமைத்தார்கள்.

இன்றைய காலத்தில் அப்படி யாரும் கட்டடம் கட்டுவதில்லை. வாஸ்து மட்டும் வீட்டை கட்டுக்கிறார்கள். உண்மையில் வாஸ்துவால் அனைத்து சக்தியைும் வீடு கொடுத்துவிடாது. 

நீங்கள் வீட்டை கட்டும்பொழுது என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள். கோவில் போன்ற சக்தியை நீங்கள் அந்த வீட்டில் இருந்து பெறுவதற்க்கு நான் வழிமுறையை செய்து தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 24, 2014

உங்களின் வீடு பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி ஜாதக ரீதியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்தபதிவில் உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில் செவ்வாயாக இருந்தால் உங்களின் வீட்டில் சற்று நிம்மதி குறைவாக தான் இருக்கும்.

உங்களின் வீட்டில் அக்னி சக்தி நிலைக்கொண்டு இருக்கும். உங்களின் வீடு பாதுகாப்பு துறை மற்றும் பெரிய தொழிற்சாலை அருகில் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில் செவ்வாய் கெட்டுருந்தால் உங்களின் வீட்டில் தீயில் கருகிய ஆத்மாக்களின் தொந்தரவு இருக்கும். உங்களின் வீட்டில் நிம்மதி இருக்காது.

பொதுவாக நான்காவது வீட்டில் செவ்வாய் சம்பந்தபட்டு செவ்வாய் கிரகம் கெட்டு இருந்தால் உங்களுக்கு வீடு அமைவது கொஞ்சம் கடினமாக இருக்கும். முருகனுக்கு விரதம் இருந்து இந்த குறையை நிவர்த்தி செய்து ஒரு வீட்டை அமைத்துக்கொள்ளுங்கள். 

செவ்வாய்க்கு குறைந்தது ஒன்பது வாரம் விரதம் இருக்க வேண்டும். உங்களின் சொந்த ஊரில் இருக்கும் ஆன்மீகவாதியை அழைத்து உங்களின் வீட்டை ஒரு முறை காண்பித்து அவரிடம் வீட்டில் துர்சக்திகள் இருக்கின்றதா என்பதை பார்த்துக்கொள்வது நல்லது.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Sunday, November 23, 2014

அன்பான வேண்டுக்கோள்


வணக்கம் நண்பர்களே!
                      நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் சபரிமலை மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லலாம். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் கோவிலில் குறைவாக கூட்டம் இருக்கும் நாளாக பார்த்து சென்று வாருங்கள்.

அதிக கூட்டம் கூடும் நாளாக அதாவது பண்டிகை நாளாக தேர்ந்தெடுத்து செல்லாதீர்கள். நெரிசலில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பயணம் செய்யும்பொழுது பொதுவாக பகல் பயணமாக மேற்க்கொள்ளுங்கள் அல்லது இரயில் பயணங்களை மேற்க்கொள்ளுங்கள். மிக பாதுகாப்பான பயணமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் செய்யும் தவறுக்கு கடவுள் மேல் தூக்கி பழி போடாமல் முடிந்தவரை எச்சரிக்கையுடன் எப்படி சென்றுவருவது என்று நன்றாக சிந்தித்துவிட்டு சென்று வாருங்கள்.

பாதுகாப்பாக உங்களின் பயணம் அமைவதற்க்கு அம்மனிடம் நான் வேண்டுதல் வைத்துள்ளேன். நீங்களும் அம்மனை வேண்டிக்கொண்டு சென்று வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 22, 2014

ஆத்மபலன்


வணக்கம் நண்பர்களே!
                      இந்த உலகத்தில் உள்ள சக்திகளை விட மனிதனின் ஆத்மாவிற்க்கு அதிக பலன் உள்ளது என்பதை பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சமமாக தான் இந்த ஆத்மா இருக்கிறது. அதனை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அதன் சக்தி தெரிகிறது பயன்படுத்த தெரியாமல் இருப்பவர்களுக்கு அதனைப்பற்றி தெரியவில்லை.

நாம் உடலை உழைத்து கஷ்டப்பட தேவையில்லை நமது ஆத்மாவை கஷ்டபடுத்தி அதனை மேம்படுத்தினால் நமக்கு தேவையானவை நமது ஆத்மாவை வைத்து நாம் பெறமுடியும்.

                     ஆத்மாவின் துணைக்கொண்டு எனக்கு தெரிந்த ஒருவர் மழையை வரவழைத்துகிறார். மழையை நிறுத்தியும் காண்பித்து இருக்கிறார்.

இதனை வெளியில் சொல்லமுடியாது ஆனால் உண்மை இப்படி எல்லாம்  ஒரு மனிதன் செய்யும்பொழுது கண்டிப்பாக நாமும் நமக்கு தேவையானவற்றை நமது ஆத்மாவை வைத்தே பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 21, 2014

கலியுகம்


வணக்கம் நண்பர்களே!
                      கலியுகத்தில் ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் என்றால் அது மிகவும் கஷ்டம். கலியுகத்தில் ஆன்மீகவாதி வேஷம் போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று சொல்லியுள்ளதாக குரு சொல்லியுள்ளார்.

கலியுகத்தில் சாமியார் வேஷம் போட்டு தான் அனைத்து வில்லங்கவேலையும் நடைபெறும் என்று சொல்லுவார். நீங்கள் ஒரு நல்ல ஆன்மீகவாதியை பார்க்க ஆசைப்பட்டால் அப்படிப்பட்டவரை சந்திப்பதே அரிதான ஒன்று. ஒருவர் ஞானம் அடைந்தால் அவர் வெளியில் வருவது கிடையாது. 

நீங்கள் ஆன்மீகம் கற்க வேண்டும் என்றால் பெரிய சாமியார் என்று செல்லாமல் சாதாரணமாக இருக்கும் ஆன்மீகவாதியிடம் சென்று ஆன்மீகம் கற்றுக்கொள்வது நல்லது.

ஆன்மீகத்தை மிகவும் நல்ல முறையில் சொல்லி தருபவர்கள் இன்றும் வெளியில் தெரியாத ஆன்மீகவாதிகள் தான் சொல்லி தருகிறார்கள்.பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன்.

மதுரையில் இருக்கின்றேன். மதுரையில் சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 19, 2014

ராகு கேது பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒருவருக்கு இராகு கேது தோஷம் இருந்தாலே உடனே அவர்கள் திருநாகேஸ்வரம் அல்லது காளஹஸ்தி சென்று வருவதை தான் வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

இந்த கோவிலுக்கு செல்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ராகு கேது என்பவை பிராமணர் அல்லாதவர்களை காட்டும் கிரகங்கள். இந்த காேவிலில் ஐயரை வைத்து நீங்கள் பரிகாரம் செய்துக்கொண்டு வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு தோஷம் நீ்ங்காது.

பிராமணர்கள் இல்லாதவர்கள் பூசாரிகளை வைத்து வழிபடும் தெய்வங்களை நீங்கள் வணங்கிவரும்பொழுது மட்டுமே இந்த தோஷத்தில் இருந்து நீங்கள் விலகமுடியும். பொதுவாக இந்த தோஷத்தில் இருந்து நீங்கள் விடுபட புற்றில் இருக்கும் அம்மனாக பார்த்து வணங்கி வாருங்கள்.

பரிகாரத்திற்க்கு உங்களி்ன் சொந்த ஊரில் இருக்கும் கோவிலாக பார்த்து வணங்கினாலே போதும். வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு நீங்கள் செல்லவேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உங்களின் வீடு பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீடு சந்திரன் சம்பந்தப்பட்டால் உங்களின் வீட்டில் நிம்மதியான ஒரு நிலை காணப்படும். சந்தோஷம் எந்த நேரமும் வீட்டில் குடிக்கொள்ளும்.

உங்களின் வீட்டில் நல்ல சக்திகள் இருக்கும். உங்களின் வீட்டில் பெண்சக்திகள் அதிகம் வாசம் செய்யும். ஏதாவது ஒரு அம்மன் உங்களின் வீட்டில் குடிக்கொள்ளும். 

உங்களின் வீடு அமைந்துள்ள இடம் ஏதாவது ஒரு நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும். குளம் ஏரி கடல் பகுதிக்கு மிக அருகில் இருக்கலாம்.வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.

சந்திரன் கெட்டால் உங்களின் வீட்டில் பெண் ஆத்மாக்கள் குடிக்கொள்ளும். தண்ணீரில் விழுந்து இறந்த பெண்ணின் ஆத்மா வீட்டிற்க்குள் உலவும். வீட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். மனநிலை பாதிக்கப்பட்ட பெண் உங்களின் வீட்டில் இருப்பார்கள்.

சந்திரன் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து தான் இதனை சொல்லமுடியும். மாதத்தில் பதினைந்து நாட்கள் கொஞ்சம் பிர்ச்சினையில்லாமல் இருக்கலாம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

செல்வ வளம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்தைப்பற்றி நாம் நிறைய விசயங்களை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறோம். அதில் ஒரு சின்ன விசயத்தை உங்களிடம் சொல்லுகிறேன். இது உங்களை பரிசாேதனை செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் இரண்டு தொடைகளையும் நன்றாக பாருங்கள். அந்த தொடைகளில் அதாவது இனஉறுப்புக்கு இரண்டு பக்கம் உள்ள தொடையில் உள்ள தோல்கள் கருப்பு நிறத்தில் (கருப்பு அடித்தது போல்) இருந்தால் உங்களுக்கு செல்வவளம் அவ்வளவு எளிதில் வராது.

உங்களின் சக்தி கீழ்நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்ற அர்த்தம். இதனை வைத்து ஒரளவு உங்களை நீங்களே பரிசோதனை செய்துக்கொள்ளமுடியும்.

உங்களின் தோலை வெள்ளையாக்க ஏதாவது கீரிமை போட்டு தேய்காமல் ஏன் சக்தி வீணாக கீழ் நோக்கி செல்லுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே உங்களால் எளிதில் இதில் இருந்து மீண்டு நல்ல செல்வவளத்தோடு நீங்கள் வாழமுடியும்.

பின்குறிப்பு: தொடையை கருப்பில் இருந்து மீட்கிறேன் என்று உங்களின் தொடைக்கு பங்கம் விளைத்தால் ஜாதககதம்பம் எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்காது.


மதுரைக்கு இந்த வாரத்தில் வரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பூர்வபுண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                      பூர்வபுண்ணியம் கெட்டுபோய்விட்டாலே அது பித்ருதோஷம் தான். இதனை பித்ருதோஷம் என்று அழைப்பதைவிட மனித தோஷம் என்று சொன்னால் மிக நன்றாக இருக்கும. 

பிற மனிதனுக்கு நாம் முன்ஜென்மத்தில் செய்த கொடுமையை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கவேண்டும் என்பதற்க்காக நமக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. பிறமனிதனுக்கு நாம் நல்லது செய்யவேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

பூர்வபுண்ணியம் கெடுதல் என்பது மிகப்பெரிய கஷ்டமான நிலை என்பது எனக்கு நன்றாக தெரியும். பல நண்பர்களை நான் பார்த்து இருக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளமுடியாத ஒரு பரதேசி வாழ்க்கைபோல் அமையும். உண்மையில் சாமியார்கள் என்று சொல்லுவதை இவர்களை பார்த்து சொல்லலாம். ஏன் என்றால் எந்த ஒரு விசயத்திலும் ஒரு நிலையில் அதாவது ஒரு இடத்தில் இருக்கமுடியாது.

பூர்வபுண்ணியத்தில் பழைய பதிவில் நான் தேடி கண்டிபிடுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதனை செய்யாமல் இருந்தால் கூட உங்களின் முன்னோர்களுக்கு நீங்கள் ஒழுங்காக தர்பணம் திதி அமாவாசை விரதங்கள் இருந்தாலே போதும்.

நம்முடைய முன்னோர்களுக்கு நாம் செய்யும்பொழுது மேலுகத்தில் இருக்கும் நமது முன்னோர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆத்மாவிற்க்கு நல்லது செய்வார்கள். அதன் வழியாக நாம் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

மனித வாழ்வே நிச்சயமற்ற வாழ்வு தான் இருந்தாலும் வாழ்கின்ற வாழ்வில் ஒரு நிச்சயம் இருக்கவேண்டுமல்லவா. அந்த நிச்சயம் கூட மனிதனுக்கு கிடைக்கவிடாமல் செய்வதில் பூர்வபுண்ணியம் கெட்டவர்களுக்கு நடக்கும் என்பது தான் உண்மையான ஒரு விசயம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

அறிவு என்கின்ற செல்வம்


வணக்கம் நண்பர்களே!
                      மனிதனுக்கு எந்தளவுக்கு அறிவு இருக்கின்றதோ அந்தளவுக்கு அவன் செல்வவளத்தை பெறமுடியும். அறிவை சேகரித்தால் பணத்தை எளிதாக சேமித்துவிடலாம். நமக்கு ஒவ்வொரு விசயத்திலும் அறிவு இல்லாத காரணத்தால் தான் நாம் அந்த துறையில் வெற்றி பெறமுடியவில்லை என்பது முதல் காரணியாக இருக்கமுடியும்.

அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அதே நேரத்தில் அந்த துறையில் நாம் அறிவோடு இருந்து வேலை செய்தால் நமக்கு கடவுள் எளிதில் வெற்றிக்கொடுத்துவிடுவார். பல பேர் ஏழையாக இருப்பதற்க்கு காரணம் முதலில் அறிவை பெறாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.

நமக்கு ஒரு அறிவு என்றால் அதுவும் மிக புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் புதன்கிரகம் உங்களுக்கு நல்ல முறையில் ஜாதகத்தில் அமையவேண்டும். 

நல்ல அறிவை கொடுத்தால் மனிதன் கஷ்டப்படமாட்டான் என்று நினைத்து தான் பெரும்பாலும் புதன்கிரகத்தை கடவுள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கெட்டு போக வைத்திருப்பார். 

புதன் நன்றாக இருந்தால் அனைவரும் அதிபுத்திசாலியாக இருப்பார்களே. அப்படி மக்கள் இருக்ககூடாது என்பதற்க்காக தான் புதனை கெடு வைத்துவிட்டார். அவர் கெடுத்தால் என்ன நாம் சும்மா விட்டுவிடுவோமா அதற்கு பரிகாரம் சொல்லுகிறேன் செய்து பாருங்கள்.

உங்களுக்கு அறிவு குறைவாக இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கி வந்தாலும் சரி அந்த தெய்வத்தை புதன்கிழமையில் நீங்கள் வணங்கி வந்தால் போதும். உங்களுக்கு நல்ல அறிவை அந்த தெய்வம் கொடுத்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள துணைபுரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களின் வீடு பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டை உங்களின் ஜாதகத்தின் துணைக்கொண்டு அறியமுடியும் என்பதை நேற்று முதல் பார்த்துக்கொண்டு வருகிறோம். இன்று தொடர்ந்து பார்ப்போம். 

உங்களின் ஜாதகத்தின் நான்காவது வீடு சூரியன் சம்பந்தப்பட்டால் உங்களின் வீடு சுபிட்ஷமாக இருக்கும். பகல் நேரத்தில் கூடுதல் சுபிட்ஷம் இருக்கும். 

உங்களின் வீட்டில் பெரும்பாலும் நல்ல சக்திகள் இருக்கும். பெருமாள் போன்ற நல்ல தெய்வங்கள் அதே நேரத்தில் ஆண் தெய்வங்களின் வாசம் புரியும் வீடாக உங்களின் வீடு இருக்கும்.

உங்களின் வீடு அமைந்த இடம் அரசாங்கத்திற்க்கு சொந்தமான இடமாக கூட இருக்க வாய்ப்பு உண்டு. அரசாங்க மனையில் கூட உங்களின் வீடு  அமையும். அல்லது அரசாங்க அலுவலகத்திற்க்கு அருகில் உங்களின் வீடு அமையும்.

நான்காவது வீட்டில் சூரியன் வீடாக இருந்து அது பாதிக்கப்பட்டால் உங்களின் வீட்டில் அதிகமாக கெடுதல் நடைபெறும். அசூரதனமான ஆத்மாக்கள் குடிக்கொண்டுவிடும். அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு சோம்பேறிதனம் இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 18, 2014

பச்சைப்பரப்புதல்


வணக்கம் நண்பர்களே!
                      பல முறை நான் சொல்லியுள்ள செய்தியை இப்பதிவில் மறுமுறை சொல்லுகிறேன். பச்சைப்பரப்புதலைப்பற்றி சொல்லிவருகிறேன். பச்சைப்பரப்புதலை தொடர்ந்து செய்து வரும்பொழுது மட்டுமே உங்களின் தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.

அடுத்தவர்களிடம் நமது சொத்தை வைத்து கடன் கேட்டால் கூட உடனே நமக்கு கொடுக்கமாட்டாரகள் அப்படி உலகம் இருக்கும்பொழுது நமது குலதெய்வம் எப்படி உடனே நமக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.ஒவ்வொருவரின் செயலையும் நன்றாக சோதனை செய்து முடித்த பிறகு தான் நமது தெய்வம் நமக்கு கொடுக்க ஆரம்பிக்கும்.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்துவந்தால் கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்காமல் இருக்காது. அதனால் நாம் நமது குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை தொடர்ந்து செய்து வாருங்கள்.

ஒன்றும் நடக்காமல் இருக்கின்றதே என்று கவலைக்கொள்ளாமல் நம்பிக்கையோடு தொடர்ந்து பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு உங்களின் குலதெய்வம் கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களின் வீடு பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டில் துர்சக்திகள் அல்லது துர்ஆத்மாக்கள் இருந்தால் கூட பிரச்சினையை நீங்கள் சந்திக்க தான் வேண்டிவரும். உங்களுக்கு நடக்கும் தசா நல்ல பலனை தந்தால் கூட நீங்கள் அந்த வீட்டில் இருக்கும்பொழுது நீங்கள் சோம்பேறியாக அதே நேரத்தில் கவலையாக உணர்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நான்காவது வீட்டை ஆராய்ந்தால் உங்களின் வீட்டைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்.நான்காவது வீட்டை பார்க்கும் கிரகத்தையும் ஆய்வு செய்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் சோதிடத்தில் உள்ள விதிகள் அனைத்தையும் ஆய்வு செய்துக்கொண்டு உங்களின் வீட்டைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். நான் சொல்லுவது குறைவாக இருக்கும் அந்த தகவல் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

உங்களின் வீடு எப்படி அமையபோகிறது அல்லது அமைந்து இருக்கிறது . உங்களின் வீட்டில் நல்ல சக்தி இருக்கிறதா அல்லது தீயசக்தி இருக்கிறதா என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்.

வீடு என்று வந்தவுடன் முதலில் அந்த வீடு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களின் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டில் நான்கு பெயர்கள் இருந்தால் நாலு பேரின் ஜாதகத்தையும் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

நிலத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால் அதாவது உங்களின் தாத்தா பெயரில் நிலம் இருந்து இருக்கும் அவர் இறந்துவிட்டால் வீட்டிற்க்கு யார் தலைவரோ அவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

பூர்வபுண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                      நம்மைப்போல் இருக்கும் பிற மனிதனையே நாம் மதிக்காதபொழுது நாம் கடவுளை எப்படி வழிபட முடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆத்மா என்பது ஒரு இடத்தில் இருந்து தான் வந்தது சதை மட்டும் மாறி உள்ளது.  ஆன்மீகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் அனைவரும் இதனை உணர்ந்தவர்கள் தான் நாம் இதனை உணரவில்லை.

பூர்வபுண்ணிய வீட்டில் ராகு அமைந்தவர்கள் அனைவரும் தன்னோடு முன் ஜென்மத்தில் பிறந்த வெளிநாட்டி்னவரை அல்லது பிற சாதியில் உள்ளவரோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். இது நண்பர்களாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம்.

ஐந்தில் ராகு அமைந்தவர்களுக்கு எல்லாம் வெளிசாதியினர் அல்லது வெளிநாட்டினர் வழியாக உதவி வரும். அப்படி உங்களுக்கு உதபவர்கள் தான் உங்களின் முன்ஜென்மத்தில் உங்களோடு நெருக்கத்தில் உள்ளவர்கள் அதாவது தொடர்பில் உள்ளவர்கள் என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

நம் ஆட்கள் தான் இந்த ஜென்மத்தில் உள்ளவர்களையே காலி செய்பவர்களாயிற்றே இதில் முன்ஜென்மத்தில் உள்ளவர்களோடு அன்போடு இருக்கபோகின்றார்கள்.முன்ஜென்மத்தில் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கும் அவர்களுக்கும் பிரச்சினை இருந்து இருக்கலாம் அது இந்த ஜென்மத்திலும் தொடரும் சண்டை சச்சரவை விட்டுவிட்டு அவர்களோடு இருக்கும்பொழுது உங்களின் வாழ்க்கை மேம்மைப்படும்.

அன்புடன்
 ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      நாம் ஒவ்வொரு கோவிலாக போய்க்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு காேவிலுக்கும் நாம் செல்லும்பொழுது அந்த கோவிலில் உள்ள மூலவரை வணங்கிவிட்டு அந்த கோவிலில் உள்ள அனைத்து சந்நிதியில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு வருகிறோம்.

உண்மையில் ஒரு கோவிலில் பல தெய்வங்களை வைத்தற்க்கு காரணம் அந்த காேவிலில் உள்ள மூலவரின் அனைத்தை சக்தியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடகூடாது என்ற காரணத்தால் மட்டுமே நிறைய தெய்வங்களின் சந்நிதியை அந்த காலத்தில் வைத்தார்கள். இவர்கள் வேலை மூலவரின் சக்தியை முழுமையாக ஒருவன் எடுத்துச்சென்றுவிடகூடாது என்ற காரணத்தால் அப்படி வைத்தார்கள்.

ஒவ்வொருவருக்கும் என்ன கிடைக்க வேண்டுமே அது தான் கிடைக்கும் அதனை மீறி எடுத்து சென்றுக்கொண்டு போய்விடகூடாது என்ற காரணத்தால் ஒரு கோவிலில் நிறைய சந்நிதிகளை வைத்தார்கள். 

சக்தியை ஒருவன் முழுமையாக பெற்றுவிட்டால் அவன் அந்த சக்தியை தவறான வழியில் பயன்படுத்தாலும் என்ற காரணத்தால் இப்படி ஏகாப்பட்ட சந்நிதிகளை நிறுவி அந்த கோவிலின் சக்தியை முன்னோர்கள் பாதுகாத்தார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உங்களின் வீடு பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு எப்படியாவது அமைந்துவிடவேண்டும் என்ற ஒரு வரமாக கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.  

சொந்த வீடு என்பது அமைகிறதா அல்லது அமையாத என்பதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம். முதலில் இருக்கின்ற வீடு எப்படிப்பட்டது என்பதை சோதிடத்தை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஒவ்வொரு வீடும் ஏதாவது ஒரு நல்ல சக்தி அல்லது தீயசக்தியின் வசமாக தான் இருக்கும். நல்லது அமைந்துவிட்டால் அந்த வீடு சுபிஷ்சமாக இருக்கும். அதே நேரத்தில் கெடுதல் அமைந்துவிட்டால் அந்த வீட்டில் இருந்தால் நமக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகிவிடும்.
வாஸ்து சாஸ்திரத்தை வைத்து வீட்டை நாம் கட்டினாலும் நமக்கு இருக்கும் கிரக நிலைகள் அந்த வீட்டை பாடாய் படுத்தி எடுத்துவிடும். மக்கள் வாஸ்து சாஸ்திரத்தை நம்பி தான் வீட்டை பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு கட்டிடடம் கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றியே வீடு கட்டுகிறார்கள். 

வீட்டில் அனைத்து விதியை பின்பற்றினாலும் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் உங்களின் வீட்டின் தலைவிதியை மாற்றி அமைத்துவிடும். கிரகங்களின் துணையால் தான் உங்களுக்கே வீடே அமைந்தாலும் இடையில் ஏற்படும் கெடுதல் கிரகங்களின் தாக்குதலில் உங்களின் வீடு பிரச்சினையில் மாட்டிவிடும். வீடு மாட்டினால் அதில் இருப்பவர்களும் மாட்டிக்கொள்வார்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

பூர்வ புண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                      எந்த வித வாய்ப்பும் ஒருவருக்கு வரவில்லை என்றால் அவர் அவரின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதிக்கு சரியான முறையில் பரிகாரம் செய்யவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீடு உங்களின் முன்ஜென்மத்தைப் பற்றி காட்டும் வீடாக இருக்கிறது. ஐந்தாவது வீட்டு அதிபதியை வைத்தே உங்களின் முன்ஜென்மத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். 

முன்ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம் இந்த ஜென்மத்திலேயே அனைத்தையும் கொடுத்துவிடாது. இந்த ஜென்மத்திற்க்கு கொஞ்சம் கிடைக்கும். மீதி உள்ளது எல்லாம் எடுக்க போகின்ற ஜென்மத்திற்க்கு கிடைக்கும்.

நமக்கு இந்த ஜென்மத்திற்க்கு கிடைக்கவேண்டிய புண்ணியம் அனைத்தும் தீர்ந்து போய்விட்டால் நமது புதிய முயற்சிகள் அனைத்தும் தோல்வி பெறும். இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்பொழுது மனிதன் வாழ்க்கையில் தோல்வி அடைகிறான்.

இதற்கு என்ன செய்யலாம் என்று எனது குருவிடம் கேட்கும்பொழுது எனது குரு அவர்கள் சொன்ன கருத்து இது தான். மனிதனின் பூர்வபுண்ணிய கணக்கில் மீதி இருப்பதை இந்த ஜென்மத்திற்க்கு எடுத்து கொடு. அவன் முன்னேற்றம் அடைவான் என்றார்.

நாங்கள் அம்மனை வைத்து எடுத்துகொடுத்துவிடுவோம் நீங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதியை நல்ல முறையில் வணங்கினால் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடையமுடியும்.

அன்புடன் 
 ராஜேஷ்சுப்பு

விழிப்புணர்வு


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொருவரும் கிரகங்களின் பிடியில் தான் இருக்கிறோம். கிரகங்கள் நன்மை செய்யும்பொழுது அதனை தூக்கி கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் கிரகங்கள் கெடுதல் செய்யும்பொழுது அதனை திட்டியும் தீர்க்கிறோம். 

ஒவ்வொரு கிரகங்களும் நமக்கு கெடுதல் செய்வதற்க்கு முன்பு ஒரு சின்ன தகவலை நமக்கு இறைவன் கொடுப்பான். அந்த தகவலை நாம் விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருப்பதால் அதனை புரிந்துக்கொள்வதில்லை.

எதாவது ஒரு கிரகம் நமக்கு தீங்கு செய்வதற்க்கு முன்பு நமக்கு விழிப்புணர்வு இல்லாத நிலை ஏற்படும். தூக்கம் வருவது போல் இருக்கும். அந்த இடத்தில் தான் நமக்கு பிரச்சினையை கிரகங்கள் கொடுக்கும். பல இடங்களில் இதனை நீங்களே கவனித்து பார்த்து இருக்கலாம். கண் சிமிட்டும் நேரத்தில் நடக்கும் என்பார்கள். கண் மூடுவது போல் ஒரு மயக்கம் ஏற்பட்டு பிரச்சினை கொடுத்துவிடும்.

ஒவ்வொரு கிரகங்களும் நம்மை தாக்காமல் இருக்கவேண்டும் என்றால் முதலில் நாம் விழிப்புணர்வை மேம்படுத்தும் செயலில் இறங்கவேண்டும்.தினசரி கடவுள் வழிபாடு மற்றும் மந்திரங்கள் ஜெபிப்பது நல்ல பலனை தரும்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Sunday, November 16, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே !
                      கெடுதல் கிரகங்களின் பிடியில் ஒரு மனிதன் இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது. அந்த கிரகங்களின் தீயபலனை குறைக்கும்பொழுது மட்டுமே அவனுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கமுடியும்.

என்னிடம் வரும் நண்பர்களுக்கு முதலில் நான் அம்மனிடம் தீயகிரகங்களின் தீயபலனை குறைத்துவிட்டு ஏதாவது வாய்ப்பை கொடுக்க ஏற்பாடு செய்வேன். அப்படி கொடுக்கும்பொழுது மட்டுமே வீட்டில் முடங்கி இருக்கும் மனிதனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ஒவ்வொருவரும் முதலில் இப்படி வாய்ப்பை அம்மன் கொடுப்பதை தான் நான் வழக்கமாக வைத்திருப்பேன். நமது நண்பர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினாலே போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்.

நமது நண்பர்கள் இதனை கூட ஒழுங்காக பயன்படுத்துவதில்லை தூங்கிக்கொண்டிருப்பவர்களை தூக்கிவிடும்பொழுது அம்மனை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுவேன்.அதனை தவறவிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இனிமேலாவது அம்மன் தரும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Saturday, November 15, 2014

பித்ருதோஷம்


வணக்கம்

வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும் பித்ரு தோசத்தை நீக்க முடியுமா? 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் பித்ருதோஷம் நீக்கமுடியும். ஒரு சில நாடுகளில் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலைப்போல் இருப்பதில்லை. அதனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இராமேஸ்வரத்திற்க்கு சென்று பித்ருதோஷம் நீக்குவார்கள். அங்கு செல்லமுடியாதவர்கள் அவர் அவர்களின் ஊரில் இருக்கும் ஆன்மீகவாதியை பார்த்து அவர்களின் வழிகாட்டலில் செய்துக்கொள்ளலாம்.

பித்ருதோஷம் நிவர்த்தி நிறைவடைந்துவிட்டால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் தடை இல்லாமல் செல்லும். ஏதாவது ஒரு வாய்ப்பை கடவுள் கொடுக்கும். அதனை வைத்தே நாம் பித்ருதோஷம் நிவர்த்தியாகிவிட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

பித்ருதோஷம் முடியாதவரை வாழ்க்கை ஒரு பெரும் பாேராட்டம் தானே தவிர வேறு ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்கமுடியாது. ஒவ்வொருநாளும் போராட்டமாக இருக்கும்.
முடிந்தவரை நாளை தள்ளிபோடாமல் பித்ருதோஷ நிவர்த்தி செய்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                      சனிப்பெயர்ச்சி நடந்த பிறகு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் பெயர்ச்சி நடந்துவிட்டது ஒன்றும் நடைபெறவில்லை என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். 

ஒரு நாளில் நடந்துவிடும் என்று எண்ணுவது மனிதனின் இயல்பு. கிரகங்கள் ஒரே நாளில் அவ்வளவு எளிதில் கொடுத்துவிடாது.கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டு வேலையை செய்யும். சனி என்றால் அவ்வளவு எளிதில் கொடுக்காது. கொஞ்ச காலத்தில் உங்களுக்கு செய்யும் என்று நம்பலாம்.

கெடுதலும் கொஞ்சகாலம் எடுத்துக்கொண்டு தான் கெடுதலை தரப்போகிறது என்று நினைக்க வேண்டாம். நல்லது நடக்காமல் வேண்டுமானால் போகலாம் ஆனால் கெடுதல் நடந்துவிட்டால் தாங்கிக்கொள்ளமுடியாது. தகுந்த பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்

சனிக்கிரகத்திற்க்கு தகுந்த பரிகாரம் என்றால் உங்களின் குடும்பத்தில் உள்ள சொந்த பந்தங்களை அழைத்துக்கொண்டு ஒரு விருந்து ஏற்பாடு செய்து போடுங்கள். குலதெய்வத்தின் கோவிலில் இதனை செய்யலாம். குலதெயவத்திற்க்கு பரிகாரமாக கூட அமையும் அதே நேரத்தில் சனிக்கும் பரிகாரமாக இருக்கும்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Friday, November 14, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                       
ஐயா வணக்கம்,

    சனி பெயர்ச்சி யாகம்,குரு பெயர்ச்சி யாகம் ஆகிய யாகங்களில் கலந்து கொள்ளாமா? இதில் பயன் உள்ளதா? 

   நன்றி
  அ.செல்வக்குமார்.

ஒரு சில யாகங்கள் நல்ல முறையில் செய்வார்கள். அந்த யாகத்தில் நாம் பங்குபெறும்பொழுது நமக்கு நல்ல பயன் அடையமுடியும். இன்றைய காலத்தில் பெயரளவில் யாகங்கள் நடைபெறுகிறதே தவிர ஒழுங்கான முறையில் யாகங்கள் செய்யப்படுவதில்லை. மந்திரங்கள் ஒழுங்கான முறையில் சொல்லுவதில்லை.

யாகங்களில் பங்குக்கொள்வதைவிட அந்த கிரகங்களுக்கு காரகம் என்ன என்று பார்த்து அந்த வழியில் சாந்தப்படுத்திக்கொள்ளுங்கள். குரு கிரகத்திற்க்கு மட்டும் வேண்டுமானால் நீங்கள் யாகங்களில் பங்குக்கொளளலாம். குருகிரகம் ஆன்மீக சம்பந்தப்பட்ட துறைக்கு சம்பந்தப்படுவதால் அதில் நீங்கள் கலந்துக்கொள்ளலாம்.

குருவிற்க்கு மந்திரங்களை உச்சரிக்க தெரியவில்லை என்றாலும் யாகங்களில் நீங்கள் பங்குக்கொள்வதும் வழியாக நீங்கள் குரு கிரகத்தின் துறைக்கு சம்பந்தப்பட்ட விசயத்தில் கலந்துக்கொண்டதால் அதனால் பயன்பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      கடந்த ஒரு மாதகாலம் சொந்த வேலை இருந்த காரணத்தால் அதிக பதிவை தரமுடியவில்லை. இனிமேல் உங்களின் ஆத்மாவிற்க்கு தகுந்த மாதிரியான பதிவை தருவதற்க்கு அம்மன் துணை செய்யும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.

நமது பதிவை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் என்னிடம் தொடர்ந்து போன் செய்து ஏன் சார் பதிவை எழுதுவதில்லை என்று கேட்டுக்கொண்டே இருந்தனர் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு இனி பதிவை தருகிறேன்.

சக்தியைப்பற்றி இப்பதிவில் ஒரு சில விசயங்களைப்பற்றி பார்ப்போம். சாமிக்கு சாராயம் படைக்கும் ஒரு பழக்கம் நமது கோவில்களில் பார்த்து இருக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனும் அவனின் பழக்கவழக்கத்திற்க்கு ஏற்ப அவனின் தெய்வம் இருக்கும். ஒரு சில இடங்களில் அந்த தெய்வத்திற்க்கு தகுந்தமாதிரி மனிதனின் பழக்கவழக்கம் இருக்கும்.

சாராயத்தை வைத்து படைக்கும் தெய்வத்திடம் சாராயம் கொடுக்காமல் இருக்கும் தெய்வம் தோல்வி பெறும்.ஒவ்வொரு பழக்கத்தையும் அந்த தெய்வத்திற்க்கும் தெரியும்பொழுது மட்டுமே அந்த சக்தி புரிந்துக்கொண்டு எதிராளி எப்படிப்பட்டவனாக இருந்தாலும் வெல்லும் சக்தியோடு சக்தி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 11, 2014

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3






நன்றி நண்பர்களே!
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                                               





நன்றி நண்பர்களே
ராஜேஷ்சுப்பு




Monday, November 10, 2014

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      நேற்று நடந்த பூஜையில் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தினர். அவசர வேலை காரணமாக அனைவரின் பெயரையும் பதிவில் சொல்லமுடியவில்லை. நேற்று நடந்த அம்மன் பூஜையின் படங்களை காணுங்கள்.







நன்றி நண்பர்களே!

ராஜேஷ்சுப்பு






Saturday, November 8, 2014

அம்மன் பூஜை



வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் அம்மன் பூஜை 9/11/14 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சம்பத்குமார் அவர்கள்
செய்யாரை சேர்ந்த திரு சரவணபாபு அவர்கள்
சென்னை சேர்ந்த திரு ராஜ்கண்ணா அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்
சத்தியசீத்தாராமன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் அவர்கள்

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
கண்டியூரை சேர்ந்த இராமபாலசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளில் அம்மனிடம் உங்களின் புதிய வேண்டுதலை வையுங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Thursday, November 6, 2014

சக்தி



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று கண்டியூர் இராமசுப்பிரமணியனை சந்திப்பதற்க்காக அவரின் இல்லத்திற்க்கு சென்று இருந்தேன். அவர் ஊர் ஆலங்குடி குரு கோவிலுக்கு அருகில் இருப்பதால் ஆலங்குடி குருவை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.பல முறை இந்த கோவிலுக்கு சென்றால் கூட நேற்றும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மாலையில் சென்று தரிசனம் செய்தேன். கோவிலில் கூட்டம் இல்லை நானும் என்னோடு வந்தவர் மட்டும் சென்று பொறுமையாக தரிசனம் செய்தோம்.கோவிலில் போட்டோ எடுக்க அந்தந்த கோவில் நிர்வாகதத்தில் கேட்டுவிட்டு தான் நான் போட்டோ எடுப்பது வழக்கம். இந்த கோவிலில் கேட்டபொழுது அவர்கள் போட்டோ எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு கோவிலில் சக்தி இருந்தால் நாம் போட்டோ எடுக்கும் கேமராவிலேயே தெரிந்துக்கொள்ள முடியும். கேமரா வழக்கத்திற்க்கு மாறாக ஒழுங்காக போட்டோ எடுக்காது. அதனை மீறி எடுத்தால் கூட அந்த போட்டோவில் சக்தியின் வெளிப்பாடாக ஏதாவது ஒன்று தெரியவரும். ஒரு சில கோவிலில்களில் போட்டோ எடுக்கும்பொழுது மங்கலாகவும் தெரியும்.

இந்த வழியில் கூட நீங்கள் கோவிலில் சக்தி இருக்கிறதா இல்லையா என்று நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.ஒரு சில கோவிலில் கேமராவில் கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு சக்தி இருக்கும்.


நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு


Wednesday, November 5, 2014

செல்வவளம் சேருவதற்க்கு செய்யவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் நல்ல செல்வ செழிப்போடு வாழவேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைத்தால் மட்டும் போதுமா இறைவன் அதற்கு அருளவேண்டும் அல்லவா.

செல்வவளத்திற்க்கு என்றே பல நல்ல விசயங்களை பின்பற்றுங்கள் என்று ஜாதககதம்பத்தில் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு புதிய கருத்தை சொல்லுகிறேன். 

ஒன்றை மட்டும் முதலில் நினைவில் வையுங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதவரை நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களால் செல்வநிலையை அடையமுடியாது. பொதுவாக இந்துக்கள் அனைவரும் செல்வநிலையில் வாழ்ந்துவிடமுடியாது அதற்கு காரணம் இந்துக்களின் வழிபாடுகள் அனைத்தும் முக்தி என்ற நிலையை நோக்கியே அதிகமாக இருக்கும்.

முக்தி என்ற நிலை வந்துவிட்டால் அப்புறம் அங்கு செல்வவளத்திற்க்கு என்ன பேச்சு இருக்கமுடியும். அதே நேரத்தில் நீங்கள் கோவில் கோவிலாக அழைந்துக்கொண்டு இருந்தால் செல்வவளத்தில் ஒரு நாளும் முன்னேற்றம் காணமுடியாது. கேது உங்களுக்கு ஞானத்தை கொடுத்துவிடுவார். 

நான் சொன்ன பல நல்ல விசயங்கள் ஜாதககதம்பத்தில் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மற்றும் பல கோவில்கள் இல்லாத விசயங்களை நான் சொல்லிருக்கிறேன். அதனை நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு செல்வவளம் வரும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் பூஜை மற்றும் சொந்த வேலை காரணமாக ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். அம்மன் பூஜை அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடுகிறேன்.

ஒரு பெண்ணிற்க்கு ஆறாவது வீட்டில் கேது அமர்ந்து அந்த பெண்ணிற்க்கு ஏழாவது வீடும் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணை திருமணம் செய்பவர்கள் பெரும்பாடு படவேண்டும். பல ஜாதகங்களை நான் பார்த்து இருக்கிறேன்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்புடைய பெண்களை திருத்துவதும் கடினம். இந்த மாதிரி ஜாதகஅமைப்புடைய பெண்களை திருமணம் செய்த ஆண்கள் அவர்கள் கையால் அடிவாங்குவார்கள். இந்த காலத்தில் பெண்கள் ஆண்களை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை இந்த மாதிரி அமைப்பை வைத்து தான் நான் தெரிந்துக்கொண்டேன்.

ஒரு சில ஆண்கள் என்னிடம் வந்து இதில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்பார்கள். அவர்களிடம் நான் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள் என்று சொல்லுவேன். அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்து ஜெயிக்கமுடியாது. முடிந்தளவு அமைதியாக வெளியில் வந்து விடுங்கள் என்று சொல்லுவேன்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பில் பெண் இருந்தால் அவர்களை திருமணம் செய்யும்பொழுது மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். ஏழாவது வீட்டு அதிபதி யாரோடு சேர்ந்து இருக்கிறாரோ அவரை துணைக்கு வைத்துக்கொண்டு உங்களிடம் சண்டை போடுவார்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.


Monday, November 3, 2014

அம்மன் வழியாக வெற்றி கிடைக்க


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு ஏதாவது ஒன்றை உடனே செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அதாவது எந்த வேலையும் செய்யாமல் அதுவாகவே நடக்கவேண்டும் என்று கேட்பார்கள்.

எந்த ஒரு வேலையும் அதுவாகவே நடந்துவிடாது. நாம் அதற்க்காக முயற்சி செய்துவிட்டு அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நடக்கும். நமது உழைப்பை கொடுத்துவிடவேண்டும் அதன் பிறகு விடையை எதிர்பார்த்தால் அனைத்தையும் வெற்றியாக முடித்துக்கொடுத்துவிடலாம்.

கடவுளோடு வேலையோ அவன் அந்த வேலையை ஒழுங்காக செய்து இருக்கிறானா என்று தான் பார்ப்பார். ஒழுங்காக செய்துவிட்டால் கண்டிப்பாக எப்படியும் அவனுக்கு வெற்றியை கொடுத்துவிடுவார்.99 சதவீதம் உழைப்பை கொடுத்துவிட்டு 1 சதவீதம் வந்தால் சக்சஸ் என்று இருக்கும்பொழுது வெற்றி கிடைக்கும்.

நிறைய பேர்கள் என்னிடம் வந்து உடனே ஏதாவது செய்துக்கொடுப்பார் என்று எதிர்பார்த்துவிட்டு அது நடக்கவில்லை என்றால் உடனே சென்றுவிடுவார்கள். அவர்களை பற்றி நான் கவலைக்கொள்வதில்லை காரணம் என்ன என்றால் அவர்கள் வேலையே செய்யவில்லை பிறகு எப்படி வெற்றி கிடைக்கும்.

இனிமேலாவது வருபவர்கள் அனைத்து வேலையும் செய்துவிட்டு வெற்றி எப்படியும் வரவேண்டும் என்று நினைத்து வந்தால் எளிதில் நாம் கொடுத்துவிடலாம். இப்படி வருபவர்களுக்கு அம்மன் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                      கோவிலுக்கு முன்னால் ஒரு புற்று கோவில் உள்ளது. இது ஒரு சித்தரின் சமாதி என்று சொல்லுகின்றனர். மயூரகிரிநாதர் என்றும் ஒரு சிலர் சொல்லுகின்றார்கள். இதனை மக்கள் அழைப்பது சுப்பராயர். 



கீழே உள்ள படத்தில்இருப்பது காவல்தெய்வம்



கீழே இருக்கும் இந்த கோவில் தான் புற்று கோவில். இதில் தான் சித்தர் சமாதி அமைந்திருப்பதாக சொல்லுகின்றனர். சக்தி மிகுந்த ஒரு இடமாக இது இருக்கிறது.  அதன் சக்தியை காட்டியவுடன் அருகில் இருக்கும் கடையில் இருந்து மாலை மற்றும் பூக்களை வாங்கி வந்து பூஜை செய்தோம்.


இந்த பகுதிக்கு நீங்கள் செல்லும்பொழுது கண்டிப்பாக இந்த ஆலயத்திற்க்கு சென்று வணங்கி வாருங்கள். அந்த பகுதியில் நீங்கள் வசித்து வந்தால் தினமும் சென்று வணங்கி வாருங்கள். இது ஒரு அற்புதமான கோவில். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.





கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      இந்த கோவிலில் வள்ளி தெய்வாணை சந்நிதிகள் தனியாக உள்ளன. வள்ளி தெய்வாணை இருவருக்கும் தனியாக பின்புறம் தனி கோவில் உள்ளது.










நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.