வணக்கம்!
நமது வீடியோ பதிவில் ஆராவைப்பற்றி சொல்லிருக்கிறேன். பல நண்பர்கள் இதனைப்பற்றி கேள்வி கேட்டனர். நான் ஆராவை பார்க்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்றனர். ஒரு சிலர் ஆராவைப்பற்றி நிறைய பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்றும் சொல்லிருந்தனர். எளிமையான ஒரு விசயத்தை வீடியோவிலேயே நான் சொல்லிருக்கிறேன் அதனை வைத்து நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.
ஒரு ஆன்மீககுருவிடம் நாம் ஆன்மீகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவரை நாடி நாம் சென்றால் அந்த காலத்தில் உள்ள குரு எல்லாம் அவ்வளவு எளிதில் உங்களுக்கு எதுவும் கொடுத்துவிடமாட்டார்கள். உங்களை நன்றாக பரிசாேதனை செய்துக்கொண்டே இருப்பார். உங்களுக்கு தெரியாமல் உங்களை சோதனை செய்துவிட்டு உங்களுக்கு உகந்த காலம் என்பது எது என்பதற்க்காக காத்துக்கொண்டு இருப்பார். எப்படி அவர் சோதனை செய்வார் என்றால் அவர் உங்களின் ஆரா எப்படி இருக்கின்றது என்பதை தான் பார்ப்பார்.
உங்களின் ஆரா உங்களை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் எப்படிபபட்ட ஆள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் என்ன தான் பொய் சொன்னாலும் இவர் பொய் சொல்லுகின்றார் என்பதை ஆராவை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். நீங்கள் அணுகி குரு உங்களின் ஆரா நன்றாக வளர்ந்து வரும் காலக்கட்டம் வரை உங்களுக்காக காத்துக்கொண்டு இருப்பார்.
உங்களின் ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றால் மட்டுமே அவர் உங்களுக்கு தன்னுடைய கல்வியை கொடுப்பார் அதுவரை அவர் பொறுமையாக காத்துக்கொண்டு இருப்பார். ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும்பொழுது மட்டுமே உங்களால் ஆன்மீகத்தை கற்றுக்கொள்ளும் நிலை வரும் என்பது அவர்க்கு தெரியும்.
இன்றைய காலத்தில் ஆறுமாதம் கோவில் குளங்களை சுற்றிவிட்டு அடுத்த ஆறு மாதத்தில் நான் சாமியார் என்று சொல்லிக்கொள்ள தான் மனம் நினைக்கின்றது. இந்த காரணத்தால் மட்டுமே ஒருவரால் நல்ல ஆன்மீகவாதியாக ஆவதற்க்கு முடிவதில்லை. மனம் சொல்லுவதை நீங்கள் கேட்டுவிட்டு அதன்படி நடிக்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள்.
ஒரு குழந்தை பிறக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதனை ஆரா பார்க்கும் ஒருவர் வந்து பார்த்தால் அந்த குழந்தை இறக்கும் நிலையில் இருந்தால் ஆரா பார்க்கும் நபர் உடனே சொல்லுவார் குழந்தை இறந்துவிடும் என்பார். ஒருவர் இறப்பதை ஆரா பார்க்கும் ஒருவரால் மிக துல்லியமாக சொல்லிவிடமுடியும் அதே நேரத்தில் மருத்துவரால் இதனை சொல்லமுடியாது.
எல்லோருடைய மனதிலும் நான் பெரிய சாமியார் என்ற ஆணவம் இருந்தால் அப்புறம் அடுத்தவன் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். முதலில் உங்களை வளர்க்கும் விதத்தை ஆரம்பியுங்கள் அதன்பிறகு ஒரு குருவை நாடி செல்லுங்கள். அவர் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதில்லை நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவரின் ஆராவே உங்களை வளப்படுத்திவிடும்.
ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்லுவது நீங்கள் அடிக்கடி வந்து என்னை பாருங்கள் என்று சொல்லுவேன். எல்லாேரின் மனதிலும் என்ன ஓடுகின்றது என்றால் இவர்க்கு வேலை இல்லை ஏதாவது ஒன்றை சொல்லுவார் என்று இருந்துவிடுவார்கள். ஒரு சிலர் நீங்கள் வேண்டுமானால் எங்க ஊருக்கு வரும்பொழுது சொல்லுங்கள் நான் வந்து சந்திகிறேன் என்று சொல்லுவார்கள். என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பது அவசியம் கிடையாது ஆனால் உங்களின் ஆன்மீக பயணத்திற்க்கு என்னால் எதையாது செய்யமுடியும் என்றால் அது என்னை சந்திக்கும்பொழுது மட்டுமே அதிக வாய்ப்பு இருக்கும்.
என்னை விடுங்கள் உங்களின் ஆன்மீக குருவை அடிக்கடி சென்று நீங்கள் சந்தித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அடிக்கடி அவரிடம் செல்லுங்கள். உங்களின் ஆரா வளர்ச்சிக்கு அவர் பெரிதும் உதவுவார். அவர் வெளியூர் இருந்துக்கொண்டு நீங்கள் உங்களின் ஊரில் இருந்துக்கொண்டு போனில் பேசிக்கொண்டு இருந்தால் அவரால் உங்களுக்கு உதவவே முடியாது. ஆரா நன்றாக இல்லை என்றால் ஆன்மீகம் என்பது இல்லை.
ஆராவைப்பற்றி ஒரு வீடியாே பதிவு வர இருக்கின்றது அதனை தவறவிடாதீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு