Followers

Friday, May 31, 2013

வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு வாய்ப்பை தந்தேன் அல்லவா. இதனை பல நண்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது மகிழ்ச்சியை தருகிறது. அதே நேரத்தில் இதனை எப்படி செய்வது என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு வியாபாரத்தில் அந்தளவுக்கு அறிவு குறைவாக இருக்கிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. நாளை யாரை சந்திக்க போகிறோம் என்பதனை கூட இவர்களால் திட்டம் தீட்டி வைக்கமுடியவில்லை. அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து எனக்கு போன் செய்து இப்பொழுது இவரை பார்க்கபோகிறேன் என்று சொல்லுகிறார்கள். உடனடியாக நான் என்ன செய்யமுடியும் எனக்கு தொடர்ந்து வேலை இருக்கிறது. எதையும் முதல் நாட்களிலேயே எனக்கு சொல்லிவிடவேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு அந்த வேலையை சரியாக நான் செய்துக்கொடுக்க முடியும்.

இதனை நான் ஆரம்பித்ததே பதிவுக்கு வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பை தரவேண்டும் என்பதற்க்காக மட்டுமே. என்னிடம் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வழியாக தினமும் எனக்கு தொழில் வாய்ப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் இது பயன்பட வேண்டும் என்பதால் உங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டேன். பல பேர் இதனை எப்படி பயன்படுத்துவது என்பது கூட தெரியவில்லை. ஒன்றும் இல்லாதவர்கள் கூட இதில் முன்னேற்றம் அடையமுடியும்.

நான் இப்பொழுது எடு்த்துள்ள கம்பெனிகள் அனைத்தும் கடுமையான சிக்கலில் சிக்கி தவித்த கம்பெனிகளை மீட்டுக்கொடுத்துள்ளேன். இன்னமும் பல கம்பெனிகள் சிக்கலில் இருக்கின்றன அதனையும் மீட்டுக்கொடுக்க போராட வேண்டியுள்ளது முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

சென்னையில் ஒரு நண்பர் ஷேர் வணிகம் செய்துக்கொண்டு இருக்கிறார் அவர் நமது பிளாக்கை படித்துவிட்டு என்னை சந்தித்து பேசினார். அவர் என்னை சந்திக்கும்பொழுது மிகவும் கஷ்டத்தில் நடத்திக்கொண்டிருந்தார். என்னை சந்தித்துவிட்டு போனபிறகு அவரின் தொழில் வாய்ப்பு பல மடங்காக உயர்ந்தது. ஏன் என்றால் அவர் சரியாக திட்டமிட்டு என்னை பயன்படுத்தினார். 

ஒவ்வொரு வாடிக்கையாரையும் சந்திக்கும்பொழுது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவலை கொடுத்துவிடுவார். அம்மனும் அவருக்கு நல்ல உதவி செய்கிறது. அவரின் தொழில் திட்டம் அந்தளவு சரியாக இருக்கிறது. நல்ல வளர்ச்சியை நோக்கி அவரது தொழில் செல்லுகிறது.

இப்பொழுது பல கம்பெனிகள் என்னுடைய கம்பெனிகள் போல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்கள் கூட இருக்காது என்று நினைக்கிறேன். பல கம்பெனிகள் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை எடுத்து இருக்கிறது மகிழ்ச்சியை அளிக்கிறது.

நேற்றுக்கூட ஒரு நண்பர் கும்பகோணத்திற்க்கு அருகில் இருந்து பேசினார் நான் கறவை மாடுகளை வைத்து பால் பண்ணை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களின் உதவி கிடைக்குமா என்று கேட்டார். கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன். அனைத்து தொழிலிலும் செயல்படுத்த முடியும்.

இரண்டு மாதங்களில் என்னிடம் வராத தொழில்களே இல்லை என்ற நிலை ஏற்படும் என்று நினைக்கிறேன். எல்லாம் அம்மனின் அருள் இன்றி வேறு ஒன்றும் இல்லை.இப்பொழுது வந்த தொழில்கள் எல்லாம் நமது ஜாதக கதம்பத்தின் வழியாக வந்தது தான்.

 காலத்தை வீண் செய்யாமல் உடனே செயல்படுத்த பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

சுக்கிரனுக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    சுக்கிரன் தசா வந்தால் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைவோம். சுக்கிரன் தசா நடைபெறபோகிறது நமக்கு இனி அள்ளிக்கொட்ட போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். சுக்கிரன் ஒரு சிலருக்கு மட்டும் நல்லதை செய்வார் ஒரு சிலருக்கு அடித்து கீழே தள்ளிவிடுவார். 

மீனராசிக்கு சுக்கிரன் தசா மிகப்பெரிய கெடுதலை தருவார். உங்களுக்கு சுக்கிரன் தசா நடந்து அதில் இருந்து ஒரு நல்லதும் நடைபெறவில்லை என்றால் என்ன பரிகாரம் செய்வது என்பதை பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை அன்று பிராமணர்கள் இல்லாமல் வெறும் சாதாரணமானவர்களால் பூஜை செய்யும் அம்மனை நீங்கள் வணங்கவேண்டும். பல கோவில்கள் இப்படி இருக்கின்றது அந்த கோவிலில் நீங்கள் வணங்கிவர சுக்கிரனின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மறந்தும் பிராமணர்கள் இருக்கும் கோவிலுக்கு செல்லகூடாது. 

வெள்ளிக்கிழமையில் அம்மனை நீங்கள் வணங்கினால் சுக்கிரனின் ஆசியைப்பெற்று சுக்கிர தசா உங்களுக்கு செல்வவளத்தை அள்ளி தருவார். பல கிராமங்களில் அம்மனுக்கு பூஜை செய்பவர்கள் பூசாரிகளாக இருப்பார்கள். அந்த அம்மன் பெரும்பாலும் சுயம்பாக இருக்கும். புற்று அம்மனாக கூட இருக்கும். 

சுக்கிரனின் தலம் ஸ்ரீரங்கம் என்று பல பேர் சொல்வார்கள். அங்கு சென்று நீங்கள் வணங்கிவிடவேண்டாம். சுக்கிரன் தனியாக இருக்கும் தலங்களாக இருந்தால் நம்மை பயக்கும். 

நவக்கிரங்களையும் நீங்கள் வணங்கவேண்டாம். நவக்கிரகங்களில் குருவும் இருப்பார் அல்லவா அதனால் இதனை சொல்லுகிறேன். சுக்கிரனுக்கு நல்ல பரிகாரம் அம்மனை வணங்குவது மட்டுமே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

அன்னை காளிகாம்பாள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று திருப்போரூர் சென்று வந்ததை பதிவில் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் பதிவில் சொல்லிருந்தால் நாங்களும் வந்து இருப்போம் என்று சொன்னார்கள். கூப்பிட்டால் யாரும் வருவது கிடையாது கூப்பிடாமல் இருந்தால் போன் போட்டு ஏன் சொல்லிவில்லை என்று சொல்வார்கள் நமது நண்பர்கள் பரவாயில்லை. 

நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு தொழில் செய்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது வேலைக்கு செல்பவர்கள் உங்களை நான் தேவையில்லாமல் அனைத்து இடத்திற்க்கு கூப்பிட்டால் உங்களின் வேலை பாதிக்க செய்யும். உங்களின் வேலை தான் உங்களுக்கு முக்கியம் அடுத்தபடியாக ஆன்மீகத்தை வைததுக்கொள்ளலாம். எனக்கு தொழில் ஆன்மீகம் அதனால் கோவில்களுக்கு செல்வது வழக்கம். சரி விசயத்திற்க்கு வருகிறேன்.

சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். சென்னையின் காவல்தெய்வம் காளிகாம்பாள்.செவ்வாயகிழமை மற்றும் வெள்ளி்ககிழமை தவறாமல் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவேன். இடையிலும் ஏதாவது செல்லவேண்டும் என்று ஞாபகம் வந்தால் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கமாக வைத்திருப்பேன். இதனை இன்று முதல் முறையாக உங்களுக்கு சொல்லுகிறேன். ஏன் அங்கு சென்று வணங்குகிறேன் என்றால் நாம் எந்த ஊரில் இருந்தாலும் எது காவல் தெய்வம் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நமது வாழ்க்கை செல்லும். என்னை மாதிரி தொழில் செய்பவர்கள் காவல்தெய்வத்தை வணங்கி தான் தொழில் செய்யமுடியும். 

நான் சென்னையில் இருந்துக்கொண்டு தொழில் செய்வதால் இதனை வழக்கமாக வைத்திருக்கிறேன். நீங்களும் உங்களின் ஊரை விட்டு வெளியூரில் தங்கி வசிக்கலாம். அநத் ஊரின் காவல்தெய்வத்தை வணங்குவது உங்களுக்கு நல்லது. இன்று நாடு இருக்கும் நிலையில் நாம் அடுத்த ஊரில் போய் நாம் தங்கி ஒரு வேலையோ அல்லது தொழிலோ செய்யும்பொழுது நமக்கு எந்த தொந்தரவும் யாரும் கொடுத்துவிடகூடாது என்பதால் இந்த மாதிரியாக நாம் வணங்கவேண்டும்.

சென்னை காளிகாம்பாள் நல்ல சக்தி வாய்ந்த அம்மன். கேட்ட வரத்தை கொடுக்கிறாள். இந்த கோவில் பழமையான கோவில். சத்திரபதி சிவாஜி இந்த கோவிலை 1677 ஆம் ஆண்டு வணங்கியதாக தகவல் உள்ளது. காயத்ரி அம்மனின் சிலை இங்கு இருக்கிறது. பல நல்ல விசயங்கள் அங்கு இருக்கிறது அது எல்லாம் நீங்களே சென்று தெரிந்துக்கொள்ளுங்கள். சென்னையில் நீங்கள் இருந்தால் ஒரு செவ்வாய்கிழமை அல்லது வெள்ளி்கிழமை சென்று வணங்கிவாருங்கள். இன்று மாலை நான் அங்கு செல்வேன்.





நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, May 30, 2013

அன்னையின் அருள்


வணக்கம் நண்பர்களே !
                    அன்னையின் அருளைப்பற்றி எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப்பற்றி எழுதியிருந்தேன். அந்த சம்பவத்தில் வேறு ஒருவரும் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த பணக்கார தொழில் அதிபருக்கு நெருங்கிய நண்பர். அவரும் என்னை எதிர்த்தவர் தான் என்ன மறைமுகமாக எதிர்த்தவர். அவரின் மகன்கள் இருவர் இருந்தார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணத்தை முடித்து இருந்தார்.

அவரின் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்து குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களும் பல பரிகாரங்கள் செய்தும் பயன் இல்லை. அந்த பெண்ணின் தந்தை அரசியலில் மிகப்பெரிய அந்தஸ்துடன் இருப்பவர். அவருடைய ஒரே பெண் இந்த பெண். பல கோடிகளை கையில் வைத்திருப்பதால் என்ன பயன் குழந்தை பாக்கியம் என்பது இறைவன் நினைத்தால் மட்டுமே நடைபெறும் ஒரு செயல் அல்லவா.

அவர்கள் என்ன காரணத்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்து கொண்ட பிறகு இப்பொழுது என்னை தொடர்புக்கொள்ள முயற்சிக்கிறார்கள். நான் அன்னையின் அருளை எழுதியபிறகு இது நடந்துள்ளது. பலகோடிகளையும் சமூக அந்தஸ்தையும் வைத்துக்கொண்டு இருப்பவர்களை பரதேசி போல் இருக்கும் என்னை தேட வைத்தது யார் நமது அன்னை அல்லவா.

என்னை நேரடியாக தொடர்புக்கொள்ள இதுவரை முயற்சிக்கவில்லை. எனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. என்னிடம் கூடிய விரைவில் நேரில் வருவார்கள். நான் மன்னிப்பேன். எனது மனம் குழந்தைபோல் தானே தவிர கொடூரம் கிடையாது.

இது எல்லாம் உங்களிடம் ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒருவனின் பக்திக்கு ஒரு அன்னையி்ன் அருளை எப்படி காட்டுகிறது என்பதை உங்களுக்கு புரிய வைக்க தான் இதனை எழுதுகிறேன்.

நான் எவ்வளவோ மந்திரங்களை கற்று இருக்கிறேன் அதனை வைத்துக் கூட எனக்கு தொந்தரவு கொடுப்பவர்களை தடுக்கமுடியும் ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை. ஏன் என்றால் ஒரு மந்திரத்தை எனது சொந்த தேவைக்காக உபயோகப்படுத்தினால் அதில் இருந்து எனக்கு கர்மவினை எனது ஆத்மாவில் தொற்றிக்கொள்ளும். எந்த காரணத்திலும் கர்மவினை தொடவிடகூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன்.

அனைத்தையும் அன்னை பார்த்துக்கொள்வாள் என்று நான் விடும்பொழுது அந்த பிரச்சினை அங்களாபரமேஸ்வரியி்ன் பிரச்சினையாக செல்கிறது. என்ன ஒன்று என்றால் கொஞ்ச நாட்கள் ஆகும். தெய்வம் நின்றுக்கொல்லும். எனக்கு பிரச்சினை தருபவர்கள் எனக்கு பிரச்சினை தரும் நேரத்தில் மிகுந்த வளர்ச்சியை அடைவார்கள். ஒரு மிகப்பெரிய வளர்ச்சி போல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் என்னை மறந்துவிடுவார்கள். அதன் பிறகு தான் அவர்களுக்கு வினையே ஆரம்பம் ஆகும்.

அன்னை எப்படி எதிரியை பிடித்து ஆட்டிபடைக்கிறது என்பதை எனக்கு இப்பொழுது தான் தெரிகிறது. ஆன்மீகத்தை ஒரளவு தெரிந்தபிறகு எனக்கு இந்த தகவல் கிடைத்தது. அது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிற விசயமாகவே இருக்கிறது.

என்னிடம் பிரச்சினை செய்யும்பொழுது செய்த பிறகும் நான் எவ்வளவோ இறங்கி போய் அவர்களிடம் கேட்பது பிரச்சினை வேண்டாம், விட்டுவிடுங்கள். மனம் திருந்துங்கள் என்று பலமுறை கேட்டு இருக்கிறேன் ஆனால் அவர்கள் இதனை காதால் கூட கேட்பதில்லை. ஏன் என்றால் பணத்திமிரு. பணத்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மன் ஒருமுறை கோபத்துடன் அவர்களை பார்த்தால் போதும் அவர்களால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எழு முடியாத காரியம் என்பதை நான் அறிவேன். 

நான் வைத்துள்ள நம்பிக்கையை அம்மனின் மேல் நீங்களும் வையுங்கள் உங்களை தன் பிள்ளையாக பாதுக்காப்பாள். அங்களாபரமேஸ்வரியிடம் சரணாகதி அடைந்துவிட்டால் போதும். அனைத்தையும் அவள் பார்த்துக்கொள்வாள்.

 ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி போற்றி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

வீடு கட்ட பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று காலை திருப்போரூர் கந்தசுவாமியை தரிசிக்க சென்று விட்டேன். அதனால் தான் பதிவை தாமதமாக வெளியிடுகிறேன்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டுவதற்க்கு என்னிடம் பல மாதங்களுக்கு முன்பு ஆலோசனை கேட்டுருந்தார் ஒருவர். அவரின் வீட்டிற்க்கு நாம் தான் ஆன்மீகவழிகாட்டி என்பதால் அவரின் அனைத்து செயலுக்கும் முன்னிலை வகித்து அனைத்தையும் செய்துக்கொடுப்பேன். கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய அளவில் வணிக வளாகம் கட்டுவதற்க்கு முடிவு செய்திருந்தார். 

அவர் என்னிடம் தொடர்புக்கொண்டு அனைத்து விபரங்களையும் கேட்டுருந்தார். அந்த கட்டிடம் ஆரம்பம் செய்வதற்க்கு முன்பு திருப்போரூர் சென்று அபிஷேகம் செய்ய சொல்லிருந்தேன். அவரின் குடும்பத்தோடு நானும் திருப்போரூர் முருகன் கோவில் சென்று அபிஷேகம் செய்தோம். பிறகு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது. நல்லமுறையில் முருகனின் அருளோடு கட்டிட வேலை முடிந்தது அனைத்திலும் இப்பொழுது கம்பெனிகள் வந்துவிட்டன. 

நினைத்த காரியம் எந்தவித தடங்களும் இல்லாமல் முடிவடைந்துவிட்டதால் திருப்போரூர் முருகன் கோவில் சென்று இன்று அவரை வணங்கி வந்தோம். நீங்களும் உஙகளின் நிலத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் உங்களின் அருகாமையில் இருக்கும் முருகன் கோவில் சென்று அபிஷேகம் செய்துவிட்டு வீட்டை கட்டஆரம்பியுங்கள்.உங்களின் வீடு எந்தவித தடங்களும் இல்லாமல் முழுமை பெற்றுவிடும்

நிலம் சம்பந்தப்பட்ட எந்தவித வேலையாக இருந்தாலும் முருகனை வழிப்பட்டுவிட்டு செய்தால் உங்களுக்கு அந்த விசயத்தில் வெற்றி பெறமுடியும்.

என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Wednesday, May 29, 2013

ஆன்மீக அனுபவங்கள் 92


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்கிறார் ஒரு சாதாரணமான மனிதனாக இருந்துக்கொண்டு எப்படி நினைத்து கூட பார்க்கமுடியாத வேலைகளை செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். (அவர்கள் சொல்லும் வேலை முடிந்ததால் அப்படி கேட்க தோன்றுகிறது என்று நினைக்கிறேன்).

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதிகமான சக்தி இருக்கிறது. அதனை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். நான் அனைவரையும் பார்க்கும் பொழுது ஒரே மாதிரியாக தான் பார்க்கிறேன். யாரையும் வித்தியாசப்படுத்தி பார்ப்பது கிடையாது. ஒருத்தர் பணக்காரர் ஒருத்தர் ஏழை என்று பார்ப்பது கிடையாது. ஒருவன் ஒரு துறையில் வெற்றி அடைந்திருக்கிறான் என்றால் அந்த துறை மட்டும் தான் அவன் வெற்றி அடைவான் என்று கிடையாது அந்த துறைப்பற்றி சரியாக புரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு அவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேறு துறையும் சரியாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவன் கண்டிப்பாக அடுத்த துறையிலும் வெற்றி பெறமுடியும். 

அனைவராலும் அனைத்திலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவன். அதனால் அனைவரையும் ஒரே போல் பார்க்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அனைவரையும் வேறுபாட்டுடன் பார்க்கிறீர்கள். உங்களுக்கு புரிந்துக்கொள்ளும் தன்மை குறைவாக இருக்கிறது. உங்களைப்பற்றி நீங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள். ஒரு புத்தனுக்கு நடந்தது உண்மை என்றால் அது உங்களுக்கும் நடைபெறும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் மேல்நோக்கி செல்லமுடியும்.

ஆன்மீகவாதி என்றால் அந்த வேலையை தான் செய்ய வேண்டும் அவர்கள் வேறு ஏதும் செய்ய கூடாது என்ற பார்வையில் பார்ப்பது தவறான ஒன்று. நாம் தினமும் செய்யும் செயலில் ஆன்மீகம் ஒரு பகுதி என்று எண்ண வேண்டும். அந்தந்த வேலை செய்யும் பொழுது அதில் மட்டும் மனதை ஒருநிலைப்படுத்தினால் போதுமான ஒன்று அனைத்தையும் வென்றுவிடலாம்.

நான் பூஜையறையில் அமரும்பொழுது அதில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன். அப்பொழுது மட்டுமே அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். நீங்கள் பூஜையறையில் அமரும்பொழுது கூட மனதை அலையவிட்டால் ஒன்றும் நடைபெறாது. ஒரு சாதாரணமான ஒரு ஆள் போல் உங்களைப்போல் அனைத்திலும் ஈடுபட்டுக்கொண்டு ஆன்மீகத்திலும் ஈடுபடவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். மிகப்பெரிய ஆன்மீகவாதி போல் காட்டிக்கொண்டு நடக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை.

ஆன்மீகத்தில் இப்படியும் இருக்கலாம் என்று உங்களுக்கு வாழ்ந்து காட்டிவிட்டால் நீங்களும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம் அல்லவா. ஒரு செயலில் வெற்றி பெறுவதற்க்கு அந்த இடத்தில் அந்த கணத்தில் வாழ்வது மட்டும் தான். அதனை நான் கடைபிடிக்கும்பொழுது வெற்றி தேடிவருகிறது. 

சரியான நேரத்தில் சரியான வழியில் செயல்படுத்துவேன். காலம் என்பது ஆன்மீகத்திற்க்கு மிக முக்கியம். இந்த நேரத்தில் இதனை செய்தால் நடக்கும் என்று கணக்கு போட்டு செய்வது எனது பழக்கம். அதனை கடைபிடிப்பேன். நீங்கள் என்ன செய்வீர்கள் நல்ல நேரத்தை விட்டு விட்டு கெட்ட நேரத்தில் செய்வீர்கள் உங்களுக்கு எப்படி வெற்றி வரும்.

நினைப்பது தான் பிழைப்பை கெடுக்கும் என்று சொல்லுவார்கள். நான் எதைப்பற்றியும் நினைக்காமல் இருக்கும்பொழுது அடுத்தவர்களுக்கு காரியம் கைகூடும்.அதாவது எண்ணங்கள் அற்ற நிலையில் அனைத்தும் கைகூடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மகாலட்சுமி எப்பொழுது வீட்டில் தங்குவாள்?


வணக்கம் நண்பர்களே!

இன்றைய அவசர உலகத்தில் பணம் இருந்தால் அனைத்தையும் செய்யமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணத்தேவை வந்துவிட்டது. இன்றைய காலத்தில் சந்நியாசிக்கே பணத்தெவை இருக்கும்பொழுது இல்லறத்தில் இருப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள தேவையில்லை.

மனிதர்கள் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்து பார்க்கிறார்கள். தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய வாரிசுகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நினைத்துக்கொண்டு அப்படியே இல்லாமல் கடுமையாக உழைக்கிறார்கள் இதனை பல வழிகளிலும் சேமித்தும் வைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு உழைத்தால் மட்டும் போதாது அவனுக்கு அதிர்ஷ்டமும் தேவை. அந்த அதிர்ஷ்டம் இருந்தால் உழைக்கும் பணம் சேமிப்பில் அப்படியே இருக்கும் இல்லை என்றால் வந்த வழியிலேயே போய்விடும்.

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் செல்வம் தங்குவதற்க்கு ஒவ்வொரு மனிதனின் வீடும் மிக முக்கியமான ஒன்று. அந்த வீட்டில் மகாலட்சுமி தங்கவேண்டும். மகாலட்சுமி தங்கிவிட்டால் செல்வம் நிரந்தரமாக தங்கிவிடும். சில வீடுகளுக்கு சென்றால் மனதில் ஒரே வெறுப்பு வந்துவிடும். சில பேர்களுக்கு பைத்தியம் கூட பிடித்துவிடும். அதற்கு காரணம் என்ன என்றால் அந்த வீட்டில் துர்சம்பவங்கள் நடந்திருக்கும். சரி அதனை விடுங்கள் நாம் மகாலட்சுமி தங்குவதற்க்கு வழியை பார்க்கலாம்.

மாலை நேரத்தில் மகாலட்சுமி வீட்டிற்க்கு வருகிறாள். நீங்கள் வீட்டிற்க்குள் விளக்கை ஏற்றி அந்த நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை மூடிவிடவேண்டும். இப்படி செய்தால் உங்களின் வீட்டில் மகாலட்சுமி தங்கி உங்களின் செல்வவளத்தை உயர்த்துவாள். நீங்கள் இப்படி செய்து உங்களின் செல்வ வளத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, May 28, 2013

சோதிடத்தை பார்த்து பயம் வேண்டாம்


வணக்கம் நண்பர்களே!
                    பல பிளாக்கை படித்துவிட்டு அதில் எழுதியிருக்கும் சோதிட சம்பந்தப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு யாரும் உங்களின் மனதைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

எனக்கு வரும் போன்கால்களில் இந்த சந்தேகத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள். எனக்கு இரண்டாம் வீட்டில் இந்த கிரகம் இருக்கிறது. இரண்டு வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை இருக்கிறது எனக்கு அதனால் பிரச்சனை வருமா என்று தான் கேட்கிறார்கள். சோதிடர்களின் வேலை இப்படி எழுதுவது தான் அதனால் கிரகங்களை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்டமுடியாது. அதற்கு மேல் கடவுள் இருக்கிறார். அவரின் கருணையால் எப்படிபட்ட துன்பங்களையும் நாம் கடந்துவிடலாம்.

நீங்கள் கிரகங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையை கடவுள் மேல் வைக்கவேண்டும். கிரகங்கள் இல்லை என்று சொல்லவில்லை அது எல்லாம் ஒரு எல்லை வரைக்கு தான் அதற்கு மேல் கடவுள் இருக்கிறார். சோதிடர்களின் வேலை இதனைப்பற்றி எழுதவேண்டும் அப்பொழுது தான் மக்கள் தேடிவருவார்கள். எப்படிபட்ட சோதிடர்களும் அனைத்தையும் கணித்துவிடமுடியாது. அனைத்தையும் சொல்லிவிடமுடியாது.

எனது நண்பர் பாபு கூட திருவண்ணாமலையில் என்னிடம் சொன்னார். சனியும் குருவும் இந்த சோதிடர்களின் கையில் கிடந்து படாதபாடுபடுகிறது என்றார். நான் கூட சில நேரங்களில் நினைப்பது உண்டு சனி, குரு இல்லை என்றால் நாம் எப்படி பிழைப்பை நடத்துவது. நல்ல வேலை ஆண்டவன் இந்த கிரகத்தை வைத்தானே என்று நினைப்பது உண்டு.

குரு பெயர்ச்சியைப் பற்றி எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். திரும்புகின்ற பக்கம் எல்லாம் குரு பெயர்ச்சி பலன்கள் தான் இருக்கிறது. இதில் நான் வேறு எழுதவேண்டுமா பழைய பதிவுகளில் கோச்சாரப்பலனை எழுதியுள்ளேன் அதில் உள்ளது தான் பலன். கோச்சார பலன்கள் எல்லாம் ஒரு 10 சதவீதம் நடந்தாலே மிகப்பெரிய ஆச்சரியமான ஒன்று தான். இதனைப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம்.

சோதிடத்தை பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு அளவோடு சோதிடத்தை பார்க்க வேண்டும். தொட்டதற்க்கு எல்லாம் சோதிடம் தான் என்றால் அப்புறம் நீங்கள் எதற்கு கடவுள் எதற்கு. பழைய காலத்தில் இரண்டு கட்டங்களை வைத்து பார்த்து சரியாக பலனை சொன்னார்கள் இன்று பத்து கட்டத்திற்க்கு மேல் வைத்துக்கொண்டு பலனை தவறாக சொல்லுகிறார்கள். அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, May 27, 2013

ஆன்மீக பயண அனுபவம் 2


வணக்கம் நண்பர்களே !
                     திருவண்ணாமலையில் கோவில் அருகில் போய் அமர்ந்திருநதேன். சரியாக எட்டு மணிக்கு மேல் பெங்களூரில் இருந்து இளங்கோவன் என்ற நண்பர் வந்தார். அடுத்தபடியாக பாலாஜி என்ற நண்பர் சென்னையில் இருந்து வந்தார். மூன்று பேரும் பேசிக்கொண்டு இருந்தோம். நண்பர் பாபு அவர்கள் சரியாக 9 மணிக்கு மேல் வந்திருந்தார்.

பாபு அவர்களே நான் ஏற்கனவே கிரிவலத்தில் சந்தித்து இருக்கிறேன். நமது பிளாக்கிற்க்கு சிறந்த ஆலோசகர் அவர். அவர் சொந்த ஊர் வேலூர். 359 உறுப்பினர்களில் மூன்று பேர் வந்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக தான் இருந்தது. நிறைய நண்பர்கள் போன் செய்து எனக்கும் அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லிருந்தனர். அவர்களுக்கும் சேர்ந்து பிராத்தனை செய்தேன்.

சரியாக எட்டு மணிக்கு எனது குரு போன் செய்தார் எங்கே டா இருக்கிறாய் என்றார். சாமி நான் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்க்காக கோவிலில் இருக்கிறேன் என்றேன். என்னடா திடீர் என்று கிரிவலம் எல்லாம் செல்லுகிறாய் என்றார். நான் கிரிவலம் சென்று ஒரு வருடம் சென்றுவிட்டது அதான் போகலாம் என்று வந்தேன் என்றேன். நீ கார்த்திகை அன்று கிரிவலம் சென்றாய் குபேர கிரிவலம் எல்லாம் சென்றாயே எப்படி ஒரு வருடம் ஆகும் என்றார். நான் அவர்கிட்ட பேசும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக பேசுவேன் ஏன் என்றால் ஒரு வார்த்தை தவறுதலாக சொன்னாலும் சரியாக அந்த இடத்தில் பிடித்துவிடுவார். அப்புறம் திட்டு வாங்க வேண்டும். ஏதோ திருவண்ணாமலை சென்றதால் திட்டவில்லை சரி போய்விட்டு வா என்றார்.

வேறு கோவிலுக்கு சென்றால் நல்ல வாங்கி கட்டிக்கொள்வேன். திருவண்ணாமலை மேல்மலையனூர் திருவக்கரை மட்டும் அனுமதி உண்டு. வேறு கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இந்த மூன்று கோவிலுக்கும் அவர் வருவார். வேறு கோவிலுக்கு செல்லுகிறேன் என்றால் திட்டுவிழும். ஒரு சில கோவில்கள் இருக்கிறது அது எப்பொழுதாவது செல்வது வழக்கம்.

சரியாக 9 மணிக்கு மேல் கோவிலிருந்து நான்கு பேரும் கிரிவலம் சென்றோம். மூன்று பேர் வந்ததே அதிகம் என்று தான் நினைத்தேன் ஏன் என்றால் அவர்கள் கேட்ட கேள்விக்கு கிரிவலம் முடியுவரை என்னால் தொடர்ந்து பதில் தரமுடியவில்லை. இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் அவர்களுக்கு வழி நடத்த ஒரு ஆன்மீகவாதி கிடையாது என்பது அவர்களின் கேள்விகளிருந்தே தெரிகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்பதை கற்று கொடுத்தால் போதும். அதுவே சிறந்த ஆன்மீகமாகவே இருக்கும்.  ஆன்மீககுருக்களின் பற்றாக்குறை இப்பொழுது அதிகமாகவே இருக்கிறது.

வழி நெடுகிலும் அவர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள் அவர்களுக்கு பதில் அளித்தேன். அவர்கள் கேட்ட பொதுவான கேள்விகளுக்கு பதில் அளித்ததை தனிப்பதிவாக போடுகிறேன். அதில் நீங்கள் படித்துக்கொள்ளுங்கள். கிரிவலம் செல்லும்பொழுது வந்திருந்த நண்பர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று அண்ணாமலையாரிடம் பிராத்தனை வைத்தேன். அதைபோல்  என்னை தொடர்புக்கொண்டு கிரிவலத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்ட நண்பர்களுக்கும். மற்றும் நமது பதிவிற்க்கு வரும் நண்பர்களுக்கும் வேண்டிக்கொண்டேன்.

நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் ஒரு ஆன்மீகவாதியோடு கோவிலுக்கு செல்லுங்கள். ஆன்மீகவாதியோடு செல்லும்பொழுது அதிகமான சக்தியை உங்களின் ஆத்மா பெறும். இதனை நான் எனது குரு மூலம் அறிந்திருக்கிறேன். ஒரு சந்நியாசியோடு ஒருவன் இருக்கும்பொழுது நமது கர்மவினை குறையும். ஆன்மீகத்தில் இருப்பவர்களோடும் நாம் இருக்கும்பொழுது நமது கர்மவினை குறையும்.  சென்று வந்த கிரிவலத்தில் அண்ணாமலையாரை சுற்றி கிரிவலம் வந்ததால் அண்ணாமலையாரின் ஆசி கிடைத்தது. நமது குருவின் ஆசியும் கிடைத்தது. கண்டிப்பாக நமது அம்மனின் ஆசி அவர்களுக்கு கிடைத்திருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, May 25, 2013

வாஸ்து: பகுதி 3



வணக்கம் நண்பர்களே !
                     நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுக்கொண்டு இருக்கும்பொழுது நமது பாண்டிச்சேரி நண்பர் போன் செய்து வீட்டில் பணப்பெட்டியை எங்கு வைப்பது என்று கேட்டார். நாமும் வாஸ்து பகுதியை ஆரம்பித்து அது பாதிலேயே நிற்கிறது அதனை தொடங்கு என்று இவரின் வழியாக உணர்த்துகிறது என்று எண்ணி வாஸ்துவை தொடர்கிறேன்.

நாம் கஷ்டபட்டு பணத்தை சம்பாதிக்கிறோம் அப்படி பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் வங்கியில் தான் இப்பொழுது எல்லாம் பணத்தை வைத்திருக்கிறோம். ஒரு அவசர தேவைக்கு என்று வீட்டிலேயே பணத்தை வைத்திருப்போம் அல்லவா அந்த பணப்பெட்டியை எங்கு வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு வீட்டில் தென்மேற்கு பகுதி மேற்கு பகுதி வடமேற்கு பகுதி போன்றவற்றில் பணப்பெட்டியை வைக்கலாம். அந்த பணப்பெட்டி பார்க்கும் திசை கிழக்கு வடக்கு நோக்கி இருந்தால் நல்லது. 

பல பேர் பீரோவில் தான் பணத்தை வைப்பார்கள். மேலே சொன்ன இடத்திலேயே பீரோவை வைக்கலாம்.அக்னி மூலையிலும் ஈசானிய மூலையிலும் எக்காரணம் கொண்டும் அதிக பளூ உள்ள பொருட்களை வைக்ககூடாது. அந்த இடத்தில் நீங்கள் கொண்டுபோய் பீரோவை வைத்தால் உங்களுக்கு பணம் என்பதே வராது.

ஒரு ரூம் மட்டுமே இருக்கும் அறையை கொண்டது உங்களின் வீடாக இருந்தால் மேலை சொன்ன மாதிரியே உங்களின் பணப்பெட்டியை வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தேடி பணம் வரும். பணம் உங்களிடமே தங்கியிருக்கும்.

இதனை நீங்கள் பயன்படுத்தி உங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு நல்ல வாழ்க்கையை வாழுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மந்திர சித்தி



வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திரத்தை செய்பவர்கள் பத்து நாட்கள் செய்துவிட்டு என்ன ஒன்றும் நடைபெறவில்லை என்று கேட்கிறார்கள். ஒருவர் ஆன்மீகப்பயிற்சியை பத்து நாட்களில் எடுக்கமுடியும் என்றால் உலகத்தில் பிரச்சினை என்பதே இருக்காது. அனைவரும் பத்து நாட்களில் பயிற்சியை எடுத்துவிட்டு அவர்களின் பிரச்சினை சரிசெய்துக்கொள்ளமுடியமே.

வெறும் பத்துநாட்களில் ஒன்றும் நடைபெறாது. அதற்கு என்று நேரம் வரும்பொழுது மடடுமே உங்களுக்கு சித்திகிடைக்கும். நாம் இருப்பது கலியுகத்தில் இருக்கிறோம். இந்த கலியுகத்தில் என்ன தான் ஆன்மீகமுயற்சி செய்தாலும் ஒருவரால் முன்னேற்றம் அடைய பல நாட்கள் கஷ்டப்படவேண்டும். உடனே நடைபெறாது. தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். உங்களுக்கு சித்தி கிடைக்கவில்லை என்றால் உங்களின் கர்மாவின் கணக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமே தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று சொல்லமுடியாது.

நீங்கள் செய்யும் பொழுது நம்பிக்கையுடன் செய்துக்கொண்டு வாருங்கள் அப்பொழுது மட்டுமே சித்திகி்டைக்கும். வேதத்தை படித்தவர் ஒரு மலையில் செல்லுகிறார் அந்த மலையில் கால் தவறி நீண்ட பள்ளத்தில் விழுகிறார். அப்பொழுது அவரின் மனதில் நினைக்கிறார் நான் படித்த வேதம் உண்மையால் எனக்கு அடிப்படாது என்று மனதில் நினைக்கிறார். அவர் விழுந்து பார்க்கும்பொழுது ஒரு சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரின் குருவிடம் சென்று சொன்னார். நான் விழும்பொழுது நான் கற்ற மந்திரம் உண்மையானால் எனக்கு அடிப்பட கூடாது என்று சொன்னேன் ஆனால் இந்த சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டு இருக்கிறது இது எதனால் என்றார்.

அதற்கு குரு சொன்னார் நான் கற்ற மந்திரம் உண்மையானல் என்று கடைசியில் ஒரு இழு இழத்தாய். நீ சொல்லும்பொழுது நான் கற்ற மந்திரம் உண்மை என்னை காப்பாற்றும் என்று சொல்லிருந்தால் இந்த சிராய்ப்பு கூட ஏற்ப்பட்டு இருக்காது என்றார்.

கடைசியில் ஒரு சந்தேகம் உனக்குள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த சந்தேகம் கூட ஏற்படாமல் இருக்கவேண்டும் நீ கற்ற வேதம் உண்மை இதனை நீ உணர்ந்தால் உனக்கு சிறு சிராப்பும் ஏற்படாது என்றார். இதனை நான் ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் மனதில் ஒரு சிறு சந்தேகத்தோடு தான் செய்துக்கொண்டு வருகிறீர்கள். அந்த சந்தேகத்தை விட்டு விட்டு முழுமையாக நம்பினால் உங்களுக்கு மந்திரம் எளிதில் சித்தியாகும்.

முதலில் நீங்கள் உங்களை நம்பி உங்களின் தெய்வத்தை நம்பி இது இருக்கிறது இது தான் என் வாழ்க்கைக்கு உதவபோகிறது என்று நீங்கள் நம்பவேண்டும். இப்படி நீங்கள் செய்துக்கொண்டு வாருங்கள் உங்களுக்கு மந்திரசித்தி கிடைத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ஆன்மீக பயண அனுபவம் 1



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று நமது பிளாக் சார்பாக கிரிவலம் சென்று வந்தோம் அதனைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடவேண்டும் என்பதால் இந்த பதிவு.

நேற்று காலையிலேயே நான் கிளம்பிவிட்டேன். நான் நேராக திருவக்கரை சென்று வக்கரகாளியை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். நான் மாதம் ஒருமுறையாவது அங்கு செல்வது வழக்கம். நேற்று காலை தாம்பரத்தில் பஸ்சை பிடித்து கூட்டேரிபட்டு சென்று அங்கு இருந்து திருவக்கரை சென்றேன். 

தாம்பரத்தில் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பிறகு பஸ்சை சிறிது நேரத்தில் எடுத்துவிட்டார்கள். அடடா சும்மா சொல்லகூடாது வெயிலின் தாக்கம் கொன்று எடுத்தது. அனல்காற்று என்றால் அப்படி ஒரு அனல்காற்று வீசுகிறது. கூட்டேரிபட்டில் இறங்கினேன். கூட்டேரிபட்டில் ஒரு மெஸ் ஒன்று உள்ளது. வீட்டுசாப்பாடு போல் இருக்கும் அங்கு மதியஉணவை முடித்தேன். பஸ்சை பிடித்து திருவக்கரை சென்றேன். 

திருவக்கரை அடைந்த பிறகு அம்மனை தரிசனம் செய்துவிடலாம் என்று சென்றால் அங்கு அம்மனை பார்க்க டோக்கன் போடுகிறார்கள். நான் சாதாரண நாட்களில் மட்டும் அங்கு சென்றது உண்டு நேற்று பெளர்ணமி என்பதால் அங்கு விழா எடுக்கிறார்கள். டோக்கன் எவ்வளவு என்று கேட்டால் 10, 20, 50 ரூபாய். நான் போன நேரத்தில் அங்கு கூட்டமே இல்லை. மொத்தம் நூறு பேர் கூட இருக்கமாட்டார்கள். சரி என்று இருபது ரூபாய் டோக்கனை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் செல்லும் வழி எங்கும் சூடு என்றால் அப்படி ஒரு சூடு சிமெண்ட் தரைக்கு சூரியபகவானே இறங்கி உட்கார்ந்துவிட்டார் போல. கால் வெந்துவிட்டது. அட காசு தான் வாங்கிகிறார்கள் ஒரு விரிப்பாவது கீழே போட்டு இருக்கலாம். 

இந்த இடத்தில் ஒன்றை சொல்லவேண்டும் உலகத்திலேயே கடவுளை தரிசனம் செய்ய காசு வாங்கிற ஒரே மதம் நமது இந்து மதம் தான். அடிச்சுக முடியாது. நல்ல குளிர்சாதனம் பொருத்தப்பட்ட மால்களில் உள்ளே செல்வதற்க்கு கூட சென்னையில் பணம் வாங்கமாட்டார்கள். ஏ சி காற்று வாங்கிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சும்மா சுற்றிக்கொண்டு இருக்கலாம். ஆனால் கோவில்களில் வாங்கும் நுழைவுச்சீட்டு பணம் சரியான பகல் கொள்ளை என்று சொல்லவேண்டும்.

திருவக்கரைப்பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும் என்பது நீண்ட நாட்களாக ஒரு ஆசை இன்று தான் அதற்கு வாய்ப்பு அமைந்தது. திருவக்கரையில் காளி வக்கிரகாளியாக இருக்கிறாள். இங்கு உள்ள அனைத்து சந்நதி தெய்வங்களும் வக்கிரமாகவே இருக்கும். 

ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்ய நல்ல ஸ்தலம். இந்த ஸ்தலத்தைப்பற்றி பல தகவல் சொல்லப்பட்டாலும் எனக்கு தெரிந்த ஒரு தகவலை உங்களிடம் சொல்லுகிறேன்.

தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. ராஜராஜசோழன் காலத்தில் அவனது எல்லை இந்த கோவில் உள்ள இடம் வரை உள்ளது. கோவிலின் அருகில் ஒரு ஆறு ஒன்று செல்லுகிறது. இந்த கோவில் உள்ள இடத்தில் இருந்து பல்லவ மன்னர்களின் ராஜ்ஜியம் தொடங்குகிறது. சோழர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை பல்லவர்கள் சூறையாடிக்கொண்டு சென்றுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சோழர்களின் தலைநகரம் தஞ்சாவூரில் இருப்பதால் இந்த எல்லை காவல் காக்கவும் இவர்கள் விளைநிலங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும் ஒரு கோவில் எழுப்பப்பட்டது. 

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஒரு சித்தரின் ஆலோசனையில் காளியை வக்கிரமாக மாற்றி சாதாரணமாக அமர்த்தாமல் காளியை கொஞ்சம் சாய்வாக அமர்த்தி விட்டார்கள். அமர்த்திய உடன் பல்லவ நாட்டில் உள்ளவர்கள் சோழர்கள் பகுதியில் ஒரு அடியை கூட வைக்கமுடியவில்லை. வக்கிரகாளியிடம் இருந்து தப்பிக்கமுடியவில்லை. காளியின் உக்கிரத்தால் பல்லவர்களுக்கு கெட்டகாலம் என்று கூட சொல்லவேண்டும்.

காளி கற்சிலையாக இருக்கிறாள். இவளை வணங்குபவர்களுக்கு கேட்ட வரத்தை தருகிறாள். ஆன்மீகவாதிகளுக்கு இந்த இடம் ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும்.ஆன்மீகத்தில் உச்சநிலையில் இருப்பவர்கள் செல்லும் இடம் இது. பல ரகசியங்கள் இங்கே இருக்கிறது. அதனைப்பற்றி சொல்லவேண்டியதில்லை நீங்களே ஆன்மீகத்தில் உச்சநிலைக்கு வந்த பிறகு கண்டுக்கொள்ளலாம். தென்னிந்தியாவில் சக்தி அதிகமாக இருக்கும் இடம் என்றால் ஒன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றொன்று திருவக்கரை வக்கிரகாளி அம்மன்.

இங்கு சிவன் சந்திர மௌலீஸ்வராக அருள்பாலிக்கிறார். இங்கு மட்டும் தான் முகவடிவில் லிங்கம் இருக்கும். மூன்று முகமாக காட்சியளிக்கிறார். முகவடிவ லிங்கம் நேபாளத்தில் மட்டும் தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அம்மனை தரிசனம் செய்துவிட்டு பிற தெய்வங்களையும் வணங்குனேன்.   அங்கு இருந்து புறப்பட்டு திண்டிவனம் சென்றேன். திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றேன். திருவண்ணாமலையில் நான் இறங்கும் பொழுது மாலை 6 மணி ஆனது. நல்ல காற்று வீசியது. நாள் முழுவதும் வெயில் காய்ந்தற்க்கு மழைக்காற்று போல் வீசியது மனத்திற்க்கும் உடலுக்கும் அக்னி ஸ்தலத்தில் குளிராக இருந்தது.

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 



அன்பு பரிசு



வணக்கம் நண்பர்களே!
                    திண்டுக்கல்லில் இருந்து திரு சுப்பிரமணியன் ஐயா அவர்கள் எனக்கு புத்தகம் ஒன்றை அன்பு பரிசாக அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய புத்தகத்தின் பெயர் யோகி ராம்சுரத்குமார் சிறப்பு மலர்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமார் பற்றி படிக்க படிக்க நமது ஆத்மா புத்துணர்வு பெறுகிறது. அந்த புத்தகத்தை முழுவதும் நான் படித்தபிறகு தான் உங்களுக்கு இந்த பதிவை எழுதுகிறேன். திண்டுக்கல் சுப்பிரமணியன் ஐயா அவர்கள் சுவாமியின் தீவிர பக்தர். அந்த யோகியோடு அவர் பழகியிருக்கிறார். அந்த யோகியைப்பற்றி நானும் அறிய வேண்டும் என்று அன்போடு அந்த புத்தகத்தை அனுப்பி இருந்தார்.

அந்த புத்தகத்தில் இருந்து ஒரு சில வரிகளை உங்களின் கண்களுக்கு தருகிறேன் படித்து பாருங்கள்.

பகவானிடம் நெருங்க நெருங்க நாம் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. நம்மை இவ்வுலக பந்தபாசம் பொருளாதாரம் மருத்துவம் இவற்றிலிருந்து பிரிக்கிறார். மனிதரில் விலங்கான நமது ஆசையை நீக்கி மனிதரில் மனிதனான அன்பால் கருணையால் மனிதரில் தெய்வமான அருளால் பகவான் நம்மை வழி நடத்துகிறார்.

மகனே நீ உடல் அல்லவே அல்ல உடலுக்கு நீ உரியவன் அல்ல உனக்கும் உடல் உரியதல்ல உடல் என்பது ஒரு சட்டையைப் போன்றதை தவிர வேறு ஒரு சிறப்புமே அதற்கு இல்லையப்பா உடலுக்கு உரிய குணங்களும் தொழில்களும் உன்னை ஒருபோதுமே மாற்றமாட்டா மகனே உடல் வளரலாம் தேயலாம் ஆனால் அவை உனக்கு இல்லை செல்லமே.


பல நல்ல பொக்கிஷங்கள் அந்த புத்தகத்தில் இருக்கின்றன. அனைத்தையும் நான் எழுதகூடாது என்பதால் ஒரு சில கருத்துக்களை மட்டும் உங்களுக்கு தந்தேன். புத்தகத்தை எனக்கு அனுப்பிய திரு சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, May 23, 2013

நண்பர்களின் கவனத்திற்க்காக


வணக்கம் நண்பர்களே !
                    அம்மனின் அருளைப்பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். பல நண்பர்கள் அம்மனின் செயலை நினைத்து ஆச்சரியப்பட்டார்கள். பல செயல்களை நமது அம்மன் செய்திருக்கிறது அதனை எல்லாம் உங்களின் பார்வைக்கு அவ்வப்பொழுது தருகிறேன். இப்பொழுது உங்களைப்போல் இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கும் நமது அம்மன் அருளை பொழிந்து வருகிறது.

ஒரு சிலர் அம்மனை நினைத்து பயமும் கொள்ளலாம். யாரும் பயம்கொள்ள தேவையில்லை ஏன் என்றால் உங்களை காப்பதற்க்கு தான் இந்த அம்மன் உள்ளது. உங்களை அழிப்பதற்க்கு கிடையாது. ஒரு சிலர் தீயவர்களாக வருகிறார்கள். அவர்களை தண்டிக்கபடவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த நபர்ககளுக்கு அம்மன் தண்டனை கொடுக்கிறது. ஒரு பக்தன் தன்னை அண்டி சரணடையும்பொழுது அம்மன் அவனுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் தீர்த்து வைக்கிறது.

அடைக்கலம் என வருபவர்களை அசிங்கப்படுத்தாது அடைக்கலம் என்று சொல்லிக்கொண்டு வரும் நயவஞ்சகர்களை அடக்கி ஆளவேண்டியது அம்மனின் கடமையாக இருக்கிறது. என்னால் அதனை ஒன்றும் செய்யமுடியாது.

நான் பல வீடுகளுக்கு தற்பொழுது சென்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் ஒரு பையன் இருந்தால் எப்படி பாசத்துடன் பேசுவார்களே அப்படி தான் அனைவரும் என்னை பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் அம்மனிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறேன். எப்படியாவது இவர்களுக்கு நல்லது செய்துவிடு என்று கேட்கிறேன். அம்மனும் அதை செய்துக்கொடுக்கிறது. இப்பொழுது நான் யாரிடமும் பணம் இவ்வளவு தாருங்கள் என்று கேட்பதி்ல்லை ஏன் என்றால் ஒவ்வொருவரும் என்னிடம் காட்டும் பாசம் அதிகம். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் நமது மக்கள் நல்ல மக்கள் அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க வேண்டும் அது ஒன்று இருந்தாலே போதும். 

இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்த்துவைப்பது எல்லாம் அம்மன் தானே தவிர நான் கிடையாது. அனைத்து நண்பர்களும் எனக்கு போன் செய்து நன்றி சொல்லுவாங்க. செய்தது ஒரு ஆள். நமக்கு நன்றி வருகிறது என்று நினைத்துக்கொள்வேன். இந்த பிளாக்கின் சிறப்பே என்ன என்றால் இது அம்மனின் தளமாக தான் இருக்கிறது. என்ன டா முட்டாள் தனமாக உளர்கிறாய் என்று புத்தி நினைக்கலாம் ஆனால் என்னை உள்ளுக்குள் இருந்து இயக்க செய்வது அது தான் என்று நான் நினைக்கிறேன் அதனால் சொல்கிறேன்.

பல நண்பர்கள் தங்களுக்குள்ள பிரச்சினையை சொல்ல வெட்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பல பேர் கஷ்டத்தோடு இருக்கிறார்கள். ஏன் இதனை எல்லாம் நாம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு கஷ்டம் என்றால் நீங்களே தாராளமாக இந்த அம்மனிடம் கேட்டுப்பாருங்கள் அதனை செவிசாய்த்து உங்களுக்கு நடத்திக்கொடுக்கும் அப்படி இல்லை என்றால் என்னிடம் ஒழிவு மறைவின்றி சொல்லுங்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்கிறேன். உங்களுக்குள்ளே மனதில் போட்டுக்கொண்டு கஷ்டப்படாதீர்கள்.

ஒரு கருத்து ஒன்று பரவலாக இருக்கிறது அது என்ன என்றால் சென்னை சோதிடர்கள் அதிக பணம் கேட்பார்கள் என்று தெரிகிறது. வேறு யாராவது போய் அப்படி ஏமாற்றபட்டு இருக்கலாம். இங்கே வாங்குவது உண்மை தான். ஒரு கல்லை கொடுத்துவிட்டு எழுபது ஆயிரம் பணம் கேட்கிறார்கள். நமது தளம் அப்படிபட்டது கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இனி உங்களுக்கு வரும் பிரச்சினையை சரி செய்துகொடுத்த பிறகு நீங்கள் பணத்தை தரலாம். 

உங்களின் மனம் சந்தோஷப்படும்பொழுது நீங்கள் பணத்தை கொடுக்கலாம். அந்த பணமும் நல்ல விசயத்திற்க்கு செலவு செய்ப்படும் அதனைப்பற்றி வெளியி்ல் சொல்லிக்கொள்ளவில்லை. பாதி பணம் நமது அம்மனின் பூஜைக்காக செலவு செய்யப்படும். எனக்கு தொழில் சோதிடம் தான் எனக்கு இப்பொழுது பல கம்பெனிகள் பணம் கொடுப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஜாதககதம்பம் வழியாக வரும் பணத்தை அம்மனின் பூஜைக்கும் மற்றும் பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்யப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

லட்சுமி வாசம்



வணக்கம் நண்பர்களே!
                     ஒருவரிடம் லட்சுமி வாசம் செய்யவேண்டும் அப்பொழுது தான் நல்ல செல்லவளத்தோடு அவர் வாழமுடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இரவில் நீங்கள் தூங்குவதற்க்கு முன்பு நன்றாக முகத்தை தண்ணீரில் அலம்பிட்டு தூங்கவேண்டும். காலை மாலை குளியல் செய்வது நல்லது. தண்ணீர் பஞ்சத்தில் ஒரு நேரம் தான் குளிக்கமுடியுது என்றால் பரவாயி்ல்லை. இரவில் தூங்குவதற்க்கு முன்பு முகத்தை அலம்பிவிட்டு தூங்குவது நல்லது. தீயசக்திகள் நம்மை நெருங்காது. லட்சுமி நம்மோடு இருக்கும். 

முடிந்தவரை இரவில் சீக்கிரமாக தூங்குவது நல்லது அப்பொழுது தான் விடியற்காலையில் நீங்கள் எழுந்திருக்கமுடியும். விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்தாலே லட்சுமி நிரந்திரமாக உங்களிடம் தங்கிவிடும். இன்றைய நாகரீக உலகத்தில் இரவில் நீண்டநேரம் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை இரவில் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட நேரம் இரவில் விழித்துக்கொண்டு இருப்பது மறுநாள் உங்களால் விடியற்காலையில் எழுவது கடினமாகிவிடும். 

இன்று தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் அதிகமாக இருக்கிறது. முதல் நாள் இரவு மது அருந்திவிட்டு மறுநாள் பகலில் நல்ல தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பழக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களின் உடலும் கெட்டு உங்களின் பொருளாதாரமும் கெட்டுவிடும். 

உங்களின் பொருளாதாரம் உயர்வதற்க்கு லட்சுமி உங்களை நோக்கி விரும்பிவரவேண்டும் அதற்கு பிரம்மமுகூர்த்ததில் எழும்பொழுது உங்களை நோக்கி வரும். லட்சுமி உங்களிடம் வாசம் செய்யும்பொழுது நீங்கள் பொருளாதார பிரச்சினையில் சிக்கிக்கொள்ளமாட்டீர்கள். ஒரு பத்து நாட்கள் செய்து பாருங்கள். நல்ல பலனை நீங்கள் அனுபவிக்கலாம். அனைத்தும் அனுபவத்தில் செய்து பார்த்துவிட்டு தான் சொல்லுகிறேன். பரிசோதனை செய்து பாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, May 22, 2013

திருவண்ணாமலை கிரிவலம்



வணக்கம் நண்பர்களே !
                     வரும் 24/05/2013 அன்று பெளர்ணமி கிரிவலம். அன்று வைகாசி விசாகமும் வருகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செல்லுகிறேன்.அன்று இரவு 8 மணியளவில் கிரிவலம் செல்ல திட்டமிட்டு உள்ளேன். நீங்களும் கிரிவலம் செல்லுவதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். அனைவரும் சேர்ந்து செல்லலாம். 

தொடர்புக்கு 9551155800.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

மாந்திக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                     ஜாதகத்தில் மாந்தி அமர்ந்து அந்த கிரகம் தோஷத்தை ஏற்படுத்துமானால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மாந்தியின் நிலையை தமிழ்நாட்டு சோதிடத்தில் அந்தளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. கேரளாவில் இதனை மிக முக்கியமாக சோதிடத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். மாந்தி ஆவி உலகத்திற்க்கு காரகம் வகிப்பவர் ஆவார். கேரளாவில் மாந்தீரிகத்திற்க்கு அதிகமாக ஆவியை பயன்படுத்தி மாந்தீரிகம் செய்வார்கள். அதனால் கேரளாவின் சோதிடத்தில்  மாந்தியின் பங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மாந்தீரிகம் அந்தளவு கிடையாது. அதனால் மாந்தியையும் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது.

மாந்திக்கு எப்படி பரிகாரம் செய்வது என்பதை பார்க்கலாம்

மாந்திக்கு பரிகாரம் செய்வதற்க்கு உங்களின் ஊரில் இருக்கும் சிவன் கோவில் செல்லுங்கள். நீங்கள் செல்லும நேரம் காலண்டரில் குளிகை நேரத்தை பார்த்துவிட்டு அந்த நேரத்தில் செல்லுங்கள்.

சிவன் கோவில் சென்று விநாயகரை வணங்கிவிட்டு சிவன் கோவிலை 18 முறை வலம் வாருங்கள். 18 முறை வலம் வந்த பிறகு சிவனை தரிசனம் செய்து உங்களின் பேரில் அர்ச்சனை செய்துக்கொள்ளுங்கள். பிறகு அம்பாளையும் தரிசனம் செய்த விட்டு செய்யுங்கள். நவக்கிரகத்திற்க்கு சென்று சனிபகவானுக்கு தீபம் ஏற்றவிட்டு நேராக உங்களின் வீட்டிற்க்கு செல்லுங்கள். மாந்தியால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.

மாந்தி என்பது சனியின் புதல்வன் ஆவார் அதனால் சனிக்கு செய்தாலே போதும். மாந்திக்கு என்று தனியாக வழிபாடு கிடையாது. திருநாரையூர் சௌந்தரேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார் அவரை வணங்கினால் நல்லது. இந்த கோவிலைப்பற்றி தகவலை நமக்கு தந்த மதுரை சேர்ந்த கண்ணன் அவர்களுக்கு நன்றி.

சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Tuesday, May 21, 2013

தசா : பகுதி 2



வணக்கம் நண்பர்களே!
                     தசாபலனைப்பற்றி இப்பதிவில் கொஞ்சம் நாம் பார்க்கலாம். பனிரெண்டு வீடுகளிலும் தசா நடைபெறும்பொழுது எவ்வாறான பலனை தரும் என்பதை பார்க்கபோகிறோம் அனைத்தும் பொதுபலன் மட்டுமே. ஒவ்வொரு ராசிக்கும் பலன் மாறுப்படும். 

ஒருவருக்கு லக்கினாதிபதி தசா நடைபெற்றால் அவருக்கு நல்ல பலத்தையும் அதிகமான தனத்தையும். உடல் நலத்தையும் தரும். 

ஒருவருக்கு இரண்டாவது உடையவனுடைய தசா நடைபெற்றால் மரணத்தை தரும் அல்லது மரணத்திற்க்கு ஒப்பான பலனை தரும். மரணம் ஏற்படுவது போல் கண்டம் ஏற்படும். ஒரு சிலருக்கு தனவரவையும் தரும். அதிக தனவரவை தரும்பொழுது எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. 

ஒருவருக்கு மூன்றாவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெறும்பொழுது அதிகமான கஷ்டத்தை தரும். பக்கத்து வீட்டில் உள்ளவர்களோடு பிரச்சினையை கொடுக்கும். அடிக்கடி பயணம் சென்று வருவது நடைபெறும்.

ஒருவரின் ஜாதகத்தில் நான்காவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் சுகவாழ்க்கையை தரும். புதிய வீடு கட்டுவதற்க்கு வழி பிறக்கும். வண்டி வாகனங்களை தரும். தாய் வழியில் உதவிகள் வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டிற்க்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் நல்ல அறிவை தரும். பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடையவர்களை அடையாளம் தெரியவரும். பணம் வரும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் ஆறுக்குடையனுடைய தசா நடைபெற்றால் கடன் ஏற்படும். வியாதி தொல்லை தரும். விரோதிகள் ஏற்படுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் ஏழுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் திருமண யோகத்தை தரும் அதே நேரத்தில் சோகமான வாழ்க்கையும் தரும். மனதில் கஷ்டத்தை தந்துவிடும்.

ஒருவரின் ஜாகதத்தில் எட்டுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் மரணம் ஏற்படும் அல்லது மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் ஏற்படும். அவமானம் வந்து சேரும். முன்னோர்களின் உயில் வழியாக சொத்து வரும்.

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதுக்குடையவனுடைய தசா நடைபெற்றால் நல்ல காரியம் செய்ய மனதில் தோன்றும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வாழ்கின்ற சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் பத்துக்குடையவனுடைய தசா நடைபெற்றால் வேலை வாய்ப்பை தரும். செய்கின்ற தொழிலில் சிறக்கமுடியும். பெற்றோர்களுக்கு கர்மம் செய்ய வைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் பதினோராவது வீட்டுக்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் லாபத்தை தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் வழியில் நல்ல உறவு ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டுக்கு உடையவனுடைய தசா நடைபெற்றால் வியாதி மற்றும் பொருள்நாசம் ஏற்படும். ஒரு சிலருக்கு போகவாழ்க்கையில் ஈடுபடசெய்வார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

ராகுக்கு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே!
                    ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு தசா மற்றும் ராகு புத்தி நடைபெறும் காலத்தில் குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படும். ஜாதகத்தில் எந்த இடத்தில் ராகு அமர்ந்திருக்கிறதோ அந்த இடத்திற்க்கு தகுந்தார் போல் பிரச்சினையை கொடுக்கும். ராகு வந்தாலே அதிகமாக பாலியல் தொடர்பான பிரச்சினை தலைதூக்கும் அல்லது மாந்தீரீக பாதிப்பு ஏற்படும்.

ராகுவின் பிடியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள காளி தெய்வத்தை வணங்கவேண்டும். காளி தெய்வம் இந்த மாதிரி பாதிப்புக்களில் இருந்து உங்களை பாதுக் காக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் காளியை வணங்கலாம். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் காளி தெய்வம் இருக்கும். காளி தெய்வம் கற்சிலையாக இருந்தால் நல்லது. இப்பொழுது காளி தெய்வத்தை சிமெண்ட் கொண்டு செய்கிறார்கள். கற்சிலைக்கு இருக்கும் சக்தி சிமெண்ட் கொண்டு செய்யும் தெய்வத்தின் சிலைக்கு இருப்பதில்லை.

ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் அவர் காளியை வணங்கவேண்டும். ஒருவர் காளி் தெய்வத்திற்க்கு தன்னை அர்ப்பணித்தால் அவரை அந்த காளி மிக உயர்ந்த இடத்திற்க்கு கொண்டுச்செல்லும். ராகு தசா புத்தி நடக்கும்பொழுது நீங்கள் ஒரு வாரம் கூட விடாமல் காளியை வணங்கி வர வேண்டும். ராகு காளியை வணங்கவிடாமல் பல தடைகளை ஏற்படுத்துவார்.வரும் தடைகளை மீறி நீங்கள் வணங்கி வரும்பொழுது ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.

ராகுவிற்க்கு பரிகாரமாக பாம்பு சிலைக்கு அபிஷேகம் செய்ய சொல்லுவார்கள். அப்படியும் செய்யலாம் ஆனால் உங்களின் கைகளால் அபிஷேகம் செய்யுங்கள் அப்பொழுது மட்டும் உங்களின் தோஷம் நீங்கும். அபிஷேகம் நல்லமுறையில் செய்ய வேண்டும். சில பேர் கடமைக்கு என்று செய்வார்கள் அப்படி செய்யகூடாது மனதிற்க்கு நல்ல விருப்பம் பட்டு நிறைவாக செய்யவேண்டும்.

அபிஷேகம் செய்யும் பொழுது நல்லெண்ணையை பயன்படுத்துங்கள். வாசனை திரவியங்கள் அதிகளவு பயன்படுத்தலாம். அபிஷேகம் முடிந்து நல்ல சாம்பிராணி மற்றும் மணம் நிறைந்த ஊதுவத்தியை பயன்படுத்துங்கள்.

அபிஷேகம் செய்து கடைசியில் தீபராதனை காண்பிக்கும் பொழுது உங்களின் ஜாதகத்தை தட்டில் வைத்து தீபராதனையை காட்டவேண்டும். உங்களின் ஜாதகம் முதன் முதலில் எழுதப்பட்ட ஜாதகமாக இருந்தால் நல்லது. இவ்வாறு செய்து ராகு தசா ராகு புத்தி நடப்பவர்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, May 20, 2013

அம்மனின் அருள்



வணக்கம் நண்பர்களே!
                    எனது ஊரில் எனக்கு என்ன வேலை என்றால் காலையில் எழுந்தவுடன் நூலகம் செல்வது அங்கு சென்று ஒரு புத்தகம் விடமால் படிப்பது இது தான் வேலை. எனது அப்பா என்னை பார்த்துவிட்டு இவனை இப்படியே விட்டுவிட்டால் சரிபட்டு வரமாட்டான் என்று ஒரு உறவினர் சென்னையில் தொழில் செய்துக்கொண்டு இருக்கிறார் அவரிடம் என்னை அனுப்பினர். அடையாரில் அலுவலகம் இருந்தது அவர் சென்னையில் பல தொழில்கள் செய்து வருகிறார். 

அடையாரில் மட்டும் நான்கு இடத்தில் சொந்தமாக இடம் வைத்திருந்தார். சென்னையில் கட்டிடதொழிலும் செய்து வந்தார். அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்தேன். அடையாரில் வசிக்க ஆரம்பித்தது அப்பொழுது இருந்து தான். நான் அங்கு வேலை பார்க்கும்பொழுது அந்த கம்பெனியில் மிககுறைந்த சம்பளம் வாங்கியது நான் ஒருவனாக இருக்கமுடியும். ஏன குறைவாக சம்பளம் கொடுத்தார் என்றால் ஊரில் இருந்து வந்திருக்கிறான் ஒன்றும் தெரியாது என்று அவரின் நரித்தனத்தை பயன்படுத்தினார். சரி நாமும் இந்த தொழிலில் புதியவன் தொழிலை கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்துவிட்டேன். 

சரியாக ஒரு வருடகாலம் அதில் இருக்கும்பொழுது அனைத்தையும் கற்றுவிட்டேன். இவர் சம்பளத்தை மட்டும் ஏற்றவில்லை அப்பொழுது ஒரு நபர் வெளியில் எனக்கு பழகப்பட்டார். அந்த நபரிடம் நான் பழகியதை தெரிந்து இந்த தொழில் அதிபர் என்னை கம்பெனியில் இருந்து வெளியில் போகச்சொன்னார். நானும் வெளியில் வந்து சிறிய அளவில் ஒரு கம்பெனி தொடங்கலாம் என்று எண்ணி தெரிந்த நபரிடம் உதவி கேட்டேன் அவரும் உதவி செய்கிறேன் என்று சொன்னார்.

அப்பாடா சென்னை வந்து ஒரு வருடத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கபோகிறோம் என்று எண்ணி மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுது தான் விதி விளையாட ஆரம்பித்தது. நான் கம்பெனி ஆரம்பிக்கிறேன் என்பதை அறிந்துக்கொண்ட அந்த தொழில்அதிபர் என்னை விடக்கூடாது என்று பல தொந்தரவுகளை கொடுக்க ஆரம்பித்தார். பிரச்சினையை என்னால் எதிர்க்கொள்ளமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

அவரிடம் பல கோடி இருக்கிறது அவரை எதிர்ப்பது என்பது என்னால் முடியாதா காரியம். என்னிடம் ஒரு பைசா கிடையாது அனைத்தும் அடுத்தவர்களின் உதவி நோக்கி இருப்பவன் எப்படி மிகப்பெரிய சாம்ராஜத்தை எதிர்ப்பது. ஒரு பணக்காரனை எதிர்ப்பது என்பது நாமே சுவற்றில் போய் மோதிக்கொள்வதற்க்கு சமம். பணத்தை வைத்துக்கொண்டு நம்மை இந்த பூமியில் உயிரோடு வைக்கமாட்டார்கள். 

பல வழிகளிலும் தொந்தரவு கொடுத்தவர்கள் கடைசியில் என்ன செய்தார் என்றால் அடையார் காவல் துறையினர் மூலம் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணினேன். சரி நமது திட்டத்தை கைவிட்டுவிட்டேன். என்னை மிரட்டினாலும் பரவாயில்லை என்னுடைய ஊரில் உள்ள எனது அம்மா அப்பாவையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். 

அப்பொழுது அம்மாவும் அப்பாவும் மிகுந்த மனகஷ்டத்தை அனுபவித்தார்கள். அன்று இரவு ஒரு நிகழ்வு நடந்தது அது என்ன என்றால் எனது அம்மாவின் கனவில் அம்மன் தோன்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது.  

இனி அம்மனின் திருவிளையாடல்

மறுநாள் முதல் ஒரு பிரச்சினையும் வரவில்லை எந்த ஒரு ரூபத்திலும் பிரச்சினை வரவில்லை. நான் கம்பெனி ஆரம்பிக்க வேண்டாம் என்று விட்டு விட்டு கம்யூட்டர் தொழிலுக்கு வந்துவிட்டேன். அடுத்த மாதத்திலிருந்து என்னை மிரட்டிய தொழில் அதிபர் வீழ்ச்சி நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். அனைத்தும் போனது. அவர்கள் என்ன என்னவோ செய்து பார்த்தார். கேரளாவில் பார்க்காத மாந்தீரிகவாதி கிடையாது. எது செய்தும்  நிற்க முடியவில்லை. கடைசியில் பல ஆன்மீகவாதிகளின் ஆலோசனைப்படி எனது சொந்த ஊரில் இருக்கும்  ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு பல்வேறுப்பட்ட பூஜை காணிக்கை எல்லாம் செய்தார். ஒரு படியும் முன்னேற்றம் என்பது கிடையாது. அவரும் எனது உறவினர் மற்றும் எனது பக்கத்து ஊர்க்காரர் தான். 

சென்னையில் நூறு கோடி ரூபாய்க்கு சொத்துமதிப்பை கொண்டவர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். வாடகை கொடுக்கமுடியவில்லை. ஒரு மனிதன் ஏழையாக இருந்து பணக்காரனாக போகலாம் ஆனால் பணக்காரன் ஏழையாக மாறினான் என்றால் அது போல் ஒரு கொடுமை இந்த உலகத்தில் இருக்கமுடியாது.அப்படி ஒரு கஷ்டத்தை அனுபவித்தார். அந்த தொழில் அதிபரின் மகனும் அயல்நாட்டில் வேலை பார்த்து வந்தார் அவரும் உருப்படவில்லை. அந்த வீட்டில் உள்ள அனைவரும் இன்று மிகவும் கேவலமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இன்றும் அவரை நான் பார்த்தது இல்லை. நான் ஒரு நாள் அம்மனை தியானத்தில் அமர்ந்து கேட்டேன். அதற்கு அம்மன் என்னுடைய பக்தனுக்கு ஒருவன் தீங்கு செய்தாலோ அவனை இழிப்படுத்தினாலோ ஏமாற்றப்பட்டாலோ அவன் யாராக இருந்தாலும் நான் விட்டுவைப்பதில்லை என்றது. நான் அவனை உன் கண்முன்னே கொண்டு வந்த நிற்கவைப்பேன் அப்பொழுது அவனின் நிலையை நீ பார் என்றது. எனது மனதிற்க்கு கஷ்டமாக தான் இருந்தது. அந்த குடும்பத்தினரின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்பது தெரிந்த ஒன்று தான்.

என்ன செய்வது ஒன்றும் முடியாத காரியம். ஒருவன் பணத்தை சம்பாதித்தால் அதனை வைத்துக்கொண்டு வாழவேண்டும் அதனை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது. நான் அப்பொழுது அந்தளவுக்கு பக்தி கிடையாது ஏதோ சாமி கும்பிடுவேன் ஆனால் எனது அம்மாவும் அப்பாவும் சிறந்த பக்திமான்கள். அம்மனுக்கு அனைத்தையும் கொடுத்தவர்கள். அம்மன் மேல் பாசம் என்பதை விட அப்படி ஒரு வெறி என்று தான் சொல்லவேண்டும். அவர்களின் பக்தி தான் நான் ஏதோ ஆன்மிகத்தில் வளர்ந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டும்.

ஒரு பணக்காரனின் பக்திவிட ஒரு ஏழையின் பக்தி அதிக வீரியம் கொண்டது. பணக்காரன் பக்தி சந்தேகத்துடன் இருக்கும் ஆனால் ஏழையின் பக்தி முழுமையானது அதில் ஒரு சந்தேகமும் இருக்காது. ஏழையின் கூப்பிட்ட குரலுக்கு ஒடி வருவாள் அம்மன். தன் கண்ணை இமை காப்பது போல் தன்னை வணங்கும் பக்தர்களை காப்பாள். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். 

இந்த நிகழ்ச்சியை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனக்கு ஒருவன் தீங்கு செய்ததால் அவனுக்கு தீங்கு நடந்ததால் நான் மகிழ்ச்சி கொண்டேன் என்று சொல்லவி்ல்லை ஒரு அம்மனின் பக்தனுக்கு தீங்கு செய்தால் அந்த அம்மன் அதனை பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. அந்த பக்தனை எப்படி காப்பாற்றுகிறது என்பதை சொல்லுவதற்க்காக மட்டுமே இந்த பதிவு. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் பாலாயிக்குடிக்காடு என்ற தெருவில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் எனது குலதெய்வம். அந்த தெய்வம் தான் உங்களுக்கும் இந்த தளம்வழியாக அருளை வழங்கிக்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதற்க்கும் உங்களை ஆன்மிகத்தில் உயர்த்துவதற்க்கும் இந்த அம்மன் உங்களுககு அருளை தருகிறது.

இந்த அம்மனின் கோவிலில் சிலை வைக்கவி்ல்லை புற்று தான் அம்மனாக இங்கு இருக்கிறது. ஒரு நாள் என்னிடம் இந்த நிலம் முழுவதும் பூமிக்கு அடியில் அனைத்தும் புற்றுவாகவே இருக்கிறேன் என்றது. நிறைய விசயங்கள் என்னிடம் சொல்லியுள்ளது அதனைப்பற்றி அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த அம்மனுக்கு பலவித மந்திரங்களை சொல்லி உரு ஏற்றுவதற்க்கென்றே பல பேர் பல நூறு ஆண்டுகளாக இங்கே செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பேர்பட்ட ஆற்றலை கொண்டது அம்மன். அந்த சக்தியை அந்த மண்ணில் நீங்கள் கால் வைக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றும். நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் இந்த பிளாக்கை படிக்கும்பொழுதே தெரியும் அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் இந்த அம்மனின் பூமியில் அடிவைக்கவேண்டும்.

இன்று ஸ்ரீ அங்காளபரமேஸ்வரிக்கு குலதெய்வ பூஜை. நீங்கள் ஒரு நிமிடம் இந்த அம்மனை இன்று நினையுங்கள் அப்பொழுது அம்மனின் அருளை பாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, May 19, 2013

வியாபார நண்பர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                    வியாபார நண்பர்களுக்கு ஆலோசனை என்ற பதிவில் வியாபார செய்பவர்களுக்கு என்று ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தேன். அதன் மூலம் பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு அவர்களின் வியாபாரத்தை நல்ல முறையில் மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். 

இப்பொழுது இதனை பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் நமது பிளாக்கில் இருந்து வருவதால் அவர்களுக்கு பதிவு மூலமாக ஒரு சில கருத்துக்களை சொல்லுகிறேன். உங்களின் வியாபாரத்தை படிப்படியாக மட்டுமே உயர்த்தமுடியும். உடனடியாக நீங்கள் உயர முடியாது. உங்களின் கிரக நிலை தடைசெய்யும். உங்களை ஒரு நிலைக்கு உயர்த்திய பிறகு உங்களுக்கு என்று ஒரு சில பூஜைகளை உங்களை வைத்து நாங்கள் செய்வோம். அதன் பிறகு தான் நீங்கள் நினைக்கும் இடத்திற்க்கு உங்களால் செல்ல முடியும். 

இந்த பூஜைகளுக்கு செய்யும் செலவு எல்லாம் உங்களின் வியாபாரத்தில் சம்பாதித்து அந்த பணத்தின் வழியாக தான் செய்வோம். அதனால் முதல் நிலையில் படிப்படியாக உயருங்கள் அதன் பிறகு மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம். உங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை உங்களை படிப்படியாக உயர்த்தும்பொழுது மட்டுமே நீங்கள் என்னை மறக்கமாட்டீர்கள். உடனடியாக உயர்த்தினால் அடுத்த நிமிடமே என்னை மறந்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.

வடநாட்டு சேட்டுகளுக்கு மட்டுமே செய்து வந்ததை உங்களுக்கு செய்து தருகிறேன். சேட்டுகள் வியாபாரம் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அவர்களுக்கு என்னை போல் இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். அவர்கள் எங்களுக்கு கொடுக்கும் தொகையும் அதிகம் எந்த வித பிரச்சினையும் எங்களுக்கு கொடுக்கமாட்டார்கள். மாதம் முடிந்தால் பணம் எங்களுக்கு தேடிவரும்.

நமது மதத்தில் நிறைய விசயங்கள் வியாபாரத்திற்க்கு என்று உள்ளது அதனை உங்களுக்கு பயன்படும் விதமாக தருகிறோம். பல பேர் வியாபாரத்தில் ஆன்மிகவாதிகளிடம் ஏமாந்து போய் உள்ளார்கள். நேற்று என்னிடம் பிரான்சில் இருந்து பேசிய நண்பர் ஒருவர் கூட என்னிடம் சொன்னார். இங்கு வந்து மந்திரம் செய்து தருகிறேன். வியாபாரத்தை முன்னேற்றி தருகிறேன் என்று சொல்லி இந்தியாவில் இருந்து இங்கு வந்து ஏமாற்றிஉள்ளார்கள் என்று சொன்னார்.

நாம் அப்படி செய்வதில்லை நீங்கள் பணத்தை ஒரு போதும் முன்னாடியே தரபோவதில்லை நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற பொழுது மட்டுமே நீங்கள் எனக்கு பணம் தரபோகிறீர்கள் அதனால் உங்களுக்கு பலனை கொடுத்துவிட்டு பிறகு பணத்தை பெற்றுக்கொள்கிறேன். இந்த வழியில் நீங்கள் நினைக்காத முன்னேற்றத்தை அடையமுடியும். சரியாக பயன்படுத்துங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, May 18, 2013

மந்திரபயிற்சி செய்பவர்களுக்காக


வணக்கம் நண்பர்களே !
                    மந்திர பயிற்சி செய்பவர்கள் அடிக்கடி என்னை தொடர்புக்கொண்டு பல சந்தேகங்களை கேட்டு  வருகிறார்கள். அவர்கள் கேள்வி கேட்கும் பொழுது ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரிகிறது. இது என்ன என்றால் பயம். எதையாவது செய்தால் பிரச்சினை வருமோ என்று தான் அவர்களின் பயம் இருக்கிறது. ஆன்மீகவாதிகள் நன்றாக பயம் கொள்ள செய்திருக்கிறார்கள்.

தேவையற்ற பயம்கொள்ள தேவையில்லை. நீங்கள் கடவுள் தானே கும்பிடுகிறீர்கள் அவரை கும்பிடும்பொழுது எப்படி உங்களை தண்டிப்பார். நான் உங்களுக்கு எந்தவிதத்திலும் கட்டுபாடு என்பதை நான் கொடுக்கவில்லை அதனால் உங்களுக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படி இருந்துக்கொள்ளுங்கள். ஆன்மிகம் என்றாலே ஏதோ கட்டுபாடு கொண்டது என்பதை நாம் முறியடித்து தான் இந்த பயிற்சியை செய்துக்கொண்டு இருக்கிறோம். அனைவரும் இதனை செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்களை செய்ய சொல்லுகிறேன்.

பல நண்பர்கள் நான் ஒரு தவறை செய்திருக்கிறேன் நான் இதனை செய்யலாமா என்று கேட்கிறார்கள். உலகத்தில் மனிதனாக பிறந்தால் தவறு செய்யாமல் இருக்கமுடியாது. அது குற்றம் என்று உங்களின் மனதில் நினைத்துக்கொண்டிருக்காமல் இந்த பயிற்சியை செய்யலாம். என்னுடைய நண்பர்கள் பலபேர் நிறைய தவறு செய்திருக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பயிற்சி செய்து நல்ல நிலையில் இன்று இருக்கிறார்கள். என்னிடம் நான் ஆன்மிகவாதி என்று பேசிய நண்பர்களை இதனை செய்துக்கொடுங்கள் என்று சொன்னால் ஒன்றையும் செய்வதில்லை. சும்மா ஊர் சுற்றி திரிந்துக்கொண்டுருப்பவர்களை இந்த பயிற்சியை செய்யுங்கள் என்று சொன்னேன் இவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

நமது மதத்தில் மட்டும் உள்ள மிகப்பெரிய விசயம் என்ன என்றால் அனைத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்திருப்பார்கள். பிற மதங்களில் காமம் என்றால் அரக்கன் என்று சொல்லுவார்கள் அந்த காமத்திலேயே கடவுளை அடையமுடியும் என்பதையும் நமது மதத்தில் வைத்திருக்கிறார்கள். புகைபிடிப்பது கூட பிராணாயாமம் தான் ஆனால் அதில் உள்ள நஞ்சு உள்ளே செல்வதால் உடலுக்கு தீங்கு விளைக்கிறது.

நமது மதத்தில் அனைத்தும் கடவுள் செயல்போல் காண்பார்கள். நீஙகள் செய்கின்ற வேலை நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் கடவுள் தன்மையோடு செய்யும்பொழுது உங்களுக்குள்ளே இருக்கும் கடவுள் தன்மையை அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் மனதிற்க்குள் குற்ற உணர்ச்சியோடு அனைத்தையும் பார்ப்பதை தவிர்த்துவிட்டு உடனே நீங்கள் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் கலந்து இருக்கிறது அதனை வெளிக்கொண்டுவருவது கடினமாக இருக்கும். மதுவில் கூட ஆன்மீகத்தில் உச்சத்தை அடையமுடியும் ஆனால் அது அனைவருக்கும் சரிப்பட்டுவராது என்பதால் ஒரு சில வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள் அந்த வழிமுறைகளை எளிய வழியில் செய்கிறோம்.

நீங்கள் தவறு செய்துவிட்டேன் என்ற குற்றஉணர்ச்சி எல்லாம் அடையதேவையில்லை ஏன் என்றால் ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு சந்நியாசிகளாக திரிபவர்கள் எல்லாம் செய்கின்ற தவறைவிட நீங்கள் செய்யும் தவறு மிகமிக குறைவான ஒன்று. சந்நியாசிகள் நமக்கு தான் குழந்தைகளும் கிடையாது சொந்தமும் கிடையாது நாம் தவறு செய்தால் யாரையும் அந்த பாவம் கேட்காது என்று சொல்லிக்கொண்டு ஏகாப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.

நீங்கள் இல்லறவாழ்க்கையில் இருப்பதால் நாம் தவறு செய்தால் நமது குழந்தைகளுக்கு பாவம் போய்சேரும் என்று நினைத்துக்கொண்டு ஒரு தவறும் செய்வதில்லை. உண்மையை சொல்ல போனால் நீங்கள் தான் வணங்குவதற்க்குரியவர்கள் என்னைப்பொருத்தவரை நீங்கள் தான் கடவுளுக்கு சமமானவர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.