வணக்கம்!
2017 ஆம் ஆண்டு என்னால் முடிந்தளவுக்கு பதிவுகள் தந்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் நிறைய பதிவுகள் தந்துக்கொண்டு தான் இருக்கிறேன். பதிவுகள் கொடுப்பதை விட அதனை எல்லாம் படித்துவிட்டு எனக்கு ஊக்களித்து தொடர்ந்து ஆதரவு தந்ததற்க்கு மிக்க நன்றியை சொல்லவேண்டும்.
ஒவ்வொரு வருடமும் நிறைய நட்பு வட்டம் நமது நண்பர்களால் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. ஜாதககதம்பத்தைப்பற்றி அடுத்தவர்களுக்கு சொல்லுவதற்க்கு மிக்க நன்றி. ஒவ்வொருவருடமும் பதிவை தருவதோடு மட்டும் அல்லாமல் பலரின் வாழ்க்கைக்கும் முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்வதற்க்கு அம்மன் அருளால் அது சாத்தியப்படுகிறது.
வருகின்ற ஆண்டும் தொடர்ந்து நீங்கள் ஆதரவை தரவேண்டும். பல பதிவுகளை புதுமையான விசயங்களை உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டுதல் வைக்கிறேன்.
புதிய வருடகொண்டாட்டத்தை பொறுமையாக கொண்டாடுங்கள். வெளியில் செல்வதை பார்த்து செல்லுங்கள். பாதுகாப்பு தான் முக்கியம். வெளியில் செல்லவில்லை என்றாலும் வீட்டில் அமைதியாக பூஜையறையில் நன்றாக பூஜை செய்யலாம்.
தொடர்ந்து ஆதரவை தந்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு