Followers

Wednesday, May 31, 2017

அனுபவ சோதிடம்


வணக்கம்!
          சோதிடநூல்கள் சொல்லும் காரத்துவம் மற்றும் விதிகள் எல்லாம் பல இடங்களில் பொய்யாகவும் இருக்கின்றது என்பது பல வருடங்கள் சோதிடதொழிலை செய்து வருபவர்களுக்கு புரியும்.

நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் கிரகத்தின் காரத்துவத்தில் ஒரு விசயம் இல்லாமல் வேறு ஒரு கிரகத்தின் காரத்துவத்தில் அந்த கிரகம் வேலை செய்கிறது என்பது நன்றாக சோதிடம் பார்ப்பவர்களுக்கு தெரியும்.

பல சோதிடர்கள் அனுபவத்தில் பல விசங்களை தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் அதனை வெளியில் சொல்லுவதில்லை. வெளியில் சொன்னால் யாருக்கும் ஏற்கபோவதில்லை என்று சும்மா வழக்கம் போல் உள்ள கிரகத்தின் காரத்துவத்தேயே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 

ஒவ்வொரு கிரகத்தின் காரத்துவத்தை எடுத்துக்கொண்டு அனுபவத்தில் அந்த காரத்துவத்தில் தான் கிரகங்கள் இருக்கின்றனவாக என்று சிந்தனை செய்து பார்த்தால் உங்களுக்கு இது தெரியவரும்.

எல்லாமே தவறு கிடையாது. ஒரு சில விசங்கள் மட்டும் உங்களுக்கு தவறுதல்களாக தெரியவரும். இதனை உங்களின் ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகார அனுபவம்


வணக்கம்!
          நேற்று மாந்தி பரிகாரம் செய்தேன். நிறைய ஜாதகங்கள் மீதி இருக்கின்றன. இன்று மாந்தி பரிகாரம் செய்யவில்லை இரண்டு நாட்கள் தானம் செய்ய அவகாசம் கொடுத்திருந்தேன். அதனை எல்லாம் செய்துவிடுங்கள். இன்று ஒரு மதுரை செல்கிறேன். இன்றே திரும்பிவிடுவேன். 

நிறைய நண்பர்கள் ஏற்கனவே பலருக்கு வருடதோறும் கல்வி உதவி செய்துக்கொண்டு வருகிறேன் என்று சொன்னார்கள். நல்ல விசயம் தான் அது. வருடம் தோறும் அதனை செய்துக்கொண்டே இருங்கள்.

மாந்தி பரிகாரம் செய்யும்பொழுது பல ஜாதகங்களை பார்க்க நேர்ந்தது அது மாந்தியால் வந்த பிரச்சினை இல்லை. ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தான் பிரச்சினை செய்யும் அதனை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதனை உட்கார்ந்து நன்றாக அலசிப்பார்க்கும்பொழுது மட்டுமே அது தெரியவரும்.

இங்கு வரும் அனைவருக்கும் சோதிடம் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் உட்கார்ந்து உங்களின் வாழ்க்கையும் உங்களின் ஜாதகத்தின் நிலைமையும் அலசி பாருங்கள். கண்டிப்பாக அதற்கு ஒரு விடை உங்களுக்கு கிடைக்கும்.

மாந்தி நான் நல்லமுறையில் பரிகாரம் செய்திருக்கிறேன். இந்த வார இறுதிக்குள் அனைவருக்கும் மாந்தி பரிகாரம் செய்து முடித்துவிடுவேன். தானம் செய்யாதவர்கள் உடனே செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 30, 2017

உணவும் கிரகங்களும்


ணக்கம்!
          செவ்வாய் ஒரு ஜாதகத்தில் பலன் பெற்றுவிட்டால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் அவர்கள் சாப்பிடாமல் இருந்தாலும் அதாவது பட்டினியாக கிடந்தாலும் நன்றாக அவர்களின் உடல் தாங்கும். பெரிய பிரச்சினை எல்லாம் வராது.

சனியின் ராசியை உடையவர் அல்லது ஜாதகத்தில் சனி பலன் பெற்றவர்கள் எண்ணையில் பொரித்த வகைகளை நன்றாக சாப்பிடுவார்கள். கடையில் உள்ள எண்ணைய் பதார்த்தங்களை சாப்பிட்டால் கூட அவர்களுக்கு ஒன்றும் செய்யாது. அனைத்தையும் அவர்களுக்கு சொரிக்கும்.

சுக்கிரனின் ராசியை உடையவர்கள் அல்லது ஜாதகத்தில் சுக்கிரனின் பலன் பெற்றவர்கள் இனிப்பு பதார்த்தங்களை அதிகம் விரும்பி உண்பார்கள். இனிப்பு இல்லாமல் சாப்பாடு இருக்காது. ஏதாவது ஒரு இனிப்பு வகை வைத்து தான் அனைத்து உணவுகளை உண்பார்கள்.

சூரியன் பலன் பெற்றால் அவர்கள் அதிகம் அரிசியால் உருவாகும் உணவுகளை விரும்பி உண்பார்கள். கோதுமையால் செய்யும் உணவுகளையும் விரும்புவார்கள்.

சந்திரன் பலன் பெற்றவர்கள் எந்த நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உடல் பருமனும் அதிகமாக இருக்கும். திடீர் என்று இழைத்தும் காணப்படுவார்கள். நல்ல சாப்பிடுவதற்க்கு இவர்களுக்கு பிடிக்கும்.

புதன் பலன் பெற்றால் அதிகம் சாப்பிடுவதைவிட சைடிஸ்களை அதிகம் விரும்புவார்கள். சைடிஸ்களை தான் உணவாகவே சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

குரு கிரகம் பலன் பெற்றால் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை தான் அதிகம் விரும்புவார்கள். பாலால் தயாராகும் உணவுகளையும் பால் சம்பந்தப்பட்ட குளிர்பதனங்களையும் சாப்பிடுவார்கள்.

ராகு கேது பலன் பெற்றவர்கள் அதிகம் அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். ஒரு சிலருக்கு வறுவல் உணவு இல்லாமல் சாப்பாடு இறங்காது. அசைவம் இல்லை என்றால் உருளைகிழங்கு போன்றவற்றை வறுத்தாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகார அனுபவம்


வணக்கம்!
          இன்று காலையில் ஒரு சில பேருக்கு பரிகாரம் செய்யலாம் என்று எடுத்து செய்தேன். கட்டணத்தில் அனுப்பியவர்களுக்கும் செய்திருக்கிறேன். இலவசமாக அனுப்பியவர்களின் ஜாதகத்தில் ஒரு சிலர் தன்னுடைய தானத்தை செய்யாமல் இருப்பது தெரியவருகிறது.

தானம் என்பது கண்டிப்பாக செய்யபடவேண்டிய ஒன்று என்று பரிகாரம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். பலர் அதனை செய்யவில்லை. பரிகாரம் வேலை செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக இதனை செய்யுங்கள்.

ஒரு சிலர் கல்வி தானத்தை அருமையாக செய்திருக்கிறார்கள். நிறைய பேர்கள் பயன்படும் விதத்தில் இதனை செய்திருக்கிறார்கள். எனக்கு அதனைப்பற்றி தகவல்களை ஏற்கனவே அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்றி.

தானம் செய்வதற்க்கும் கொஞ்ச அவகாசம் தருகிறேன்.அதாவது இலவசமாக ஜாதகத்தை அனுப்பியவர்கள் மேலும் இரண்டு நாட்கள் கழித்து தான் உங்களுக்கு பரிகாரம் செய்யபோகிறேன். அதனால் நீங்கள் செய்யவேண்டிய தானத்தை செய்துவிடுங்கள்.

உங்களுக்கு முடிந்தவாறு உங்களின் கையில் கிடைக்கும் பணத்தை வைத்து தானம் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பரிகாரம் நன்றாக வேலை செய்யும். நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 29, 2017

கடைசி நாள்


வணக்கம்!
          இன்று மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப கடைசி நாள். மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் நிலையை வைத்து அவர்களுக்கு பலன்களை சொல்லிருந்தேன். சொன்ன தகவல் குறைவு.  நிறைய தகவல்களை சொல்லமுடியவில்லை. சொன்ன தகவலில் உங்களுக்கு பல பிடிப்பட்டியிருக்கும்.

பல நண்பர்கள் என்னிடம் நீங்கள் சொன்ன பலன்கள் எங்களின் ஜாதகத்தில் சரியாக இருக்கின்றன என்று சொன்னார்கள். இந்த தகவல்களை வைத்து உங்களின் ஜாதகத்தில் பரிகாரத்தை செய்ய போதுமானது தாக இருக்கும்.

மாந்தி பரிகாரம் என்பது உங்களின் ஜாதகத்தில் தீயபலன்களை குறைத்து அது நல்ல பலனை கொடுக்கவேண்டும் என்பது போல தான் செய்ய போகிறேன். கண்டிப்பாக மாற்றம் என்பது உங்களுக்கு இருக்கும்.

மாந்தியை வைத்து பூஜை செய்கிறேன் என்று எல்லாம் உங்களிடம் நிறைய பேர் சொல்லுவார்கள். மாந்தியை வைத்து பூஜை எல்லாம் செய்யவேண்டாம். மாந்தி அப்படிப்பட்ட ஒரு வில்லங்கமான கிரகம். அதன் தீயகுணத்தை மட்டும் குறைவதற்க்கு மட்டும் செய்யலாம்.

உடனே உங்களின் ஜாதகத்தை மாந்தி பரிகாரத்திற்க்கு அனுப்பி வையுங்கள். இன்று கடைசி நாள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 27, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தியோடு சேர்ந்து இருக்கும் கிரகத்தைப்பற்றி நான் சொல்லவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தொடர்ச்சியாக மாந்தியே பார்த்துக்கொண்டு இருந்தால் வருபவர்களுக்கும் போர் அடித்துவிடும். நிறைய சோதிடதகவல்கள் மற்றம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயத்தையும் எழுதவேண்டும். மாந்தியைப்பற்றி இனி அதிகம் பார்க்க தேவையில்லை.

மாந்தியோடு சேர்ந்து இருக்கும் கிரகத்தின் சக்தி அதிகரித்து அந்த கிரகத்தின் பலன் அதிகமாக கொடுக்கும் என்பது பொதுவான கருத்து. மாந்தி மறைவிடத்தில் இருந்து தீயகிரகத்தோடு சேர்ந்து இருந்தால் அது நல்ல பலனை கொடுக்கும்.

மாந்தி சுபக்கிரகத்தோடு சேர்வது அந்தளவுக்கு நல்லதல்ல. அது கெடுதல் பலன்களை கொடுக்கும். மாந்தி கிரகத்தோடு சேர்ந்த கிரகத்தின் தசாவில் உங்களுக்கு கெடுதல் பலன்களை அதிகமாக கொடுக்கும்.

தசா நல்ல யோக தரும் தசாவாக இருந்து மாந்தியாேடு சேர்ந்து தசா நடந்தால் பலன் அதிகமாக நாம் எதிர்பார்க்கலாம். இரடிப்பு பலன் தரும் என்று சொல்லுவார்கள். அனுபவத்திலும் பலருக்கு இது நடந்திருகிறதை பார்த்து இருக்கிறேன்.

மாந்தியோடு சேர்ந்து இருக்கும் கிரகத்திற்க்கும் மாந்திக்கு நாம் பரிகாரம் செய்யலாம். உடனே உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கவும். அனைவரும் ஜாதகத்தை விரைவாக அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 26, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
         மாந்தி பனிரெண்டில் இருந்தால் உலகத்தில் உள்ள பேய் எல்லாம் உங்களே நோக்கி வருவது போல் ஒரு பிரமை ஏற்படும். ஆவியுலக ஆராய்ச்சிகளை எல்லாம் செய்வார்கள் அல்லவா அவர்களுக்கு எல்லாம் பனிரெண்டில் உள்ள மாந்தி நல்ல வேலையை கொடுக்கும்.

ஒரு வித பயஉணர்வு உங்களிடம் இருந்துக்கொண்டே இருக்கும். பயஉணர்வால் இரவில் வெளியில் செல்லகூட பயப்படுவீர்கள். ஒரு சிலருக்கு கண்களில் பேய் உருவம் தெரிவது போல் இருக்கும். 

பனிரெண்டில் மாந்தி இருப்பவர்களுக்கு ஆயுள் கூட குறைவாக இருப்பதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆயுளுக்காக நீங்கள் தனியாக பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். பொதுபரிகாரத்தில் அதனை செய்யமுடியாது என்பதால் சொல்லுகிறேன்.

வாழ்வில் நிறைய ஏமாற்றுங்களை சந்திக்கும் நபர்களாக நீங்கள் இருப்பீர்கள். முடிந்தவரை கடன் வாங்காமல் இருங்கள். கடன் வாங்கினால் தலைமறைவு வாழ்வு தான் வாழவேண்டியிருக்கும். கடன் அடைக்கமுடியாது.

மாந்தி உங்களை அதிக காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய வைத்துவிடுவார். மருத்துவமனைக்கு அடிக்கடியும் செல்ல வைப்பார். மாந்தி பனிரெண்டாவது வீட்டில் இருப்பது அந்தளவுக்கு நல்லதல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஜீவன்பிரசாத் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார். மாந்திக்கும் கல்விஉதவிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.

மாந்திக்கும் கல்விஉதவிக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அது சோதிடனுக்கு தான் போய் சேரவேண்டும். சோதிடனுக்கு வரும் வருமானத்தை சோதிடன் பலருக்கு தானமாகவும் அல்லது கோவிலுக்கும் செய்வான். அதில் ஒரு பங்கை அவன் எடுத்துக்கொள்வான்.

பொதுபரிகாரத்தில் நான் அவர் அவர்களே தானத்தை செய்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன். அந்த காலகட்டத்திற்க்கு தகுந்தமாதிரி நான் தானத்தை முடிவு செய்து அதனை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு. 

ஒரு பரிகாரம் ஆரம்பிக்கும் நேரத்தில் அப்பொழுது என்ன இருக்கிறதோ  அதனை நான் செய்வது உண்டு. பொதுபரிகாரத்தில் எனக்கு அனுப்பிய பணத்தில் கூட இதனை செய்து இருக்கிறேன். ஒரு பரிகாரம் செய்தால் கண்டிப்பாக அதற்கு தானம் செய்யப்படவேண்டும் என்பது எனது குருவின் கட்டளை. 

ஒரு சில பரிகாரத்தில் லட்சணக்கில் தானம் செய்து அதன்பிறகு பரிகாரத்தை செய்துக்கொடுத்து இருக்கிறோம். உங்களின் சக்திக்கு தகுந்தமாதிரி நீங்கள் தானம் செய்துவிடுங்கள். கல்விஉதவி செய்வது நல்லது என்பதற்க்காக இதனை தற்பொழுது செய்யசொல்லிருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 25, 2017

மாந்தி பொதுபரிகாரம் இறுதிநாள்


வணக்கம்!
          மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப கடைசி தேதி வரும் திங்கள்கிழமையோடு முடிவடைகிறது. திங்கள் கிழமை வரை ஜாதகத்தை அனுப்பலாம். செவ்வாய்கிழமை முதல் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி பரிகாரம் செய்யப்படும்.

பரிகாரம் முடிந்து அதனை போட்டோ எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கொண்டு இருந்தேன். குரு அவர்கள் அதனை செய்யகூடாது என்று சொன்ன காரணத்தால் உங்களுக்கு படத்தை அனுப்ப இயலாது.

படத்தை அனுப்பினால் அவர்கள் அதனை மறுபடியும் வேறு ஒருவர்க்கு அனுப்புவார். ஒரு பரிகாரம் செய்தால் அத்தோடு அவர்களின் கர்மா அழியவேண்டும் அதில் இருந்து மறுபடியும் அவதாரம் எடுப்பது போல் இருந்துவிடும் என்பதால் அதனை தவிர்க்கவேண்டும் என்றார். குருவின் பேச்சிற்க்கு மறுபேச்சு கிடையாது.

மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு நான் பதில் மெயில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். சனிக்கிழமைக்குள் தங்களுக்க மெயில் வரவில்லை என்றால் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

மறுமுறை மாந்தி பொதுபரிகாரம் செய்வதற்க்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகலாம். அதனால் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள். தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          நேற்று மனதை சுத்தப்படுத்துவது எப்படி என்ற பதிவை படித்துவிட்டு ஐம்பது வயதிற்க்கு மேற்பட்டவர்கள் எல்லாம் போன் செய்து எங்களுக்கு பொழுதுபோக்கிற்க்கு அது மட்டும் தான் இருந்தது. அதனையும் விட்டுவிட்டு எப்படி சார் இருக்கமுடியும் என்று கேட்டார்கள்.

உங்களுக்கு பேரக்குழந்தைகள் வந்துவிட்டன. இனி செய்வதற்க்கு ஒன்றும் இல்லை எனும்பொழுது வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் எழுதுவது ஒருவர் அதிக பிரச்சினையில் இருந்து அவர் மேல் வர நினைக்கிறார் என்றால் அவர்க்கு நாம் சொல்லுவதை அனைத்தையும் பின்பற்றலாம்.

நல்ல நிலையில் இருப்பவர்கள் அனைத்தையும் பின்பற்ற தேவையில்லை. ஆன்மீகவாதிகளாக இருந்தால் அனைத்தையும் பின்பற்றி தான் இருக்கவேண்டும். நல்ல சக்தியோடு இருக்கவேண்டும் எனும்பொழுது இதனை பின்பற்றினால் நல்ல சக்தி இருக்கும்.

எனக்கு அடிக்கடி போன் வந்துக்கொண்டு தான் இருக்கும். நான் என்னுடைய தேவைக்காக அதனை பயன்படுத்துகிறேன். மற்றபடி அதனை தொடுவதில்லை. உங்களுக்கு அதில் வேலை இருந்தால் தொடவேண்டும் இல்லை என்றால் அதனை ஒதுக்கிவிடலாம்.

ஏதோ ஒரு பிரச்சினை என்றால் நான் உங்களுக்கு செய்யும் பரிகாரம் உடனே வேலை நடக்கவேண்டும் என்றால் அதனை நீங்களும் நல்ல சக்தியோடு இருந்தால் எளிதில் நடந்துவிடும். நீங்கள் சக்தியோடு இல்லை என்றால் இழுத்துக்கொண்டு நடக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 24, 2017

மனதை சுத்தப்படுத்துவது எப்படி?


ணக்கம்!
         உடல் சுத்தப்படுவதோடு மனதையும் சுத்தப்படுத்த வேண்டும். மனதையும் சுத்தப்படுத்திக்கொள்ளும்பொழுது கண்டிப்பாக நீங்கள் செய்யும் அனைத்து வழிபாடும் மற்றும் பரிகாரங்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

ஒரு சின்ன பயிற்சியை சொல்லுகிறேன். அதனை ஒரு மாத காலம் செய்து வாருங்கள். அதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கின்றன என்பதை ஒரு மாதகாலத்திற்க்கு பிறகு எனக்கு தெரிவியுங்கள். கண்டிப்பாக நல்ல மாற்றம் இருக்கும்.

நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் உங்களின் மொபைல் போனை தொடாதீர்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டும் அதனை தொடுங்கள். நாம் தனிமையில் இருக்கும்பொழுது ஏகாப்பட்ட வெறுப்புகள் வரும். அந்த வெறுப்புகளை நீங்கள் எதிர்க்கொள்ளவேண்டும். 

வெறுப்புகளை தவிர்ப்பதற்க்கு தான் மனிதன் பல போதைப்பொருட்கள் டிவி என்று அனைத்து விதமான பொழுதுபாேக்கு அம்சம் மற்றும் தன்னை பாழ்ப்படுத்தும் விசயத்தை எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறான்.

கொஞ்சம் உங்களோடு இருக்க ஆரம்பித்தால் உடனே வெறுப்பு வந்துவிடும். நீங்கள் செல்போனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுவீர்கள் அல்லது டிவி ஆன் செய்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களின் வெறுப்பை நீங்கள் எதிர்நோக்கவேண்டும்.

வெறுப்பை எதிர்நோக்கினால் பலவிதத்திலும் நீங்கள் துன்பப்பட நேரிடும். பரவாயில்லை அதனை எதிர்நோக்குங்கள். கொஞ்ச காலத்தில் இருக்கின்ற கர்மா முழுவதும் தீர்ந்துபோய்விடும் அதன் பிறகு நீங்கள் புதுமனிதனாக மாறிவிடுவீர்கள். நல்ல தெளிவு கிடைத்துவிடும்.

நான் தனிமையில் இதனை கடுமையாக எதிர்நோக்கியிருக்கிறேன். அந்த எதிர்நோக்கத்தினால் தான் என்னை அனைத்திலும் சரி செய்துக்கொள்ள முடிந்தது. நமக்கு வரும் துன்பத்தை நாமே அனுபவித்துவிடவேண்டும் என்று நான் எதிர்நோக்கினேன் அனைத்தும் சரி செய்ய முடிந்தது.

கர்மா என்பதே இப்படி தான் நாம் எதிர்நோக்காமல் வேறு விதத்தில் டைவர்ட் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இன்று செல்போன் கொஞ்சகாலம் முன்னாடி டிவி. இதனை வைத்து தான் நமது கர்மாவை நாம் எதிர்நோக்காமல் போய்விட்டோம். 

சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அனைத்து பொழுதுபோக்கும் விசயத்திலும் ஈடுபடுங்கள். போர் அடிக்கும் நேரத்தில் உங்களோடு இருக்க ஆரம்பியுங்கள். கொஞ்சகாலம் இதனை செய்துவிட்டு என்னை நீங்களே தொடர்புக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம்!
          கேரளா சோதிடத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகத்திற்க்கு நாம் பரிகாரத்தை அறிவித்தோம். மாந்தி கிரகத்தை புரிந்தவர்கள் உடனே தனக்கு பரிகாரம் வேண்டும் என்று ஜாதகத்தை அனுப்பிவிட்டனர். ஒரு சிலர் ஜாதகத்தை அனுப்பவில்லை. உடனே மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்.

இலவச பரிகாரம் அனுப்புவர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு அதற்குள்ள நீங்களே செய்துக்கொள்ளும் கல்வி உதவியை செய்துவிடுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு அந்த உதவியை செய்யுங்கள்.

ஏற்கனவே செய்த பரிகாரத்திற்க்கு நான் ஜாதகத்தை அனுப்பிவைத்தேன். இதுவரை எனக்கு எதுவும் நடக்கவில்லை என்று இரு நண்பர்கள் கேள்வி கேட்டு அனுப்பி வைத்தனர். அதற்கான விளக்கம்.

ஒரு ஜாதகத்தில் இந்த கிரகம் தான் பிரச்சினை செய்கிறது என்பதை கண்டறிவது கொஞ்சம் கடினம். உங்களுக்கு எந்த கிரகம் பிரச்சினை செய்கிறதோ அந்த கிரகம் வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு நடந்துவிடும்.

மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இறுதிநாளை அறிவிக்கபோகிறேன். உடனே ஜாதகத்தை அனுப்பி மாந்திக்கான பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 23, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி பதினோராவது வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்துவிடும். துணிச்சலாக பல காரியங்களை செய்ய வல்ல ஆற்றலை மாந்தி கொடுக்கும்.

மாந்தி பதினோராவது வீட்டில் உள்ளவர்கள் பெரிய தொழிற்சாலையை தொடங்கி வெற்றி காண்பார்கள். ஒரு சிலர் பெரிய தொழிற்சாலையில் வேலை செய்வார்கள்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமை இருந்தால் பெரிய காரியத்தை செய்யமுடியும் அப்படி இல்லை என்றால் பெரிய இடத்தில் வேலை செய்யமுடியும். தொழில் அல்லது வேலை என்பது அவர் அவர்களே முடிவு செய்யவேண்டும்.

உங்களுக்கு பதினோறாவது வீட்டில் மாந்தி இருந்தால் தைரியமாக செயல்பட்டு ஒரு பெரிய தொழிற்சாலையை தொடங்குங்கள். கையில் பொருளாதாரம் இல்லை என்று பயம்கொள்ள தேவையில்லை. எப்படியும் பணம் வரும் என்று தைரியமாக தொடங்குங்கள். வெற்றி பெறலாம்.

மாந்தி பதினோறாவது வீட்டில் இருந்தால் உங்களின் மூத்தவர்கள் உங்களை வைத்து அவர்கள் பயன்பெறுவார்கள். அவர்களால் உங்களுக்கு ஒன்றும் நடக்காது. மற்றபடி மாந்தி பதினோறாவது வீட்டில் இருப்பது நன்மை. 

பதினோறாவது வீட்டில் மாந்தி இருப்பதற்க்கு பரிகாரம் செய்யவேண்டுமா என்று கேட்கலாம். மாந்தி பதினோறாவது வீட்டில்  அதிக நன்மை செய்யவேண்டும் என்றால் பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உடல் சுத்தப்படுத்துவது எப்படி?


ணக்கம்!
          நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் எப்படி உடலை சுத்தப்படுத்திக்கொள்வது என்று கேட்டார்கள். பல பதிவுகளில் இதனைப்பற்றி நாம் சொல்லிருக்கிறோம். உங்களுக்காக ஒரு சில கருத்துக்களை மறுமுறை சொல்லுகிறேன்.

உங்களின் உடல் சூட்சமஉடலை சுத்தப்படுத்த பல வழிகள் இருந்தாலும் புனித நீரில் அடிக்கடி நீங்கள் குளிக்கவேண்டும். கடல் மற்றும் புண்ணியதீர்த்தங்களில் நீங்கள் நீராடினால் உங்களின் உடல் புனிதப்படும். அடிக்கடி இதனை நீங்கள் செய்யவேண்டும் என்று மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்.

சாமியார்களின் காலில் நீங்கள் விழுந்து வணங்கினால் அவர்கள் உங்களின் பாவத்தை வாங்கிக்கொள்வார்கள். உங்களின் உடல் புனிதமடையும். அடிக்கடி உங்களின் இல்லத்திற்க்கு ஆன்மீகவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து அவர்களின் பார்வை உங்களின் இல்லத்திற்க்கு கிடைத்தாலும் நல்லது உங்களுக்கு நடக்கும்.

அரவாணிகளிடம் ஆசி வாங்குவது அல்லது அவர்களை விட்டு உங்களுக்கு சுத்திபோடுவது சூட்சமஉடல் பலப்படும். ஒரு சில கோவில்களில் சுத்திபோடுவார்கள் அதனை கூட நீங்கள் செய்துக்கொண்டால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும்.

அமாவாசை அன்று சுத்தி போடுவார்கள் அல்லவா. உங்களுக்கும் உங்களின் வீட்டிற்க்கும் சுத்தி போட்டுக்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அடிக்கடி கடல் நீர் மற்றும் கோமியத்தை கொண்டு உங்களின் வீட்டை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டையும் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் வசிக்கும் வீட்டில் தீயசக்திகள் வசித்துவிட்டால் அது உங்களையும் சேர்த்து நாசப்படுத்தும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

யோகா தியானம் போன்ற பயிற்சிகளையும் நீங்கள் செய்தால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும். நல்ல குருவை நாடி அந்த பயிற்சியை மேற்க்கொள்ளலாம். தொடர்ச்சியாக இதனை செய்தால் பலன் கிடைக்கும்.

குரு துரோகம் செய்யகூடாது. நமக்கு ஏதோ ஒரு சின்ன கருத்தை சொல்லிக்கொடுப்பவர்களிடம் கூட நீங்கள் வம்பு பேசிக்கொண்டு இருக்ககூடாது. அந்த சின்ன கருத்தை அவர்கள் சொன்னதால் அவர்களும் உங்களுக்கு குருவே அவர்களை எதிர்க்ககூடாது.

சம்பந்தமே இல்லாமல் பொய்சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. ஏமாற்றம் செய்யதல் கூடாது. கடன் வாங்கினால் முடிந்தவரை திருப்பிக்கொடுக்க என்ன வழி என்பதை கண்டறியவேண்டும். ஏன் என்றால் அடுத்தவனின் கர்மாவை நாம் சுமக்கவேண்டியிருக்கும். இதனை எல்லாம் செய்தால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 22, 2017

பரிகாரத்திற்க்கு முன்பு


வணக்கம்!
          பரிகாரத்திற்க்கு முன்பாக ஒன்றைப்பற்றி பார்த்துவிடலாம். பரிகாரம் செய்யும் அனைவரும் நன்றாக தான் செய்வார்கள். நீங்கள் எந்த சோதிடர்களிடம் சென்றாலும் நன்றாக தான் செய்வார்கள் ஆனால் நமக்கு நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் நம்முடன் இருக்கும் அந்த விஷம் தான் காரணமாக இருக்கும்.

பரிகாரம் செய்தால் அதனையும் தானே சேர்த்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதனையும் சேர்த்து எடுப்பதற்க்கு நீங்களே பல நல்ல பணிகளை செய்து உங்களின் தோஷத்தை போக்கிக்கொள்ளவேண்டும்.  தோஷ உடலில் இருப்பது பரிகாரம் வேலை செய்யாமல் போவதற்க்கு வழி வகுக்கும்.

ஒவ்வொரு மாதமும் நாம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்துக்கொணடு வருகிறோம். ஒவ்வொரு பரிகாரமும் நன்றாக நான் செய்கிறேன். உங்களிடம் இருக்கும் தோஷத்தை நிவர்த்தி செய்ய நீங்கள் உடலை சுத்தப்படுத்த வேண்டும். 

உடலை என்று சொல்லுவது உங்களின் தோஷத்தை தான் சுத்தப்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறேன். உங்களின் உடலை சுத்தப்படுத்த பல வழிகளை நான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் கடைபிடித்தால் போதும் உடல் சுத்தமாகிவிடும். நான் செய்யும் பரிகாரம் உடனே உங்களுக்கு நடக்கும்.

ஏதோ பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பிவிட்டோம். நமக்கு எல்லாம் இனி நடந்துவிடும் என்று எண்ணவேண்டாம். உங்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 20, 2017

பெற்றோர்களுக்கு


வணக்கம்!
          கல்விக்கு உதவவேண்டும் என்று நேற்று சொன்னேன். கல்வி சம்பந்தப்பட்ட விசயமாக ஒன்றை சொல்லவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தது இன்று அதனை எழுதுகிறேன். அப்படி என்ன பெரிய பொக்கிஷம் என்று நினைக்கலாம். உண்மையில் பொக்கிஷமான விசயம் தான் அது.

நமக்கு தெரிந்த பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் என்னிடம் தனிப்பட்ட விசயமாக சொல்லும் கருத்தை தான் நான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். அந்த கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் என்னிடம் சொல்லுவார்கள். 

பெற்றோர்கள் சம்பாதிக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்களின் வேலையை காரணம் காட்டி அவர்களின் பெற்றோர்கள் தங்களின் கல்வி நிறுவனத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைத்துவிடுகின்றனர. 

நாங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு தங்கும் இடம் மற்றும் நல்ல கல்வியை கொடுத்துவிடுகிறோம் ஆனால் அவர்கள் வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அவர்கள் இந்த சமுதாயத்திற்க்கு நிறைய தீங்கு செய்பவர்களாக மாறிவிடுவார்கள் என்றார்கள்.

மனது ரீதியாக கடுமையான பாதிப்பை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நல்ல படித்து பெரிய ஆளாக வருவார்கள் ஆனால் அவன் ஒரு சைக்கோவாக இருப்பான் என்றார்கள். சைக்கோ என்றால் நமக்கு படத்தில் வரும் கொலையாளி நினைப்பு வரும். அது மட்டும் கிடையாது. பல விதத்திலும் இருக்கிறார்கள்.

நான் நமது ஜாதககதம்பத்தில் வரும் பல நண்பர்களை கவனித்து இருக்கிறேன். இவர்கள் அனைவரும் பெரிய கல்வி நிறுவனங்களில் தங்கும்விடுதியில் தங்கி படித்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒரு விதத்தில் மெண்டல் போல இருப்பார்கள்.

கல்லூரி காலத்தில் வேண்டுமானால் தங்கும் விடுதியில் தங்கி படிக்கட்டும் ஆனால் இளம்கல்விலேயே தங்கும் விடுதியில் தங்க வைக்கவேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கோடி கோடியாக நீங்கள் சம்பாதித்தாலும் உங்களின் வாரிசுகள் நன்றாக இருந்தால் தான் அவர்கள் இதனை எல்லாம் கட்டி காப்பாற்றி அவர்கள் வாழ்வார்கள்.

நான் சம்பாதிக்கிறேன் என்று நீங்கள் அவர்களை விட்டுவிடாதீர்கள். வாழ்வது ஒரு முறை அது உங்களின் வாரிசுகளோடு நாள்தோறும் வாழ்ந்துவிடுங்கள். ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தோம் என்று ஒரு திருப்தி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 19, 2017

கல்வி உதவி


 ணக்கம்!
          பொது பரிகாரத்திற்க்கு இலவசமாக ஜாதகம் அனுப்பும் நண்பர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு. ஒரு சிலர் செய்கின்றனர். பலர் அதனை செய்வதில்லை என்பது நன்கு தெரிகிறது.

தற்பொழுது மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பும் நண்பர்களுக்கும் மற்றும் ஜாதக கதம்பம் படிக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து இந்த விசயத்தை சொல்லுகிறேன். இதனை நீங்கள் செய்துவிடுங்கள்.

உங்களின் ஊரில் வசதியற்ற ஏழை குழந்தைகள் படிப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை தற்பொழுதே செய்துவிடுங்கள். அவர்களுக்கு பணமாக புத்தகமாக எழுது பொருட்கள் அல்லது உடையாக  கொடுத்து உதவுங்கள்.

இதுவரை நீங்கள் பரிகாரத்திற்க்கு என்று அனுப்பிய பணத்தில் நானும் இந்த உதவியை செய்ய ஆரம்பிக்க போகிறேன். பரிகாரத்திற்க்கு அனுப்பிய பணம் மற்றும் எனக்கு என்று வந்த பணமும் இதற்க்கு பயன்படுத்தபோகிறேன்.

நீங்களும் இதனை முன்கூட்டியே செய்துவிடுங்கள்.  பலர் கடன் கேட்டு இதற்க்காக அழைவார்கள். நாம் செய்யவேண்டியதை முன்கூட்டியே செய்துவிட்டால் அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          மாந்தி பரிகாரம் அறிவித்தவுடன் இலவச பரிகாரத்திற்க்கு அனுப்பும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எப்பொழுதும் இலவச பரிகாரத்திற்க்கே அனுப்பவேண்டுமா என்றும் ஒரு சிலர் நினைத்துக்கொண்டு வெட்கப்பட்டு இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

ஆண்டு முழுவதும் இலவச பரிகாரத்திற்க்கு நீங்கள் ஜாதகத்தை அனுப்பினால் கூட நீங்கள் ஏன் இலவச பரிகாரத்திற்க்கே அனுப்புகின்றீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். ஒருவர் ஏதோ ஒரு வழியில் பயன் அடைந்தால் போதும் என்று நினைப்பவன் நான். வெட்கப்படாமல் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.

முக்கால்வாசி தமிழ்சோதிடத்தில் மாந்தியின் நிலையை குறிக்காமல் வைத்திருக்கின்றனர். ஒரு சிலர் என் ஜாதகத்தில் மாந்தி இல்லை என்று சொல்லிருந்தனர். தமிழ்நாட்டில் தற்பொழுது ஜாதகம் எழுதும் சோதிடர்கள் தான் மாந்தியை பற்றி குறிக்கின்றனர்.

உங்களின் ஜாதகத்தில் மாந்தியை பற்றி குறிக்கவில்லை அதனால் ஜாதகத்தை அனுப்பவில்லை என்று நினைப்பவர்கள் உங்களின் பிறந்த தேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊரை பற்றி அனுப்பி வைத்துவிடுங்கள். நான் பார்த்துக்கொண்டு உங்களுக்கு மாந்தி பரிகாரத்தை செய்துவிடுகிறேன்.

பொதுபரிகாரம் ஏதோ பெயர்க்கு நடத்தாமல் அதன் வழியாக நன்மையை செய்ய வேண்டும் என்று தான் ஜாதககதம்பத்தில் நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள். உங்களின் வளரச்சிக்கு கண்டிப்பாக இது பயன்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி பத்தாவது வீட்டில் இருந்தால் நல்லது என்று பொதுவாக சொல்லிவிடலாம். பத்தாவது வீட்டில் மாந்தி இருந்தால் இளமையில் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதையும் சொல்லி தான் ஆகவேண்டும்.

பத்தாவது வீடு கர்மஸ்தானம் என்பதால் இளமையில் கர்மம் செய்யவேண்டிய ஒரு நிலையை மாந்தி உருவாக்கிவிடுவார். அது மட்டும் இல்லை தொழிலை கொடுத்தாலும் அதிலும் சிக்கலை உருவாக்குவதும் உண்டு.

தந்தையின் வருமானத்தை தடுத்து நிறுத்தி இளமையில் வறுமையை சந்திக்க வைப்பது உண்டு.  குடும்பத்தில் நிம்மதியையும் சீர்குழைப்பதும் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் சண்டை சச்சரவுக்கு வழி வகுக்கும்.

சம்பந்தப்பட்ட ஜாதகர் அவர் அப்பாவிடம் வாய் வழி திட்டுதலை வாங்கிக்கொண்டு இருப்பார். குடும்பத்தில் அதிகமான உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள். ஒரே வாரிசுபோல் இருப்பதற்க்கு வழி உண்டு.

பத்தாவது வீட்டில் மாந்தி இருப்பதால் நடுத்தரவயத்திற்க்கு மேல் நல்ல நிலைக்கு வந்துவிடலாம். சுயமுயற்சியால் வாழ்வில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லுவதற்க்கு வாய்ப்புகள் உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 18, 2017

மாந்தி பலன்


ணக்கம்!
         மாந்தி ஒன்பதில் இருந்தால் அவர்கள் வழிபாடு அதிகப்பட்சம் கிராமதெய்வத்தின் துணையை ஆக தான் இருக்கும். கிராமதேவதை இவர்களுக்கு நிறைய கைகொடுத்து இவர்களை தூக்கி நிறுத்தும். கிராமபுறங்களில் உள்ள கோவிலாக பார்த்து வணங்கினால் சிறப்பு.

ஒரு நபர்க்கு மாந்தி ஒன்பதில் இருந்தது அவர்க்கு அவரின் குலதெய்வத்தை எடுத்து கட்டும் பணியை செய்ய சொல்லிருந்தேன். தற்பொழுது அது முடிவடைந்து நல்ல படியாக ்கும்பாபிஷேகம் முடிந்தது. 

பாக்கியஸ்தானத்தில் மாந்தி இருக்கின்றது அதனால் அவர்களால் கோவிலை கட்டமுடியாது என்று பல சோதிடர்கள் அவரிடம் சொல்லிருக்கிறார்கள். நான் அவரின் ஜாதகத்தை பார்த்து உங்களால் தான் இது முடியும் என்று சொல்லி அவரை செய்ய சொல்லிருந்தேன்.

நண்பரும் கடும் முயற்சியை போட்டு அந்த கோவிலை கட்டினார். கோவிலை கட்டும்பொழுது நிறைய சிக்கல் பிரச்சினை வருவது இயல்பான ஒன்று தான். அதனை நீங்கள் பொருட்படுத்தாமல் நீங்கள் கட்டலாம் என்று சொன்னேன். அவரால் தான் அந்த கோவிலை கட்டமுடிந்தது என்று அனைவரும் சொன்னார்கள்.

பாக்கியஸ்தானத்தில் தீயகிரகம் இருக்கின்றது அதனால் அவர்கள் தெய்வ வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பதை விட அந்த கிரகம் எப்படி வேலை செய்யும் என்பதை பார்த்து பலனை பார்ததால்  கண்டிப்பாக நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குருவா ராகுவா


வணக்கம்!
          ஒருவர் தன்னுடைய வாழ்வை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்றால் ஜாதகப்படி ஒன்று குருவின் வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் அல்லது ராகுவின் வழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

குரு கிரகம் சொல்லும் நேர்மையான வழியை தேர்ந்தெடுத்து அதற்கு தகுந்தார்போல் வாழ்க்கையை செலுத்தவேண்டும். வழிபாடு எல்லாம் குரு காரத்துவம் காட்டக்கூடிய வேலையை செய்தால் அதன் வழியாக உங்களுக்கு அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

குருவின் கீழ் நீங்கள் இருக்கும்பொழுது உங்களுக்கு எல்லா வழியிலும் செல்வவளம் வரும். ஒரு குருவை நீங்கள் பின்பற்றினாலே உங்களுக்கு பணப்பிரச்சினை இருக்காது. செல்வவளத்திற்க்கு குறைவு இருக்காது.

ராகுவின் வழியை பின்பற்றினாலும் பணம் வரும் ஆனால் அது கொஞ்சம் தவறான வழியில் சென்று அதன் வழியாக பணத்தை சம்பாதிக்கும் ஆளாக இருக்கவேண்டும்.

ராகுவின் காரத்துவம் காட்டக்கூடிய வழிபாடு அதனை சார்ந்த தொழிலை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு நடக்கும். இதற்கும் குரு எல்லாம் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் தேடினால் அதற்கு வழி செய்துக்கொடுப்பார்கள். 

எதனை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்பதை பொறுத்து உங்களின் வாழ்க்கை இருக்கின்றது. குருவா ராகுவா என்பதனை தீர்மானித்துவிட்டு அதன் பிறகு அதற்குள்ள வேலையை நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 17, 2017

மாந்தி பலன்


ணக்கம்!
          மாந்தி ஒன்பதாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்களின் தந்தை அதிகபட்சம் ஊனமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது. மாந்தி தந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும். இளமை காலத்தில் அதிகபடியான தடைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

பாக்கியஸ்தானம் என்பதால் ஆன்மீகவழியில் முன்னேற்றம் ஏற்படுவதற்க்கு வாய்ப்பு இருக்காது. இவர்கள் செய்யும் வழிபாடு இவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை. பல கோவில்களை சுற்றி சுற்றி வந்துக்கொண்டு இருப்பார்கள் பலன் ஒன்றும் கிடைக்காது.

மாந்தி ஒன்பதாவது வீட்டில் இருக்கும்பொழுது ஒரு சிலர் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் வாய்ப்பும் இருக்கின்றது. சொந்த நாட்டைவிட்டு அயல்நாடுகளிலேயே குடியுரிமை வாங்கிக்கொண்டு அங்கேயே தங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒரு சிலர்க்கு மாந்தி ஒன்பதில் நின்று அதோடு ராகு அல்லது கேது நின்றால் அவர்கள் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருக்கின்றனர். ஆன்மீகத்தில் நிறைய கருத்தை கண்டறிந்து மக்களுக்கு பயன்படும் விதத்தில் சொல்லிவிட்டு செல்வார்கள்.

மாந்தி ஒன்பதில் நிற்க்கும் பலருக்கு தந்தை வழியில் உள்ளவர்கள் எதிரியாகவும் இருக்கின்றனர். தந்தை வழி சொத்தில் வில்லங்கத்தை செய்பவர்களாகவும் அதாவது சம்பந்தப்பட்ட ஜாதகர்க்கு தந்தை வழி சொத்தில் வில்லங்கம் இருக்கின்றது.

மேலே சொன்னபடி உங்களின் ஜாதகத்தில் மாந்தி அமர்ந்து பிரச்சினை கொடுக்கின்றது என்றால் நீங்கள் உடனே ஜாதகத்தை அனுப்பி பரிகாரத்தில் கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நட்சத்திரம்



ணக்கம்!
          ஒருவர் வந்து என்னுடைய நட்சத்திரம் இது என்று ஏதோ ஒரு நட்சத்திரத்தை சொன்னவுடனே சோதிடர்கள் உங்களின் முழுபலனையும் அவர்கள் தெரிந்துக்கொள்வார்கள். நட்சத்திர பெயரை கேட்டவுடன் முழுபலனும் அவர்களுக்கு தெரிந்துவிடும். அதன் பிறகு ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்க்கு தகுந்த மாதிரி பலனை சொல்லிவிடுவார்கள்.

நட்சத்திரத்தை கேட்டவுடன் ராசி என்ன என்று தெரிந்துவிடும். அதன் பிறகு வயதை வைத்து என்ன தசா நடக்கிறது என்பதையும் ஒரளவு மனகணக்கில் கணித்துவிடுவார்கள். குறிசொல்லுபவன் மாதிரி உங்களின் பலனை சொல்லுவார்கள்.

உங்களின் நட்சத்திரத்தை விட்டுவிட்டு உங்களுக்கு தெரிந்தவர்களின் நட்சத்திரத்தை வைத்து அதன் பொதுப்பலனை பாருங்கள். பொதுபலன் சொன்ன டாப்பிக்கை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் செய்யும்தொழில் எல்லாம் பொதுபலன் சொன்ன விசயத்தில் இருக்கும்.

நாம் செய்கின்ற பரிகாரம் வழிபாடு எல்லாம் நட்சத்திரம் சம்பந்தப்பட்டவைக்கு தான் இருக்கும். நட்சத்திரம் அந்தளவுக்கு உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். நட்சத்திரபரிகாரமும் மிகவும் நல்ல ஒன்று.

மாதம் தோறும் வரும் உங்களின் நட்சத்திரம் அன்று உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று வாிபட்டு வரலாம் அல்லது அருகில் இருக்கும் ஏதாே ஒரு கோவிலுக்கும் சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 16, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
         மாந்தி எட்டில் நின்றால் அவர்க்கு திருமணம் என்பது அவ்வளவு எளிதில் நடைபெறாது. மாந்தி நின்று இளைமையில் ஏதாே ஒரு நல்ல கிரகத்தின் துணையில் அவர்க்கு திருமணம் நடைபெற்றால் கூட அவரின் துணை அவரை விட்டு சென்றுவிடும் அல்லது மரணகண்டம் ஏற்படும்.

மாந்தி எட்டில் நிற்கும் பொழுது அவர்க்கு திருமணம் ஏற்பாடு செய்தால் அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணிடம் எந்தவித பொருளாதார நிலையில் வசதி இல்லை என்றால் அந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்யலாம்.

பொருளாதார நிலை இல்லை என்றாலு்ம் ஒரு காலத்தில் அவர்கள்  தன்னுடைய முயற்சியால் பெரிய அளவில் வந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். நல்ல வாழ்க்கையை கொடுப்பார்கள்.

மாந்தி எட்டில் நிற்க்கும்பொழுது அவர்களின் பொருளாதாரம் இளைமையில் வறுமையில் இருந்தாலும் கூட ஒரு காலத்திற்க்கு பிறகு நல்ல நிலைமைக்கு வந்துவிடும்.

மேலே சொன்ன மாதிரி உங்களின் ஜாதகத்தில் மாந்தி இருந்தால் உடனே நீங்கள் உங்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் வழியாக இதனை நாம் சரிசெய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உடலும் மனமும்


வணக்கம்!
         ஒருவருக்கு உடலும் மனமும் என்றும் மாசுபடாமல் காத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும். இன்றைய காலத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் இந்த இரண்டும் நன்றாக இருக்கும்பொழுது உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்.

உடலையும் நன்றாக காத்துக்கொள்ளவேண்டும். நிறைய பேர்கள் உடலையும் வீண் செய்துவிடுகின்றனர். எனக்கு கூட உடல்நிலையில் ஒரு சில பிரச்சினை இருக்கின்றது. அது இத்தனை வருடங்கள் வெளியில் உள்ள உணவுகளை உட்கொண்ட காரணத்தால் வந்தது. அதனையும் ஒரளவு சரி செய்துக்கொண்டு இருக்கிறேன். 

உங்களின் வாரிசுகளுக்கு வெளியில் உள்ள உணவுகளை கொடுத்து பழக்கவேண்டாம். நீங்களும் வெளியூரில் இருந்து கஷ்டப்பட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் உணவு பழக்கவழக்கமும் உணவு விடுதிகளை நம்பி இருக்கும். அந்த காரணத்தால் உங்களுக்கும் உடல் பிரச்சினை இருக்கும் ஆனால் உங்களின் வாரிசுகளுக்கு ஒரு நல்ல உணவை கொடுத்துக்கொண்டு வாருங்கள். 

நம்மை பலிக்கொடுத்து நம் வாரிசுகளை உருவாக்க தான் வேண்டும். நாம் எதனை சாப்பிட்டாலும் நம் வாரிசுகளை கண்டதையும் சாப்பிடவிடாமல் நல்ல உணவுகளை கொடுத்து வளர்க்கவேண்டும். அப்பொழுது அவர்கள் எளிதில் வெற்றியை பெறுவார்கள்.

நல்ல உணவை கொடுத்து வளர்த்தால் நல்ல மனமும் அமைந்துவிடும். இரண்டும் சரியாக இருந்தால் எதிலும் ஜெயிப்பார்கள். நீங்களும் முடிந்தளவுக்கு இதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். இறைவனின் சக்தியை பெறுவதற்க்கு உடலும் வேண்டும் மனமும் வேண்டும். அதாவது ஆராேக்கியமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 15, 2017

மாந்தி பலன்


ணக்கம்!
          மாந்தி எட்டில் இருந்தால் அவர்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆறாவது வீடு தானே கடன் இது என்ன எட்டாவது வீட்டை வைத்து சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். அனுபவத்தில் வைத்து இதனை சொல்லுகிறேன். 

சோதிடத்தைப்பற்றி நமது தளத்தில் ஒரளவு தான் சொல்லமுடியும். முழுமையான தகவல்களை சொன்னால் அது உடனே திருடிவிடுகிறார்கள் என்பதால் கொஞ்சம் குறைவாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ஆறாவது வீடு கடனை கொடுத்தாலும் பெரும்பாலும் எட்டாவது வீடு கெட்டாலும் கூட கடன் வந்துவிடுகிறது. ஆறாவது வீடு கடனை வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுப்பார்கள் ஆனால் எட்டாவது வீட்டில் மாந்தி இருந்தால் கடனை வாங்கிக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழவைத்துவிடும்.

எட்டில் மாந்தி இருக்கும் நிறைய ஜாதகர்களை நான் பார்த்து இருக்கிறேன். நிறைய கடனை வாங்கிவிட்டு அதனை கட்டமுடியாமல் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை அந்த நிலைக்கு மாற்றுவதே எட்டில் உள்ள மாந்தியின் செயலாக இருக்கின்றது.

ஒரு தொழில் ஆரம்பித்து அதனை நடத்தமுடியாமல் போய்விடும் நிலை வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படும் அந்த நேரத்தில் கடன் வாங்குவார்கள். இவர் வாங்கி அதில் போட்டு அதுவும் மூழ்கிவிடும். அப்பொழுது தொழிலையும் விட்டுவிட்டு தலைமறைவு ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பீடை


வணக்கம்!
          ஒரு மனிதன் கையில் பணம் இல்லை என்ற போதும். கடுமையான வறுமை இருக்கும்பொழுதும் அவனிடம் பீடை மட்டும் இருந்துவிடகூடாது. பீடை இருந்தால் எப்படிப்பட்ட வேலை செய்தாலும் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும்.

எங்களை போல உள்ளவர்களுக்கு பீடை என்பது வரும் நிறைய பரிகாரங்கள் அடுத்தவனின் கர்மா எல்லாம் வரும் ஆனால் நாங்கள் சுத்தமாக இருக்கிறோம். அவர் அவர்களின் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு ஒரு சிலருக்கு கடுமையான பீடையோடு இருக்கின்றனர்.

தன்னை ஒழுங்காக பராமரிக்காதவர்களுக்கு இப்படிப்பட்ட பீடை இருக்கும். ஏனோ என்று இருந்துக்கொண்டு ஊரில் இல்லாத வேலைகளிலும் தலையை காட்டிக்கொண்டு மனதை குப்பை போன்று வைத்து இருந்தால் பீடை வந்துவிடும்.

ஒரு சிலர் எந்த நேரத்திலும் தவறாகவே பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கும் பீடை வந்துவிடும். வாயை மூடிக்கொண்டு இருந்தால் என்ன ? வாய் இருப்பதே பேசதான் என்பது போல் பேசிக்கொண்டே இருப்பார்கள். பீடை இல்லாமல் வாழ்ந்தாலே அனைத்திலும் வெற்றியை பெற்றுவிடலாம்.

ஒரு சிலர் எந்த நேரத்திலும் எதிரமறையாகவே பேசிக்கொண்டே இருப்பார்கள். சாகபோகிறான் என்பது போல் பேசுவார்கள். உலகத்தில் பிறந்த மனிதன் அனைவரும் சாகதான் போகிறான் இருந்தாலும் அதனை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்தளவுக்கு பீடை பிடிக்காமல் இருந்தாலே போதும் எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கையை இறைவன் கொடுத்துவிடுவான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 14, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி ஏழில் நின்றால் ஒருவருக்கு காதல் திருமணம் என்று சொன்னோம். ஒரு சிலர்க்கு மாந்தி ஏழில் நின்றால் திருமணமே நடைபெறாத ஒரு வாழ்க்கையும் கொடுத்துவிடும். திருமணத்திற்க்கு பெண் பார்க்க அலைந்து திரிந்தால் கூட ஒன்றும் நடக்காது. கிணற்றில் போட்ட கல் போன்று திருமண பேச்சு இருக்கும்.

திருமணத்தை முடித்து வைக்கிறேன் என்று நிறைய திருமண புரோக்கர்களிடம் ஏமாந்து போகும் ஒரு நிலையை கூட ஏழில் நிற்கும் மாந்திக்கொடுக்கும். ஒரு சில ஜாதகர்கள் காதல் தோல்வியை கூட சந்தித்து திருமணம் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.

ஏழில் நிற்க்கும் மாந்தி ஒரு சில ஜாதகர்களுக்கு உடல்நிலையில் ஊனத்தை ஏற்படுத்தி விடும். ஊனத்தோடு பிறப்பவர்களாகவும் ஒரு சிலர் இருப்பார்கள். இடையிலும் ஊனம் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம்.

ஏழில் நிற்க்கும் மாந்தி ஜாதகர்களின் துணைக்கு ஆயுள் கண்டத்தையும் ஏற்படுத்தகூடிய வாய்ப்பும் இருக்கின்றது. ஏழில் மாந்தி நின்று திருமணம் செய்தாலும் சரி அல்லது கூட்டு வியாபாரம் செய்தாலும் சரி கொஞ்சம் பார்த்து நிதானமாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட அமைப்பில் உங்களின் ஜாதகம் அல்லது உங்களின் வீடடில் உள்ளவர்களின் ஜாதகம் இருந்தால் மாந்தி பரிகாரத்திற்க்கு அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


வணக்கம்!
          ஏழில் மாந்தி நின்றால் அந்த நபருக்கு அதிகபட்சம் திருமணம் நடப்பது காதல் திருமணமாக இருக்கும். காதலித்து அதன் வழியாக திருமணம் நடைபெறவைத்துவிடும். அது என்ன காதலித்து என்பது பார்த்து வைக்கும் திருமணத்திலும் காதல் இருக்கின்றது. பெண்ணும் ஆணும் அவர்களே பார்த்து காதல் திருமணத்தை தான் காதலித்து திருமணம் என்கிறேன்.

பிற ஜாதியில் திருமணம் நடப்பதற்க்கு அதிகப்பட்சம் மாந்தி வழிவகுக்கும். ஏழில் மாந்தி நிற்க்கும்பொழுது அவர்களின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் நடக்கும். தனியாக குடும்ப வாழ்க்கையை வாழ வைக்கும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஜாதகத்தில் ஏழில் மாந்தி நின்றது. அவருக்கு திருமணம் காதல் திருமணம். அவர்கள் காதலித்து திருமணம் செய்த நாளிலில் இருந்து இருவர் வீட்டிலும் எந்த வித தொடர்பும் இல்லாமல் செய்துவிட்டது. இன்று வரை அப்படியே வாழ்கின்றனர்.

காதல் திருமணத்தையும் கொடுத்து குடும்பத்தையும் சேரவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஒரு பெண்ணிற்க்கு ஏழில் மாந்தி நின்றது. அந்த பெண் ஒரு திருமணம் ஆனவருடன் காதல் ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்துக்கொண்டது.

என்னங்க இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். ஏகாப்பட்ட நிகழ்வுகள் இப்படியும் நடக்கின்றது. நாம் என்ன செய்வது அனைத்தும் கிரகத்தின் வேலையாக இருக்கின்றது.

உங்களுக்கு உங்களின் குடும்பத்தினர்க்கு இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தால் நீங்கள் உடனே மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 13, 2017

நீண்டஆயுள்


வணக்கம்!
          ஒருவருக்கு நல்ல ஆயுள் வேண்டும். நீண்டஆயுள் இருக்கும்பொழுது தான் அவனின் அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்துக்கொண்டு இந்த வாழ்க்கையை அனுபவித்துவிட்டு செல்லமுடியும்.

நீண்டஆயுள் வேண்டும் என்பவர்களுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் செய்யவேண்டும் என்று பல பதிவுகளில் நான் சொல்லிருக்கிறேன். அதனை கடைபிடித்து வாருங்கள்.

சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் செய்தால் பெரும்பாலும் அவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. அப்படியே நோய்கள் வந்தால் அது முன்ஜென்மத்தில் விட்டு போன தீமைகளாக இருக்கும்.

நீண்ட ஆயுள் வேண்டும் என்பவர்கள் அதோடு நோயற்ற வாழ்வும் வேண்டும் என்று நினைக்கவேண்டும். நோயும் இல்லாமல் நீண்ட ஆயுள் இருந்தால் அற்புதமான வாழ்வாக அமையும்.

மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் அனுப்பிவையுங்கள். உங்களின் ஜாதகத்தை தற்பொழுது இருந்து பார்த்து அதற்கு தீர்வை அலசமுடியும். உடனே காலம் தாழ்த்தாமல் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 12, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு திருமணத்திற்க்கு முன்பு வாழும் வாழ்வு மிகவும் அற்புதமான ஒரு வாழ்வு. அவன் சொல்படி அனைத்தும் நடக்கும். உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து அனைத்தையும் செய்யமுடியும். அனைத்தையும் செய்வது யார். அவனின் பெற்றோர்கள்.

திருமணத்திற்க்கு முன்பு ஒரு மனிதனின் அனைத்தை தேவைகளையும் அதிகப்பட்சம் அவனின் பெற்றோர்களே செய்துவிடுவார்கள். என்ன தான் லட்சக்கணக்கில் பையன் சம்பாதித்தாலும் அவனின் பெற்றோர் அவனுக்கு என்று அவர்களே உழைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கொடுப்பதை என்ன செய்தாய் என்று கூட கேட்கமாட்டார்கள்.

திருமணத்திற்க்கு பிறகு ஒருவனின் வாழ்க்கையே அப்படி போய்விடும். மனைவி சமைக்க தெரியாமல் சமைத்து போட்டாலும் அது ருசியாக இருக்கிறது என்று தான் அவன் சொல்லவேண்டும். திருமணத்திற்க்கு பிறகு ஒரு ஆணின் அனைத்து சந்தோஷமும் அவனை விட்டு போய்விடும்.

முக்கால்வாசி பேருக்கு திருமணத்திற்க்கு பிறகு வாழும் வாழ்க்கை ஒரு அற்பணிப்பான வாழ்க்கையாகவே இருக்கும். அனைத்தையும் தன் குடும்பத்திற்க்காகவே வாழும் வாழ்க்கையாக இருக்கும்.

எதற்க்கு திருமணத்தைப்பற்றி சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கலாம். மாந்தி ஏழில் நின்றால் திருமணத்திற்க்கு முன்பு சொர்க்கம் திருமணத்திற்க்கு பின்பு நரகமாகிவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பித்ருதோஷம்


வணக்கம்!
          பித்ரு தோஷத்தைபபற்றி நண்பர் ஒரு கேள்வி கேட்டார். பித்ருதோஷ நிவர்த்திக்கு இராமேஸ்வரத்திற்க்கு சென்று திலா ஹோமம் செய்யலாமா மறந்த திதிக்கு என்ன செய்வது என்று கேட்டார்.

இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் நடத்தலாம். அது வாழ்நாளில் ஒரு முறை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். உண்மையில் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது எல்லாம் ஒரு வகையில் நல்லது என்றாலும் அங்கு செய்யப்படும் திலா ஹோமம் உண்மையான திலா ஹோமமா என்று சந்தேகம் எழும்புகிறது.

எனக்கு தெரிந்து அங்கு இருக்கும் புரோகிதர்கள் சொல்லும் மந்திரம் எல்லாம் வீண் என்று தான் தோன்றுகிறது. நிறைய செலவு செய்து புரோகிதர்களை அமர்த்தி செய்தாலும் அவர்கள் சரியாக செய்வதில்லை. ஏனோ தானோ என்று தான் செய்கின்றனர்.

நிறைய செலவு செய்து நாம் அதில் இருந்து எதுவும் பயன்பெறுவதில்லை என்று தான் தோன்றுகிறது. ஒரு முறை நம்முடைய கடமையை செய்வதற்க்காக வேண்டுமானால் செய்யலாம். இராமேஸ்வரம் சென்று அங்கு உள்ள புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு வருவது மிகவும் நல்லது. புனித தீர்த்தத்தில் நீராடிவிட்டு வருவதால் நமக்கு நன்மை தரும்.

மறந்த திதியை நீங்கள் மாசி மகத்திற்க்கும் புரட்டாசியில் வரும் அமாவாசை அன்றும் திதி கொடுக்கலாம். தனியாக வேறு நாட்களில் சென்று திதி கொடுக்கப்படவேண்டியதில்லை. 

ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் முன்னோர்களுக்கு நீங்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை செய்து வந்தால் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். உங்களின் வாரிசுகளும் நன்றாக இருக்கும். எந்த ஒரு செயலையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது உங்களுக்கு நன்மை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 11, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி ஆறில் நின்றால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள். ஆறாம் இடத்தில் எந்த தீயகிரங்கள் நின்றாலும் அது அவர்களை நன்றாக சாப்பிடவைக்கும். உடல்வாகு அதிகபடியாக இருப்பதற்க்கு வழி செய்யும்.

ஒருத்தரை பார்த்தாலே அவர்கள் மிரட்டியே காரியத்தை சாதித்துவிடுவார் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் சாப்பாடு நன்றாக இருக்கவேண்டும். 

ஒருவர் நன்றாக சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு அவர்களின் ஜீரணஉறுப்பு நன்றாக இருக்கவேண்டும். ஜீரணஉறுப்பு நன்றாக வேலை செய்ய ஆறாம் இடம் வலுத்தால் நன்றாக வேலை செய்யும்.

ஆறாம் இடத்தில் மாந்தி நின்றால் அவர்களுக்கு ஜீரணஉறுப்பு நன்றாக வேலை செய்யும். எதிலும் தைரியத்தை உருவாக்கி தன்னுடைய வேலையை தானே திறமையாக செய்யும் வாய்ப்பை உருவாக்குவதில் ஆறில் நிற்க்கும் மாந்திக்கு நிகர் கிடையாது என்று சொல்லலாம்.

மாந்தி ஆறில் நின்றாலே தந்தை நல்ல நிலைக்கு வந்துவிடுவார். இவர் பிறந்த நேரம் அவர்களுக்கு நல்லதை மாந்தி கொடுத்து ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றார்கள். இவரை பணக்காரர்களாக மாற்ற அவர்களின் பெற்றோர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 10, 2017

கர்மா கேள்வி & பதில்


வணக்கம்!
          கர்மாவைப்பற்றி பதிவை எழுதியவுடன் நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டார். சோதிடர்களால் கர்மாவை முழுமையாக நீக்கமுடியுமா என்று கேட்டார்.

சோதிடர்களால் கர்மாவை நீக்கமுடியாது. உங்களுக்கு கர்மா வேண்டுமானால் சோதிடர்களால் கொடுக்கமுடியும். சோதிடனிடம் உள்ள கர்மா உங்களுக்கு வந்து சேரும். கர்மாவை நீக்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு சோதிடர்கள் கர்மாவோடு இருக்கின்றனர் என்பது தான் உண்மை.

சோதிடதொழிலே அதிக பொய்நிறைந்த ஒரு தொழிலாக மாறிக்கொண்டு வருகின்றது. அடுத்தவன் கர்மா எல்லாம் நீக்க முடியும் என்றால் மனிதப்பிறப்பே என்பது இருக்காது என்பது தான் உண்மையாக இருக்கமுடியும்.

நாங்கள் சொல்லும் கர்மா எல்லாம் சிறிய அளவில் கர்மாவாக தான் இருக்கும். நம்மிடம் அம்மன் இருப்பதால் அதனை வைத்து வருகின்றவர்களுக்கு ஏதோ நல்லது செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அது கர்மா நீக்கும் செயல் எல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலை தானே தவிர மனிதனின் கர்மாவை முழுமையாக நீக்கும் வேலை எல்லாம் கிடையவே கிடையாது.

அம்மனை வைத்து செய்யும்பொழுது உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று என்னை தாக்க ஆரம்பிக்கிறது. அதனை சரி செய்ய ஒரு நல்ல செயலை செய்யவேண்டியுள்ளது. அதனை போக்க தான் உங்களையும் நல்லது செய்யுங்கள் என்று சொல்லுகிறேன். முழுமையான கர்மா நீக்கினால் அடுத்த நொடி நீங்கள் இந்த பூமியில் இருந்து போய் சேர்ந்துவிடுவீர்கள்.

உங்களுக்கு நீங்களே நல்லது செய்யும் செயலுக்கு தான் நீங்களே பல ஆன்மீக பணிகளை செய்ய வைக்கிறோம். அது உங்களிடம் இருந்தே நடக்கவேண்டும் என்பதற்க்கு சொல்லுகிறோம். உங்களின் கர்மாவை தீர்க்கிறோம் என்று சொல்லவில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கர்மா


வணக்கம்!
          அடுத்தவர்களை நாம் காப்பாற்றினால் அது மனிதாபிமானம். ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு குறிப்பாக ஞானிகளுக்கு அது கர்மாவாக எடுத்துக்கொள்வார்கள். அடுத்தவர்கள் அவர் அவர்களின் கர்மாப்படி நல்லது கெட்டது வரும். இதனை நீங்கள் எதுவும் செய்யகூடாது என்பார்கள்.

கர்மா என்றாலும் அதனை மிகச்சரியாக நாம் செய்தால் அதனை புண்ணியமாக எடுத்துக்கொண்டு விடலாம். நம்மை பொறுத்தவரை நிறைய பரிகாரத்தை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இலவச சேவை நிறைய வரும்பொழுது கர்மாவாக எனக்கு பிடிக்கும்.

கர்மா எனக்கு வரக்கூடாது என்பதற்காகவும் உங்களுக்கு புண்ணியம் சேர்க்கவும் தான் இலவசமாக பரிகாரத்திற்க்கு அனுப்பும் ஜாதகர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை பிறர்க்கு அல்லது கோவிலுக்கு செய்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன்.

ஒவ்வொருவருக்கும் நான் நிறைய செய்துக்கொடுக்கும்பொழுது அவர்கள் அனுப்பும் பணத்தை கொண்டு நிறைய நல்ல காரியங்கள் செய்யப்டுகின்றன. அதனை வெளியில் காட்டுவதில்லை ஆனால் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் எதுவும் செய்யவில்லை என்றால் நான் உங்களுக்கு பதிவை எழுதிக்கொண்டு இருக்கமுடியாது. இதனை விட்டு வெளியில் இழுத்துக்கொண்டு என்னை ஒன்றும் செய்யவிடாமல் செய்துவிடும்.

கர்மா பிடிக்காமல் வாழ்வதே சிறந்த ஆன்மீகவாழ்வு. நிறைய புண்ணியத்தை செய்யும் செயலை செய்துக்கொண்டே இருங்கள். ஒரு அற்புதமான வாழ்வு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


வணக்கம்!
          நேற்று தரவேண்டிய பதிவு வேலை காரணமாக பதிவை தரமுடியவில்லை. மாந்திக்கு பரிகார அறிவிப்பு அறிவித்து இருக்கிறோம். உங்களின் ஜாதகத்தில் மாந்தி எந்த இடத்தில் இருந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்து அதற்க்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம். 

மாந்தி ஆறில் நின்றால் நன்மையான பலனை அளிக்கும் என்பது ஒரு பொதுவான கருத்து. மாந்தி ஆறில் நின்றால் அவர்களின் தந்தை நல்ல பணக்காரர்களாக இருந்து அந்த சொத்தை அனுபவிக்கவேண்டிய ஒரு வாய்ப்பு இருக்கும். 

ஒரு சிலருக்கு தந்தை சரியில்லாமல் போனால் கூட அவர்களே கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் கொஞ்சம் அதிரடியாக இறங்கி செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

பெரும்பாலும் அரசியல் சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கு எல்லாம் மாந்தி ஆறில் நிற்க்கும். நிறைய அரசியல் சார்ந்தவர்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நேர்மையான வழியை எல்லாம் கடைபிடிப்பது கிடையாது. அரசியல் சார்ந்த தொழிலிலேயே கொஞ்சம் வில்லங்கம் செய்து சம்பாதித்துவிடுகிறார்கள். வில்லங்கம் செய்வதற்க்கும் ஒரு கொடுப்பினை இருக்கவேண்டும் அல்லவா. இவர்களுக்கு கொடுப்பினையை ஆறி்ல் நிற்க்கும் மாந்தி செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 8, 2017

மாந்தி பொதுபரிகாரம்


வணக்கம்!
          நண்பர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க மாந்தி பொதுபரிகாரத்தை தற்பொழுது செய்யலாம் என்ற மாந்தியைப்பற்றி எழுதிவருகிறேன். ஒரளவு மாந்தியைப்பற்றி சொல்லிருக்கிறேன். இதுவரை மாந்தியைப்பற்றி வந்த பலன் உங்களுக்கு சரியாக இருந்தால்  கண்டிப்பாக நீங்கள் மாந்தி பரிகாரத்தில் இணைந்துக்கொள்ளவும்.

மீதி உள்ள பலனையும் தொடர்ந்து எழுதிவிடுகிறேன். அனைவரும் மாந்தி பரிகாரத்தில் இணைந்துக்கொள்ளலாம். மாந்தி பரிகாரத்திற்கு தங்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாந்தி ஜாதகத்திற்க்கு அனுப்பி வைக்கலாம்.

இலவசசேவை மற்றும் கட்டணசேவை இரண்டும் உள்ளது. இலவச சேவையில் ஜாதகத்தை அனுப்ப விரும்புவர்கள் தங்களால் முடிந்த ஒரு உதவியை நீங்களே அருகில் செய்துவிடுங்கள். கோவிலுக்கும் தங்களின் பங்களிப்பை ஏதாவது ஒன்று செய்துவிடுங்கள்.

பரிகாரம் என்பது நம்மிடம் உள்ள கெட்டதை கழிக்கும் ஒரு செயல் தான். கெட்டதை  கொண்டு வந்துவிடாமல் நீங்களே ஒரு நல்ல செயலை செய்துவிட்டால் நல்லது. பரிகாரமும் வேலை செய்யும்.

கட்டணத்தில் பணம் அனுப்பவுர்கள் அனுப்பி எனது கட்டண ஐடிக்கு ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம். தங்களுக்கான பரிகாரத்தை செய்துவிடுவிடுவேன்.

ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் வாட்ஸ்அப் நம்பரை வாங்குவது உண்டு. வாட்ஸ்அப் நம்பரில் புகைப்படம் அனுப்பி வைப்பது உண்டு. இந்த முறை அந்த புகைப்படம் அனுப்பி வைக்க இயலாது. வாட்ஸ் அப்பில் விவரம் மட்டும் அனுப்பி வைக்கலாம். மாந்திக்கு என்று பரிகாரத்தை அறிவித்துவிட்டேன். உடனே ஜாதகத்தை அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயண அனுபவம்


ணக்கம்!
          சனிக்கிழமை அன்று இரவு தான் மதுரை பயணம் முடிவானது. மதுரையில் ஒரு நண்பரை சந்திக்க சென்றேன். செல்லும் நேரத்தில் நண்பர் கோபி அவர்கள் போன் செய்தார். அவரையும் சந்திக்கலாம் என்று நீங்கள் மாட்டுதாவணி வந்துவிடுங்கள் என்று சொன்னேன். 

அவர் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். மதுரையில் உள்ள நண்பரை அரைமணிநேரம் சந்தித்து பேசிவிட்டு உடனே பழனி செல்லவேண்டும் என்று திட்டமிட்டு உடனே பயணத்தை தொடங்கிவிட்டோம்.

பழனி பயணம் மதுரை இறங்கும் வரை எந்த ஒரு திட்டமும் இல்லை. மதுரையில் இறங்கிய பிறகு தான் பழனி போகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பழனி முருகன் ஏதோ ஒன்றுக்காக நம்மை அழைக்கிறார் என்று சென்றேன். 

பழனி சென்று ஒரு மாதம் கூட ஆகவில்லை மறுபடியும் பழனி முருகன் அழைத்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மாலை நல்ல தரிசனம் முடிந்து மறுபடியும் மதுரை வந்தோம். சனிக்கிழமை இரவே மதுரையில் இருந்து கிளம்பிவிட்டேன். பயணகளைப்பில் நேற்று முழுவதும் பதிவை கொடுக்கமுடியவில்லை.

பொதுவாக எந்த ஒரு திட்டமும் இல்லாமல் பழனி சென்றது வியப்பான ஒன்று தான். பழனியில் தமிழர்களை விட கேரளாவில் இருந்து வருபவர்கள் தான் அதிகம். கோவில் முழுவதும் மலையாள மொழி பேசுபவர்கள் தான் இருக்கின்றனர்.

தமிழர்கள் விஷேசமான நாளில் காவடி பால்குடம் மட்டும் எடுத்துக்கொண்டு தரிசனம் செய்வதோடு சரி என்று நினைக்கிறேன். மற்றபடி அங்கு செல்வதில்லை என்று தான் தோன்றுகிறது. உங்களின் ஆன்மீகபயணத்தில் அடிக்கடி பழனி சென்று வாருங்கள். நல்லது நடக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு