Followers

Monday, June 30, 2014

பித்ரு தோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    பித்ரு தோஷத்தைப்பற்றி நான் நிறைய சொல்லிருந்தாலும் மறுபடியும் சொல்லவேண்டும் என்று நேற்று நினைத்து இருந்தேன். காலையில் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இன்று எப்படியும் இதனைப்பற்றி எழுதிவிடவேண்டும் முடிவுடன் உழவன் எக்ஸ்பிரஸில் அமர்ந்து எழுதிக்கொண்டுள்ளேன்.

ஒருவருக்கு இருக்கின்ற தோஷத்தில் மிகவும் கொடியது எது என்றால் அது பித்ருதோஷம் என்று அடிதது சொல்லலாம். அந்தளவுக்கு கொடியது பித்ரு தோஷம். இது முன்ஜென்மத்தால் ஏற்பட்டது என்று சொல்லுவதும் உண்மையாக இருக்கின்றது.

பித்ருதோஷத்தைப் பொறுத்தவரை ஒருவர் எந்த செயலை தொடங்கினாலும் அதில் அதிகமாக தடையை ஏற்படுத்தி அந்த காரியத்தை நடத்தவிடாமல் செய்வதில் பித்ருதோஷத்தை அடித்துக்கொள்ளமுடியாது.

ஒரு செயலை நடத்தவிடாமல் செய்வதற்க்கு காரணம் அதன் பின்புலத்தில் ஒரு ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா இவரை பின் தொடர்ந்து வருவதால் அனைத்து காரியத்தையும் தடைசெய்கிறது. இதற்கு நான் இராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்ய சொல்லி இருந்தேன். 

இதற்கு நிரந்தர தீர்வு என்றால் அந்த ஆத்மாவை நாம் எடுத்துவிடுவது மட்டுமே. ஆத்மாவை கையாள தெரிந்தவர்கள் மட்டுமே இதனை செய்யமுடியும். ஆத்மாவை எடுத்து அதற்கு சாந்தி பரிகாரத்தை செய்வார்கள். அவர்களை தொடர்புக்கொண்டு எனக்கு இப்படி பிரச்சினை இருக்கிறது இதனை செய்துக்கொடுங்கள் என்று சொன்னால் அவர்கள் செய்து தருவார்கள்.

நான் எனது தொழில் வாடிக்கையாளருக்கு செய்துகொடுப்பது வழக்கம். ஒரு சில ஜாதககதம்ப நண்பர்களுக்கு செய்து கொடுத்து இருக்கிறேன். இதில் செலவு எதுவும் இல்லை. ஆத்மாவை எடுப்பது எனக்கு எளிதான காரியம். எனது வருமானத்திற்க்காக நிறைய பணம் வாங்குவது வழக்கம். 

ஒரு சிலர் என்னிடம் வந்து எனக்கு இதனை எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டு செய்துக்கொடுத்தேன். எனக்கு நல்லது நடந்த பிறகு பணம் தருகிறேன் என்று சொன்னார்கள். பல பேர் அப்படியே ஒடிவிட்டார்கள். அப்புறம் அந்த ஆத்மாவை நான் என்ன செய்யமுடியும் திரும்பி அவர்களிடம் அனுப்பு தான் முடியும். 

இந்த பித்ருதோஷத்தை எடுக்காமல் எந்த ஒரு காரியத்தையும் உங்களால் செய்யவே முடியாது. பொதுவாக இந்த தோஷம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெஜாரிட்டியாக ஒரு சாதி இருக்கும் அல்லவா. அந்த சாதி மக்களுக்கு இது அதிகமாக இருக்கின்றது. இவர்கள் சும்மா இருப்பதில்லை எங்கு கீழ் சாதியில் மக்கள் இருக்கின்றார்களோ அவர்களை இவர்கள் தாக்குவது. அதனால் தான் இவர்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது. 

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற சாதியில் உள்ளவர்களுக்கு இந்த பித்ரு தோஷம் அதிகமாக இருக்கும். நான் பார்த்தவரையில் இவர்களின் ஜாதங்களில் முக்கால்வாசி இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்ட இருக்கின்றது.

சாதியை பற்றி சொன்னதால் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். உண்மையான விசயம் இது நீங்கள் வேண்டுமானால் சோதனை செய்து பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, June 29, 2014

தனிமை மற்றும் பிரிவு


வணக்கம் நண்பர்களே!
          ஒரு நபர் என்னிடம் சோதிடம் பார்க்க வந்தார். அவரின் மனைவிக்கு ஒரு சில நேரங்களில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்று சொன்னார். அவரிடம் என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவளாகவே ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறாள் அதனை பார்த்து நான் பயந்துவிட்டேன் என்றார். 

அவர் நான் மருத்துவரிடம் காண்பித்துவிட்டேன். மருத்துவரும் சிகிச்சை அளித்து வரும் நாளில் நன்றாக இருக்கிறாள். பிறகு ஒரு சில நாட்களில் மறுபடியும் பிரசசினை வருகிறது என்றார்.

நான் அவரிடம் நீங்கள் என்ன வேலை செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன் என்றார். மேலும் அவர் நான் வேலை விசயமாக வெளியில் சென்றுவிடுவேன். அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருவேன் என்றார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றா என்று கேட்டேன். அவர் ஆமாம் இருக்கின்றது என்று சொன்னார். ஒரு குழந்தை உள்ளது. அதுவும் பள்ளிக்கு சென்று வருகிறது என்றார்.

ஒரு நபர் தனிமையில் இருந்தால் இப்படிப்பட்ட பிரச்சினை வருவது இயற்கை. மருத்துவரீதியாக இதனை தான் சொல்லுவார்கள். நாம் சோதிட ரீதியாக எதையாவது சொன்னால் தானே நம்மை சோதிடர் என்று ஏற்றுக்கொள்வார். அவரின் மனைவியின் ஜாதகத்தை வாங்கி பார்த்தால் சந்திரன் நல்ல நிலைமையில் இருக்கிறது. மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் தான் உள்ளது. பிறகு எப்படி சொல்லுவது.

நாமாக எதையாவது கதைவிட்டால் நாம் மாட்டிக்கொள்ளும் காலம் இது. ஏன் என்றால் அலுவலகத்தில் பொழுது போகவில்லை என்றால் நம்ம மக்கள் சோதிட பிளாக்கை தேடிப்பிடித்து படித்து தெரிந்துக்கொள்கிறார்கள். நாம் கதை விட முடியாது. சோதிடர் கதை விடுகிறார் என்று சொல்லுவிடுவார். அந்த நேரத்தில் அம்மன கை கொடுத்தது.

அவரின் நட்சத்திரத்தை பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கு அது பிடிப்பட்டது. அந்த பெண்ணின் நட்சத்திரம் அஸ்வினி. பொதுவாக அஸ்வினி நட்சத்திரத்தை கொண்டவர்களுக்கு தனிமையை ஏற்படுத்திவிடும். பிரிவும் தனிமையும் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையாகவே கடவுள் கொடுத்த பிரச்சினை. இதனை சொல்லி அவரிடம் பணத்தை வாங்கினேன். பரிகாரம் என்ன என்று கேட்ககூடாது. அதனை வைத்து கொஞ்சம் காசு பார்க்கவேண்டும் அதன் பிறகு பரிகாரத்தை சொல்லிவிடுகிறேன்.

எத்தனை நாளைக்கு தான் கிரகத்தையே வைத்து சொல்லிக்கொண்டு இருப்பது கொஞ்சம் மாற்றி நட்சத்திரத்தை வைத்து சொன்னேன். 

தஞ்சாவூர் செல்லுகிறேன். நான் செல்லுவது நம்ம உழவன் மாட்டுவண்டி தான். முடிந்தால் இரயில் பயணங்களில் அனுபவத்தை எழுதுகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    சனியின் பிடியில் இருப்பவர்களை ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்ய சொல்லிருந்தேன். சனிப்பெயர்ச்சியும் வரபோகின்றது. கோச்சாரப்படி பலன்களை முன்கூட்டியே கொடுக்கும் ஆற்றல் சனிபகவானுக்கும் உண்டு.

சனியின் பாதிப்பு நமக்கு வரும் என்று நினைப்பவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செய்துவிட்டு ஒன்பது வாரம் சனிபகவானுக்கு தீபம் ஏற்றினால் போதுமானது. அவர்கள் சனியின் பாதிப்பில் இருந்து ஒரளவு விடுபடலாம்.

வெண்ணைக்காப்பு மட்டும் ஆஞ்சநேயருக்கு செய்துவிட்டு சனிக்கு தீபம் ஏற்றாமல் அவர் அவர்களின் ராசி அதிபதிக்கும் தீபம் ஏற்றி வந்தாலும் அவர்களின் ராசி அதிபதி சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார்.

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு ஏற்றச்சொல்லுகிறேன் என்றால் ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்று சொல்லுவார்கள். அதனால் அவரால் சனியின் கொடுரபிடியில் இருந்து நம்மை காப்பாற்றமுடியும்.

ஒரு சில ராசியினர் நேராக சனிக்கு தீபம் ஏற்றினால் அவர்களுக்கு பிரச்சனையை அதிகமாக கொடுத்துவிடுவார் என்பதால் ஆஞ்சநேயருக்கு செய்துவிட்டு சனிக்கு செய்ய சொல்லுவது வழக்கம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 29


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி நிறைய பதிவில் எழுதுவதற்க்கு முன்பு இதனைப்பற்றி நான் அதிகம் சிந்தித்தது கிடையாது ஆனால் இப்பொழுது இதற்கு நிறைய விசயங்கள் எனக்குள் வருகிறது. நான் பார்த்த பழைய சோதிட வாடிக்கையாளர்களை எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அவர்களின் ஜாதகங்கள் என்னிடம் இருந்தாலும் அதனை வெளியிடுவது தவறு என்பதால் உங்களுக்கு அதனை பதிவில் தரவில்லை ஆனால் எந்த கிரகங்கள் அவர்களை பலிவாங்கியது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

என்னிடம் ஒருவர் சோதிடம் பார்க்க வந்தார். அவருக்கு குரு மற்றும் சூரியன் இணைந்து விரைய வீட்டில் அமர்ந்து இருந்தது.அவர் ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வந்தார். அவரின் நேரம் என்று தான் சொல்லவேண்டும் அவர் வேலை செய்யும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை இவர் திருடிவிட்டார். பனிரெண்டாவது வீடு திருடையும் காட்டும் ஒரு இடம்.

இவரை திருடவும் வைத்தது. இவர் கையாடல் செய்து நகையை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு சில காலகட்டத்தில் இவர் மாட்டிக்கொண்டார். இவரை கைது செய்துவிட்டார்கள். அத்தோடு இவருக்கு வேலையும் போய்விட்டது.

குரு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து தசாவை நடத்தியதால் தங்கம் மேல் மோகம் ஏற்பட்டு தங்க நகையை திருடிவிட்டார். இவருக்கு அதில் மோகத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தில் மாட்டவைத்தது. சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் அல்லவா. குருவோடு சூரியன் சேர்ந்ததால் இவருக்கு இப்படி நடந்திருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மூலிகை தயாரிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்களிடம் மூலிகை எண்ணெய்யை பற்றி ஒரு பதிவில் சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு நமது நண்பர்கள் அனைவரும் அதனைப்பற்றி கேட்கிறார்கள். 

மூலிகை எண்ணெய் போல் லேகியத்தைப்பற்றி எனது தொழில் நண்பர்களிடம் சொல்லிருந்தேன். அதனை கேட்டு நமது நண்பர்கள் அதனையும் எனக்கு கொடுத்துவிடுங்கள் என்று கேட்கிறார்கள். 

தமிழ்நாட்டு மக்கள் ஏன் சித்தர்களை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இப்பொழுது தான் எனக்கே தெரிந்தது. ஏதாவது லேகியம் அல்லது எண்ணெய் வைத்து அந்த மேட்டர் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற எண்ணம். முதலில் நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள் அந்த சாப்பாடு இயற்கையான முறையில் விளைந்த பொருட்களை கொண்டு இருக்கட்டும்.

மூலிகை எண்ணெய் சித்தர்கள் வழியில் தயாரிக்கும் முறை. லேகியம் யுனானி முறையில் தயாரிக்கும் முறை. நான் தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உண்டு. அதற்க்காக ஒரு சாமியார் எனக்கு கற்று தந்த விசயம் தான் மேற்கண்ட விசயம். 

எனது சுயதேவைக்காக தயாரித்த விசயத்தை உங்களிடம் சொன்னதில் இருந்து எனக்கு அன்பு தொல்லையை தருகிறார்கள். வியாபார எண்ணங்கள் கிடையாது ஆனால் அதனை தயாரிக்க ஆகும் செலவு மற்றும் நேரம் அதிகம். பார்க்கலாம் நேரம் இருக்கும்பொழுது அதனை செய்யலாம்.

மூலிகை எண்ணெய் சுக்கிரனுக்கு ஒரு சிறந்த பரிகாரம். லேகியம் ஆண்களுக்கு மட்டும் பதிவை விரும்பி படிக்கும் நபர்களுக்கு உரியது. உடலின் சக்திக்கு உரியது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    
இராஜராஜேஸ்வரி 
                    சாகிற நாள் தெரிந்தால் வாழுகிற நாட்கள் நரகமாகிவிடுமே..!

வணக்கம் கேள்வி கேட்டதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாகிற நாள் சாதாரணமானவர்களுக்கு தெரிந்தால் பயம் வரும் ஆன்மீகவாதிக்கு தெரிந்தால் அது மகிழ்ச்சியான விசயம். ஒரு மனிதன் தன்னையே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறான். பிறக்கும்பொழுதே அவன் இறப்பை நோக்கி தான் சென்றுக்கொண்டு இருக்கிறான். தினமும் அவனுள் இறப்பு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் அதனை அவன் அவனுக்குள் தெரியாமல் வைத்துக்கொள்கிறான். அதனைப்பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் வைத்துக்கொள்கிறான்.

தன்னுள் இறப்பு நடப்பதை உணர்பவன் விழித்துக்கொண்டு அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை அவன் கண்டுபிடித்துவிடுவான். அவன் இறப்பை கண்டு அஞ்சுவதில்லை மாறாக மகிழ்ச்சியாக மாற்றிவிடுகிறான்.

நீங்கள் நல்ல காயத்ரி மந்திர உபாசகர் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வழியாக நமது நண்பர்களுக்கு கீழே உள்ளதை சொல்லுகிறேன். மரணத்தை கண்டு பயந்தவன் தன்னை ஆன்மீகத்தில் இணைத்தவுடன். உடலில் இருந்து ஆத்மா செல்வதை இறப்பு என்று சொல்லுகிறார்கள். உயிரோடு இருக்கும்பொழுதே அவன் வெளியில் செல்ல நினைக்கிறான். சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துவிடுவான். உடல் தேவைப்படும்பொழுது உடலுக்குள் வந்துவிடுவான். உடல் தேவையில்லை என்றால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பான். ஏன் உடலுக்குள்ளேயே ஆத்மாவை வைத்து சுற்றும் வித்தையை தான் நீங்கள் காயத்ரி மந்திரம் வழியாக கற்று இருப்பீர்கள் அல்லவா.

இப்படி இருப்பவர்களுக்கு அவர்கள் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு மரணம் வரும். அவர்களுக்கு தனக்கு எப்பொழுது மரணம் வரும் என்பதை அவர்களே நிர்ணித்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள். அதனால் அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆன்மீகவாதிகள் இல்லாதவர்கள் நீங்கள் சொல்லுவது போல் மரணத்தை கண்டு அஞசுவார்கள். வாழுகின்ற நாட்களில் ஒழுங்காக அவர்களால் வாழமுடியாது.

நீங்கள் எனது பதிவில் வந்து கேள்வி கேட்டதற்க்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லுகிறேன். நன்றி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சந்தோஷமான நிகழ்வு


வணக்கம் நண்பர்களே!
                    இறப்பை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொன்னேன் அல்லவா. அதனைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு சிறிய வயதில் இறப்பை பற்றி மிகுந்த பயம் இருந்தது. அந்த காரணத்தால் தான் நான் ஆன்மீகத்தை நாடினேன். 

ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பயிற்சி செய்ய செய்ய எனக்கு இறப்பு என்பது ஒரு சந்தோஷமான ஒரு நிகழ்வாகவே தென்படுகிறது. ஒவ்வொரு ஆன்மீகவாதியும் இறப்பை கண்டு வந்தால் தான் அவன் ஆன்மீகவத்தில் சிறந்து விளங்குவான்.

புத்தர் இறப்பை கண்டு தான் ஆன்மீகத்திற்க்கு வந்தார். இறப்பைப்பற்றி அதிகம் சிந்தித்தவர் புத்தர் மட்டுமே என்று கூட சொல்லுவார்கள்.ஒரு இறப்பை நேரில் பார்த்தப்பொழுது மட்டுமே அவர் ஆன்மீகத்திற்க்கு வர எண்ணினார் என்று கூட சொல்லுவார்கள்.

இறப்பைப்பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் உங்களுக்குள் ஆன்மீகம் வளர ஆரம்பிக்கும். அந்த ஆன்மீகம் உங்களின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிடும் தன்மையில் வளரும். நீங்களும் இறப்பைப்பற்றி சிந்தித்து ஆன்மீகத்திற்க்கு வர முயற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நண்பரின் பிரிவு


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் பூஜைக்கு சென்றதால் ஊரில் இருந்தேன். ஒரு வாரத்திற்க்கு ஊரில் வேலை இருந்தது. திடீர் என்று சென்னையில் ஒரு வேலைக்காக ஊரில் இருந்து சென்னைக்கு நேற்று வந்தேன். நேற்று மதியம் நேரத்தில் எனது நண்பர் ஒருவர் இறந்த செய்தி வந்தது. அவரின் வீட்டிற்க்கு சென்று எல்லா காரியத்தையும் செய்துவிட்டு நேற்று மாலையில் அடக்கம் செய்துவிட்டு வந்தேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் அந்த நண்பர் ஒரு முஸ்லீம். ஆரம்ப காலகட்டத்தில் ஜாதககதம்பம் எழுதுவதற்க்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவர் தான் அடையாரில் ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்தார். அந்த டிராவல்ஸில் உள்ள சிஸ்டத்தில் இருந்து தான் அதிகமான பதிவுகள் ஜாதககதம்பத்தில் வந்தது.

நான் சோர்வாக இருந்த காலகட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை ஊட்டியவர். படிக்கிறார்கள் அல்லது படிக்காமல் போகிறார்கள் உனது வேலையை செய்துக்கொண்டி இரு என்று சொன்னவர். நல்ல மனிதர். ஒரு முஸ்லீமாக இருந்து இந்து மக்களுக்கு உதவதற்க்கு உதவியவர்.

அல்லா மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். என்னையும் புரிந்துக்கொண்டவர். நல்ல மனிதர் நேற்றோடு இந்த பூமியின் வாழ்வை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னை பொருத்தவரை எந்த மரணத்திற்க்கும் நான் வருத்தப்படாதவன். நேற்று மனது கொஞ்சம் கலங்கியது. 

அவர் என் பெயரை எந்த பதிவிலும் சொல்லிவிடாதே என்று சொன்னவர். அந்த காரணத்தால் அவரின் பெயரை நான் சொல்லவில்லை. ஜாதககதம்பம் வளர்வதற்க்கு மிகுந்த துணை புரிந்தவரின் ஆத்மா இறைவனிடம் சேரட்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 28


வணக்கம் நண்பர்களே!
                    தஞ்சாவூர் பகுதியில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு நபர் என்னிடம் சோதிடம் பார்த்தார். அவர் ஆட்களை வெளிநாட்டிற்க்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். தஞ்சாவூர் பகுதியில் வெளிநாட்டிற்க்கு அனுப்பும் ஏஜென்டுகள் அதிகம் பேர் இருப்பார்கள். அந்த பகுதியில் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் அதிகம் பேர் வெளிநாட்டிற்க்கு சென்று வேலை செய்வார்கள்.

என்னை சந்தித்த நபரும் ஒரு ஏஜென்ட் தொழில் செய்து வந்தார். அவர் என்னை சந்தித்த பொழுது அவருக்கு லக்கினாதிபதியான புதன் விரைய வீட்டில் இருந்து தசாவை நடத்தி வந்தது. புதன் என்றாலே ஏஜென்ட் தொழிலுக்கு காரகம் வகிப்பவர் அல்லவா. 

அவரிடம் உங்களின் தொழில் சிறிய காலத்தில் பிரச்சினையை சந்திக்கபோகிறது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொன்னேன். புதனை சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் பார்த்து இருந்தது. 

அவர் அதனை அந்தளவுக்கு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பணம் அவரின் கண்ணை கட்டியது என்று தான் சொல்லவேண்டும். ஒரு சோதிடர் இந்த வருடம் பலனை சொன்னார் என்றால் அந்த பலன் அடுத்த வருடத்தில் நடந்தால் மட்டுமே அவரின் உழைப்பு வெளியில் வரும். உடனே சோதிடர்களின் திறமை வெளிப்படாது. சொன்ன பலன் நடந்த பிறகு சோதிடரின் திறமை வெளிப்படும்.

வெளிநாட்டிற்க்கு ஆளை அனுப்புகிறேன் என்று பல பேர்களிடம் பணத்தை பெற்றுவிட்டு அந்த பணத்தை என்ன செய்தாரோ தெரியவில்லை பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். பணம் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா இவரை தேடி வீட்டிற்க்கு வர ஆரம்பித்தவுடன் ஒரு சில நாட்களில் தலைமறைவாகிவிட்டார்.

பனிரெண்டாவது வீட்டில் ஒரு கிரகம் இருந்து அது பாதிக்கப்பட்டு தசா நடந்தால் அந்த நபரை தலைமறைவு வாழ்க்கை வாழ வைத்துவிடுவார். இவரும் பல நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, June 28, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் பூஜைப்படங்களை மூன்று பதிவாக போட்டதற்க்கு காரணம் அனைத்தையும் நீங்கள் நேரிடையாக பார்ப்பது போல் இருக்கவேண்டும் என்பதற்க்காக போட்டேன். 

உங்களின் வேண்டுதல்களை அனைத்தையும் நல்ல முறையில் சேர்த்தேன். கடைசி நேரத்தில் ஒரு சிலர் வேண்டுதல் செய்யும்பொழுது ஜாதகத்தை வைத்து வேண்டுதல்களை செய்யுங்கள் என்று கேட்டார்கள். அதனை மட்டும் என்னால் செய்யமுடியவில்லை.

பூஜைக்கு தேவையான பொருட்களை சேமிப்பதற்க்கே எனக்கு நேரம் போதவில்லை அப்படி இருக்கும்பொழுது கடைசி நேரத்தில் என்னால் அதனைமட்டும் செய்யமுடியவில்லை. பூஜை செய்யும் நாளுக்கு முன்னாலேயே என்னிடம் சொல்லிவிட்டால் அப்படிப்பட்ட வேண்டுதல்களையும் சேர்த்துவிடலாம்.

பொதுவாக ஜாதகத்தை வைத்து வேண்டுதல் செய்யும்பொழுது ஒரிஜினல் ஜாதகமாக இருந்தால் நல்லது ஆனால் அதனை செய்யமுடியாது என்பதால் உங்களின் ஜாதகத்தை ஜெராக்ஸ் நகலை வைத்தே வேண்டுதல் செய்துவிடலாம்.

அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்க்கு எனக்கு நேரம் இல்லை. என்னால் முடிந்தளவு செய்து இருக்கிறேன். இதனை வைத்தே உங்களின் மனம் குளிரும்படி செய்து இருக்கிறேன். அம்மன் அலங்காரத்திற்க்கு என்னோடு ஒன்று இரண்டு ஆட்களை வைத்து மட்டும் செய்து உள்ளேன். பிற்காலத்தில் நல்லமுறையில் செய்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                     அமாவாசை அன்று நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள்.








நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                     அமாவாசை அன்று நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள்.







நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                     அமாவாசை அன்று நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள்.









நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, June 25, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு நண்பர் கேள்வி ஒன்றை கேட்டார். அவரின் கேள்வி ஆண்கள் மட்டும் படிக்கவும் பதிவை படித்துவிட்டு மசாலா மட்டும் ஒருவருக்கு குழந்தையின்மைக்கு காரணமாகுமா என்று கேட்டார். 

முதலில் நாம் உண்ணும் உணவை சரிசெய்யவேண்டும் என்பதற்க்காக சொன்னேன். மசாலாக்கள் நமது உடம்பிற்க்கு தேவையான சக்தியை கொடுக்கிறது அது இயற்கையாக கிடைக்கிறது. நமது நாட்டில் இயற்கையாக கிடைக்கும்பொருளை செயற்கையாக ஏன் தயாரித்து உண்ண வேண்டும்.

நமது வாழ்க்கை குழந்தைக்கு மட்டும் இல்லை. குழந்தை இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்றால் உங்களின் வாழ்க்கையே வீண். இல்லறத்தில் இருப்பவர்கள் இருவரும் சரியான காமத்தொடர்பு வைத்துக்கொண்டால் உங்களுக்கு கடவுள் கூட தேவையில்லை. அதுவாகவே மோட்சத்தை அடையவைத்துவிடும்.

நமது வாழ்வை சின்னபின்னாமாக மாற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பொருள்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லுகிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள். அவரும் பிரதமராகிவிட்டார். அவர் சொன்ன சொல் வெளிநாட்டு பொருட்களை வாங்கிப்படுத்துவதை தவிர்த்தாலே நம் நாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவருக்காகவும் இதனை செய்யலாம். அவரை நான் பெருமைப்படுத்தி சொல்லவதற்க்காக சொல்லவில்லை. 

இந்த மசாலாக்களை இந்தியா கம்பெனிகளே தயாரித்து விற்றுவருகிறது. உடலுக்கு தீங்கு தரும் பொருட்களை வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் அதனை நாம் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்காமல் மருத்துவமனைக்கு ஏன் கொடுக்கவேண்டும். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

என்னிடம் காயத்ரி மந்திரப்பயிற்சி பெறுபவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன். இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தவேண்டும். உங்களின் வீடுகளுக்கு நான் வந்துக்கொண்டு இருக்கிறேன். மறுபடியும் நான் உங்களின் வீட்டிற்க்கு வரும்பொழுது சோதனை செய்வேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 27


வணக்கம் நண்பர்களே!
                    குருவும் சனியும் சேர்ந்து ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. அவருக்கு குரு தசா ஆரம்பித்து நடந்தது. பனிரெண்டாவது வீடு என்றால் நாம் விரையம் மட்டும் நடக்கும் என்று எதிர்பார்க்க தேவையில்லை. சுபநிகழ்ச்சிகள் நடப்பது கூட விரைய கணக்கில் தான் வரும்.

இவரின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். நல்ல வரனை பார்த்து அவர் திருமணத்தை நடத்தினார். அவர் திருமணத்தை நடத்துவதற்க்குள் நிறைய கஷ்டத்தை அடைந்தார். அதற்கு காரணம் குருவோடு சனியும் சேர்ந்து இருந்த காரணத்தால் அப்படி நடந்தது.

திருமணத்தில் ஏகாப்பட்ட தடங்கல்கள் ஏற்பட்டது. திருமண பேச்சை பேசும்பொழுது கூட அவர்கள் இந்த திருமணம் நடைபெறும் என்று அவர்களால் நிச்சயமாக சொல்லமுடியவில்லை அந்தளவுக்கு சனி முட்டுக்கட்டையை போட்டது.

சனி தடுக்க நினைக்கும்பொழுது அந்த காரியத்தை வெற்றி அடையவைப்பது கொஞ்சம் கடினம். ஏன் என்றால் நமது மனநிலையை போட்டு தாக்கிஎடுத்துவிடுவார் சனி பகவான். எப்படியோ குருவின் பலத்தால் அவரின் மகள் திருமணம் நடந்தது. 

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்க்குள் பெண்ணின் தாத்தா இறந்துவிட்டார். அதுவும் அவருக்கு செலவை வைத்துவிட்டார் சனிபகவான். குருவும் சனியும் சேரந்து இருந்தால் ஒரு நல்லது நடந்தால் ஒரு கெடுதல் நடைபெறும். அது விரைய வீட்டிற்க்கும் பொருந்தும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

இரயில் பயணம்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் பூஜைக்காக ஊருக்கு சென்றுக்கொண்டு இருக்கிறேன். இரவு 11:30 மணி உழவன் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏறினேன். இப்பதிவை இரயில் இருந்து எழுதுகிறேன். இந்தியாவில் ஓடும் இரயிலில் மிக மிக மெதுவாக செல்லும் எக்ஸ்பிரஸ் எது என்றால் உழவன் எக்ஸ்பிரஸ் இரயில் மட்டுமே. அந்தளவு மெதுவாக செல்லும். இதில் தான் டிக்கெட் கிடைத்தது சென்று கொண்டு இருக்கிறேன். 

இப்பொழுது தான் ஆடுதுறையை சென்று அடையும்பொழுது எழுத ஆரம்பித்தேன். என்னோடு ஒரு விட்டல் பாண்டுரங்கன் பக்தர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் என்னிடம் ஆடுதுறையில் பாண்டுரங்கன் கோவில் உள்ளதா என்று கேட்டார். இந்த பகுதியில் தான் அந்த கோவில் உள்ளது என்று சொன்னேன். நான் பஸ்ஸில் செல்லும்பொழுது பார்த்து இருக்கிறேன். சரியாக எந்த இடம் என்று தெரியவில்லை. 

இந்த பகுதியில் இல்லாத கோவில்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு கும்பகோணத்தை சுற்றி கோவில்கள் இருக்கின்றன. உலகத்தில் உள்ள எத்தனை தெய்வங்கள் இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்களுக்கும் இந்த பகுதியில் கோவில் உள்ளது.

கோவில்கள் எல்லாம் பார்க்கவேண்டும் என்றால் இந்த பகுதிக்கு வந்து தங்கி அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்துவிட்டு செல்லுங்கள். எல்லா கோவில்களையும் நீங்கள் பார்ப்பதற்க்கு குறைந்தது பத்து நாட்களாகவது ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் சென்று பார்க்கவேண்டும் அல்லவா அதனால் சொன்னேன். பதிவை வலையேற்றும் இந்த நேரத்தில் கும்பகோணத்தை இரயில் அடைந்துவிட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவருக்கும் தினமும் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் பிரச்சினையை தீர்க்க பரிகாரம் செய்யமுடியாது. ஏதாே ஒரு சக்தியை நாம் தினமும் வழிப்பட்டு வரும்பொழுது நாம் அந்த பிரச்சினையில் இருந்து விடுபடமுடியும். 

என்னிடம் ஜாதகத்தை அனுப்பியவுடன் பிரச்சினை தீர்ந்துவிடாது. ஒரு சிலருக்கு பூர்வபுண்ணியப்பலன் அதிகமாக இருக்கும் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும்பொழுது அம்மன் அதுவாகவே நடத்திக்கொடுத்துவிடும். 

ஒரு சிலருக்கு பூர்வுபுண்ணியப்பலன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது. ஒரு சில பரிகாரங்களை செய்ய சொல்லுவது உண்டு. அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு பிரச்சினை போய்விடும்.

தினமும் அளவுக்கு அதிகமாக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கின்றது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு வழிப்பாட்டு முறையை பின்பற்றி வரவேண்டும்.

நமது தளத்தின் வழியாக காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்களும் இருக்கின்றார்கள். காயத்ரி மந்திரம் செய்யவேண்டாம் ஏதாவது ஒரு குரு வழியாக மந்திரப்பயிற்சி பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த குருவின் வழிகாட்டுதல்படி மந்திரப்பயிற்சி செய்து வரலாம்.

மனிதனின் ஒவ்வொரு பிரச்சினையைும் தீர்ப்பது அவர்களின் குலதெய்வத்திற்க்கு பிறகு தான். குலதெய்வத்தின் படி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறேன் என்று நினைப்பவர்கள் அவர்களின் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதல் செய்து வழிப்பட்டு வரலாம்.

என்னிடம் வந்த பிறகு உங்களுக்கு நன்மை நடைபெறுகிறது என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அம்மன் செய்யும் வேலை தானே தவிர வேறு எதுவும் இருக்கமுடியாது. அம்மனிடம் நீங்கள் சரணாகதி அடைந்துவிடவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, June 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                                                    பங்குசந்தைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி கேட்ருந்தார் அவரின் கேள்விக்கு பதிலை தந்துள்ளேன்.

Prabhu Govind

Hello Brother, What is the full reason for the failure..?in paper trading judgement is correct. but on real trading it makes lost. Which one can earn money from share market.. I review most persons trade accounts they earn but they lost.. they are addicted to that Please review and make post about the trading logic.. I hope it is useful for novel traders...

வணக்கம் நண்பரே கற்பனையில் எது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நேரடியாக இறங்கும்பொழுது மட்டுமே பாதிப்பு வரும். நம்மை கிரகங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாம் என்ன தான் டெக்னிக்கல் படித்தாலும் நமது நேரம் நம்மை கீழே வீழ்த்திவிடும். 

ஆறு மாதம் நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் கீழே விழுவதற்க்கு காரணம் அவர்களின் நேரம் அவர்களை கீழே தள்ளிவிட்டு சென்று விடுகிறது.பங்கு வர்த்தகம் எல்லாம் நமது பூர்வபுண்ணிய வீட்டில் இருந்து வருகிறது. நமக்கு பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பொழுது நாம் பங்குவர்த்தகத்தில் மட்டும் சென்று சம்பாதிக்க வேண்டியதில்லை. அதுவாக வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். ஏதாவது ஒரு ரூபத்தில் கொண்டு வந்து கொட்டிவிடும். 

பொதுவாக அதிகமாக பூர்வபுண்ணியம் கெட்டவர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களை இவர்களின் நேரமே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.

நான் சொல்லும் ஒரே கருத்து உங்களின் ஜாதகத்தை பாருங்கள். அதில் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கின்றதா என்று பாருங்கள். நன்றாக இருந்தால் நீங்கள் ஈடுபடலாம். இல்லை நீங்கள் வேறு வழியை பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆண்கள் மட்டும் படிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீகத்தைப்பற்றி நிறைய பதிவுகள் மற்றும் சோதிடத்தைப்பற்றி நிறைய பதிவுகளை இத்தனை வருடங்களாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதனைப்பற்றி எல்லாம் எனக்கு கேள்வி கேட்காதவர்கள் ஒரு பதிவுக்கு மட்டும் அதிகமான மெயில் எனக்கு அனுப்பிக்கொண்டே வந்தார்கள் நானும் எல்லோரும் சின்னவர்கள் தானே அதனால் அதில் ஈடுபாட்டை காட்டவில்லை.

சமீப காலமாக பெரியவர்களும் அதில் மிகுந்த ஈடுபாட்டை காட்ட ஆரம்பித்தவுடன் அதில் ஏதோ விசயம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டே வந்தேன். நாளுக்கு நாள் இது தொல்லையாகவே மாறிவிட்டது. முதியவர்கள் வரை இதனை கேட்ட என்னை தொந்தரவு செய்கின்றனர். அப்படி என்ன என்று கேட்கிறீர்களா

ஒரு மந்திரம் இருக்கின்றது. அதனை பின்பற்றினால் உங்களுக்கு உடல்உறவில் அதிக நேரம் இருக்கமுடியும் என்று சொல்லிருந்தேன். அதனை கேட்டு தான் தொந்தரவு.

சரி நாம் இதனைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதிவிட்டால் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று எழுதிவிடுகிறேன்.

மந்திரத்தை மட்டும் சொல்லிவிட்டால் ஒன்றும் நடக்காது அந்தளவுக்கு நமது உடலும் ஒத்துழைக்க வேண்டும். உடலில் சக்தி இல்லை என்றால் உடல் கொஞ்சநாளில் படுத்துவிடும். முதலில் இன்றைய இளைஞர்களுக்கு உடல் வலிமை என்பது குறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கு முதல் காரணம் அரசாங்கம் தானே தவிர வேறு யாரையும் நாம் குற்றம் சொல்லமுடியாது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று சொன்னால் யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை அதற்கு அரசாங்கம் செய்து வினை தான் இளைஞர்களை பலி வாங்கியது. என்னடா புது கதையை விடுகிறார் என்று நினைக்கலாம். படியுங்கள் உண்மை புரியும்.

இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகளை விட்டது முதல் தவறாக நாம் சொல்லலாம். நாம் உண்ணும் உணவு அனைத்தும் விஷம் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இயற்கையாக விளையும் பொருட்களை பாக்கெட் செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனை வாங்கிய மக்கள் அனைவருக்கும் இப்பொழுது நாளுக்கு நாள் புது புது வியாதிகள் வந்துக்கொண்டே இருக்கின்றது. பாக்கெட் போடும்பொழுது கண்டிப்பாக அது கெடாமல் இருக்க கெமிக்கலை சேர்த்து தான் ஆக வேண்டும். அது நமது உடலுக்கு பிரச்சினையை கொடுக்கிறது.

பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார்கள் அதனை மக்கள் வாங்கி பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். இயற்கையாகவே விளையும் பொருட்களை நீங்கள் வாங்கி பயன்படுத்த தொடங்கினால் உங்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும்.

உடலறவுக்கு உங்களின் உடல் மிக வலிமையாக இருக்கவேண்டும். நாம் சாப்பிடும் உணவு முறையை முதலில் மாற்றவேண்டும். அனைத்தையும் இயற்கையாகவே வாங்கி பயன்படுத்த வேண்டும். என்னோடு தொழில் தொடர்பு வைத்திருக்கும் குடும்பங்கள் அனைத்தும் இன்றைய நாளில் இயற்கை உணவு பழக்கத்திற்க்கு மாறிவிட்டார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே நான் நன்றாக இருக்கமுடியும் என்று நான் பல கண்டிஷனை போட்டுவைத்திருக்கிறேன்.

பாக்கெட் உணவுகளை வாங்குவதற்க்கு உபயோகம் செய்தால் உங்களின் உடலில் சக்தி சேராது. தேவையற்ற கொழுப்பு சேரும். உடலறவுக்கு சக்தி இருந்தால் தானே நன்றாக செய்யமுடியும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலில் சக்தி இல்லாமல் இருக்கின்றனர். முதலில் நீங்கள் இயற்கையான உணவு முறைக்கு மாறுங்கள்.

எந்த ஒரு கம்பெனி பொருட்களையும் வாங்ககூடாது. அதனை வாங்கி நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களின் மனைவியை திருப்திப்படுத்தமுடியாது. சமையல் பொருட்களில் முடிந்தளவு இயற்கையாகவே இருக்க பாருங்கள். அடுத்ததாக அரிசி விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கைக்குத்தல் அரிசி மிகவும் நல்லது.

வெளியில் சாப்பிடாதீர்கள். உணவங்களில் சாப்பாட்டை குறைத்தாலே போதும் உங்களின் உடல் நன்றாக இருக்கும் அதே நேரத்தில் உங்களின் பணமும் சேமிக்கமுடியும். நான் வெளியில் சென்றால் எனது தொழில் வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் எனக்கு உணவு வரும். நானே கேட்பேன் ஏன் அப்படி கேட்கிறேன் என்றால் அவர்கள் எப்படிப்பட்ட உணவை தயாரித்து உண்கிறார்கள் என்று பார்ப்பதற்க்கு நானே கேட்டு வாங்கி சாப்பிடுவேன்.

முதலாக உங்களுக்கு நான் செய்யும் உதவி உங்களின் உணவு பழக்கத்தை இயற்கையாக வைத்துக்கொண்டால் உங்களின் இல்லறம் செழிக்கும். நான் இதற்க்காகவே ஒவ்வொரு நண்பர்களின் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறேன். நான் வந்து பார்த்தால் உங்களின் நிலை என்ன என்று தெரிந்துவிடும்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் குழந்தை இல்லை என்று வந்தார். வா உடனே உங்களின் வீட்டிற்க்கு போகலாம் என்றேன். அவரும் அழைத்துக்கொண்டு சென்றார். நேராக அவரின் வீட்டின் சமையறைக்கு சென்றேன். அங்கு பார்த்தால் உலகத்தில் உள்ள மசாலா மற்றும் அரிசி அனைத்தும் கம்பெனி பிராண்டாக இருக்கிறது. உடனே அவரிடம் இதனை எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஆறு மாதத்திற்க்கு இயற்கையாகவே வாங்கி சாப்பிடு உனக்கு குழந்தை இருக்கும் அப்படி இல்லை என்றால் அதன் பிறகு அம்மனை வைத்து வேண்டுதல் செய்யலாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவரும் நான் சொன்ன விசயத்தை கடைபிடித்துவந்தார். சரியாக அதுவாகவே நான்கு மாதத்திற்க்கு பிறகு குழந்தை உருவாகிவிட்டது. இயற்கையாகவே உணவை உண்டால் உங்களுக்கு குழந்தையும் இருக்கும். உங்களால் இல்லறத்திலும் திருப்தியாக இருக்கமுடியும். முதல் கருத்தாக இதனை சொல்லிருக்கிறேன்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

ஆமாம் இது நல்ல விசயம் தானே பிறகு எதற்கு ஆண்கள் மட்டும் படிக்கவும் என்று போட்டுள்ளீர்கள் என்று கேட்க தோன்றுகிறதா ஒன்றும் இல்லை. இன்று நமது ஜாதககதம்பம் ஹிட்ஸ் பிச்சிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Monday, June 23, 2014

வல்லவனுக்கு வல்லவன்


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கும் என்னோடு இருந்தவர்களுக்கும் அதாவது நான் ஆன்மீகத்தை கற்கும்பொழுது இருந்தவர்களுக்கும் அடிக்கடி சண்டை வருவது உண்டு. அதாவது நான் பெரிய ஆளா நீ பெரிய ஆளா என்று சண்டை வரும்.

ஒருவர் கல்கத்தாவில் இருந்து வந்தவர். அவருக்கும் எனக்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு போட்டி நடந்துக்கொண்டே இருக்கும். அனைத்தும் சக்தியை வைத்து தான் போட்டி நடந்துக்கொண்டு இருக்கும். இரண்டு பேரும் நன்றாக பேசிக்கொள்வோம் ஆனாலும் இப்படி சண்டை நடக்கும்.

அவர் ஒரு பங்குசந்தை ஏஜென்ட் தொழில் செய்து வருபவர். அவர் என்னிடம் நான் உன் ஜாதககதம்பத்தை முடக்குகிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் நீங்கள் செய்துவரும் பங்குவர்த்தகத்தில் பெரிய இழப்பை வரவழைக்கிறேன் என்று சொல்லி இருவருக்கும் போட்டி நடைபெற்றது. 

எந்த ஒரு டெக்கினிக்கல் இல்லாமல் ஆன்மீகத்தை வைத்து செய்ய வேண்டும் என்பது விதிமுறை. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு போர் நடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இது நடந்தது. அவரும் அவர் வைத்திருக்கும் சக்தியை வைத்து அடிக்கிறார். அதனை நான் தடுத்துக்கொண்டே வருகிறேன். அவரின் பங்குவர்த்தகத்தில் ஒரு சில வாரங்களில் அடிமேல் அடி விழுந்தது. ஆர்டர் போடாமலேயே ஆர்டர் விழும். வாங்குவதற்க்கு பதில் விற்பார். ஒரே வாரத்தில் கணக்கில் எந்த பணமும் இல்லை.

அதன் பிறகு இரண்டு பேருக்கும் சண்டை முடிந்தது. ஜாதககதம்பத்தை அவரால் முடக்கமுடியவில்லை ஆனால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அனைத்தையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வல்லவனுக்கு வல்லவன் கண்டிப்பாக வருவான்.

இதனை எல்லாம் நீங்கள் நம்பமுடியாது ஆனால் உண்மையாக நடந்த ஒரு சம்பவம். பங்கு வர்த்தகம் என்ன உலகத்தையே ஆட்டி படைக்கலாம் ஆனால் தன் அடக்கம் வேண்டும். எனது குருவிற்க்கு இப்படி செய்கிறேன் என்று தெரிந்தால் அப்புறம் நான் தொலைந்தேன்.குருவிற்க்கு தெரியாமல் இப்படி சண்டை போடுவது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள் என்னிடம் சார் அனைவருக்கும் அம்மனின் சக்தியை வெளிப்படுத்திக்காட்டுங்கள் என்று கேட்டுருந்தார். அவர்களின் விருப்படி அனைவராலும் அம்மனின் சக்தியை உணரமுடியும் படி செய்து இருக்கிறேன்.

நீங்கள் ஆன்மீகத்தில் சிறிய காலம் பயிற்சி செய்தால் போதும் உங்களால் அம்மனின் சக்தியை உணரமுடியும். பலபேர்கள் எனக்கு எல்லாம் இது நடைபெறுமா என்று நினைத்த பொழுது கூட அவர்களுக்கு எல்லாம் அம்மன் தன் சக்தியை காட்டிக்கொடுத்துள்ளது.

நீங்கள் விரும்பினால் நல்ல பக்தியை செலுத்தினால் கண்டிப்பாக அம்மனின் சக்தியை நீங்கள் உணரமுடியும். இன்று முதல் அனைவருக்கும் இந்த நல்ல விசயங்கள் நடைபெறும். 

என்னைப்பொருத்தவரை ஜாதககதம்பத்தை படிப்பவர்கள் அனைவரும் உணரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு இருக்கின்ற பல சூழ்நிலைகளால் அதனை வெளியில் காட்டாமல் இருந்து வந்தேன். இன்று முதல் பார்க்கலாம் எத்தனை பேர் அதனை உணர தொடங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் படாதப்பாடு பட்டு வெளியில் சென்று அலைந்து கடைசியில் உணரும் சக்தியை நீங்கள் இன்று முதல் எளிதில் உணர்வது போல் செய்து இருக்கிறேன்.

எது நடந்தாலும் அதாவது நல்ல விசயங்கள் நடைபெறும் பொழுது உண்மையாகவே நடக்கவேண்டும். சும்மாக எதனையும் தவறாக சொல்லாதீர்கள். உங்களின் அனுபவத்தை என்னிடம் மெயிலில் தெரிவியுங்கள்.

ஜாதககதம்பத்தை படிக்கும்பொழுது இனி தலைவலி உருவாகினால் அது அம்மனின் சக்தியின் வெளிப்பாடு அதன் பிறகு ஒவ்வொன்றாக உங்களுக்கு நடைபெறும். என்னிடம் பேசும்பொழுது எந்தளவுக்கு உங்களுக்கு சக்தி கிடைத்ததோ அதுப்பாேல் ஜாதககதம்பத்தை படிக்கும்பொழுது உங்களுக்கு கிடைக்கும்.

உங்களின் ஆத்மா இனி பல வேலைகளை செய்ய தயாராகும். இது நல்ல வாய்ப்பு எத்தனைபேர் உணர்கின்றார்கள் என்று பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பாவத்தை சேர்த்த வழி


வணக்கம் நண்பர்களே!
                    என்னை சந்திக்க ஒரு நபர் வந்திருந்தார். அவரின் மகனுக்கு திருமணம் அமையவில்லை. நிறைய வரன்களை பார்த்தும் ஒன்றும் அமையவில்லை என்று அவரின் மகனின் ஜாதகத்தை காண்பித்தார்.

அவர் மகனின் ஜாதகத்தை பார்த்தபொழுது பெரிய தோஷம் ஒன்றும் கிடையாது. அவரும் என்னிடம் சார் நான் எந்த பாவத்தையும் செய்ததில்லை. கடவுள் பக்தியோடு இருக்கிறேன் என்று சொன்னார்.

ஆண்டவன் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை இதில் மட்டும் எனக்கு குறை வைத்துவிடுவார் போல் இருக்கிறது என்றார். பல வருடங்களாக பெண் பார்க்கும் படலம் நடைபெற்று வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 

அவரிடம் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். எனது தந்தை சிட்டியில் பல இடங்களை வாங்கி போட்டு சென்று இருந்தார். அந்த இடங்களில் எல்லாம் நான் வீடு மற்றும் கடையை கட்டி வாடகைக்கு விட்டுருக்கிறேன். பண விசயத்தில் எனக்கு குறை இல்லை என்பதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை என்றார்.

அவரிடம் நீங்கள் கட்டிய வீடு மற்றும் கடைகளில் வாடகைக்கு விடுபவர்களிடம் மின்சாரக்கட்டணம் அரசு நிர்ணித்த தொகையை தான் வாங்குகிறீர்களாக என்று கேட்டேன். அவர் இல்லை கூடுதலாக வாங்குகிறேன் என்றார். பாவம் சேர்க்கவில்லை என்று சொல்லுகிறீர்கள் இது பாவமாக தெரியவில்லையா என்று கேட்டேன். இல்லை சார் எல்லாரும் வாங்குகிறார்கள் அதனால் நானும் வாங்குகிறேன் என்றார்.

பாவத்தை இப்படி தான் வாங்குகிறார்கள். இதுவும் பாவம் தான். நாம் செய்கின்ற பாவம் நமக்கே ஒரு சில நேரம் தெரியாது. பெரும்பாலும் இப்படி தான் பாவத்தை சேர்க்கின்றனர்.

அவர் பையன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நவாம்சத்தில் ஏழாவது வீட்டில் அமர்ந்து இருந்தது. அவரிடம் நீங்கள் செவ்வாய் கிரகத்திற்க்கு மட்டும் பரிகாரம் செய்யுங்கள் என்று சொன்னேன். இனிமேலாவது மின்சாரகட்டணத்தை குறைவாக வாங்குங்கள் என்றேன்.

பல பேர் இப்படி தான் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுபவர்கள் அனைவரும் மின்சாரக்கட்டணத்தை கூடுதலாக பெறுவது எல்லா ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை செய்தாலும் நீங்கள் பாவத்தை பெறுவீர்கள் என்பதை சொல்லவேண்டும் என்பதற்க்காக இந்த அனுபவத்தை தந்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் பூஜை வரும் 26/06/2014 அன்று வியாழக்கிழமை நடைபெறும். பூஜைக்கு என்று பணம் அனுப்பியவர்கள்

சென்னையை சேர்ந்த கணேசன் அவர்கள்.
நெதர்லாண்ட்டை சேர்ந்த முருகானந்தம் அவர்கள்.
பெங்களுரை சேர்ந்த இளங்கோவன் அவர்கள்.
துபாயை சேர்ந்த ஹரிஸ் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த விஜயபிரதீப் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் அவர்கள்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த குமார் அவர்கள்.
ஈரோடு சேர்ந்த தீபன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் அவர்கள்.

மற்றும் பலர் இருக்கின்றார்கள்.

வழக்கம்போல் பூஜைக்கு என்று பெரும் பங்களிப்பை அளிக்கும் நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

பூஜைக்கு நேரில் கலந்துக்கொள்ளும் நண்பர் திரு கண்டியூர் ராமசுப்பிரமணியன் அவர்கள்.

அமாவாசை அன்று அம்மனுக்கு மிக உகந்த நாள். அன்று அம்மனுக்கு பூஜை நடத்துகிறோம். உங்களின் வேண்டுதல்களை அன்று வைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.