Followers

Tuesday, July 31, 2012

நரிப்பாறை



வணக்கம் நண்பர்களே கடந்த இரண்டு நாட்களாக பதிவு போடவில்லை பதிவுக்கு வந்து ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் மன்னிக்கவும் நான் வெளியூர் சென்றுவிட்டதால் பதிவை போடமுடியவில்லை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் திருவண்ணாமலை என்ற ஊரில் அந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தின் பெயர் நரிபாறை. அந்த இடத்தில் ஒன்பது ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

குகையில் இரண்டு சமாதி அமைந்துள்ளது அங்கு சென்று அமர்ந்தால் மனம் நல்ல விதமாக இருக்கிறது.மனத்திற்க்கு நன்றாக இருக்கிறது.

அந்த குகை கோயில் உள்ளே ஒரு குகை செல்கிறது அதில் நெய்தீபம் ஏற்ற சொன்னார்கள் அந்த நெய்தீபம் அணையாமல் எரியவேண்டுமாம் அப்பொழுது தான் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்று சொன்னார்கள். நான் ஏற்றினேன். தீபம் நன்றாக எரிந்தது. 

அதன் பிறகு அங்கு மலையில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் (நின்ற கோலத்தில்) இருக்கிறார் அவரை தரிசித்து விட்டு மீண்டும் நரிபாறைக்கு   சென்று தரிசித்தோம்.


அங்கு நித்தியானந்த சுவாமிகள் சமாதி மீது சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து உள்ளார்கள்  நீங்கள் போனால் அங்கு சென்று தியானம் செய்யுங்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். ஸ்ரீதர் சுவாமிகள் குகையில் இருக்கிறார் அவர் முன்பு நாகர் சிலை வைத்துள்ளார்கள்.

நீங்களும் அங்கு சென்றால் தரிசனம் செய்து விட்டு வாருங்கள். என்னிடம் கேமரா கிடையாது. வேறு தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்து போட்டுள்ளேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Saturday, July 28, 2012

சுக்கிரன் பரிகாரம்



வணக்கம் நண்பர்களே நேற்று பதிவு போடமுடியவில்லை நெட் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதால் பதிவை எழுதமுடியவில்லை. அதனால் இன்று பதிவுயை தருகிறேன். 

நான் தருகின்ற பரிகாரங்களை செய்யும் போது எனக்கு போன் செய்து விட்டு இன்று செய்யபோகிறேன் என்று சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்யுங்கள். இலவச சோதிட ஆலோசனையில் பரிகாரம் செய்பவர்கள் அப்படியே செய்யலாம். என்னை தொடர்பு கொள்ள தேவையில்லை.

கட்டண சோதிட ஆலோசனையில் செய்பவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொண்ட பிறகு தான் பரிகாரம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் போது என்னுடைய பிராத்தனையும் உங்களுக்கு துணையாக இருக்கும். 

ஆறாம் வீட்டு தசா நடக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிகாரத்தை பார்த்து வருகிறோம். இப்பதிவில் சுக்கிரனுக்கு என்ன பரிகாரம் என்று பார்க்கலாம். சுக்கிரன் தசா எந்த வீட்டியிருந்து இருந்து நடந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சில பேருக்கு சுக்கிரனின் தசா பிரச்சினையை ஏற்படுத்தும் சுக்கிரன் அள்ளி அள்ளி கொடுப்பான் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் சுக்கிர தசாவில் அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் இந்த பரிகாரத்தை செய்த பிறகு அவர்கள் நல்ல நிலைக்கு வரமுடியும்.

பொதுவாக பரிகாரத்தில் இது மட்டும் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இதை செய்ய வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்டு துணி ( சிறிய அளவு கூட இருக்கலாம் அவர்களுக்கு பயன்படுகின்ற மாதிரி இருக்க வேண்டும்) ஒன்று ஒரு கிலோ சர்க்கரை ( ஜீனி) ,வாசனை பொருட்கள் அழகு சாதன பொருட்களை வாங்கி உங்கள் ஊரில் இருக்கும் ஒரு பெண்னுக்கு கொடுத்துவிட்டு அன்று உங்கள் ஊரில் இருக்கும் நவக்கிரக சந்நதியில் இருக்கும் சுக்கிரபகவானின் காலில் வெள்ளை மொச்சை கொட்டையை வைத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு நேராக உங்கள் வீட்டுக்கு சென்றுவிடுங்கள்.  

இலவச சோதிட ஆலோசனை கேட்பவர்கள் ஒரு முறை மட்டுமே என்னை தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

நான் சோதிட தொழில் செய்தாலும் எனது செலவுக்கு எல்லாம் உழைத்துதான் சம்பாதிக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு போன் செய்தால் அது நான் செய்யும் பணிகளுக்கு இடர் வருகிறது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, July 26, 2012

குரு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே நான் சொல்லும் கருத்துகளை ஏற்று உங்கள் அருகில் இருக்கும் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதை சொல்லுகிறீர்கள் எனும் போது நான் இது நாள் வரை கஷ்டபட்டு எழுதியதற்க்கு நல்ல பலன் இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.

எனக்கு வரும் Mail களில் எனது நண்பர் இந்த Blog யை பற்றி சொன்னார் இன்று தான் தெரிந்தது அதனால் உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று சொல்லுகிறார்கள். தெரியபடுத்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு தெரியபடுத்துங்கள் பல குடும்பங்களில் நெட் பார்க்காதவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு நீங்களே இதனை படித்து சொல்லுங்கள்.

நீங்கள் படித்துவிட்டு அவர்களுக்கு சொல்லும் போது அவர்களிடம் வீண் ஆடம்பரத்தை காட்டிக்கொள்ளாதீர்கள். பல பேர்கள் ஆடம்பரத்தால் சோதிடகலையை இழந்துவிடுகிறார்கள். முதலில் படிக்கும் போது மேதாவி போல் தான் நமது மனத்திற்க்கு தோன்றும். 

நேற்று ஒரு சோதிடர் என்னிடம் பேசினார் அவர் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து பலன் கேட்டார். அவர் என்னிடம் பேசும் போது அவர் சோதிடர் என்று சொல்லவில்லை அவரைப்பற்றி நான் கேள்விபட்டது உண்டு. அவர் பலனை கேட்டுவிட்டு நீ அப்படி பார்க்ககூடாது இப்படி பார்க்ககூடாது என்று வீண்வாதம் செய்தார். நான் எவ்வளவு பெரிய ஆள் என்று வேற கூறினார். 

உண்மையில் இவர்கள் எல்லாம் இப்படி சொன்னால் ஒவ்வொரு கிரகம் இப்படி வேலை செய்கிறது இந்த இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்தவன் எப்படி இருந்திருக்க வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் சோதிடம் பார்ப்பன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் பெரிய ஆள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். நான் விஷயத்திற்க்கு வருகிறேன்.

ஆறாம் வீட்டு தசாவில் அடுத்து நாம் குரு பகவானுக்கு உரிய பரிகாரத்தை பார்க்கலாம். குரு பகவான் ஆறாம் வீட்டுடன் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்று பார்ப்போம்.

ஆறாம் வீட்டில் சுபர் அமர்ந்தால் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவார். குரு பகவான் ஒரு சுபகிரகம் அவர் ஆறில் அமரும் போது அவரின் தீமைகளை குறைப்பதற்க்கு  பிராமணர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் நீங்கள் மந்திரங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் உடனே உங்களுக்கு தெரியபடுத்த மாட்டார்கள் நீங்கள் கஷ்டபட்டு அவரிடம் அனுமதி வாங்கி கற்றுக்கொள்ளுங்கள்.

மதகுருமார்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பிராமணர்கள் இல்லை என்றால் உங்களுக்க யார் குருவாக தெரிகிறார்களோ அவர்களிடம் போய் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு கலையை யார் கற்று தருகிறார்களோ அவர்கள் தான் உங்களுக்கு குரு பகவான்.

அனைவரும் மேலே சொன்ன விஷயத்தை கடைபிடிப்பது கடினம் அதாவது அந்த மாதிரி தொடர்புகள் ஏற்படுவது கடினமாக இருக்கும். அதற்காக ஒரு எளிய பரிகாரத்தை தருகிறேன்.

வியாழக்கிழமை அன்று ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். தயிர் சாதத்தை தினமும் நீங்களும் சாப்பிடுங்கள். குருவுக்கு இது நல்ல பரிகாரமாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும் என்னடா இது எல்லாம் ஒரு பரிகாரமா இது எல்லாம் நடக்கும்மா என்ற எண்ண தோன்றும் ஏன் என்றால் மனிதனின் மனது எதையும் அனுபவித்தால் ஒழிய மனது நம்புவது கிடையாது. அனுபவித்து தெரிந்த பிறகு இதிலும் ஏதோ ஒன்று உள்ளது என்று நினைக்க தோன்றும். நீங்கள் செய்யும் போது நல்ல நம்பிக்கையுடன் செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு பலன் கிடைக்கும். 

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பல பரிகாரம் இருக்கிறது அது ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு வேறுபடும். நான் கொடுக்கும் பரிகாரம் பொதுபரிகாரம் தான் முடிந்தவரை எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை தருகிறேன். உங்களுக்கு சரியான பரிகாரம் உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் தெரியும்.  உங்களுக்கு தகுந்த பரிகாரம் வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை அனுப்பி கேட்டுக்கொள்ளுங்கள்.

பணம் இருப்பவர்கள் கட்டண சோதிடத்திற்க்கு வந்துவிடுங்கள். உங்களிடம் உண்மையில் பணம் இல்லை என்றால் இலவச சோதிடத்திற்க்கு வாருங்கள். ஆலோசனை தருகிறேன்.

ஒரு சில பேருக்கு நாம் என்ன சொன்னாலும் அவர்களின் கர்மபலன் பரிகாரம் செய்ய தடை ஏற்படுத்துகின்றது. இந்த வாரத்தில் நான் செய்கிறேன் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்களால் பரிகாரத்தை செய்யமுடியவில்லை அந்த மாதிரி இருப்பவர்கள் உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை நடத்திவிட்டு பிறகு தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Wednesday, July 25, 2012

சனிக்கு பரிகாரம்



வணக்கம் நண்பர்களே சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருப்பது நல்லது தான் ஆனால் சனி கிரகம் நீசமாகவோ அல்லது பகையாகவோ அமரும்போது பல பிரச்சினைகளை ஏற்படுத்துவார். சனி கிரகத்திற்க்கு பல பரிகாரம் சொல்லுவார்கள். அவர் அவர் ஜாதகத்தை பொருத்து வேறுபடும்.

பொது பரிகாரமாக ஒன்றை சொல்லுகிறேன் செய்து பாருங்கள்.உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நாளில் இதனை செய்யுங்கள். பாதி ஆண்கள் இப்பொழுது இதை தான் வீட்டில் செய்கிறோம் நீ வேற கிளப்பிவிட்டு இருக்கிறாய் என்று சண்டைக்கு வருவார்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதனை செய்யுங்கள்.  

நளன் ஒரு சமையல்காரனாக வேலை பார்த்தவர் தான் அவர் மூலம் தான் சனியின் பெருமைகளை நாம் அறிந்தோம். அவரே சமையல்காரனா வேலை பார்த்த போது நாம் ஏன் செய்ய கூடாது. இது ஒரு நல்ல பரிகாரம்.

எனக்கு கூட நல்ல சமைக்க தெரியும். நானும் சனி பகவான் தரும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க சமையலை கற்றுக்கொண்டேன். எனக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் இல்லை இருந்தாலும் அவர் தந்த கஷ்டத்தை அனுபவித்தவன் என்ற காரணத்தால் சமையலை கற்றுக்கொண்டேன்.

வீட்டில் இருந்தால் ஒய்வு நேரத்தில் கூட உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து குடுங்கள். சமையலும் ஒரு கலை தான். தனிமையை விரட்ட கூட இந்த கலை நன்றாக உதவும். 

இதில் பெண்களாக இருந்தால் என்ன பரிகாரம் செய்வது என்று கேட்க தோன்றும். அவர்கள் எங்காவது உங்கள் உறவினர் வீட்டில் விஷேங்களுக்கு போய் சமைத்துகொடுங்கள். நல்ல முன்னேற்றம் தரும்.

ஆண் பெண் இருவரும் உங்கள் ஊரில் நடக்கும் குலதெய்வத்தின் கோவிலில் அன்னதானம் நடைபெறும் அல்லது உங்கள் ஊரில் வேறு ஏதாவது ஒரு கோவில் திருவிழாவில் அன்னதானம் செய்வார்கள் அந்த நேரத்தில் போய் இதனை செய்யலாம். பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும் போது சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தி செய்வார்கள். நீங்கள் போய் அவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லது பந்தியில் பரிமாறலாம்.

நான் பல திருமண விஷேங்கள் மற்றும் கோவில் திருவிழாவில் போய் உதவி செய்து இருக்கிறேன். வெட்க படாமல் இதனை செய்யலாம். கோவில் விழாகளில் அன்னதானம் நடைபெறும் போது நீங்கள் உதவி செய்ய போனால் நன்றாக குளித்துவிட்டு போய் உதவி செய்யுங்கள். பல கோவிலில் அன்னதானத்தை சாமிக்கு படையல் செய்துவிட்டு தான் அன்னதானம் செய்வார்கள் அதனால் நீங்கள் சுத்தமாக இருந்துக்கொண்டு உதவி செய்யுங்கள்.

சனியின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள நல்ல வழி சொல்லியுள்ளேன். யாரும் என்னிடம் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நல்ல பலனை அனுபவிக்கலாம். செய்து பாருங்கள் நண்பர்களே. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோதிடர் என்பது நடக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சமையல்காரர் இருப்பார் போல் தான் எனது மனது நினைக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, July 24, 2012

குலதெய்வ வழிபாட்டு முறை



வணக்கம் நண்பர்களே நமது தளத்தை படித்துவிட்டு பல பேர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பிரச்சினை படிப்படியாக குறைந்து வருவதாகும் எனக்கு தகவல் தந்தார்கள். நீங்களும் இன்னும் சென்று வரவில்லை என்றால் கூடிய விரைவில் சென்று வந்துவிடுங்கள். நீங்கள் செல்வதற்க்கு பல தடைகள் ஏற்படலாம். அவற்றை மீறி நீங்கள் சென்றுவிட வேண்டும்.

கடந்த வாரம் ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார் அவர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வரும் போது சிறு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொன்னார். நான் உங்களிடம் இதைப்பற்றி சொல்லிருக்க வேண்டும் என்ன காரணம் என்று தெரியவில்லை எழுதமுடியவில்லை. 

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது அந்த தெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் அதாவது அதற்கு உகந்த பூஜை பொருட்கள் என்ன என்று தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். சில குலதெய்வங்கள் பலி கேட்கும். அப்படி பலி கொடுக்கும் தெய்வம் என்றால் கண்டிப்பாக நீங்கள் பலி கொடுக்க வேண்டும். சில தெய்வங்கள் ஆடு பலி கொடுப்பார்கள் உங்களுக்கு அது செய்யமுடியவில்லை என்றால் கோழியை பலியாக கொடுத்துவிட்டு நீங்கள் தரிசனம் செய்துவிட்டு வரலாம். சில குலதெய்வங்கள் சாராயம் கூட கேட்கும் அந்த மாதிரி குலதெய்வங்களும் இருக்கின்றன அதை நீங்கள் செய்துவிட்டு தான் வரவேண்டும்.

குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது. இந்த தளத்தை படிப்பவர்கள் அதிகம் பேர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களின் குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது உங்கள் தந்தை அல்லது தாத்தாவிடம் கேட்டால் அவர்கள் உங்களுக்கு சொல்லுவார்கள் அப்படி இல்லை என்றால் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

நாம் பல கோவிலுக்கு சென்று வருவோம் அங்கு நமது பேருக்கு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வருவோம் ஆனால் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும்போது பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும். எல்லா குலதெய்வத்திற்க்கும் அது தான் வழக்கம். 

நண்பர்களே நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களின் குடும்பத்திற்கும் சொல்லுங்கள் உங்கள் பக்கத்து வீட்டு குடும்பத்திற்க்கும் சொல்லுங்கள் தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அது உதவும். 

நான் பலபேருக்கு ஆன்மிக சேவை செய்ததால் தான் என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. என்னால் முடிந்தவரை அனைவருக்கும் பல நல்ல தகவல்களை தந்து இருக்கிறேன். இன்னும் பல நல்ல தகவல்கள் தருவதற்க்கும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

எனது எண்ணம் எல்லாம் அடுத்தவரை எப்படியாவது வாழ்க்கையில் மேன்மை நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றது. நீங்கள் இந்த தகவல்களை எல்லாம் முடிந்தவரை அடுத்தவர்களிடம் சொல்லுங்கள் அப்பொழுது பலனை அனுபவிப்பீர்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, July 23, 2012

பாவம் தீர பரிகாரம்




வணக்கம் நண்பர்களே நாம் ஆறாம் வீட்டு அதிபதியின் தசாவை பார்த்து வந்தோம். அதன் மூலம் வரும் பிரச்சினைக்கு என்ன தீர்வு அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் பார்த்தோம். 

பொதுவாக ஆறாம் அதிபதி தீமை தருவது முன் ஜென்மத்தின் கர்மாவில் தான் நடக்கிறது.முன் ஜென்மம் கர்மாவை குறைக்கு வழி உண்டா என்றால் அதற்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது நீங்கள் பக்தியுடன் இதை செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் அடையலாம்.

என்னடா கர்மாவை குறைப்பதற்க்கு பரிகாரம் இருக்கிறதா இது எல்லாம் கதை என்று நீங்கள் நினைக்கலாம். முன்ஜென்மத்தின் கர்மாவை இந்த ஜென்மத்தில் நீங்கள் குறைக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது இதனை தீர்ப்பது அதனால் இந்த ஜென்மத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள தான் அருமையான படைப்பாக நீங்கள் இந்த பூமிக்கு வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் உணருங்கள்.

வெள்ளத்தில் ஒரு மனிதன் மாட்டிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அந்த வெள்ளத்தில் ஒரு மரகட்டை கிடைத்தால் அந்த மனிதன் அந்த வெள்ளத்தில் இருந்து தப்பித்துவிடுவான்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் திக்கற்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் இருக்கும் மனிதனுக்கு ஒரு மரகட்டை கிடைத்தால் அதனை கொண்டு அவன் பிழைத்துவிடலாம். அந்த மரக்கட்டை தான் ஜாதகம் அதனைக்கொண்டு நீங்கள் பிழைத்துவிடலாம்.

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று இந்த மதத்தில் இருக்கிறது அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்தவரையும் காப்பாற்றுங்கள். இப்பொழுது எல்லா மதத்திலும் இதனை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளியில் காட்டிக்கொள்வது கிடையாது.

வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியாது. உங்கள் ஜாதகத்தில் அதற்கு வழி இருக்கிறது அந்த ஜாதகத்தை நீங்கள் நல்ல முறையில் அலசி ஆராய்ந்து அல்லது ஒரு சோதிடரிடம் உங்கள் ஜாதகத்தை காட்டி அதற்கு நீங்கள் பரிகாரம் தேடினால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை காணலாம்.

நான் வெறும் சோதிடம் மட்டும் நடத்தினால் நீங்கள் அதனை படித்து அடுத்தவரிடம் அப்படியே மனபாடம் செய்ததை ஒப்பித்துவிடுவீர்கள் அவர்கள் அதனை கேட்டு 80 வருடம் வாழ்பவன் பாதியிலேயே போய் சேர்ந்துவிடுவான். அதற்கு என்ன தீர்வும் நாம் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் அவனை நம்மால் காப்பாற்ற முடியும்.

ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது அதற்கு நீங்கள் படிக்கும் ஏட்டு கல்வி போதாது அனுபவ கல்வி மற்றும் உங்களின் பக்தி இது அனைத்தும் சேர்ந்தால் தான் சோதிடம் மூலம் மனிதனுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொடுக்கும் பரிகாரம் அவனுக்கு எமனாக கூட அமையும்.

நான் பல பேரை பார்த்து இருக்கிறேன் இருக்கின்ற அனைத்து சோதிட புத்தகத்தை எல்லாம் படிப்பது அதனை அவர்களின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்துவிட்டு எனக்கு அந்த தோஷம் இருக்கின்றது எனக்கு அது எல்லாம் சரிபட்டுவராது என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு கவலைபடுகிறது. இதுவும் ஒரு மாதிரியான பிரச்சினை தான்.

உங்கள் ஜாதகத்தை நீங்கள் படித்துவைத்திருக்கும் சோதிட அறிவை சேர்த்து பார்த்துவிட்டு அதன் மாதிரி உங்களுக்கு வாழ்க்கையில் நடைபெறுகிறதா அல்லது நடைபெறவில்லையா என்று பார்த்துவிட்டு நீங்கள் முடிவை எடுங்கள்.

அதற்கு என்ன தீர்வு எங்கு இந்த விஷயத்திற்க்கு தீர்வு இருக்கிறது என்று தேடுங்கள் அப்பொழுது உங்களுக்கு தீர்வு கிடைக்கும் அதன் மூலம் நீங்கள் நினைப்பது கிடைக்கும்.

இப்பொழுது விஷயத்திற்க்கு வருகிறேன் கர்மா பாவத்தை குறைக்க வழி என்ன என்று பார்க்கலாம். வாரந்தோறும் வரும் சனிகிழமை அன்று உங்கள் ஊரில் இருக்கும் ஒரு தெய்வத்திற்க்கு அல்லது உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் பஞ்சகவ்யத்தால் அந்த தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஒன்பது வாரம் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

பஞ்சகவ்யம் என்பது பசுமாட்டியிருந்து உற்பத்தியாகின்ற பால்,நெய்,தயிர்,சாணம்,கோமியம் சேர்த்து கலந்து செய்யவேண்டும். இது ஒரே பசுமாட்டியிருந்து எடுக்கப்படவேண்டும். 

ஒரே பசுமாட்டியிருந்து எடுத்தால் அதற்கு வீரியம் நன்றாக இருக்கும். பலவித மாட்டியிருந்து எடுத்து கலக்ககூடாது. நல்ல பக்தியுடன் இதனை செய்யுங்கள். செய்யும் போது எனது கர்மா பாவத்தை குறைக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு செய்யுங்கள்.

இந்த தகவலை உங்களை சார்ந்தவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். ஆறாம் வீட்டு தசா நடப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பதில்லை அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்தவர்களுக்கு இதனை தெரியப்படுத்தும் போது உங்கள் பாவம் வெகுவிரைவில் குறையும்.

கண்டிப்பாக கைமேல் பலன் இதற்கு உண்டு.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, July 21, 2012

வேலையாட்கள் அமைய பரிகாரம்



வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசாவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிகாரம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஆறாம் வீட்டு அதிபரின் மூலம் வேலைக்காரர்கள் அமைவார்கள் அந்த வேலையாட்கள் சரியில்லை என்றால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஒரு தொழில் நன்றாக அமையவேண்டும் என்றால் அந்த தொழிலை செய்வதற்க்கு நல்ல வேலையாட்கள் அமையவேண்டும். அப்பொழுது தான் அந்த தொழில் நன்றாக வளர்ச்சி அடையும். 

நீங்களே பல இடங்களில் பார்த்த அனுபவம் இருக்கும். கடைகளில் நாம் ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் அங்குள்ள தொழிலாளிகள் நடந்துக்கொள்ளும் விதம் உங்களுக்கு அந்த பொருட்கள் வாங்குவதற்க்கே பிடிக்காது. ஒரு சில கடைகளில் மட்டும் நன்றாக வேலைகாரர்கள் அமைவார்கள். 

வேலையாட்கள் நன்றாக அமைய ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை திரிதியை திதி அன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி அர்ச்சனை உங்கள் தொழில் யார் பேரில் இருக்கின்றதோ அந்த பெயருக்கு அர்ச்சனை ஒன்பது முறை (ஒவ்வொரு மாதமும் )செய்ய வேண்டும். தொழிலை நடத்துபவர் இதனை செய்யலாம் அல்லது தொழிலை நடத்துபவரின் மனைவி இதை செய்யலாம் இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

ஒன்பது தடைவை என்பது ஒன்பது மாதங்கள் ஆகலாம் இதை செய்ய ஆரம்பித்த முதல் தடவையில் இருந்து உங்களுக்கு நல்ல பலன் அமையும்.அனைத்து பரிகாரமும் பொது பரிகாரம் தான் உங்கள் ஜாதகத்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் செய்தால் உடனடி பலனை நீங்கள் அடையலாம்.

பல நண்பர்கள் என்னை தொடர்பு கொள்கிறார்கள் அவர்கள் சார் உங்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசி இருக்கிறேன் நான் இப்பொழுது ஒரு ராசிகல் கடையில் இருக்கிறேன் என்ன ராசிகல் நான் போடலாம் என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லுவது உங்கள் ஜாதகத்தை பார்க்காமல் திடீர் என்று கேட்பது தவறு. நான் ராசிகல் எல்லாம் யாருக்கும் பரிந்துரைப்பது கிடையாது. 

நான் சொல்லும் பரிகாரங்கள் அதிகபட்சமாக Rs 300 ல் முடிந்துவிடும். நீங்கள் பல சோதிடர்களிடம் சென்று கேட்டுவிட்டு கடைக்கு சென்று என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, July 20, 2012

கடன் பரிகாரம் 1



வணக்கம் நண்பர்களே இப்பொழுது எனக்கு வரும் கால்களில் முக்கால் வாசி கடனை பற்றி தான் இருக்கிறது. எனக்கு கடன் தீருமா நான் எப்பொழுது இந்த கடனில் இருந்து விடுபடுவேன் என்று தான் கேட்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்க்காக ஒரு பரிகாரத்தை தருகிறேன். 

கடன் வாங்குவதில் பலவித கடன்கள் இருக்கின்றன. குடும்ப கடன், கல்வி கடன், வியாபார கடன்,மருத்துவ செலவு கடன், கோர்ட்க்கு போவதற்க்கு கடன், திருமண கடன் சூது ஆடுவதற்க்கு கடன்( சீட்டு ஆடுவது),போகத்திற்க்கு கடன், வீடு கட்ட கடன், தான் தோன்றி தனமாக செலவு செய்ய கடன் இப்படி கடன்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

அட மக்கள் தான் கடன் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் அரசும் கடன் வாங்குகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஒருவிதத்தில் கடன்காரனாகதான் இருக்கின்றோம். இந்த அரசியல் வாதியால் சொந்த கடன் இல்லாதவனும் அரசால் கடன்காரனாகிறான்.

என்னை தேடிவருபவர்களில் கடனுக்கு பரிகாரம் கேட்டு தான் அதிகமாக வருகிறார்கள். அதிகம் பேர் வியாபார கடன்காரர்கள் இருக்கிறார்கள். வியாபாரம் செய்து பணத்தை இழந்து அதனால் கடன் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பரவாயில்லை தேடி வந்து விட்டார்கள் ஆனால் நல்ல முறையில் வியாபாரம் நடந்திக்கொண்டு இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

நல்ல நிலைமையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். ஏன் என்றால் எதிர்காலத்தில் கடன் பட்டியலில் உங்கள் பெயர் வரலாம் அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடன் இருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன் வராமல் இருக்க ஒரு பரிகாரம் தருகிறேன். அதை செய்யுங்கள் உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்று சென்று வழிபட்டு வாருங்கள் உங்களை கடனில் இருந்து காப்பாற்றும் உங்கள் குலதெய்வம். வெகுதொலைவில் குலதெய்வம் இருப்பவர்கள் அந்த திசையை நோக்கி வீட்டில் இருந்து சாமி கும்பிடுங்கள். கடன் என்பது வராது.

ஒரு சில கடவுளுக்கு அமாவாசை தான் உகந்த நாளாக இருக்கும். அந்த நாள்களில் கூட நீங்கள் இதனை செய்யலாம். அமாவாசைக்கு செய்தாலும் கடன் வராது. அந்த தெய்வத்திற்க்கு இரண்டு நாட்களில் எந்த நாள் உகந்த நாளோ அந்த நாட்களில் நீங்கள் இதனை செய்யுங்கள்.

என்ன செய்வீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, July 19, 2012

பூஜை அறை



வணக்கம் நண்பர்களே நான் பல வீடுகளில் சோதிடம் பார்க்க செல்லும் போது அவர்களின் பூஜையறையை பார்க்க சொல்லுவார்கள். நானும் போய்  அவர்களின் பூஜை அறையை பார்ப்பேன் அப்பொழுது அவர்களின் வசதிக்கு தக்கவாறு பூஜை அறை இருக்கும் சில வீடுகளில் பார்த்தீர்கள் என்றால் அவர்களின் பணத்தின் மதிப்பை பூஜை அறையில் பார்க்கலாம். அந்தளவுக்கு ஆடம்பரமாக வைத்திருப்பார்கள்.

நான் பார்த்த பல வீடுகளில் இவர்கள் எங்கு எல்லாம் கோவிலுக்கு போகிறார்களே அங்கு எல்லாம் இவர்கள் ஒரு சாமி படத்தையும் விடாமல் வாங்கி வந்து மாட்டிவிடுவார்கள். இன்னும் சில வீடுகளில் போய் பார்த்தால் அவர்கள் வீடுகளில் ஏகாபட்ட சிலைகளை வாங்கி வந்து வைத்திருக்கிறார்கள்.

உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. 

சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள். வீடுகளில் சிலை இருக்ககூடாது. 

பல வீடுகளின் பல சாமி போட்டை வைத்து இருக்கும் வீடுகளில் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் இருக்கவில்லை. நான் பார்த்த வரையில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது. 

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் உங்களால் முன்னேற்றம் காண்பது என்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குலதெய்வ அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.

பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டு பூஜை செய்யுங்கள். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பில் அமருங்கள் உங்களின் உடம்பு பூமியில் தொடக்கூடாது. உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். உங்கள் கூடவே அது வரும். முதலில் நீங்கள் இதை செய்யும் போது நீங்களே சிரிப்பீர்கள் ஆனால் நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை புரியும்.

பூஜை அறையில் நீங்கள் காமாட்சி விளக்கை பயன்படுத்துங்கள். விளக்கின் திரி கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக இருக்கலாம். அவ்வாறு திரி எரியும் போது உங்களின் குடும்பம் நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

அப்புறம் மறந்திடாமல் வீட்டை நன்றாக சுத்தம் செய்து நறுமண வாசனை வரும் படி வைத்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இன்றே செய்வீர்களா?

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, July 18, 2012

கடன் : பரிகாரம்



வணக்கம் நண்பர்களே ஆறாம் அதிபதியின் தசாவை பார்த்து வந்தோம் ஆறாம் அதிபதி தசாவில் தான் ஒருவருக்கு கடன் அதிக அளவு ஏற்படும் அவர் சம்பந்தப்படாமல் கடன் ஒருவர் வாங்க முடியாது என்று ஏற்கனவே பார்த்து வந்தோம். 

பணப்பிரச்சினை என்பது எல்லாருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வந்துவிடுகிறது. ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் பணப்பிரச்சினை வந்துவிடும். கடன் ஏற்படாமல் இருக்கின்றவர் உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் தான்.

பலர் கடன் வந்தவுடன் தான் ஜாதகத்தை கையில் எடுப்பார்கள். அதுவரை அவரின் ஜாதகம் எங்கு இருக்கின்றன என்று கூட தெரியாது. கடன் வருவதற்க்கு முன்பே தெரிந்தால் தானே அவற்றை தவிர்க்க முயற்சிக்கலாம். அதை விட்டுவிட்டு கடன் வந்த பிறகு மாட்டிக்கொண்டு முழிப்பது கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும்.

கடன் ஏற்படும் விதத்தை பற்றி பழைய பதிவுகளில் பார்த்தோம். வியாபாரத்திற்க்காக கடன் வாங்குபவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். அவர்களின் வியாபாரம் நடத்துவது ஒரு இடத்தில் வைத்து நடத்தினாலும் பரவாயில்லை அந்த வியாபாரம் ஏன் நஷ்டத்தை தந்தது அதை மீண்டும் முன்னேற்ற என்ன வழி என்று பார்த்து அவர்களின் வியாபாரத்தை லாபத்திற்க்கு கொண்டுவந்துவிடலாம்.

நம்ம ஆளுங்க இருக்காங்களே . பல பேர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை விட்டு விட்டு வந்து பணத்தை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று கேட்கிறார்கள் ஷேர்மார்க்கெட் கடல் அதில் பணத்தை போட்டு பணத்தை விட்டால் என்ன செய்வது.

மறுபடியும் அதே தொகையை கையில் வைத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட்டில் இறங்கினால் தான் பணத்தை மறுபடியும் எடுக்கலாம். அதுவும் கடுமையான கஷ்டமாக தான் இருக்கும். உலகத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் சோதிடத்தில் சொல்லாத ஒரு விஷயம் வருவது கிடையாது. அதனால் ஷேர்மார்கெட் விஷயத்தை சமாளித்துவிடலாம். 

கடன் வாங்கிக்கொண்டு எந்த வியாபாரத்திலும் இறங்குங்கள் ஆனால் ஷேர்மார்கெட்டில் கடன் வாங்கி இறங்க வேண்டாம். சொந்த பணத்தை வைத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட்டில் இறங்குங்கள்.

கடனை நிவர்த்தி செய்வதற்க்கு பரிகாரம் இருக்கிறது ஆனால் அனைவருக்கும் பொதுவான பரிகாரம் கிடையாது. அந்த அந்த ஜாதகத்தை பொருத்து பரிகாரம் இருக்கின்றது அதை செய்தால் நீங்கள் கடனில் இருந்து விடுபடலாம்.

பல பேர் கும்பகோணத்திற்க்கு பக்கத்தில் ஒரு கோவிலுக்கு சென்று கடனுக்கு பரிகாரம் செய்கிறார்கள். நான் அந்த கோவிலுக்கு செல்லவில்லை.  கோவிலில் கூட்டம் தாங்கமுடியவில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். அவ்வளவு பேர் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். 

உண்மையில் அந்த கோவில் கடனுக்கு பரிகாரம் தரும் தலம் கிடையாது. அது பிறவிக்கடனை தீர்க்க உதவும் ஒரு கோவில் ஆனால் கடன் வாங்கிய அனைவரும் அங்கு தான் சென்று பரிகாரம் செய்கிறார்கள்.

நம்ம மக்களை கடனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லுகிறேன். உங்களுக்கு பிடித்த கடவுளுக்கு மாப்பொடியில் அபிஷேகம் செய்யுங்கள் உங்களின் கடன் நிவர்த்தி ஆகும். பிடித்த கடவுள் அல்லது சிவனுக்கு கூட செய்யலாம் செய்து பாருங்கள்.

இது பொதுபரிகாரம் தான். ஜாதகத்தை பொருத்துதான் கடனுக்கு பரிகாரம் தரமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, July 16, 2012

ஆடி அமாவாசை



இறைவன் படைப்பில் எந்த நாளும் நல்ல நாள் தான் இருந்தாலும் அவருக்கு உகந்த நாளகாக கருதப்படும் நாளில் இறைவனின் சக்தி இந்த பூமியில் அதிகமாக வெளிப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது வரும் ஆடி அமாவாசை மிக சிறந்த நாளாக காணப்படுகிறது.

அவ்வகையில் 18-7-2012 புதன் அன்று ஆடி அமாவாசை வருகிறது. புதன் கிழமை காலை 9:41 க்கு துவங்கி 19-7-2012 வியாழன் 10:23 க்கு முடிவடைகிறது. அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது உகந்ததாகும்.

உங்கள் முன்னோர்களின் சக்தி தான் உங்களை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். உங்களுக்கு வரும் பிரச்சினைகளை தீர்ப்பதில் முதலில் நிற்பது உங்கள் முன்னோர்களின் சக்தியாக தான் இருக்கின்றன.

உங்கள் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு முழுவதும் கிடைக்க ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அமாவாசையில் மிகவும் முக்கிய அமாவாசையாக ஆடி அமாவாசை வருகிறது. மாத அமாவாசையில் உங்களின் பணி காரணமாக விரதம் இருந்திருக்கமுடியாது அவ்வாறு விரதம் இருக்காதவர்களுக்கு இந்த ஆடி அமாவாசை நல்ல வாய்ப்பு.

பல பேர்களுக்கு முன்னோர்களின் திதி தெரியாது. அந்த திதியை ஞாபகம் வைத்து இருக்க மாட்டார்கள் அல்லது திதி தெரியாமல் இருந்திருக்கும் அவ்வாறு இருப்பவர்களும் இந்த ஆடி அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நான் கடந்த வாரம் தாம்பரத்தில் ஒரு சோதிட வாடிக்கையாளரை சந்தித்தேன் அவர் என்னை கொண்டுவந்து விடுவதற்க்காக அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு வந்தார் அப்பொழுது அவர் என்னிடம் சோதிட விஷயமாக பேசிக்கொண்டு வந்தார் அப்பொழுது அவர் கேட்டார் முன்னோர்கள் ஆத்மா ஏதாவது ஒரு உயிர் எடுத்துவிட்டால் நாம் செய்யும் தர்பணம் அவர்களுக்கு வீண்தானே எப்படி அவர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் போது நாம் தருகின்ற பிண்டமும், பசு மாட்டிற்க்கு கொடுக்கின்ற கீரையும் ஏழைகளுக்கு கொடுக்கின்ற அன்னதானமும் நம் முன்னோர்கள் எங்கோ பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கின்ற உணவு நாம் தர்பணம் செய்த புண்ணியத்தால் கிடைக்கிறது. இதைப்பற்றி  கருட புராணத்தில் விரிவாக உள்ளது.

நாமே பல நேரங்களில் திடீர் என்று எல்லையற்ற மகிழ்ச்சி நிலைக்கு செல்லலாம் மனது நல்ல மகிழ்ச்சி நிலையில் இருக்கும். இது நமக்கு யாரோ கொடுக்கின்ற தர்பணத்தால் தான் நடைபெறுகிறது.

விபத்துக்களில் சிக்கி தவிக்காமல் உங்களை காப்பாற்றுவது உங்கள் முன்னோர்களின் ஆசி தான் இதனை நீங்களே உணர்ந்து இருக்கலாம். ஆடி அமாவாசை விரதம் இருப்பதை பற்றி உங்கள் நண்பர்களின் குடும்பத்திற்க்கும் தெரியபடுத்துங்கள். உங்களின் உறவுகாரர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நான் பலபேர்களுக்கு சொல்லும் போது அவர்கள் பாதி பேர் இதைப் பற்றி தெரியாமல் அறியாமையில் இருக்கிறார்கள்.

இந்த பூமியில் மனிதராக பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இறந்த பின் அவன் ஆத்மாவிற்க்கு அவனின் இரத்த உறவுதான் திதி கொடுப்பார்கள். சில மனிதருக்கு கடவுளே திதி கொடுக்கும் வைபவம் இருக்கின்றது அது  அவர்களின் கர்ம காரியங்களுக்கு ஏற்ப அமையும். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் இறைவனே அவரின் சீடருக்கு திதி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது நாம் அறிந்ததே.

நீங்களும் நன்றாக விரதம் இருந்து உங்களின் முன்னோர்களின் ஆசியை பெற்றுடுங்கள். அவர்களை விட உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு யாரும் இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, July 15, 2012

எங்கு லட்சுமி வசிப்பாள்?



வணக்கம் நண்பர்களே நான் பல சோதிட விஷயமாக பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். அப்பொழுது அவர்களின் வீடுகளை பார்த்தால் பழைய சாமான்களாக நிரம்பி இருக்கிறது. பல வீடுகளில் ஓட்டடை அடிப்பதில்லை இந்த மாதிரி தான் பல வீடுகள் உள்ளன. அவர்கள் சொல்லுவது எங்கள் வீட்டில் காசு தங்குவது கிடையாது. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறோம் எங்களால் பணத்தை சேமிக்க முடியவில்லை எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். 

அவர்களுக்கு நான் சொல்லுவது உங்கள் வீட்டில் லட்சுமி குடிகொள்ள வேண்டும் என்றால் முதலில் உங்கள் வீட்டை சுத்தபடுத்த வேண்டும். வீட்டில் பழைய சாமான்களை வைத்துக்கொள்ளாதீர்கள். அவற்றை தூக்கி எறிந்துவிடுங்கள் அல்லது இல்லாதவர்களுக்கு அவற்றை கொடுத்துவிடுங்கள். 

உங்கள் வீட்டில் ஒரு இடத்திலும் அழுக்குகறை இருக்ககூடாது. பல வீடுகளில் அவர்களின் சாப்பிடும் தட்டு கூட சாப்பிட்டு விட்டு அப்படியே போட்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருப்பார்கள் இல்லையென்றால் வேலைக்கு சென்று வந்த பிறகு மாலையில் அதை சுத்தம் செய்வார்கள் அப்படி செய்யாதீர்கள் அவர் அவர்கள் சாப்பிடும் தட்டை அவர்களே சாப்பிட்ட பிறகு கழுவி வைத்துவிடுங்கள். 

சுத்தமாக இருந்தால் மட்டுமே உங்கள் வீட்டில் பணம் தங்க செய்யும் அப்படி இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு கஷ்டபட்டு உழைத்தாலும் காசு உங்களிடம் தங்காது.

வீட்டில் எப்பொழும் நறுமணம் வீசும் படி செய்து கொள்ள வேண்டும். வாரத்திற்க்கு குறைந்தது இரண்டு முறையாவது சாம்பிராணி போட்டு எல்லா இடங்களுக்கும் காட்ட வேண்டும். அப்பொழுது உங்கள் வீட்டில் லட்சுமி வசிக்கும்.

இளைஞர்கள் தனியாக பல நகரங்களில் தங்கி இருக்கிறார்கள் அவர்கள் பல பேர்களின் தங்கி இருக்கும் அறைகளை பார்த்தால் வாந்தி எடுத்துவிடும் அப்படி அசிங்கமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் சம்பாதிப்பதற்காக தான் உங்கள் பெற்றோரை பிரிந்து வந்துள்ளீர்கள் நீங்கள் இருக்கின்ற அறையும் சுத்தமாக இருந்தால் தான் உங்களுக்கும் பணத்தை சேமிக்க முடியும். அப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் பல வழிகளிலும் உங்கள் பணம் செலவழியும்.

உங்கள் வீடு சுத்தமாக இருக்கும்பட்சத்தில் உங்களின் பணவரவு நன்றாக இருக்கும். இதை நான் அனுபவத்தில் சொல்லுகிறேன். பல பேர் இந்த கருத்தை சொல்லி உள்ளார்கள். நானும் சொல்லுகிறேன் நீங்கள் இதனை அனுபவத்தில் செய்து பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள். உங்கள் வீட்டில் நறுமண வாசனை இருந்தால் உங்கள் வீட்டில் லட்சுமி வசிப்பாள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, July 14, 2012

தெய்வ சக்தி



வணக்கம் நண்பர்களே! என்னிடம் சோதிட ஆலோசனை கேட்க வருபவர்களுக்கு நான் சொல்லுவது உங்களுக்கு மந்திர வித்தை மூலம் உங்களின் பிரச்சினை சரிசெய்யலாமா என்று கேட்பேன். இதைப் பற்றி புரிந்தவர்கள் உடனே என்னுடைய பிரச்சினையை தீருங்கள் என்று சொல்லுவார்கள். மந்திரங்களை பற்றி தெரியாதவர்கள் அய்யோ வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார்கள். 

மந்திர வித்தைகள் என்பது நீங்கள் நினைப்பது போல ஏதோ தவறான ஒன்று கிடையாது. அனைத்தும் தெய்வசக்தி தான். ஒருவர் மந்திரங்கள் உருவேற்றுவதற்க்கு ஒரு தெய்வத்தை வைத்துதான் அவர்கள் உருவேற்றுவார்கள். அவர்களுக்கு அந்த தெய்வம் எல்லாவிதத்திலும் உதவி செய்யது கொடுக்கும். 

அந்த தெய்வங்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு வழி தேடுவார்கள் அதுவும் உங்கள் பூர்வ புண்ணியத்தை வைத்து தான் அந்த தெய்வம் வழி செய்து கொடுக்கும். நீங்கள் கேட்டது எல்லாம் அது செய்து கொடுக்காது.

இஷ்டதெய்வத்தை வைத்து தான் அவர்கள் வழிமுறைகளை வழங்குவார்கள். நீங்கள் நினைப்பது போல அவர்கள் உங்களை வசியம் செய்து எல்லாத்தையும் பிடுங்கிவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. இந்த காலத்தில் வசியம் செய்வது என்பது பெரிய கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

இஷ்டதெய்வத்தை வைத்து செய்வது உங்கள் வீட்டில் உள்ள குலதெய்வம் உங்களுக்கு துணையாக இருக்கிறதா அப்படி அந்த குலதெய்வம் துணைசெய்யாமல் போனதற்க்கு என்ன காரணம். அந்த குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்க்கு வரவழைப்பது எப்படி அதற்கான வழிமுறைகள் தான் அதில் இருக்கும். உங்கள் வீட்டு குலதெய்வ மூலம் தான் உங்களுக்கு அனைத்து பிரச்சினையும் தீர்ப்பார்கள். இதனை தவறு என்று நீங்கள் நினைக்காதீர்கள். 

நல்ல முறையில் இஷ்டதெய்வத்தை வைத்து பரிகாரம் செய்பவர்கள் உங்கள் வீட்டிற்க்குள் நுழைந்தவுடனே உங்கள் வீட்டில் குலதெய்வம் உங்களுக்கு அருள் கிடைக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடுவார்கள். 

நீங்களும் சோதிடம் படிக்கிறீர்கள் உங்களுக்கும் இந்த தெய்வ சக்தியை பற்றி தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல் இருக்கலாம் உங்களுக்கு இந்த பயிற்சியை நான் நேரம் வரும் போது உங்களுக்கு சொல்லி தருகிறேன் அதனை வைத்து நீங்களும் பிறர்க்கு அல்லது உங்களுக்கு நல்லது செய்து கொள்ளலாம். நல்ல முறையில் தெய்வசக்தியோடு முன்னேற்றம் அடையலாம். 

தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் பின் தங்கிய நிலைக்கு நீங்கள் செல்லவேண்டாம். இஷ்டதெய்வம் உங்களுக்கு பரிச்சயம் ஆகிவிட்டால் ஏழரை சனி,அஷ்டமசனி, ஆறாவது வீட்டு தசா கெடுதல் பலன் இது எல்லாம் உங்களை ஒன்றும் செய்யாது. அனைத்திலும் உங்களை இஷ்டதெய்வம் காத்து நிற்கும். இது அனுபவ உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

வில்லாதி வில்லன் 11


வணக்கம் நண்பர்களே! ஆறாம் வீட்டு தசாவை பற்றி பல பதிவுகள் பார்த்து வந்தோம். இதுபோதும் என்று நினைத்து அடுத்து எந்த வீட்டு தசாவை பார்க்கலாம் என்று கேட்டு இருந்தேன். ஒரு நண்பர் மட்டும் பதில் அனுப்பி இருந்தார் வேறு யாரும் பதில் அனுப்பவில்லை ஏன் என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பார்க்கலாம். 

ஆறாம் வீட்டு தசாவை பற்றி பார்க்கும் போது எனக்கு ஒரு நோயைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது விரைவான பணி காரணமாக அப்பொழுது எழுதமுடியவில்லை இப்பொழுது தான் எழுதுகிறேன்.

இன்றைக்கு பல பேருக்கு இருக்கும் குறைபாடுகளில் ஆண்மைகுறைவு தான் அதிகமாக இருக்கிறது ஆனால் இதை யாரும் வெளியில் யாரும் காட்டிக்கொள்வதில்லை. 

ஆண்கள் என்ன தான் சம்பாதிப்பதில் திறமை இருந்தாலும் தன் மனைவியை தாம்பத்திய வாழ்வில் திருப்தி படுத்தமுடியவில்லை என்றால் அவன் வீணானவன் ஆவான். 

பல மணவாழ்க்கை விவாகாரத்து வரை கொண்டு செல்வது இந்த ஆண்மை குறைபாடு தான் காரணமாக இருக்கிறது.

நாம விஷயத்திற்க்கு வருவோம் இந்த ஆண்மை குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். ஆறாம் வீட்டு தசா நடைபெறும் போது ஆண்மை குறைவு ஒரு சிலருக்கு ஏற்படும். அது யாருக்கு என்று பார்க்கலாம். 

சுக்கிரனுடன் ஆறாம் அதிபதி இணைந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மைகுறைவு ஏற்படும்.

சந்திரனுக்கு 7 ல் சனி,ராகு,கேது இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மைகுறைவு ஏற்படும்.

ஆறாம் வீட்டில் சனி, சுக்கிரன் பலமற்று இருந்து ஆறாம் அதிபதி தசா நடந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

புதன் லக்கினமாக அமைந்து ஆறாம் அதிபதி சம்பந்தப்பட்டு தசா நடந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Friday, July 13, 2012

நான் பேச நினைப்பதெல்லாம்


வணக்கம் நண்பர்களே! நமது பதிவு மூலம் சோதிட ஆலோசனை கேட்பவர்கள் அனைவருக்கும் ஒரு கருத்தை சொல்லுகிறேன். என்னிடம் சோதிட ஆலோசனையை கேட்பவர்கள் அன்றைக்கு பிரச்சினையை வைத்துக்கொண்டு கேட்கிறார்கள். 

இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று கேட்கிறார்கள். உங்களுக்கு பிரச்சினை வந்த பிறகு நீங்கள் சோதிடரை கேட்ககூடாது. சோதிடம் என்பது எதிர்காலத்தில் வரவேற்க்கும் பிரச்சினை என்ன என்று சொல்லுவது தான் . அதை விட்டுவிட்டு அன்றைக்கு இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கிடையாது. உங்களுக்கு பிரச்சினை வருவதற்க்கு முன்பே என்னை தொடர்பு கொண்டால் தீர்வு கிடைக்கும்.

இரண்டு நாட்கள் முன்பு என்னை ஒருவர் தொடர்பு கொண்டார் அவர் பேசகூட முடியாமல் இருக்கிறார். என்ன சொல்லுவது என்று கூட பேச வரவில்லை. அப்படி பிரச்சினையை வைத்துக்கொண்டு தீர்வு காண்பது என்பது கஷ்டமான விஷயமாக தான் இருக்கும். இருக்கின்ற ஒரு சில பிரச்சினைகளை தீர்வு காண்பது எளிது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்காது. 
அதனால் நீங்கள் பிரச்சினை வருவதற்க்கு முன்பே சோதிட ஆலோசனை கேட்பது நல்லது.

இலவச சோதிட ஆலோசனை கேட்பவர்கள் அனைவரும் பிளாக்கில் மெம்பர் ஆனவுடன தான் சோதிட பலன் சொல்லுவது என்று சொன்னவுடன் இலவச சோதிட ஆலோசனை பக்கமே யாரும் வரவில்லை. 

இலவசமாக சோதிடம் பார்க்ககூடாது என்ற எண்ணத்தில் தான் மெம்பராக வேண்டும் என்று சொன்னேன். தட்சணை வைக்காமல் சோதிடம் பார்த்தால் உங்களுக்கு பாவம் வந்து சேரும் என்ற எண்ணத்தில் தான் அந்த அறிவிப்பு செய்தேன்.

கட்டண சோதிடத்திற்கு இப்பொழுது பல பேர் வந்துவிட்டார்கள். கட்டண சோதிடத்திற்க்கு வருபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டுதான் பலன் கேட்க வேண்டும் என்று பல பேர் நினைக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு பணத்தை அனுப்பலாம். உங்களுக்கு நான் ஆலோசனை தருகிறேன். கால தாமதம் வேண்டாம். உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 

ஆறாவது வீட்டு தசாவை பற்றி பார்த்து வந்தோம் அந்த தகவல் போதுமென்று நினைக்கிறேன். அடுத்தது வேறு வீட்டு தசாவை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். ஒரே வீட்டை மட்டும் பார்த்தால் உங்களுக்கு வெறுப்பு அடைந்துவிடும். அடுத்து எந்த வீட்டை பற்றி எழுதலாம் என்று எனக்கு சொல்லுங்கள். உங்கள் ஆவலை பார்த்து அந்த வீட்டு தசாவை பற்றி எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Thursday, July 12, 2012

பரிகாரம்

வணக்கம் நண்பர்களே இரண்டு நாட்கள் பதிவு உலகத்திற்க்கே வரமுடியவில்லை எனது வாடிக்கையாளர்களே பார்க்க சென்றதால் பதிவுகள் போடமுடியவில்லை பதிவுக்கு வந்து ஏமாற்றம் அடைந்த நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். 

நமது வாடிக்கையாளர்கள் என்னிடம் பேசுபவர்கள் அனைவரும் பரிகாரம் சம்பந்தமான தகவல்களை தந்தார்கள் அவர்கள் சோதிடம் பார்க்க சென்ற இடத்தில் பல சோதிடர்களும் பரிகாரத்திற்கு குறைந்தது 25000 பணம் கேட்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. நீங்கள் அவ்வாறு போய் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் உங்களிடம் கேட்டுகொள்கிறேன்.

நான் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். நான் ஒரு தொழில்முறை சோதிடர் தான் நான் பரிகாரங்களுக்கு பணம் வாங்குவேன் ஆனால் 25000 கொடுங்கள் என்று கேட்பதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் தருகிறார்களே அதை வாங்கிகொண்டு வருவேன். இப்பொழுது நான் சென்று வந்த செலவு மட்டும் வாங்குவேன். பரிகாரங்கள் வெற்றி அடைந்தால் அவர்களே தேடி வந்து பணத்தை தருவார்கள்.

வரும் காலங்களில் கூடிய விரைவில் ஒருத்தருக்கு பரிகாரம் என்று நான் செய்தால் அந்த காரியம் வெற்றி அடைந்த பிறகு தான் நான் பணம் வாங்குவது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.

கடந்த காலத்தில் நான் செய்த பல பரிகாரங்கள் அவர்கள் கேட்டது நடைபெறவில்லை. இப்பொழுது பல மந்திர சாஸ்திரங்கள் கற்றதால் இப்பொழுது வரும் நபர்களுக்கு நடைபெறுகிறது. போக போக தான் அதுவும் தெரியும். 

இன்றைய காலகட்டத்தில் 25000 பணம் என்பது பெரிய விஷயமாக தெரியாது. 25000 பணத்தை வைத்துக்கொண்டு 1 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டால் பரிகாரம் செய்ய முடியும் என்றால். இந்தியாவில் யாரும் ஏழையே இருக்கமாட்டார்கள். பல விஷயகள் விவாதத்தில் தோற்றுபோகும். 

கடைசியாக உங்களிடம் சொல்லுவது பரிகாரம் என்ற பெயரில் நீங்கள் ஏமாற்றத்தை அடையவேண்டாம் என்று சொல்லுகிறேன். அதைபோல் உங்களை சார்ந்தவர்களிடம் இதனை சொல்லுங்கள். இந்த மக்களை காப்பாற்றுங்கள்.

நமது நண்பர்கள் பல பேரை காப்பாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பதிவு மூலம் நன்றி சொல்லுகிறேன். நன்றி வணக்கம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

Monday, July 9, 2012

மீனம் : நோய்கள்



மீன ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்:

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (மீன ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

கால்களில் வலி,சர்க்கரை நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

தலையில் பிரச்சினை,ஈரல் பிரச்சினை,பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல்,புற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

விபத்தில் அடிபடுதல், தீ விபத்தில் சிக்குதல்,காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்.மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

சிறு பயணத்தின் போது விபத்து,காதில் பிரச்சினை, மூக்கு பிரச்சினை,தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:


நுரையீரல், ஆஸ்த்மா, இருமல்,மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தோல் வியாதி,நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.

முகங்களில் அடிபடுதல்,விபத்து,மஞ்சள் காமாலை,நுரையீரல் கோளாறு,காசநோய், இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல் தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

தலையில் அடிபடுதல்,காலரா நோய்,மார்பில் கட்டி,கண் நோய்,பாதங்களில் வலி,தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு சிறுநீர் பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

கிட்டினி பாதிப்பு,கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, சிறுநீர் பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி,தலைவலி,ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, சிறுநீர் உடன் இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி,மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

பாதங்களில் வெடிப்பு,கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

கும்பம் : நோய்கள்



கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்:

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (கும்ப ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

தலைவலி, தலை பாகத்தில் அடிபடுதல்,கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.


ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

கால்களில் வலி,சர்க்கரை நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

காது கோளாறு, ஈரல் பிரச்சினை,பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், புற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

விபத்தில் அடிபடுதல், தீ விபத்தில் சிக்குதல்,காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்.மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.

விபத்தில் அடிபடுதல்,விபத்தில் அடிப்பட்டு கோமா நிலையில் இருப்பது,தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல்,மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தோல் வியாதி,நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.

முகங்களில் அடிபடுதல்,விபத்து,மஞ்சள் காமாலை,நுரையீரல் கோளாறு,காசநோய், இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.


ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல், தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.


விபத்து ஏற்படுதல்,காலரா நோய்,மார்பில் கட்டி,கண் நோய்,பாதங்களில் வலி,தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு சிறுநீர் பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

கிட்டினி பாதிப்பு,கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, சிறுநீர் பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி,தலைவலி,ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி, பாதங்களில் வெடிப்பு,நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, சிறுநீர் உடன் இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (மகர ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

மூட்டு வலி,மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Saturday, July 7, 2012

மகரம் : நோய்கள்



மகர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபரின் தசா நடக்கும் போது வரும் நோய்கள்

ஆறாம் வீட்டு அதிபர் லக்கினத்தில் (மகர ராசியில்) சம்பந்தபட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

மூட்டு வலி, முழங்கால் வலி, தோல் வியாதி, வாத நோய், குஷ்டம் போன்றவற்றை மகர ராசி குறிக்கும்.

தலைபாகத்தில் அடிபடுதல், முகத்தில் வெட்டுகாயம் ஏற்படுதல்,மூட்டு வலி, மூட்டுகள் உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். முதுகெலும்பில் வலி ஏற்படும். மூட்டு விலகி போய்விடுவதால் நடக்க முடியாமல் நடப்பார்கள். கால்களில் அடிபடும். கால்களில் அடிப்பட்டு நொண்டி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் இரண்டாம் வீட்டுடன் (கும்ப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

நரம்புகளில் கோளாறு மூட்டு வலி, வலிப்பு, இதய நோய், சருமத்தில் உள்ள தோல்கள் பாதிப்பு போன்றவற்றை கும்பராசி குறிக்கும்.

கால்கள் வீக்கம், முட்டிகால் பிரச்சினை, வாத நோய், குடலில் பிரச்சினை நரம்புகளில் இரத்த கசிவு, கால்களில் வலி, மலபாதையில் வலி, இன உறுப்புகள் வீக்கம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் மூன்றாம் வீட்டுடன் (மீன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

கால்களில் வலி,சர்க்கரை நோயால் காலை எடுக்க வேண்டிய நிலை, நீர் கோர்வை போன்றவற்றை மீன ராசி குறிக்கும்.

காது கோளாறு, ஈரல் பிரச்சினை,பாத விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வலி ஏற்படுதல், புற்றுநோய் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் நான்காம் வீட்டுடன் (மேஷ ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடக்கும் போது வரும் வியாதிகள்:

உடலில் தலை பகுதி, கண் பார்வை, மூளை போன்றவற்றை மேஷ ராசி குறிக்கும்.

விபத்தில் அடிபடுதல், தீ விபத்தில் சிக்குதல்,காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்படும்.மலேரியா நோய், விட்டு விட்டு காய்ச்சல் வருதல், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஐந்தாம் வீட்டுடன் (ரிஷப ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

கழுத்து பகுதி,முகம், முகத்தில் உள்ள எலும்புகள் போன்றவற்றை ரிஷப ராசி குறிக்கும்.


விபத்தில் அடிபடுதல்,விபத்தில் அடிப்பட்டு கோமா நிலையில் இருப்பது,தாடையில் பிரச்சினை,தொண்டையில் கோளாறு போன்ற நோய்கள் வரும்.

ஆறாவது வீட்டு அதிபர் ஆறாம் வீட்டுடன் (மிதுன ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

நுரையீரல், ஆஸ்த்மா, இருமல்,மூச்சு திணறல் போன்றவற்றை மிதுன ராசி குறிக்கும்.

தோல் வியாதி,நுரையிரல் பிரச்சினை, தோள்பட்டை எழும்பில் பிரச்சினை உருவாகும், மூச்சு திணறல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஏழாம் வீட்டுடன் (கடக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வயிறு, வயிற்றில் இருக்கும் வால்வுகள், மார்பகம், உண்னும் உணவு செரிமானம் போன்றவற்றை கடக ராசி குறிக்கும்.

முகங்களில் அடிபடுதல்,விபத்து,மஞ்சள் காமாலை,நுரையீரல் கோளாறு,காசநோய், இருமல், மூச்சுகுழாயில் புண்,சளி தொல்லை, வலிப்பு நோய்,மூச்சு திணறல் போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் எட்டாம் வீட்டுடன் (சிம்ம ராசியில்) சம்பந்தப்பட்டு நடந்தால் வரும் வியாதிகள்:

இதயம், இரத்த ஒட்டத்தின் தன்மை,இதய துடிப்பு, முதுகுத் தண்டு ஆகியவற்றை சிம்மராசி குறிக்கும்.

விபத்து,மயக்கம் ஏற்படுதல், மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் ஒன்பதாம் வீட்டுடன் (கன்னி ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வைட்டமின் குறைவு, நுண்கிருமிகள், காலரா, வயிற்றுபோக்கு, காய்ச்சல், தோல் வியாதி போன்றவற்றை கன்னி ராசி குறிக்கும்.

காலரா நோய்,மார்பில் கட்டி,கண் நோய்,பாதங்களில் வலி,தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படும்.

ஆறாம் வீட்டு அதிபர் பத்தாம் வீட்டுடன் (துலாம் ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மூட்டுகளில் வலி பிரச்சினை கர்ப்பபையில் கோளாறு சிறுநீர் பாதையில் கல் அடைப்பு சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோய்களை துலாம் ராசி குறிக்கும்.

கிட்டினி பாதிப்பு,கிட்டினிக்கு செல்லும் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்படுதல், சிறுநீர் குழாயில் புண்,இன உறுப்பில் அரித்தல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பதினொன்றாம் வீட்டுடன் (விருச்சிக ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

மாதவிலக்கு கோளாறு, சிறுநீர் பாதையில் கல் அடைப்பு, மூல நோய் போன்றவற்றை விருச்சிக ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி,தலைவலி,ஆண்குறியில் வலி, துடைபகுதியில் வலி, இடுப்புகளில் புண் ஏற்பட்டு அதிக வலி ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

ஆறாம் வீட்டு அதிபர் பனிரெண்டாம் வீட்டுடன் (தனுசு ராசியில்) சம்பந்தப்பட்டு தசா நடந்தால் வரும் வியாதிகள்:

வாத நோய், நுரையீரல் கோளாறு, இடுப்பு தொடைப்பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றை தனுசு ராசி குறிக்கும்.

பாதங்களில் வலி, பாதங்களில் வெடிப்பு,நுரையீரல் பிரச்சினை, இடுப்பு வலி,வாத நோய், ஆஸ்த்துமா, சிறுநீர் உடன் இரத்தம் கலந்து போகுதல், கழுத்தில் வீக்கம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.