வணக்கம்!
உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கிரகங்களின் வேலை என்பதை சோதிடம் அறிந்த அனைவரும் நன்கு அறிவார்கள். இதனை அறிந்தவன் அதனை கண்டுக்கொண்டு பெரியளவில் பாதிப்படையமாட்டான். பாதிப்படையாமல் இருப்பவனை ஆன்மீகவாதி என்று அழைக்கலாம்.
தற்பொழுது நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டம் அதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அதற்கு முன்பு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொன்றும் கிளம்பிக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் பல பிரச்சினைகள் கிளப்பிக்கொண்டே கிரகங்கள் சென்றுக்கொண்டு இருக்கும். அதனுள் நீங்கள் சென்றுவிட்டால் இழப்பது உங்களின் சக்தியாக தான் இருக்கும். அதாவது நம்முடைய அனைத்து சக்தியும் வீணாக செல்வதற்க்கு கிரகங்கள் செய்யும் விளையாட்டு நாட்டில் நடைபெறும் பிரச்சினைகள்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்லது ஆதரவனாவன் என்று சொல்லவில்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருந்திருக்கும். பணப்பிரச்சினையை பேசி பேசி நமது உடலில் உள்ள சக்தி முழுவதும் சென்று இருக்கும். அதன் பிறகு ஒரு நிகழ்வைப்பற்றி பேசி பேசி சக்தி சென்று இருக்கும். தொடர்ந்து சக்தியை இழக்கும் நிகழ்வுகள் வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் சக்தியை இழந்த மனிதனாக இருப்பீர்கள்.
தொடர்ந்து சக்தியை இழந்தால் நீங்கள் ஒரு நடைபிணம் போல் மாறிவிடுவீர்கள். நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் உங்களால் அந்த சக்தியை எடுக்கும் ஆற்றலை இழந்துவிடுவீர்கள் என்பது தான் உண்மை.
நீங்கள் நினைக்கலாம் நீங்கள் ஒரு சுயநலவாதி என்று சொல்லலாம். தனிமனிதன் மேம்பாட்டிற்க்கு என்ன வழி என்பதை தான் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஆன்மீகம் மாயை என்று சொல்லிவிடும். அதனை கண்டு நீ வெகுண்டு எழுந்தால் உனது சக்தி போய்விடும் அதனை விட்டுவிடு என்று ஆன்மீகம் போதிக்கும்.
மாயையில் சிக்காமல் உங்களின் சக்தியை மேம்படுத்த என்ன வழி என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு சென்றால் குறைந்தது ஒரு வருடத்தில் நீங்கள் மிகப்பெரிய சக்தியான மனிதனாக மாறிவிடுவீர்கள். அப்புறம் உங்களைப்பற்றி பேசியே ஒரு மாயை உருவாகும்.
உலகத்தில் எது நடந்தாலும் சரி அதனை பார்த்து வெகுண்டு எழுவது எல்லாம் வேண்டாம். சும்மா அதனை பார்த்துவிட்டு சென்றுவிடுங்கள். உங்களின் உள்ளே இருக்கும் ஆத்மா பாதிக்காது.
சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். உங்களின் கோரிக்கை மற்றும் வாட்ஸ்அப் நம்பரையும் இணைக்கவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு