Followers

Sunday, June 30, 2013

ஆன்மீக அனுபவங்கள் 100


வணக்கம் நண்பர்களே!
                    என்னை வீடுகளுக்கு கூப்பிடும் நண்பர்கள் அனைவரும் பலவிதமான கேள்விகளை கேட்கிறார்கள். கேட்கும்பொழுதே நடுவில் உங்களை சங்கடபடுத்துகிறேனா என்றும் கேட்கிறார்கள் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். மற்ற மதத்தில் இருப்பவர்கள் வீடுகளில் சத்சங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நம் மதத்தில் அது இல்லாமல் இருந்தது ஆனால் இப்பொழுது அதற்க்கான நல்ல வளர்ச்சி தென்பட ஆரம்பித்துவிட்டது.

நான் ஒருபோதும் சங்கடபடமாட்டேன். நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள தான் இப்பதிவை நடத்திக்கொண்டுருக்கிறேன். மற்ற மதத்திற்க்கும் நமது மதத்திற்க்கும் அதிகமான வேறுபாடு இருக்கிறது நமது மதம் அனைத்தும் பயிற்சியில் இருக்கிறது. அவர்களின் மதம் ஏடுகளில் அதிகம் இருக்கும். பயிற்சியில் ஏற்படும் அனுபவத்தை என்னால் வெளியில் சொல்லமுடியாது. ஏன் என்றால் அதனைப்பற்றி சொல்லி தெரிவிக்கமுடியாத அற்புதம் இருப்பதால் அப்படி சொல்லுகிறேன். அனைத்தும் அனுபவம் மட்டுமே. 

சாதாரணமாக வீடுகளில் கடைபிடிக்கும் பழக்கம் மற்றும் ஆன்மீகவிசயங்களை என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்தவரை நான் உங்களி்டம் பகிர்ந்துக்கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை மற்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். எதனையும் மறைத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இதனை சொல்லுகிறேன். மறைத்தால் நமது மதத்தில் உள்ள மக்களை நாம் இழந்துவிடுவோம். 

உங்களின் குழந்தைகளுக்கும் அனைத்து ஆன்மீக விசயத்தையும் பத்து வயதிற்க்குள் சொல்லிக்கொடுத்துவிடுங்கள். இளம் வயதில் கற்றுக்கொடுத்தால் சாமியார் ஆகிவிடுவார்கள் என்று நினைப்பது தவறான ஒன்று. நமது மதம் சந்நியாசிகளை உருவாக்க நினைப்பதில்லை. பயம்கொள்ளாமல் அனைத்து ஆன்மீகவிசயங்களையும் கற்றுக்கொடுத்துவிட்டால் போதும் அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நான் சோதிட வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது கூட அவர்களின் வீட்டுக் குழந்தைகளை கூப்பிட்டு பேசிவிட்டு வருவேன். அது எதற்கு என்றால் அவர்கள் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு தான் வருவது பழக்கம். நான் சென்றவுடன் அந்த குழந்தைகள் கண்டிப்பாக கேட்பார்கள் யார் இவர். அப்பொழுது நீங்களே சொல்லிவிடுவீர்கள். ஆன்மீகத்தை  நோக்கி அவர்களும் வந்துவிடுவார்கள். ஆன்மீகத்தைப்பற்றி அவர்களும் தெரிந்துக்கொள்வார்கள்.

எதிர்கால தலைமுறை ஆன்மீகதலைமுறைகளாக மாற்ற வேண்டியது உங்களின் கையில் தான் இருக்கிறது. உங்களின் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குருவை தேடி


வணக்கம் நண்பர்களே !
                    பல பேர்கள் குருவை தேடி அலைகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். ஏன் என்றால் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் அவர்கள் கேட்கும் கேள்வியை வைத்தே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

ஒரு சிலர் இவர் தான் குரு என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது என்றும் கேட்கிறார்கள். நாங்கள் ஒரு சிலரை பார்க்கிறோம் அவரை எப்படி நாங்கள் குருவாக ஏற்றுக்கொள்வது என்றும் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் எக்காரணம் கொண்டும் அவர்கள் உங்களை தேடி வருவதில்லை. நீங்கள் தான் அவர்களை தேடி போகிறீர்கள். அவர்கள் நல்லவராக இருப்பாரா கெட்டவராக இருப்பாரா என்று நாம் தெரிந்துக்கொள்ள தேவையில்லை.

நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காமல் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை போய் நாம் தேடி செல்வதால் அவர்களை சோதனை செய்ய நமக்கு தகுதி இல்லை.நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்து பார்க்ககூடாது என்பார்கள். அதனையே உங்களுக்கும் சொல்லுகிறேன். அவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அவர்களிடம் கிடைத்தால் போதும் என்று நினையுங்கள்

அவர்கள் சொல்லுவதை உங்களின் மனம் ஏற்றுக்கொண்டால் அவர்களை பின்தொடருங்கள். அவர்கள் சொல்லுவதை அபபடியே பின்பற்றும் பொழுது உங்களுக்கு மேன்மை கிடைக்கும்.ஒரு சிலர் பல குரு பின்தொடர்கிறார்கள் அதுவும் தவறு. குழப்பம் மட்டுமே மிஞ்சும். 

ஒரு குருவை மட்டுமே நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒரு குருவை பின்பற்றும் பொழுது மட்டுமே அவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள்.மானசீகமாக உங்களுக்கு சொல்லிதருவார். அவசர காலத்தில் அவர் உங்களை காப்பாற்ற முடியும்.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, June 29, 2013

சினிமா அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                     தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா என்னடா சினிமா அனுபவம் எல்லாம் எழுதுகிறார் என்று நினைப்பது தெரிகிறது இதிலும் சோதிட தகவல் இருக்கிறது கொஞ்சம் ஜாலியாக படித்து பாருங்கள்.வியாழன் அன்று காலையில் பதிவை எழுதும்பொழுது மின்சாரம் போய்விட்டது உடனே பதிவை வலையேற்றிவிட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே கேட்டால் இன்று முழுவதும் மின்சாரம் வராது என்று சொல்லிவிட்டார்கள்.

நீண்ட நாட்களாக ஒரு நண்பர் அவரி்ன் வீட்டிற்க்கு கூப்பிட்டு இருந்தார். சரி அவரின் வீட்டிற்க்கு செல்லாம் என்று முடிவு எடுத்து அவரை பார்த்துவிட்டு வந்தேன். மதியம் 2 மணியாகிவிட்டது சரி என்ன செய்யலாம் என்று  பார்த்தேன். சினிமாவுக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். சினிமா என்றால் சத்யம் தியேட்டரில் மட்டும் பார்க்க விருப்பம் இருக்கும். ஏன் என்றால் நல்ல தரத்தோடு படம் பார்க்கலாம். 

தனியாக எப்பொழுதும் சினிமா பார்ப்பதில்லை எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் நான் சென்னை வந்ததில் இருந்து அவருடன் தான் படம் பார்க்க செல்வது. அவர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார் அவர் கம்பெனிக்கு சென்றதால் அவரை கூப்பிடவில்லை. திடீர் திட்டமாகிவிட்டதே. அந்த நண்பரின் பெயர் பென்னி ஆண்டனி கேரளாவை சேர்ந்தவர் இவர் எப்பொழுதும் ஆன்மீகம் ,சோதிடம் என்று இருக்காதே என்னோடு வா என்று ஞாயிறு அன்று  அழைத்துக்கொண்டு செல்வார். சென்னையில் பழக்கம் ஆன முதல் நண்பர் அவர் மட்டுமே அவர் கூப்பிடுவதால் சென்றுவிடுவேன்.

நான் சினிமா பார்க்க அதிகமாக செல்வதில்லை.கடைசியாக படம் பார்த்தது விஸ்வரூபம் என்ற படத்தை பார்த்தேன். அதன் பிறகு இப்பொழுது தான் தியேட்டர் வாசலில் அடிவைக்கிறேன். என்ன படம் பார்ப்பது என்று முடிவெடுத்து உள்ளே போய் கவுண்டரில் பார்த்தேன். தீயா வேலை செய்யுனும் குமாரு என்ற படத்தை தேர்வு செய்து டிக்கெட்டை எடுத்தேன். 

இந்த படத்தை ஏன் தேர்வு செய்தேன் என்றால் நல்ல காமெடியாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள் அதனால் எடுத்தேன். உள்ளே சென்றால் பத்து நிமிடத்திற்க்கு சென்னையில் இருக்கிற அனைத்து நகைகடையின் விளம்பரமும் போட்டு காண்பிக்கிறார்கள்.  இரும்பு அடிக்கின்ற இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்று தான் என் மனது என்னை கேட்டது.  

சோதிட தகவல்
               தியேட்டர்கள் இருக்கும் இடம் சுக்கிரனுக்கு காரகம் வகிக்கிறது. வியாழனுக்கும் சுக்கிரனுக்கும் பிரச்சினை என்பதால் வியாழன் அன்று தியேட்டரில் கூட்டம் என்பது மிக குறைவாக இருந்தது. 

நீங்களே போய் பார்த்து இதனை தெரிந்துக்கொள்ளலாம். சரி நீங்கள் நினைப்பது புரிகிறது பெரிய ஆராய்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார் என்று மனதில் நினைக்கிறீர்கள்.

அடுத்த தகவலை தருகிறேன். 

எவ்வளவு பகுத்தறிவாதியும் வெள்ளிக்கிழமை அன்று தான் படத்தை வெளியீடு செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரனுக்கு உகந்த நாள் அல்லவா. நீங்களே பாருங்கள் வெள்ளிக்கிழமை அன்று தான் படம் ரிலிசாகும்.  

டைரக்டர் பற்றி சொல்லியாக வேண்டும். இவர்களுக்கு இந்த எண்ணம் வருவதற்க்கே சுக்கிரன் தான் காரணமாக இருப்பார். உடனே இவர்கள் வீட்டில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு கையை தூக்கி பல ஆங்கிள் பார்ப்பார்கள். அப்புறம் கதையை தேடவேண்டும் அல்லவா புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். புத்தகத்தை படிக்கும்பொழுது பகுத்தறிவு புத்தகத்தையும் சேர்த்து படித்துவிடுவார்கள். உடனே மக்கள் எல்லாம் முட்டாள் தனமாக இருக்கிறார்கள். கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் இவர்களுக்கு படம் வழியாக நல்ல கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படம் எடுக்கிறேன் என்று அழைவார்கள். 

பகுத்தறிவை அள்ளி குடிப்பது போல் முதல் படத்தை எடுப்பார்கள். படம் ஊத்திக்கொண்டுவிடும். அப்புறம் நம்மை மாதிரி சோதிடரை தேடி வந்துவிடுவார்கள். எதவாது கல் கிடைக்குமா அல்லது வேர் கிடைக்குமா ஏதாவது மந்திரம் போட்டு தாருங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சினிமா அனுபவம் தொடரும்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திரங்களை செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!

காயத்ரி மந்திரங்களை செய்பவர்கள் ஒரு போதும் தீய எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உரு ஏற்றாதீர்கள். எனக்கு தீங்கு செய்பவர்களை கெடுக்க வேண்டும் அதனால் காயத்ரி மந்திரங்களை பயிற்சி செய்கிறேன் என்று மனதில் நினைத்தால் ஒரு போதும் மந்திரங்கள் சித்தி நடைபெறாது.

காயத்ரி நன்மைக்கும் மட்டுமே துணை செய்யும் தீமைக்கு துணை செய்யாது. உங்களின் மனதில் அடுத்தவர்களுக்கு எப்பொழுது தீங்கு நினைக்கிறீர்களோ அப்பொழுதே உங்களின் விட்டு வெளியில் போய்விடும்.

என்னிடம் ஒருவர் கேட்டார் சார் இதனை வைத்து மாந்தீரிகம் செய்யலாமா என்று கேட்டார். அப்பொழுது தான் நினைத்தேன் ஏண்டா நான் எல்லோரும் நல்லபடியாக இருக்கதானே இவ்வளவு கஷ்டப்பட்டு அனைத்தும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இவர்கள் என்னடா என்றால் அடுத்தவர்களை கெடுப்பதற்க்கு கேள்விக்கொண்டுருகிறார் என்று நினைத்தேன். 

மனிதன் வாழும் வாழ்க்கை என்பது கடவுள் கொடுததது அதனை நாம் கெடுக்க நினைக்க கூடாது. ஒரு மனிதனை நாம் உயர்த்த வேண்டுமே தவிர அவனை பிடித்து கீழே தள்ளிவிடகூடாது. ஒரு உயிரை உருவாக்க நமக்கு தகுதி இல்லை எனும்பொழுது அழிக்க நினைக்ககூடாது. மாந்தீரிகத்தொழில் செய்பவர்களின் நிலை என்ன ஆகும் என்பதை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 

நீங்கள் காயத்ரி மந்திரங்கள் செய்யும்பொழுது நல்லதை நினைத்துக்கொண்டு செய்யுங்கள். நாம் நல்லபடியாக வாழ்வதற்க்கு ஆண்டவன் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு செய்யும்பொழுது நல்ல வாழக்கையை காயத்ரி தேவி ஏற்படுத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் நட்சத்திரம் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படித்துவிட்டு பல பேர்கள் போனிலும் பேசினார்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு சில பேர் கேள்வியும் கேட்டார்கள். அதனைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

திருவாதிரை நட்சத்திரம் சிவனின் நட்சத்திரம் என்று சொல்லுகிறார்கள். அதனைப்பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு பதில் கண்டிப்பாக இந்த நட்சத்திரத்தில் உடையவர்களுக்கும் மனநிலை பாதிப்பு ஏற்படும். சிவனின் நிலை கூட ஒருவித பைத்தியநிலை தான் அதனால் பாதிப்பை கண்டிப்பாக ஏற்படுத்தும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூ்ட பிற மதத்தில் திருமணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். இவர்கள் மகன் மகள் கூட பிற மதங்களில் திருமணம் செய்ய வாய்ப்பு ஏற்படும் அப்படி இல்லை என்றால் காதல் திருமணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். உங்களின் பேச்சை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

சுவாதி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஏன் என்றால் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லவர்களாக இருக்ககூடும். இறந்தவர்களை எழுப்பும் மந்திரத்தை கற்றவன் சுக்கிரன் என்பதால் அவர்களை காப்பாற்றிவிடுவார்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனநிலைப்பாதிப்பு ஏற்படும். இவர்கள் தேவையில்லாமல் மனதைப்போட்டு குழப்பிக்கொண்டு அதிலேயே பைத்தியம் பிடித்துவிடும்.ராஜாராஜசோழனைப்பற்றி உங்களுக்கு தெரியும். இவர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் இவரைப்பற்றி ஒரு தகவல் அறிந்தேன். இவர் தன்னுடைய கடைசி காலத்தில் பைத்தியம் பிடித்து தான் இறந்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது. இவரின் சமாதிகூட தஞ்சாவூரில் இல்லாமல் வேறு ஊரில் இருக்கிறது. 

மாந்தீரிகத்தில் மேல் அவ்வளவு ஈர்ப்பு இவர்களுக்கு இருக்கும். நான் பேசிய பல பேர்கள் இப்படி தான் சொல்லுவார்கள் மை செய்வது எப்படி மற்றும் ரசமணி செய்வது எப்படி என்று பேசிவார்கள். ராகு என்பதால் அதில் ஈடுபட வைக்கும்.

இவர்களுக்கு நான் சொல்லும் பரிகாரம் நன்றாக தூங்கவதற்க்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். அதிக பிரச்சினை தரும் வேலையில் இருக்காதீர்கள். அனைவரையும் எதிர்க்கொண்டு வாழும் என்னும் வருவதை தவிர்க்க பாருங்கள். எதிர்த்தால் அடிபடுவது நீங்களாக தான் இருக்கும்.

மனதிற்க்கு இனிமை தரும் நிகழ்வுகளை எண்ணிப்பார்த்தல் உடல்நலத்திற்க்கு நன்மையானது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, June 27, 2013

மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் நட்சத்திரம் பகுதி 1



வணக்கம் நண்பர்களே !
                     ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் நாம் முழுமையாக கூட ஆராய்ந்து பார்க்க தேவையில்லை. அவர்களின் ராசி அல்லது அவர்களின் நட்சத்திரத்தை கேட்டாலே ஐம்பது சதவீத சோதிடத்தை நாம் சொல்லிவிடலாம். அப்படி நாம் பார்க்கும்பொழுது இன்று ராகுவின் நட்சத்திரத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை என்னுடைய அனுபவத்தில் இருந்து தருகிறேன் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ராகுவின் நட்சத்திரம் என்று பார்த்தால் திருவாதிரை சுவாதி மற்றும் சதயம் ஆகியவை ஆகும்.

திருவாதிரை மற்றும் சதயம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகபட்சமாக பைத்தியம் பிடித்துவிடும். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி அதிபதியான சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் இவர்கள் மட்டும் தப்பிப்பார்கள். திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு நாள் கூட நிம்மதியாக அவர்கள் தூங்கமுடியாது. அவர்களின் மனநிலை எதையாவது கற்பனை செய்துக்கொண்டே இருக்கும். தேவையற்ற மனக்குழப்பத்தில் இருப்பார்கள்.

இவர்களுக்கு வயது ஏற ஏற மனசிதைவு அதிகமாக இருக்கும். இளவயதில் இருந்தே மனநலமருத்துவரை சந்தித்துக்கொண்டு இருப்பது நன்மையளிக்கும்.இவர்கள் காமத்திலும் அதிகஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் பக்தியிலும் ஈடுபாடு காட்டுவார்கள் எதிலும் திருப்தியை கொடுக்காது. அதிகமான மாந்தீரக தொடர்பு இவர்களிடம் இருக்கும் அதே நேரத்தில் மாந்தீரீக பாதிப்பும் இவர்களுக்கு வந்துவிடும்.

தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதில் இவர்களை விட்டால் ஆள் கிடையாது. இவர்களின் மகன் மகளுக்கு திருமணம் இவர்களின் பேச்சை கேட்டு நடக்காது அவர்கள் இஷ்டம் போல் தான் வரனை தேடிக்கொள்வார்கள். தன் குழந்தைகள் வழியாக அதிகமான அவமானத்தை சந்திப்பவர்கள் இவர்கள் தான்.

இவர்களிடம் பேசி பாருங்கள் அனைத்தும் சந்தேகத்தோடு பேசுவார்கள். பதுங்கி வாழ்வது வெளியில் தலைகாட்டுவது கிடையாது. வீட்டுக்குள்ளே இருந்து திட்டம் போடுவது இவர்களின் வேலையாக இருக்கும். அதே நேரத்தில் நன்றாக மாட்டிக்கொள்வார்கள். பாம்பு என்ன செய்யுமோ அதனை செய்வது இவர்களாக தான இருப்பார்கள்.

இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நான் இருக்கும் பகுதியில் இன்று மின்சாரத்தடை அதனால் இத்துடன் முடித்துக்கொண்டு மின்சாரம் வந்தவுடன் இதனைப்பற்றி மேலும் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, June 26, 2013

வியாபார வெற்றிபடிகள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பம் வழியாக வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று உதவி செய்துக்கொண்டு வருவது அனைவரும் தெரிந்ததே. இதனைப்பற்றி பல நண்பர்கள் என்னிடம் பல கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

உங்களுக்கு இந்த உதவியை செய்து உங்களின் ஜாதகத்தை மீறிய ஒரு செயல் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஜாதகத்தை மீறி செய்வதற்க்கு அம்மன் துணை செய்கிறது. ஜாதகம் என்றால் கர்மா தான் வேறு ஒன்றும் இல்லை. உங்களின் கர்மாவை மீறி நடத்தப்படுகின்ற செயல். நமது அம்மனின் செயலால் வெற்றியை உங்களுக்கு தருகிறது.

கர்மாவை மீறுவதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அம்மன் செய்வதால் நமக்கு பிரச்சினை என்பது இல்லை. இதனை நூறு சதவீதம் வெற்றியாக கொடுக்கமுடியும். உங்களின் நடவடிக்கையை பார்த்து தான் இதனை செய்யமுடியும். நான் முதலில் யாரிடமும் முன்பணம் வாங்காமல் செய்துக்கொண்டு இருப்பதால் அனைத்தும் பாதுகாப்பான முறையில் உங்களுக்கு செய்யவேண்டியதாக உள்ளது. 

முதலில் ஏற்படும் தோல்வியை கண்டு அஞ்சவேண்டாம். தொழிலில் செய்யும் அனைவருக்கும் அம்மன் வழியாக நல்லது செய்ய முடியும்.கொஞ்ச காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.அம்மனை நினைத்துக்கொண்டு யார் பின்னாடி விடாமல் வருகிறார்களோ அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதை மனதில் வையுங்கள். அம்மனின் அருள் மூலம் மிகபெரிய உதவி உங்களுக்கு இருக்கிறது.

முதலில் ஒரு சிலருக்கு தோல்வி ஏற்படுவதற்க்கு காரணம் உங்களுக்கு எந்தவித ஆன்மீகபூஜைகளும் செய்யாமல் வியாபாரத்தை நடத்த நாங்கள் செய்வதால் அப்படி நடைபெறும். படிப்படியாக வளர்ச்சியை காணும் பொழுது உங்களை தன் கண்ணில் வைத்து காப்பாற்றுவது போல் காப்பாற்றிவிடுவேன். வியாபார வெற்றிபடிகளில் நீங்கள் கால்பதிக்கும் காலத்தை எதிர்நோக்கி செல்ல அம்மனின் அருள் உங்களுக்கு துணை புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தியாகம்


வணக்கம் நண்பர்களே!
             நான் எழுதுவது பல நேரங்களில் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் அனைத்தும் உண்மை தான் என்பது நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கும்பொழுது தெரியவரும். அனுமானுஷ்ய விசயங்கள் அதிகமாக இருப்பதால் அனைத்தும் வேடிக்கையாக இருக்கும். இதனை கற்பதற்க்கு என்றே நான் வாழ்க்கையில் பல இழந்திருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு எடுத்த விசயங்கள் ஒவ்வொன்றும்.

சென்னையில் இருந்துக்கொண்டு வேலைக்கு போகாத ஒரு ஜீவன் என்றால் அது நானாக தான் இருப்பேன். ஒரு சிலர் மாதங்கள் மற்றும் ஒரு வருடங்கள் இருந்திருப்பார்கள் ஆனால் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். அறையிலேயே தங்கியிருப்பது மட்டுமே எனது வேலையாக இருந்தது. தனிமையில் அமைதியாக இருந்து அனைத்தையும் பெற்றேன். ஒரு ஆன்மிகவாதி என்பவன் இரவை அதிகமாக பயன்படுத்தவேண்டும். இரவு நேரத்தில் ஆன்மீகபயிற்சி செய்வதற்க்கு உகந்த நேரம்.

ரோகி போகி யோகி மூவரும் இரவில் தூங்கமாட்டார்கள் என்று படித்திருக்கிறேன். ரோகி என்பவன் நோயுடன் போராடி இரவில் தூங்கமாட்டான். போகி என்பவன் இரவில் அவனது போகத்திற்க்காக நாடி செல்வதால் அவனும் தூங்கமாட்டான். யோகி அவனின் பயிற்சிக்கும் இரவு தான் உகந்தது என்று தூங்கமாட்டான்.

அதிகமான தனிமையில் இருந்து அனைத்தையும் பெறவேண்டும். தனிமையில் இருந்துக்கொண்டு கற்பனை செய்துக்கொண்டு இருக்ககூடாது. கற்பனை செய்தால் அது ஒரு தனி உலகமாக மாறிவிடும். எதுவும் செய்யாமல் இருத்தலே ஆன்மீக சாதனை.

இது ஒரு கடினமான செயல் தான் என்ன செய்வது ஒன்றை பெறுவதற்க்கு தியாகம் செய்தால் மட்டுமே சாத்தியப்படும். நீங்கள் தியாகம் செவ்வதற்க்கு தயார் என்றால் ஆன்மீகம் உங்களுக்கு வசப்படும். தியாகம் செய்யாமல் எதுவும் வராது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீகவாதியை எதிர்ப்பவர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஆன்மீகவாதியின் அதிகபட்ச சேவை என்ன என்றால் ஆத்மாவின் மோட்சத்திற்க்கு வழி செய்வது மட்டுமே. எந்த ஒரு ஆன்மீகவாதியும் இதனைப்பற்றி வெளியில் சொல்வதில்லை.

ஒவ்வொரு ஆன்மீகவாதியும் ஆத்மாவிற்க்கு மோட்சத்திற்க்கு வழி செய்யவதற்க்கே கடவுளால் படைக்கபடுகிறார்கள். ஆன்மீகவாதியை இறைவன் படைப்பதன் நோக்கம் இந்த பணி்ககு மட்டுமே. தமிழ்நாட்டில் இதனை அதிகம் செயவதில்லை என்று நினைக்கிறேன். வடமாநிலங்களில் இதனை பல ஆன்மீகவாதிகள் செய்கின்றனர். இதனை செய்வதற்க்கு என்றே பயிற்சிகள் உண்டு. 

இந்த வேலையை செய்து கொண்டு தான் அவர்கள் ஆன்மீகவாழ்க்கையில் முன்னேற்றத்தை அடையமுடியும். இப்படி செய்பவர்கள் சிவனின் அம்சமாக திகழ்வார்கள்.அவர்களை நாம் வணங்கினால் கூட நமது கர்மாவின் பாவகணக்கு குறையும்.நாம் ஆன்மீகவாதிகளை பகைத்துக்கொள்ள கூடாது என்று சொல்லுவது கூட இந்த காரணத்தால் மட்டுமே. அவர்கள் தன் வாழ்க்கையை அதற்கென்றே அர்பணித்துக்கொள்பவர்கள் அவர்களிடம் சென்று நாம் தகராறு செய்து நாம் கர்மாவை எந்தவிதத்திலும் கரைத்துக்கொள்ளமுடியாது. 

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பல பேர்களின் ஜாதகத்தில் அப்படி இருக்கும். ஆன்மீகவாதிகளிடம் சண்டை இட்டுக்கொள்வது மாதிரி ஜாதகம் அமையும் அவர்களுக்கு இந்த பதிவில் சொன்னேன்.

யார் ஆன்மீகவாதியிடம் சண்டை போடுவார்கள் என்றால் ஒரு ஜாதகத்தில் குரு கெடும்பொழுது அந்த நபர்கள் ஆன்மீகவாதிகளை கண்டாலே அவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் தான் இப்படி ஏடாகூடாமாக எதையாவது செய்து மாட்டிக்கொள்வார்கள்.

பூர்வபுண்ணியம் கெடும் ஆட்கள் கூட இப்படி தான் செய்துக்கொண்டு இருப்பார்கள் அவர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.இந்த மாதிரி நான் பல பேரை பார்த்ததால் உங்களி்டன் இதனைப்பற்றி பகிர்ந்துக்கொண்டுள்ளேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, June 25, 2013

தீட்சை


வணக்கம் நண்பர்களே!
                     புலன் கவர்ச்சியிலே ஆழ்ந்து அறியாமையில் மூழ்கி துன்பத்தில் சூழ்ந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு மனிதனை மெய்பொருள் உணர்ந்த ஒரு குரு அம்மனிதனுக்கு அகத்தவத்தின் மூலம் ஆன்மாவையும் மெய்ப்பொருளையும் அறிந்து கொள்ளும் வழி வகையைக் காட்டி கொடுத்தல உபதேசம் அல்லது தீட்சை எனப்படும். தீட்சை என்பது வட சொல் கொடுத்து குறைப்பது என்று பொருள். குருவானவர் உயிராற்றலைப் பாய்ச்சி  பாவப் பதிவுகளை குறைப்பது எனலாம். இது பலவகைப்படும்.

1 சமய தீட்சை

சரியை மார்க்கம் தொடங்குமுன் செய்யப்பெறுவது

2 விசேஷ தீட்சை

 கிரியா மார்க்கத்திற்கு உரியது.

3 நிர்வாண தீட்சை

 யோகத்திற்க்கும் ஞானத்திற்க்கும் உரியது.

4. ஸ்பரிச தீட்சை 

  குரு தன் திருக்கரங்களால் சீடனைத் தொடுவது.

5. நயன தீட்சை

            குரு தன் அருட்பார்வையால் சீடனை நோக்குவது

6. மானச தீட்சை

             குரு தன் மனத்தால் சீடனது மனதை தன்வயப்படுத்துவது

7. வாசக தீட்சை

              வாசகம் என்பது உபதேசம் இது குரு உபதேசம் எனப்படும். நல்ல அருள் வாக்குகளைச் சொல்வது.

8. மந்திர தீட்சை

             குரு சீடனுக்கு மந்திரங்களை உபதேசித்து அருளுவது.

9. யோக தீட்சை

    யோகம் என்பது சேர்க்கை குரு சீடனை இறைவனோடு ஒன்றவைப்பது யோக முறைகளைச் சொல்லித் தருவது.

10 ஓளத்திரி தீட்சை

 ஹோமகுண்டத்தில் ஹோமாக்கினியில் சீடனுடைய கர்மாவை தகித்து அவனை தூய்மைபடுத்துவது.

அம்மா அப்பா என்று இரண்டு உயிர்களின் விந்து நாத சேர்க்கையால் உருவானவன் மனிதன். இந்த இரண்டு உயிர்களின் இணைப்பு காமம். உடலுறவு என்ற செய்கையால் உண்டாகிறது. எனவே மனிதன் புலன் கவர்ச்சியாலும் பொருள் பற்றுடனும் மயக்கமுற்று வாழ்வில் இருப்பான். இந்த மயக்கத்திலிருந்து மீட்டு விழிப்பு நிலையில் அறிவைத் திருப்ப ஒரு ஞானியின் உயிர் அவனில் கூட வேண்டும். உரிய பருவம் வந்த பின்பு குருவின் உயிர் ஒரு மனிதனுடன் சேருவதே உபதேசத்தின் பொருளாகும். குரு உபதேசம் பெற்றவன் வாழ்வில் முழுமை பெறுகிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

முன்னேற்ற வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே !
                    நேற்று வியாபார நண்பர்களுக்கு என்று எழுதிய பதிவில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார். அவர் கேள்வி வழியாக தெரியும் செய்தி ஒன்றுமே இல்லாதவன் எப்படி முன்னேற்றம் அடைவது என்பது போல் தான் இருந்தது.

அவர் வழியாக பல பேர்களின் மனதிலும் அந்த கேள்வி எழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜாதக கதம்பம் என்பது பணக்காரர்களுக்கு என்று மட்டும் இல்லை. அனைவரையும் நல்ல வாழ்க்கையை வாழ வைக்க வழி செய்யும். உங்களி்டம் பணம் என்பது இல்லை என்று கவலைபட வேண்டாம். நான் பல பேர்களுக்கு வீட்டில் ஹோமம் செய்துக்கொடுத்திருக்கிறேன். அப்படி செய்யும்பொழுது அந்த வீட்டில் எந்த ஒரு வியாபாரம் செய்யாமல் இருந்திருப்பார்கள். இதனை செய்தவுடன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை நமது அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும் அதனை வைத்து அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்வார்கள்.

இதனை செய்வதற்க்கும் கொஞ்சம் செலவு ஆகும். நான் இருப்பது சென்னையில் வேறு ஊர்களுக்கு சென்று வருவதற்க்கு என்று செலவு இருக்கிறது. ஹோம செலவு வேறு இருக்கிறது. இதனை நீங்கள் செய்யவேண்டும். இதற்காவது நீங்கள் சம்பாதித்துவிட்டு சொல்லுங்கள் நான் உங்களுக்கு செய்துக்கொடுக்கிறேன்.

இப்பொழுது புதிய நினைப்பு ஒன்று வரும். இதனை செய்வதால் நமக்கு புதிய வாய்ப்பு வருமா என்று நினைக்க தோன்றும். மனிதர்கள் தானே சந்தேகங்கள் வரத்தான் செய்யும். ஜாதக கதம்பம் வழியாக வந்து பல பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். அனைத்தையும் நம்பி இறங்கும்பொழுது உங்களுக்கு அம்மனின் அருள்கிடைத்து முன்னேற்றம் அடையமுடியும்.

உங்களுக்கு இது மட்டுமே என்னால் முடிந்த உதவி செய்யமுடியும். என்னிடமிருந்து பணஉதவி செய்ய தற்பொழுது முடியாத காரியமாக இருக்கின்றது. வருகின்ற பணம் அனைத்தும் ஆன்மீக காரியங்களுக்கு என்றே செலவு செய்யப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அழகே ஆபத்து


வணக்கம் நண்பர்களே !
                    மரணம் வருவதற்க்கு முன்பு எப்படி எல்லாம் அறிகுறி தென்படும் என்பதை உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு சில விசயங்களை பழைய பதிவுகளில் எழுதியதாக ஒரு ஞாபகம் இருக்கிறது தேடி படித்துப்பாருங்கள். அதில் முக்கியமான ஒரு சில விசயங்களை இப்பதிவின் வழியாக நாம் பார்க்கலாம்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது ஒரு சில நடவடிக்கை வழியாக நாம் நன்றாக இவர் சீக்கிரம் போய்விடுவார் என்று தெரியும். நோய்வாய்ப்படுபவர் ஆணாக இருந்தால் அவரின் மனைவி மிக அழகாக மாறிவிடுவார். அப்பொழுது நாம் நினைத்துக்கொள்ள வேண்டியது தான் கூடிய விரைவில் இவர் போய்விடுவார். நான் பல பேரை பார்த்திருக்கிறேன். அவர்களின் மனைவி மிக அழகாக அந்த நேரத்தில் இருப்பார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. இதனை நீங்களும் கவனித்து பாருங்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்கும்.

இப்பொழுது பிறந்த நாட்கள் எல்லாம் படுபந்தாவாக பல இடங்களில் கொண்டாப்படுகிறது. இப்பொழுது ஒரு வயது குழந்தைக்கே பிளக்ஸ் போர்ட் எல்லாம் வைத்து அரசியல்வாதி அளவுக்கு படு ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. சரி ஏதோ ஒரு நாள் மகிழ்ச்சி நடத்தப்பட்டும். ஒரு மனிதனுக்கு மரணம் வரும் நாள் அதிகபட்சமாக அவனின் பிறந்த நாள் அன்று தான் வரும். அவனின் பிறந்த மாதத்தில் அதாவது தமிழ் மாதத்தில் கண்டிப்பாக போய் சேர்ந்துவிடுவான். 

ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளும் இறப்பார்கள். நான் பலபேர்களை இப்படி பார்த்திருக்கிறேன்.மாரகதசா நடைபெற்ற கொண்டு இருக்கும்பொழுது அவர்களின்  பிறந்த நாளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த தகவல் எல்லாம் எனக்கு எனது தாயார் சொல்லிக்கொடுத்தார்கள் அதனை நான் அனுபவத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.

நாம் சோதிடத்தை கற்பது புத்தகத்தில் இருந்தாலும் அனுபவத்தில் கற்பது என்பது அதிகம். அனுபவ சோதிடம் நிறைய கைகொடுக்கும். நீங்கள் அனுபவத்தில் பல விசயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, June 24, 2013

குருவே சரணம்


வணக்கம் நண்பர்களே!
                        பல நண்பர்கள் உங்களின் குருவை காட்டுங்கள் என்று சொல்லுகிறார்கள். நாங்களும் அவர்களோடு பழகிக்கொண்டு எங்களின் கர்மாவை தீர்த்துக்கொள்கிறோம் என்றும் சொல்லுகிறார்கள். உங்களிடம் அவரை காட்டுவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. 

நான் அவரைப்பற்றி எதுவும் எழுதகூட கூடாது என்று சொல்வார். ஏன் என்றால் இது எல்லாம் தேவையற்ற ஒன்று என்றும் சொல்லுவார். கலியுகத்தில் எதனை செய்தாலும் அது தவறாக புரிந்துக்கொள்ளகூடும் என்று சொல்லுவார். நமக்கு கிடைத்தை வைத்துக்கொண்டு அதனை அனுபவித்து மேலே செல்ல வழி என்னவோ அதனை மட்டும் செய்யவேண்டும் என்று சொல்லுவார். எப்பேர்பட்ட சக்தியை அடைந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ள கூடாது என்றும் சொல்லுவார். 

இப்படி அவர் இருப்பதால் தான் என்னவோ அப்பேர்பட்ட சக்தியுடையவராக இருக்கிறார். அனைத்து சக்தியையும் நான் அடைந்தால் நான் கூட சும்மா இருக்கமாட்டேன் அதனை வைத்து என்ன செய்யலாம் என்று அதனை பயன்படுத்தி பார்த்துக்கொண்டு இருப்பேன். நம்ம ஆளுங்களா இருந்தால் சொல்லிக்கொள்ள தேவையில்லை. நாட்டையை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். 

நாம் எல்லாம் இத்தனை வருடம் ஆன்மீக ஆராய்ச்சி செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு திரிவோம். அவர் பிறந்ததில் இருந்து தன் வாழ்க்கையை ஆன்மீகத்திற்க்காக அர்ப்பணித்தவர். வெளியில் தன்னை காட்டிக்கொள்வது கிடையாது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். ஒருத்தர் ஒரு மொழிக்கு மேல் கற்றால் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஊரே அல்லோல்பட்டுவிடும். நமது குரு நன்றாக படித்தவர். பத்து மொழிகளுக்கு மேல் பேசுவார். அதனையும் வெளியில் சொல்வது கிடையாது.

அனைத்தையும் பார்த்தவன் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டான். குறையோடு இருப்பவன் தான் வெளியில் ஏதாவது சொல்லி தன்னையும் குழப்பிக்கொண்டு அடுத்தவனையும் குழப்பிவிட்டுவிடுவான்.எனக்கு பல சாமியார்களோடு பழக்கம் இருக்கிறது. நான் அவர்களோடு போகும் பொழுது என்னை சந்திக்கும் நண்பர்கள் இவர் தான் உன்னோடு குருவா என்று கேட்பார்கள் நான் இல்லை என்று சொல்லுவேன். நான் குருவோடு செல்லும்பொழுது ஒருவரும் என்னை சந்தித்ததுகிடையாது. அவரும் நானும் சும்மா சுற்றிக்கொண்டு திரிவோம் யாரும் கேட்ககூட மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

எனது நெருங்கிய நண்பர்களுக்கு சில பேருக்கு அவரை தெரியும். அவர்களின் வீடுகளுக்கு அடிக்கடி அழைத்துக்கொண்டு செல்வார்கள். அவரும் சென்று வருவார். நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் நன்றாக அவரை கண்டுக்கொள்ளலாம். அவரிடம் சில மணித்துளிகள் இருந்தாலே போதும். அவருடன் நீங்கள் அப்படி இருந்துவிடலாம் என தோன்றும். அவரின் ஆத்மா அப்படி ஈர்க்கும்.

நேரம் வரும்பொழுது நீங்களும் சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு


வணக்கம் நண்பர்களே!
                    மாதா,பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி குழந்தைக்கு மாதா பிதாவை அடையாளம் காட்டுவார். மாதாவும் பிதாவும் குருவை அடையாளம் காடடுவார்கள். குரு தெய்வத்தைக் காட்டுவார். குரு அவசியம் தேவை.

புலன் மயக்கத்திருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் தான் முடியும். குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள். ஞானமார்க்கத்திற்க்கு குரு தேவை. அறியாமை என்ற இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் வேதங்கள் கற்றிருந்தாலும் ஆகமங்கள் உபநிடதங்கள் பயின்று இருந்தாலும் குருவின்றி மெய்ஞானம் அடைய முடியாது.

வாழ்க்கையின் வழிகளையும் ஆன்மீகப் பணிகளையும் குரு காட்டுவார். குருவே தெய்வம் குருவினிடத்தே நிழல் போன்று நின்று அவரது செயல்களுக்கெல்லாம் ஒத்துப் பழகி இருத்தல் வேண்டும். குருவிற்க்கு மேலானது ஏதுமில்லை. எவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதில் தானாகவே சாந்தியும் திடமும் மகிழ்ச்சியும் உண்டாகிறதோ அவரே பரம குரு என்கிறது குரு கீதை.

குரங்குக் குட்டியானது குரங்கைப் பிடித்துக் கொள்வதுபோல் குருவை பக்தன் பற்றி நிற்க வேண்டும் குரு பார்வை கிடைத்ததும் பூனைக் குட்டியைப் பூனை தூக்கிச் செல்வது போல சீடனை குரு தூக்கி செல்வார்.

எல்லோராலும் குருவாகி விட முடியாது மிதந்து கொண்டிருக்கும் மரக்கட்டை பல மனிதர்களையும் விலங்குகளையும் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லக்கூடும். நல்ல குரு பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் வலுவான கட்டை போன்றவர் என்பார் ஸ்ரீ ராம கிருஷ்ணர்.

இந்த அரும்பிறவியில் முன் வினை அறுத்து எல்லையில்லா மெய்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை.  அவரின் திருவடியை வணங்கி மகிழ்வதாக வேதாத்திரி மகரிஷி இன்பமுறுகிறார்.

பக்தன் தகுந்த மனப்பரிபாகம் அடையும்போது குரு தானாக வருவார். குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. வானொலிப் பெட்டியில் தகுந்த அலைவரிசையைத் திருப்பினால் தொடர்புடைய நிகழ்ச்சிகள் கேட்கும். அதுபோல பக்தன் தனது மனதை தகுந்த அலைவரிசையில் வைத்திருக்கும் போது குரு அந்த அலைவரிசையில் தானாக வந்தமருவார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தோத்தாபுரி தானாகத் தேடிவந்து உபதேசம் தந்தார்.

மூர்த்தி தவம் தீர்த்தம் முறையாகச் செய்தோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்றார் தாயுமானவர். குருவின் பெருமையை திருமூலர்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருவுறு சிந்தித்தல் தானே

எனறு சொல்லுகிறார். மேற்கண்ட கட்டுரை அறிவியலும் ஆன்மீகமும் என்ற புத்தகத்தில் படித்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தொழில் செய்யும் நண்பர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று நமது அம்மன் வழியாக உங்களுக்கு நல்லது செய்துக்கொண்டு இருக்கிறேன். இதில் நீங்கள் வரும்பொழுது உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை நமது அம்மன் கொடுக்கும். முதலில் ஒரளவு பணம் வந்துவிட்டது நமக்கு இது போதும் என்று நீ்ங்கள் விட்டுவிலகிவிடவேண்டாம்.

நமது அம்மனிடம் இருந்து ஒரு சதவீதம் மட்டுமே உங்களின் தொழில் வளர்ச்சிக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். படிப்படியாக உங்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு தரப்படுகிறது. உங்களின் தொழில் பல வளர்ச்சியை காணவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் பற்றாது உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கவேண்டும். 

உங்களின் கனவு பெரிய அளவில் இருப்பவர்கள் மட்டுமே என்னை தொடர்புக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அது மட்டும் அல்ல நான் இங்கு உட்கார்ந்துக்கொண்டு அனைத்து வேலையும் செய்துவிட முடியாது. உஙகளின் தொழில் நடைபெறும் இடத்திற்க்கும் நான் வரவேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களின் தொழில் பல வளர்ச்சியை காணமுடியும். உங்களி்ன் தொழில் நடக்கும் இடத்தில் என்னுடைய கால்பதிக்கும் போது உங்களி்ன் தொழில் வளர்ச்சியை நோக்கி அடிவைக்கும்.

மிகப்பெரிய அளவில் தொழில் செய்யவேண்டும் என்று கனவு கண்டு இருப்பவர்கள் காலம் தாழ்த்தாமல் தொடர்புக்கொண்டுவிடுங்கள். எனக்கும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்று இருப்பவர்களை தான் எனக்கு பிடிக்கும்.இந்தளவு போதும் என்று ஒரு போதும் தொழிலில் இருப்பவர்கள் நினைக்ககூடாது. மிகப்பெரிய அளவில் இருக்கும் கம்பெனியோடு உங்களை ஒப்பிட்டு பார்த்து நீங்கள் அதற்கு தயாராக வேண்டும்.

என்னை நோக்கி எந்தளவுக்கு நீங்கள் வருகிறீர்களே அந்தளவுக்கு நீங்கள் முன்னேறமுடியும். இதனை இப்பொழுது பலபேர் புரிந்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காலம் தாழ்த்தாமல் உடனே வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, June 23, 2013

பேய் வீடு


வணக்கம் நண்பர்களே !
                    ஒருவருடைய ஜாதகத்தில் நான்காவது வீடு கெடும் பொழுது அந்த வீட்டில் எளிதாக பில்லி சூனியம் வைத்துவிடுவார்கள். இன்றைய காலத்தில் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இது பரவலாக பேசப்படும் விசயம்.

நான்காவது வீட்டில் ராகு கேது போன்ற கிரகங்கள் அமர்ந்தால் அந்த ஜாதகருடைய வீட்டில் இந்த மாதிரி பாதிப்பு ஏற்படும். அதனால் பாதிப்பை அந்த நபர்கள் பாதிக்கப்படுவார்கள். பேய் வீடு என்று சொல்வார்கள் அல்லவா. அதுபோல் வீடு இருக்கும். வீட்டிற்க்குள் நுழைந்தால் நிம்மதி கெட்டுவிடும். வீட்டிற்க்குள் அதிகமான இருக்கும் இருப்பதுபோல் மனதிற்க்குள் தோன்றும்.

ராகு, கேது மற்றும் சனி இருந்தால் இவ்வாறான பாதிப்பை அவர்களின் வீடுகள் பெறுகின்றன. தமிழ்நாட்டில் பில்லி சூனியம் என்பது எல்லாம் அந்தளவுக்கு வைக்கும் திறமை கிடையாது. மாவட்டத்திற்க்கு ஒருவர் இருந்தாலே மிகபெரிய விசயம்.அதனால் பயம்கொள்ள தேவையில்லை.ஒரு சில பகுதியில் இந்த மாதிரி வைக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக செய்யும் பொழுது பாதிப்பு ஏற்படுத்தும். 

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில ராகு கேது சனி அமர்ந்திருந்தால் உங்களின் வீடுகளை தினமும் சுத்தம் செய்துககொண்டு இருக்கவேண்டும். ஏன் என்றால் சில வைப்பு முறைகளில் உங்களின் வீட்டில் பொருள்கள் வழியாக வைத்துவிடுவார்கள். நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது உங்களின் கண் பட்டு அதனை தூக்கி எறிந்துவிடுலாம்.

வீட்டில் கடல்நீரை கொண்டுவந்து மாததிற்க்கு ஒரு முறையாவது தெளித்துக்கொள்வதும் நல்லது. கோமியத்தை கொண்டும் தெளிக்கலாம். மஞ்சள் கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது உங்களின் வீட்டில் துர்சக்திகள் வாசம் செய்யாது. 

ஒரு சில கேரளாகாரர்கள் செய்தால் என்ன செய்தாலும் அதனை எடுக்கமுடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும்.அவ்வாறு இருந்தால் நீங்கள் மாந்தீரிகம் தெரிந்தவர்களை கொண்டு அதனை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, June 22, 2013

சந்தித்த வேளையில்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு நாட்களும் வேலை அதிகமாக இருந்ததால் பதிவை வலையேற்ற முடியவில்லை. இன்று சென்னை திரும்பியபிறகு தான் வலையேற்றினேன். இரண்டு நாட்கள் பதிவு வரவில்லை என்றவுடன் என்னை தொடர்புக்கொண்டு பல நண்பர்கள் ஏன் பதிவு எழுதவில்லை என்றே கேட்டுவிட்டார்கள். கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

நேற்று இரவு 7 மணிக்கு என்னை சந்திக்க தஞசாவூர் ரயில் நிலையத்திற்க்கு கும்பகோணத்தில் இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். இருவர் மட்டும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான்கு நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரும் நமது பிளாக்கில் மூலம் அறிமுகமானவர்கள். மிக சந்தோசமாக இருந்தது ஏன் என்றால் அந்த பகுதியில் எனக்கு அந்தளவுக்கு வாடிக்கையாளர்கள் கிடையாது.  முதல் சந்திப்பிலேயே நான்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்களே என்று சந்தோஷபட்டேன். 

எனது ஊரான தஞ்சாவூர் பகுதியில் எனக்கு அந்தளவு பழக்கம் கிடையாது. ஆன்மீகவழியில் கிடையாது. இப்பொழுது தான் அந்த பகுதியில் இருந்து வருகிறார்கள். இது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. என்னடா நாமா இவ்வளவு கற்று நமது பகுதியில் இருந்து யாரும் தேடிவந்து இதனை கற்றுக்கொள்ளவில்லையே என்று நான் நினைத்து அந்த பகுதியில் இருந்து வந்த முதல் பழக்கமான நண்பர் ஒரத்தநாடு செந்தில்குமாரிடம் ஒரு வாரத்திற்க்கு முன்பு சொல்லிக்கொண்டு இருந்தேன். பாருங்கள் ஒரு வாரத்தில் அந்த பகுதியில் இருந்து நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள்.

இரவு மணி 7 முதல் 10 வரை அனைவரும் தஞ்சாவூர ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது எனது நண்பர் ஒருவர் என்னை பார்க்கவந்திருந்தார் நான் புது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்ததால் அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வழி தவறிவிடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அப்படி இல்லை. என்னை சந்திக்க வரும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் தான் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டால் அனைவரும் மிகப்பெரிய அளவில் உருவாகிவிடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. 

இப்பொழுது ஆன்மீகவாதிகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்க தயார் என்றால் பல விவேகானந்தர்களை உருவாக்கலாம். நம் மதத்தின் உள்ள கருத்துக்கள் மீது அப்படி ஒரு ஈடுபாட்டோடு அனைவரும் இருக்கிறார்கள். அனைவரும் என்னிடம் பேசிவிட்டு உங்களை கேள்வி கேட்டு தொந்தரவு செய்கிறோம் என்று நினைக்கிறோம் என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனது வேலையை இது தானே என்றும் சொன்னேன். மனதிற்க்குள் அவர்களுக்காக பிரத்தனை செய்துவிட்டு அனைவரும் சென்று சாப்பிட்டுவிட்டு 10° 45 மணிக்கு மன்னார்குடி சென்னை எக்ஸ்பிரஸ்லில் ஏறினேன். அவர்களும் கும்பகோணம் வரை வந்தார்கள்.

அடுத்தமுறை செல்லும்பொழுது எனது ஊருக்கு செல்லும்பொழுது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உள்ளேன்.நண்பர்களே என்னை சந்திக்கும்பொழுது வெளியிடங்களில் நண்பர்கள் போல் சந்திக்கலாம். உங்களுக்கு ஏதாவது நடக்கவேண்டும் என்று நினைத்தால் என்னை உங்களின் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள். ஏன் என்றால் பல சந்நியாசிகளை சந்தித்தியுள்ளேன். அவர்களின் புண்ணியம் உங்களின் வீடுகளில் தங்குவதற்க்கு நல்ல வாய்ப்பும் இருக்கிறது.நமது குரு கொடுத்த விசயங்கள் என்னிடம் இருக்கிறது அதன் வழியாக நீங்கள் வளர்ச்சியை காணமுடியும் என்பதால் இப்படி சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சுகம் கெட்ட ஜாதகம்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று ஒரு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்க்கலாம். தனசு லக்கினத்தை உடைய ஜாதகம். லக்கினாதிபதியாகிய குரு ஒன்பதாவது வீட்டில் போய் அமர்ந்து இருக்கிறார். குரு அமர்ந்த வீடு சிம்மம்.

குரு சிம்மத்தில் செல்லும் நட்சத்திரம் மகம். மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம். குருவிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை கிடைக்கிறது என்று பார்த்தால் மூன்றாவது வீட்டில் அமர்ந்து செவ்வாய் தன்னுடைய ஏழாவது பார்வையில் பார்க்கிறார். குருவிற்க்கு செவ்வாயின் பார்வை கிடைக்கிறது.



லக்கினம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். லக்கினம் தனுசு லக்கினம். லக்கனத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். குருவின் வீட்டில் சுக்கிரன் அமர்ந்தாலும் அவரின் சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்து சென்றுககொண்டு இருக்கிறது. லக்கினத்திற்க்கு குருவின் பார்வை கிடைக்கிறது. சனியின் பத்தாவது பார்வையும் லக்கினத்திற்க்கு கிடைக்கிறது. சனி செல்லும் நட்சத்திரம் உத்திரட்டாதி. சனியின் சொந்த நட்சத்திரத்தில் செல்லுகிறார்.

லக்கினத்திற்க்கு பாவகிரகங்களின் பார்வை அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம்.இவரின் உடற்கூற்றைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் நல்ல அழகாக இருப்பார். குள்ளமாக இருப்பார். தன்னை அலங்கரித்துக்கொள்வதில் ஈடுபாடுக்கொண்டவர்.

குடும்ப ஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்கிறார். அதன் அதிபதி நான்காவது வீடு என்னும் சொல்லக்கூடிய சுகஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதால் பிரச்சினையை கிளப்புவார் என்று நாம் சொல்லமுடியாது. இவரின் குடும்பத்தை இவரின் தந்தைதான் நடத்திருக்கிறார்.

அப்ப இவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?

இவர் ஊர் சுற்றி திரிந்துக்கொண்டுருந்திருக்கிறார். குடும்பத்தை கவனிக்காமல் இருந்துக்கிறார் அதற்கு காரணம் குடும்ப ஸ்தான அதிபதி சனி நான்காவது வீ்ட்டில் அமர்ந்திருப்பது அதனோடு ராகுவும் சேர்ந்து இருக்கிறார். மூன்றாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் அமர்ந்திருக்கிறது. ஒரு ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது தைரியஸ்தானம் என்பதால் அதில் செவ்வாய் அமர்ந்ததால் இவர் ஊர் சுற்றி இருக்கிறார்.

லக்கினத்தில் சுக்கிரன் சம்பந்தப்பட்டதால் இவர் காமசுகத்திற்க்கு அதிகமாக ஈர்க்கப்படுவார்.அது தான் உண்மையான செய்தி. நான்காவது வீட்டில் சனியும் மற்றும் ராகுவும் சேர்ந்து இருப்பதால் சுகஸ்தானம் கெட்டது என்று சொல்லவேண்டும். இவரின் தாயார் இளம்வயதில் இறைவனடி போய் சேர்ந்துவிட்டார்.

ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் வீடு பாதிக்கப்பட்டால் அனைத்தையும் அனுபவிக்காமல் செய்து விடும். இவர் தான் நல்ல அனுபவித்திருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். குடும்பத்தில் எத்தனையோ சுகங்கள் இருக்கின்றன அனைத்தையும் அனுபவிக்கவிடாமல் செய்திருக்கிறது அல்லவா அதனை தான் சொன்னேன்.நான்காம் இடமான சுகஸ்தானம் கெட்டால் அனைத்து சுகத்தையும் மூட்டை கட்டி வைக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும்.

எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நான்காவது வீடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிடவேண்டும். அந்த வீடு நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர் எப்படியும் நன்றாக வாழ்வார் என்று சொல்லிவிடலாம். இந்த ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதியான குரு ஒன்பதாவது வீட்டில் இருந்தாலும் இவர் சுகத்தை தேடி போனது வெளியில் தானே தவிர தன்னுடைய வீட்டில் இருந்து அனுபவிக்கவிடாமல் சனியும் ராகுவும் செய்துவிட்டார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, June 19, 2013

அம்மனுக்கு பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நாளை நமது அம்மனுக்கு பூஜை செய்யபடுகிறது. அனைத்து செலவுகளும் நமது ஜாதக கதம்பத்தின் நண்பர்களால் நடத்தப்படுகிறது. ஜாதககதம்பத்தின் வியாபார ஆலோசனை என்று ஆரம்பித்தவுடன் அதில் இணைந்த நண்பர்கள் தாராளமாக பணஉதவி நமது அம்மனின் பூஜைக்கு கொடுத்தார்கள். 

அள்ளி தருபவள் அன்னை அல்லவா. அவர்களுக்கு நல்லது நடந்ததால் அள்ளி தருகிறார்கள் மற்றும் நமது பிளாக்கிற்க்கு வரும் நண்பர்களும் அளித்துள்ளார்கள். பல நண்பர்கள் என்னிடம் சொல்லியுள்ளார்கள் மாதம் மாதமும் பணம் அனுப்புகிறேன் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிதாக நண்பர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதை நமது அன்னை தந்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்றால் எப்படி நான் எங்கேயே உட்கார்ந்துக்கொண்டு இருப்பவனை தேடிவருவார்கள். அனைத்திற்க்கும் அன்னையின் அருள் மட்டுமே. 

நாளை பூஜை செய்வதால் உங்களின் வேண்டுதல்களை நாளை அம்மனிடம் வைக்கலாம். நாளை அம்மனை நினைப்பதும் நல்லது. முடிந்தால் என்னோடு நாளை போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள். அடுத்த மாத பூஜைக்குள் நமது அம்மன் உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொடுப்பாள்.

வழக்கம்போல் நாளை பதிவை தந்துவிடுகிறேன். இன்று தயார் செய்துவைத்துவிட்டேன். நாளை அங்கு இருக்கும் இண்டர்நெட் மையத்தில் இருந்து பதிவை தந்துவிடுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நெய்+காபி=குரு


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில காலங்களுக்கு முன்பு நெய் மீது ஒரு தனிபிரியம் ஏற்பட்டது. அதன் மணம் என்னை கவர்ந்து இழுத்தது. நான் இருக்கும் அடையார் ஏரியாவில் மூன்று பில்டிங் தாண்டினால் அடையார் ஆனந்தபவன் கடை உள்ளது. அதன் பக்கம் சென்றாலே அங்கு உபயோகப்படும் உணவில் நெய்யின் மணம் தூக்கலாக இருக்கும். அடையார் ஆனந்தபவன் பக்கம் சென்றாலே ஆளை பிடித்து இழுக்கும்.

எனக்கு என்னடா எப்பொழுதும் இல்லாமல் இப்படி இந்த பக்கம் நம்மை இழுக்கிறதே என்று நினைத்துக்கொண்டு இருப்பேன். பிறகு தான் எனக்கு தெரிந்தது குரு தசா நடைபெறுகிறது அதனால் இப்படி இழுக்கிறது என்று புரிந்தது. அதைபோல் அடையார் ஆனந்தபவனில் காபி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளவயதில் இருந்தே காபி மீது அதிக ஈடுபாடு. அனைத்தும் குரு கிரகத்தின் வசம் உள்ள பொருட்கள் மீது அதிக ஈடுபாடு இருந்தது. குரு பிராமணர்களுக்கு உரிய கிரகம் அல்லவா. 

இன்றைக்கும் எனக்கு ஒரு வீணான ஒரு செலவு எது என்றால் காபி குடிக்கும் பழக்கம் மட்டுமே. அதுவும் பில்டர் காபி மீது ஒரு தனிபிரியம். அடையார் ஆனந்தபவனில் இன்றைய நிலவரப்படி காபியின் விலை 25 ரூபாய். இதற்கு மட்டும் அதிகமாக செலவு செய்கிறேன். 

கொட்டிவாக்கம் சென்றால் திருவான்மியூரில் உள்ள ஹாட் சிப்ஸ் கடையில் காபி குடிக்கும் பழக்கமும் இருந்தது. இப்பொழுது அங்கு அந்தளவுக்கு காபி நன்றாக இல்லை அதனால் அங்கு செல்வதில்லை.

உண்மையில் இதுவும் ஒரு கெட்ட பழக்க வழக்கம் தான். பிராமணர்களின் சாராயம் என சொல்லப்படுவது காபி. எப்படியும் விட்டுவிடவேண்டும்என நினைக்கிறேன் முடியவில்லை.

ஒரு சில வீடுகளுக்கு நான் செல்லும்பொழுது கூட காபியை விரும்பி கேட்பது உண்டு. ஒரு சில வீடுகளில் அவர்கள் போடும் காபி வைத்தே அவர்களின் மனநிலையை அறிந்துக்கொள்ளமுடியும். கோயம்புத்தூர் ஒரு முறை சென்று இருந்தேன். அந்த வீட்டிற்க்கு என்னை கூப்பிட்டது ஒரு ஆள். அந்த ஆளின் அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த அம்மா அவர்கள் ஒரு காபி போட்டுக்கொடுத்தார். வீட்டை விட்டு எழுந்து ஒடிய ஒட்டம் திரும்பி பார்த்தது சென்னையில் தான் . ஒவ்வொரு மனநிலையும் பொருத்தே அவர்களின் சமையலும். 

பிரமாணர்களோடும் அதிக பழக்கம் இளம்வயதில் இருந்தே இருக்கிறது. நான் பள்ளிப்படிப்பை மன்னார்குடியில் உள்ள தேசியமேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன். அங்கு 75 சதவீதம் ஆசிரியர்கள் பிராமணர்கள். மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று பள்ளிவிடுமுறை அளிப்பார்கள். ஒரு சில நாட்களில் மதியம் 1 மணிக்கு பள்ளியை ஆரம்பிப்பார்கள். 

அவர்களோடு ஏற்பட்ட பழக்கவழக்கத்தில் தான் இந்த மாதிரி விசயங்கள் தொற்றிக்கொண்டுவிட்டன இன்று வரை அப்படியே அது இருக்கிறது. குரு தசா வந்தவுடன் அது கொடிகட்டி பறக்கிறது. ஒருவருக்கு குரு தசா நன்றாக இருக்கிறது என்பதை நான் சொன்ன விசயங்களில் மனது ஈடுபட்டாலே உங்களுக்கு குரு தசா நல்லதை செய்யும் என்று நினைத்துக்கொள்ளலாம். 



அப்புறம் எப்படி அசைவம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது என்கிறீர்களா என்ன செய்வது அது குடும்ப பழக்கம் ஆகிவிட்டது. எனது ராசி அதிபதி மற்றும லக்கினாதிபதி சனியாகிவிட்டார். அவர் இதனை சாப்பிடுவைக்கிறார்.

நன்றி நண்பர்களே !



அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, June 18, 2013

ஆன்மீக அனுபவங்கள் 99


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு ஆன்மீக செய்தி ஒன்றைப்பற்றி பார்க்கலாம். நாம் எப்பொழுதாவது ஒரு ஆன்மீகவாதியை எதிர்த்து இருக்கலாம். நமக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம். நாம் என்ன செய்வோம் அவருக்கு எதிராக நாம் போய் ஏதாவது ஒரு தெய்வத்திடம் முறையிடுவோம்.

தெய்வத்திடம் ஆன்மீகவாதி இப்படி செய்தார் என்று நாம் முறையிட்டால் அந்த தெய்வம் நமக்கு எதிராக தான் செய்யும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மீகவாதியை எதிர்த்தால் நாம் எந்த தெய்வத்திடமும் முறையிடகூடாது. அந்த தெய்வம் நமக்கு எதிராக திரும்பி நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடும். ஆன்மீகவாதியே தவறு செய்தால் கூட நாம் வேண்டுதலை வைத்துவிடகூடாது. 

நீங்கள் நல்லது தான் செய்திருக்கிறீர்கள் அந்த ஆன்மீகவாதி தான் தவறு செய்திருக்கிறார் என்றாலும் கூட நீங்கள் முறையிடு செய்யாதீர்கள். ஆன்மீகவாதியின் செயல் அவர் அனுபவிப்பார் ஆனால் நீங்கள் முறையிட கூடாது. நான் பல ஆன்மீகவாதியிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். அவர்களை எதிர்த்து பல கோவில்களுக்கு சென்று வணங்கியும் வந்திருக்கிறேன். அப்படி வணங்கிக்கொண்டு வரும்பொழுது எனக்கு ஆபத்து மேலும் மேலும் தேடிவந்துக்கொண்டு தான் இருக்கும்.

எனது குருநாதரிடம் இதனை கேட்டபொழுது சொன்னார். ஆன்மிகவாதிகளை எதிர்த்துக்கொண்டு கோவிலுக்கு சென்றால் நமக்கு ஆபத்து வரும் அது குலதெயவமாக கூட இருக்கலாம். ஆபத்து மட்டுமே செய்யும்.அப்படி செய்யாதே விட்டுவிடு என்றார்.

ஒரு சந்நியாசியாக இருந்தால் அதைவிட ஆபத்து நமக்கு கிடைக்கும். ஏன் என்றால் அவர்கள் அதற்க்கு என்றே தன்னை அர்ப்பணித்து இருக்கிறார்கள். அவர்களின் சக்தி மகத்தானது அல்லவா அதனால் சொல்லுகிறேன். நீங்கள் ஆன்மீகவாதிகளிடம் சண்டை போடவேண்டாம்.   அப்படி போட்டுக்கொண்டு ஊரில் உள்ள தெய்வத்திடம் வேண்டினால் உங்களுக்கு தான் ஆபத்து.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் நான் சொன்ன ஒரு சில கோவில்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு அந்த கோவிலுக்கு சென்று வருகிறார்கள். நல்லது.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியைப்பற்றி நான் இது வரை பதிவுகளில் எழுதவில்லை. நமது பதிவில் இருக்கும் போட்டு அந்த அம்மனின் படம் தான். மிகப்பெரிய சக்திவாய்ந்த அம்மன். திருவக்கரை அம்மன் அனல்மின்நிலையம் என்றால் மேல்மலையனூர் அம்மன் அணுமின்நிலையம் போன்ற சக்தி உடையது. இது பல பேர்க்கு இந்த செய்தி தெரிந்த ஒன்று தான். நாமும் சொல்லிவிடவேண்டும் அல்லவா. அதனால் இதனைப்பற்றி சொல்லுகிறேன்.

என்னுடைய குருநாதர் அமைவதற்க்கு முன்பிருந்து நான் அந்த ஊருக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தேன். அனைவரையும் அரவணைக்கும் அன்னை அவள். அவளின் புகழைப்பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை அது உலகம் பூராவும் தெரியும் அல்லவா.

எனது ஊரில் இருக்கும் அம்மனும் இது தான். மேல்மலையனூரில் இருக்கும் அதே சக்தி அங்கே வெளிப்படுகிறது. அதனை வைத்துதான் உங்களுக்கு நல்லது செய்ய என்னால் முடிகிறது. 

நீங்கள் மேல்மலையனூரில் உள்ள அம்மனையும் சென்று வணங்கிவாருங்கள். இப்பொழுது அனைவரும் வேண்டுதல் வைத்திருக்கிறீர்கள் அந்த வேண்டுதல் நடந்து முடிந்த பிறகு நமது அம்மனை சென்று வணங்கி வரலாம்.

மேல்மலையனூர் செல்வது காலையில் சென்று வணங்கி வாருங்கள். மாலையில் சென்றால் அந்த ஊரில் இருந்து திரும்பிவருவதற்க்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். பஸ் வசதியும் குறைவாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வீரமிக்க செவ்வாய்கிழமை


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சக்தி இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்.

செவ்வாய்கிழமை என்பது மிகவும் விஷேசமான ஒரு நாள். இந்த நாள் போர்கடவுளான அங்காரங்கனுக்கு உகந்த நாள். இந்த நாளை நாம் அனைவரும் நல்லது செய்வதற்க்கு தவிர்ப்போம். ஏன் என்றால் இந்த நாளி்ல் இரத்தகாயம் ஏற்படும். தீ காயம் ஏற்படும் என்று காரணத்தால் நாம் இந்த நாளில் எதுவும் செய்வதில்லை. உண்மையில் செவ்வாய்கிழமை அன்று ஏற்படுகிறது.

சலூன் கடை கூட இந்த நாளில் விடுமுறை அளிப்பார்கள் ஏன் என்றால் கத்தி ஏதும் பட்டு இரத்தகாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அவ்வாறு செய்வார்கள். ஆண்களாக இருந்தால் நீங்களே இந்த நாளில் ஒரு சோதனை செய்து பார்க்கலாம். செவ்வாய்கிழமை அன்று ஷேவ் செய்து பாருங்கள் உங்களின் கன்னத்தில் கண்டிப்பாக இரத்த காயம் ஏற்படும் அல்லது கடுமையான எரிச்சல் ஏற்படும். வேறு நாட்களில் செய்தால் எரிச்சல் ஏற்படாது. செவ்வாய்கிழமை செய்தால் கண்டிப்பாக எரிச்சல் ஏற்படும். 

செவ்வாய்கிழமை அன்று நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அதன் சக்தி அதிவேகமாக இருக்கும். உங்களுக்கு எதிரிகளின் தொந்தரவு இருந்தால் கூட நீங்கள் செவ்வாய்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனிடம் சென்று முறையிட்டால் உங்களின் எதிரிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும். எதிரிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லும் சோதிடவாடிக்கையாளருககு நான் சொல்லுவது செவ்வாய்கிழமை பரிகாரம் செய்யுங்கள் என்று தான் சொல்லுவேன். 

செவ்வாய்கிழமை அன்று எப்படியும் நான் அம்மனை சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். நான் கோவிலில் அம்மனுக்கு தீபம் ஏற்றுவது கூட செவ்வாய்கிழமையில் தான் செய்வேன். நீங்களும் செவ்வாய்கிழமை அன்று அம்மனை வழிபடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, June 17, 2013

நாளை வேண்டாம் இன்றே செய்வீர்


வணக்கம் நண்பர்களே !
                    வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு உதவியை பல பதிவுகளில் தந்திருந்தேன். வியாபாரம் செய்யும் நண்பர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். நான் எதிர்பார்த்தை விட நிறைய நண்பர்கள் வந்தனர் நல்லது ஆனால் இன்னமும் நிறைய பேர்கள் தயங்கி உள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது. 

இதனை ஆரம்பித்தன் நோக்கம் வடநாட்டில் இருந்து இங்கு வந்து பயன்படுத்தி ஒரு மக்கள் முன்னேற்றம் காணும் பொழுது நம்ம ஆட்கள் ஏன் முன்னேற்றம் அடையகூடாது என்ற நல்ல நோக்கத்தில் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. நீங்கள் தயங்காமல் உங்களின் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள இது உதவும். 

நான் பல பேர்களின் வீடுகளுக்கு நான் சென்று வருகிறேன். அப்படி சென்று வரும்பொழுது உங்களின் வீடுகளில் நான் வந்து சென்றதால் உங்களுக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கண்டிப்பாக வரும் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேற்றம் அடையவேண்டும். உங்களின் உழைப்பை அந்த தொழிலில் முழுமையாக செலுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு. பல பேர் இப்படி ஜாதககதம்பம் வழியாக பயன்பெறுகிறார்கள். 

வியாபாரத்தில் படிப்படியாக தான் வளர்ச்சியை தருகிறேன். படிப்படியாக நான் வளர்ச்சியை கொடுத்தாலும் உங்களின் கனவு கோடியை கொட்டவேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக உங்களின் கனவை நமது அம்மன் நிறைவேற்றிக்கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்பொழுது நிலவரப்படி பல கம்பெனிகள் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனின் வளர்ச்சியில் தான் அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன். நமது அம்மனுக்கு கம்பெனிகளே பூஜையை செய்ய செலவை ஏற்றுக்கொள்ளும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும்.  தனி நபர்களும் பூஜை செலவுக்கு பணத்தை அனுப்பியுள்ளார்கள். 

உங்களின் வேண்டுதலை தாராளமாக அம்மனிடம் வைக்கலாம். அம்மன் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். நிறைவேற்றினால் பணம் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்களே வேண்டிக்கொள்ளுஙகள். அனைவருக்கும் பொதுவான ஒரு சக்தி தான் நீங்கள் கேட்டால் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். 

எனக்கு பணம் அனுப்பியவர்கள் அவர்களுக்கு நடந்ததால் அவர்களின் விருப்பம்படி அவர்களின் அன்னைக்கு அனுப்பியுள்ளார்கள். ஒரு நன்றியை காட்டுவதற்க்காக செய்கிறார்களே தவிர வேறும் ஒன்றும் கிடையாது. உங்களின் வேண்டுதல் நாளை என்று தள்ளிப்போடாமல் இன்றே வைத்துவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 98


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு ஆன்மீகதகவலைச் சொல்லுகிறேன். என்னிடம் சோதிடம்கேட்க வரும் நண்பர்களுக்கு பல ஆன்மீகவிசயங்கள் செய்துக்கொண்டு இருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் நண்பர்களும் வெளிநாட்டில் வாழும் நண்பர்களும் செய்து வருகிறேன். 

வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு செய்யும் பொழுது ஒரு ஆன்மீகவாதி அதிகமாக கஷ்டப்படவேண்டும். ஏன் என்றால் தெரியாத நாடு. கடலை தாண்டி ஒரு விசயத்தை செய்ய வேண்டும் என்றால் கடினமான வேலை. இங்கே இருப்பவர்களுக்கே செய்வது கடினம் எனும் பொழுது அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு எப்படி வேலை செய்யமுடியும். இங்கு இருந்து அயல்நாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஆன்மீகம் செய்வது கடினம். 

இந்தியாவில் இருந்துக்கொண்டு அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சக்தியை அனுப்ப ஒவ்வொருவரும் அவ்வளவு கஷ்டப்படுவார்கள். நீங்கள் ஆன்மீகவாதிகளாக இருந்தால் கண்டி்ப்பாக இதனைப்பற்றி நன்றாக தெரியும்.நான் தொழில் செய்ய கற்றக்கொண்டு நாளில் இருந்தே அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு காரியம் எளிதாக செய்துக்கொடுப்பேன். இதனை பெருமையாக சொல்லவில்லை ஆனால் உண்மை.

என்னுடைய குருநாதரிடம் இதனைப்பற்றி கேட்காமலே நான் செய்தேன். அவர் சொன்னார் உனக்கு இதனை எளிதாக செய்யமுடிகிறது என்றால் நீ எதனையும் வெற்றி பெற்றுவிடுவே டா என்று சொல்லுவார். ஒரு அம்மனை நீங்கள் அயல்நாட்டிற்க்கு அனுப்பி வேலை செய்வதற்க்குள் படாதபாடுபட்டுவிடுவீர்கள். நான் அடுத்த நிமிடத்தில் அனுப்பி வேலையை செய்வேன்.   கடலை கடப்பது கடினமான ஒரு செயல் அல்லவா. அப்படி ஒரு கடினமான செயலை என்னால் எளிதான செய்யமுடிகிறது. 

சென்னையில் அமர்ந்துக்கொண்டு உலகம் முழுவதும் செய்வது என்றால் சாதாரணபட்ட செயல் அல்ல இது. குருவோடு கஷ்டம் இதில் இருக்கிறது. அம்மனின் சக்தி அதிகம் என்பதால் அனைத்தும் நடைபெறுகிறது. நீங்களும் இப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கவேண்டும் அப்பொழுது அனைத்தும் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

அன்பான நண்பர்களே ! வரும் 20-06-2013 வியாழன் அன்று எனது ஊரில் இருக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு நமது தளத்தின் நண்பர்களின் உதவியுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.