வணக்கம் நண்பர்களே!
மந்திரங்களை பற்றி ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும் இரண்டு நாட்களாக நண்பர்கள் என்னை தொடர்ந்து இதனைப்பற்றி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அதற்க்காக ஒரு பதிவை தருகிறேன்.
பொதுவாக மந்திரங்கள் மட்டும் வேலை செய்யாது. மந்திரங்களில் ஒரு சில தந்திரங்களை சேர்க்கும்பொழுது மட்டுமே மந்திரங்கள் வேலை செய்யும். வெறும் மந்திரங்களை மட்டும் உச்சரித்துக்கொண்டால் வேலை நடைபெறாது. மந்திரங்களை பொருத்தவரை ஒரு குரு வழியாக தான் உபதேசம் பெறவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. குரு தன்னுடைய ஆத்மாவின் பலத்தால் உங்களின் ஆத்மாவை தூண்டி மந்திரங்களை உபதேசம் செய்வார்.
பல நண்பர்கள் ஏகாப்பட்ட மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஏன் இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்டால் அதற்கு மனது சாந்தமாக இருக்கின்றது என்று சொல்லுகின்றனர். உங்களுக்கு ஒரு மந்திரங்கள் போதும் அதனை வைத்து சாந்தப்படுத்திக்கொள்ளலாம் ஏகாப்பட்ட மந்திரங்கள் தேவையில்லை.
எனக்கு தெரிந்தது ஒரு மந்திரம் மட்டுமே. பல மந்திரங்கள் தெரிந்தாலும் அதனை நேரம் வரும்பொழுது மட்டுமே பயன்படுத்துவேன். மற்றப்படி அம்மனின் மந்திரத்தை உரு ஏற்றிக்கொண்டு இருப்பது மட்டும் தான் எனது வேலை. அம்மனின் மந்திரமும் காலையில் பூஜை செய்யும்பொழுது மட்டுமே சொல்லுவது உண்டு.
பொதுவாக என்னை அவ்வளவு எளிதில் பிறரை நெருங்க விடுவதில்லை. அது எதனால் என்றால் அது ஒரு தந்திரம். நான் யாரோடு தொடர்பு வைத்திருக்கிறேனோ அவர் கொஞ்ச காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்லமுடியும். பிரச்சினையில் இருப்பவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி வைத்திருப்பேன்.
அவர்கள் என்னோடு அடிக்கடி பேச அனுமதிப்பேன். என்னை வந்து பாருங்கள் என்று சொல்லுவேன். மூன்று முறை என்னை சந்தித்தவுடன் அவர்களுக்கு காரியம் வெற்றி பெற்றுவிடும். அதோடு அவர்கள் சென்று விடுவார்கள்.
இது மந்திரங்கள் செய்யாது. நான் மந்திரங்கள் வழியாக ஏற்றிய சக்தி அவர்களுக்கு கடந்து செல்லும்பொழுது அவர்களுக்கு காரியம் வெற்றி அடைந்துவிடும். இது ஒரு தந்திரம். உண்மையை சொல்லபோனால் அவர்கள் பேசும்பொழுதே அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ஆத்மாவிற்க்கு சக்தியை கொடுக்கிறேன். முழுமையாக கொடுக்கமாட்டேன் பிரச்சினையை தகுந்தவாறு செலுத்துவது உண்டு.
பொதுவாக ஏழைமக்களுக்கு உடனே செலுத்துவது உண்டு. மற்றபடி கொஞ்சம் வசதி இருந்தால் அவ்வளவு தான் அவர்களை சோதனை மேல் சோதனை செய்து விடுவது உண்டு. ஒவ்வொரு காரியங்களுக்கும் உள் பல வித வித்தைகள் மறைந்து உள்ளன. நாம் கற்ற மந்திரத்தை வைத்து மட்டும் ஒன்றும் நடைபெறாது. செயல்படுத்தும் கலை என்பது மிகப்பெரிய சவாலாக அமையும். அதில் வெற்றிப்பெற்றால் நீங்கள் சிறந்த மந்திர விற்பன்னர்.
நிறைய மந்திரங்களை படித்து உரு ஏற்றுவதில் ஒன்றும் தவறு கிடையாது ஆனால் அதனால் நாம் என்ன பெற்றோம் என்பதில் தான் இருக்கிறது. ஒரு மந்திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரின் வழிகாட்டிதலில் பேரில் செய்து உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
என்னிடம் வந்து தான் நீங்கள் மந்திரங்கள் மற்றும் ஆன்மீகத்தை கற்கவேண்டும் என்பது கிடையாது. உங்களுக்கு பிடித்தமானாவர்களிடம் சென்று கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் அருகாமையில் இருப்பவர்களிடமே கற்றுக்கொள்ளுங்கள் அது போதும்.
ஏன் என்னிடம் வந்து கற்றுக்கொள்ளவேண்டாம் என்று சொல்லுகிறேன் என்றால் மந்திரங்கள் வேலை செய்வது குருவின் ஆத்மா உங்களை பார்த்து பார்த்து உங்களை தூய்மைப்படுத்தி உயர்த்தும். நீங்கள் மந்திரத்தை உரு ஏற்றினாலும் குருவின் ஆத்மா உங்களின் ஆத்மாவில் பல மாற்றங்களை விதைக்கும். அதற்கு நீங்கள் உங்கள் குருவின் அருகாமையில் இருக்கவேண்டும்.
தந்திரத்தை பயிலுவது மிக கடினம். மூளையின் செயல்பாடு அதிகமாக இருக்கவேண்டும். தந்திரம் இல்லை என்றால் மந்திரங்கள் வேலை செய்யாது.மந்திரமும் தந்திரமும் சேர்ந்தால் ஆன்மீக காரியம் வெற்றி பெறும் இல்லை என்றால் தோல்வி பெறும். நீங்கள் மந்திரங்களை சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்களுக்கு கூட காரியம் வெற்றி பெறாது.
பொதுவாக இது நீங்கள் படிக்கும் படிப்பை விட மிகப்பெரிய உலகத்தை படிக்கும் படிப்பு அதற்கு சரியான குரு வேண்டும். நீங்களும் அந்த குருவின் வேகத்திற்க்கு ஈடுகொடுத்து செல்லவேண்டும். இளமையில் சென்று படிக்கும்பொழுது அதன் வேகம் அதிகமாக இருக்கும் புதிய புதிய ஐடியா வரும். அதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்தி மந்திரத்தால் இந்த உலகத்தை கலக்கலாம்.
பல நண்பர்கள் என்னிடம் போன் செய்து என்ன சார் பதிவு எல்லாம் பணம் பணம் என்று வருகிறதே என்று கேட்டார்கள். அது ஒன்றும் கிடையாது. நிறைய ஏழைகளை காப்பாற்றுகிறேன். பணம் இருப்பவர்களிடம் பணத்தை பிடுங்கிக்கொள்கிறேன் அவ்வளவு தான்.
பணம் பணம் என்று ஓடினால் எப்படி ஒரு சக்தி என்னிடம் நிரந்தரமாக தங்கும். ஏழைகளை காப்பாற்றினால் சக்தி நம்மை விரும்பும்.
நன்றி நண்பர்களே !