Followers

Tuesday, October 31, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் அனைத்து விசயத்திலும் பலன் கொடுத்துவிட்டாலும் நன்றாக இருந்துவிடாது. அதாவது அனைத்து பலன்களையும் ஒரு கிரகம் கொடுத்துவிடகூடாது. அதில் கெடுதலும் ஒரு சில இடத்தில் அமைந்துவிடுவதும் உண்டு.

சுக்கிரன் பலம் பெறும் குடும்பத்தில் அதிகமாக பெண் குழந்தைகள் பிறக்கும். கார் வீடு மற்றும் சொகுசான வாழ்க்கை விரும்பிக்கிறோம் அதில் ஆண் வாரிசுகளுக்கு இடம் இல்லாமல் செல்வதும் பல இடத்திலும் நடக்கிறது.

பிறப்பது எந்த குழந்தைகளாக இருந்தால் என்ன என்று கேட்கலாம். பல இடத்தில் ஒரு ஆண் குழந்தை இல்லையே என்று ஏங்குவதும் நடக்கிறது அல்லவா. ஆண் குழந்தைகள் இல்லாமல் செல்வதற்க்கும் சுக்கிரன் தான் காரணமாக இருக்கும்.

ஒரு குடும்ப தலைவரின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் அல்லது அந்த வீட்டோடு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டால் அந்த குடும்பத்தில் அதிகம் பெண் குழந்தைகள் தான் இருக்கும்.

சுக்கிரன் ஐந்தில் சம்பந்தப்படுவதோடு இரண்டாவது வீட்டில் சுக்கிரன் சம்பந்தப்படும்பொழுது அதிகமாக அந்த குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 30, 2017

சுக்கிரன்+சந்திரன்


வணக்கம்!
   சுக்கிரனோடு சந்திரன் இணைந்து இருப்பவர்கள் பெரும்பாலும் பிடிவாதகுணமாக இருப்பார்கள். பிடிவாத குணம் இளமையில் இருக்கும்பொழுது அதிகமாக இருக்கும். அதன்பிறகு இந்த குணத்தை விட்டுக்கொடுத்துவிடுவார்கள்.

சுக்கிரன் சந்திரனோடு இணைந்து இருந்தால் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற ஒரு எண்ணம் எந்த நேரமும் இருந்துக்கொண்டே இருக்கும். புத்திசாலிதனமும் அதிகமாக இருக்கும்.

பொதுவாக பெண்களோடு பேசுவதற்க்கு தயங்கி தயங்கி பேசுவார்கள். கூச்சமாக இருப்பார்கள். பேச ஆரம்பித்துவிட்டால் அப்புறம் பேசி தள்ளிவிடுவார்கள். இவர்களின் பேச்சை பெண்கள் விரும்புவார்கள்.

சந்திரன் கோச்சாரத்தில் செல்லும்பொழுது சந்திராஷ்டமும் போன்ற நாட்களில் இவர்கள் பெண்களிடம் அமைதியாக நடந்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் பெண்களால் சண்டை சச்சரவு ஏற்படும்.

ஜாதகரின் தாயார் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள். ஆடம்பரமாக வாழவேண்டும் என்று நினைப்பார்கள். சனியின் வீடாக இருந்தால் மட்டும் அமைதியாக வாழ்வார்கள். காம விரும்பி என்றும் சொல்லலாம்.

தன் மனைவி வழியாக வருமானம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சுக்கிரன் சந்திரன் இணைவு உடைய ஜாதகங்களாக பார்த்து திருமணம் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காதலும் சுக்கிரனும்


வணக்கம்!
          ஒருவருக்கு காதல் தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதில் சுக்கிரனின் காரத்துவத்தால் அதிகம் நிகழ்கின்றது என்று ஒரு காரணத்தையும் நாம் சொல்லலாம்.

காதலில் வெற்றி பெற்றவர்களுக்கு சுக்கிரன் நன்றாக இருக்குமா என்று கேட்கவேண்டாம். அந்தந்த காலக்கட்டத்தில் சுக்கிரன் செல்லும் நிலையை பொறுத்து அது அமையும். சுக்கிரன் ஜாதகத்தில் ஒரு சில தீயகிரகங்களோடு இருந்தாலும் அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் ராகுவோடு சேரும்பொழுது அந்த நபர் பலரை காதல் புரியும் நிலை ஏற்படும். சுக்கிரன் சனியோடு சேரும்பொழுது அவர்க்கும் நிறைய காதலர்கள் இருப்பார்கள். அடிக்கடி காதல் தோல்வி ஏற்பட்டு அவ்வப்பொழுது புதிய காதலை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாக உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதல் என்பது இருக்கும். சுக்கிரன் கிரகத்தின் காரத்துவம் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்காமல் இருக்காது அதனால் தான் காதலும் இருக்கின்றது.

காதலில் சேரவேண்டும் என்றால் சுக்கிரன் நல்ல நிலையில் சென்றுக்கொண்டு இருக்கும் காலக்கட்டத்தில் திருமணம் ஏற்பாடு செய்தால் அந்த காதல் வெற்றியை பெற்றுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 29, 2017

நீச சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரனைப்பற்றி எழுதியதை படித்துவிட்டு நிறைய நண்பர்கள் தொடர்புக்கொண்டு எனக்கு சுக்கிரன் பிரச்சினை இருக்கின்றது என்றார். அதுவும் தற்பொழுது அதிக பிரச்சினை தருகிறது என்றார்கள். எனக்கு பரிகாரத்தை செய்துவிடுங்கள் என்று சொன்னார்கள். தற்பொழுது வேண்டாம் அனைத்தும் எழுதிய பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

தற்பொழுது பார்த்தீர்கள் என்றால் சுக்கிரன் நீசமாக இருக்கின்றது. சுக்கிரன் நீசமாக இருந்தால் பிரச்சினை அதிகமாக அந்த சமயத்தில் நிலவும். பல தம்பதினர்களுக்கு தற்பொழுது பிரச்சினை அதிகமாக சென்று இருக்கின்றது. 

புரிந்தவர்களிடம் தற்சமயம் எதுவும் செய்யவேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன் மனையியாக இருக்கும் நபர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் இருவருக்குள்ளும் பிரச்சினையை கிளப்பிவிட்டு உங்களை சண்டை போடவைத்துவிடும்.

எப்பொழுது எல்லாம் நீசமாக சுக்கிரன் இருக்கின்றதோ அப்பொழுது எல்லாம் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும். அந்த காலக்கட்டத்தில் மக்களிடம் பணம் தட்டுபாடு பெரியளவில் ஏற்படும்.

சுக்கிரன் காரத்துவம் உடைய அனைத்து விசயத்திலும் சுக்கிரன் நீசமாக இருக்கும் சமயத்தில் நாம் பார்த்த நடந்துக்கொள்ளவேண்டும். உஷாராக இல்லை என்றால் நாம் அதில் சிக்கிவிடுவோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 28, 2017

சாபம் விடும் சோதிடர்கள்


வணக்கம்!
          அடிக்கடி நமது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஊரில் உள்ள அனைத்து சோதிடர்களிடமும் காண்பித்துக்கொண்டே இருக்ககூடாது. ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் பல சோதிடர்கள் அவர்களின் வாயில் இருந்து நல்லதை சொல்லுவதே இல்லை. முடிந்தவரை எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

சோதிடர்கள் தன்னுடைய வாக்கு பலிதம் ஆகவேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் எதிர்மறையாக சொல்லி அது உங்களுக்கு நடக்க ஆரம்பித்துவிடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுகிறேன்.

என்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்களுக்கு கூட மிக பெரிய கஷ்டம் வருவதை அறிந்தால் கூட அவர்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி சொல்லி அவர்களுக்கு புரியும்படியும் அது நடக்ககூடாதபடியும் சொல்லிவிடுவது உண்டு. இதனை அனைவரும் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.

என்னிடம் மட்டுமே சோதிடம் பார்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லவில்லை. உண்மையான ஒரு கருத்து இது தான். சோதிடர்கள் முடிந்தவரை உங்களிடம் எதிர்மறையாக சொல்லி அது நடக்க ஆரம்பித்துவிட்டால் அப்பொழுது சிக்கலில் மாட்டுவது நீங்களாவே இருக்கும்.

சாபத்தை சோதிடர்களும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். சோதிடர்களின் வாயில் சாபம் வாங்க கூடாது என்பதால் இதனை தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன். முடிந்தவரை ஆன்மீகத்தில் இருப்பவர்களிடமும் சோதிடர்களிடமும் சாபத்தை வாங்கிக்கொள்ளகூடாது. புரிந்து நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஸ்ரீரங்கமும் சுக்கிர ஸ்தலம் என்கிறார்களே?

பெருமாள் கோவிலில் நவக்கிரகங்களே இருக்காது. இதில் இந்த கோவில் மட்டும் சுக்கிரஸ்தலம் என்பது ஏற்கமுடியாத ஒன்று தான். பொதுவாக கூட்டம் வராத கோவிலில் கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள்.

நெல்லை பகுதியில் கூட ஒரு சில பெருமாள் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். அதில் ஒவ்வொரு காேவிலுக்கும் ஒவ்வொரு கிரகத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

கிரகங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் என்பது சிவனுக்கு தான் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பெருமாளுக்கு இதனை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். நம்ம ஆளுங்க கூட்டம் கூடாத இடங்களுக்கு கிரகங்களை வைத்து கூட்டத்தை இழுக்க செய்கின்றனர்.

ஸ்ரீரங்கத்திற்க்கு கூட்டம் வந்தாலும் இதனை ஏன் அங்கு வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. கண்டிப்பாக இது தேவையில்லாத ஒரு வேலை என்றே சொல்லலாம். சுக்கிரனுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றே தோன்றுகிறது.

நகைகள் அதிகமாக சாமிக்கு போடும் இடமாக இருந்தால் ஒரளவு சுக்கிரன் கிரகம் வேலை செய்யும் என்பதால் ஒரு சில பெருமாள் கோவிலை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 27, 2017

கஞ்சனூர் சுக்கிரன்

ணக்கம்!
          நவக்கிரக ஸ்தலங்கள் என்று சொல்லக்கூடிய ஸ்தலங்களுக்கு சென்று வந்து இருக்கிறேன். இதில் பல கோவில்கள் ஒரு செட்டிங் போல தான் எனக்கு தோன்றுகிறது. அந்த வகையில் கஞ்சனூர் சுக்கிரன் வழிபாட்டு தலம் என்பதும் செட்டிங் போல தான் எனக்கு தோன்றியது.

இதனை எல்லாம் வெளியில் யாரும் சொல்லமாட்டார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் இதனை சொல்லமாட்டார்கள். நான் சொல்லுகிறேன். அந்த கோவில் அதற்குரிய கோவிலாக எனக்கு தெரியவில்லை.

கஞ்சனூருக்கும் சுக்கிரனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். அதனால் வேண்டுமானால் அந்த கோவிலுக்கு சென்று வரலாம். அதனை நான் ஒரு முறை தான் சென்று வந்து இருக்கிறேன். நமது நண்பர்கள் எல்லாம் கேட்கும்பொழுது ஒரு முறை சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன்.

சுக்கிரனுக்கு நிறைய கோவில்கள் சொல்லுகின்றனர். அதனையும் நான் பார்த்து இருக்கிறேன். எனக்கு அந்தளவுக்கு பிடிபடவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா என்றும் தெரியவில்லை.

என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் என்றால் ஒரு முறை மட்டும் இந்த காேவிலுக்கு சென்று வரலாம். மற்றபடி அந்த காரத்துவத்தில் உள்ள விசயங்களை மட்டும் செய்தால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 26, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரனின் பலன் நன்றாக இல்லை என்றால் அம்மனின் அருள் கிடைக்காது. ஒரு அம்மனின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் பலன் ஒரளவு கிடைக்க வேண்டும்.

எந்த காலக்கட்டத்திலும் ஒரு அம்மனை வணங்குபவர்கள் அதிக பிரபலமாக இருப்பார்கள். அவர்களுக்கு சுக்கிரன் நல்ல பலனை கொடுக்கும். சுக்கிரன் பலன் இல்லை என்றால் அம்மன் அருள் கிடைப்பது கூட சந்தேகமே.

எங்களை போல இருப்பவர்களுக்கு குருவிட சுக்கிரன் நன்றாக வேலை செய்யவேண்டும். அப்பொழுது மட்டுமே எங்களின் தொழிலில் கொடிக்கட்டி பறக்கமுடியும். குருவின் வீடாக உள்ள தனுசு மற்றும் மீனராசினர்களுக்கு கூட சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே நன்றாக வரமுடியும்.

குரு கிரகம் வழிகாட்டும் குருவை காட்டக்கூடிய கிரகம். குரு மட்டும் நன்றாக இருந்தால் வேலை நடைபெற்றுவிடாது அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்கும்பொழுது அவர்களுக்கு அனைத்து காரியமும் வெற்றி அடையும்.

தனுசு ராசி மற்றும் மீனராசிக்கு குருவின் பங்குவோடு சுக்கிரனின் பங்கும் அதிகம் தேவைப்படும். அவர்களுக்கு சுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் பிரச்சினையை தான் கொடுக்கும் அதனை நல்ல முறையில் கொடுக்க வைக்க ஒரு சில பரிகாரத்தை செய்தால் மட்டுமே நடக்கும்.

எல்லா ராசியினருக்கும் சுக்கிரன் பங்கு அதிகம் தேவைப்படும். உங்களின் ஜாதகத்தை எடுத்து சுக்கிரன் எப்படி அமர்ந்து இருக்கின்றது. சுக்கிரன் காரத்துவம் உள்ள விசயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றதா என்பதை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். சுக்கிரன் பற்றி பல கருத்துக்கள் வரபோகின்றது அதனை வைத்து மேம்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆசி


வணக்கம்!
          தென் இந்தியாவை விட வடஇந்தியாவில் சாபம் போன்றவை கொஞ்சம் குறைவதற்க்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அதனை அவர்கள் செய்து அந்த சாபத்தை போக்கிக்கொண்டு குரு மற்றும் சுக்கிரனின் அருளை பெற்றுவிடுகின்றனர்.

வடஇந்தியர்கள் பெரும்பாலும் தன்னை விட வயதானவர்களிடம் மற்றும் ஆன்மீகவாதிகளிடமும் காலில் விழுந்து ஆசிவாங்கிவிடுகின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல ஆசியை கொடுக்கும்.

நம்ம ஆளுங்க அரசியல்வாதிகளிடம் காலில் விழுந்து ஆசி வாங்கின்றனர் இது புண்ணியம் கிடைக்காது. பெரும்பாலும் வடஇந்தியர்கள் அவர்களின் பெற்றோர்களின் காலில் விழுந்து நன்றாக ஆசிவாங்கிவிடுகின்றனர் நம்ம ஆளுங்க இதனை செய்வதில்லை.

நான் வயதானவர்களிடம் காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறேன்.  நம்ம ஜாதககதம்பத்தில் இருந்து வரும் பெரியவர்களிடம் கூட வாங்கியிருக்கிறேன். ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு தான் இதனை செய்வதில்லை. ஆன்மீகவாதிகளிடம் மட்டும் ஆசி வாங்கவேண்டும் ஒரு விதி எங்களுக்கு இருப்பதால் இதனை செய்வதில்லை.

உங்களின் நிலையில் இருக்கும்பொழுது தாராளமாக ஆசி வாங்கலாம். இந்த ஆசி உங்களுக்கு பல நல்ல விசயங்களை மறைமுகமாக செய்யும். எப்படி செய்யும் என்பதைவிட நீங்கள் செய்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 25, 2017

வெள்ளிக்கிழமை பூஜை


வணக்கம்!
          வெள்ளிக்கிழமையில் தொழில் நடக்கும் இடத்தில் ஆயுதபூஜைக்கு செய்வது போல நன்றாக பூஜை செய்து அவல் பொரிகடலை மற்றும் இனிப்பு வகைகளை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் அவர்களின் தொழில் எந்த காலத்திலும் வீழ்ச்சியை நோக்கி செல்லாது.

பல இடங்களில் இந்த பூஜை செய்யும் முறையை தவிர்த்துவிட்டதாக கேள்விப்பட்டு இருக்கிறேன் மற்றும் நேரிடையாகவும் பார்த்து இருக்கிறேன். பூஜைக்கு செலவு செய்யமுடியாத நிலையில் இதனை தவிர்த்து இருக்கின்றனர் என்று சொன்னார்கள்.

இந்த பூஜைக்கு நீங்கள் கணக்கு பார்க்கவேண்டியதில்லை. இது பல மடங்கு உங்களுக்கு வருமானத்தை கொடுக்ககூடிய ஒரு பூஜை தான். இதனை ஒரு செலவாகவே நீங்கள் பார்க்காதீர்கள். வருமானத்திற்க்காக செய்யும் செலவாகவே கருதுங்கள்.

சிறிய கடைகளில் அவர்களுக்கு முடிந்தளவுக்கு இதனை செய்கின்றனர். பெரிய கடைகள் மற்றும் தொழில்கூடங்களில் மட்டும் இதனை ஒரு தேங்காய் உடைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

சுக்கிரனின் ஆற்றலை கொடுத்து உங்களுக்கு பணத்தை வாரி வழங்ககூடிய ஒரு பூஜை தான் வெள்ளிக்கிழமை இரவு நீங்கள் செய்யும் இந்த பூஜை. வீட்டில் உள்ளவர்கள் கூட வெள்ளிக்கிழமை காலையில் இந்த பூஜையை செய்யலாம். காலையில் செய்யமுடியவில்லை என்றால் மாலையில் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நாகரீக வளர்ச்சியில் சுக்கிரனின் பங்கு

ணக்கம்!
          நாகரீக வளர்ச்சி என்றாலே அது மனிதன் உடுத்தும் உடைகளில் தான் ஆரம்பிக்கிறது. ஒரு நாகரீகம் வளர்ச்சி அடைவதற்க்கு முக்கிய பங்கு வகிப்பது சுக்கிரனின் காரத்துவத்தில் தான் இருக்கின்றது.

நாகரீக வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தாலும் ஒரு மனிதனின் உடைகளில் மாற்றத்தை தான்  சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்வார்கள். ஒரு ஊரில் ஒருவர் வசதி வாய்ப்பு வந்தால் அவர் முதலில் தன்னை வெளிப்படுத்த உடைகளை தான் மாற்றுவார்.

புதிய ஆடைகளை அந்தந்த காலக்கட்டத்திற்க்கு தகுந்தமாதிரி அவர்கள் உடுத்தி தன்னை வெளிக்காட்டுவார்கள். தற்பொழுது அனைவரும் உடுத்துகின்றனர் என்று நினைக்கவேண்டாம். உடைகளின் விலையில் இருக்கலாம்.

பணக்காரர்கள் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள வாகனத்திலும் காட்டிக்கொள்வார்கள் அல்லவா. ஆடம்பரமான கார்களை வாங்குவார்கள். கார்களும் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும். இதிலும் சுக்கிரனின் பங்கு இருக்கின்றது.

நாகரீக வளர்ச்சி என்பது சுக்கிரனின் காரத்துவத்தில் அதிகம் இருக்கின்றது. அது தனிமனிதனின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வளர்ச்சி அடையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 24, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
         
இந்த மந்திர ஒலி நாடாவை வீட்டில் சாதரணமாக பூஜை செய்யும் போது ஒலிக்கவிடலாமா?

தினமும் பூஜையறையில் இதனை ஒலிக்கவிடலாம். மந்திரங்கள் ஒலிகள் உள்ள பாடல்கள் அனைத்தும் வீட்டில் ஒலிக்கவிடலாம். எந்த தவறும் கிடையாது. மந்திரங்கள் ஒலிக்கவிட்டு அந்த நேரத்தில் அதனை அமைதியாக உள்வாங்கிக்கொண்டு இருக்கவேண்டும்.

மந்திரங்கள் சொல்லும்பொழுது அமைதியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும். வீட்டில் மந்திரங்களை ஒலிக்கவிட்டுவிட்டு வேறு வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்ககூடாது. 

மந்திரங்கள் ஒலிக்கும்பொழுது நமது வீட்டில் சண்டை சச்சரவு எதுவும் இருக்ககூடாது. எது வீட்டில் நிலவுகிறதோ அது மறுமுறை உங்களை தேடி வரும்.


நமது நண்பர்கள் என் மீது உள்ள அன்பில் அவர்களின் வீட்டில் நடக்கும் விஷேசங்களுக்கு பத்திரிக்கை அழைப்பிதழை அனுப்புவார்கள். அதனை நான் பூஜையறையில் வைத்து பூஜை செய்யும்பொழுது வேண்டிக்கொள்வேன்.

பல நண்பர்கள் வரமாட்டீர்கள் என்று கேட்பார்கள். ஒரு சில காலக்கட்டத்தில் சென்று வந்து இருக்கிறேன். தற்பொழுது வேலை சுமை அதிகமாக இருக்கின்றது. அதனை மட்டும் தான் பார்க்கமுடிகிறது. நான் வரவில்லை என்று கோபம் கொள்ளவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரம் முழுவதும் முடியும் நிலையில் இருக்கின்றது. இதுவரை ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு பரிகாரம் சம்பந்தமாக தகவலும் வரவில்லை என்றால் உடனே என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 22, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரனோடு சேரும் கிரகங்களுக்கு தகுந்தமாதிரி அவர்களுக்கு துணை அமையும் என்பார்கள். சுக்கிரன் தனியாக அமர்ந்தால் அது அழகாகவும் அதோடு சேரும் கிரகங்களுக்கு தகுந்தமாதிரி துணையின் நிறம் மற்றும் அழகு இருக்கும்.

சுக்கிரனோடு சனி சேர்ந்தால் அதிகபட்சம் பெண் கருப்பாக அமையும் என்பார்கள். அதாவது நிறம் மற்றும் அழகு என்று மட்டும் இல்லாமல் அவர்கள் யாரோடு உறவாக இருப்பார்கள் என்பதையும் சுக்கிரனின் நிலையை வைத்து அறிந்துக்கொள்ளமுடியும்.

சுக்கிரன் சனியோடு சேர்ந்தால் அவரை விட தாழ்ந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். நான் சாதியை சொல்லவில்லை அவர்களின் வசதி வாய்ப்பையும் எடுத்துக்கொள்ளலாம். சுக்கிரன் புதனோடு சேர்ந்தால் அவர்களின் மாமன் வகையில் அமையலாம் என்று சொல்லலாம்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு மாமன் இல்லை என்றால் வரும் வரன் கணக்குக்களை ஆய்வு செய்யும் துறையில் இருக்கின்றார் என்று சொல்லலாம். சுக்கிரன் செவ்வாய் கிரகத்தோடு இருந்தால் அண்ணன் திருமணம் செய்த வகையில் வருவார் என்று சொல்லலாம்.

சுக்கிரன் சூரியனோடு சம்பந்தப்பட்டால் அவர்களின் அத்தை வழியில் திருமணம் செய்வார்கள் என்று சொல்லலாம். சுக்கிரனோடு சேரும் கிரகத்தினை வைத்து திருமணத்தைப்பற்றி முடிவு எடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 21, 2017

நோய் தீர்க்கும் மந்திரம்

ணக்கம்!
          மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் இதனைப்பற்றி பழைய பதிவுகளில் சொல்லிருக்கிறேன். கடந்த காலத்தில் எல்லாம் யாராவது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து இருந்தால் அவர்கள் என்னிடம் போன் செய்து அவர்களுக்காக அம்மனிடம் வேண்டுங்கள் என்று சொல்லுவார்கள். நானும் அவர்களுக்காக பிராத்தனை வைப்பேன். 

இதில் நிறைய வெற்றியை பெற்று இருக்கிறேன் ஆனால் இதனை நிறுத்தியதற்க்கு காரணம் நண்பர்களின் செயல்பாடு சரியில்லை என்பதால் இதனை நிறுத்திவிட்டேன். இதனை நிறுத்தினாலும் பலர் பலமுறை என்னை தொடர்புக்கொண்டே இருப்பார்கள். நீங்களே இறைவனிடம் பிராத்தனை வைத்துக்கொள்ளலாம்.

ஒருவர் நோய்வாய்படுகின்றார் என்றால் அது மிகவும் கஷ்டமான ஒரு விசயம். கர்மவினைப்படி அல்லது ஏதாவது பிரச்சினைப்படி நோய் வந்தாலும் அவர்களின் கஷ்டம் வெளியில் சொல்லமுடியாதபடி இருக்கும். 

ஒருவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவரின் பக்கத்தில் ஒரு செல்போன் வைத்து அதில் ம்ருத்யுஞ்ஜய மந்திர ஒலியை ஒடவிட்டால் இறைவனின் கருணையால் அவர்கள் மீண்டும் நன்றாக வருவார்கள்.

மந்திரத்தைப்பற்றி நாம் சொல்லதேவையில்லை. அது உங்களுக்கே அதன் விளக்கம் எல்லாம் தெரியும். இதனை செய்யவேண்டியது மட்டும் தான் உங்களின் கடமை. ஆறாவது வீட்டின் தசா நடந்தாலும் உங்களுக்கு நோய் வரும். அப்பொழுது தினசரி பூஜையில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எதனையும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்கும். அதனால் நீங்கள் தொடர்ச்சியாக இதனை செய்யுங்கள் என்பதை மட்டும் சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 20, 2017

வெள்ளிக்கிழமையும் சுக்கிரனும்


வணக்கம்!
          நமது நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நாம் லீவு விடவேண்டிய நாள் வெள்ளிக்கிழமை. இதனை யார் கேட்பார்கள் யாரும் கேட்கமாட்டார்கள்.

அரசாங்கத்தை விட்டுவிடலாம் நாம் என்ன செய்யலாம் என்றால் வெள்ளிக்கிழமை அன்று நாம் ஒய்வு எடுக்கலாம். நாம் வேலைக்கு சென்றாகவே வேண்டுமே என்று கேட்கலாம். வேலைக்கு சென்றால் கூட பெரியளவில் அலுத்துக்கொள்ளாமல் சும்மா இருக்கலாம். 

வெள்ளிக்கிழமை நகைகளை அணிந்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை வேஷ்டி அணிந்துக்கொள்ளலாம். நறுமணம் கமழும் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். பெண்களாக இருந்தால் நிறைய பூக்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை துணிக்கடைகள் மால்கள் மற்றும் அம்மன் கோவில் சென்றால் போதும்.

தொழில் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை பெரியளவில் ஒன்றும் வியாபாரம் நடந்துவிடாது. வியாபாரத்தில் தொழிலாளிகளை வைத்துவிட்டு நீங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் நல்ல உயர்ந்த உணவுவிடுதிகள் சென்று உணவருந்திவிட்டு வரலாம். வீட்டில் கூட நல்ல உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். இது எல்லாம் சுக்கிரனுக்கு நீங்களே செய்யக்கூடிய பரிகாரங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன் பரிகாரம்


வணக்கம்!
          சுக்கிரனுக்கு பரிகாரம் என்ன என்பதை நம் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு பதிவு முடிந்ததும் அதற்கான பரிகாரத்தையும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வாருங்கள்.

சுக்கிரனுக்கு என்று பொதுபரிகாரத்தை எல்லாம் கொடுக்க போவதில்லை. சுக்கிரன் என்றாலே அது பணம் கொடுத்து செய்யவேண்டிய பரிகாரம் போல தான் இருக்கும். 

சுக்கிரன் என்றாலே அது அம்மன் சம்பந்தப்பட்ட விசயமாக தான் அதிகபட்சமாக இருக்கும். நல்ல அம்மன் உபசகராக இருந்தால் அதிகப்பட்சம் சுக்கிரனின் ஆற்றலை எடுத்து ஒரளவு பிரச்சினை இல்லாமல் வாழலாம்.

சுக்கிரன் உங்களின் ஜாதகத்தில் அதிகபிரச்சினையை கொடுக்கிறது என்றால் அதற்கு என்று வரும்நாட்களில் ஒரு பெரிய பரிகாரத்தை சொல்லபோகிறேன் அதனை நீங்கள் செய்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் தசா நடப்பவர்களுக்கு என்று வருடத்திற்க்கு ஒரு முறை செய்யக்கூடிய பரிகாரமும் நடைமுறையில் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதனை நீங்கள் செய்துக்கொண்டு சுக்கிரதசா பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பணம் இல்லாதவர்கள் அம்மனை நன்றாக வணங்கி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 19, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          வெள்ளம் வருவதற்க்கு முன்பே அணை போடுவது தானே சிறப்பு. வெள்ளம் வந்தபிறகு அணை போடுவது சரியாக இருக்காது. அதற்க்குள் சிக்கி நாம் சீரழிந்து விடுவோம். ஏழில் நிற்க்கும் சுக்கிரனும் ஒருவருக்கு திருமண வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கிவிடுவார்.

ஏழில் சுக்கிரன் தனித்து நிற்க்கும்பொழுது அவருக்கு திருமண வாழ்க்கை சரியாக இருக்காது என்பது என்னுடைய அனுபவத்தில் நான் நிறைய பார்த்த ஜாதகத்தின் வழியாக தெரிந்துக்கொண்டது. இருவரும் நாங்கள் வாழவிரும்பவில்லை என்று சொல்லுவார்கள்.

பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சுக்கிரன் இருந்தால் அவர்கள் திருமணம் செய்தால் திருமணம் நடந்த நாளிலில் இருந்தே கணவன் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதிகமான பிரச்சினையை கொடுப்பார். உன்னை எனக்கு பிடிக்கவில்லை நீ வேறு திருமணம் செய்துக்கொள் என்பார்.

ஏழில் சுக்கிரன் தனித்து நின்றால் தான் பிரச்சினை. சுக்கிரன் மற்ற ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால் அது பிரச்சினையை கொடுக்காது. வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் செல்லும். அதே சுக்கிரன் குருவோடு ஏழில் சேர்ந்து இருந்தால் அவர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள் ஆனால் பிரியமாட்டார்கள்.

சுக்கிரன் ஏழில் தனித்து நின்று அது ஆட்சியோ உச்சமோ பெற்றால் அந்தளவுக்கு பிரச்சினை கொடுப்பதில்லை. இதனை பார்த்து பயம்கொள்ளதேவையில்லை. சாதாரணமாக வாழ்க்கை செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன் பரிகாரம்


ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது அழகு தான். ஒவ்வொரு கடவுளையும் நாம் இராஜ அலங்காரத்தில் தரிசிப்பது சுக்கிரனின் காரத்துவத்தை நாம் பெறுவதற்க்கு வழி. எப்படிப்பட்ட அலங்காரம் இருந்தாலும் இராஜ அலங்காரம் என்பது பெரிய தரிசனமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு தரிசனம் சுக்கிரனின் காரத்துவத்தை கொடுக்கிறது.

சுக்கிரனின் காரத்துவத்தை கொடுப்பது கையில் மருதாணி இட்டுக்கொள்ளும் பழக்கம். சுக்கிரனின் காரத்துவம் பெரியளவில் கொடுப்பது இந்த பழக்கம். தன்னை அழகுப்படுத்துவதில் மட்டும் இல்லாமல் மருதாணி உடலில் குளிர்ச்சியையும் கொடுத்துவிடும்.

மருதாணி என்றாலே அது பெண்கள் மட்டும் தான் வைத்துக்கொள்ளும் என்று ஒரு பழக்கம் இருக்கின்றது. சுக்கிரனின் காரத்துவத்தை பெறவேண்டும் என்றால் அது ஆண்களாக இருந்தால் கூட வைத்துக்கொள்ளலாம்.

மருதாணியை ஆண்கள் வைத்துக்கொண்டால் வெளியில் உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நினைத்து வைக்காமல் இருந்தால் உள்ளங்கையில் மட்டுமாவது வைத்துக்கொள்ளலாம். நாம் வாழுவதற்க்கு பிறர் கிண்டல் செய்வார்கள் என்று நினைக்கவேண்டியதில்லை.

மருதாணியை நான் எனது கையில் வைத்திருக்கிறேன். எனக்கு சுக்கிரனின் ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இப்படி செய்வது உண்டு. அடுத்தவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எல்லாம் நான் நினைப்பதில்லை. நமக்கு தேவையானதை நான் செய்துக்கொள்வது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 18, 2017

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
          இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 17, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!

KJ said...
Sir, Vaazhkayil munneriya palarum , Aaramba kaalathil yethavathu oru Velai seithirupar. Grahathin matrathaal, Veru Thuraiku Maruvar. Athan Piragu avar Periya Alavil vanthu vidukirargal. Example, "Rajnikanth, Conductor to Super Star", "OPS Tea Shop - CM", "MGR Actor - CM", Ithai patri thangal Karuthu?

தங்களின் கருத்துக்கு நன்றி. ஒரு மூன்று பேரை மட்டும் பார்த்து நாம் ஏமாந்து போய்விடுகிறோம். பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மூன்று கோடி பேர்கள் இருப்பார்கள். அவர்களை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. 

ஒரு துறையில் நாம் பணியாற்றி நாம் அந்த துறையில் எதுவும் சம்பாதிக்கவில்லை வேறு எதுவும் பெறவில்லை என்றால் அதனை நாம் மாற்றிவிடலாம் ஆனால் ஒரு துறையில் வெற்றி பெற்று அதில்  சம்பாதித்துவிட்டு அதனை விட்டுவிட்டு சென்றுவிடகூடாது என்பதை தான் சொல்லுகிறேன்.

எனக்கு தெரிந்த பலர் ஒரு துறையில் நல்ல சம்பாதித்துவிட்டு அது போராடிக்கு என்று அந்த துறையை விட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். அது தவறு என்று சொல்லுகிறேன்.

ஒரே துறையில் நீங்கள் மேலே செல்லவேண்டும் என்றால் அந்த துறையில் நீங்கள் மாற்றத்தை செய்துக்கொள்ளலாம். துறைமாறாமல் உங்களின் பதவி மற்றும் வேலையை தான் மாற்றிக்கொள்கிறீர்கள். தவறு இல்லை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம்!
         பரிகாரம் இரண்டு நாட்கள் சென்ற பிறகு செய்யப்படும். தீபாவளி பண்டிகை சென்ற பிறகு செய்துவிடுகிறேன். பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களுக்கு தான் இந்த பதிவு. அனைவருக்கும் இது பொருந்தும்.

உலகமகா கர்மத்தை எல்லாம் ஒருவன் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது உங்களை தான் சொல்லமுடியும். அதனை நான் உணர்ந்து இதனை எழுதுகிறேன். இவ்வளவு கர்மத்தை வைத்துக்கொண்டு ஒருவன் முன்னேற்றம் அடையலாம் என்றால் அது கண்டிப்பாக சாத்தியப்படக்கூடியது கிடையாது என்றே சொல்லலாம்.

முதலில் உங்களை சரி செய்துக்கொள்ளவேண்டும் அதன் பிறகு நீங்கள் முன்னேற்றத்தைப்பற்றி யோசித்தால் நன்றாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் முடிந்தால் நீராடிவிட்டு வாருங்கள். கடன் வாங்கியாவது இதனை முதலில் செய்துவிடுங்கள்.

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் வைத்து நன்றாக குளியுங்கள். உடலும் ஆத்மாவிலும் நிறைய பாவங்களை இது போக்கும் என்பது சூட்சம தந்திரம் இது. இதனை தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள்.

முடிந்தளவுக்கு எங்கு எல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பெற்றோர்களால் தவிக்கவிட்டவர் மூத்தவர்கள் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவிகளை காணும்பொழுது செய்துக்கொண்டே வாருங்கள்.

ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று வாருங்கள். சிவன் கோவிலுக்கு சென்று கொடி மரத்துக்கு முன்பு முற்பிறவியிலும் இப்பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை போக்கி விமோசனத்தை எனக்கு அளிக்கவேண்டும் என்று வேண்டி வாருங்கள்.

வயது முதியவர்களாக இருந்தால் அவர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்குங்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாக இருந்தால் நல்லது. இது உங்களின் ஆத்மாவிற்க்கு நல்ல விமோசனத்தை அளிக்ககூடியது.

என்னிடம் பரிகாரம் செய்வதில் மட்டும் கர்மா அனைத்தும் தொலைந்துவிடாது. நீங்களே இதனை எல்லாம் செய்தால் உங்களின் கர்மா அனைத்தும் தொலைந்து ஒரு சூப்பரான வாழ்க்கை அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, October 16, 2017

தொழில் மற்றும் வேலை மாற்றம்


வணக்கம்!
          ஒரு துறையை விட்டு நீங்கள் அடுத்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது எந்தளவுக்கு சாத்தியபடும் என்பது சொல்லிவிடமுடியாது. அதனால் ஒரு துறையை தேர்ந்தெடுக்கும்பொழுது அதனைப்பற்றி நன்கு யோசித்துவிட்டு செய்வது நல்லது.

இன்று வரை ஒரு துறையை சம்பந்தப்பட்ட வேலையில் நீங்கள் இருந்தால் அதனை விட்டு வேறு ஒரு துறைக்கு நீங்கள் மாறினால் அதில் யோசித்து செயல்படவேண்டும். இதுவரை நீங்கள் அந்த துறையில் நிறைய காலத்தையும் நிறைய உழைப்பையும் போட்டு இருப்பீர்கள். அதனை விட்டு செல்லும்பொழுது அது வீணாக சென்றுவிடகூடாது.

தொழில் செய்பவர்களும் இப்படி தான் சிந்திக்க வேண்டும். ஒரு துறையை விட்டுவிட்டு அடுத்த துறைக்கு சென்றால் அடுத்த துறைக்கு செல்லும்பொழுது இருந்த துறையில் வேலை பார்த்த அனைத்தும் வீணாக சென்றுவிடகூடாது. அதனை எந்தளவுக்கு மாற்றினால் நல்லது என்பதை யாேசித்துவிட்டு அதன் பிறகு மாறுங்கள்.

சோதிடபடி தசா மாறினாலும் ஏற்கனவே இருந்த தொழிலுக்கு தகுந்தமாதிரி தான் செயல்படவேண்டும். அதனை விட்டுவிட்டு தொழிலை மாற்றினால் நிறைய சிக்கல் மற்றும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

ஒரு வேலைக்கு செல்வதாக இருந்தாலும் இதனை கருத்தில் கொண்டு  செயல்படுங்கள். ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது பெரிய பாக்கியம். அந்த அமைப்பை கலைத்தால் அதுபோல மறுமுறை உருவாக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, October 15, 2017

சாபம்


வணக்கம்!
          சாபம் வாங்கிய ஜாதகத்தை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு கேட்டறிந்தனர். இவ்வளவு பேர்கள் இதில் இருக்கின்றனர் என்பது வியப்பாகவே இருக்கின்றது. அவர்களின் ஜாதகத்தை பார்த்தாலும் அது தான் தெரிய வருகின்றது.

முதலில் ஒன்றைச்சொல்லவேண்டும். முதலில் இந்த தோஷத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதே பெரிய தெய்வீக செயல் தான் என்று சொல்லவேண்டும். குருவும் சுக்கிரனும் கெட்டால் ஒருவர் சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ளவே உங்களால் முடியாது.

முக்கியமாக உங்களை விட வயது முதியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையும் உங்களின் மூளை ஏற்றுக்கொள்ளாது. குருவும் சுக்கிரனும் கெட்டால் முதல் அடிப்படை அவர்கள் யார் பேச்சையும் கேட்கமாட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு பெண்ணின் தகப்பனார் என்னை சந்திக்க தஞ்சாவூர் வந்திருந்தார். அவர் பெண்ணை திருமணம் செய்துக்கொடுத்து இருக்கிறார். அந்த பெண் அவரின் கணவரோடு வாழமுடியாது எனக்கு விவாகாரத்து வாங்கிக்கொடுங்கள் என்று கேட்கிறது என்றார். நீங்கள் வந்து எனது பெண்ணிடம் கொஞ்சம் அறிவுரை கூறுங்கள் என்றார்.

நான் அறிவுரை சொல்லுவது எல்லாம் ஜாதககதம்பத்தில் மட்டும் தான் சொல்லுவேன். நேரில் வந்து எல்லாம் சொல்லமாட்டேன். அந்த பெண்ணின் ஜாதகத்தை கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன். அந்த பெண்ணின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நன்றாக பாதிக்கப்பட்டது தெரிந்தது.

முதலில் உங்களின் பெண் அவரின் கணவரின் பேச்சை கேட்காது. அது தான் பிரச்சினையாக இருக்கும். அவரின் பேச்சை கேட்க சொல்லுங்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை வராது. நன்றாக இருப்பார்கள் என்று சொன்னேன். சரி என்று சென்றார்.

அடுத்தவர்கள் ஒரு நல்ல அறிவுரையை சொன்னால் அதனை கேட்கும் பக்குவத்தில் நமது மனநிலை இருக்கவேண்டும். அதற்கு குருவும் சுக்கிரனும் நன்றாக வேலை செய்யவேண்டும் அப்பொழுது தான் கேட்கமுடியும்.

சாபம் வாங்கியவர்களின் ஒரு பகுதியினர் பிடிவாதத்தால் தன் வாழ்க்கையை தொலைத்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றும் நடக்காது. ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட பிடிவாதம் இருக்கும். மேலும் பல கருத்துக்கள் இதனைப்பற்றி பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, October 14, 2017

பண்டிகையும் சுக்கிரனும்


ணக்கம்!
          தீபாவளி கூட சுக்கிரனின் காரத்துவத்தில் தான் அதிகம் வரும். புதிய துணி இனிப்பு வகைகள் மற்றும் சந்தோஷ மனநிலையில் இருப்பது எல்லாம் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும்.

தீபாவளி பண்டிகையை சந்தோஷத்தில் கொண்டாடினால் கூட சுக்கிரனின் காரத்துவத்தை அதிகம் பெற்று வாழ்வில் சிறக்கலாம். அதோடு புது துணிகளை வாங்கி பிறர்க்கு கொடுக்க சொல்லிருந்தேன். அனைவரும் இதனை செய்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாட்டில் சந்தோஷ மனநிலை உருவாகினால் அது சுக்கிரனின் காரத்துவத்தில் வரும். நாட்டில் சந்தோஷம் உருவாகின்ற ஒரு கிரகம் என்றால் அது சுக்கிரன் மட்டும் தான். ஏதாவது ஒரு பண்டிகையை உருவாக்கி சந்தோஷத்தை கொடுக்கிறது.

பெரும்பாலும் மக்கள் சந்தோஷ நேரத்தில் தான் கோவிலை நாடி செல்கின்றனர். சுக்கிரனின் வழிபாட்டிற்க்கும் காரத்துவத்தை தருகிறார். அனைத்து வழிபாட்டை செய்ய மக்களை தூண்டுவதும் சுக்கிரன் கிரகம்.

நீங்கள் ஒரு பண்டிகையை மகிழ்வோடு கொண்டாடினாலே அது சுக்கிரனின் காரத்துவத்தை உருவாக்கி கொள்கிறீர்கள் என்று தான்  அர்த்தம். சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சாபம் பித்ருதோஷம்


வணக்கம்!
         பித்ருதோஷம் என்பதும் சாபம் வாங்கியதும் ஒன்றா என்று நண்பர்கள் கேட்டனர். பித்ருதோஷம் என்பது வேறு சாபம் என்பது வேறு.

பித்ருதோஷம் மூன்று மற்றும் ஒன்பதாவது வீட்டை அடிப்படையாக வைத்து தான் சொல்லுவார்கள். இதில் சாபம் போல வேலை செய்யாது. பித்ருதோஷம் இருப்பவர்கள் வாழ்வில் நன்றாக முன்னேற்றம் காண்பீர்கள். 

சாபம் வாங்கிய ஜாதகம் என்பது குரு சுக்கிரனை அடிப்படையாக வைத்து சொல்லுவது. இந்த கிரகங்கள் அடிபடும்பொழுது உங்களின் வாழ்க்கை பெரிளவில் வராது. அதிக பிரச்சினைகளை கொண்ட வாழ்க்கையாக அமையும்.

பித்ருதோஷம் ராகு கேது அடிப்படையாக கொண்டது. இது கொஞ்ச காலம் பிரச்சினை தந்தாலும் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும். பெரும்பாலான ஜாதகத்தில் பித்ருதோஷம் வேலை செய்வதில்லை என்பது அனுபவத்தில் கண்டு இருக்கிறேன்.

பித்ருதோஷம் இருப்பவர்கள் திருமணம் செய்தால் அவர்களுக்கு மாமனார் உயிரோடு இருக்க மாட்டார். மாமியார் மட்டும் உயிரோடு இருப்பார். இப்படி அமைந்தால் அது பித்ருதோஷம் உள்ள ஜாதகம் என்று சொல்லலாம்.

சாபம் என்பது எந்தவித வழியும் தெரியாமல் இருப்பது. வழி கிடைக்காமால் இருக்கும் நபர்களுக்கு சாபம் வாங்கிய ஜாதகம் என்று பெயர். சூன்யவாழ்வு போல வாழ்ந்தால் அது சாபம் வாங்கியிருக்கிறது என்று பெயர். பித்ருதோஷத்தில் வாரிசுகள் இருக்கும். சாபத்தில் பெரும்பாலும் வாரிசுகள் இருக்காது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, October 13, 2017

யாககுண்டம்


வணக்கம்!
          யாககுண்டம் தற்பொழுது எல்லாம் பெரியளவில் போட்டு அதில் யாகம் வளர்க்கின்றனர். இதில் நிறைய பொருட்கள் போட்டு யாகம் செய்வதற்க்கு வசதியாக இதனை செய்தாலும் ஒரு கருத்தை மனதில் கொண்டு யாககுண்டத்தை செய்யவேண்டும்.

யாககுண்டம் பெரியளவில் போட்டுக்கொண்டு வருடம் சில ஆயிரங்களை சம்பாதிப்பவர்களாக இருந்தால் இதனை செய்ய தேவையில்லை. நம்முடைய ஆண்டு வருமானம் கோடிகளை தாண்டி செல்லும்பொழுது பெரிய யாககுண்டம் போட்டு செய்துக்கொள்ளலாம்.

யாககுண்டம் பெரிய குண்டத்தை போட்டு விட்டு சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு பெரியதை எதிர்பார்க்க கூடாது என்பது என்னுடைய கருத்து. பெரியதை போட்டு பெரியதை எதிர்பார்க்கிறேன் என்று செய்யவேண்டியதில்லை. சிறிய அளவில் செய்துகொண்டு பெரியதை பெற்றுக்கொண்டு அதன் பிறகு செய்துக்கொள்ளலாம்.

என்னிடம் கூட ஒரு சிலர் சொல்லுவார்கள். பெரிய குண்டம் போட்டு செய்துக்கொடுங்கள் என்பார்கள். அதனை செய்ய மறுத்துவிடுவேன். அது வேறு விளைவுகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதால் மறுத்துவிடுவேன்.

ஆண்டு வருமானம் கோடியை நெருங்கும்பொழுது பெரிய குண்டம் போட்டுக்கொண்டு செய்துக்கொள்ளலாம். அது வரை சிறிய குண்டம் போதுமானது. சிறியதில் செய்தால் கூட பெரிளவில் அது வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஒவ்வொருவரையும் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன். பரிகாரம் என்றாலே ஏதோ அனைவருக்கும் ஒரே நாளில் செய்து முடித்துவிட்டு அதோடு முடிவடைந்துவிட்டது என்று செல்லாமல் தனித்தனியாக செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.

அன்றைய நாளில் அவர்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு தெரிவித்துவிட்டு தான் செய்யவிருக்கிறேன். நீங்களும் பரிகாரம் ஏதோ செய்தோம் என்று இருந்துவிடாமல் உங்களுக்கு உள்ள வழிகளை எல்லாம் பரிகாரம் முடிவடைந்துவுடன் துரிதப்படுத்த வேண்டும்.

பரிகாரம் செய்வதில் இரண்டு வகையில் இருப்பார்கள். ஒன்றுமே தெளிவில்லாமல் இருக்கின்றது எதுவும் நடக்கவில்லை என்று ஒரு வகையினர் இருப்பார்கள். மற்றவர் அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டு அது நடக்கவேண்டும் என்று இருப்பார்கள்.

நீங்கள் எந்த வகையில் இருந்தாலும் சரி உங்களின் செயலை பரிகாரத்திற்க்கு பிறகு துரிதப்படுத்தவேண்டும். அப்பொழுது உங்களின் செயல் வெற்றி நோக்கி செல்லும். 

ஒரு சிலர் இருக்கின்றனர். அதாவது தன்னுடைய அறிவு விருத்தியடைந்தால் போதும் அதனை வைத்து பல காரியங்கள் செய்யலாம் என்று இருப்பார்கள். எங்களை போல இருப்பர்கள் நினைப்பது தன்னுடைய அறிவை பெருக்க பரிகாரத்தை செய்வது உண்டு.

போதிய அறிவு இல்லை என்றாலும் சரி. இருக்கின்ற அறிவை மேம்படுத்திக்கொள்ள உள்ள வழியை எங்களை தூண்டிவிட பரிகாரம் செய்வது உண்டு. வெளியில் இருந்து வரும் விசயங்கள் அனைவருக்கும் குறைவு தான். அவர் அவர்களின் உடலில் மறைந்திருக்கும் யோகத்தை வெளிக்கொணர்வது இப்படிப்பட்ட வகை.

நீங்களும் இதனை நன்றாக தெரிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் பிறகு உங்களின் உடல் யோகமாக மாறி உங்களை மாற்றும் வழியில் செயல்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
         நேற்று ஒரு நண்பரை சந்திக்க கும்பகோணம் சென்றுருந்தேன். அவர் கேட்ட கேள்வி நோய் என்பது கர்மாவின் வழியில் தான் வருகின்றதா என்று கேட்டார். 

ஒருவருக்கு நோய் வருவது என்பது உங்களின் கர்மாவின் முழுபலனினால் தான் வரும். இதனை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் தான் பெரும்பாலும் நோய்களுக்கு பரிகாரம் அவர் அவர்களே சென்று புண்ணியத்தை தேடி செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது உண்டு.

ஒருவருக்கு நோயை போக்க நாம் பரிகாரம் செய்தால் அதற்கு செலவும் அதிகமாக இருக்கும் அதனை வாடிக்கையாளர்களிடம் வாங்கமுடியாது என்பதால் இதனை தவிர்ப்பது உண்டு.

ஒரு சில நாேய்கள் மிகவும் உக்கிரமாக தாக்க ஆரம்பிக்கும். இது தான் பெரிய கஷ்டமாக இருக்கும். நீண்ட நாள்கள் உள்ள நோய்கள் எல்லாம் இப்படிப்பட்ட வகையில் வருவது. அதனை அவர்களின் பெற்றோர்கள் சென்று புண்ணியம் தேடி தான் இதனை சரிசெய்யமுடியும்.

நோய்க்கு மருத்துவமும் பார்க்கவேண்டும் பரிகாரமும் செய்யவேண்டும். அப்பொழுது தான் அது முழுமையாக ஒருவரை விட்டு விலகி செல்லும். அப்படி இல்லை என்றால் அது வேறு விதமாக வெளிப்படுத்தும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சாபம் வாங்கிய ஜாதகம்


 வணக்கம்!
         ஒருவருடைய ஜாதகத்தில் இராஜகுரு என்று சொல்லக்கூடிய குரு கிரகமும் சுக்கிர கிரகமும் அடிப்பட்டால் அவரால் அவ்வளவு எளிதில் வாழ்க்கையில் மேலே வரமுடியாது. மேலே வரமுடியாது என்று சொல்லுவது எதிலும் தோல்வி கிடைக்கும்.

ஒருவர் பிரபலமடைய வேண்டும் என்றால் குரு கிரகம் நன்றாக இருக்க வேண்டும். குரு கிரகம் சரியில்லை என்றால் அவர்க்கு சாபம் வந்து இருக்கின்றது என்று அர்த்தம். அதாவது அவர் பிராமணர்களின் சாபத்தை இந்த பிறவியிலேயே அல்லது முற்பிறவியிலேயே வாங்கியிருக்கவேண்டும்.

உங்களின் தாத்தா அல்லது அதற்கு முற்பட்டவர்கள் இந்த சாபத்தை வாங்கியிருப்பார்கள். உங்களின் குடும்பத்தில் எந்த வித வளர்ச்சியும் இருக்காது. உங்களின் குடும்பத்தில் அதிகமான பேருக்கு தொடர்ச்சியாக ஒரே நோயால் தாக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் மரணம் கூட வரும். உங்களின் வாரிசுகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையாது.

குரு இப்படி இருக்கின்றது. அடுத்தப்படியாக சுக்கிரன் கிரகமும் அடிப்பட்டு இருக்கின்றது என்றால் உங்களின் முற்பிறவியில் அல்லது உங்களின் தாத்தா யாராவது ஒரு பெண்ணிற்க்கு துரோகம் செய்திருப்பார்கள் அல்லது பெண்ணை கொலை கூட செய்திருக்கலாம்.

இரண்டு கிரகங்களும் அடிப்பட்டால் உங்களின் ஜாதகமும் கடுமையான சிக்கலில் இருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும். இதனை சோதிடர்கள் அவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். நீங்களே இதனை ஆராய்ந்தால் மட்டுமே உண்டு.

உங்களின் முன்னோர்களின் அறிவுரை தான் இதற்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏன் என்றால் அவர்கள் இதனை சொன்னால் மட்டுமே உங்களுக்கு முழுவிபரமும் தெரியவரும். உங்கள் அப்பா இதனை செய்தார் உங்களின் தாத்தா இதனை செய்தார் என்று சொல்லுவார்கள்.

சாபநிவர்த்தி என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதனால் சோதிடர்கள் இதனை தவிர்ப்பார்கள். நீங்களே இதனை ஆராய்ந்து அதன் பிறகு இதற்கு பரிகாரம் செய்யவேண்டும். உங்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதற்கு விளக்கம் கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, October 12, 2017

சுக்கிரன்


வணக்கம்!
         ஒருவருக்கு சுக்கிரதசாவே வரவில்லை அவர் சுகபோகவாழ்க்கை வாழமாட்டார்களா என்று கருத்து வந்தால் கண்டிப்பாக வாழ்வார்கள் ஆனால் அவர்களின் சுயஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவர்களுக்கு அனைத்து சுகபோகங்களும் கிடைக்கும்.

சுக்கிரன் வலுவாக இருக்கின்றது என்பதை அனுபவத்தில் எப்படி கண்டுபிடிப்பது இளம்வயதில் திருமணம் நடக்கும். இளம்வயதில் அனைத்து சுகபோகங்களும் கிடைக்கும். வறுமை என்றால் என்ன என்று கேட்க தோன்றும். இப்படி இருந்தால் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.

சுக்கிரன் என்றாலே அது உணவு வகைகளையும் குறிக்கின்ற ஒரு கிரகம். சுக்கிரன் வலுவாக இருப்பவர்கள் உணவு விடுதிகளையும் நடத்தி கொடிக்கட்டி பறப்பார்கள். சுக்கிரன் உங்களின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் உங்களுக்கு உணவு பற்றாக்குறை என்பது இருக்கவே இருக்காது.

விதவிதமாக உங்களுக்கு சாப்பிட பிடிக்கும் என்றால் அது உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் அப்படி வேலை செய்கிறது என்று அர்த்தம். சுக்கிரன் உங்களை சாப்பாட்டு பக்கம் இழுக்க வைக்கிறது. சுக்கிரன் நன்றாக இருந்து வேலை செய்கிறது. 

வித விதமாக இனிப்புகளை சுவைக்கும் நபர்களும் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கும் சுக்கிரன் வலுவாக தான் இருக்கும். இனிப்புகளை அதிகம் சுவைத்தால் நோய் வரும் என்று சொல்லுவோம் ஆனால் இவர்களுக்கு அப்படி வராது என்பது தான் சுக்கிரனின் மகிமை என்று சொல்லாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன் அஸ்தமம்


வணக்கம்!
          முக்கூட்டு கிரகங்கள் என்று சொல்லப்படும் சூரியன் புதன் சுக்கிரன் மூன்று கிரகங்களும் சேர்ந்து தான் அதிகப்பட்சம் இருக்கும். சூரியனோடு தான் புதன் சுக்கிரன் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் விலகி இருக்கும்.

சூரியனோடு சேரும் கிரகம் அஸ்தமன தோஷம் அடையும் என்பார்கள். பெரும்பாலும் புதன் அல்லது சுக்கிரன் அஸ்தமத்தில் தான் இருக்கும். அஸ்தமம் அடைந்துவிட்டால் அந்த கிரகம் வலு இழந்துவிடும் என்பார்கள்.

அஸ்தமத்திலேயே பல கருத்துக்கள் இருக்கின்றன. புதனுக்கு மட்டும் அஸ்தமம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் சுக்கிரனுக்கும் அஸ்தமம் என்று சொல்லுவார்கள். எது எப்படியே அஸ்தமம் என்ற வார்த்தை வந்துவிட்டது. 

பத்து டிகிரிக்குள் இரு கிரகங்களும் வந்தாலும் அது அஸ்தமம் வந்துவிடும் என்பார்கள். அஸ்தமம் அடைந்த கிரகங்கள் தன்னுடைய பலனை காலதாமதமாக கொடுக்கின்றது என்பது தான் உண்மையாக இருக்கின்றது.

சுக்கிரன் அஸ்தமம் அடைந்தால் அவர் கொடுக்க வேண்டிய திருமணத்தை கொஞ்சம் காலம் தாழ்த்தி கொடுப்பார் என்று கருத்தில் வைத்துக்கொள்ளலாம். சுக்கிரனால் வரும் அனைத்தும் காலம் தாழ்த்தி கொடுக்கும் என்பது அனுபவத்தில் பல ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, October 11, 2017

நீச சுக்கிரன்


வணக்கம்!
          இன்று அபிதாப்பச்சன் பிறந்த நாள் அவருக்கு சுக்கிரன் மறைந்து இருக்கின்றது. அபிதாப்பச்சனுக்கு மறைந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருந்தாலும் அது நீசமாக இருக்கின்றது. நீசமாக இருந்தாலே அது பலன் குறைந்துவிடும்.

கலைத்துறைக்கு சுக்கிரன் காரத்துவம் வகிக்கின்றது. இவருக்கு பாருங்கள் சுக்கிரன் நீசமாக சென்று இருக்கின்றது ஆனால் இவர் கலைத்துறையில் கொடிக்கட்டி பறக்கிறார். இன்று வரை நடித்துக்கொண்டே இருக்கின்றார். ஒரு வேளை இவர் துலாராசியாக இருப்பதால் நடிக்கலாம் என்று சொல்லலாம்.

தற்பொழுது இவருக்கு சுக்கிர தசா நடந்துக்கொண்டு இருக்கின்றது. இவருக்கு சுக்கிரதசா நடக்க ஆரம்பித்தது 2014 ஆம் வருடம். சுக்கிரதசாவில் ஒரு பெரிய ஆப்ரேஷன் இவர்க்கு நடந்தது. தற்பொழுது சுக்கிர தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நீசமாக இருக்கும் சுக்கிரன் எப்படி கலைத்துறையில் சாதிக்க முடியும். பலருக்கு இப்படிப்பட்ட சந்தேகம் இருக்க தான் செய்கின்றது. நீசமாக இருக்கும் கிரகங்களில் அந்தந்த தொழிலில் அதிகம் சாதித்தவர்களும் இருக்க தான் செய்கின்றனர்.

பெரியளவில் பின்புலத்தில் ஆன்மீகவாதிகள் இருப்பார்கள் என்று சொன்னாலும் அவர் அவர்களுக்கு என்று சுயபுத்தியை வைத்து தான் மேலே வருவார்கள். முழுவதுமாக இவரின் ஜாதகத்தை ஆராயவில்லை நீசமாக இருக்கும் சுக்கிரனை பற்றி சொல்லவேண்டும் என்பதற்காக சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம்!
          ஆறாவது வீடு பரிகாரம் ஆரம்பித்தவுடன் பல தடங்கல் எனக்கே ஏற்பட்டது என்று சொல்லவேண்டும் அதனை எல்லாம் மீறி தற்பொழுது ஒவ்வொருவரையும் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டு வருகிறேன்.

ஆறாவது வீடு ஒரு பகுதியாக நோய் சம்பந்தப்படுவதால் அதனை சரியாக செய்யவேண்டும். நோய் சம்பந்தப்பட்டதற்க்கு என்று நாட்கள் எடுக்கும் என்பதால் இதனை செய்வதும் ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து எடுத்து வைத்து வருகிறேன்.

ஆறாவது வீடு சம்பந்தப்பட்ட ஒன்று குடிப்பழக்கம். இதனை ஒரு நண்பர் எனக்கு தெரியபடுத்தியவுடன் தான் எனக்கே ஞாபகம் வந்தது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் அது குறைய வேண்டும் என்றும் செய்யவேண்டும்.

வரும் சனிக்கிழமைக்குள் அனைவரையும் தொடர்புக்கொண்டுவிடுவேன். சனிக்கிழமைக்குள் உங்களை தொடர்புக்கொள்ளவில்லை என்றால் ஜாதகம் அனுப்பியவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமணவாழ்க்கையும் சுக்கிரனும்

ணக்கம்!
          பொதுவாக சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசியை திருமணம் செய்யும் நபர்கள் உயர்ந்துவிடுவார்கள். வாழ்க்கையில் அவர்கள் திருமண பேச்சு தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களின் உயர்வு சிறந்து விளங்கும்.

சனியின் வீடான மகரத்தை ராசியாக உடையவர்கள் மற்றும் கும்பராசியை உடையவர்கள் சுக்கிரனின் ராசியை உடையவர்களை திருமணம் செய்தால் நல்ல வளர்ச்சி இருக்கின்றது. ஒரு சிலருக்கு வேறு ஏதாவது கிரகபிரச்சினை இருந்தால் மட்டுமே வளர்ச்சி தடைபடுமே தவிர மற்றவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

சும்மா சுத்திக்கொண்டு இருந்தான்யா திருமணம் முடிவடைந்தவுடன் ஆள் பெரியளவில் உயர்ந்துவிட்டான்யா என்று சொல்லுவார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் வந்த வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் அருமையான ஒரு நிலையில் அமர்ந்து இருப்பார்.

நிறைய விசயங்களை சோதிடர்களே மறைத்துவிடுவார்கள். ஏன் என்றால் உனக்கு திருமணம் ஆனதில் இருந்து தான் பிரச்சினை என்று சொன்னால் திருமணவாழ்க்கை பிரச்சினையை சந்தித்துவிடும் என்பதால் அதனை மறைத்துவிடுவார்கள்.

பெண் நன்றாக இருக்கின்றது அதாவது அழகாக இருக்கின்றது. சுக்கிரன் வலுவாக இருந்தால் தான் அழகாக இருக்கமுடியும் என்று சொல்லிக்கொண்டு திருமணத்தை  முடித்துவிடுவார்கள். திருமணம் முடிந்தபிறகு அவர்களின் வாழ்க்கை பல தோல்விகளை சந்திப்பதும் உண்டு. சுக்கிரன் அழகை நிறைய கொடுத்தால் செல்வவளத்தை கொடுக்காது அதனையும் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும்.

இனிமேல் திருமணம் செய்யும் நபர்கள் கொஞ்சம் கருப்பான பெண்ணையும் பார்த்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை  சிறப்பாக இருக்கும். இதுவரை இதனை நான் சொன்னதில்லை தற்சமயம் சொல்லிவிட்டேன்.

ஆணாக இருந்து உங்களின் மனைவி ஜாதகத்தில் சுக்கிரன் மறைவுஸ்தானத்தில் இருந்தால் உங்களின் வளர்ச்சி தடைபடும்.  உங்களின் மாமனார் வீடு செல்வம் கொழிக்கும். நீங்கள் பிச்சை எடுப்பீர்கள். அதனை சரி செய்யவதற்க்கு பல டெக்னிக்கல்லை கையாளவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          களத்திரகாரகன் என்று வர்ணிக்கப்படுகின்ற சுக்கிரன் ஏழில் நின்றால் அது பெரிய தோஷம். சுக்கிரனோடு ஒரு கிரகம் சேர்ந்து நின்றால் அது தோஷமாக இருக்காது. தனித்து சுக்கிரன் ஏழில் நின்றுவிடகூடாது.

சுக்கிரன் ஏழில் நின்றால் திருமணம் நடைபெறாது. திருமணம் நடைபெற்றாலும் அது பிரச்சினையை கொடுக்ககூடிய ஒரு விதமாகவே அமையும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை அந்தளவுக்கு சந்தோஷமாக அமையாது.

சுக்கிரன் ஏழில் நிற்க்கும்பொழுது அவர்கள் திருமணம் செய்பவர்கள் நன்றாக உயர்ந்துவிடுவார்கள் ஆனால் இருவருக்கும் பிரச்சினை மட்டும் தான் வரும். ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது நல்லதாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா என்பது சுக்கிரனை பொறுத்து அமையும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடைபெற்றவுடன் அவர்களின் வாழ்க்கை பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் நடைபெற்றவுடன் பெரிய அடி விழுந்து வீணாக போய்விடுவார்கள். இது அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் அமைந்த நிலையை பொறுத்து அமையும்.

இருவரின் ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் நன்றாக இருந்தால் போதும் ஒரளவு நல்ல வாழ்க்கை அமையும். உங்களின் திருமணத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை இருக்கின்றதா அல்லது வீணாக போய்விட்டதாக நினைத்தால் இருவரின் ஜாதகத்தையும் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக அதில் சுக்கிரனை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலை நான் முன்கூட்டியே செய்தேன். நண்பர்கள் என்ன பெளர்ணமி அன்று செய்வதை முன்கூட்டியே செய்துவிட்டீர்களே என்று கேட்டனர். 

எனக்கு அந்த நாளில் சொந்த பிரச்சினை அதிகமாக இருந்தது. பிரச்சினை அதிகமாக இருந்தால் உடனே அந்த நாளில் பச்சைப்பரப்புதலை நாம் செய்துக்கொள்ளலாம். பிரச்சினை வந்துவிட்டது அதனை போக்க பச்சைப்பரப்புதலை உடனே செய்தால் அந்த பிரச்சினை போய்விடும்.

எந்த நாளிலும் பச்சைப்பரப்புதலை செய்யலாம். திடீர் பிரச்சினையை சமாளிக்க அந்த நாளில் பச்சைப்பரப்புதலை செய்துவிடவேண்டும். அப்பொழுது உடனே பிரச்சினை குறையும். ஒவ்வொரு மாதமும் பச்சைப்பரப்பதலை செய்தால் கூட பிரச்சினை இருக்கும் நாளில் நாம்  கூடுதலாகவும் இதனை செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் நாம் பச்சைப்பரப்புதலை செய்தால் பிரச்சினை வராது. ஏதாே ஒரு விசயத்தில் தடை ஏற்பட்டு செய்யமுடியாமல் இருந்தால் பிரச்சினை வந்துவிட்டால் அப்பொழுது உடனே செயதுவிடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பச்சைப்பரப்புதலை செய்யும் நபர்களுக்கு பிரச்சினை என்பது வராவே வராது என்பது தான் உண்மை. அதிக செல்வவளத்தை கூட வழங்ககூடிய ஒரு வழிபாடு தான் பச்சைப்பரப்புதல்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, October 10, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரதசா நடைபெறுவர்களுக்கு பொருளாதாரத்தில் குறைவைத்தாலும் நோயில் குறை வைக்காது என்று ஏற்கனவே சொல்லிருக்கிறேன். சுக்கிரதசா நடப்பவர்கள் வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லிவிடுவேன்.

அவர் அவர்களின் விருப்பம் என்பதையும் சொல்லிவிடுவது உண்டு. சுக்கிரதசா நடப்பவர்களுக்கு அப்படி என்ன நோய் வரும் என்று கேட்கலாம். முதலில் ஏதாவது ஒரு சிக்னல் காட்டி ஒரு நோயை காட்டும் அதன் பிறகு ஒவ்வாென்றாக ஆரம்பிக்கும்.

என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில் அதிகம் அவர்களின் உடலில் உள்ள உறுப்புகள் வீணாகபோய்விடுகிறது. அதனை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. என்ன பயமுறுத்திகிறீர்கள் என்று நினைக்கவேண்டாம். இது எல்லாேருக்கும் நடைபெறுகிறது என்பதால் சொல்லுகிறேன்.

சுக்கிரதசா அல்லது சுக்கிரன் பலகீனமாக இருப்பவர்களுக்கு நோய் தன்மை இல்லாமல் இருக்கின்றது என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். நீங்கள் கும்பிட்ட தெய்வம் உங்களை கைகொடுக்கிறது என்று அர்த்தம்.

சுக்கிரதசா நடைபெறும் நபர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது ஒரு விசயம் இருக்கின்றது. அது பெண்கள் தான். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்களை தேடி பெண்களை வருவார்கள். இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருந்தால் நல்லது. சும்மா பழகிறேன் என்று வந்து அதுவே வாழ்க்கைக்கு பிரச்சினையாக வரும்.

பெண்களாக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. உங்களை சுற்றி பெண்கள் வேலை செய்வது போல இருக்கும். இது பரவாயில்லை என்று சொல்லலாம். வீட்டில் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பெண்களாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷசுப்பு

சுக்கிரனுக்கு பரிகாரம்


ணக்கம்!
          சுக்கிரனுக்கு பழைய பதிவில் ஒரு பரிகாரம் சொல்லிருப்பேன். மால்களுக்கு செல்லவேண்டும் என்பது தான் அந்த பரிகாரம். தற்பொழுது உள்ள காலத்தில் மால்கள் சுக்கிரன் காரத்துவம் வகிக்கிறது என்பது குறைந்துக்கொண்டே வருகின்றது.

அனைத்து மக்களும் மால்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு காலத்தில் உயர்ந்த ரகத்தில் இருந்த மால்கள் எல்லாம் தற்பொழுது அனைத்து மக்களும் செல்ல ஆரம்பித்த காரணத்தால் இதனை தேர்ந்தெடுத்து தான் செல்லவேண்டும்.

ஒரு காலத்தில் பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்க்கு ஒரு முறை நான் மால் செல்வது உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை பார்த்து மால் சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு ஏதாவது சினிமா பார்த்துவிட்டு வருவது உண்டு. தற்பொழுது இதனை அதிகம் செய்வதில்லை.

கடந்த முறை கோயம்புத்தூர் சென்றபொழுது ஒரு மால் புதியதாக திறந்து இருக்கின்றார்கள். வாருங்கள் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நண்பர் சொன்னார். அந்த பக்கம் ஒரு வேலை இருந்த காரணத்தால் அந்த வேலையை முடித்துவிட்டு அந்த மாலுக்கு சென்றேன்.

மால் பார்த்தால் அது ஒரு மில் போல எனக்கு தோன்றியது. மாலுக்கான கட்டட அமைப்பே கிடையாது. இது சுக்கிரனின் காரத்துவத்தில் வரவே வராது என்று உடனே வந்துவிட்டேன். அந்த ஊருக்கு அது பெரியதாக இருக்கலாம். ஊரில் மால் இல்லை என்றால் செல்லலாம்.

உங்களிடம் பணம் இல்லை என்றால் மால்களுக்கு சென்று வாருங்கள். கொஞ்சம் பணம் இருந்தால் உங்களின் ஊரில் இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று ஒரு காபி சாப்பிட்டு வாருங்கள். கொஞ்சம் அதிகமாக உங்களிடம் பணம் இருந்தால் அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு வரலாம். சுக்கிரனுக்கு இது ஒரு நல்ல பரிகாரமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு