Followers

Monday, October 31, 2016

அனுபவமே ஆசான்


ணக்கம்!
          சந்திராதிபதி யோகம் என்று ஒன்று இருக்கின்றது. சந்திரனில் இருந்து 6 7 8 ஆகிய வீடுகளில் குரு சுக்கிரன் புதன் கிரகங்கள் அமையப்பெற்றால் அது சந்திராதிபதி யோகம் என்று பெயர். உலகத்தில் உள்ள அனைத்து நன்மையும் நடைபெறும் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

சந்திரனுக்கு 6 8 12 வீடுகளில் குரு நின்றால் அது சகடை யோகம் என்கிறார்கள். இது என்ன பலன் என்றால் வண்டிச்சக்கரம் போல் ஏற்றதாழ்வு இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

இப்பொழுது பாருங்கள். சந்திரனுக்கு ஆறில் குரு நின்றால் சந்திராதிபதி யோகமாக அல்லது சகடையோகமா என்று எப்படி நாம் கண்டறிவது? 

சோதிடத்தில் ஒரு சில குழப்பங்கள்  இயல்பான ஒன்று அதனை நாம் புரிந்துக்கொண்டு அதாவது அனுபவத்தில் அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். அனுபவம் இல்லை என்றால் சோதிடன் கிடையாது

என்னை பொறுத்தவரை சந்திரனுக்கு மறைவிடத்தில் அதாவது என் அனுபவத்தில் 6 8 யில் குரு நின்றவர்கள் சூப்பரான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு சில விசயங்கள் அனுபவத்தை வைத்து சொல்லுவது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கஜகேசரி யோகம்


ணக்கம்!
          சந்திரனுக்கு 1 4 7 10 ல் குரு நின்றால் கஜகேசரி யோகம் எனப்படும். குருபகவான் சந்திரன் இணைந்து மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை. சந்திரனுக்கு 1 4 7 10 ல் நின்றாலும் கஜகேசரி யோகம் என்பார்கள் இதிலும் நன்மையை அளிக்கும்.

தரித்திர நிலையில் ஒரு குடும்பம் இருந்து அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கஜகேசரி யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் கோடிஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு கஜகேசரி யோகத்திற்க்கு உண்டு.

ஒரு குடும்பம் வறுமையில் இருக்கின்றது என்றாலே அந்த குடும்பத்திற்க்கு ஏகப்பட்ட தோஷம் இருக்கின்றது என்று தான் அர்த்தம். இந்த தோஷத்தை எல்லாம் போக்கி தான் அந்த குடும்பத்திற்க்கு செல்வ செழிப்பை கொடுக்கிறது.

பாவத்தை போக்கும் தன்மை இந்த கஜகேசரி யோகத்திற்க்கு உண்டு என்பது மட்டும் உண்மை. ஒருவருக்கு கஜகேசரியோகம் இருந்தால் கோச்சாரபடி வரும் தீமைகள் கூட வருவதில்லை. தீமைகள் நடக்காமல் நல்லதை மட்டும் தரக்கூடிய அமைப்பு என்று இதனை சொல்லலாம்.

சோதிடத்தில் கூட சொல்லுவார்கள் விதியை மாற்றும் வல்லமை உடையவர் குரு பகவான் என்பார்கள். வாழ்க்கையில் ஏற்படும் வறுமை சஞ்சலத்தை நீக்கி நன்மையை தருபவர் குரு. இவர் சந்திரனோடு இணையும்பொழுது அல்லது மேற்கண்டு சொன்ன இடத்தில் நிற்க்கும்பொழுது நல்ல பலனை அனுபவிக்கலாம்.

குருபகவான் கொடுக்கிறார் என்றாலும் சந்திரன் அதனை பெற்று கொடுக்கவேண்டும் என்பது தான் விதி. சந்திரனை வைத்து தான் இந்த யோகமே இருக்கின்றது அல்லவா. சந்திரனும் மிக மிக முக்கியம்.

செவ்வாய் பரிகாரம் சென்றுக்கொண்டு இருக்கின்றது. நமது தளத்தில் வரும் நண்பர்கள் செவ்வாய் கிரக பாதிப்பு இருந்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளலாம்.

கோயம்புத்தூர் வருவதாக ஒரு திட்டம் இருக்கின்றது. கோயம்புத்தூர் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு சந்திரன்


வணக்கம்!

              குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் குரு சந்திர யோகம் என்பார்கள். சந்திரனுக்கு குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த யோகம் செயல்படும். இந்த யோகம் இருந்தால் அவர்களுக்கு வற்றாத பணவரவு இருந்துக்கொண்டே இருக்கும்.

சந்திரன் கிரகம் முகத்திற்க்கு காரகம் வகிக்கிறார் என்று சொல்லுவார்கள். ஒருவரின் முகத்தில் தெய்வீகதன்மையோடு இருக்கவேண்டும் என்றால் அவர்க்கு சந்திரனோடு குருவும் சேர்ந்து இருந்தால் அப்படிப்பட்ட முகம் அமையும். சாந்தமான முகம் இருக்ககூடிய அமைப்பு குருவும் சந்திரனும் இணையும்பொழுது அமையும்.

சந்திரன் மனக்காரகன் என்பதால் குருவோடு இணையும்பொழுது நினைப்பு அதிகம் தெய்வீகதன்மையோடு இருக்கும். தெய்வீகத்தை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

குருவும் சந்திரனும் மறைவு இடத்தில் இருந்தால் அதுவே எதிராகவும் சிந்திக்க தோன்றும். என்ன தெய்வம் என்ன வழிபாடு இது எல்லாம் முட்டாள் தனம் என்று பேசுவார்கள்.

மறைவுஇடத்தில் இரண்டு கிரகங்களும் இருந்தால் அதிகமாக இவர்களுக்கு வரவேண்டிய பணமும் திடீர் என்று கிடைப்பது போல இருக்கும். அந்த பணமும் ஏதோ தெய்வீக இடத்தில் இருந்து கிடைப்பது போல் இருக்கும்.

குரு சந்திரனும் அமையபெற்ற ஒருவருக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு சில கிரகங்களின் பாதிப்பு காலத்தில் பணவரவு குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகத்தையும் வணங்கி வந்தால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 30, 2016

செவ்வாய்


வணக்கம்!
          செவ்வாய் பரிகாரம் என்ற ஒன்றை ஆரம்பித்து அதனை செய்துக்கொண்டு இருக்கின்றோம். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு பரிகாரம் செய்யப்படுகின்றது.

செவ்வாய் கிரகம் உங்களின் ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தாலும் சரி தீமை தரும் வகையில் இருந்தாலும் சரி அதற்கு பரிகாரம் செய்யப்படும். செவ்வாய் கிரகம் எப்படி இருந்தாலும் அந்த கிரகம் உங்களுக்கு ஏதோ ஒரு காலத்தில் தீமையை தரும்.

செவ்வாய் கிரகம் மூன்றாவது வீட்டில் இருந்தால் அந்த இடம் தைரியத்தை கொடுக்கும் என்று சொல்லலாம் ஆனால் ஒரு சில காலகட்டத்தில் அடுத்த வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்கு சண்டையும் வரும். அடுத்த வீட்டை காட்டும் இடம் என்பதால் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு தொந்தரவு கொடுப்பார்கள்.

காது சம்பந்தப்பட்ட நோய் உங்களுக்கு வரும். காதில் ஏதாவது வண்டு உள்ளே புகுந்து தொந்தரவும் செய்ய வாய்ப்பு இருக்கின்றது. இளம்குழந்தைகளாக இருந்தால் காது கேளாத தன்மையும் வரும் அதனால் பெரிய செலவு செய்யவும் வைக்கும்.

உங்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருந்து இந்த பிரச்சினை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 29, 2016

சனி செவ்வாய்

ணக்கம்!
          ஒருவருக்கு சனிக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறவேண்டும். அதோடு உடலிலும் ஏதாவது ஒரு ஊனம் போல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கும்.

சனிக்கிரகம் செவ்வாய்கிரகமும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் அவர்க்கு இதன் தசாவில் திடீர் ஆபத்தும் ஏற்படும். திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. சனி செவ்வாய் இணைந்தால் அவர்களுக்கு ஆப்ரேஷன் செய்வது போல் இருக்கும்.

சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருந்தால் பணவரவு என்பது நன்றாக இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு செலவும் அதிகமாக வைக்கும்.

சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். சனி செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருந்தால் பணவரவு பற்றாகுறை ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கையில் பாதிக்கு மேல் பணவரவு வர செய்யும்.

சனி செவ்வாய இரண்டாவது வீட்டில் இருந்தால் அவர்கள் சாப்பிடும்  சாப்பாடு அதிக காரத்துவம் உடையதாக இருக்கும். ஒரு சிலர்க்கு வாய் புண் ஏற்படவும் செய்யும்.

செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          இந்த உலகத்தில் அட்வைஸ் செய்வது எளிது அதனை பின்பற்றுவது கடினம்.  ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் எதிர்காலத்தில் அல்லது தற்பொழுது கூட பிறர்க்கு நல்லது செய்யவேண்டும் என்று  நினைக்கதோன்றும்.

ஆன்மீகம் எல்லாம் கற்றுவிட்டு அதனை வைத்து பிறர்க்கு செய்யவேண்டும் என்றும் நினைக்கலாம். தாராளமாக இதனை எல்லாம் செய்யுங்கள் ஆனால் முதலில் உங்களுக்கு இதனை செய்து உங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் அசிங்கப்படுவது முதலில் நீங்களாக இருக்கும்.

பிறர்க்கு உங்களுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்றால் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு வாருங்கள் என்று உபதேசித்தால் முதலில் உங்களுக்கு அந்த மந்திரம் உபதேசித்து நடந்ததா என்று பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கே நிறைய பிரச்சினை இருக்கின்றது. அவர்கள் அனைவரும் பிறர்க்கு உபதேசம் செய்தால் எப்படி இருக்கும். என்னுடைய குரு சொன்னது தான் இது முதலில் உன்னை சரிசெய்துக்கொள் பிறகு அடுத்தவர்க்கு உபதேசம் செய் என்பார்.

உங்களின் அனைவருக்கும் தீபாவளி அறிவுரையாக சொல்லுவதும் இது தான், உங்களை சரிசெய்துகொள்ளுங்கள் பிறகு அடுத்தவர்களுக்கு சொல்லலாம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 28, 2016

சுக்கிரனும் வரும் வரனும்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் இருந்தது. சுக்கிரனோடு சூரியன் இணைந்து அமர்ந்தது. ஏழாவது வீடு சனியின் வீடாக இருந்தது. நான் அவருக்கு சோதிடம் பார்க்கும்பொழுது ஏழாவது வீடாக சனியின் வீடு இருந்ததால் அவருக்கு வரும் பெண்  படித்திருக்காது என்று சொல்லிருந்தேன்.

அவர் திருமணத்திற்க்கு பெண் பார்க்கும்பொழுது அனைவரிடமும் அவர்  பெண் படித்திருந்தாலும் சரி படிக்காமல் இருந்தாலும் சரி எந்த பெண்ணாக இருந்தாலும் இருக்கட்டும் என்று பெண் பார்க்க சொன்னார்.

அவருக்கு அமைந்த பெண் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பெண்ணாக அமைந்தது. அவர் பார்த்த நேரத்தில் நம்ம சோதிடஅறிவு அந்தளவுக்கு தான் இருந்தது என்று சொல்லவேண்டும்.

திருமணத்திற்க்கு நாம் சோதிடம் பார்க்கும்பொழுது சுக்கிரனின் நிலையை நன்கு கவனித்து பலனை சொல்லவேண்டும் அதோடு சுக்கிரனை முதலாவதாக நாம் எடுத்துக்கொண்டு அதன் பிறகு ஏழாவது வீட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பலனை பார்த்தால் நன்றாக இருக்கும்.

சுக்கிரனோடு சூரியன் இணைந்ததால் அவருக்கு அப்படிப்பட்ட திருமண வாழ்வு கிடைத்தது. அது எந்த வீட்டில் அமைந்தாலும் சரி அதனை தான் தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் ஒருவருக்கு சரியில்லை என்று வைத்துக்கொள்வோம் அவர் சுக்கிரன் காரகம் வகிக்கும் துறையில் சேர்ந்து அடிவாங்குவார் என்று அர்த்தம். 

ஒருவர் சினிமா தயாரித்துக்கொண்டு இருந்தார் அவர் தயாரித்துக்கொண்டு இருக்கும்பொழுது அவர் தயாரித்த சினிமா துறையில் ஏதோ சிக்கல் என்று வந்தார் அவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் சுக்கிரன் இருக்ககூடாத இடத்தில் இருந்தது.

அவர் ஜாதகத்தை என்னிடம் பார்த்தாலும் அவருக்கு என் மீது அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரியும். நான் அவரிடம் இது கொஞ்சம் கடினம் இதற்கு என்று நிறைய வேலை செய்யவேண்டும் என்று சொன்னேன். 

அவர் என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன். அவர் மறுபடியும் வரவில்லை. அவர் தயாரித்த படத்தை ரிலிஸ் செய்வதற்க்குள் படாதபடி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். படம் வந்தமாதிரி தெரியவில்லை கொஞ்சநாள் சென்றபிறகு படம் வந்து தோல்வி என்று நண்பர்கள் சொன்னார்கள்.

இன்றைக்கு ஜவுளிகடையில் வேலை செய்யும் நபர்களின் ஜாதகத்தை எல்லாம் எடுத்து பார்த்தால் அவர்களுக்கும் சுக்கிரன் அந்தளவுக்கு வலுவாக அமையாது. அவர்கள் பிறர்க்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

சுக்கிரன் வலுபெற்றால் நிறைய நல்லது நடக்கும். வலுபெறுவதற்க்கு என்று சிறப்பான வழிபாடு மற்றும் பூஜை முறைகள் எல்லாம் இருக்கின்றன அதனை செய்யுங்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 27, 2016

குரு தோஷம்


ணக்கம்!
          குரு ஒரு சுபக்கிரகம் என்று தெரியும். ஐந்தாம் வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டிற்க்கு காரகம் ஆவார். பூர்வபுண்ணியவீடு மற்றும் பாக்கியஸ்தான அதிபதி வீடு இரண்டிற்க்கு காரகம் வகிக்கிறார்.

சுபக்கிரகம் என்றவுடன் அதன் வழியாக நிறைய நன்மை நடக்கவாய்ப்பு அதிகம் இருக்கின்றது. ஒரு சிலர்க்கு குரு கிரகம் மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுவிடும் அல்லது குரு கிரகம் பாவிகளோடு சேர்ந்து நன்மை தராது. இது ஒரு தோஷமாக கருதிக்கொள்ளவேண்டும்.

இந்த தோஷம் விலகுவதற்க்கு பாக்கியஸ்தான அதிபதியின் பார்வை குருவிற்க்கு கிடைத்தால் இது தோஷமாக நீங்கள் கருதிக்கொள்ளதேவையில்லை. தோஷம் தீர்ந்துவிடும் குருவின் முழுபலனையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

பாக்கியஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் பார்வை பட்டாலும் தீரும் அல்லது பாக்கியஸ்தான அதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் இந்த தோஷம் தீரும்.

பாக்கியஸ்தான அதிபதி பார்வை படவில்லை அல்லது சேர்ந்து இல்லை என்றால் கவலைபடதேவையில்லை அது கோச்சாரபடி வரும் காலத்தில் அந்த காலத்தில் அந்த தோஷம் நீங்கும் அல்லது பாக்கியஸ்தான அதிபதி யார் என்று பார்த்து வணங்கி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பரிகாரம்


வணக்கம்!
          நேற்று சுவாமிமலை சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதோடு நமது சூரசம்ஹார பரிகாரத்திற்க்கு அன்னதானம் செய்வதற்க்கு என்று பணம் செலுத்தினேன். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு வரும் நண்பர்கள் அளிக்கும் பணத்தை முடிந்தவரை தெரிந்த முருகன் கோவிலில் செலுத்தி ஏதாே ஒரு நல்ல காரியம் நடக்க இதனை செய்கிறேன் என்று சொல்லிருந்தேன். அதன் ஆரம்பமாக நேற்று சுவாமிமலை சென்று காணிக்கையை செலுத்திவிட்டேன். அதன் விபரத்தை இணைத்துள்ளேன்.

பணம் எனக்கு தான் வருகின்றது ஆனாலும் அந்த பணம் தகுந்த முருகன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதால் இதனை செய்துக்கொண்டு வருகிறேன். ஒரு சில முருகன் கோவிலில் பணம் செலுத்தும்பொழுது ரசீதை வாங்கமுடியாது ஏன் என்றால் அது சிறிய கோவிலாக இருக்கும்.

ஒவ்வொரு கோவிலாக நமது நண்பர்கள் வழியாகவும் என்னுடைய வழியாகவும் பணம் செலுத்தப்படும்.நம்மால் முடிந்தவரை ஒரு நிகழ்வு நடைபெறவேண்டும் என்பதால் இதனை செலுத்தப்படுகிறது. எனது பூஜையும் உண்டு. 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை பணம் செலுத்தாமல் இருக்கும் நண்பர்கள் உடனே செலுத்திவிடுங்கள். ஜாதகத்தையும் இணைத்துவிடுங்கள். தங்களின் வேண்டுகோளும் எழுதி அனுப்புவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 26, 2016

புதன்

ணக்கம்!
          நமது தமிழ்மக்கள் சினிமா நடிகர்களுக்கு எல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு அவர்களுக்கு செய்வது மற்றும் அவர்களின் அடிமையாக இருப்பதை வழக்கமாக இருப்பார்கள். சினிமா என்பது ஒரு கலை என்பதை விட்டுவிட்டு அது தான் நமது வாழ்க்கை என்று புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படும் நபர்களுக்கு எல்லாம் எப்படி தன் வாழ்க்கையை ஒரு சிறந்த வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு சிலர் அரசியல் என்று சென்றுக்கொண்டு அதிலும் வெற்றி பெறாமல் நிறைய இழந்தும் போய்க்கொண்டு இருக்கின்றார்கள். இப்படி ஒவ்வொரு தொழிலும் பலர் தன்னை தொலைத்து தன் குடும்பத்தையும் தொலைத்துவிட்டார்கள். தொலைத்தும் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒரு அற்புதமான வாழ்க்கையை ஏன் அடுத்தவர்களுக்கு தொலைக்கவேண்டும் என்று சிந்திக்க தெரிந்தாலே உங்களின் ஜாதகத்தில் புதன் கிரகம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

உங்களின் குடும்பத்தை எப்படி எல்லாம் நன்றாக வைக்கவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தாலே போதும் புதன்கிரகம் சூப்பராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புதன்கிரகம் தரும் நல்ல அறிவு


ணக்கம்!
          புதன் கிரகம் நரம்பு சம்பந்தப்பட்டத்திற்க்கு காரகம் வகிக்கிறார். நமது நரம்பு மண்டலம் நன்றாக இருந்தால் நமது அறிவு திறனும் அதிகப்படும்.

பொதுவாக புதன்கிரகம் சோதிடர்களுக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். எனக்கு புதன்கிரகம் நன்றாக இருந்தால் நான் நன்றாக படித்து இருக்கவேண்டும். எனக்கு படிப்பு எந்தளவுக்கு ஏறியது என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை ஏற்கனவே பலமுறை சொல்லிருக்கிறேன்.

இன்று சோதிடனாக இருக்கிறேன் என்றால் அதற்கும் புதன்கிரகம் காரகம் தான் வகிக்கிறார். அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு காலத்திற்க்கு பிறகு தன்னுடைய பலனை மாற்றிக்கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

புதன்கிரகம் இன்று எனக்கு நன்றாக வேலை செய்வதற்க்கு காரணம் நான் அதற்கு வேலை செய்யவில்லை ஆனால் அதுவாகவே நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 

ஒருவருக்கு ஜாதகம் சரியில்லை என்றாலும் அவர்களுக்கு முதலில் புதன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும். அதாவது புதன் நன்றாக இருந்தால் அனைத்தையும் புரிந்துக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புதன் பரிகாரம்


வணக்கம்!
         புதன் தோஷ நீங்க மரகதலிங்கத்தை வணங்கினால் நல்லது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். மரகதலிங்கம் பச்சை நிறத்தில் இருக்கும் புதனுக்குரிய நிறம் பச்சை என்பதால் மரகதலிங்கத்தை வணங்குவது நல்லது என்பார்கள்.

புதன் வழியாக உங்களுக்கு பிரச்சினை வருகின்றது என்று நினைத்தால் அல்லது புதன் தசா நடந்தால் இதனை நீங்கள் செய்யலாம். புதன் கிரகம் நமது அறிவுக்குரிய கிரகம் என்பதால் அனைவரும் ஒரு முறையாவது வணங்குவது சிறப்பு என்பார்கள்.

மரகதலிங்கத்தை நான் வணங்கியது கிடையாது. பிறர் சொல்லி தான் கேள்விபட்டு இருக்கிறேன். நீங்கள் புதன் என்றவுடன் பெருமாளை வணங்கவேண்டும் என்பார்கள். அனைத்து கிரகத்தையும் தன்னிடம் வைத்திருக்கும் சிவனை வணங்கினால் பெருமாளை வணங்குவதை விட சிறப்பு என்பதால் இதனை சொல்லுகிறேன்.

இன்றைய காலத்தில் மரகதலிங்கம் என்பது இருக்கின்றதா என்பதே தெரியவில்லை நம்ம ஆட்களுக்கு இந்த உலகத்தை கொடுத்தாலே பற்றாது. இதனை எல்லாம் விட்டு வைத்திருப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது. உண்மையில் இருந்தால் வணங்குங்கள்.

புதன் கிரகம் எப்படி எல்லாம் பிரச்சினை கொடுக்கும் என்பதை வரும் பதிவில் நாம் பார்க்கலாம். புதன்கிரகம் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதை கொஞ்சம் உங்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 25, 2016

செவ்வாய் ஆன்மீகபார்வை


வணக்கம்!
          அக்னி தத்துவம் ஆத்மாவில் இருக்கின்றது அதே அக்னி தத்துவத்தை உடைய கிரகம் சூரியன் என்று சொல்லுவதை விட செவ்வாய் தான் காரகம் என்று சொல்லுவார்கள். ஆத்மாவில் உள்ள வெப்பத்தை காட்டுவதும் இந்த செவ்வாய்கிரகம் தான் என்று குரு சொல்லுவார்.

ஒருவருக்கு செவ்வாய் கிரகம் நன்றாக இருந்தால் அவரின் ஆத்மா நல்ல பலத்தோடு இருக்கின்றது என்று அர்த்தம். செவ்வாய் கிரகம் பலம் குன்றி இருந்தால் ஆத்மாவின் பலமும் குறைவு தான். இது எல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒன்று சோதிடத்தில் வராது. நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள் என்று தான் இதனை சொன்னேன்.

உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பலம் குறையும்பொழுது உங்களின் உடலும் வலுகுறைவாக தான் இருக்கும். பலம் அதிகமாக இருந்தால் செவ்வாய் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். 

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சரியில்லை என்றால் சனிக்கிரகத்தின் ஆட்டம் அதிகமாக இருக்கும். சனிக்கிரகம் ஜாதகரை தன் இஷ்டத்திற்க்கு வைத்துவிடும். சனியின் வீரியத்தை குறைப்பதவ்றக்கு செவ்வாய் கிரகம் பலம் ஜாதகத்தில் தேவைப்படுகின்றது.

செவ்வாய் பலம் குறைவாக இருந்தால் உடலில் அவ்வப்பொழுது நீர்கோர்வையும் வருகின்றது. சனியின் ஆட்டம் அதிகரிப்பதால் இது நடைபெறுகின்றது அதனால் செவ்வாயின் கிரகத்தின் பலமும் நமக்கு தேவை தான்.

ஒரு சில ஜாதகத்தில் இரண்டு கிரகமும் அடிப்பட்டு இருக்கும். அவர்களின் நிலை மிக மிக கொடுமை தான். இன்னும் நிறைய தகவல்கள் இருக்கின்றன அதனை எல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          இந்த செவ்வாய் பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை ஆன்மீக அனுபவத்தில் பதிவாக சொல்லிருந்தேன்.  ஆன்மீக அனுபவங்கள் படிப்பவர்களுக்கு சலுகையாக ஒன்றை அறிவித்தேன் அது என்ன என்றால் நீங்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலில்  ஏதாவது நன்கொடை வழங்கிவிட்டு அந்த ரசீதை அனுப்பிவிடுங்கள் எனக்கு பணம் அனுப்பவேண்டாம் என்று சலுகையாக சொல்லிருந்தேன். அதில் ஒருவர் அல்லது இருவர் அதனை செய்து இருக்கலாம். மீதி உள்ளவர்கள் எனக்கு பணத்தை அனுப்பிவிட்டார்கள்.

இன்றைக்கு பல நண்பர்களை தொடர்புக்கொண்டு ஒரு சில முருகன் கோவிலுக்கு நமது காணிக்கையை செலுத்தவேண்டும் அதாவது அந்த பூஜைக்கு அல்லது அன்னதானத்திற்க்கு ஏதாவது ஒரு விதத்தில் முருகன் கோவிலுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லிருக்கிறேன்.

இதுவரை நான் சென்ற முருகன் கோவிலில் தான் இதனை எல்லாம் செய்ய சொல்லிருக்கிறேன். அதோடு அடுத்த வேலையாக நான் சென்ற முருகன் கோவிலுக்கு மறுமுறை செல்ல இருக்கிறேன். 

இதுவரை வந்த ஜாதகத்தை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு பதில் அனுப்பி இருக்கிறேன். இன்னமும் கொஞ்சம் இருக்கின்றது. பார்த்த ஜாதகத்தை எல்லாம் எடுத்து அனைத்தையும் லிஸ்ட் தயார் செய்து  வைத்திருக்கிறேன். 

நான் செல்லும் முருகன் கோவிலில் அவர்களுக்கு என்று பூஜை செய்யலாம் என்பது திட்டம். நமது அம்மன் கோவிலிலும் இது நடைபெறும். கடைசியில் அம்மன் வழியாக ஒரு சில பூஜை நடைபெறும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பெரிய பதவியை தரும் செவ்வாய்


ணக்கம்!
          ஒருவருக்கு செவ்வாய் கிரகம் பத்தாவது வீட்டில் அல்லது பதினோராவது வீட்டில் இருந்தால் அவர்கள் பெரிய கம்பெனிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பார்கள் அல்லது பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். 

பெரிய மிஷின் வைத்து வேலை செய்யும் இடங்களில் அதாவது நிலக்கரி இரயில்வே துறையில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். இதுபோல் உள்ள துறையில் கொடிகட்டி பறப்பார்கள். நான் சொன்னது எனக்கு தெரிந்த துறையை சொன்னேன். 

பத்தாயிரம் பேரை நிர்வகிக்கும் ஒரு ஆளுக்கு எப்படி தைரியம் வேண்டும். அனைத்தையும் எதிர்க்கொள்ளும் திறன் வேண்டும் அல்லவா. அந்த திறனை கொடுப்பது செவ்வாய் கிரகமாக இருக்கும்.

ஒரு சில கம்பெனியில் யூனியன் தலைவர்களுக்கு கூட இப்படிபட்ட அமைப்பு இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். இன்றைக்கும் அவர்கள் நல்ல திறமையாக அதனை எல்லாம் நிர்வகித்து வருவதும் எனக்கு தெரியும் அவர்களுக்கு ஒரு திறமையை கொடுத்தது செவ்வாய் கிரகம் தான் என்பது தெரியும்.

நீங்களும் ஒரு யூனியன் அல்லது எதற்காகவது ஒரு தலைவராக இருக்கவேண்டும் என்கிறபொழுது செவ்வாய்கிரகத்தின் காரத்துவதை தேர்ந்தெடுத்து அதன் போல் தன்னை மாற்றிக்கொள்ளலாம். செவ்வாய்கிரகத்தை வணங்கி அந்தமாதிரியான பதவியை பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விளையாட்டும் செவ்வாய் கிரகமும்


ணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு ஏழில் அமர்ந்து இருந்தது. அவருக்கு இளம்வயதில் செவ்வாய் தசா ஆரம்பம் ஆனது. இளம் வயதில் ஒருவருக்கு செவ்வாய் தசா வந்தால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

நான் சந்தித்த நபருக்கும் இளம்வயதில் அதாவது பள்ளிபருவ வயதில் நிறைய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வாங்கியுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு நிறைய பருவும் வந்துள்ளது. அந்த பரு வந்ததால் முகத்தில் தளும்பு போல் இருக்கின்றது. இன்றைக்கும் அந்த தளும்பு மாறிவில்லை அப்படியே இருக்கின்றது.


விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று நிறைய பரிசு வாங்கியிருந்தாலும் எந்த நேரமும் அந்த காலத்தில் விளையாட்டில் கவனம் செலுத்திக்கொண்டு இருப்பார். இன்றைய காலத்தில் செவ்வாய் தசா ஒரு பையனுக்கு நடைபெற்றால் டிவியில் விளையாட்டு போட்டியை பார்த்துக்கொண்டு இருப்பான். விளையாட்டையும் தொலைத்துவிட்டோம் விளையாடும் இடம் முழுவதும் வீட்டை கட்டிவைத்துவிட்டோம் அப்புறம் எங்கே சென்று விளையாடுவது. இது தான் படித்த படிப்பு கற்றுகொடுத்த பாடம் நம்மை நாமே நசுக்கிக்கொள்வது.

தற்காலத்தில் செவ்வாய் தசா நடந்தால் அந்த பையனை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் ஒரு பொருளும் இருக்காது. விளையாடுகிறேன் என்று அனைத்தையும் உடைத்துவிடுவான். சரி நாம் மேட்டருக்கு வருவோம்.

செவ்வாய் தசா நடக்கும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் அவரின் தாடை கொஞ்சம் அடிப்பட்டு காயம் ஏற்படுத்தியது. ஏழில் நின்ற செவ்வாய் லக்கினத்தை பார்த்த காரணத்தால் முகப்பகுதியில் அடிப்படும்.

இன்றைக்கு செவ்வாய் தசா உங்களுக்கு நடந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு விபத்தை நீங்கள் சந்திக்கவேண்டும். விபத்து சிறியதா அல்லது பெரியதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

செவ்வாய் தசா நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி உங்களின் குழந்தைகளை நன்றாக விளையாட அனுமதியுங்கள். எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள். எதிர்மறையான எண்ணங்களை ஒழிக்க விளையாட்டு உறுதுணை புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய்


வணக்கம்!
          நம்ம ஆட்கள் சோதிடம் பார்க்க போவதே திருமணத்திற்க்கு தான் இருந்தது. தற்பொழுது பரவாயில்லை எல்லாவற்றிக்கும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திருமணம் என்றவுடன் செவ்வாய் தோஷம் தான் மிகவும் பெரிதாக பேசப்படும்.

செவ்வாய் கிரகம் 2 4 7 8 12 இல் இருந்து சுக்கிரன் பலம் குறையும் காலத்தில் ஜாதகர் பிறரை நாடி செல்வார்கள் என்று சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள்.

செவ்வாய்கிரகம் தன் வேலையை இரத்தவடிவத்தில் தான் முதலில் காட்ட ஆரம்பிப்பார். இரத்த அழுத்தம் ஏற்பட்டவுடன் நமது எண்ணம் சிதைந்து பிறரை நாட ஆரம்பித்துவிடும் என்பார்கள். 

செவ்வாய்கிரகம் காமத்திற்க்கும் காரத்துவம் வகிக்கும் ஒரு கிரகம் தான். செவ்வாய் ஜாதகத்தில் சரியில்லை என்றாலும் சரி செவ்வாய் கோச்சாரபடி தவறான இடத்திற்க்கு போகும்பொழுதும் சரி மனதை அலைய ஆரம்பித்துவிடும்.

செவ்வாய்கிரகத்தை சரி செய்வதற்க்கு தான் பலர் விரதமுறையை தேர்ந்தெடுத்தார்கள். இரத்தத்தை சரிசெய்யும் என்பதற்க்கு இதனை தேர்ந்தெடுத்து செய்துவந்தார்கள். செவ்வாய்கிரகம் பலவழிகளிலும் ஒருவரின் வாழ்வில் சம்பந்தப்படுவதால் தான் செவ்வாய்கிரகத்திற்க்கும அதிக முக்கியத்துவம் ஜாதகத்தில் கொடுக்கப்பட்டது. 

இல்லறவாழ்வில் நிறைய பேர் இன்று பிறர்மனை நாட ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல கணவன் மனைவியாக இருந்தாலும் செவ்வாய் கிரகத்தின் பாதிப்பால் வழி தவறிவிடுகின்றார்கள் என்பதற்க்கு தான் நான் செவ்வாய் கிரகத்திற்க்கு பரிகாரம் பரிந்துரை செய்ய சொல்லுவது உண்டு.  

செவ்வாய் கிரகத்தினை சரிசெய்யும் ஒரு செயலாக தான் இந்த செவ்வாய் கிரகத்திற்க்காக சிறப்பு பரிகாரம் சொல்லப்பட்டது. உங்களின் வாழ்க்கை எப்படி சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு உடனே ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 24, 2016

கர்மவினை


ணக்கம்!
          நட்சத்திரபரிகாரத்தில் ராகுவுக்கு என்று ஒரு சில நபர்கள் தொடர்புக்கொள்வார்கள். இதற்கு அதிகபட்சம் வருபவர்கள் தொடர்புக்கொள்வார்களே தவிர அவர்கள் என்னை சந்திக்க கூட முடியாது.

கர்மவினை அவர்களை தடுத்துவிடுகிறது. பெரிய பரிகாரத்திற்க்கு வருபவர்கள் அதிகபட்சம் வருவார்களே தவிர அதனை செய்ய அவர்களால் முடியாது.

இன்றைக்கு இப்படிப்பட்ட பூஜைகள் எல்லாம் நிறைய செய்கிறேன். இதற்கு வரும் நபர்கள் அதிகபட்சம் ஜாதககதம்பம் படிப்பவர்கள் கிடையாது. விலை உயர்ந்த சொகுசுகார்களுக்கு எல்லாம் டிவியில் விளம்பரம் செய்வது கிடையாது ஏன் என்றால் அவர்கள் எல்லாம் டிவியை பார்ப்பவர்கள் கிடையாது. 

இதனை சொகுசுகார்கள் விற்க்கும் நபர்கள் தெரிந்துவைத்திருக்கார்கள் அதுபோல நானும் தெரிந்து வைத்திருக்கிறேன். யார் யார் இதற்கு வருவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதனை செய்பவர்கள் கண்டிப்பாக எனது ஊருக்கு காரை அனுப்பி என்னை அழைத்துக்கொண்டு சென்று பேசிவிட்டு அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஜாதககதம்பத்தில் வருபவர்கள் இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை என்பது எனக்கு தெரியும். இவர்கள் போல் நீங்கள் மாறும்பொழுது நீங்கள் என்னை விடமாட்டீர்கள். ஏதோ ஒரு பெரிய விசயம் இருக்கின்றது என்பது மட்டும் உங்களுக்கு சொல்ல இந்த பதிவை எழுதினேன். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நீங்களும் அந்த நிலைக்கு வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரனுக்கு பரிகாரம்


ணக்கம்!
          இந்த பதிவு ஆன்மீக அனுபவங்களில் வரவேண்டிய ஒன்று இதனை ஜாதககதம்பத்தில் ஏற்றிவிட்டேன். சந்திரனைப்பற்றி ஜாதககதம்பத்தில் நிறைய எழுதிக்கொண்டு இருப்பதால் இதனை இங்கேயே கொடுப்பது நன்றாக இருக்கும்.

சந்திரன் தான் மனக்காரன் இந்த உலகம் இயங்குவது சந்திரனால் தான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரின் மனதில் உருவாகும் ஆசைகளை தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது.

சந்திரனுக்கு பரிகாரம் பலர் கேட்பார்கள். சந்திரனுக்கு பரிகாரம் என்பது நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல விசயத்தை செய்தாலே போதுமான ஒன்று தான்.

நாம் வெட்டியாக இருக்கும் சமயத்தில் ஏதாவது நாம் பேசிக்கொண்டே இருப்போம். இந்த பேச்சை நிறுத்தினாலே போதும். சும்மா இருக்கும்பொழுது பேசுவது தான் வேலையாக இருப்போம். யாராவது இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மனதில் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதனை நாம் பேசிக்கொண்டே இருப்போம் அல்லவா. இதனை நிறுத்த பழகிக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு இருக்கும் பையித்தத்தை பார்த்தால் அவர்கள் ஏதோ ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஒரு துறையில் இருந்து வேலை பார்த்து அல்லது படித்ததை வைத்து பேசுவார்கள்.

படித்தது அல்லது கற்றது தான் பிரச்சினையே. ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதற்கு என்ன தெரியும் ஒன்றும் தெரியாது. மனது எதனை வைத்து உருவாகிறது. படித்து படித்து இதுவரை பார்த்து பார்த்து வைத்ததை வைத்து உருவாகிறது. 

இன்றைக்கு சந்திரனோடு சேரும் கிரகத்திற்க்கு தகுந்தவாறு உங்களின் புத்தி வேலை செய்வதற்க்கு காரணம் எல்லாம் நீங்கள் கற்ற விசயத்தை வைத்து மனது அப்படியே அசைபோட்டுக்கொண்டு இருக்கின்றது. கற்ற விசயத்தை அசைபோடாமல் இருந்தால் எப்படி மனதிற்க்கு பையித்தியம் பிடிக்கும்.

சும்மா வீட்டில் இருந்தால் செல்போனை எடுத்துக்கொண்டு பேசிக்கொணடே இருப்பது அல்லது ஏதாவது ஒன்றை சிந்தித்துக்கொண்டே இருப்பது இதனை எல்லாம் விட்டாலே போதும். சந்திரனுக்கு என்று தனியாக பரிகாரம் செய்யவேண்டியதில்லை.

தெய்வத்தின் அருகில் தெய்வத்தின் அருளை ஒருவர் பெறவேண்டும் என்றால் இந்த மாதிரியான விசயத்தை கடைபிடித்து வரவேண்டும். மனதை விடும்பொழுது நீங்கள் தெய்வமாகவே மாறிவிடுகின்றீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 23, 2016

சூரியன் சந்திரன்

ணக்கம்!
          சந்திரன் ஒரு ஜாதகத்தில் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு சூரியனும் முக்கியத்துவம் பெறவேண்டும். தாய் தந்தை நன்றாக இருந்தால் தான் நமது வாழ்க்கை நன்றாக அமையும்.

இன்றைய காலத்தில் ஒருவர் தானாக கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அது அவ்வளவு லேசான காரியம் கிடையாது. சந்திரன் சூரியன் நன்றாக ஜாதகத்தில் அமைந்துவிட்டால் நமது தந்தை தாய் நம்மை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.

ஒருவருக்கு இரண்டும் நன்றாக அமைந்துவிட்டால் அது பெரிய யோகம் என்றே சொல்லலாம் அப்படி பெரும்பாலும் அமைவதில்லை என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு அமைந்து நல்ல வாழ்க்கையை தொடங்கி வைக்கிறது.

ஒரு ஜாதகருக்கு லக்கினத்தில் சூரியன் அமைந்து இருந்தது ஏழில் சந்திரன் அமைந்தது. மாறி மாறி இருவரும் அந்த பையனுக்கு நல்லது செய்தனர். கஷ்டமே இல்லாமல் வளர்த்தனர் என்று சொல்லலாம்.

இதுபோல நல்ல இடத்தில் இரண்டு கிரகங்களும் அமைந்தால் அந்த குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஏதாவது ஒன்று பாழ்பட்டாலும் வாழ்க்கை கொஞ்சம் கடினம். ஒரு ஜாதகத்தில் சூரியனும் நன்றாக அமையவேண்டும் சந்திரனும் நன்றாக அமையவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 22, 2016

செவ்வாய் பரிகாரம்



ணக்கம்!
          செவ்வாய்க்கு பரிகாரம் என்று சொன்னவுடன் பல நண்பர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்குரிய பலனை கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கான பரிகாரம் சரியான ஒரு முறையில் செய்ய திட்டமிட்டுள்ளேன். 

பலர் செவ்வாய் உச்சத்தில் இருக்கும் ஜாதகத்தை அனுப்பி எனக்கு பிரச்சினை இருக்கின்றது என்று கேட்டுள்ளனர். பலர் எதற்கு என்று தெரியாமல் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஜாதகத்தையும் நன்றாக பார்த்து அதற்கு தீர்வை செய்யவேண்டும் என்பதற்க்காக தான் முன்கூட்டியே இதனை ஆரம்பித்தேன்.

ஒரு சில நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பி செவ்வாய்க்கு சம்பந்தமே இல்லாத வினா எல்லாம் எழுப்பினர். பொதுவாக நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு என்று தனிநேரத்தை ஒதுக்கி அதற்கு விடையை கொடுப்பவன் நான். பணம் இருக்கின்றது இல்லை என்பது எல்லாம் நான் பார்ப்பது கிடையாது. உதவி என்று வந்தவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைப்பேன். தவறாக பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

செவ்வாய் என்றவுடன் அதிகமாகவே பலர் அச்சத்தில் இருப்பதும் தெரியவந்தது. நாம் முருகனுக்கு பல நல்லதை செய்கிறோம் அது கண்டிப்பாக நம்மை காப்பாற்றும். பயம் கொள்ள தேவையில்லை.

பலர் ஜாதகத்தை தொடவே இல்லை என்பதும் தெரிகிறது. முதலில் உங்களின் ஜாதகத்தை எடுத்து செவ்வாய்கிரகம் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள் அதன் பிறகு பாக்கி எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.

உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் நன்றாக இல்லாமல் போனாலும் உங்களின் வாழ்வில் நீங்கள் சைன் ஆகமுடியாது என்பது மட்டும் நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி செவ்வாய் மற்றும் சந்திரன்


ணக்கம்!
          சனிக்கிரகம் மற்றும் செவ்வாய் கிரகம் இணைந்தால் அவர்களின் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசப்படும் என்று உங்களுக்கு தெரியும். இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பதை விட இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து சந்திரனை பார்ப்பது என்பது கொஞ்சம் அதிபயங்கரமான விளைவு ஏற்படுத்திக்கொடுக்கும்.

சந்திரனுக்கு எப்பொழுது பாவக்கிரகங்களின் பார்வை விழக்கூடாது. அதே நேரத்தில் செவ்வாயும் சனியும் எதிரி கிரமாக இருக்கின்றது. இது இரண்டும் இணைந்து சந்திரனை பார்க்கும்பொழுது தான் பிரச்சினை.

இவர்களின் வாழ்க்கையில் எந்தநாளும் ஏதாவது ஒரு தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு சில காலங்களில் இவர்கள் சும்மா இருந்தால் கூட இவர்களை சுற்றி யாராவது தொந்தரவு கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

இது பெரிய பிரச்சினை எல்லாம் கிடையாது. அதாவது எளிதாக எடுத்துக்கொண்டால் ஒன்றும் பிரச்சினை கிடையாது. இதனை பெரிதாக நினைக்கும்பொழுது தான் அதிக பிரச்சினை இருக்கின்றது.

மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதால் தான் பிரச்சினை. கொஞ்சம் இதனை கவனிக்காமல் விட்டால் கூட இது பெரிய அளவில் கொண்டு சென்று விட்டுவிடும்.

சனி செவ்வாய் என்றவுடன் சண்டை தான் வரும் என்பார்கள். ஒவ்வொருவரும் அரிவாள் எடுத்து வெட்டிக்கொண்டா இருக்கின்றார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது கொஞ்சம் வம்பு வருமே தவிர பெரிய அளவில் வராது.

சந்திரனுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது அடுத்தவர் ஒன்றை பேசினால் கூட அது நம்மை பற்றி தான் பேசுவார்களா என்று நினைக்க தோன்றும். அடுத்தவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று இருந்துவிட்டால் இது பிரச்சினை இல்லை.

இதற்கும் தற்சமயம் செவ்வாய் பரிகாரத்திற்க்கு பரிகாரம் செய்யப்படும். உங்களின் ஜாதகத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்துங்கள். ஆன்மீக அனுபவங்கள் படிப்பவர்களுக்கு செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று ஒரு சலுகை அளித்து இருக்கிறேன் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று அனுப்புவர்கள் தங்களின் கோரிக்கையை தெளிவாக விளக்கி சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 21, 2016

சுக்கிரன் தசா


வணக்கம்!
          சுக்கிரனை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். ஒருவருக்கு சுக்கிரதசா ஆரம்பித்தால் அவரை நாம் கையில் பிடிக்கமுடியாது அந்தளவுக்கு செல்வவளத்தோடு திகழ்வார் என்று நாம் சொல்லலாம்.

சுக்கிரன் தசாவில் பலருக்கு தொடர் நன்மை வந்தாலும் இடையில் வரும் ஒரு சில புத்திகள் அவரை போட்டு தாக்கவும் செய்யும். சுக்கிரன் தசாவில் முதலில் நன்றாக இருந்து பிறகு கஷ்டபட்டவர்கள் இருக்கின்றார்கள்.

சுக்கிரன் தசாவில் சனி புத்தி ஒருவருக்கு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு சிலர் மிகுந்த கஷ்டத்தை இந்த காலத்தில் பெற்று இருக்கின்றனர். சுக்கிரனுக்கு சனி எக்கு தப்பாக அமைவதால் அப்படி நடைபெறும் அல்லது சனி கெடுதல் தரும் நிலையில் ஜாதகத்தில் இருந்தால் அப்படி இருக்கும்.

சுக்கிரன் தசாவில் குரு புத்தி நடைபெற்றாலும் கெட்ட பலனை கொடுக்கும் தன்மையில் இருக்கும். இரண்டுக்கும் சரிப்பட்டு வராதா காரணத்தால் அப்படிப்பட்ட பலனை கொடுக்கலாம்.

ஒருவருக்கு சுக்கிரன் தசா நடைபெற்றால் உடனே நல்லது மட்டும் தரும் என்று நினைக்காமல் சுக்கிரன் தசா முழுவதும் நல்லதை பெறுவதற்க்கு என்ன வழி என்று யோசித்தால் கண்டிப்பாக அனைத்து  புத்தியிலும் நல்லதை பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று பதிவையாவது தந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் எதிரபாராத வேலை காரணமாக பதிவை தொடர்ந்து அதிகமாக கொடுக்கமுடிவதில்லை.

தற்பொழுது செவ்வாய் பரிகாரத்திற்க்கு வரும் ஜாதகங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக அனைத்தையும் பார்த்து அதற்கு பதிலை அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு இதுவரை எதிர்பார்த்த ஜாதகங்கள் வரவில்லை என்று தான் சொல்லவேண்டும். இதனைவிட பெரும்பாலும் வந்த ஜாதங்களில் செவ்வாய் கிரகம் நன்றாக இருக்கின்றது.

கோபத்தை மட்டும் கொஞ்சம் செவ்வாய் தரும் அதனை நாம் புரிந்துக்கொண்டு அதற்கு என்று உள்ள வழிமுறையை தேர்ந்தெடுத்தாலே போதும். செவ்வாய் கிரகத்தின் அதிக பாதிப்புகள் பெற்ற ஜாதகங்கள் வரவில்லை அதற்கு காரணம் அந்த கிரகத்தின் தாக்கம் அதாவது கர்மவினை விடவில்லை.

ஒரு ஹோட்டலுக்கு சென்று நாம் சாப்பிட்டால் அதாவது சைவ உணவகத்தில் சாப்பிட்டால் கூட குறைந்தது ஐநூறு ரூபாய் வைக்கவேண்டும் ஆனால் நாம் ஒரு கோவிலுக்கு சென்று இரண்டு ரூபாய் தீபம் ஏற்ற யோசிப்போம். உங்களின் கர்மவினை அப்படிப்பட்டது. 

செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு நாம் செய்யும் பரிகாரத்தில் கண்டிப்பாக குறையும். அனைவரும் இதில் பங்குக்கொள்ள தங்களை அன்போடு அழைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 20, 2016

ஆன்மீகவாதி


ணக்கம்!
          என்னிடம் ஒருவர் வந்து வாடிக்கையாளர்களாக கூட தொடர்பு வைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆன்மீகவாதிகளாக இருந்திருப்பார்கள். இன்றைக்கு என்னை தேடிவரும் இளைய தலைமுறையினர் கூட அவர்களின் தந்தை ஒரு ஆன்மீகவாதியாக இருக்கின்றனர்.

பல பேர்களை நான் கவனித்து இருக்கிறேன். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு ஞானியோடு அல்லது சித்தர்களோடு பழக்கத்தில் உள்ளவர்களாக இருந்து இருக்கின்றார்கள். பல வருடங்களாக நான் சோதனை செய்து இதனை பார்த்து இருக்கிறேன்.

நான் ஒன்றும் பெரிய ஆள் என்று சொல்லவில்லை வரும் நண்பர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏதாே ஒரு பூர்வபுண்ணிய தொடர்பு அதாவது ஆன்மீகதொடர்பு என்பது இருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

உங்களை நீங்களே சோதனை செய்துக்கொள்ளலாம். நீங்கள் எதற்க்கோ ஒரு முறையாவது என்னை தொடர்புக்கொண்டால் கூட உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்கோ ஒரு இடத்தில் ஆன்மீகதொடர்பை வைத்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

இன்றைக்கு இருக்கும் நிறைய பிராமணர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னோடு தொடர்பில் இருக்கின்றார்கள். முடிந்தவரை இவர்களுக்கு நல்லதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துக்கொடுத்து கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு நீங்கள் ஒரு ஆன்மீகவாதியோடு அல்லது ஏதோ சித்தர்களின் வழிபாட்டை பின்பற்றி வருபவர்களாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வாரிசுகளை காப்பாற்ற ஒரு ஆன்மீகவாதி எதிர்காலத்தில் வருவான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 19, 2016

புதன் தசா கேது புத்தி


ணக்கம்!
         புதன் தசா கேது புத்தி ஒருவருக்கு நடந்தது. கேது புத்தி என்பதால் கொஞ்சம் ஆட்டிபடைத்தார் என்று சொல்லாம். புதனைப்பொறுத்தவரை அது எந்த கிரகத்தின் புத்தி என்றாலும் அது போல மாறி கொடுக்க ஆரம்பிக்கும். இது ஒரு பெரிய சிக்கல்.

கேது புத்தி என்றவுடன் அவருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உருவாகியது. அவர் பல மருத்துவமனையை ஏறி பார்த்தார் ஆனாலும் எதாவது ஒரு கண் பிரச்சினை வந்துக்கொண்டே இருந்தது. அவரின் மனைவி ஒரு நாள் என்னிடம் தொடர்புக்கொண்டு அவரின் ஜாதகத்தை காண்பித்து காண்பித்தார்.

தசாநாதனுக்கு ஆறாவது வீட்டில் கேது இருந்து புத்தியை நடத்திக்கொண்டு இருந்தது. உடனே நான் அவருக்கு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்றேன். அவரும் அதனை ஏற்றக்கொண்டு இதனை சொன்னார்.

புதன் கிரகத்திற்க்கு என்று தனிப்பட்ட இயல்பு இல்லாமல் ஆறாவது வீட்டில் இருந்த கேதுவின் புத்தி என்பதால் அதுபோல தன்பலனை கொடுக்க ஆரம்பித்த காரணத்தால் இந்த பிரச்சினை அவருக்கு கொடுத்தது.

புதன் கிரகத்திற்க்கு ஒரு சரியான பரிகாரம் மற்றும் ஒரு தெய்வத்திற்க்கு கண்மலர் வாங்கி வைத்துவிடுங்கள் என்று சொன்னேன். பல கோவில்களில் கண்மலர் வாங்கிகொடுப்பது உண்டு இதனை செய்ய சொன்னேன். கொஞ்ச நாளில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை குறைந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பரிகாரம் விளக்கம்


வணக்கம்!
         செவ்வாய் கிரகத்தின் பாதிப்பிற்க்கு பரிகாரத்தைப்பற்றி நேற்றைய பதிவில் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் இதனைப்பற்றி கேட்கிறார்கள். பழைய நண்பர்களும் இதற்கு என்று ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். நல்ல விசயம் அதே நேரத்தில் ஒரு சில கருத்தையும் சொல்லவேண்டும்.

ஜாதககதம்பத்தை குறைந்தது ஐந்து வருடங்கள் படித்துவருபவர்கள் கூட எனக்கு இந்த பிரச்சினை இருக்கின்றது என்று அனுப்பியுள்ளனர். தினமும் பதிவுகளை எப்படியும் தருவதின் நோக்கம். ஒன்றை படித்து அதில் இருந்து நீங்கள் எதையாவது ஒன்றை கற்று உங்களின் வாழ்க்கைக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

செவ்வாய் தோஷத்தை போக்க எத்தனையோ பதிவுகளை நான் கொடுத்து இருக்கிறேன். அதனை எல்லாம் கடைபிடித்து வந்திருந்தால் இந்த நேரத்திற்க்கு எல்லாம் செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு ஜாதகமாக மாற்றியிருக்கமுடியும்.

செவ்வாய் தோஷத்திற்க்கு மட்டுமல்ல பல தோஷத்தையும் நாம் புரிந்துக்கொண்டு அதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். படிப்பதோடு இருந்துவிடாமல் இதனை வைத்து எப்படி முன்னேற்றம் அடையலாம் என்பதை மட்டும் சிந்தியுங்கள்.

இதுவரை அதனை செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது செய்ய ஆரம்பியுங்கள் கண்டிப்பாக நல்ல பலனை கொஞ்சநாளில் நாம் எதிர்பார்க்கலாம்.

செவ்வாய்கிரகத்திற்க்கு என்று அனுப்புவர்கள் செவ்வாய்கிரகத்தால் என்ன பாதிப்பு என்பதையும் சொல்லிவிடுங்கள். வருகின்ற ஜாதகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அனைவரிடமும் இருந்து ஜாதகத்தை எதிர்பார்க்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 18, 2016

சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

ணக்கம்!
         ஐப்பசி மாதத்தில் உள்ள பெரிய விஷேசம் என்றால் அது தீபாவளி என்று தான் சொல்லுவார்கள். ஐப்பசி மாதம் அதனை விட சூரசம்ஹாரம் என்ற ஒரு நிகழ்வு இருக்கின்றது. அதோடு ஐப்பசி பெளர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வார்கள்.

தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் கொண்டிவிடுவீர்கள். சூரசம்ஹாரம்  மற்றும் ஐப்பசி அன்னதானம் மட்டும் கோவிலில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுகள். 

இன்று செவ்வாய்கிழமைவ முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்கிரகத்தால் பாதிப்பு இருக்கின்றது என்று நினைப்பவர்கள் அதோடு பெண்களுக்கு செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும் அவர்கள் எல்லாம் அவர் அவர்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்புங்கள்.

எதிரி தொல்லை மற்றும் பிறர்களால் தொல்லை இருக்கின்றது என்று நினைப்பவர்களும் நிலம் அமையவில்லை நிலம் விற்கமுடியவில்லை என்று நினைப்பவர்கள் ஜாதகத்தை எனக்கு அனுப்பிவையுங்கள்.

செவ்வாய் சனி இணைந்த ஜாதகர்கள் பெரும்பாலும் நிறைய பிரச்சினை ஏற்படும். இதன் வீரியத்தை குறைக்கமுடியும். இப்படிப்பட்ட ஜாதகர்களும் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.

செவ்வாய்க்கு பாதகம் ஏற்பட்டு அதனால் மாங்கல்யதோஷம் ஏற்பட்டு மணவாழ்க்கை பாதிக்கப்படும் ஜாதகர்களும் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.

செவ்வாய் கிரகம் உங்களுக்கு சரியில்லை என்று நினைப்பவர்கள். இதுவரை ஜாதககதம்பத்தில் செவ்வாய்கிரகத்தைப்பற்றி எழுதிய கருத்தை படித்துவிட்டு எனக்கும் அப்படிதான் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் ஜாதகத்தை அனுப்பலாம்.

முருகனுக்கு உற்சவம் ஆரம்பம் ஆகும் தினம் 31.10.2016 அன்று முதல் உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்க்கான சிறப்பு பூஜை செய்யப்படும். சூரசம்ஹாரம் நடைபெறும் 05.11.2016 முக்கியபூஜை செய்யப்படும். 

இதில் கலந்துக்கொள்வதற்க்கு கட்டணம் என்பது உங்களால் முடிந்த தொகையை செலுத்தலாம். கட்டணம் இது தான் என்று வரையறை செய்யவில்லை. ஜாதகத்தை அனுப்பிவிட்டு உங்களின் கட்டண விபரத்தை அதில் சொல்லிவிடுங்கள். உங்களின் கோரிக்கை என்ன என்பதைப்பற்றி தெளிவாக சொல்லிவிடுவது நல்லது.

அம்மன் பூஜைக்கு மாதம்தோறும் பணம் அனுப்புவர்கள் பணம் அனுப்பதேவையில்லை அவர்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பினால் போதுமானது.

இதற்காக நீங்கள் செலுத்தும் கட்டணம் செவ்வாய்கிரகம் அதிதேவதை முருகனுக்காக மட்டுமே செலவு செய்யப்படும். உங்களால் கொடுக்கமுடிகின்ற பணத்தை தாராளமாக கொடுக்கலாம். கடைசி நேரத்தில் அனுப்பி வைக்காதீர்கள். 

நான் தற்பொழுதே இதனை  தெரிவிப்பதற்க்கான காரணம் உங்களின் ஜாதகத்தை எல்லாம் சரியாக பார்க்கவேண்டும். நான் சும்மா சொன்னாலே பல ஜாதகங்கள் வந்து குவியும். மிக சிறப்பான ஒரு நாளை தேர்வு செய்து சொல்லிருக்கிறேன் அதிகப்படியான ஜாதகங்கள் வரும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். தாமதிக்காமல் உடனே அனுப்பிவையுங்கள்.

email id : astrorajeshsubbu@gmail.com

வங்கி கணக்கு விபரம்

KVB Bank :  Karur Vysya Bank 

Branch : Pattukkottai 

Name : RAJESH S

Account Type : Savings account.

A/C Number : 1623155000063470

IFSC Code : KVBL0001623


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் தசா பிரச்சினை


வணக்கம்!
          ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்க ஆரம்பித்தால் அவர் திருமணம் செய்து திருந்தால் அவருக்கும் அவரின் துணைக்கும் சண்டை ஆரம்பித்துவிடும். இருவரும் நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருந்திருப்பார்கள். சந்தோஷமாக போய்க்கொண்டுருந்த வாழ்க்கையில் செவ்வாய் தசா ஆரம்பித்தவுடன் இருவருக்கும் சண்டையை உருவாகிவிடும்.

செவ்வாய் கிரகத்திடம் எப்பொழுதும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். கொஞ்சம் கவனகுறைவு ஏற்பட்டாலும் அதன் விளைவு அதிகமாக இருக்கும். பொதுவாக என்னிடம் பூஜை செய்வர்களின் ஜாதகம் அத்துபடியாக எனக்கு ஞாபகம் இருக்கும். இவர்களுக்கு வருகின்ற நல்லது கெட்டது எல்லாம் தெரியும். 

ஒருத்தருக்கு தசா சரியில்லை என்றால் உடனே நான் அவர்களுக்கு போன் செய்து உங்களுக்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆகிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. நம் ஆட்கள் நினைப்பு எல்லாம் இவனுக்கு வேலை இல்லை எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பான் என்று விட்டுவிடுவார்கள். கொஞ்சநாளில் பார்த்தால் அங்கு சண்டை சச்சரவு நடக்க ஆரம்பித்துவிடும்.

ஒரு சோதிடனின் பார்வை என்பது கிரகம் இது செய்யும் என்பது துல்லியமாக தெரியும். அதனை முன்கூட்டியே சொல்லிவிட்டால் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று சொல்லுவது உண்டு ஆனால் மக்களின் எண்ணம் சரியாக இல்லை என்பது தான் உண்மை. சரி இதனை விடுவோம் மேட்டருக்கு வருவோம்.

செவ்வாய் தசா சுயபுத்தி அதாவது செவ்வாய் தசா செவ்வாய் புத்தியில் அதிகமான சண்டையை சச்சரவை கணவன் மனைவிக்குள் உருவாக்கிவிடுவார். இதனை புரிந்துக்கொண்டு நீங்கள் வாழலாம் அல்லது அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வாய் தசா முடியும் வரை அப்படி இல்லை என்றாலும் செவ்வாய் தசா செவ்வாய் புத்தி முடியும்வரை தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.

எனக்கு தெரிந்த ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. அவர்க்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆனது நான் அவரிடம் இரண்டை சொன்னேன். ஒன்று மர்ம விலங்கு தாக்ககூடும் அல்லது உங்களின் வீட்டில் திருடன் புகுந்து ஏதாவது திருடிவிட்டு சென்றுவிடுவான் என்று சொல்லிருந்தேன்.

அவர்க்கு வீட்டில் அவருக்கு ஒரு நாள் கதண்டு என்ற ஒரு வண்டு கடித்து மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. கொஞ்ச நாளில் அவரின் வீட்டில் இருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டாரை திருடன் திருட்டிவிட்டு சென்றுவிட்டான்.

செவ்வாய் தசா என்றாலும் பெரிய அளவில் எல்லாம் பயப்படதேவையில்லை அருகில் கண்டிப்பாக ஒரு முருகன் கோவில் இருக்கும் அங்கு வாரத்திற்க்கு ஒரு முறை சென்று வழிபட்டு வந்தாலே போதும். நம் ஆட்களுக்கு இருக்கும் பிஸியில் அவ்வளவு எளிதில் எல்லாம் நல்ல விசயத்தை செய்யாமாட்டான் அல்லவா. செய்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 17, 2016

சந்திரனுக்கு நல்ல பார்வை, கெட்ட பார்வை


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு குருவின் பார்வையும் சனியின் பார்வையும் கிடைக்கும்பொழுது என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மனகாரனுக்கு நல்ல பார்வையும் கெட்ட பார்வையும் கிடைக்கும்பொழுது அரைபையித்தம் போல இருக்க வாய்ப்பு உள்ளது. அது என்னங்க அரை பயித்தியம் என்று கேட்கலாம். இரண்டாம் கெட்டான் என்று கிராமத்தில் சொல்லவார்கள் அல்லவா அதுபோல இருக்க வாய்ப்புள்ளது.

சனிக்கிரகத்தின் பார்வைபடும்பொழுது வாழ்வில் அதிக பிரச்சினையை சந்திக்க நேரிடும். எங்கு போனாலும் பிரச்சினை என்பது அவர்களை தேடிபோய் முன்னாடி இருப்பது போலவே இருக்கும்.

சனிக்கிரகத்திற்க்கு சந்திரன் பார்வைபடும்பொழுது அவர்களை சுற்றி ஒரு சந்தேக பேச்சு ஓடிக்கொண்டு இருக்கும். அவர்கள் அதனை செய்தார்கள் இதனை செய்தார்கள் என்று அவர்கள் சம்பந்தமே படாமல் அவர்களை பற்றி பிறர் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது கிராமபுறங்களில் நடக்ககூடிய ஒன்று. 

குருகிரகத்தின் பார்வைபடும்பொழுது குரு சந்திரமங்கலயோகம் வேலை செய்து நல்ல பணத்தை கொடுக்கும். குருவின் பார்வை மற்றும் சனியின் பார்வை படுவதால் அந்த பணம் பல வழிகளிலும் வெளியே சென்று செலவு செய்யவைக்கும்.

குரு பார்வை சந்திரனுக்கு இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தப்ட்டதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். ஆன்மீகவாதிகளின் தொடர்பு இருக்கும்.

சந்திரனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை நல்லதல்ல. நல்லதும் கெட்டதும் அடிக்கடி மாறிமாறி வருவதால் வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைக்கும்.இதற்கு பரிகாரம் உங்களின் குலதெய்வத்தை வணங்குங்கள் அல்லது உங்களின் சோதிடரை வைத்து பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்..

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரனும் பயணமும் பகுதி 1


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிலை பயணத்தை தரும் என்பது ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம். ஒருவர் பயணம் செய்தால் தான் அவருக்கு பல விசயங்கள் புலப்படும். நிறைய அறிவை பெறமுடியும். சந்திரனை வைத்து உங்களின் பயணம் எப்படி இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். படித்து பயன் பெறுங்கள்.

ஒருவருக்கு சந்திரன் ஏழில் இருந்தால் அவரின் பயணம் ஒரு இடத்திற்க்கு சென்ற பிறகு அவரின் அடுத்த பயணதிட்டம் உதயமாகும் என்று சொல்லலாம்.

திருச்சியில் இருந்த மதுரைக்கு சென்றால் மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்று வர வாய்ப்பு அமையும். அவரின் பயணத்தில் மதுரை தான் பயணம் என்று பயணத்தை தொடங்கினால் மதுரைக்கு சென்ற பிறகுதான் திருநெல்வேலி பயணம் திட்டம் ஆரம்பமாகும். இது சந்திரன் ஏழில் இருந்தால் இப்படி நடக்கும்.

சந்திரன் ஆறில் இருந்தால் அவர் பயணம் அடிக்கடி எதிராளியின் வீட்டிற்க்கு பயணம் மேற்க்கொள்பவராக இருப்பார். அதோடு அவரின் பயணம் செல்லும் இடத்தில் எல்லாம் அவர்க்கு எதிர்மறையான ஒரு சிக்கல் உருவாகும். 

ஒருவர் சென்னையில் இருந்து வேலூர் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் வேலூரில் அவர் சென்ற இடத்தில் அவர்க்கு இணக்கமான ஒரு சூழ்நிலை உருவாகாது. பயணத்தால் ஒரு நல்ல விசயம் நடக்காமல் போய்விடகூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஒருவர்க்கு சந்திரன் ஐந்தில் நின்றால் அவருக்கு அடிக்கடி பயணம் அவரின் குலதெய்வ கோவிலுக்கு இருக்கும் அல்லது அவரின் பூர்வீகத்திற்க்கு அடிக்கடி சென்றவரவேண்டும் என்ற நிலை உருவாகும்.

இன்று பலர் வேலை தேடி நகரத்திற்க்கு செல்லுகின்றார்கள். அவர்கள் மாதத்திற்க்கு ஒருமுறையாவது தன்னுடைய சொந்தஊருக்கு சென்று வருகின்றார்கள் அல்லவா. இது எல்லாம் ஐந்தாவது வீட்டில் சந்திரன் இருந்தால் அல்லது ஐந்தில் சந்திரன் சம்பந்தப்படகூடிய நேரத்தில் நடக்ககூடிய பயணம் என்று சொல்லலாம்.

ஒருவருக்கு சந்திரன் நான்காவது வீட்டில் இருந்தால் அவருக்கு பயணம் அவரின் தாய்வீட்டிற்க்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருக்கும். ஒரு சிலர்க்கு மாமனார் வீட்டிற்க்கும் செல்லும் பயணமாக அதிகம் இருக்கும்.

ஒரு சிலருக்கு இந்த பயணம் அதிகமாக சுகத்தை தேடிகூட அமைவதாக இருக்கும். இன்பசுற்றுலா எல்லாம் செல்கின்றார்கள் அல்லவா அதுபோல அமைவதும் இந்த அமைப்பில் இருந்தால் நடக்ககூடிய ஒன்று.

ஒருவருக்கு சந்திரன் மூன்றாவது வீட்டில் இருந்தால் அடிக்கடி ஊர் சுற்றும் வாய்ப்பு இருக்கும். வீட்டில் இருக்கவே மாட்டார்கள் வீட்டிற்க்கு வந்தால் கூட அடுத்தவீட்டில் சென்று தான் உட்கார்ந்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு இந்த அமைப்பு இருந்தால் நல்லதை விட சும்மா ஊரை சுற்றிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு காலத்தை கடத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இது அமையும்.

ஒருவருக்கு சந்திரன் இரண்டாவது வீட்டில் அமைந்தால் அவரின் பயணத்தால் பல நன்மை அமையும். அவரின் பயணம் தன்னுடைய குடும்பத்திற்க்கு பொருள் ஈட்டுவதற்க்காகவே அமைகின்றமாதிரியே இருக்கும்.

தன்னுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வேறு இடத்தில் வீடுகட்டிக்கொண்டு இருந்தால் அங்கு சென்று தங்கிவிட்டு வருவார்கள். பயணத்தால் பலன் உண்டு என்று சொல்லலாம்.

ஒருவருக்கு சந்திரன் லக்கனத்தில் அமர்ந்தால் அவர் தன்னுடைய வேலையாக்காகவே பயணம் மேற்க்கொள்பவராக இருப்பார்கள். அதாவது வெளியில் எங்கோ செல்கிறேன் அதாவது பிறர் வேலைக்கு செல்கிறேன் என்று சென்று தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இந்த அமைப்பால் பயணத்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்லலாம். பயணத்தால் இன்று பலன் இல்லை என்ற நிலை வந்தப்பொழுதும் எதிர்காலத்தில் அந்த பயணத்தால் இவர்களுக்கு பலன் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரனும் மனிதனின் குணமும்


ணக்கம்!
          ஒரு மனிதன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். நாம் பழகும் மனிதன் இந்த குணத்தோடு இருந்தால் தான் நாம் அவனோடு பழகவேண்டும் என்று ஒரு விதியோடு நாம் இருப்போம். அப்படிப்பட்ட குணத்தோடு இருந்தால் பழகுவீர்கள் அப்படி இல்லை என்றால் நான் பழகமாட்டேன் என்று இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் இந்த குணநலத்தோடு எப்பொழுதாவது ஒருவர் வரலாம் அதன் பிறகு அவரும் மாறிபோய்விடலாம்.

மனிதனிடம் இப்படிப்பட்ட குணத்தோடு தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக அது நடக்காதா ஒன்று. மனக்காரகன் சந்திரன் மிக வேகமாக செல்லக்கூடிய ஒரு கிரகம். சந்திரன் மனதை மாற்றிக்கொண்டே சென்றுக்கொண்டு இருப்பான் அப்புறம் நாம் எப்படி மனிதனிடம் ஒரு குணத்தை எதிர்பார்ப்பது இதனை கொஞ்சம் புரிந்துக்கொண்டாலே போதும் அனைத்து மனிதனையும் நாம் ஏற்றுக்கொள்ளமுடியும்.

தற்பொழுது உள்ள மனநிலை அடுத்த அரைமணி நேரத்தில் இருப்பது இல்லை. ஏன் என்றால் சந்திரனின் சுழற்சி அப்படிப்பட்ட ஒன்று. நாம் மனிதனிடம் ஒரே குணநிலையை எதிர்பார்ப்பது கடினம். மனிதனிடம் அடிப்படையான ஒரு குணநிலை இருக்கும் அது மாறாது ஆனால் மேலோட்டமாக இருக்கும் குணநிலை மாறிக்ககொண்டே இருக்கும்.

நீங்கள் பிறந்தபொழுது சந்திரன் இருந்த ராசி உங்களின் அடிப்படை குணநிலை தற்பொழுது கோச்சாரபடி சந்திரன் சென்றுக்கொண்டிருப்பது உங்களின் மேலாேட்டமான ஒரு குணநிலை. இது இரண்டும் சரியாக இருக்கும்பொழுது நீங்கள் சரியாக செயல்படுவது போல இருக்கும்.

நீங்கள் பிறந்தபொழுது சனியின் வீடாக ராசி இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் தற்பொழுது சந்திரன் செவ்வாயின் வீட்டில் அதாவது சனியின் பகை கிரகமான செவ்வாயின் வீட்டில் இருந்தால் உங்களின் அடிப்படை குணத்திற்க்கும் தற்பொழுது உள்ள சந்திரன் கோச்சாரபடி கொடுக்கும் குணத்திற்க்கும் அதாவது மேலோட்டமான குணத்திற்க்கும் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் ஒரு வித வெறுப்பான ஒரு நிலையை அடைவீர்கள்.

உங்களின் அடிப்படை குணத்தோடு கோச்சாரபடி சந்திரன் கொடுக்கும் நல்ல குணத்தை பெறும்பொழுது அன்று நீங்கள் உற்சாகநிலையை அடைவீர்கள். சந்திரனை நாம் புரிந்துக்கொண்டு செயல்பட்டாலே முக்கால்வாசி நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்று அர்த்தம். 

நீங்கள் ஒரு மனிதனைப்பார்த்து இப்படி தான் இருப்பான் என்று நினைக்காதீர்கள். அதாவது எல்லோரும் ஒரு காலத்தில் இருப்பார்கள் அடுத்த காலத்தில் போய்விடுவார்கள். ஒருவர் இப்படி தான் இருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்து இருந்தால் நீங்கள் தோற்றுபோய்வீர்கள். உங்களால் அடுத்தவரை ஏற்றுக்கொள்ளமுடியாது. இன்றைக்கு உலகத்தில் உள்ள பிரச்சினையே இது தான் அதாவது அனைவரிடமும் ஒன்றை எதிர்பார்த்தால் சிக்கல் தான் மிஞ்சும்.

இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு தான் நம்ம இந்திய ஆன்மீகம் மனம் என்பதை நம்பாதே மனமற்ற நிலையில் இரு என்று சொல்லுகின்றது. சந்திரன் வேகமாக செல்லுகின்றது ஒவ்வொருவரின் மனமும் வேகமாக செல்லுகிறது. புரியவில்லை என்றால் மறுபடி மறுபடியும் படியுங்கள் புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு