Followers

Monday, September 30, 2019

வாரிசுகளுக்கு புண்ணியம்


வணக்கம்!
          நவராத்திரி அம்மன் யாகம் மற்றும் பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. நவராத்திரி அம்மன் யாகம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும்.

நம்முடைய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் என்பது நமது வாரிசைக்காட்டிக்கொடுக்ககூடிய ஒரு இடம் என்பது உங்களுக்கு தெரியும் அதே நேரத்தில் இன்றைய ஜென்மத்தில் நீங்கள் நல்லதை செய்யும்பொழுது மட்டுமே உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

இந்த காலத்தில் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்று பலர் போராடுகின்றனர். அதே நேரத்தில் சொத்து சேர்க்கும்பொழுது அது நல்லவழியில் தான் சேருகின்றதா என்பதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

பலர் சொத்து சேர்க்கும்பொழுது கண் தெரியாமல் சம்பாதிக்கின்றனர். பாவத்தில் சொத்தை சேர்க்கும்பொழுது நமக்கு சந்தோஷமாக தெரியும். வாரிசுகள் கஷ்டப்படும்பொழுது தான் நமக்கே புரியவரும். பெரும்பாலான பணக்காரர்களின் வாரிசுகள் வீணாக போய்விடுகின்றனர்.

பணம் சம்பாதிக்கவேண்டாம் என்பதில்லை அதோடு சேர்ந்து நிறைய புண்ணியத்தையும் சேர்த்தால் நல்லது. பணம் காப்பாற்றுகின்றதோ இல்லையோ உங்களின் புண்ணியம் கண்டிப்பாக உங்களின் வாரிசுகளை காப்பாற்றும்.

உங்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எப்படி பாதிக்கபட்டாலும் சரி நீங்கள் விபரமாக செயல்பட்டால் பூர்வபுண்ணியத்தை சரி செய்துக்கொள்ளமுடியும். உங்களின் ஒய்வு நேரத்தில் தர்ம சிந்தனையோடு எந்த காரியத்தை எல்லாம் செய்யலாம் என்பதை பார்த்து செய்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 28, 2019

தஞ்சாவூர் ஓவியம்


வணக்கம்!
          புகைப்படங்கள் என்றவுடன் ஒன்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து  வீடுகளில் மாட்டிவைக்கும் பழக்கம் நிறைய செல்வந்தர்களிடம் காணப்படும். வீட்டில் சும்மா ஏதோ படத்தை வாங்கி மாட்டிவைக்காமல் அந்த படத்தின் வழியாகவும் நன்மை நடைபெறவேண்டும் என்று நினைத்து நமது மக்கள் செயல்பட்டு இருக்கின்றனர்.

நமது படத்தை வீட்டில் மாட்டி வைக்காமல் ஒரு படம் வைத்தாலும் அந்த படத்தின் வழியாக அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மை தரவேண்டும் என்று எண்ணி தஞ்சாவூர் ஒவியத்தில் வரைந்த கடவுளின் படங்களை வைத்திருக்கின்றனர்.

பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் எல்லாம் இந்த தஞ்சாவூர் ஒவியத்தை வரைந்து வைத்திருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனை நாமும் செயல்படுத்தலாம். தஞ்சாவூர் ஒவியம் செலவு அதிகமாக இருந்தாலும் அதில் இருந்து பயன் அதிகம் என்பதால் இதனை செய்யலாம்.

என்னுடைய தேவைக்கு என்று நான் இதுவரை வாங்கவில்லை. இதனை வாங்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கின்றது. அதற்கு காலம் வரும்பொழுது அதனை செயல்படுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன்.

தஞ்சாவூர் ஒவியத்தில் அப்படி என்ன விஷேசம் இருக்கின்றது என்று கேட்கலாம். இதனைப்பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லுவார்கள். என்னை கேட்டால் இதனை வைத்திருப்பவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்பதை மட்டும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 27, 2019

முன்னோர்களின் புகைப்படங்கள்


வணக்கம்!
          நிறைய பேர்கள் வீட்டில் அவர் அவர்களின் முன்னோர்களின் படங்களை வைத்து வணங்குவார்கள். ஒரு சில வீடுகளில் இது அதிகமாகவே வைத்துவிடுவார்கள். இதனை வைக்கவேண்டாம் என்று சொல்லவில்லை குறைவாக வைத்துக்கொள்ளலாம்.

அமாவாசை வருகின்றது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்யுங்கள். முன்னோர்களின் படங்களை வைத்து வணங்கவேண்டியதில்லை அவர்களுக்கு தேவையான சடங்குகளை மட்டும் செய்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களின் படங்களை வைப்பதிலும் நம்ம ஆட்களோடு திறமையான மூளையை பயன்படுத்துவார்கள். அவர்களின் முன்னோர்களில் யார் அதிகமாக சம்பாதித்தார்களோ அவர்களின் புகைப்படங்களை அதிகமாக வைத்திருப்பார்கள்.

ஒரு சில வீட்டில் சொத்தை அதிகமாக சேர்த்து கொடுத்துவிட்டு சென்றவர்களின் புகைப்படங்களை வைத்திருப்பார்கள். இது அவர்கள் பயன்பெற்றதால் வைத்திருக்கலாம். முன்னோர்களில் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் வையுங்கள் மற்றும் வழிபாட்டை செய்யுங்கள்.

உங்களில் முன்னோர்களுக்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான சடங்குகளை செய்து அவர்களின் ஆசியை பெறுங்கள். அனைவரின் ஆசியையும் பெற்று நல்ல முறையில் வாழ்வதற்க்கு புரட்டாசி அமாவாசையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 25, 2019

பூர்வபுண்ணியமும் தீயகிரகமும்


வணக்கம்!
          எல்லோருக்கும் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பொழுது தான் அவர்களுக்கு வாரிசுகள் உருவாகும். வாரிசுகள் உருவாகி அது நன்றாக  வளரவேண்டும் என்றாலும் அதற்கும் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கவேண்டும்.

பூர்வபுண்ணியத்தால் குழந்தை கிடைத்தாலும் அவர்களின் வளர்புமுறையிலும் குழந்தைகளின் எதிர்காலம் இருக்கின்றது. அதோடு அவர்களின் பூர்வபுண்ணியமும் நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள்.

பூர்வபுண்ணியத்தில் தீயகிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பார்கள் அப்படி அல்ல. குழந்தைகள் இருக்கும் அவர்களின் வளர்ச்சி என்பது கொஞ்சம் சரியில்லாமல் இருக்கும்.

பூர்வபுண்ணியத்தில் தீயகிரகங்கள் குழந்தையை கொடுப்பதில் தாமதப்படுத்தினால் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஏன் என்றால் முன்கூட்டியே கஷ்டத்தை கொடுத்து குழந்தையை கொடுத்த காரணத்தால் வளர்ச்சி இருக்கும்.

குழந்தையை உடனே கொடுத்தால் அந்த குழந்தையின் வளர்ச்சியில் அது விளையாடபோகின்றது என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.  எப்படி இருந்தாலும் நீங்கள் அதிக கவனத்தை இதில் போட்டால் ஒரளவு நல்ல வளர்ச்சியை காணமுடியும்.

நவராத்திரி விழா ஆரம்பிக்க போகின்றதால் நவராத்திரி அம்மன் யாகத்தை செய்ய விருப்பம் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 24, 2019

கோச்சாரபலன்


வணக்கம்!
          கோச்சாரபலன்களில் நாம் சனியைப்பற்றி பார்த்து பயப்படுவது உண்டு அதன்பிறகு இராகு கேது மற்றும் குரு இது போன்ற கிரகத்தை வைத்து கோச்சாரபலன்களில் பயப்படுவது உண்டு. ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனி என்று பெயரை வைத்து பயந்துக்கொண்டு இருப்போம்.

இவர்களை எல்லாம் விட தினமும் ஒருவரை படுத்தி எடுக்கும் சந்திரனின் பலன் மிகப்பெரிய பயமாகவே அனைவருக்கும் இருக்கும். இதனை நாம் அந்தளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் சந்திராஷ்டத்தை வைத்து நாம் பயப்படுவது உண்டு.

தினமும் நீங்கள் சந்திரன் செல்லுவதை வைத்து பார்த்தாலே முக்கால்வாசி அது நமக்கு ஆப்பு அடிப்பது போலவே செயல்பட்டுக்கொண்டு இருப்போம். நாம் மெதுவாக செல்லும் கிரகத்தை பார்த்து பயப்படுவோம் உதாரணத்திற்க்கு சனிக்கிரகத்தை.

சந்திரனின் சுழற்சி தான் பெரும்பாலும் மனிதனுக்கு பெரிய சிக்கலை உருவாக்கி கொடுத்துவிடுகின்றது. இதனை நன்கு கவனித்து பார்த்தால் உங்களுக்கு புலப்படும். பெரிய கிரகத்தை பார்த்து கோச்சாரபலன்களில் பயப்படவேண்டாம். சந்திரனை பார்த்து பயப்படுங்கள்.

சந்திரன் மனதிற்க்கு காரணம் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். மனதை போட்டு பாடாய்படுத்தி மனிதனை காலி செய்துவிடுகின்றது. சந்திரனை வைத்து தினமும் பொதுபலன்களை சொன்னாலும் உங்களுக்கு அது எப்படி வேலை செய்கின்றது என்று பாருங்கள். அது வைத்து என்ன என்ன வேலை செய்யலாம் என்பதை தீர்மானியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 22, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
 நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.   

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்                                         

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

இரண்டு பேரில் நீங்கள் ஒருவர்


வணக்கம்!
          கடந்த காலத்தில் ஒரு ஊரில் நூறு பேர் வசித்து வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு நபர் மட்டும் நல்ல விபரமாக இருந்து அந்த ஊரில் பெரிய செல்வந்தராக இருப்பார்கள் மற்றவர்கள் அனைவரும் ஏதோ வாழ்கிறோம் என்றபடி வாழ்ந்து இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் அனைவரும் விபரமாக இருந்து ஒரளவு நன்றாக இருக்கின்றனர் அதே நேரத்தில் இதிலும் இரண்டு பேர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்கள். உலகத்தில் உள்ள விதிப்படியே இரண்டு பேருக்கு மற்றவர்கள் அனைவரும் உழைக்கவேண்டும் என்பது போலவே இருக்கும்.

பெரும்பாலும் நமது நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்வது அனைத்திலும் ஈடுபாட்டோடு செய்யுங்கள். அதே நேரத்தில் அடுத்த விசயம் என்று ஒதுங்காமல் முயற்சி செய்து அனைத்திலும் பங்குக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன்.

இங்கு உள்ள பலருக்கு என்ன என்றால் நம்முடைய வேலை உண்டு நாம் உண்டு என்று இருப்பார்கள். ஏன் தேவையில்லாத வேலை என்று இருந்துவிடுவார்கள். அடுத்த விசயம் தேவையில்லை என்றாலும் மிகப்பெரிய இடத்தில் சாதிக்கும் நபர்கள் அனைவரும் அனைத்திலும் பங்குக்கொண்ட காரணத்தால் மட்டுமே வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.

உங்களிடம் நிறைய சக்தி இருக்கின்றது. அதனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்த்து பயன்படுத்தினால் கண்டிப்பாக நீங்கள் இருக்கும் ஊரில் அந்த இரண்டு பேரில் நீங்கள் ஒருவராக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 21, 2019

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஒரு சில காலக்கட்டத்தில் நான் ஒரு நினைப்பை நினைத்தேன் அதாவது நான் இறப்பது இந்த மருத்துவமனையில் இருக்கலாம். இந்த ஊரில் இப்படி இந்த மருத்துவமனையில் இறக்கலாம் என்ற ஒரு நினைப்பது அது. என்னடா இப்படி எல்லாம் நினைக்கலாமா என்று உங்களுக்கு தோன்றும் ஆனால் இது உண்மை.

நான் நினைத்த காலக்கட்டத்தில் நான் ஆன்மீகவாதி எல்லாம் இல்லை. அப்பொழுது இளமையான ஒரு காலக்கட்டத்தில் அதனைப்பற்றி நினைத்தேன். இது தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் ஏதோ எனக்குள் தோன்றியது அதனைப்பற்றி நினைத்தேன்.

ஒரு முறை நினைத்தால் பரவாயில்லை பலமுறை இதனைப்பற்றி நினைத்த காரணத்தால் அதுபோலவே ஒரு சூழல் எனக்கு உருவானது. சம்பந்தப்பட்ட ஊரில் நான் வசிப்பது போலவும் அது அமைய நேரிட்டது. நாம் என்ன நினைத்தோமோ அதனை உருவாக்க சூழலை உருவாக்கி வந்தது. அதன்பிறகு தான் இந்த எண்ணம் சரியில்லை என்பதை உணர்ந்து அதனை தவிர்த்து அதில் இருந்து மீண்டேன்.

உங்களுக்கு இதில் என்ன கிடைக்கின்றது என்றால் நாம் நினைப்பது ஒரு சாவாக இருந்தாலும் நமது மனது அதனை நோக்கி இழுத்துச்செல்கின்றது என்பதை உங்களுக்கு புரியவைக்க தான் இதனை சொன்னேன். நீங்கள் நினைக்கும் அனைத்தும் உங்களின் வாழ்வில் பெரும்பாலும் நடந்துவிடும்.

நமது எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையை அதிகமாக உருவாக்கும். நல்ல எண்ணங்களாக இருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். என்னைபோல ஒரு கிறுக்குதனமான ஒரு எண்ணமாக இருந்தால் என்ன செய்வது இது போல உங்களுக்கும் தேவையில்லாத எண்ணங்கள் வரும் அதனை அப்படியே அசைப்போட்டுக்கொண்டு அந்த எண்ணத்தை வலு சேர்த்துவிடாதீர்கள்.

நம்மூரில் பல பேர் அமெரிக்கா சென்று செத்துவிடவேண்டும் என்று நினைப்பார் அது போலவே நிறையவும் நடந்து இருக்கின்றது. இதனை எல்லாம் ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு உங்களின் நல்ல எண்ணங்களை உருவாக்குங்கள் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கிகொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புரட்டாசி விரதம்


வணக்கம்!
          புரட்டாசி விரதம் அதிலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் என்ற ஒன்று பெரிய விஷேசமான ஒரு விரதமாகவே பல இடங்களில் நடைபெறும். எங்களின் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரில் எல்லாம் இந்த நிகழ்வு நடைபெறும். எங்களின் ஊரில் இது இல்லை.

புரட்டாசி விரதம் சனிக்கிழமை தோறும் புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும். இந்த மாதத்தில் அசைவ உணவை தவிர்த்துவிடுவார்கள்.  மிக மிக சுத்தமாக இருப்பார்கள். வெளியில் ஏதோ ஒரு பக்கத்து ஊருக்கு சென்று வந்தாலும் உடனே வீட்டிற்க்குள் நுழையமாட்டார்கள். வெளியில் குளித்துவிட்டு தான் வீட்டிற்க்குள் நுழைவார்கள்.

வீட்டை அந்தளவுக்கு சுத்தமாக வைத்திருப்பார்கள். சனிக்கிழமை ஏதோ ஒரு நாளில் அனைவரையும் அழைத்து விருந்து அதாவது அன்னதானம் செய்துக்கொடுப்பார்கள். இது புரட்டாசி விரதம் பிடிக்கும் அனைவரின் வீட்டிலும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

புரட்டாசி விரதம் பெருமாளுக்காக பிடிக்கும் ஒரு விரதம். இதில் சுத்தமாக இல்லை என்றால் பெருமாள் அந்த குடும்பத்தை அழித்துவிடுவார் என்று கூட சொல்லுவார்கள். பெரும்பாலும் நான் பார்த்தவரையில் இந்த விரதம் பிடிக்கும் நபர்கள் ஒரு சில காலங்களில் மிகுந்த ஒரு வளர்ச்சியை நோக்கி செல்கின்றனர்.

ஒரு சில குடும்பங்கள் வீணாக போய்விடுகின்றன. அதாவது புரட்டாசி விரதம் பிடிக்கும் குடும்பம் வீணாக போனால் அந்த குடும்பத்தில்  ஒன்றும் இல்லாத நிலையில் போய்விடுகின்றனர். இது எதற்காக இப்படி நடக்கின்றது என்பது தெரியவில்லை. புரட்டாசி விரதம் நல்லதா அல்லது கெடுதலா என்று கேட்கலாம். ஒட்டுமொத்த குடும்பமும் சுத்தமாக இருந்தால் நல்லது அப்படி இல்லை என்றால் கெடுதல் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 20, 2019

நல்ல சக்தி


வணக்கம்!
          அம்மனை கும்பிடுபவர்கள் நவராத்திரி தினத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும். நவராத்திரி காலத்தில் நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் கவனத்தை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் போதும் அம்மனின் முழுசக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.

பணக்காரன் பணக்காரனோடு சேருவான். ஏழை ஏழையோடு சேருவான். பணக்காரனின் எண்ணம் எல்லாம் ஒரே மாதிரியாக பெரும்பாலும் வளர்ச்சியை நோக்கியே செல்லும். ஏழைகளின் எண்ணம் எல்லாம் பிரச்சினை பிரச்சினை என்றே இருக்கும்.

பாசிடிவ் எண்ணத்தை கொண்டவர்களுக்கு வளர்ச்சி என்பது இருந்துக்கொண்டே இருக்கும். பாசிடிவ் எண்ணத்திலேயே பல பணக்காரர்கள் இருக்கின்றனர். இதனை அவர்கள் வளர்த்துக்கொள்கின்றனர்.

நெகடிவ் எண்ணத்திலேயே இருந்துக்கொண்டு ஏழைகள் தானும் கெட்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் கெடுத்துவிடுகின்றனர். நீங்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி நீங்கள் தொடர்பு வைத்திருப்பது பெரும்பாலும் பணக்காரர்களாக இருந்தால் நீங்களாகவே நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

பணக்காரர்கள் ஏன் ஏழைகளை ஒதுக்குகின்றனர் என்றால் அவர்களிடம் உதவி கேட்டுவிடுவார்கள் என்ற பயத்தால் தான் ஒதுக்குவார்கள். அவர்களின் நல்ல சக்தியை மட்டுமே நீங்கள் உறிஞ்சினால் போதும் என்று நீங்கள் பழக ஆரம்பித்தால் விரைவில் நீங்களும் பணக்காரர்களாக மாறிவிடுவீர்கள்.

உங்களின் ஜாதகத்தில் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் சரி நீங்கள் அதனைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் பணக்காரர்களோடு தொடர்பில் மட்டும் இருங்கள் அது போதுமானது. உங்களின் தோஷத்தை மீறி நீங்கள் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 19, 2019

கெட்ட நேரத்தில் கெட்ட கனவு


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் தசா நடைபெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர்க்கு நடப்பது அனைத்தும் கெடுதலாகவே இருந்தாலும் அவர் காணும் கனவும்  பயங்கரமாகவே இருக்கும். இரவிலும் தூக்கமுடியாமல் பயமுறுத்திக்கொள்ளும்.

கெடுதல் தசா காலத்தில் தூக்கம் என்பது வராது அப்படியே வந்தாலும் கனவில் கெட்ட கெட்ட கனவுகளாகவே வரும்.  கனவிற்க்கும் நமது வாழ்விற்க்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது. ஒரு சிலருக்கு கனவில் காணும் அனைத்தும் நடக்கும்.

கெடுதல் தசா காலத்தில் நிறைய கெடுதலை கொடுப்பது போலவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வரும் இது அவர்க்கு நடப்பது குறைவாகவே இருந்தாலும் அவர் நிம்மதி இன்றி தவிப்பது போலவே இருக்க செய்ய வைத்துவிடுகின்றது.

எனக்கு இராகு தசா நடக்கும் காலத்தில் நடந்த கனவுகள் பெரும்பாலும் எனது வாழ்க்கையில் அப்படியே நடந்தும் இருந்தது. இராகு தசாவில் பெரும்பாலும் நிறைய கெடுதல் எனக்கு நடந்தது அது நான் கண்ட கனவு போலவே இருந்தது.

கனவு தானே என்று இருந்துவிடாமல் அதில் நடக்கும் விசயம் என்ன என்பதையும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் உங்களுக்கு நிறைய விசயங்கள் உங்களுக்கு நடக்கும். அதனை தவிர்க்க நீங்கள் தியானம் செய்யுங்கள். நிறைய கோவில்களுக்கு சென்று வாருங்கள்.

நவராத்திரி அம்மன் யாகம் செய்ய வேண்டுபவர்கள் உடனே தகவலை தெரிவியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 18, 2019

உங்களின் மாமனார் எப்படி இருப்பார்?


வணக்கம்!
          தொடர்ச்சியான மழை காரணத்தால் இரண்டு நாட்களாக கோவில் வேலை நடைபெறவில்லை. மழை நின்றவுடன் கோவில் கட்டுமானம் நடைபெறும்.

இன்று ஒரு ஜாதகத்தை பார்க்கும்பொழுது அவர் என்னிடம் ஒரு கேள்வியை வைத்தார். நாம் திருமணம் செய்யும் பெண்ணின் தந்தையைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். வித்தியாசமான கேள்வியை வைத்தார். 

நம்முடைய ஜாதகத்தில் ஏழாவது வீடு நமக்கு வரும் துணையைப்பற்றி காண்பிக்கும் வீடு. ஏழாவது வீட்டிற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது நம்முடைய லக்கனத்தில் இருந்து மூன்றாவது வீடாக வரும். 

நம்முடைய ஜாதகத்தில் மூன்றாவது வீடு நம்முடைய துணையின் தந்தையைப்பற்றி காண்பிக்கும் வீடு. மூன்றாவது வீட்டில் முக்கியமாக கேது இருந்தால் நமக்கு மாமனார் இருக்கமாட்டார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். 

மூன்றாவது வீட்டில் சுபக்கிரகம் இருந்தால் அல்லது அந்த வீடு சும்மாக இருந்தால் மாமனார் இருப்பார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாவது வீட்டை துணையின் தந்தையின் லக்கனமாக எடுத்துக்கொண்டு பலனை பார்த்தால் சரியான பலனை சொல்லலாம்.

மூன்றாவது வீட்டின் நிலையை பொறுத்து தான் மாமனாரின் வழியாக உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லலாம். ஒரு சிலருக்கு மாமனார் நிறைய உழைத்து சம்பாதித்து கொடுப்பார் அதற்கு எல்லாம் மூன்றாவது வீடு நன்றாக இருக்கும்.

மூன்றாவது வீட்டில் குரு இருந்தால் உங்களின் மாமனார் நல்ல ஆன்மீகவாதியாக மிகவும் தரமான மனுசனாக இருப்பார். புதன் இருந்தால் நல்லவராகவும் அதே நேரத்தில் நல்ல புத்திசாலியாகவும் மதிப்பு மிக்கவராகவும் இருப்பார். தொழில் செய்து வாழ்பவராகவும் இருப்பார்.

சனிக்கிரகம் இருந்தால் மாமானார் சரியில்லாதவராகவும் இருப்பார். ஒரு சிலருக்கு நுடமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு மாமனார் இல்லாதவராகவும் இருப்பார். இராகு இருந்தால் குடிக்காராக இருப்பார்.

உங்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டால் உங்களின் மாமனார் எப்படி இருப்பார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்தை சரி செய்வதற்க்கு முன்பு உங்களின் பெயரை கொஞ்சம் சரி செய்யுங்கள். உங்களின் முதல் அடையளமாக இருக்கும் பெயரை மிகச்சரியாக தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் பெயரை நான் சோதிடத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள தேவையில்லை. இந்த பெயர் உங்களுக்கு வைத்தால் நன்றாக இருக்குமா என்று யோசித்து அதன்படி வைத்துக்கொள்ளுங்கள். 

உங்களின் இராசிப்படி பெயரை தேர்ந்தெடுக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்கு தெரிந்த பெயர்களை பார்த்து இந்த பெயரை வைத்தவர்கள் நன்றாக இருக்கின்றார்களா என்று பாருங்கள். 

அவர்கள் நன்றாக இருக்கும்பட்சத்தில் அதுபோல உள்ள பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளலாம். ஏன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். பல இடங்களில் நல்ல பெயரை தேர்ந்தெடுத்தவர்கள் நன்றாக இருப்பார்கள்.

வீணாக போன பெயர்களை நீங்கள் வைத்திருந்தால் உங்களின் ஜாதகத்தில் நல்ல கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் உங்களின் பெயர் இராசிக்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கையும் வீணாக சென்றுவிடும். முடிந்தவரை ஒரு ஆராய்ச்சி செய்து உங்களின் பெயரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 17, 2019

ஜாதக பலன்


வணக்கம்!
          ஒருவரின் நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு அவரின் பாவத்தைப்பற்றி சொல்லி அதற்கு தீர்வு கண்டுபிடிக்கலாமா என்று நண்பர் ஒருவர் கேட்டுருந்தார். 

நட்சத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர்க்கு தீர்வு காணமுடியாது அவரின் ஜாதகத்தில் அமர்ந்த ஒன்பது கோள்கள் மற்றும் துணைக்கு மாந்தியையும் சேர்த்து பார்த்து அதற்கு வழியை தேடவேண்டும். 

வெறும் நட்சத்திரத்தை மட்டும் வைத்தால் உங்களுக்கு ஜாதக கட்டமே  தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு பொதுபலனை சொல்லலாம். நட்சத்திரத்தை மட்டும் வைத்து பலனை சொல்லிவிடமுடியாது.

நட்சத்திரம் மட்டும் போதும் என்றால் கிரகத்தை கண்டுபிடித்து இருக்கமாட்டார்கள் அல்லவா. சோதிடத்தில் சொல்லப்பட்ட அனைத்து விசயத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னால் மட்டுமே சரியாக வரும் அப்படி இல்லை என்றால் தவறாகவே அனைத்தும் போய்விடும்.

ஜாதகத்தில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார்போல் பலனை பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையிலேயே ஒருவர் அதிக தோஷத்தை உடையவரா அல்லது குறைந்த தோஷத்தை உடையவராக இருக்கின்றா என்பதை எல்லாம் ஜாதகத்தின் உள்ள கிரகங்கள் தான் தீர்மானிக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 16, 2019

ஆன்மீக அனுபவம்


வணக்கம்!
          ஆன்மீக அனுபவம் எழுதி நீண்ட நாள்கள் சென்றுவிட்டது. இன்று அதனைப்பற்றி எழுதவேண்டும் என்ற ஒரு தூண்டுதல் வந்தது உடனே அதனை தொடங்கிவிட்டேன். மரணம் நடக்கும்பொழுது பழைய பதிவில் சொல்லிருந்தேன் மரணம் எய்துபவர்களுக்கு வலி இருக்காது என்பதை சொல்லிருந்தேன்.

இயற்கையாக மரணம் எய்தும் நபர்களுக்கு முதலில் வலி என்பது இருக்கின்றது. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆள்கொள்ளும்பொழுது அந்த வலி குறைந்துவிடுகின்றது. அதோடு சம்பந்தப்பட்ட நபர் ஒரு நீண்ட தூக்கத்திற்க்குள் செல்வது போன்ற ஒரு நிலை ஏற்படுகின்றது.

முதலில் உள்ள வலி என்பது அதிகமாக தான் இருக்கின்றது அதன்பிறகு அது குறைந்துவிடுகின்றது. உடனே மரணம் வந்துவிடுவதால் வலியின் வேகம் குறைந்து மரணத்திற்க்குள் நாம் சென்றுவிடுகிறோம்.மரணத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு நீங்கள் அனுபவத்தை சொல்லுகின்றீர்களாக என்று கேட்கலாம். ஒரு சில விசயங்கள் நடந்து அதனை காண்பித்து கொடுக்கும்பொழுது அதனைப்பற்றி பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.

எப்படி பார்த்தாலும் சரி ஒருவரின் மரணம் எப்படி ஏற்படும் என்பது முன்கூட்டியே திட்டமிட்டபடி தான் நடக்கின்றது. நாம் ஆன்மீகத்தில் இருப்பதால் நாம் அதனை சோதிடத்தின் வழியாக தெரிந்துக்கொள்கிறோம். ஒரு சிலருக்கு தன்னுடைய சுயஉணர்வால் தெரிகின்றது. 

ஒரு சிலருக்கு அவர்களின் கர்மவினைப்படி நடக்கின்றது. ஒரு சிலருக்கு அவரின் நினைப்பிற்க்கு தகுந்தமாதிரி நடக்கின்றது. அதாவது நமது மரணம் இப்படி தான் நடக்கவேண்டும் என்று நினைப்பில் ஒரு சிலருக்கு நடக்கின்றது. எதுவாக இருந்தாலும் சரி நல்லதை மட்டுமே நினையுங்கள் அதனையே செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 13, 2019

தெய்வநிலை


வணக்கம்!
          நிறைய பேர்கள் நான் நல்ல ஆன்மீகவாதியாக இருக்கிறேன். நான் நிறைய கோவிலுக்கு சென்று வருகிறேன். நிறைய பூஜைகளை செய்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. என்னுடைய காரியம் எதுவும் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லுவார்கள். பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்ட வார்த்தையும் உங்களிடம் வைத்திருக்கலாம்.

இவர்களை நன்றாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒரு விதத்தில் சரியில்லாமல் இருப்பார்கள். இவர்களின் கர்மா என்று சொல்லுவதை விட இவர்களின் நடத்தை அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கும். இவர்கள் உங்களிடம் ஏதோ ஒன்றை கேட்டு அதனை நீங்கள் செய்யாமல் இருந்தால் அவர்கள் உடனே அவர்களின் எதிர்மறை குணத்தை காட்டுவார்கள்.

எதிர்மறை குணத்தை காட்டுவது தவறு என்று சொல்லவில்லை ஆனால் ஆன்மீகம் என்பது எதனையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவநிலை. இதனை இப்படி சொல்லலாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் உன்னை பற்றிக்கொண்டதை விடமாட்டேன் என்ற நிலை என்று சொல்லலாம்.

மனிதனை ஒரே மாதிரியாக பார்க்கும் ஒரு பக்குவப்பட்ட நிலையாக இருக்கவேண்டும். ஒரு தெய்வத்திடம் நாம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது தான் நம்மை நாடி இறை அருள் கிடைக்கும். இது இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

பலர் ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஒப்பாத ஒரு நிலையில் இருக்கின்றனர். இதனை நீங்கள் எடுத்துவிட்டால் உங்களிடம் ஒரு நல்ல சக்தி குடிக்கொள்ளும். உங்களை நோக்கி அனைத்தும் ஈர்க்கப்பட்டு வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஒன்பதில் இராகு


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் தீயகிரகமான இராகு கிரகம் இருந்தால் பெரும்பாலானவர்களின் கணிப்பு இவர் சரியில்லாத ஒரு ஆள். இவர்க்கு நிறைய காரிய தடை ஏற்படும் என்று சொல்லுவது உண்டு.

ஒன்பதில் இராகு கிரகம் இருந்தால் அது பித்ருதோஷத்தை காட்டுகின்றது அதனால் இவர்க்கு தடைகள் நிறைய ஏற்படும். இவரால் சாதிக்கமுடியாது என்று சொல்லுவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட கணிப்பு தவறாகவே அமைகின்றது.

ஒன்பதில் இராகு கிரகம் என்று எடுத்துக்கொள்ளகூடாது. பொதுவாக அப்படியே நாம் கணிக்க கூடாது. இராகு கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது. இராசி அதிபதியின் நிலை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் பலனை சொல்லவேண்டும்.

ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் இளம்வயதில் அவரின் தந்தை சரியில்லாத நிலை இருந்தால் தான் அவரின் இளமை பருவம் பாதிப்படையும். தந்தை சரியாக இருந்தால் இளமை பருவமும் நன்றாக இருக்கும். அவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

வறுமையில் தந்தை இருந்த காலக்கட்டத்தில் ஒன்பதில் இராகு இருந்தால் பிரச்சினை தான் இல்லை என்றால் பெரியதாக பாதிப்பதில்லை. பெரும்பாலான ஜாதகர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்க்கின்றனர்

பெரிய காரியத்தை எல்லாம் செய்யக்கூடிய ஆட்கள் யார் என்று பார்த்தால் இந்த ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் ஆட்களாக தான் இருப்பார்கள். ஒன்பதில் இராகு உங்களுக்கு இருந்தால் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று நினைத்து செயல்படுங்கள். நன்றாக உங்களால் வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 12, 2019

அம்மன் கோவில்


ணக்கம்!
          வழக்கமாக இருக்கும் கோவிலை விட நமது அம்மன் கோவில் அடி ஆழம் அதிகமாக தோண்டி எடுக்கப்பட்டு அதன்பிறகு பேஷ் போடப்பட்டு வருகின்றது. கோவில் இருக்கும்பகுதி வயல் மற்றும் குளம் இருப்பதால் அதிகளவில் தண்ணீர் இருக்கும் பகுதியால் அதிகமான ஆழத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கின்றது.

மரங்களின் வேர்களும் கோவிலை தாக்கி பிற்காலத்தில் சேதம் விளைவிக்க கூடாது என்பதாலும் இதனை கணக்கில் கொண்டு கட்டப்பட்டு வருகின்றது. வேலையும் வேகமாக தான் செய்கின்றனர். இந்த காரணத்தால் தான் மேல் வருவதற்க்கு நாள்கள் எடுகின்றன.

வீடுகள் போல் இல்லாமல் கோவில்கள் கட்டுவதற்க்கு வித்தியாசமாக தான் வேலை செய்கின்றனர். கோவிலுக்கு என்று நிறைய விதிகளை வைத்து அதன்படி செய்கின்றனர். இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால் நமது நேரடி பார்வையில் கோவில் கட்டுவதால் நேரடி அனுபவம் ஏற்படுகின்றது. எதிர்காலத்தில் நீங்கள் கோவில் கட்டும்பொழுது என்னுடைய அனுபவம் உங்களுக்கு பயன்படலாம்.

நமது அம்மன் கோவிலுக்கு நமது நண்பர்களால் நிறைய உதவி கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்த உதவிகள் தான் நமது அம்மன் கோவிலை சிறப்பாக செய்வதற்க்கு உதவியாக இருக்கின்றது. அவர் அவர்களும் அவர்களின் நண்பர்களின் வட்டத்தில் இருந்தும் உதவியை செய்கின்றனர். உங்களின் உதவி தொடர்ச்சியாக இருக்கட்டும். இந்த உதவியை தான் நான் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 10, 2019

கெடுதல் தரும் கிரகம் நல்லதை செய்யும்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கெட்டகிரகத்தை பார்த்து நாம் பயப்படுவோம் ஆனால் இந்த கெட்டகிரகங்கள் ஒரு சில காலங்களுக்கு பிறகு நல்லதை செய்ய ஆரம்பித்துவிடுகின்றது. பலரின் வாழ்வில் இது நடந்து இருக்கின்றது.

ஒருவருக்கு பித்ரு தோஷமே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பித்ரு தோஷத்திற்க்குரிய கிரகம் என்று பார்த்தால் மூன்றில் கேது மற்றும் ஒன்பதில் இராகு இந்த அமைப்பை உடையவர்களுக்கு பித்ரு தோஷம் என்று சொல்லுவார்கள்.

பித்ருதோஷம் உடையவர்கள் இளைமையில் கஷ்டப்பட்டாலும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு இவர்களால் சமுதாயத்திற்க்கு நல்லது நடக்கும். சமுதாயத்திற்க்கு ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று இவர்கள் செயல்பட்டு செய்வார்கள்.

இன்றைக்கு நல்லது செய்யும் ஆன்மீகவாதிகள் அனைவருக்கும் பித்ருதோஷம் உடைய ஜாதகர்கள் தான் இருப்பார்கள். இவர்களுக்கு கெடுதல் செய்த கிரகமே இவர்களுக்கு நல்லதும் செய்ய ஆரம்பித்துவிடுகின்றது.

ஒருவரின் வாழ்வில் பாதி வாழ்க்கையில் கெடுதலை செய்துவிட்டு மறுபாதி வாழ்க்கையில் பிரச்சினையை கொடுக்கின்றது. கெடுதல் தரும் கிரகம் என்றால் அது வாழ்நாள் முழுவதும் கெடுதலை மட்டுமே செய்துக்கொண்டு இருப்பதில்லை நன்மையும் செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 6, 2019

நவராத்திரி அம்மன் ஹோமம்


வணக்கம்!
          இந்த வருடம் நவராத்திரி பண்டிக்கை வரும் செப்டம்பர் 29 தொடங்குகின்றது. வருடம் வருடம் நவராத்திரி பண்டிகையில் சிறப்பு அம்மன் ஹாேமம் செய்யப்படும். இந்த வருடமும் அது நடக்க இருக்கின்றது.

நவராத்திரியில் பகல் நேரத்தில் மட்டும் செய்த இந்த ஹோமம் இந்த வருடம் முதல் இரவு நேரத்திலும் செய்யப்படும். பகல் மற்றும் இரவு என்று இரண்டு நேரமாக இதனை செய்ய இருக்கிறோம். ஒரு ஹோமத்திற்க்கு ரூபாய் 5000 கட்டணமாக வைக்கப்படுகின்றது.

நவராத்திரி காலத்தில் செய்யப்படும் பூஜை அதிகளவில் பயனை தரக்கூடியதாக இருப்பதால் இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அம்மனின் அருளை உங்களுக்கு வழங்ககூடிய ஒரு நல்ல ஹோமமாக இதனை செய்ய இருக்கிறோம்.

நவராத்திரி அம்மன் ஹோமம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் உடனே என்னை தொடர்புக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள். முன்கூட்டியே புக்கிங் செய்துக்கொள்வது நல்லது. உங்களுக்கான நாளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். உடனே புக்கிங் செய்துக்கொள்ளுங்கள்.

ஒரு வேளை ஹோமம் செய்ய 5000 ரூபாய் இது மிக குறைந்த ஒரு கட்டணமாக இதனை வைத்து இருக்கிறேன். உடனே தொடர்புக்கொள்ளவும்.

ஹோமத்திற்க்கு தேவையான சாமான்களை மட்டும் வாங்கிக்கொண்டு மீதி இருக்கும் பணத்தை அம்மன் கோவில் கட்டும்பணிக்கு பயன்படுத்த உள்ளேன். அனைவரும் இதனை செய்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் நீசம்


வணக்கம்!
          செவ்வாய்கிரகம் நீசம் அடைந்தால் அந்த ஜாதகர் நிறைய போராட்டங்களை சந்திக்கவேண்டியிருக்கும். ஒரு வேலை கூட அவர்க்கு எளிதில் அமைந்துவிடுவதில்லை. நிறைய கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்தாலும் அதிலும் பெரியதாக ஒன்றும் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

செவ்வாய் நீசத்தைப்பற்றி ஏற்கனவே நாம் சொல்லிருந்தாலும் பலர் இதனால் கஷ்டப்படுவதால் மறுபடியும் எழுதுகிறேன். கையில் பணம் வந்தாலும் அந்த பணம் அவரிடம் தங்காது. நாம் வேறு ஏதோ கிரகத்தால் இப்படி நடக்கின்றதோ என்று நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் செவ்வாய் கிரகத்தால் தான் இது நடக்கின்றது என்பதை போக போக உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.

செவ்வாய்கிரகம் நீசம் அடையும்பொழுது அந்த நபர்க்கு வருகின்ற பணம் எல்லாம் வேறு ஏதோ ஒரு தேவைக்காக செலவு செய்ய நேரிடும். கையில் பணம் வந்தவுடன் அது வேறு தேவைக்கு என்று செல்லும். காலம் முழுவதும் உழைத்துக்கொண்டே இருக்க வைக்கும்.

ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை என்று சொல்லுவார்கள் அவர்களுக்கு கூட செவ்வாய் கிரகம் தான் இந்த கடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகின்றது. செவ்வாய் நீசமாக இருக்கும் நபர்களுக்கு கடன்பிரச்சினை வருகின்றது.

செவ்வாய் நீசமாக இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று கேட்கலாம். முருகவழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பிரசித்திபெற்ற முருகன் கோவிலுக்கும் சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 5, 2019

ஆண் பாவம்


வணக்கம்!
          ஆண்களுக்கு பாவம் இல்லை என்பது அனுபவ கருத்தாக நான் உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு ஆண் தன்னுடைய தேவைக்காக இயங்குகிறான் என்பது மிக மிக குறைவாகவே இருக்கும். தன் குடும்பத்தின் தேவைக்காகவே உழைக்கிறான் அவனின் தேவை இங்கு இல்லை அல்லது குறைவு என்று சொல்லலாம்.

ஆணை இயக்கும் சக்தியாகிய பெண்களுக்கு பாவம் போய்சேரும் என்பதை சொல்லலாம். பெண்கள் தான் தூண்டும் சக்தியாக இருக்கின்றார்கள். பெண்களுக்காகவே உழைக்கும் ஆணாகவே இருக்கின்றார்கள்.

உலகில் முதன் முதலில் தோன்றியது பெண் இனம். பெண் இனத்திற்க்கு பாதுகாப்பு என்பதற்க்காக ஆண் இனத்தை படைத்தான் என்று படித்து இருக்கிறோம். ஆணிற்க்கு உள்ள தோஷம் மற்றும் பாவம் எல்லாம் குறைவாகவே இருக்கும்.

ஜாதகத்தை வைத்து நான் சொல்லவில்லை ஒரு அனுமானத்தில் இதனை சொல்லுகிறேன். தன்னை ஒரு அர்பணிப்பு வாழ்க்கையாகவே செயல்படுவதால் அர்பணிப்பில் ஏது பாவம் வந்து சேர போகின்றது. அவர்களுக்கு இருக்கும் தோஷமும் பெரியதாக வேலை செய்வதில்லை.

இதனை படித்துவிட்டு நாம் இனி மேல் பாவம் செய்யலாம் என்று இறங்கவேண்டாம். ஏதோ உங்களிடம் இதனை சொல்ல தோன்றியது அதனால் சொல்லுகிறேன். ஆண்களுக்கு பெரிய பரிகாரம் தேவைப்படாது பெண்களாக இருந்தால் அது கண்டிப்பாக தேவைப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 4, 2019

கர்மாவும் கோவிலும்


வணக்கம்!
          பல நண்பர்கள் நீங்கள் தற்சமயம் நிறைய கஷ்டப்படுகின்றீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். கோவில் கட்டும்பணியில் நிறைய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றீர்களா என்று கேட்டனர்.

கோவில் கட்டும்பணி என்பது கர்மா தொடர்புடைய வேலையை அதிகமாக கொண்ட ஒன்று. நமது கர்மாவை துடைத்து எடுக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாகவே இதனை கருதவேண்டும். நிறைய கஷ்டங்கள் என்பது இல்லை. நிறைய கஷ்டங்களை நாம் பார்த்து இருக்கின்றோம் இதனை கொஞ்சமாகவே நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் இது ஒரு பொதுவான ஒரு காரியம் என்பதால் இதில் தவறு இல்லாமல் அதே நேரத்தில் கொஞ்சம் அதிக சக்தி போட்டு செய்யவேண்டும் என்பதால் இதனை அக்கறைபோட்டு செய்கிறேன். மற்றபடி எந்தவித கஷ்டமும் இல்லை என்றே சொல்லலாம்.

இயற்கையாகவே நான் பொறுமையாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் இருப்பவன் என்பதால் இதனை எளிமையாகவே கையாள்கிறேன். கூடுமானவரை இப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு வருகின்றது.

என்னுடைய கணிப்பில் உங்களுக்கும் என்னுடைய எண்ணம்போலவே தான் இருக்கும். ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டவர்களால் தான் இத்தனை வேலையையும் செய்யமுடிகின்றது. நம்மால் தான் நிறைய சாதிக்கமுடியும் என்றும் தோன்றுகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 2, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி தாெடங்கியது


வணக்கம்!
         இன்று அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பித்துவிட்டோம். விநாயகர் சதுர்த்தி அன்று கோவில் கட்டும் பணி சிறப்பாக ஆரம்பித்துவிட்டோம். கோவிலில் நடைபெறும் பணிகளை வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறோம். 

அம்மன் கோவில் கட்டும்பணியில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து நண்பர்களும் அம்மனின் அருள் கிடைக்கும். இந்த பணியை ஆரம்பிக்க நிறைய நண்பர்களின் ஒத்துழைப்பை அளித்த காரணத்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நிறைய உழைப்பை இதற்கு என்று போட்டார்கள். இதனை நான் நன்கு அறிந்தேன். நமது நண்பர்களின் உழைப்பை கண்டு நான் வியந்து போய் இருந்தேன். ஒவ்வொருவரின் நண்பர்களின் வட்டாரத்தில் சொல்லி இதனை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அம்மன் கோவில்கட்டும் பணிக்கு நிறைய நிதி உதவி தேவைப்படுகின்றது. உங்களால் முடிந்தவரை முயற்சி செய்து இதனை தயார் செய்யுங்கள். இந்த உதவியால் உங்களுக்கு நல்லது நிறைய நடக்கும்.

அம்மன் கோவில் கட்டும் பணிக்கு உடனே நிதியுதவியை செய்யுங்கள்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறும் அதற்கு காணிக்கை செலுத்துபவர்களும் செலுத்தி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 1, 2019

விநாயகர் சதுர்த்தி


வணக்கம்!
          எனக்கு தெரிந்தவரை இந்த விநாயகர் சதுர்த்தி எல்லாம் அந்தளவுக்கு பெரியளவில் இல்லை. எனக்கு தெரிந்த ஆன்மீகவாதிகள் மட்டும் இன்று விநாயகர் சதுர்த்தி என்று சொல்லுவார்கள். நான் சிறுவனாக இருந்த நேரத்தில் எல்லாம் இப்படி சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி பெரியளவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. முடிந்தவரை இந்த பண்டிகை வைத்து நடைபெறும் வியாபாரம் என்பது பெரியளவில் நடக்கின்றது. தெருவில் செல்லமுடியாத நிலையில் மக்கள் கூட்டம் இருக்கின்றது.

விநாயகர் சதுர்த்தி மீடியா வழியாக தெரிந்தாலும் இதனை கொண்டாடும் மக்கள் மனநிலை உயர்ந்தால் சரி. அவர்களின் மூலாதாரம் நன்றாக திறந்து ஒவ்வொருவரும் பெரியளவில் உயர்ந்தால் நல்லது. மூலாதாரத்தை இயக்கி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அதுவும் எதிலும் தடை இல்லாமல் வெற்றிப்பெற்றால் நல்லது. 

விநாயகர் சதுர்த்தி அன்று பிறமதத்தில் உள்ளவர்களின் மனம் புண்படும் விதத்தில் நடந்துக்கொள்ளாமல் அமைதியாக கொண்டினால் மிகவும் நல்லது. நாம் வருடந்தோறும் இதனை சொல்லுவது உண்டு. இதனை கடைபிடித்தால் நல்லது.

விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் நான் செய்யும் காரியத்தில் தடை இல்லாமல் வெற்றி பெறவேண்டும். எடுக்கும் நல்ல காரியம் அனைத்தும் நல்லமுறையில் செயல்படவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
         பெரும்பாலும் குலதெய்வத்தை கண்டுபிடித்து சொல்லுகிறேன் என்று சொல்லுவது எல்லாம் ஒரு குத்துமதிப்பாக அடித்துவிடுவதாகவே இருக்குமே தவிர அதில் உண்மை என்பது அந்தளவுக்கு இருக்காது.

குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியாமல் நிறைய பேர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சோதிடத்தின் துணைக்கொண்டு அல்லது ஏதோ குறி சொல்லுபவர்களின் வழி காட்டுதலோடு தேடுவார்கள். இதனை வைத்துக்கொண்டு உண்மையான குலதெய்வத்தை நாடுவது சிரமமாகவே இருக்கும்.

சாேதிடர்கள் ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் இல்லை என்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை வணங்க சொல்லுவார்கள். இது நன்றாக ஆய்வு செய்து பார்த்தால் அது தவறாகவே இருக்கும்.

உங்களுக்கு முடிந்தவரை உங்களின் முன்னோர்கள் வழி எங்கு இருக்கின்றது அவர்கள் எந்த தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருகின்றனர் என்பதை அந்த நன்கு கேட்டு அறிந்துக்கொண்டு அதனை பின்பற்றி வருவது சிறப்பாக இருக்கும்.

தற்பொழுது நமது மக்கள் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் கூட முன்னோர்கள் வழிகாட்டுதல் படி தான் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  பலர் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் அவர்களின் குலதெய்வமாக இருக்காது. முன்னோர்களின் ஒருவர் ஏதோ ஒரு கோவிலில் எடுத்து வந்த வைத்த இஷ்டதெய்வத்தை கூட குலதெய்வமாக வணங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு