Followers

Thursday, January 31, 2019

வேலையாட்கள் எப்படி அமைவார்கள்?


வணக்கம்!
         ஒரு தொழில் நடப்பதற்க்கு அதில் பணிபுரியும் வேலையாட்கள் தான் மிக மிக முக்கியம். வேலையாட்கள் அமைந்துவிட்டால் தொழில் வெற்றி பெற்றுவிடும்.   

வேலையாட்கள் சரியில்லை என்றால் நமது தொழிலில் போட்ட அனைத்து பணமும் வீணாக சென்று நம்மை தோல்வி அடைய வைத்துவிடும். பெரிய கம்பெனிகளே திவாலாக போனாதற்க்கு அவர்களின் வேலையாட்கள் தான் காரணமாக இருப்பார்கள்.

வேலையாட்டகள் நன்றாக அமைவார்களாக என்பதை சோதிடத்தில் ஆறாவது வீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ஆறாவது வீட்டு அதிபதி நமக்கு நல்ல பலனை கொடுத்தால் நல்ல வேலையாட்கள் நமக்கு கிடைப்பார்கள். 

ஆறாவது வீட்டு அதிபதி கொஞ்சம் வில்லங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டால் அவர் வழியாக நமக்கு சரியில்லாத வேலையாட்கள் அமைந்துவிடுவார்கள். தொழில் நஷ்டத்தை சென்று அடைந்துவிடும்.

ஆறாவது வீட்டு அதிபதியோடு சனிக்கிரகமும் நன்றாக அமையவேண்டும். சனிக்கிரகம் நன்றாக இருந்தால் அவர்களுக்கு நல்லவேலையாட்கள் அமைந்துவிடுவார்கள். இரண்டில் ஒன்றாவது நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் முடிந்தளவுக்கு வேலையாட்கள் உங்களின் தொழிலில் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு கிரகத்திற்க்குள் சண்டை


வணக்கம்!
          கிரக குருவுக்குள் சண்டை ஏற்படும். கிரக குரு என்றால் கிரக கிரகமும் சுக்கிரகிரகமும். இந்த இரண்டு தசா நடக்கும் ஆட்களுக்கு இரண்டு கிரகத்தின் நாட்களில் ஒரு நாளில் முடக்கிவிடும்.

குரு தசா நடக்கும் ஆட்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு சிலருக்கு முடங்கிவிடும் ஒரு சிலருக்கு வியாழக்கிழமையும் முடங்கிவிடும். நான் பெரிய ஆளா அல்லது நீ பெரிய ஆளா என்று கிரகங்கள் விளையாடும்.

கிரகங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு மனிதனை போட்டு காயப்படுத்தும். இது இரண்டு குருவுக்குள் நடைபெறும் யுத்தமாகவே இதனை எடுத்துக்கொண்டு நாம் பார்க்கவேண்டும். சுக்கிர தசா நடக்கும் ஆட்களுக்கு வியாழன் அதிகபட்சமாக நன்றாக இருக்காது. ஒரு கில காலக்கட்டங்களில் வெள்ளிக்கிழமையும் சரியாக இருக்காது.

வாரத்தில் இந்த இரண்டு கிரகத்தில் ஒரு நாள் கொஞ்சம் வேலைகளை ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை. இரண்டு குருவின் தன்மைகளும் அப்படி இருப்பதால் அதனை தவிர்க்கலாம்.

தசா முழுவதும் அப்படியே தான் இருக்குமா என்று கேட்கலாம். வருடத்தில் ஒரு பத்து நாட்கள் அப்படி இருக்கலாம். ஒரு சிலருக்கு மட்டும் இந்த நாட்கள் பிரச்சினையை கொடுக்கின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 30, 2019

அமாவாசை


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது. நிறைய பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன். தற்பொழுது ஒரு கடினமான முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறேன் அது கை கூடும் நேரத்தில் உங்களிடம் சொல்லுகிறேன். விரைவில் அம்மன் அருளால் அது நடக்கும்.

அமாவாசை என்பது நம்ம ஆட்கள் தான் அதனை பெரிதும் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது அது பிறமதங்களிலும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அமாவாசை முன்னோர்களின் ஆசியை வழங்குவதற்க்கு என்று ஏற்ற நாளாக வைத்திருக்கின்றனர்.

அமாவாசை அன்று கிரகங்கள் பலன் குறைவாக இருக்கும். அமாவாசை அன்று கிரகங்கள் பலன் குறைவதற்க்கு நமது முன்னோர்கள் வந்து செல்வதற்க்கு ஒரு ஏற்ற நாளாகவே அது இருக்கின்றது. அதனை தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனர்.

நமது முன்னோர்கள் ஒவ்வொரு அமாவாசையும் நம்மை நாடி வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடும் நாம் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற விஷேசமான அமாவாசையை தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனர். 

விஷேசமான அமாவாசை நாட்களில் நம்மால் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டும். அமாவாசை அன்று செய்யும் விரதம் மற்றும் திதி கொடுப்பதை செய்யலாம். ஏதோ ஒரு ஆறு குளம் மற்றும் கடலில் நீராடிவிட்டு வாருங்கள். இதுவே மிகப்பெரியளவில் உங்களுக்கு மாற்றத்தை கொண்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 29, 2019

தாய்மாமன் உறவு எப்படி?


வணக்கம்!
               தாய் மாமன் உறவு நன்றாக இருக்குமா என்று எதனை வைத்து நாம் தெரிந்துக்கொள்வது. தாய்மாமன் உறவைப்பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க சோதிடத்தில் புதன் கிரகத்தைப்பற்றி நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

மாமனை காட்டும் கிரகம் புதன். புதன் கிரகம் நல்ல வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு மாமன் துணை கிடைக்கும். தன் பிள்ளை வளர்ப்பது போல உங்களை வளர்த்துவிடுவார்கள். புதன்கிரகம் உங்களை வாழ்நாள் முழுவதும் நன்றாக உதவும். மாமன் துணை கடைசி வரை இருக்கும்.

புதன்கிரகம் நல்ல வீட்டில் அமர்ந்திருந்தால் மாமன் சொத்தை கொடுத்து உங்களை வாழவைப்பார். உங்களிடம் எதுவும் இல்லை என்றாலும் மாமன் வழியில் மிகப்பெரிய உதவி கிடைக்கும் என்று நம்பலாம்.

புதன்கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு சென்றால் மாமன் உதவி உங்களுக்கு கிடைக்காது. உங்களால் உங்களின் மாமனுக்கு கெடுதல் தான் நடக்கும் என்று சொல்லலாம். ஒரு சில குழந்தைகள் பிறந்தவுடன் புதன் கெட்டு இருந்தால் அந்த குழந்தை பிறந்ததில் இருந்து மாமனுக்கு கெட்டகாலம் என்று சொல்லலாம்.

புதன்கிரகத்தோடு தீயகிரகங்கள் சேர்ந்தால் உங்களின் மாமன் உங்களுக்கு எதிரியாக சென்றுவிடுவார். மாமன் வழியில் உங்களுக்கு கெடுதல் மட்டுமே நடக்கும். மாமனை விட்டு விலகி இருப்பது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 28, 2019

இராகு சூரியன் சேர்க்கை


ணக்கம்!
          ராகு சூரியனோடு சேர்ந்து இருந்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தால்.ராகு சூரியனோடு சேரக்கூடாது என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கும்.

சூரியன் ஆத்மாக்காரகன் மற்றும் தந்தைக்குரிய ஸ்தானத்திற்க்கும் அதிபதி. சூரியனோடு ராகு சேரும்பொழுது அவர்களின் ஆத்மா தூய்மைற்ற நிலையில் இருந்து செயல்படும். இவரின் செயல்பாடு அனைத்தும் நல்லதாக இருக்காது.

சூரியனோடு இராகு சேரும் நபர்களுக்கு நடக்கும் அனைத்தும் எதிர்மறையாகவே இருக்கும். தந்தை வழியில் உள்ளவர்கள் அல்லது தந்தை எதிராக இருப்பார். ஒரு சிலருக்கு தந்தையை பிரித்து வைத்து பார்க்கும்.

சூரியனோடு இராகு சேர்க்கை பிதர்தோஷத்தை உருவாக்கும். பெரும்பாலும் இந்த சேர்க்கை பிதர்தோஷத்தை உருவாக்கிவிடுகின்றது. இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்றால் திருமணம் நடைபெறுவது கடினமாக இருக்கும். 

மனநிலை பாதிப்பு என்பது சந்திரனோடு இராகு சேர்ந்தால் நடக்ககூடியது என்பார்கள். சூரியனோடு இராகு சேரும்பொழுது அடுத்தவர்களால் பிரச்சினை ஏற்பட்டு அது மனநிலை பாதிப்பாக வருகின்றது. சூரியன் இராகு சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக பரிகாரத்தை செய்துக்கொள்வது வாழ்வதற்க்கு வழி செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 26, 2019

மாமியார் வீட்டில் மரியாதை கிடைக்குமா?


வணக்கம்!
          மாமியார் வீட்டில் மரியாதை கிடைக்குமா என்று எதனை வைத்து பார்ப்பது என்ற சந்தேகம் இருக்கும். இன்றைய காலத்தில் மாமியார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளைகள் அதிகமாக இருக்கின்றனர். மாமியார் வீட்டிற்க்கு இழுத்துக்கொண்டு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

ஒரு பையனை பெற்றுவிட்டால் அவனுக்கு திருமணம் செய்துவிட்டால் அதன் பிறகு அவன் பெற்றோர்களோடு இருக்ககூடாது. மாமியார் வீட்டில் தான் வளரவேண்டும் என்பது போல இன்றைய காலத்தில் பலர் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

முக்கால்வாசி பேர் மாமியார் வீட்டிற்க்கு சென்றுவிடுகின்றனர் என்கிறது நமது கணிப்பு. மாமியார் வீட்டிற்க்கு சென்று அங்கு மரியாதையோடு நடத்தப்படுவது மிக மிக கடினம். மாமியார் வீட்டிற்க்கு சென்றாலே அங்கு அவர் வேலைக்காரன் போல தான் இருப்பார்கள். இதனை விட்டுவிட்டு நாம் சொல்ல வரும் கருத்துக்கு வருவோம்.

உங்களின் சுகஸ்தான அதிபதி அதாவது நான்காவது வீட்டு அதிபதி மறைவுஸ்தான அதிபதியோடு இணைந்துவிட்டால் உங்களின் மாமியார் வீட்டில் நீங்கள் அடிமை என்று அர்த்தம். சுகஸ்தான அதிபதி ஆறாவது வீட்டு அதிபதியோடு இணைந்துவிட்டால் மாமியார் வீட்டில் நீங்கள் அடிமை அதோடு அவர்களிடம் இருந்து அடியும் வாங்கவேண்டும்.

நான்காவது வீட்டு அதிபதி நன்றாக இருந்தால் நீங்கள் மரியாதையாக நடத்தப்படுவீர்கள். நான்காவது வீட்டு அதிபதி சரியில்லை என்றால் மாமியார் வீட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களின் உறவு எப்படி இருக்கும்?


வணக்கம்!
          இன்றைய காலத்தில் உறவுகள் என்பது ஏதோ ஒரு நோக்கத்திற்க்காகவே இருக்கின்றது. அடுத்தவர்களிடம் இருந்து என்ன கிடைக்கும் என்பதையே நோக்கமாகவே இருக்கின்றது. உறவுகளாக இருந்தாலும் சரி நட்பு வட்டங்களாகவும் இருந்தாலும் இப்படி தான் இருக்கின்றது. 

நாகரீகம் என்ற பெயரில் வளர்ந்து வந்தாலும் உறவு விசயத்தில் படு பாதளத்திற்க்கு போய்விட்டது. படிப்பு என்று வந்தால் அது மனித உறவில் அதிகமாக உறவை ஏற்படுத்துவதற்க்கு பதிலாக அது மனித உறவில் நோக்கத்திற்க்காகவே மனிதனை வளர்க்கின்றது என்ற அடிப்படையில் கல்வியும் இருக்கின்றது.

கூட்டுகுடும்பத்தில் இருந்த உறவு இன்று தொலைந்து அனைத்தும் தனிகுடும்பமாகவே சென்று விட்டது. ஒரு தனிக்குடும்பத்தில் வசித்து வந்தாலும் அதில் இருக்கும் இருவருக்கும் தற்பொழுது காலத்தில் உறவிலும் நன்றாக இல்லை என்று சொல்லலாம்.

உறவுகள் எல்லாம் வீணாக சென்றதற்க்கு சமூகம் அப்படி இருக்கின்றது என்று வைத்துக்கொண்டாலும் ஒரு சில குடும்பத்தில் இன்றைக்கும் நல்ல உறவு இருக்கின்றது. இவர்களுக்கு எல்லாம் எப்படி இந்த உறவு நிலைத்து இருக்கின்றது என்று பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இருக்கின்றது.

உறவு என்று வந்தாலே அது சுகஸ்தானம் என்ற நான்காவது வீட்டை வைத்து தான் ஆராய்ந்து சொல்லவேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் நான்காவது வீடு நன்றாக இருந்தால் அவர்க்கு அமையும் உறவு நல்ல உறவாக அமைந்துவிடும். சுகஸ்தானம் கெட்டால் அவர்களின் உறவு நன்றாக இருக்காது. உங்களின் ஜாதகத்தை எடுத்து நான்காவது எப்படி இருக்கின்றது பாருங்கள். அதிலேயே தெரிந்துவிடும் உறவு நன்றாக இருக்குமா அல்லது கசக்குமா என்பது புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 25, 2019

சோதிடத்தில் மறைவு வீட்டால் லாபம்


வணக்கம்!
          விரைய வீடான பனிரெண்டாவது வீடு தான் நாம் செய்யும் யாத்திரைகளை காட்டக்கூடிய ஒரு இடமும். நாம் யாத்திரை சென்றால் நமக்கு நல்லது நடக்கும். இன்றைக்கு நாம் செல்லும் யாத்திரை என்பது ஒரு வகையான செலவாக இருந்தாலும் அது பிற்காலத்தில் நமக்கு நன்மையை செய்யும் என்பதற்க்காக தான் யாத்திரையை விரைய வீட்டில் வைத்திருக்கின்றார்கள்.

நான் உங்களுக்கு போதித்தது அனைத்தும் நானே பெரும்பாலும் செய்து அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது உண்டு. யாத்திரையும் நீங்கள் செய்யவேண்டும் என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன். யாத்திரை என்ற செலவை செய்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

எங்களுடைய பெரும்பாலான பரிகாரத்திற்க்கு நீங்கள் முதலில் செலவு செய்வது போல தான் வைத்திருக்கின்றோம். என்னுடைய குருவே என்னிடம் சொல்லிருக்கின்றார். முதலில் வருபவர்களிடம் பணத்தை வாங்கு அதன் பிறகு பரிகாரத்தை செய் என்பார். எல்லாம் இப்படிப்பட்ட நோக்கத்திற்க்காக மட்டுமே அதனை செய்ய சொல்லிருக்கிறார்.

முதலில் நீங்கள் செலவு என்பது ஆன்மீக வழியாக யாத்திரை செய்வதை செய்வதை கூட செய்துவிட்டு அதன்பிறகு ஒரு நல்லதை ஆரம்பிக்கலாம். மறைவு ஸ்தானம் உங்களை கைவிடாது என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

நாம் எந்தவிதத்தில் செலவு செய்யலாம் என்பதை முடிவு எடுத்துவிட்டு அதன்பிறகு சம்பாதிக்க திட்டமிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்க ஆரம்பித்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நஷ்டத்தால் லாபம்


வணக்கம்!
          நம்முடைய எந்த வேலையாக இருந்தாலும் அதனை மிக வேகமாக செய்யவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவேன். நவ அம்மன் யாகம் செய்வதற்க்கு அறிவிப்பு விட்டு பிறகு நிறைய ஜாதகங்கள் மற்றும் கட்டணம் வந்திருக்கின்றன. இதனை இதுவரை செய்யாமல் இருக்கிறேன். 

ஒரு சில காரணங்களுக்காக இதனை செய்யாமல் இருக்கிறேன். மிக மிக முக்கிய வேலை நடந்துக்கொண்டு இருக்கின்றது அந்த காரணத்தால் நவ அம்மன் யாகம் தள்ளிச்சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக நவஅம்மன் யாகம் நடைபெறும்.


நாம் ஒரு எதார்த்தை புரிந்துக்கொள்ளவேண்டும். நம்மிடம் உள்ள அறிவை முதலீடாக போட்டு ஒரு வேலையை நீங்கள் பார்க்கவேண்டும். உங்களிடம் உள்ள பணத்தை முதலீடாக போட்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும். முதலில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் செலவு செய்து அதன் பிறகு லாபத்தை பார்க்கவேண்டும்.

சோதிடத்தில் உங்களின் செலவை காட்டும் இடம் விரைய வீடான பனிரெண்டாவது இடம். இது ஒரு மறைவுஸ்தானம் என்று சொல்லுவார்கள். மறைவு ஸ்தானங்கள் சரியாக இயங்கினால் தான் உங்களின் நல்லதற்க்கே வழி நடத்தமுடியும். மறைவுஸ்தானங்கள் செலவு வைக்கவில்லை என்றால் உங்களின் முதலீட்டிற்க்கு வழி இல்லாமல் சென்றுவிடும்.

இன்றைய காலத்தில் செலவு செய்யாமல் எதனையும் சாதிக்கமுடியும் என்றால் கண்டிப்பாக உங்களால் அது முடியாது என்று தான் சொல்லுவேன். உங்களின் மறைவுஸ்தானம் ஏதோ ஒரு வகையில் உங்களை தூண்டி அதனை செய்யவைக்கும். இந்த முதலீடு சரியாக போகவேண்டும் என்பதை உங்களின் லாபஸ்தானம் முடிவு செய்யவேண்டும்.

விரைய வீடான பனிரெண்டாவது வீடும் நன்றாக வேலை செய்து லாபஸ்தானமான பதினோன்றாம் வீடும் நன்றாக வேலை செய்தால் உங்களால் எளிதாக முன்னேற்ற பாதையில் செல்லமுடியும். இதில் ஏதோ ஒன்று சொதப்பினாலும் வீணாக சென்றுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 24, 2019

தீயகிரகங்கள் பரிகாரம்


வணக்கம்!
          கிரகபலன்கள் தீயவை அதிகமாக செயல்படும்பொழுது நாம் அதிகமாக கோவில் குளங்களை நாடிச்செல்லவேண்டும் அந்த காலக்கட்டத்தில் நல்ல விசயங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு செய்யகூடாது.

தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் நல்ல விசயங்கள் என்று பார்த்தால் ஏதாவது சுபநிகழ்வுகள் நடைபெறுவது போல உங்களின் வீட்டில் செய்துவிடவேண்டும். இதனை நீங்கள் செய்தால் தீயநிகழ்வுகள் நடக்காமல் செய்யலாம்.

நம்முடைய திட்டம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் உங்களுக்கு நடக்கும் தீயவைகளை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நீங்கள் குலதெய்வ வழிபாடு அல்லது இஷ்டதெய்வ வழிபாடு செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த அறிவு கிடைக்கும்.

ஏதாே ஒரு தெய்வத்தை விடாமல் வழிபட்டு வரும்பொழுது மட்டுமே இப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு அந்த தெய்வம் கொடுக்கும். தீயகிரகங்கள் முதலில் சிதைப்பது உங்களின் சிந்தனையை தான் சிதைக்கும்.சிந்தனையை கெடுத்தால் உங்களால் நன்றாக செயல்படமுடியாது.

நல்ல சிந்தனையை உருவாக்குவதில் உங்களின் தெய்வம் உங்களுக்கு நல்ல சிந்தனையை கொடுக்கும். இதனை வைத்து நீங்கள் தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் நன்றாக செயல்படமுடியும். புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று சொல்லுவார்கள் அல்லவா. நல்ல புத்தியை தீயகிரகங்களின் காலக்கட்டத்தில் உங்களின் தெய்வம் கொடுத்தால் கண்டிப்பாக நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 23, 2019

அண்ணன் தம்பி சொத்து அனுபவம்


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் மூத்தவர் நன்றாக இல்லை என்றால் அந்த குடும்பத்தில் உள்ள இளையர் என்ன தான் முன்னேற்ற பாதையில் சென்றாலும் அவரால் தன்னுடைய முழுமையான முன்னேற்றத்தை அடையமுடியாது.

ஜாதகத்தை தாண்டியும் பல விசயங்கள் இருக்கின்றன அதில் ஒன்று தான் இந்த விளக்கமும். ஒரு பெற்றோர்க்க்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால் அதில் மூத்தவர் நன்றாக வாழவேண்டும். மூத்தவர் தன்னுடைய குடும்பத்தை அனுசரனையாக நடத்தி இளையவரையும் தூக்கிவிடவேண்டும்.

இன்றைய காலத்தில் அண்ணன் தம்பியோடு சொத்தை எப்படி ஆட்டைய போடலாம் என்று தான் திட்டம் தீட்டிக்கொண்டு செயல்படுகின்றார்கள். அண்ணனின் மனைவியும் இதற்க்கு உடந்தையாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

பெரும்பாலும் அண்ணன் தம்பி சொத்தை பங்கு பிரிப்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும். யாருடைய சொத்தும் அதிகமாக அல்லது குறைவாக சென்றுவிடகூடாது. சமமாக சொத்தை பிரித்துக்கொடுக்கவேண்டும்.

உங்களின் தம்பி அல்லது அண்ணனின் சொத்தை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் அதனால் சொத்து கிடைக்காதவர் மனம் வருந்தினால் கண்டிப்பாக உங்களின் வாரிசு பாதிக்கப்படும். இது ஜாதகத்தையும் மீறி செயல்படும் என்பதை மறவாதீர்கள்.

இன்று வெளியூர் பயணம் செல்கிறேன். நாளை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 22, 2019

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஜாதக கதம்பத்தை படிக்கும் பல நண்பர்கள் பல வருடங்களாக தொடர்பில் இருக்கின்றார்கள். இவர்களின் ஒவ்வொரு அசைவும் எனக்கு நன்றாக தெரியும். பலர் நிறைய மாற்றங்களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். மாற்றங்கள் என்பது இருக்கவேண்டும் அந்த மாற்றம் என்பது நம்முடைய வாழ்க்கையில் இருக்கவேண்டும் நமது செயல்பாட்டில் மாற்றத்தை காட்டவேண்டியதில்லை.

வைராக்கியம்
              ஆன்மீகவாதியின் எண்ணம் எப்படி இருக்கவேண்டும் என்பதை என்னுடைய குரு சொல்லுவார். வைராக்கிய எண்ணத்தோடு இருக்கவேண்டும். நமது எண்ணம் வைராக்கியத்தோடு ஆன்மீகத்தை பற்றி இருக்கவேண்டும். இது இருக்கும்பொழுது தான் இவன் என்றும் மாறமாட்டான் இவனுக்கு தன்னுடைய அருளை கொடுக்கலாம் என்று குரு முடிவு செய்வார்.

மனிதனிடம் உள்ள பெரிய மைனஸ் என்ன என்றால் கொஞ்சம் பணம் வந்துவிட்டால் அப்படியே மாற்றிக்கொண்டு அதற்க்கு தகுந்தார் போல் மாறிவிடுகின்றனர். இது ஆன்மீகத்திற்க்கு எதிரான ஒன்றாகவே இருக்கும். பணம் வருகின்றது பணம் போகின்றது நான் அப்படியே ஒரே மனநிலையில் தான் இருப்பேன் என்று இருந்தால் ஆன்மீகம் உங்களுக்கு நிறைய கொடுக்கும்.

நான் சொல்லுவது வெளிக்காட்டுவது என்பது உங்களின் உடையில் உங்களின் வாகனத்தில் அல்லது பகட்டில் அல்ல உங்களின் எண்ணம் அதனை வெளிக்காட்டும். உங்களின் எண்ணம் ஒரே மாதிரி வைராக்கியமாக ஆன்மீகத்தில் இருந்தால் உங்களிடம் கோடி கோடியாக வந்தாலும் உங்களின் எண்ணம் அதனை காட்டிக்கொடுக்காது.

ஆன்ம சாதகம் செய்யும் ஆன்மீகவாதியாக என்று இருங்கள். பணம் சம்பாதிக்ககூடாது என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆனால் நம்முடைய மனம் ஆன்மீகத்தை விட்டு விலகாமல் நிறைய சம்பாதியுங்கள்.

பத்து வருடத்திற்க்கு முன்பு என்னை சந்தித்து இருந்தால் அன்று எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தேன் என்பது தெரியும் அதே மனநிலை இன்றும் என்னிடம் இருக்கின்றது. இதனை பார்த்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றாக தெரியும். இதனை தான் ஒரு குரு உங்களுக்கு உபதேசம் செய்வார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 21, 2019

தை பூசம்


வணக்கம்!
          இன்று தைபூசம். வருடம் தோறும் தைபூசத்திற்க்கு ஏதாவது ஒரு பரிகாரம் செய்ய சொல்லி அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துங்கள் என்று சொல்லுவது உண்டு. இந்த வருடம் வழிபாடு எதுவும் சொல்லவில்லை.

இன்றைய வருடம் நீங்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். தை பூசத்திற்க்கு அன்னதானம் மிகவும் புகழ்பெற்றது. உங்களால் முடிந்தால் யாருக்காவது அன்னதானம் செய்யுங்கள்.

எப்பொழுதும் தை பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விஷேச நாட்களில் பழனி சென்று தரிசனம் செய்துவிட்டு வருவது உண்டு. இந்த வருடம் நான் பாதயாத்திரை சென்றுவந்துவிட்டேன். தை பூசம் முடிந்தாலும் பழனிக்கு சென்று வந்துவிடுங்கள். 

ஒருவர் மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்றால் அதற்கு முருகனின் அருள் அவர்க்கு கிடைக்கவேண்டும். இதனை நாம் சந்திக்கும் பலரிடம் சொல்லுவது உண்டு அதற்க்கு தகுந்தமாதிரியே நீங்களும் முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். இந்த மாதிரியான விஷேச நாட்களிலும் சென்று வாருங்கள்.

தை பூசம் முடிந்தும் பலர் தங்களின் வேண்டுதலுக்காக பழனி சென்று வருவார்கள். நீங்களும் முடிந்தவரை பழனிக்கு சென்று வாருங்கள். எனக்கு தெரிந்தவரை கேரளா மக்கள் அனைவரும் தைபூசம் முடிந்தபிறகு தான் பழனிக்கு சென்றுவருவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 20, 2019

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
           இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 19, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          நாளை அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.   

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.   
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.     

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்           
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளில் தங்களின் வேண்டுதலை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 18, 2019

ATM PIN


வணக்கம்!
          மாற்றம் உலகில் நடைபெற்றாலும் இந்தியாவில் உள்ள அரசாங்கத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். நமது அரசாங்கத்தில் எதனையும் முறையாகவே செய்யமாட்டார்கள். எதிர்காலத்தை கொண்டு திட்டம் என்பது மிக குறைவாகவே இருக்கும்.

நமது இந்திய வங்கியில் புதிய டிபிட் கார்ட் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அனைவரும் இந்த கார்ட் வாங்கியிருப்பீர்கள். பழைய கார்ட் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செல்லாது புதிய கார்ட் மட்டுமே செல்லும் என்று சொல்லுவார்கள்.

புதிய கார்டில் புதிய பின் போட்டு அதனை பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம். அவர்களுக்கு பிடித்த எண்ணை கார்டின் பின்னாக பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம். இதில் ஒரு மாற்றத்தை நாம் கொடுக்க வேண்டும் என்பதற்க்காக இந்த பதிவை தருகிறேன்.

உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் உங்களுக்கு நல்லதை தரும் என்று பார்த்து அந்த கிரகத்திற்க்குரிய எண்ணை தேர்ந்தெடுத்து அதனை பின்னாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நிறைய பணம் உங்களுக்கு சேரும்.

உதாரணமாக உங்களின் ஜாதகத்தில் சனிக்கிரகம் நன்றாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். சனியின் எண் 8 இந்த எண்ணை பிரித்து நீங்கள் பின்னாக பயன்படுத்திக்கொள்ளலாம். 2222 கூட்டுதொகை எட்டாக வருகின்றது இதனை போல் நீங்கள் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 16, 2019

முன்னோர்களின் வழிபாடு


வணக்கம்!
          ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடைவதற்க்கு அவர்களின் முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடு என்பது மிக மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த வழிபாட்டை பல வழிகளிலும் செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள். ஒரு முக்கிய வழிபாடு என்பதை சென்ற வருடம் சொல்லிருந்தேன் அதனை மறுமுறை இந்த நாளில் சொல்லுகிறேன்.

மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு என்று விஷேசமான படையல் என்பதை செய்வார்கள். உங்களின் தாத்தா ஒருவர் இறந்திருந்தால் அவருக்கு பிடித்தமான ஒரு பலகாரம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதனை இந்த நாளில் நீங்கள் செய்து அவர்க்கு என்று வைத்து படையல் செய்து வழிபாடு செய்யவேண்டும்.

உங்களின் முன்னோர்களுக்கு என்று ஒரு வேஷ்டி சட்டை புடவை எடுத்து வைத்து நீங்கள் செய்த பலகாரம் போன்றவற்றை வைத்து சாமி கும்பிடவேண்டும். பெரும்பாலான மக்களை மாட்டுப்பொங்கல் அன்று இதனை செய்வார்கள்.

இந்த வழிபாடு என்பது எங்களின் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செய்வார்கள். அவர்களுக்கு இதனை எங்களின் கடமை போலவே செய்யவேண்டும் இதனை செய்தால் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. 

ஒவ்வொரு மாட்டுப்பொங்கல் அன்றும் இதனை செய்து வந்தால் கண்டிப்பாக முன்னோர்களின் தோஷம் நீங்கி நல்லவாழ்க்கையை வாழலாம். இதனைப்பற்றி மேலும் தகவல் வேண்டுமானால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

Tuesday, January 15, 2019

நல்வாழ்த்துக்கள்



வணக்கம்!         
                         அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 11, 2019

ஆன்மீகம்


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் காலக்கட்டமாக வரும் காலக்கட்டங்களில் ஒருவர் என்ன செய்யலாம் என்றால் ஆன்மீக பணிகளை அதிகமாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். ஆன்மீக வழியில் பணிகள் செய்வது எளிதான காரியம் இல்லை சாதாரணமான விசயங்களை விட அதிகமாக இதில் தடைகள் வரும்.

ஆன்மீக பணியை எடுத்து செய்யும்பொழுது உங்களுடைய பல தோஷங்கள் மற்றும் கர்மா முழுமையாக விடுதலை அடைந்துவிடும். இதுவும் கஷ்டக்காலங்களில் நீங்கள் எடுத்து செய்தால் அது பல ஜென்மங்களாக வந்த தோஷம் நிவர்த்தியாகிவிடும்.

ஆன்மீகம் எல்லாம் ஒன்பதாவது வீடாக மட்டுமே வரும் பூர்வஜென்மம் என்பது ஐந்தாவது வீடாக வருகின்றது எப்படி அனைத்தும் போகும் என்று கேட்கலாம். ஆன்மீகம் என்பது நமக்கு கிடைத்த ஒரு பெரிய வழிகாட்டி அது சோதிடத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள தோஷத்தை போக்கும் தன்மை உடையது.

பல ஜென்மங்களாக தொடரும் பல விசயங்களில் முதன்மையான ஒன்று நீங்கள் செய்யும் ஆன்மீகம். ஆன்மீக வழியில் செய்யும் முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு பல ஜென்மங்களாக தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 10, 2019

பணம் வரும் இராசி


வணக்கம்!
          உங்களின் நண்பரின் இராசியை நீங்கள் தெரிந்து வைத்துக்கொண்டால் அவர்களால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். உங்களுடைய இராசி மேஷம் என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு ரிஷப இராசியை நண்பர் இருந்தால் அவரை சந்திக்கும் நாளில் உங்களுக்கு பணவரவு இருக்கும்.

அவரை சந்திப்பதால் அவர்க்கு இழப்பு இருக்காது ஆனால் அவரை சந்தித்த காரணத்தால் உங்களுக்கு பணவரவு இருக்கும். உங்களின் இராசிக்கு ஆறாவது இராசியாக ஒரு இராசி இருந்தால் அவரால் சண்டை சச்சரவு வருமா என்று கேட்கலாம். இதனை நீங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

ஒரு சில இராசியினர்க்கும் உங்களுக்கும் ஒத்துவராது என்பது உண்மை. மகர இராசியினர்க்கு சிம்ம இராசியை கண்டால் ஒத்துவராது. இருவரும் சண்டை சச்சரவு எப்படி இருக்கும் என்றால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

நமக்கு முதல் தரமாக மரணத்தை தரும் வீடு ஏழாவது வீடு. நமக்கு திருமணத்தை தரும் வீடும் இதே வீடு. நம்மோடு இந்த இராசி இருந்துக்கொண்டே இருக்கின்றது. இந்த இராசியை நாம் வைத்துக்கொண்டால் உடனே மரணம் வருவதில்லை நமக்கு வரவேண்டிய நேரத்தில் அது நடக்கும்.

நம்முடைய எண்ணத்தை பணம் என்று உருவாக்கிக்கொண்டு நம்முடைய இராசிக்கு இரண்டாவது இராசியை சந்தித்தால் அதனால் பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 9, 2019

பழனி பாத யாத்திரை


வணக்கம்!
          இன்று பழனி பாத யாத்திரை பயணத்திற்க்கு செல்கிறேன். பழனி பாத யாத்திரை என்று உங்களிடம் சொன்ன பிறகு கஷ்டம் என்பது குறைவாக வரவில்லை நிறையவே வந்தது என்று சொல்லலாம். எந்த கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை அதில் இருந்து மீண்டு வருவது தான் ஆன்மீகத்தின் வேலை. கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்.

அம்மன் பூஜையை முடிந்தளவுக்கு பொங்கலுக்கு முன்பே நடத்த திட்டமிடுகிறேன் முடியவில்லை என்றால் பொங்கலுக்கு பிறகு நடத்தப்படும். பழனி பாத யாத்திரைக்கு என்னோடு ஜாதக கதம்பத்தின் வழியாக நண்பர்கள் வருகின்றார்கள். 

என்னோடு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைத்தேன் வருகின்றார்கள். அனைவரையும் அழைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு சில காரணங்களுக்காக இந்த முறை வேண்டாம் என்று விட்டுவிட்டேன். 

பலர் வேலையில் இருப்பதால் அவர்களை நான் கூப்பிடவில்லை. என்னை கூப்பிடவில்லை என்று யாரும் கோபம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னோடு தான் வரவேண்டும் என்பதில்லை நீங்களாவே கூட சென்று வாருங்கள்.

என்னோடு ஜெராக்ஸ் போலவே நீங்கள் செயல்படுவீர்கள். ஒத்த மனம் கொண்டவர்கள் போலவே பலர் இருக்கின்றீர்கள். நான் என்ன செய்துக்கொண்டு இருக்கிறேன் என்பதை காட்டினால் உங்களுக்கு அது பயன்படும் என்பதற்க்காக இதனை பதிவில் சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 8, 2019

எத்தனை கைகளை சம்பாதித்தீர்கள்?


வணக்கம்!
          ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சம்பாதிப்பது பணம் என்பதை விட அவனுக்கு என்று பல உதவிகரம் நீட்டும் ஆட்களை சம்பாதித்து வைத்து இருக்கவேண்டும். நமக்கு இரண்டு கைகளை படைத்து இருக்கிறான். நாம் சம்பாதிப்பது நிறைய கைகளை சம்பாதிக்கவேண்டும்.

என்னடா நிறைய கைகளை சம்பாதிக்கவேண்டுமா என்று கேட்கலாம் அல்லவா. நமக்கு ஆபத்து என்று வந்தால் நம்மை தாங்க நிறைய கைகள் ஓடி வரவேண்டும். நிறைய மனிதர்களை நாம் சம்பாதித்து வைத்திருந்தால் இவர்கள் எல்லாம் நம்மை காக்க அவர்கள் வருவார்கள் என்று சொல்லுவதை தான் நிறைய கைகள் தாங்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

இதனை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. நாம் நடந்துக்கொள்ளும் முறையில் இது இருக்கின்றது. நாமும் அடுத்தவர்களுக்கு உதவி இருந்தால் தான் ஓடி வருவார்கள். நாம் எதுவும் செய்யாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தால் ஒருத்தர் கூட வரமாட்டார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலகம் அவர்களின் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது போலவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சொந்தகாரர்களையும் கண்டுக்கொள்வது கிடையாது. நட்பு வட்டங்களையும் கண்டுக்கொள்வது கிடையாது என்ற ரீதியாகவே செயல்படுகின்றீர்கள்.

உயிரோடு இருக்கும்பொழுது உங்களின் கைகளை நம்பினாலும் உயிர் போன பிறகு நான்கு பேராவது உங்களின் உடலை சுமக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். நிறைய கைகளை சம்பாதியுங்கள் அடுத்த பிறகு பணத்தை சம்பாதிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 7, 2019

கர்மாவை போக்கும் பாதயாத்திரை



வணக்கம்!
          பழனி யாத்திரை இந்த வாரம் செல்கிறேன். இதனை அறிவித்த நாளில் இருந்து பல பிரச்சினைகள் எனக்கு ஏற்பட்டது இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டு இதனை செய்யவேண்டும் என்று தான் எழுதினேன். பொருட் செலவில் அதிகளவில் என்னை பாதித்துக்கொண்டு இருக்கின்றது. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதனை சமாளித்துக்கொண்டு செல்லவேண்டும் என்று உறுதியோடு இருக்கிறேன்.

நமது கர்மாவை ஒட்டுமொத்தமாகவே நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்வதற்க்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நமக்கு வரும் அதனை தாண்டி இதனை செய்யவேண்டும் என்ற உறுதியோடு செயல்படவேண்டும். உங்களிடம் அனுபவத்தில் எப்படி நடக்கும் என்பதை காட்டுவதற்க்கு இதனை செய்தேன்.

கர்மா என்ற ஒன்று இருக்கின்றதா என்பதை நாமே சோதித்து பார்ப்பதற்க்கு கூட இப்படிப்பட்ட செயலை செய்து பார்த்து நாமே தெரிந்துக்கொள்ளலாம். பாதயாத்திரை ஒரு செயல் என்றாலும் பல ஆன்மீக செயல் எல்லாம் செய்யும்பொழுது தான் நமது கர்மா நம்மிடம் இருந்து விலகும்.

ஜாதகத்தில் நிறைய தோஷங்களை கொண்ட ஜாதகர்கள் எல்லாம் இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களின் தோஷங்கள் எல்லாம் விலகி உங்களின் வாழ்க்கை மட்டும் இல்லை உங்களின் வாரிசுகளின் தோஷங்களும் நீங்கும் என்பதை மட்டும் நீங்கள் புரிந்துக்கொண்டு செயல்படுங்கள்.

ஒருவருக்கு வாழ்க்கை என்பது நல்ல வாழ்க்கை அமைந்தாலும் வீழ்ச்சி இல்லாத வாழ்க்கை அடையவேண்டும் என்பதற்க்காக தான் இப்படிப்பட்ட ஆன்மீக செயல்கள் எல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு. கண்டிப்பாக உங்களின் வாழ்க்கைக்காகவும் உங்களின் வாரிசுகளின் வாழ்க்கைக்காகவும் முயற்சி எடுங்கள்.

உங்களுக்கு வருகின்ற பிரச்சினையே கூட உங்களால் தடுக்கமுடியவில்லை அடுத்தவர் பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும் என்று உங்களின் மனது கேட்கும். பொதுவாக இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்பொழுது என்னுடைய ஆன்மீக சக்தியை நான் பயன்படுத்துவது கிடையாது நம்முடைய கர்மாவை மட்டுமே போக்குவதில் மட்டுமே காட்டி அதனை அனுபவமாக உங்களுக்கு கொடுக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு