Followers

Monday, April 30, 2012

குரு பகவான் கோச்சார பலன் நிறைவுபகுதி



குரு பகவான் ஏழாமிடத்திற்க்கு வரும்போது திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லை என்றால் குழந்தைகள் உருவாகும். புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உங்களை சேர்ந்த உறவினர்களிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். உடல் நிலை நல்ல ஆரோகியத்துடன் இருக்கும். நண்பர்கள் உதவியால் கூட்டு தொழில் தொடங்கலாம். உங்கள் பெற்றோருக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்க்காக கடன் வாங்கலாம். கடன் கேட்ட உடனே கைக்கு வரும்.

குரு பகவான் எட்டாம் இடத்திற்க்கு வரும்போது அஷ்டமத்தில் வருகிறது “அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு” என்பார்கள். எதிர்பாராத செலவு வரும். கணவன் மனைவி உறவில் பிரச்சினை வரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. துன்பங்களை தருவார். அதைப்போல் நன்மைகளும் தருவார்.  தனவரவு இருக்கும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். வழக்கு விஷயத்தில் கவனம் தேவை. தெரியாத நபர்களுக்கு கையெழுத்து போட வேண்டாம். அதன் மூலம் பிரச்சனை ஏற்படலாம்.

குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்க்கு வரும்போது எடுத்த காரியம் வெற்றி பெறும். நல்ல பலன்கள் அதிகமாக நடைபெறும். திருமணம் நடைபெறும். உயர்கல்வி வாய்ப்பு கிட்டும். புதிய பொருள் வாங்கலாம். சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். கவலைகள் அனைத்தும் விலகும். உடல் நல பாதிப்பில் இருந்து வந்தால் அது நிவர்த்தி ஆகும்.  பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்து வந்தால் அந்த பிரச்சினை தீரும். மற்றவர்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு செயல்படுவார்கள். பொதுவாக பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வந்தால் அனைத்து பாக்கியமும் கிடைத்துவிடும்.

குரு பகவான் பத்தாமிடத்திற்க்கு வரும்போது அதுவரை செய்து வந்த தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழிலில் போய் சேருவீர்கள். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும். குரு பத்தில் இருக்கும் காலத்தில் பாதி காலம் மட்டுமே துன்பம் தருவார். பாதி காலம் முடிந்த பிறகு நல்லது நடக்கும். தடைபட்ட தொழில் ஆரம்பம் ஆகும். நல்ல பணவரவு இருக்கும். தடைபட்ட திருமண பேச்சு ஆரம்பித்து திருமண ஏற்பாடு நடக்கும். நீங்கள் எதிர்பாக்காத ஒரு புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். பூர்வீக சொத்தில் ஏதும் பிரச்சினை இருந்து வந்திருந்தால் அது நல்லவிதமாக முடிவுக்கு வரும்.

குரு பகவான் பதினோராமிடத்திற்க்கு வரும்போது வேலையில் இருந்த பிரச்சினை தீரும். வறுமை மறையும். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்த பிரச்சினையும் தைரியமாக எதிர்த்து வெற்றி பெற வைப்பார். உங்கள் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்கலாம். அரசாங்க உதவி கிடைக்கும்.

குரு பகவான் பனிரெண்டாம் வீட்டிற்க்கு வரும்போது மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிகாரிகள் தொல்லை இருக்கும். செய்கின்ற தொழிலில் நிம்மதி இருக்காது. வண்டி வீடு அமையும். வாடகை வீட்டில் இருந்து வந்தால் புதிதாக வீடு கட்டி குடி போகலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களால் தொல்லை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, April 28, 2012

குரு பகவான் கோச்சார பலன்



வணக்கம் நண்பர்களே ! இப்பதிவில் நாம் பார்க்கபோவது குரு பகவானின் கோச்சார பலனை பற்றி தான் இதுதான் குருபெயர்ச்சி பலன் என்று எழுதிவருகிறார்கள் நாம் வழக்கமான கோச்சார பலன்களை தருகிறேன். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் குரு பெயர்ச்சி பலன் எழுதுகிறேன். நீங்கள் இந்த பலனை பார்த்தாலே போதும் அனைத்தும் இதில் சொல்லப்பட்டது போல் நடக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு குரு வரும் போது வாழ்க்கையில் ஒரு வெறுப்பு வந்துவிடும். வீணான கவலை மனதில் வாட்டி எடுக்கும். பல வழிகளில் பணம் விரையம் ஏற்படும். மனைவி வழியில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். செய்கின்ற தொழிலில் மாற்றம் ஏற்படும். மனைவி குழந்தைகள் ஆதரவு இருக்கும். அளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேரிடும். கட்டிட பணி நடைபெறும்.

குரு இரண்டாம் வீட்டிற்க்கு வரும்போது குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் நல்ல வருவாய் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிரிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மனகஷ்டம் ஏற்படலாம்

குரு பகவான் மூன்றாம் இடத்திற்க்கு வரும் போது நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படும். பொருள் வரவில் கடுமையான தடை ஏற்படும். வீணான அவச்சொல் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். காதல் இருந்தால் முறிந்து விடும். கடுமையான பணத்தட்டுபாடு ஏற்படும். திருமண ஏற்பாடு நடைபெறும்.தாயாருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். சுமாரான பணவரவு விவசாயத்தின் மூலம் ஏற்படும்.

குரு பகவான் நான்காம் வீட்டிற்க்கு வரும்போது சாப்பாட்டிற்க்கு கஷ்டம் ஏற்படும். மனது ஒரு முடிவு எடுக்காது. செய்துக்கொண்டிருக்கும் தொழிலில் ஆதாயம் எதிர்பார்க்க முடியாது. கல்வி சம்பந்தமாக நல்ல விஷயங்கள் வரும். படிப்புக்கு உதவி கொடுப்பார்கள். வீடு வாகனம் சொத்துகள் செய்ய இதுதான் சரியான நேரம்.

குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும் போது திருமண ஏற்பாடு நடைபெறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் உருவாதற்க்கு வழி பிறக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வருமானம் வரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். விவசாயத்தில் லாபம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

குரு பகவான் ஆறாமிடத்திற்க்கு வரும்போது நோய் தொல்லை ஏற்படும். நண்பர்களிடத்தில் வீணான தகராறு ஏற்படும். செய்கின்ற தொழிலில் நஷ்டம் ஏற்படும். மனைவி மக்கள் ஆதரவு இல்லையென்றால் குடும்பமே வேண்டாம் என்ற மனநிலை ஏற்படும். விரோதிகள் கை ஓங்கும். புதிய தொழில்கள் தொடங்குதல் கூடாது. தொழில் அமையும் வரை இருக்கும் தொழிலை அனுசரிச்சு செல்வது நல்லது. வேலையில் வீண் சண்டை சச்சரவில் ஈடுபடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


Thursday, April 26, 2012

கோச்சார பலன் புதன் நிறைவு பகுதி



புதன் ஏழாமிடத்திற்க்கு வரும் போது நல்ல துணிவு உண்டாகும். துணிவு இருப்பதால் முன்கோபத்துடன் நண்பர்களிடம் நடந்துகொள்வீர்கள். நண்பர்களை பகைத்துக்கொள்வீர்கள். மனதில் தீய எண்ணங்கள் ஏற்படும். பெண்களிடத்தில் பழக்க ஏற்பட்டு அதனால் அவமானம் ஏற்படலாம். மனைவிக்கு தெரியாமல் இது நடக்கும். செய்தொழிலில் அதிகமான நன்மையை எதிர்பார்க்க முடியாது.

புதன் எட்டாம் இடத்திற்க்கு வரும்போது அதிக பயணங்கள் ஏற்படும் அதன் மூலம் வருமானம் வரும்.  தொழிலில் தடைபட்ட காரியம் இந்த நேரத்தில் நன்றாக நடக்கும். நண்பர்கள் உதவி கரம் நீண்டுவார்கள். எப்பொழுதுதோ நண்பர்களிடம் கேட்ட பணம் இந்த நேரத்தில் கைக்கு கிடைக்கும்.

புதன் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும் போது கவலை, அலைச்சல் ஏற்படும். செய்தொழிலில் பிரச்சினை ஏற்படும் அதன் மூலம் ஒரு பைசா கூட லாபம் ஏற்படாது. தந்தை வழி உறவினர்களால் பிரச்சினை ஏற்படும். பொருள் இழப்பு ஏற்படும். குழந்தைகள் சொல் பேச்சை கேட்க மாட்டார்கள். கணவன் மனைவி உறவு மட்டும் நன்றாக இருக்கும். அதை வைத்து பிழைத்துக்கொள்ள வேண்டியது தான்.

புதன் பத்தாம் வீட்டிற்க்கு வரும் போது புதிய நகைகள் வரும். செய்தொழிலில் நிம்மதி கிடைக்கும். பொருள்வரவு கிடைக்கும். காதலில் வெற்றி அடையலாம். நீங்கள் ஒரு தலை காதல் செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் இந்த நேரத்தில் காதலை சொல்லலாம் காதலில் வெற்றி அடையலாம். பந்தயத்தில் வெற்றி பெறலாம். வெளிபயணங்கள் நன்மை செய்யாது.

புதன் பதினொன்றாம் வீட்டிற்க்கு வரும் போது செய்கின்ற தொழிலில் நன்மை கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வாய்க்கும். வேலை செய்கின்ற இடத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் வருமானம் வரும். மூத்த சகோதர்கள் உதவி செய்வார்கள். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்.

புதன் பன்னிரெண்டாம் வீட்டிற்க்கு வரும்போது கெட்ட பெயர் ஏற்படும். தோல் வியாதிகள் ஏற்படும் அதற்க்காக மருத்துவனை செலவு செய்ய நேரிடும். கடன் தொல்லை இருக்கும்.  குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமாகும். கணவன் மனைவி உறவு நல்ல படியாக இருக்கும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, April 25, 2012

கோச்சார பலன் புதன்



ராசிக்கு புதன் வரும்போது குடும்பத்தில் புதிய நபர்கள் வருவார்கள். கெட்டவர்கள் நட்பால் மனஅமைதி போய்விடும். கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலில் தடங்கல் ஏற்படும்.  குழந்தைகளால் பணசெலவு ஏற்படும் கவலையும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் பிரச்சினை ஏற்படும்.

புதன் இரண்டாம் வீட்டிற்க்கு வரும் போது குடும்பத்தாரால் பண செலவு ஏற்படும். செய்தொழிலில்  பிரச்சினை ஏற்பட்டு கெட்ட பெயர் வரும். வீணான அச்சம் மனதில் குடிக்கொள்ளும் இருந்தாலும் மனைவி மூலம் உதவி இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் பணஉதவி கிடைக்கும்.

புதன் மூன்றாம் வீட்டிற்க்கு வரும் போது கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியகள் நடைபெறும் அதனால் அருகில் இருக்கும் சொந்த குலதெய்வ வழிபாட்டு தலத்திற்க்கு சென்று வரலாம்.

புதன் நான்காமிடத்திற்கு வரும்போது மன மகிழ்ச்சிகாக பணசெலவு செய்ய நேரிடும். நான்காம் வீட்டில் புதன் இருப்பது நல்லது. தன லாபம் ஏற்படும். மாமன் மூலம் பணவரவு கிடைக்கும். செய்கின்ற தொழிலில் நல்ல லாபத்தை தரும். வேலை செய்யும் இடங்களிலும் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை செய்யலாம் அனைவரும் நட்புடன் பழகுவார்கள்.

புதன் ஐந்தாமிடத்திற்க்கு வரும் போது குழந்தைகளால் தொல்லை ஏற்படலாம். திடீர் என்று நடக்கும் சம்பவங்களால் மனதில் பிரச்சினை ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் வேலை மாற்றம் ஏற்பட்டு இடம் விட்டு இடம் செல்லலாம். அந்த இடமாற்றம் உங்களுக்கு பிடிக்காது. வெளி பெண்கள் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் பணவிரையம் ஏற்படும். அதன் மூலம் கணவன் மனைவி சண்டை ஏற்படும். செய்தொழிலில் பல தடைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

புதன் ஆறாமிடத்திற்க்கு வரும்போது எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். பெண்களால் பணவரவு இருக்கும். செய்தொழில் ஆதாயம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருந்துங்கள் நடத்துவார்கள் அதன் மூலம் வருமானம் மன மகிழ்ச்சி கிடைக்கும். மனைவி குழந்தைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். நிலங்கள் வாங்கலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Sunday, April 22, 2012

செவ்வாய் கோச்சார பலன் நிறைவு பகுதி



செவ்வாய் ஏழாம் வீட்டிற்க்கு வரும் போது களத்திர இடம் என்பதால் கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். தொழில் கூட்டாளி உடன் சண்டை ஏற்படும். வீண் அலைச்சல் கெட்ட பெயர் ஏற்படும். நண்பர்களும் விரோதிகளா ஆவார்கள்.  வயிறு சம்பந்தமான பிரச்சினை ஏற்படும்.

செவ்வாய் எட்டாம் வீட்டிற்க்கு வரும்போது ஆயுதங்களால் காயம் ஏற்படும். தற்கொலை எண்ணம் ஏற்படும். உங்களை விட கீழ் உள்ளவர்களிடம் கீழ்பணிந்து செல்ல வேண்டும். மனைவி மூலம் சண்டை சச்சரவு ஏற்படும். 

செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும் போது பொன் பொருள் சேர்க்கை வந்து சேரும். மனைவி உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். ஆரோகிய கெடுதல் ஏற்படும். இளம் வயதினராக இருந்தால் உயர்படிப்பில் பிரச்சினை வரும். உறவினர்கள் ஆதரவு இருக்கும்

செவ்வாய் பத்தாம் வீட்டிற்க்கு வரும்போது தொழில் வளர்ச்சி ஏற்படும். தொழிலில் அதிக செலவு செய்து வருமானம் ஏற்படும். மனைவி மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். திடீர் பணவரவு இருக்கும்.

செவ்வாய் பதினொன்றாம் வீட்டிற்க்கு வரும்போது குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மூத்த சகோதர்கள் சகோதரிகள் மூலம் வருமானம் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் மூலம் பொருள் வரவுகள் உண்டு.

செவ்வாய் பனிரெண்டாம் வீட்டிற்க்கு வரும் போது பெண்கள் மூலம் கெட்ட பெயர் ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படும். பொருள் இழப்பு அதிகமாக ஏற்படும். உடல்நிலையில் கவனத்துடன் இல்லை என்றால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, April 21, 2012

செவ்வாய் கோச்சார பலன்



வணக்கம் நண்பர்களே இன்று செவ்வாயின் கோச்சார பலனை பார்க்கலாம். செவ்வாய் உச்சமாகிற மகரராசி நாயகன் சனியின் கிழமையான சனிக்கிழமை செவ்வாயின் கோச்சார பலனை பார்க்கபோகிறோம். என்ன ஒரு ஏகாபொருத்தம் பாருங்கள். செவ்வாய் சனி இரண்டும் பகை. சனியின் ராசியில் தான் செவ்வாய் உச்சமாகிறார். செவ்வாய் சனியை அந்த அளவுக்கு பகையாக பார்க்காது ஆனால் சனி செவ்வாய்யை படு எதிரியாக பார்க்கும்.  இந்த தகவல் போதும் வாருங்கள் செவ்வாயின் கோச்சார பலன்களை பார்க்கலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு செவ்வாய் வரும் போது அந்த இடம் நல்ல இடமாக இருந்தால் தான் செவ்வாய் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவு வரும். விட்டுக்கொடுத்து போகவில்லை என்றால் இருவரும் பிரிய நேரிடும். ஏதாவது சண்டை சச்சரவு ஏற்படும்

செவ்வாய் இரண்டாமிடத்திற்கு வரும்போது தனவிரையம் ஏற்படும். ரத்த காயங்கள் ஏற்படுதல் குடும்பத்தில் தகராறு ஏற்படும். வீட்டில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் வண்பு வழக்குகள் மூலம் ஏற்படும்.

செவ்வாய் மூன்றாம் வீட்டிற்க்கு வரும்போது நல்ல தைரியம் ஏற்படும். தைரியத்தால் அடுத்தவர்களிடம் சண்டைக்கு செல்வார்கள். அலுவலகத்தில் எலி மாதிரி இருந்தவர்கள் புலி மாதிரி ஆகிவிடுவார்கள். எதிர்பாராத வகையில் உதவி இருக்கும்.விரோதிகள் சண்டைக்கு வரமாட்டார்கள்.

செவ்வாய் நான்காம் வீட்டிற்க்கு வரும்போது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். வெளியூர் பயணங்கள் செல்லாமல் இருப்பது நல்லது. விரோதிகள் கை ஓங்கும்.  கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும். உடல்நிலையில் கவனத்துடன் இருப்பது நல்லது.

செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும்போது வீட்டில் களவு போகும். உடல் ஆரோக்கியம் கெடும். குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். உறவினர்களிடத்தில் சண்டை போடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் இது மட்டும் நன்றாக இருந்தால் போதுமே அனைத்தையும் வெல்லாம்.

செவ்வாய் ஆறாம் இடத்திற்க்கு வரும் போது விரோதிகள் ஒழிவார்கள். பணவரவு இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவி இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வசதிகள் வீட்டிற்க்கு வரும். விரோதிகள் திடிர் என்று நண்பர்களாக மாறிவிடுவார்கள்.


தொடர்ச்சி அடுத்த பதிவில்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, April 20, 2012

கோச்சார பலன் சந்திரன்



சந்திரன் நின்ற ராசிக்கு சந்திரன் வரும்போது சிறு சிறு பிரச்சினைகளை கொடுக்கும். மனதில் ஒரு வித பட படப்பு இருந்துக்கொண்டே இருக்கும். என்னடா ஏதாவது பிரச்சினை வரும்மோ என்று நினைக்க தோன்றும். வீண் சச்சரவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

சந்திரன் நின்ற ராசியிருந்து இரண்டாமிடத்திற்க்கு வரும்போது குடும்ப வீட்டிற்க்கு வருவதால் நன்மைகள் இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். தன வீடாக வருவதால் வீட்டிற்க்காக செலவு செய்ய நேரிடும்.

சந்திரன் மூன்றாவது வீட்டிற்க்கு வருவதால் வருமானம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல மனமகிழ்ச்சி இருக்கும்.

சந்திரன் நான்காமிடத்திற்க்கு வரும்போது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்கான வழிவகைகள் ஏற்படும். தாயார் வழியில் நல்ல உதவி இருக்கும். பணவரவு இருக்கும். ஏதாவது கோர்ட்டில் வழக்கு போட்டால் நல்ல சாதகமாக தீர்ப்பு உங்களுக்கு வரலாம். கணவன் மனைவி அன்னோன்யாமாக இருப்பார்கள்.

சந்திரன் ஐந்தாம் வீட்டிற்க்கு வரும்போது மனக்கவலை இருக்கும். வீணான தொல்லை இருக்கும். பந்தயத்தில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். துணைவியார் மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அவர்கள் மூலம் பணவரவு ஏற்படும்.

சந்திரன் ஆறாம் வீட்டிற்க்கு வரும் போது செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புது நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சந்திரன் ஏழாம் வீட்டிற்க்கு வரும் போது மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும். செய்யும் தொழிலில் வருமானம் வரும். வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்திரன் எட்டாம் வீட்டிற்க்கு வரும் போது சந்திராஷ்டாமம் ஆகிறது வீணான பழி உங்களுக்கு ஏற்படும். பொருள் நஷ்டம் ஏற்படும். மொத்ததில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சந்திரன் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும் போது விரோதிகளால் துன்பம் ஏற்படும். பெரியோர்களின் கோபத்திற்க்கு ஆளாகலாம். தந்தை மூலம் கவலை ஏற்படலாம். நோய் தொல்லை ஏற்படும்.

சந்திரன் பத்தாமிடத்திற்க்கு வரும்போது மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவார்கள். உங்கள் நண்பர்களிடத்தில் ஏதாவது உதவி கேட்டு இருக்கலாம். இந்த நேரத்தில் அந்த உதவி திடீர் என்று கிடைக்கும்.

சந்திரன் பதினொன்றாம் வீட்டிற்க்கு வரும்போது நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் நல்லது நடக்கும். பந்தயத்தில் வெற்றி கிடைக்கும்.

சந்திரன் பன்னிரெண்டாம் வீட்டிற்க்கு வரும்போது விபத்துக்கள் ஏற்படலாம். பொருள் இழப்பு ஏற்படும். மருத்துவமனை செலவு ஏற்படும். தொலை தொடர்புகளால் பிரச்சினை ஏற்படும்.

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொது பலன்கள் தான். சந்திரன் வளர்பிறையில் ஒரு மாதிரியாகவும் தேய்பிறையில் ஒரு மாதிரியாகவும் இருக்கும் அதனால் பலன்களும் மாறுபடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, April 19, 2012

காமாண்டி



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் காமத்தால் சீரளிந்த குடும்பத்தைப் பற்றி பார்க்கலாம்.

கார்த்திக் என்பவர் சென்னையில் ஒரு மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். அவர் குடும்பம் அடிப்படையில் நல்ல வசதியான குடும்பம்.

அனைத்து சுகங்களும் கிடைத்துவிடும். பெரிய பண்ணை வீடு்கள் எல்லாம் இருக்கின்றன. அவருக்கு திருமண முடிந்து இரண்டு குழந்தைகள் இருந்தன ஒரு பெண் ஒரு ஆண் இரண்டு பேரும் நன்றாக படித்து பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார்கள்.

மூத்தது பெண், இளையது ஆண். பெண் ஒருவரை காதலித்தால் அதை கார்த்திக் ஏற்றுக்கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். காதல் திருமணம் ஆனாலும் கூட நல்ல வரதட்சிணை கொடுத்து திருமணத்தை சொந்த செலவில் நடத்திவைத்தார்.

கார்த்திக் பிறந்ததில் இருந்தே வசதியாக வாழ்ந்ததால் பணத்திற்க்கு பிரச்சினை இல்லை. பணம் இருந்தால் மனது எதனை தேடும் அந்த வழியில் பயணம் ஆனார். பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்தார். வீட்டில் வேலை செய்ய வேலைக்காரிகள் இருந்தார்கள்.

இவர் தனியாக வேறு பல சுயதொழில்கள் செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களையும் , வீட்டு வேலைகாரிகள் கூட விட்டுவைக்கவில்லை. எல்லாம் பெண்களிடத்திலும் மொத்ததில் மன்மதனாக வாழ்ந்தார் கார்த்திக் ஆறுபது வயது ஆனாலும் கூட மன்மதன் நினைப்பு குறையவில்லை.

இவருக்கு ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. அவனுக்கு திருமணம் நடைபெறவில்லை. இவரும் ஏறாத கோவில் இல்லை கேட்காத சோதிடம் இல்லை ஒன்றும் நடைபெறவில்லை.

இவருடைய பையன் ஏன் திருமணம் செய்யமாட்டிகிறாய் என்று கேட்டால் திருமணம் பிடிக்கவில்லை என்று கூறுகிறான். எவ்வளவோ கெஞ்சியும் திருமணமே வேண்டாம் என்கிறான். அதை கேட்டு அவர்கள் அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். இன்றைய தேதி வரை அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான்.

கார்த்திக் ராசி மிதுனம் கால சக்கரத்தில் மூன்றாவதாக வரும் ராசி. இதனை பார்த்தால் இரட்டையர்கள் போல் காட்சி அளிக்கும். பொதுவாக மிதுன ராசியை கொண்டவர்கள் மிகுந்த காமத்துடன் இருப்பார்கள். இவர்கள் நல்ல திறமையான அறிவு படைத்தவர்கள் ஆனால் அதை ஆக்க வழியில் பின்பற்றுவதை விட்டு விட்டு அழிவு பாதைக்கு செல்வார்கள். அதாவது காமத்திற்க்கு அதிகம் முக்கியதுவம் கொடுப்பார்கள்

ஒரு ஊரில் 5 பேர் மிதுன ராசியாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஐந்து பேர் அந்த ஊரின் காமத்தால் அழித்துவிடுவார்கள். அந்தளவுக்கு மன்மதன்களாக இருப்பார்கள். மிதுன ராசி புதனின் ராசி வீடு. இவர்கள் அதிகமாக காமத்தில் தொடர்பு வைத்திருப்பது வேலைக்காரர்களாகவும் ஏழைகளாகவும் தான் இருக்கும். அவர்களின் சாபத்தை நன்றாக வாங்கிவிடுவார்கள்.

மிதுன ராசிக்கு ஆப்பு அடிப்பர்களில் முதலாவதாக குரு கிரகம் தான் இருக்கும். குரு எவ்வளவு மோசமானவர் என்று இந்த ராசிகாரர்களை கேட்டாதான் தெரியும். அதனாலே சுபமங்கல நிகழ்ச்சி தள்ளி போகும்.

திரு ஜோதிட பித்தன் என்பவர் நான்கு Email களில் என்னிடம் கேள்வி கேடடுள்ளார். அவரின் கேள்வியே இரண்டு பதிவு போடலாம் அந்த அளவுக்கு கேள்விகள் கேட்டுள்ளார். அவரின் கேள்விகள் அனைத்தும் முக்கிய கேள்விகள் தான். நாம் எழுதுவது அடிப்படை பாடம் தான் இதுவே இன்னும் பாதி இருக்கிறது. அவரின் கேள்விக்கு அனைத்துக்கும் நான் பதிவு மாதிரி தான் எழுதவேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.

" காமாண்டி என்பது மன்மதனின் கோவில் பெயராகும். "


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, April 18, 2012

பரிகாரம் சம்பந்தமாக

வணக்கம் நண்பர்களே நேற்று திருமணத்திற்க்கு ஒரு பதிவை போட்டோம் அதில் கடைசியில உங்கள் திருமணத்தில் சிக்கல் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் அதற்கு தேவையான பரிகாரங்களை பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக செய்து தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.

அந்த பதிவை போட்டவுடன் எனது email க்கு பல mail வந்துள்ளன. எனக்கு இலவசமாக பரிகாரம் செய்துகொடுங்கள் என்று கேட்டுள்ளார்கள் அதில் பார்த்தீர்கள் என்றால் பல பேர் நல்ல வசதியாக இருக்கிறார்கள். ஏன் தான் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த மக்களை இப்படி கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழன் இரத்ததில் இலவசம் என்ற வார்த்தை நன்றாக பதிந்துவிட்டது. பின்பு எப்படி இதை மாற்றுவது.

சில பேர் எழுதி உள்ளார்கள் ஏண்டா இப்படி பணம் ஆசை பிடித்து அழைகிறாய் என்று அவர்களுக்கு சொல்லுகிறேன் அரசியலில் இருப்பவர்கள் செய்யாததை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அதைப் பற்றி எழுதி சுயவிளம்பரம் எனக்கு வேண்டாம்.

நான் செய்யும் பரிகாரத்தை இப்பதிவில் எழுதமுடியாது ஏன் என்றால் அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதை வைத்து ஒருவரை குணப்படுத்தவும் முடியும் கொலை செய்யவும் முடியும்.

சாதாரணமான பரிகாரங்களை மட்டும் பதிவுகளில் எழுதுகிறேன். அதை பின்பற்றலாம். சாதாரண பரிகாரங்கள் செய்தால் 20 வயதில் ஆரம்பித்தால் 30 வயதில் தான் நடக்கிறது. சில ஜாதகங்கள் உடனே நடந்துவிடும். அது அவர் ஜாதங்களை பொறுத்து நடக்கும்.

சிலபேர்கள் எழுதியுள்ளார்கள் கூட்டமாக வைத்து ஒரே நாளில் செய்துவிடுங்கள் என்று கண்டிப்பாக அந்த மாதிரி செய்தால் நடக்காது. ஒருவர் ஜாதங்கள் போல் அனைத்து பேருக்கும் இருக்காது. முடிந்தவரையில் தனியாகவே தான் நடத்தவேண்டும். ஜாதங்கள் பலவகை பரிகாரங்களும் பலவகை அதனை புரிந்துக் கொள்ளுங்கள். அனுப்பிய அனைவருக்கும் கண்டிப்பாக செய்து தருகிறேன்.

பெண்களாக இருந்தால் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஏன் என்றால் இது ஒரு சராசரியான வயது இந்த வயதுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால் தான் பரிகாரம் செய்ய வேண்டும் . குறைந்த வயது உடையவர்கள் திருமண வாழ்வில் பிரச்சினை என்று உங்கள் ஜாதகங்களில் தெரிந்தால் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிரச்சினை எந்த பரிகாரம் செய்து பலன் இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தளவுக்கு என்னால் உங்களுக்கு நல்ல வழி செய்து தரமுடியும்.

நீங்கள் லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஏதோ சென்னையில் இருக்கும் சோதிடர்களிடம் சென்றால் லட்சகணக்கில் கறந்து விடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி எல்லாம் நான் கிடையாது. உங்கள் பொருளாதார வளத்தை கொண்டுதான் செலவு இருக்கும். இதிலும் இலவசம் உண்டு பா கவலையை விடுங்கள்.

இன்றைய தேதி வரை இலவச சோதிடத்திற்க்கு தொடர்பு கொண்டு கேட்டவர்களுக்கு அனைத்து பேருக்கும் RS 1000 செலவு செய்து பார்த்தால் எப்படி பலன் சொல்லுவார்களோ அந்த அளவுக்கு சோதிட பலன் சொல்லிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது நண்பர்களாக ஆகிவிட்டார்கள்.

நான் பலன் சொல்லி முடித்தவிடும் அவர்கள் கேட்கும் கேள்வி சார் உங்களுக்கு நான் பணம் தருகிறேன் என்று தான் இருக்கிறது. எனக்கு மிக பெரிய மனதுக்கு நிம்மதி தரும் விஷயம் இலவச சோதிடம் தான்.

சில அயல்நாட்டு ஜாதகங்கள் மட்டும் அப்படியே பலன் சொல்லாமல் இருக்கிறது அவர்களுக்கு கூடிய விரைவில் பலன்களை அனுப்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, April 17, 2012

கல்யாணம் ஆகா கல்யாணம்



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் பார்க்க போவது திருமணத்தைப் பற்றி மக்கள் சோதிடரை வாழ்நாளில் பார்க்கபோவது திருமண ஏற்பாட்டுக்குதான் இருக்கும் மீதி பிரச்சினைகளுக்கு பார்க்க போவது கிடையாது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது அனைத்து பிரச்சினைகளுக்கும் செல்கிறார்கள். வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமண பயம் ஏற்படுகிறது.

நாட்டில் அதிக விவாகரத்து நடைபெறுகிறது எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது என்று மனதில் நினைப்பது. அந்த காலத்தில் விவாகரத்து குறைவு ஆனால் இந்த காலத்தில் விவாகரத்து அதிகமாக இருக்கிறது அதனால் திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது என்று என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களிடம் நான் சொல்வதை உங்களிடம் சொல்கிறேன்.

அந்த காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை குறைவுதான் அந்த காலத்தில் விவாகரத்து 1000 பேர்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவில் நடந்தது என்றால் இந்த நேரத்தில் 100000 பேர்களுக்கு நடப்பது குறைவுதான்.


ஏன் என்றால் அவ்வளவு மக்கள் தொகை இந்தியாவில் இருக்கிறது கணக்கு செய்து பார்த்தீர்கள் என்றால் ஆகா நான் சொல்லுவது சரியாகதான் இருக்கிறது என்று உங்கள் மனதில் என்ன தோன்றும். அந்த காலத்தில் மீடியா இல்லை இந்த காலத்தில் மீடியாகள் பலம் அதிகமாக இருக்கிறது. மீடியாக்கள் விவாகரத்தை ஒரு நிகழ்ச்சியாகவே நடத்துகிறது. அதை கண்டு நீங்கள் அதிகம் பயப்படுகிறீர்கள்.

தனக்கு வரவேண்டியவர் நன்றாக இருக்க வேண்டும். ஒழுங்கான நடத்தை உடையவராக இருக்கு வேண்டும் என்று இருவரும் நினைக்கிறார்கள். அதுவும் இன்றைய நாட்களில் பெண்களுக்கு தனக்கு வரவேண்டியவர் எந்த வித கெட்ட பழக்கமும் இருக்ககூடாது என்று நினைக்கிறாள்.

கை நிறைய அனைத்து வங்கியிலும் கணக்கு வைத்து நிறைய பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். குடி பழக்கம் இருக்கவே கூடாது என்று நினைக்கிறாள். அவளுடன் அவர்கள் பெற்றோர்களும் சகோதர்களும் இதை மாதிரி நினைக்கிறார்கள். நீங்களே பார்த்து இருக்கலாம் பல திருமண ஏற்பாட்டாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவார்கள் அதில் கலந்து கொள்பவர்களே பார்த்தாலே தெரியும்.

அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியை ஆனால் பிராக்டிகல பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் மது குடிக்காமல் இருப்பவர்கள் இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். மது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்க ஆரம்பித்துவிட்டது. எதில் எங்கு போய் குடிக்காத மாப்பிள்ளையை தேடுவது. அப்படி தேடினால் இந்த ஜென்மத்தில் திருமண முடியாது.

இது இப்படி இருக்க மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால் தனக்கு வரவேண்டிய பெண் அழகாக இருக்க வேண்டும். நல்ல படித்திருக்க வேண்டும் நடத்தையில் ஒழுங்காக இருக்க வேண்டும். நல்ல வரதட்சிணை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனக்கு வரும் மனைவி, நண்பர்கள் அமையும் குடும்பத்தார்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவன் எப்படி நாளும் இருக்கலாம் என்று அனைத்து தவறையும் செய்துக் கொண்டு இருப்பான். இந்த மாதிரியே ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதில் இயற்கை விளையாடி விடும். உங்களை ஏமாற்றி விடும். அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். திருமணத்தில் அதிக எதிபார்ப்பு இல்லாத மனிதர்களுக்கு அருமையான வாழ்க்கை அமைகிறது. இது அனுபவ உண்மை.

அடுத்தாக சோதிடத்தை பல Blog யிலும் படிக்கிறது . அதில் சொல்லப்பட்ட விதிகளை எடுத்துக்கொண்டு எனக்கு ஏழாம் வீட்டில் தீய கிரகம் இருக்கிறது. எனக்கு குடும்ப வீட்டில் தீய கிரகம் இருக்கிறது எனக்கு திருமண வாழ்க்கை அமையாது. குடும்பம் அமையாது, குழந்தைகள் அமையாது என்று இவர்களாகவோ நினைத்துக்கொண்டு அனைத்தையும் தள்ளி போடுகிறது இது ஒரு பழக்கம். கிட்டதட்ட முக்கால் வாசி கிரகங்களும் கெட்டால் கூட ஒன்று இரண்டு கிரகங்கள் உங்களுக்கு அனைத்தையும் பெற்று தந்துவிடும். அதை எல்லாரும் மறந்து விடுகிறார்கள்.

நாங்கள் சொல்லுவது எல்லாம் பொதுவிதிதான் நடக்கலாம் நடக்காமல் போகலாம். இதைப்பற்றி நீங்கள் கவலை பட தேவையில்லை. ஒன்பது கிரகமும் ஏதாவது ஒர் இடத்தில் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஏழில் அமைந்தால் என்ன இரண்டில் அமைந்தால் என்ன இறைவன் இருக்கிறான் அனைத்தையும் அவன் பார்த்துகொள்வான் என்று நினைத்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

கிரகங்களே ஆட்டி வைப்பவனை நாம் பிடித்துக்கொண்டால் அனைத்தையும் வென்று விடலாம் அதை விட்டு விட்டு இதனை கண்டு பயப்படாதீர்கள்.


சோதிடம் கற்பவர்களை பார்த்தீர்கள் என்றால் அதிகபடியான நபர்களுக்கு குரு திசை தான் நடக்கும்.


இல்லை என்றால் ஏதாவது ஆன்மீகம் சார்ந்த திசை நடக்கலாம். இந்த திசைகள் நடக்கும் போது உங்களுக்கு சோதிடத்தின் மீது ஈர்ப்பு, ஆன்மீக விஷயத்தில் ஈர்ப்பு சன்யாசத்தின் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதனாலே நான் சன்யாசியாக போகிறேன் என்று சொல்லிக்கொண்டு அழைவீர்கள். எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்வீர்கள்.

குரு திசை முடிந்து சனி திசை ஆரம்பம் ஆனது என்றால் சாமியாவது சன்யாசியாது என்று மனது நினைக்க தோன்றும். ஏதாவது ஒரு பெண்னுடன் இருந்தால் என்ன என்று மனது நினைக்க தோன்றும். பல கெட்ட எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். போகும் திசை எல்லாம் மாறிவிடும்

சன்யாசி வாழ்க்கை என்பது லட்சத்தில் ஒருவருக்கு அமையும். சன்யாசி இந்தியாவில் விரல் விட்டு எண்ணிவிடலாம். சம்சாரியை கணினியால் கூட எண்ணமுடியாது. சம்சாரி வாழ்க்கை அவ்வளவு ஜாலி. உங்களை சுற்றி சம்சாரிகள் தான் இருப்பார்கள் சன்யாசி கிடையாது. அதனால் திருமணத்தை கண்டு பயம் வேண்டாம்.

திருமண ஏற்பாட்டின் போது சில தடைகள் இருக்க செய்யும் அதை ஒரு சில பரிகாரம் மூலம் சரிசெய்து விடலாம். தடை இருப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். பரிகாரம் செய்து தருகிறேன். பணம் இருப்பவர்களிடம் பணத்தை வாங்குகிறேன். இல்லாதவர்களுக்கு அந்த பணம் மூலம் இலவசமாக செய்து தருகிறேன்.

திருமணத்தை பற்றி நிறைய எழுத வேண்டியது உள்ளது அதை நேரம் கிடைக்கும் போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வளவு நேரம் எனக்காக செலவு செய்து படித்ததற்க்கு மிக்க நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, April 16, 2012

சனி யாரை கெடுப்பார் ?



இந்த பதிவில் நாம் பார்க்கபோவது எனக்கு தெரிந்த ஒரு நபரின் வாழ்க்கையை பற்றி. இவர் பிறந்தது ஒரு அழகிய கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று பயிர்கள் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். முப்போகம் விளையகூடிய நிலங்கள். காவிரி பாயும் ஊர் தான்.

இப்பொழுது முப்போகத்திற்க்கு காவிரியில் தண்ணீர் வருவது கிடையாது நிலத்தில் போர்செட் அமைத்து முப்போகம் பயிர் செய்கிறார்கள். அதனால் தான் இப்பொழுது முப்போகம் விளைகிறது.

போர் செட் அமைத்ததால் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி 100 அடியில் கிடைத்த தண்ணீர் 400 அடி போர் போட்டால் தான் கிடைக்கிறது அதுவும் கோடையில் தொடர்ச்சியாக தண்ணீர் வருவதில்லை. மோட்டார் பம்புயை இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஆப் செய்து தண்ணீர் ஊறியவுடன் மீண்டும் இயக்கி தண்ணீர் பாய்ச்சிகிறார்கள். அதுவும் இப்பொழுது அந்த தொல்லை இல்லை ஏன் என்றால் மின்சாரம் வருவதேயில்லை. மின்சாரம் தடைபட்டதால் மிகப்பெரிய புண்ணியம் நிலத்தடி நீர் உறிஞ்சபடுவதில்லை.

அந்த மாதிரி ஊரில் சிவா என்பவர் இருந்தார். சிவாவுடன் பிறந்தது இரண்டு சகோதரிகள் ஒரு மூத்த சகோதரன். சிவாவுடன் பிறந்த அனைவருக்கும் திருமணம் முடிந்தது. சிவா அதே ஊரில் காதல் திருமணம் செய்தார். அதுவும் இருவர் வீட்டிற்க்கும் தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்தார். ஒரு மாத காலம் வெளியூரில் வசித்துவிட்டு ஊர் திரும்பி சிவா வீட்டிலேயே இருவரும் தனிக்குடிதனம் நடத்தினார்கள். இருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூன்றும் பெண் குழந்தைகள் இந்த காலத்தில் சிவா அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார்.

அந்த நேரத்தில் ஒரளவு வசதி வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் ஒரு புதிய தொழில் தொடங்கினார். அது என்ன தொழில் என்றால் பணத்தை வட்டிக்கு விடுவது. இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்து மிகப்பெரிய அளவில் பணத்தை சேர்த்தார். அந்த ஊரில் அவரை வட்டி சிவா என்று தான் கூப்பிடுவார்கள். அந்தளவுக்கு வட்டி தொழிலில் கொடிகட்டி பறந்தார்.

அவர் எப்படி சேர்த்தார் என்றால் அந்த ஊரில் வயல் வெளிகளில் வேலை செய்ய அந்த ஊரில் ஏழை மக்கள் வேலை செய்யும் பக்கத்து ஊரில் இருந்தும் வேலை ஆட்கள் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு குறைந்த அளவில் நிலம் அவர்கள் வசிக்கும் ஊரில் இருக்கும். அவர்கள் அன்றாடம் பிழைப்பை நடத்த இந்த மாதிரி வேலைக்கு சென்றால் தான் உண்டு.

இன்றும் இதே மாதிரி நிலையில் பல ஊர்களில் இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்ற எந்த அரசாங்கமும் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதே ஏன் நாம பேசனும் விஷயத்திற்க்கு வருவோம்.

சிவாவிடம் இந்த ஏழை மக்கள் அவசர தேவைக்கு பணத்தை வாங்குவார்கள். சிவா என்ன வட்டி போடுகிறார் என்று தெரியாது. ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சென்றால் பணத்தை வாங்கியவர்கள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை பணத்திற்க்கு வட்டியாக ஓட்டி வந்துவிடுவார்.

ஒரு வருட காலத்தில் அவர்களிடம் இருக்கும் அந்த குறைந்த பட்ச நிலத்தையும் எழுதி வாங்கிவிடுவார். இப்படியே பல ஊர்களை வாங்கிவிட்டார். இந்த நிலையில் பல ஏக்கர் நிலங்கள் பணவசதிகள் இவரிடம் சேர்ந்தது.

மூத்த பெண்னுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். பணம் கொட்டி கிடந்ததால் அந்த பெண்ணை மணம் முடிக்க அந்த ஊர் பக்கத்து ஊரில் எல்லாம் கடுமையான போட்டி நிலவியது கடைசியாக இவரே ஒரே பையனாக பார்த்து திருமணத்தை வெகு விமர்சியாக அந்த ஊரே பார்த்து அசந்து போகிறமாறி நடத்தினார்.

சிவாவிற்க்கு பண சேர்ந்தாலும் வட்டி ஆசை விடவில்லை. தொடர்ச்சியாக வட்டி தொழிலை நடத்திக்கொண்டுதான் இருந்தார். உங்களுக்கு நினைக்க தோன்றுகிறதா கடவுள் இல்லையாட என்று தானே.

கடவுள் விடுவாரா என்ன ?

கடவுளின் திருவிளையாடல் ஆரம்பம் ஆனது. கடைசி பெண்னுக்கு முதலில் வைத்தார் செக். சிவாவிற்க்கு கடைசி பெண்ணின் மீது தீராத பாசம். அந்தபெண்னுக்கு இதயத்தில் ஓட்டையை ஏற்படுத்தினார். சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார். அந்த அறுவை சிகிச்சையிலியே மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு பின்பு ஒரளவு முன்னேற்றம் கண்டு உயிர் பிழைத்து திரும்பியது. ஒரு வழியாக நல்லபடியாக முடிந்து வீடு வந்தார்கள். நாட்கள் ஓடியது அப்பொழுதும் அவர் சும்மாக இருக்கவில்லை வட்டி தொழிலை தொடர்ந்து செய்து வந்தார்.

முடிவு அத்தியாம் எழுத சனி பகவான் அவர் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்க்கு விரைய சனியாக வந்தார். சிவாவின் ராசி கன்னி. அவரின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சனி பகவான் அமர்திருந்தார். ஐந்தில் சனி இருந்தாலே ஒன்று குழந்தைகள் இருக்காது அப்படியே குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைக்கு அவர் தகப்பனால் கொள்ளி வைக்க வேண்டும். இந்த நிலையை ஐந்தில் உள்ள சனி ஏற்படுத்தும்.

இவருக்க ஏழரை சனி ஆரம்பித்துவிட்டதா முதலில் ஏழரை சனி செய்த வேலை கடைசி பெண்னுக்கு அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருந்ததா. அந்த பெண் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தது.

இவருக்கு வட்டி தொழிலில் உறுதுணையாக ஒரு நண்பர் இருந்தார். அவரின் தான் இவருக்கு முழு நம்பிக்கையான ஆள். அந்த ஆளுடன் வண்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் பைக்கில் இருந்து பின்னாடி விழுந்து அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு உலகமோ நின்று போய்விட்டதாக உணர்ந்தார். தாங்க முடியாத துயரம். இதை படிக்கும் உங்களுக்கே தெரியும் வயதுக்கு வந்த பெண் இறந்தால் எப்படி இருக்கும் . கல்நெஞ்சுகாரர்களுக்கும் கண்களில் நீர் வரும்.

அந்த பெண்னுக்கு கொள்ளி வைத்தார். ஏழரை சனி ஐந்தாம் வீட்டின் காரத்துவத்தை கன கச்சிதமாக முடித்தது. அவர் ஆடிப்போய் விட்டார். ஒவ்வொரு நாளும் மனதில் தாங்கமுடியாத துயரத்துடன் நாள்களை கடக்க வேண்டியாதாகிவிட்டது. அதுவோடு விட்டாரா சனி பகவான் அதுதான் இல்லை மறுபடியும் வேலையை ஆரம்பித்தார் மூத்த பெண்யை திருமணம் முடித்து கொடுத்திருந்தார் இல்லையா அந்த பெண்னுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை. எவ்வளவு தான் பண வசதி இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் முடிந்தது எல்லாம்.

வீட்டில் நிம்மதி போய்விடும் அதைவிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பேச்சின் தலைப்பு செய்தி இந்த விஷயமாக தான் இருக்கும். அந்த பெண்னை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மிகுந்த டார்ச்சர் செய்தார்கள். அந்த பெண் மிகுந்த விரக்திக்கு போய் ஒரு முறை தற்கொலைக்கே போய்விட்டது. யார் செய்த புண்ணியமோ கடைசியில் காப்பாற்றிவிட்டார்கள்.

நம்ம சிவா ஏற்கனவோ மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கி தவிப்பவருக்கு இது அடுத்த பேரடியாக விழுந்தது. மனிதன் வாழ்க்கையில் நொந்து போய்விட்டார். அதுவுடன் வாழ்ந்து வருகிறார். இன்னும் ஏழரை சனி விடவில்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவர் இப்பொழுது ஒவ்வொரு கோவிலாக நடந்துக்கொண்டிருக்கிறார். ஏழைகளுக்கு துன்பம் அளித்துவிட்டு மனிதர்கள் எங்கு சென்றாலும் நிம்மதி கிடைக்காது. பரிகாரமும் எடுபடாது.

நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நாம் நல்லது செய்தால் ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி ஒன்றும் செய்யாது. முன் ஜென்மத்தில் பாவங்களை ஏழரை சனியில் அனுபவிக்கும் போது அந்த அளவுக்கு தாக்கம் இருக்காது. இந்த பிறவியில் நாம் செய்யும் தவறுகள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒவ்வொருவரும் இதனை கண்டு நடுங்கிவிடுகிறார்கள்.

தவறுகளை குறைத்தால் தப்பிக்கலாம் இல்லை என்றால் அனுபவிக்க வேண்டியது தான்.

இதுவரை பொறுமையாக படித்த உங்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Sunday, April 15, 2012

இளம் சோதிடர்கள்



இளம் சோதிடர்களுக்கு ஒர் அறிவிப்பு என்னிடம் இந்த தளத்தின் வழியாக இலவச சோதிடம் பார்த்தவர்கள் அனைவரும் சோதிடத்தில் நல்ல அறிவோடு இருக்கிறார்கள் அது மிக்க மகிழ்ச்சி . என்னிடம் பேசியவர்கள் அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி சோதிடத்தை நாங்கள் இன்னும் நல்ல முறையில் கற்று பிறர்க்கு சோதிடம் பார்க்கலாமா என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு பாதி பேருக்கு நான் தொலைபேசிலேயே பதில் அளித்துள்ளேன். அப்படி இருந்தாலும் இந்த பதிவு மூலம் அனைவருக்கும் விபரமாக தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் பல வருடங்களாக இந்த சோதிட தொழில் செய்து வருகிறேன். இதுவும் ஒரு தொழில் தான்.

அந்த காலத்தில் சோதிடத்தை காப்பாற்ற வேண்டும் என்று அந்த கால அரசர்கள் சோதிடர்களுக்கு அனைவருக்கும் உதவி செய்து சோதிடத்தை காப்பாற்றினார்கள். இன்றைய அரசோ இதை எல்லாம் செய்வது இல்லை.

சோதிடர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களும் வாழ வேண்டும் அதனால் சோதிடர்கள் வருமானம் பார்ப்பது தப்பில்லை. நான் சொல்ல வந்த விஷயத்திற்க்கு வருகிறேன்.

சோதிடம் பார்ப்பதால் நம்மிடம் வரும் வரும் ஒவ்வொரு ஜாதகத்தின் மூலம் 10 % பாவம் ஆவது நமக்கு சேருகிறது.

இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம் ஒரு ஜாதகத்தை எடுத்தாலே பல விஷயங்கள் உங்களுக்கு புரியும். சில ஜாதகங்கள் நமக்கு கடுமையான கோபத்தை உண்டு செய்யும், சில ஜாதகங்கள் காமத்தை உண்டு செய்யும், சில ஜாதங்கள் தூக்கத்தை உண்டு செய்யும் இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கின்றன. அது எல்லாம் உங்களுக்கு அனுபத்தில் உணரலாம்.

என்னிடம் சில பேர் கேள்வி கேட்டார்கள் பரிகாரம் செய்து கொடுத்தால் தானே பாவம் சேரும் ஜாதகம் பார்த்தால் பாவம் சேருமா என்று கேட்டார்கள்.

நீங்கள் ஒரு தொழில் முறை சோதிடர்களாக இருந்தால் பல பிரச்சினைகளை நீங்கள் சந்தீப்பீர்கள். அதற்கு காரணம் அது பிறருடைய ஜாதகத்தால் வந்த பிரச்சினைகளாக இருக்கும்.

என்னுடைய அனுபவத்தில் எனக்கு கடுமையான அலர்ஜி ஏற்பட்டது அதை போக்க நான் பட்டபாடு இருக்கிறதே அதை சொல்ல முடியாது அந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன். சொந்த வாழ்க்கையில் பல இன்னல்கள் சந்தித்து வந்திருக்கிறேன்.

என்ன ராஜேஷ் நீ மட்டும் நல்ல சம்பாதிக்கலாம் நாங்கள் சம்பாதிக்க கூடாது என்று கேட்கலாம். சோதிடத்தின் மூலம் வரும் வருவாய் கர்மவருவாய் அதன் பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதைப் பற்றி பல Blog யில் வந்துள்ளது. நான் சொல்ல தேவையில்லை.

உங்களுக்கு அருகில் யாரும் சோதிட தொழிலை செய்து வந்தார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை உற்று நோக்கினால் அப்பொழுது தெரியும் அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. அவர்களின் குழந்தைகள் வாழ்விலும் பெரும் பிரச்சினைகளை சந்திருப்பார்கள். ஒரு சில காலம் நன்றாக ஒடும் அதற்கு பிறகு அவர்கள் படும் பாடு வார்த்தைகளால் சொல்ல முடியாது.

பின்பு எதற்காக இந்த Blog யை எழுதுகிறாய் என்று கேட்கலாம். உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் ஜாதகத்தை மட்டும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அது போதும். உங்களுக்கு பிறகு உங்கள் சந்ததினர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் அதுவே மிகப்பெரிய விஷயம். என்னுடைய நோக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சோதிடர்.

நீங்கள் சோதிடம்தான் தொழிலாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஏதாவது ஒரு தேவதையை நித்தமும் வழிபடுங்கள். திருவண்ணாமலை அடிக்கடி சென்று கிரிவலம் வாருங்கள். இராமேஸ்வரம் சென்று நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்யுங்கள். திருசெந்தூர் சென்று வாருங்கள் ,விரதமுறைகளை கடைபிடியுங்கள். இந்த மாதிரி செய்து இந்த தொழிலை செய்யலாம். ஆனாலும் கஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, April 14, 2012

வேணாம் மச்சான் வேணாம்



வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ராஜா இந்த பெயருக்கு ஏற்றார் போல் ராஜாகவே இளமையில் இருந்தார். வீட்டில் ஒரே பையன் செல்லமாக செல்வ செழிப்பில் வாழ்ந்தார்.

இளமை காலம் ஆரம்பம் ஆனது. இளமையில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் பருவ காலம் சில்மிசங்கள் இவருக்கும் பிடித்த ஆட்டம் போட வைத்தது.

இவருடைய வாழ்வில் முதல் முறையாக சரளா என்ற பெண் வந்தாள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் இவனை நண்பனாகத்தான் பார்த்தது ஆனால் இவனே காதலாக பார்த்தான்.

ஆனால் இவன் காதலை அவளின் சொல்வதற்க்கு மன தயக்கம். பள்ளியில் படித்ததால் இருக்கலாம். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் பார்த்தால் தெரியும் அனைத்து வேளையும் எட்டாம் கிளாஸ்யிலே முடித்துவிடுகிறார்கள்.

நம் கதையில் வரும் கதாநாயகன் வாழ்வில் நடந்தது 20 வருடங்களுக்கு முன்பாக. இப்பொழுது இருக்கும் வசதிகள் அந்த நேரத்தில் இல்லை . சரி மேட்டருக்கு வருகிறேன். இருவரும் பள்ளி படிப்பை முடித்து விட்டார்கள். ஆனால் இவர் கடைசி வரை நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொல்லவே இல்லை.

பத்தாவது தேர்வை முடித்துவிட்டார்கள். இருவரும் ஒரே பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கூடத்திற்க்கு சென்றுவிட்டார்கள். நம்ம ராஜா அவள் படிக்கும் பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்று சொல்லி அவருடைய அப்பாவிடம் பல போராட்டங்கள் நடத்தி பார்த்தார். கடைசி வரை முடியவில்லை .

இவர் சென்ற பள்ளியில் 11 வகுப்பில் படிக்கும் போது இவர் தங்கி இருக்கும் ஊரில் தேவி என்ற பெண் ஒருத்தி இருந்தால் அவரிடம் இவர் காதல் வயப்பட்டார். அவள் பின்னாடி சுற்றினார். கிட்டதட்ட இரண்டு வருட காலம் சுற்றினார். காதலை சொல்லவில்லை. இவருக்கு 12 வகுப்பு இறுதி தேர்வு நடக்க 20 நாட்கள் மட்டும் இருந்தது அந்த நேரத்தில் இவரிடம் விதி விளையாடியது காதலை தேவியிடம் சொன்னார். அவ்வளவு தான்.

இவரின் காதலை அவள் ஏற்றக்கொள்ளவில்லை . நம்ம ஆள் மனமுடைந்து கிட்டதட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தார். விளைவு 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியை தழுவினார்.

அதனால் டுடோரியல் காலேஷ் சென்று படிக்க ஆரம்பித்தார். அங்கு சென்றும் இவர் சும்மாக இருக்கவில்லை மறுபடியும் வேறு ஒரு பெண் வந்தால் அவளிடம் இவர் பழக ஆரம்பித்தார். உடனடியாக காதலை சொன்னார் அந்த பெண் இவர் காதலை ஏற்றுக்கொண்டாள். இவருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. வாழ்க்கையில் ஒரு பெண் தன் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டால் என்று மிகுந்த மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சென்றது.

இந்த நேரத்தில் டுடோரியல் சென்டர் நிர்வாகத்திற்க்கு இந்த விஷயம் தெரிந்து இருவரையும் கண்டித்து பார்த்தார்கள். அதில் இந்த பெண் அந்த டுடோரியல் சென்டரில் இருந்து வேறு டுடோரியல் சென்று விட்டால் ஆனால் இவர் செல்லவில்லை அந்த பெண்னை இவர் அடிக்கடி சந்திப்பது நடந்தகொண்டே இருந்தது.

அந்த பெண் இவரை கழட்டிவிட்டு வேறு ஒரு பையனேடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் நம்ம ஆள் சும்மாக விடவில்லை நேரிடாக அவளின் அப்பாவிற்க்கு அனைத்து விபரத்தையும் நேரடியாக போய் செல்லிவிட்டான்.

அப்பா சும்மா விடுவாரா. இவனையும் திட்டி நீ எல்லாம் உருபடவே மாட்டாய். அவளை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் அது பெரிய பிரச்சினையாகி அந்த பெண்க்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை முடித்துவிட்டார்கள்.

நம்ம ஆள் பல பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இதே மாதிரி பழி வாங்குவது இவரின் வேலையாகவே வைத்துள்ளார். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக எந்த பிரச்சினைக்கும் செல்வதில்லை. என்ன இன்னமும் திருமணம் நடைபெறவில்லை.

இவரின் வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இவருடை லக்கனம் மகரம் மூன்றாம் வீட்டில் கேது பகவான். ஆறாம் வீட்டில் குரு பகவான் பன்னிரண்டாம் வீடு தனசு வீடாக வருகிறது. இவர் பள்ளி படிக்கும் காலத்தில் ராகு திசை ஆரம்பம் ஆனாது. ராகு திசை வந்தாலே பிரச்சினை தான். அதனாலே வாழ்க்கை திசை மாறியது. ராகு திசை காம விஷயத்தில் மிக பெரிய தாக்கத்தை கொடுத்துவிடும். அதினாலே சீரளிந்து விடுவார்கள்.

குரு திசை ஆரம்பத்தில் பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டது ஏன் என்றால் குரு மூன்றாம் வீட்டிற்க்கு ஆறாம் வீட்டிற்க்கு பன்னிரண்டாம் வீட்டிற்க்கு காரகம் வகிக்கிறார். குரு மூன்று வீட்டு பலனையும் கொடுக்க வேண்டும். காமத்திற்க்கு மூன்றாம் வீடு விரோதிக்கு ஆறாம் வீடு பழிவாங்குவதால், விரையம் ஏற்படுகிறது அதற்கு பன்னிரண்டாம் வீடு மூன்று வீட்டின் பலன்களும் கச்சிதமாக நடந்தது. இவர் 33 வயது வரை இந்த மாதிரி செய்து வந்தார்.

ஆனால் நாம் அவனை சும்மா பார்க்கும் போது என்ன சொல்லுவோம். அவன் ரொம்ப திமிர் பிடித்தவன் எதற்க்கும் லாயக்கற்றவன் என்று சொல்லுவோம். அவனுடைய ஜாதகத்தில் இப்படி இருக்கும் போது என்ன செய்வது.

இந்த மாதிரி நீங்கள் இருக்கலாம் அல்லது உங்கள் நண்பர்கள் இருக்கலாம், உங்கள் குடும்பத்தில் உங்கள் மகன் அல்லது மகள் இருக்கலாம் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறியதற்கு திசை மாறுவதற்க்கு திசை மாறபோவதற்க்கு காரணம் சோதிடத்தில் இந்த மாதிரி சில கிரகங்களின் கோளாறு தான் காரணமாக இருக்கும்.

பலபேர்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை நான் சோதிடம் மூலம் செய்து கொடுத்துள்ளேன். உங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தால் அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நமது ஜாதக கதம்பம் 3 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நன்வேளையில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்லிக்கொள்கிறேன். நந்தன வருடத்தில் அனைவரின் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க ஆண்டவனை பிராத்திக்கிறேன். இந்த வருடம் சோதிடத்தில் பல நல்ல விஷயங்களை உங்களுக்கு தர மிகுந்த ஆவலை கொண்டுள்ளேன். உங்கள் வரவு எனக்கு தேவை நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் பல கோணங்களில் சிந்தித்து சோதிடத்தில் புதிய தகவல் தர உதவும். அனைவருக்கும் நன்றி.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Thursday, April 12, 2012

தேய்பிறை அஷ்டமி



வணக்கம் நண்பர்களே என்னிடம் தொலைபேசியில் பேசியவர்களில் ஏழரை சனி, அஷ்டமசனி,அர்த்தாஷ்டாம சனி நடப்பவர்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறேன் என்று கூறினார்கள்.

பரிகாரமாக 13-4-2012 அன்று தேய்பிறை அஷ்டமி வருகிறது. இந்த நாளில் நீங்கள் பைரவரை வணங்கலாம். சாதாரணமானவர்களும் வணங்கலாம் ஒன்றும் தவறுயில்லை. உங்கள் ஊரில் பைரவர் சன்னதி இல்லை என்றாலும் பரவாயில்லை ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நல்லது தான்.

இதனைப் பற்றி உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதுவே மிக பெரிய நன்மையாக இருக்கும்.

நாளை தமிழ் வருடப்பிறப்பு அனைவருக்கும் தமிழ் வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். அனைவரும் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். தேய்பிறை அஷ்டமி என்பதால் நீங்கள் குடும்பத்துடன் பைரவரை வணங்கலாம். நன்றி.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேது பகவான் பயோடேட்டா



கேது பாட்டியாருக்க காரகமாக சோதிடத்தில் வகிக்கிறார். கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , பைத்தியம் பிடித்தல் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயல்படும்.

நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

இரத்தினம் - வைடுரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குருரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீசம் - ரிஷபம்

மூலத்திரிகோணம் - மீனம்

உறுப்பு - உள்ளங்கால்

நட்சத்திரங்கள் - அசுவினி,மகம், மூலம்

பால் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 1 1/2 வருடம்

நட்பு - சனி , சுக்கிரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

ஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.