வணக்கம்!
அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி நாம் பார்த்தோம். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசாவாக கேது தசா வரும் என்று சொல்லலாம். அவர் அவர்களின் பிறந்த நிலையை வைத்து தசா இருப்பு என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அஸ்வினி பிறந்தவர்களுக்கு பெரிய யோகம் என்றால் அது கேது தசாவிற்க்கு பிறகு வரும் சுக்கிர தசா தான் பெரிய யோகம் என்று சொல்லலாம். சுக்கிர தசா காலம் இவர்களை ஒரு பெரியளவில் தூக்கிவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.
சுக்கிர தசா இருபது வருடங்கள் இவர்களின் வாழ்க்கையில் பொன்னான நேரமாகும். நீண்ட காலம் நல்ல தசா நடந்தால் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அள்ளி கொடுக்கும். சுக்கிரதசா காலம் இளைமை காலம் என்பதால் இவர்களை கொஞ்சம் பெற்றோர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும்.
இளைமையில் வரும் சுக்கிரதசா இவர்களை பிறர் மீது ஈர்ப்பு வருவதற்க்கு காரணமாக இருப்பதால் அந்த காலத்தில் பெற்றோர்கள் இவர்களை கவனித்து நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் இவர்கள் பிறந்த நேரத்தால் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள்.
மூன்றாவது வருவது சூரிய தசா. பொதுவாக மூன்றாவது தசா நல்லது செய்யாது என்பார்கள். இவர்களின் பெற்றோர்கள் அரசு சம்பந்தமாக கான்ரேட் எடுத்து சம்பாதிப்பது அரசு வேலையில் சேர்வது இதனை எல்லாம் சூரிய தசாவில் செய்தால் நல்ல பலனை தரும். தந்தையோடு சண்டை போடவைக்கும் அதில் மட்டும் கவனமாக இருக்கவேண்டும்.
நான்காவது வருவது சந்திர தசா இவர்களின் தாயார் உடல்நிலையில் நன்றாக கவனித்து வரவேண்டும். ஒரு சிலருக்கு இந்த தசாவில் தாயிற்க்கு மாரகம் கூட வரலாம். தாயின் வழியில் சொத்துக்கள் வரலாம். தாயின் மீது வெறுப்பு ஏற்படும். தாயோடு சண்டை சச்சரவும் ஏற்படும்.
ஐந்தாவது தசாவாக வருவது செவ்வாய் தசா. செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை அப்படி இல்லை என்றால் ஒரு சிலருக்கு மாரகதசாவாகவும் இதனை எடுத்துக்கொள்ளவேண்டும். செவ்வாய் நன்றாக இருந்தால் நிலம் சேரும். பெரிய தொழிற்சாலை வைத்து நன்றாக சம்பாதிக்கலாம்.
ராகு தசா ஆறாவது தசாவாக வரக்கூடியது. ராகு ஆறாவது தசாவாக வருவதால் நல்ல யோகத்தை வாரி வழங்கும். மேலே சொன்ன தசாவில் நல்லது நடைபெறவில்லை என்றால் இந்த தசா உங்களுக்கு அனைத்து யோகத்தையும் வழங்ககூடியது. இந்த தசாவில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஜாதக கதம்பம் தெரிய வந்திருக்கும்.
குரு தசா ஏழாவது தசாவாக வரும். இந்த தசாவும் நன்றாக இருக்கும். பெரும்பாலும் இந்த தசாவில் மரணம் வந்தால் நல்லது என்று சொல்லலாம். அப்படி இல்லை என்றால் ஆன்மீகத்தில் நல்ல நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
உங்களின் சுயஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு அடிப்படையில் பலன் மாறுபடலாம். அவர் அவர்களின் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து அந்தந்த தசாவிற்க்கும் மற்றும் கோச்சாரத்திற்க்கு தகுந்தமாதிரி உங்களின் வாழ்க்கையை செலுத்தினால் இந்த பிறப்பை எடுத்ததின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு செல்லலாம்.
ஜாதகத்தை என்னிடம் அனுப்பி ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு