Followers
Thursday, July 31, 2014
Monday, July 28, 2014
தவிர்ப்போம்
வணக்கம் நண்பர்களே!
சமூக வலை தளங்களில் உங்களின் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் நான் சொல்லுவேன் அவர்கள் யாரும் கடைபிடிப்பது போல் தெரியவில்லை. நீங்களாவது இதனை கடைபிடிப்பது நல்லது.
இன்று ஒரு தகவல்களை உங்களைப்பற்றி சேகரிக்க வேண்டும் என்றால் அது முகநூலில் இருந்தே அனைத்தையும் பெற்றுவிடலாம். அனைத்து தகவல்களையும் அதில் போட்டுவிடுகிறீர்கள். முன்பு எல்லாம் குழந்தை பிறந்தால் அதனை போட்டோ எடுக்கமாட்டார்கள். இப்பொழுது மருத்துவமனையில் இருந்து குழந்தை வெளியில் வருவது முதல் அது படிப்படியாக வளர்ச்சி கொள்வதை கூட விடாமல் பகிர்ந்துக்கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் பகிரும்பொழுது அது பிறரின் கைக்கு சென்றுவிட்டால் அது உங்களுக்கே பிரச்சினையாகிவிடும்.
ஆன்மீகவாதிகளில் முக்கால்வாசி பேர் இப்பொழுது முகநூலில் இருந்தே அனைத்து வேலையும் முடித்துக்கொள்கிறார்கள். அதனால் இனிமேல் உங்களைப்பற்றிய விபரத்தை பொதுவாக வைக்காதீர்கள்.
ஆன்மீகவாதிகள் அப்படி என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா அதனை நான் சொல்லமாட்டேன். நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க பாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
கேள்வி & பதில்
வணக்கம் நண்பர்களே!
நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது நீங்கள் எப்பொழுதும் பிஸியாகவே இருப்பீர்களா என்று கேட்பார்கள். எப்பொழுதும் நான் சும்மா இருப்பதை தான் விரும்புவேன். எனக்கு வாடிக்கையாளர்களும் குறைவு தான். ஏன் என்றால் நான் வாடிக்கையாளர்களை அதிகம் சந்திக்க விரும்புவதில்லை.
என்னிடம் உள்ள பழக்கம் தனிமையாக இருப்பதை அதிகம் விரும்புவேன். எனது குரு கூட இதனை தான் சொல்லுவார். ஊரில் உள்ளவற்றை எல்லாம் இழுத்து போட்டு செய்துக்கொண்டு இருக்காதே என்பார். தனியாக உன்னுடைய வேலை மட்டும் பார் என்பார்.
தனிமையாக இருக்கும்பொழுது மட்டுமே நிறைய விசயங்களை கண்டுபிடிக்க முடியும். அதனால் நான் தனிமையில் சில விசங்களை தேடிக்கொண்டு இருப்பேன். சும்மா அமர்ந்துக்கொண்டு இருப்பது தான் எனது வேலை. எனக்கு பொய் பேச தெரியாது. அதனால் உங்களிடம் சொல்லிவிட்டேன். அதற்க்காக தனிமையாக இருப்பார் என்று போனை போட்டு தொந்தரவு செய்யவேண்டாம்.
எங்களின் குறிக்கோள் நடைபெறுவதற்க்கு தனிமையில் இருந்து செய்துக்கொண்டிருப்போம். ஒரு சாதாரண சோதிடர் போல் நான் வேலை பளு அதிகம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டேன். இது எதனால் என்றால் தனிமையில் இருக்கும்பொழுது சக்தி அதிகரிக்கும். அடுத்த வேலைக்கு அந்த சக்தியை பயன்படுத்தி விரைவாக வேலையை முடிப்பதற்க்கு இதனை செய்வது வழக்கம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
செல்வவளம் உயருவதற்க்கு வழி
வணக்கம் நண்பர்களே!
செல்வவளம் உங்களுக்கு சேருவதற்க்கு பல வழிகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்துவருவீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக மக்கள் பணத்தை தேடி தானே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதில் புதிய தகவல்களை இன்று பார்க்கலாம்.
மற்ற மிருகங்களில் இருந்து மனிதனை தனியாக பிரித்து காட்டுவது அவன் அணியும் ஆடைகள் மட்டுமே முதல் இடத்தில் இருக்கும். உலகத்தில் வசிக்கும் மிருகங்களில் மனிதன் மட்டும் நாகரீகம் அடைந்துவிட்டான் என்று காட்டுவது அவன் அணியும் ஆடைகளே.
ஒவ்வொரு மனிதர்களும் ஆடைகளை அணிந்தாலும் ஒரு பணக்காரர் அணியும் ஆடை என்பது கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். கொஞ்சம் விலையுர்ந்த ஆடைகளை அணிவார்கள் அப்படி நீங்களும் மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்து காட்ட வேண்டும் என்றால் நீங்கள் அணியும் ஆடை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதை விட விலை கூடுதலாக இருக்க வேண்டும்.
விலையுர்ந்த ஆடைகளை நீங்கள் அணியவேண்டும் அல்லது விலை குறைந்தாலும் அந்த ஆடைகள் மிகவும் சுத்தமாக உங்களுக்கு இருக்கவேண்டும். உங்களிடம் கோடிக்கணக்கான பணம் இருந்தாலும் உங்களை காட்டுவது முதலில் நீங்கள் அணியும் ஆடைகள்.
ஏன் இப்படி உங்களை ஆடைகளை அணிய சொல்லுகிறேன் என்றால் உங்களின் மனதிலேயே உங்களின் ஆடைகள் உங்களை உயர்த்திக்கொண்டே இருக்கும். நாம் இந்த விலையுர்ந்த ஆடையை அணியகிறோம் இதற்க்காகவே நாம் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்று உங்களின் மனது நினைக்கும். நீங்கள் செயலில் இறங்குவீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணத்திற்க்கு தகுந்தாறு ஆடைகளை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஆடைகளை தேர்வு செய்யும்பொழுது இதனை விட கூடுதலான விலையில் எடுத்து அணியவேண்டும் என்று நினையுங்கள். அப்பொழுது உங்களின் வருமானத்தை உயர்த்த உங்களின் மனது நினைக்கும். மனது நினைத்துவிட்டால் உங்களின் செல்வம் கண்டிப்பாக உயரும்.
இது எல்லாம் ஒரு வழியா என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். கண்டிப்பாக உங்களை இந்த வழிமுறை உயர்த்தும். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடையை மறந்திடவேண்டாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
Sunday, July 27, 2014
அம்மன் பூஜை
வணக்கம் நண்பர்களே!
இந்த மாதம் அம்மனின் பூஜைக்கு என்று பல பேர் உதவியுள்ளீர்கள். உங்களின் பங்களிப்பு அதிகம். அனைவரின் பேரையும் இந்த பதிவில் போட்டால் இடம் இருக்காது அந்தளவுக்கு அனுப்பியுள்ளீர்கள். அனைவரும் பங்குக்கொண்டது போல் எடுத்துக்கொள்ளுங்கள்.
அம்மனின் பூஜை வரும் 29/07/2014 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அன்றைய நாளில் அனைவரும் நன்றாக பிராத்தனையை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் அருள் கிடைக்கும்.
பூஜை அன்று எனக்கு போன் செய்வதாக இருந்தால் மாலை 6 மணிக்கு மேல் போன் செய்யுங்கள். அன்றைய நாள் முழுவதும் எனக்கு வேலை அதிகமாக இருக்கும்.
இந்த மாதம் எனக்கு கூடுதல் சுமை வந்திருக்கிறது. அனைவருக்கும் பிராத்தனை செய்யவேண்டும். நமது அம்மனின் கோவில் பூஜை சிறப்பாக செய்யவேண்டும். எனக்கு இப்பொழுதே படபடப்பு இருக்கிறது. எப்படி செய்வது என்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்.
மாலை 6 மணிக்கு மேல் தான் பூஜையை தொடங்குவேன். அனைவரும் 6 மணிக்கு மேல் நன்றாக பிராத்தனை செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
Saturday, July 26, 2014
அம்மன் அருள்
வணக்கம் நண்பர்களே!
அம்மனின் கோவிலில் சிலையை இந்த மாதம் வைத்துவிடலாம் என்று எண்ணினேன். ஒரு சின்ன சிலையாக பார்த்து வைக்கலாம். அதனை வைத்து நாம் பூஜை செய்யலாம் என்று எண்ணும்பொழுது பல விசயங்கள் நடந்தன. அதனாலேயே அம்மன் கோபம் கொண்டது என்று நினைக்கிறேன்.
ஒரு இடத்தில் சக்தி நிலைக்கொண்டு இருக்கும்பொழுது அந்த சக்தியை மீது நாம் எந்த சிலையை வைத்தாலும் அது பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த சக்தியை சிலை மீது மாற்ற வேண்டும். அப்படி சிலை மீது மாற்றினால் அந்த சிலைக்கு தொடர்ந்து பூஜை செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.
இது எல்லாம் வம்பை விலைக்கொடுத்து வாங்கும் செயலாகவே இருந்தன. அதனால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சக்தியின் விசயத்தில் மிகுந்த கவனத்தோடு நாம் செயல்படவேண்டும் என்பதற்க்கு மறுபடியும் இதனை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஏன் என்றால் எனக்கு அப்படி ஒரு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருந்தது. இதனைப்பற்றி இன்று தெளிவு ஏற்பட்டவுடன் அந்த திட்டத்தை கைவிட்டவுடன் எனக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த சக்தியை நாம் தொந்தரவு செய்யவேண்டாம்.
இந்த அம்மன் பூஜையில் ஜாதககதம்பத்திற்க்கு வருபவர்கள் முடிந்தளவு பணத்தை அனுப்பியுள்ளனர். அம்மன் மேல் உள்ள நம்பிக்கை இப்படி தான் இருக்கவேண்டும். ஏன் என்றால் நான் யாரையும் சந்திப்பது கிடையாது. இந்த பதிவு மட்டும் தான் மக்களை தொடர்புக்கொள்ளும் வழி.
அம்மன் மீது இந்தளவு நம்பிக்கை வைத்திருப்பதை பார்த்து நான் மிகுந்த ஆச்சரியப்பட்டேன். உங்களின் வேண்டுதல்கள் கண்டிப்பாக நடைபெறும். இதுவரை நான் பூஜையில் வேண்டுதல் வைத்தவர்கள் மட்டும் தான் கலந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருந்தேன். இனிமேல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மாதந்தோறும் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள்.
இதுவரை பணம் அனுப்பியவர்களுக்கு உங்களின் கோரிக்கை மற்றும் உங்களின் கோரிக்கை இல்லாதது நடந்து வரும்படி செய்து வருகிறேன். இந்த மாதத்திற்க்குள் அனைவருக்கும் நடக்கும்படி செய்துவிடுகிறேன். அம்மனே அதுவாகவே உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
செல்வவளம் சேருவதற்க்கு வழி
வணக்கம் நண்பர்களே!
பணமே பலம் என்ற பதிவை தந்தவுடன் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. அனைவரும் தொடர்புக்கொண்டு உண்மையான ஒரு செய்தியை சொல்லியுள்ளீர்கள் என்று சொன்னார்கள்.
அனைவருக்கும் பணம் இருந்தால் மட்டுமே அடுத்தது என்ன என்று யோசிக்க தோன்றும். அதனால் தான் நான் செல்வ வளம் சேருவதற்க்கு என்ன என்ற பரிகாரங்கள் இருக்கின்றன என்று சொல்லி வருகிறேன். நான் ஒரு காலத்தில் மிகுந்த கஷ்டத்தில் இருந்தேன்.அந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல அதனைப்பற்றி சொல்லி மாளாது.
செல்வவளம் உங்களுக்கு சேருவதற்க்கு ஜாதகத்தில் இரண்டாவது வீடு மிகவும் நன்றாக இருக்கவேண்டும். இரண்டாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அவருக்கு மனதார பிராத்தனை வைக்கவேண்டும். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து அவரை சிந்தித்தால் போதும்.
நான்கு மணிக்கு எழுவதற்க்கு முடியவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நான்கு மணிக்கு எழுவதற்க்கு வாய்ப்பில்லை என்றால் படுக்கையில் இருந்து அந்த கிரகத்தை நினைத்தால் போதும்.
இரண்டாவது வீட்டு அதிபதி மனது வைத்தால் போதும் நீங்கள் செல்லவளத்தோடு நன்றாக இருக்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
Friday, July 25, 2014
தொடர்ந்து செய்யுங்கள்
வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவரும் என்னிடம் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே போன் செய்து இந்த பிரச்சினை தீர்த்துக்கொடுங்கள் என்று கேட்கின்றனர். இது தவறு கிடையாது.
உங்களுக்கு எல்லாம் நிறைய பரிகாரங்கள் மற்றும் குலதெய்வ வழிபாடு எல்லாம் சொல்லிக்கொடுப்பது எதற்கு என்றால் உங்களின் பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்வீர்கள் என்ற காரணத்தால் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டு வருகிறேன்.
ஒரு வழிப்பாட்டை தொடர்ந்து செய்துக்கொண்டு வரும்பொழுது மட்டுமே அந்த வழிபாடு மிகப்பெரிய அளவில் பயனை தரும். உடனே வழிபாட்டிற்க்கு பலன் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் தவறாக தான் இருக்கும்.
பச்சைப்பரப்புதலை சொல்லிக்கொண்டு வருகிறேன். எத்தனை பேர் தொடர்ந்து செய்துக்கொண்டு வருகிறார்கள் என்று எனக்கு தெரியாது. அதனை தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே நமக்கு மிகப்பெரிய அளவில் பலனைக்கொடுக்கும்.
எனது நோக்கம் உங்களின் பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுடைய தீர்க்கமுடியாத பிரச்சினைக்கு என்னை தொடர்புக்கொள்ளலாம். சின்ன பிரச்சினைக்கு எல்லாம் என்னிடம் வந்து கேட்ககூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுவது எல்லாம் யாரிடமும் நீங்கள் நிற்க வேண்டாம் என்பதற்க்காக மட்டுமே எழுதுகிறேன். கடைசியில் என்னிடமே வந்து நின்றால் எப்படி?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
மன்னிக்கவும்
வணக்கம் நண்பர்களே!
உங்களிடம் ஒரு தவறான ஒன்றை சொல்லிவிட்டேன். அதாவது விரதம் இருங்கள் என்று சொன்னேன். உடலை போட்டு வருத்தவேண்டாம்.
உடல் பருமனா இருப்பவர்களுக்கு வேண்டுமானால் விரதம் இருக்கலாம். மெல்லிய உடலை வைத்திருப்பவர்கள் விரதம் இருக்க தேவையில்லை. ஒரு சிலருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் விரதம் இருக்கலாம்.
என்னை பொருத்தவரை உடலை போட்டு வருத்தகூடாது என்று நினைப்பேன். மனது ஒரு வம்பளக்கும் ஒரு கருவி. மனது சொல்லுவதை கேட்டுக்கொண்டு உடலை போட்டு வருத்துவது ஒரு பாவமாக தான் நான் கருதுகிறேன்.
மனது அதுவோடு நிம்மதிக்கு இந்த உடலை போட்டு வருத்துகிறது. உன் உடல் கேட்கும் விசயத்திற்க்கு மனது அந்தளவுக்கு ஒத்துழைக்காது. உனக்கு வேலை இல்லை நான் வேறு விசயத்தில் கவனம் செலுத்துகிறேன் என்று சொல்லும். முக்கால்வாசி பாவங்களை இந்த உடலை செய்ய தூண்டுவதே மனது தான். மனது செய்யும் தவறுக்கு உடலை போட்டுவருத்தவார்கள்.
என் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுவது உன் உடலை நன்றாக கவனித்துக்கொள். மனது சொல்லுகிறது என்று முள்ளில் நடப்பது. அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பது, கோவில்களுக்கு நடந்து செல்வது இது எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிவிடுவேன்.
உடலில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது தனக்கு தேவையானத்தை கேட்பதை மனது மறுத்துவிடும். உடல் நோயில் படுத்துவிடும். நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களின் மனது தான் உங்களை போட்டு கொல்லுகிறது. அதனால் விரதம் இருக்க நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.
விரதம் இருப்பதை விட முன்னோர்களைப்பற்றி நல்ல சிந்தனையை செய்யுங்கள். மனதை போட்டு வருத்தி அவர்களின் ஆத்மாவிற்க்கு சாந்தியை ஏற்படுத்துங்கள். நாளை அமாவாசை இப்படி கூட ஒவ்வொருவரும் செய்யலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
வெள்ளிக்கிழமை வழிபாடு செல்வம் சேரும்
வணக்கம் நண்பர்களே!
நான் உங்களுக்கு செல்வவளம் சேர்வதற்க்கு நிறைய வழிமுறைகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வருகின்றீர்கள் என்பதை ஒரு சில நண்பர்கள் சொல்லும்பொழுது அறிந்தேன்.
அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்களுக்கு அம்மன் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக நடத்திக்கொடுத்துவிடும். இதனை உறுதியாக உங்களுக்கு சொல்லுவேன். அம்மனிடம் நீங்கள் அனுப்பிய பணத்தை எப்படியும் ஒரு மாததிற்க்குள் பல மடங்காக திருப்பி கொடுக்கும் என்பதை நான் சொல்லுவேன்.
உங்களின் செல்வ வளம் வளர்வதற்க்கு என்று நான் சொல்லிய பணக்காரர்கள் கூடும் இடத்திற்க்கு சென்று வாருங்கள் என்று சொல்லிருந்தேன். அதனை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று சென்று வந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.
வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவதும் மிகச்சிறப்பான ஒரு வழிபாடாக இருக்கும். உங்களின் உடல் வளம் மற்றும் செல்வவளத்திற்க்கு வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு சிறப்பான ஒன்றாக இருக்கும். உங்களின் செல்வவளம் வளர்வதற்க்கு இதனை கண்டிப்பாக கடைபிடித்து வாருங்கள்.
நான் சொன்ன வழிப்பாட்டில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பான ஒரு வழிபாடாக இருக்கும். உங்களுக்கு எல்லாம் செல்வவளம் உயரும்பொழுது மட்டுமே அடுத்ததாக ஆன்மீகத்திற்க்கு செல்லமுடியும். செல்வவளம் இல்லை என்றால் ஆன்மீகத்திற்க்கு செல்லுவது வீணான ஒன்றாக இருக்கும். இது எல்லாம் எனது அனுபவ அறிவு தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Thursday, July 24, 2014
ஆடி அமாவாசை
வணக்கம் நண்பர்களே!
ஆடி அமாவாசை வரபோகின்றது. நான் எழுதிய பூர்வபுண்ணிய தொடர் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தோஷம் என்பது ஏற்பட்டதே உங்களின் முன்ஜென்மத்தில் நீங்கள் பிறருக்கு செய்த பாவங்களால் தான் ஏற்பட்டது என்று எழுதியிருக்கிறேன்.
அதற்கு இதுவரை எத்தனை பேர் அவர்களின் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புக்கொண்டு இருப்பவர்களை கண்டுபிடித்து இருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால் அதற்கு ஒரு நல்ல தீர்வாக வரும் ஆடி அமாவாசையில் நீங்கள் செய்யமுடியும்.
ஆடி அமாவாசை அன்று உங்களின் ஊரில் பிறர் ஜாதி கோவில்கள் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று நீங்கள் அன்னதானம் செய்யுங்கள். அந்த அன்னதானத்தில் உங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். நீங்கள் அதனை சாப்பிடகூடாது.
இன்றைய காலத்தில் பித்ரு தோஷம் அதிகமாக இருக்கின்றது. அதுவும் தேவர் வன்னியர் கவுண்டர் மற்றும் அதிகமான மக்கள் கொண்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு அதிகம் பித்ரு தோஷம் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் ஒரு எளிய தீர்வாக இது இருக்கும்.
பித்ரு தாேஷத்தை நீக்கினால் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதை காணமுடியும். இந்த வாய்ப்பை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Wednesday, July 23, 2014
கேள்வி & பதில்
வணக்கம் நண்பர்களே!
ஒரு நண்பர் என்னிடம் கேட்டுருந்தார். என் பெண்ணிற்க்கு திருமணம் நடைபெற உள்ளது. பொதுவாக பெண்களுக்கு திருமணத்தின் பொழுது எந்த தசா நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்.
பெண்ணின் ஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும். ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் வித்தியாசப்படும். பொதுவாக பெண்களுக்கு திருமணத்தின் பொழுது நல்ல நிலையில் இருக்கும் சந்திரன் தசா புதன் தசா சுக்கிரன் தசா மற்றும் நல்ல நிலையில் நடைபெறும் ராகுவின் தசா நடைபெற்றால் பெண்களுக்கு நல்லது.
பெண்களுக்கு எந்த தசா நடைபெற்றாலும் அந்த பெண்ணை நன்றாக வளர்க்கும்பொழுது எந்த கிரகத்தின் தசா நடைபெற்றாலும் அடுத்தவர்களை ஏற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்திவிடும். ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் நல்ல கிரகத்தின் தசா நடைபெற்றாலும் குடும்பத்தை கவனிக்காமல் சென்றுவிடும்.
பெண்களுக்கு தந்தை மீது பாசம் அதிகமாக இருக்கும். தந்தை அவரின் குடும்பத்தை பற்றி சொல்லி வளர்த்தால் செல்லுகின்ற வீடும் நன்றாக இருக்கும். இப்பொழுது பல இடங்களில் பெண்களுக்கு அவரின் தந்தையே சொல்லிக்கொடுத்து அனுப்புகிறார். எப்படியும் மாப்பிள்ளையை தனியாக அழைத்துக்கொண்டு வந்துவிடு என்கிறார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
ஆடி அமாவாசை
வணக்கம் நண்பர்களே!
நண்பர் என்னிடம் தொடர்புக்கொண்டு ஆடி அமாவாசை சிறப்பு பதிவை ஒன்றை கண்டிப்பாக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார். அவரின் விருப்பத்திற்க்காக இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன்.
திரும்பி பக்கம் முழுவதும் ஆடி அமாவாசைப்பற்றி தான் வருகிறது. இதில் நாமும் சொல்ல வேண்டுமா என்று தான் நினைத்துக்கொண்டுருந்தேன். ஒரு சின்ன விசயத்தை முதலில் பகிர்ந்துக்கொள்கிறேன்.
பித்ருதோஷம் தான் இன்றைய இளைய தலைமுறையினரை போட்டு தாக்கும் ஆயுதங்களில் மிகப்பெரியது என்று சொல்லலாம். இவர்களுக்கு தாய் தந்தை இருப்பதால் இவர்கள் அமாவாசையை விரதம் பின்பற்றமுடியாது. உங்களுக்கு தோஷம் இருப்பதால் அதனை போக்க ஒரு வழி உள்ளது.
தோஷம் போக்கும் விசயத்தில் முதலில் இருப்பது பசு மாடு. இன்றைய காலத்தில் பசுமாட்டை தேடிப்பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கும். பசு மாட்டை நீங்கள் தேடிபிடித்து அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு உணவை அளியுங்கள்.
கோவிலில் உள்ள பசுமாட்டிற்க்கு நீங்கள் கொடுத்தால் அன்றைய தினம் அதிகமான பேர் அதற்கு கொடுத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட பசுவிற்க்கு நீங்கள் கொடுக்கவேண்டாம். ஏதாவது ஒரு பசுமாட்டிற்க்கு கொடுங்கள்.
பட்டினியோடு இருக்கும் பசுமாட்டிற்க்கு கொடுங்கள். கண்டிப்பாக அன்றைய அமாவாசையை நீங்கள் நன்றாக பயன்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
தாய் மற்றும் தந்தை யாராவது ஒருவர் இறந்து ஒரு வருடம் சென்றால் அவருக்கு நீங்கள் விரதம் இருக்கலாம். காலையில் சாப்பிடாமல் இருந்து மதியம் இரண்டு மணிக்கு மேல் விரதம் செய்யலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
குலதெய்வம் ஒரு சில விளக்கம்
வணக்கம் நண்பர்களே!
குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதில் ஒரு விசயத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் குலதெய்வ வழிப்பாட்டை செய்து வந்தால் உங்களின் வாசல் படியில் கயிறு மற்றும் படிக்கார கல்லை கட்டி வைக்காதீர்கள். அப்படி கட்டி வைத்தால் உங்களின் குலதெய்வம் உங்களின் வீட்டிற்க்கு வராது.
நீங்கள் செல்லும் ஒவ்வொரு கோவிலும் கயிறு மற்றும் எலுமிச்சைபழத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கி வந்து உங்களின் வீட்டில் வாயிற்படியில் கட்டி தொங்கவிடகூடாது. குலதெய்வத்திற்க்கு இது பிடிக்காத ஒன்று. இதுவரை வாங்கி வந்து கட்டியிருந்தால் அதனை கழட்டிவிடுங்கள்.
உங்களின் குலதெய்வத்தை விட்டு நீங்கள் பிற தெய்வங்களை நாடி சென்றததால் உங்களுக்கு கிரங்களின் தாக்குதல் ஏற்பட்டு பிரச்சினை வருகிறது. உங்களின் குலதெய்வத்தை மட்டும வணங்கினாலே உங்களின் பிரச்சினை அனைத்தும் தீரும்.
என்னிடம் வரும் நண்பர்களுக்கு எல்லாம் நமது அம்மனை வைத்து உங்களின் குலதெய்வ ஆற்றலை எடுக்க வேண்டியுள்ளது. நமது அம்மன் உங்களின் குலதெய்வத்திற்க்கு உதவி வருகிறது. நீங்கள் செய்த தவறுக்கு நான் பொறுப்பு ஏற்று நடத்திக்கொடுக்க வேண்டியுள்ளது. அனைவரும் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய தொடங்குங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
பணமே பலம்
வணக்கம் நண்பர்களே !
இதுவரை நமது நண்பர்கள் அவர்களுக்கு கிடைத்த பணத்தை அனுப்பி வருகின்றனர். அம்மன் மேல் இவ்வளவு பேர் பக்தி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும்பொழுது நான் ஆச்சரியப்பட்டேன்.
எல்லாம் ஆன்மீகவாதி போல் இல்லாமல் நான் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பேன். பொதுவாக நான் யாரையும் சந்திக்ககூட விரும்புவதில்லை. அதற்கு காரணம் உங்களை என்னை போல் உருவாக்க வேண்டும் என்ற காரணத்தால் அப்படி செய்தேன்.
நீங்கள் என்னை பார்த்துவிட்டால் என்னிடமே உங்களின் பிரச்சினையை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நீங்களே உங்களின் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்ற நிலையை உருவாகிவிட்டால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் எண்ணுவேன்.
இந்து மதத்தில் உள்ள நல்ல விசயங்கள் என்னை உருவாக்கியது. அப்படிப்பட்ட நல்ல விசயங்களை நான் எடுத்த காரணத்தால் இந்த மதத்திற்க்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்யவேண்டும் என்று நினைத்து இதனை எழுதிவருகிறேன். மற்றும் பல வேலைகள் இனிமேல் செய்ய உள்ளேன்.
எனக்கு பல மதங்களில் உள்ள மக்களின் நட்பு அதிகம் இருந்தாலும் அந்தந்த மக்களின் மதங்களில் உள்ளவர்கள் அவர்களை காப்பாற்றுவார்கள். இந்து மதத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக பணம் இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இப்படிப்பட்ட பணம் இல்லாத மக்களை பிற மதங்களில் உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
உங்களின் ஜாதங்களில் உள்ளவற்றை மீறி நீங்கள் நன்றாக வாழ நமது கோவில்கள் உங்களுக்கு உதவுகின்றன. அப்படிபட்ட கோவிலை நீங்கள் விட்டுவிட்டு ஒன்று இல்லாதவற்றிக்கு ஆசைப்பட்டு செல்வது வேதனையான விசயமாக இருக்கின்றது.
அதனை எல்லாம் சரிசெய்யவேண்டும் என்றால் நம் மக்களிடம் பணம் இருக்கவேண்டும். பணம் இருக்கவேண்டும் என்றால் மக்களிடம் உள்ள பிரச்சினையை சரிசெய்யவேண்டும். அப்படி அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய அவர்களுக்கு உதவுவது தான் நாம் சொல்லும் ஒரு சில வழிப்பாட்டு முறைகள். அந்த வழிபாட்டு முறைகளை மக்களிடம் கொண்டு சென்றாலே போதும். அவர்களே நல்ல நிலையை அடைந்துவிடுவார்கள்.
இதனை செய்வதற்க்கு எல்லாம் பணம் தேவை. நான் பதிவில் அம்மன் பூஜை என்று சொன்னவுடன் ஒரு சில நண்பர்கள் பணத்தை அனுப்பி வருகின்றனர். மிக குறைந்தளவு உள்ளவர்களே இதில் பங்குக்கொண்டுள்ளனர். என்னை பொறுத்தவரை என் கணக்கு அனைவரும் பணம் அனுப்பவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் பணம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது.
ஏன் பணம் இல்லை? தன் வாழ்க்கையை ஒழுங்காக நடத்த தெரியவில்லை என்று தெரிகிறது. கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்துங்கள் என்று சொன்னால் அதுவும் செய்வதில்லை. பிறகு எப்படி பணம் சேமிக்கமுடியும். இதுவரை வந்த ஆன்மீகவாதிகள் அனைவரும் அன்பாக இருங்கள். அருளாக இருங்கள் என்று சொன்னார்களே தவிர உங்களை பணக்காரானாக இருங்கள் என்று ஒருவரும் சொல்லவில்லை.
முதலில் நான் சொல்லுகிறேன். நீங்கள் பணக்காரானாக இருங்கள். ஜாதககதம்பத்தின் மந்திரம் பணமே பலம். பணம் இல்லை நீங்கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள். உங்களை நீங்கள் இழக்கும்பொழுது உங்களின் கோவிலை எப்படி காப்பாற்றமுடியும்? பணம் வருவதற்க்கு ஏகாப்பட்ட வழிமுறைகளை நான் சொல்லியுள்ளேன். அதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். கொஞ்ச காலத்தில் நீங்கள் பணக்காரானாக மாறிவிடுவீர்கள். மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். பணமே பலம்.
அமாவாசை அன்று பூஜை செய்யலாம் என்று நினைத்து இருந்தேன். அமாவாசை அன்று அனைத்து கோவிலும் மற்றும் வீடுகளில் விஷேசம் என்பதால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிடும் என்பதால் அதனை தள்ளி இரண்டு நாட்களில் வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். நமது நண்பர்கள் ஒரு சிலர் சனிக்கிழமை அன்று தான் எங்களுக்கு பணம் வரும் எங்களின் காணிக்கையும் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்கிறேன். அமாவாசை அன்று அம்மன் கோவிலில் சிறிய அளவில் பூஜை செய்யப்படும். பெரிய பூஜையை எந்த தேதி என்று பதிவில் சொல்லுகிறேன்.
நான் சென்ற வீடுகளில் எல்லாம் நான் சொல்லுவதை பரப்பி வருகின்றனர். அந்த வழியில் உங்களுக்கு எல்லாம் நன்றி. முடிந்தவரை நமது மக்களிடம் வழிப்பாட்டு முறைகளை எடுத்துச்செல்லவேண்டியது உங்களின் கடமை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
சோதிடம் என்பது ஒரு வழி
வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சோதிட அறிவு கிடைத்துவிட்டது என்று சொல்லவேண்டும். தொலைக்காட்சி மிகப்பெரிய அளவில் புரட்சியை செய்து இருக்கிறது. நீங்கள் கிராமத்தில் சென்று கூட பலனை சொல்லுவதில் தவறாக சொல்லிவிடமுடியாது. மக்களிடம் அந்தளவுக்கு சோதிட அறிவு இருக்கிறது.
சோதிட அறிவு வளர்ந்தளவுக்கு இன்று வரை அதற்கு தீர்வை கண்டுபிடிப்பதில் உள்ள அறிவு வளரவில்லை என்று தெரிகிறது. அதற்கு காரணம் சோதிடத்தை மக்கர் செய்து படித்த சோதிடர்கள் பரிகாரத்தை சொல்லவில்லை. பரிகாரத்தை சொன்னால் தானே மக்கள் பயன்பெறமுடியும்.
எனக்கு சோதிட அறிவு நன்றாக இருக்கின்றது அனைத்தையும் நான் வெளியிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். பின்னோட்டம் போட்டு பாராட்டிக்கொண்டு இருப்பீர்கள். அதனால் எனக்கு மற்றும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. சோதிடத்தில் அடிப்படை நன்றாக தெரிந்தால் போதும். அதனை வைத்து அனைத்தையும் நாம் சாதித்துக்கொள்ளமுடியும்.
ஒரு மோசமான நிலையில் இருக்கும் ஜாதகரின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பத்து சோதிடர்களிடம் சென்று காட்டுங்கள். அவரின் ஜாதகத்தை பார்த்து பத்து பேரும் இவர் தேறமாட்டார் என்று சொல்லுவார்கள். அவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து இவரை எப்படியும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேளுங்கள். ஒரு சில நாளில் அவர் முன்னேற்றத்தை காண்பார்.
எப்படி என்று கேட்கிறீர்களா? சோதிடத்தை தாண்டி பல விசயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் கோவில்கள் உருவாக்கப்பட்டதே இப்படி தன் விருப்பத்தை அடைய இறைவனின் சக்தியை பயன்படுத்திக்கொள்வதற்க்காக மட்டுமே. அதனால் சோதிடத்தை அளவாக பயன்படுத்தி உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். சோதிடம் ஒரு வழி மட்டுமே அந்த வழியை பயன்படுத்தி மேலே செல்லவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Tuesday, July 22, 2014
பூஜை பற்றிய விளக்கம்
வணக்கம் நண்பர்களே!
நான் அம்மனுக்கு பூஜை என்று சொன்னவுடன் அனைவரும் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவது தெரிகிறது. முதல் நாள் பதிவில் போட்டவுடன் என்னிடம் நன்றாக பழகும் நண்பர்கள் அனைவரும் உடனே பணத்தை அனுப்பியிருந்தனர்.
மறுநாள் முதல் பழகாத நண்பர்கள் பணம் செலுத்த தொடங்கி இருந்தனர். இந்த தடவை ஆடி மாதம் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள நான் பதிவில் சொல்லிருந்தேன். அம்மன் மேல் உள்ள பக்தி காரணமாக முடிந்தளவு பணம் செலுத்தி வருகின்றனர்.
ஒரு சிலருக்கு உடனே பிரச்சினை தீர்வதற்க்கும் வாய்ப்பு உண்டு. நான் உங்களை புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நாம் செலுத்தும் பணம் நம்மை பலவாறு முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்ல வழிவகுக்கும். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஒரு யுக்தி இது. பணம் செலுத்தி பார்க்கலாம் இந்த வழியிலாவது நாம் முன்னேற்றம் அடைந்துவிடமாட்டோமா என்று நமது புத்தி கணக்கு போடவேண்டும்.
வழக்கமாக பணம் அனுப்பும் நண்பர்கள் பணம் அனுப்புவதில் ஒன்றும் பெரியது கிடையாது. புதிதாக உள்ளவர்கள் அனுப்பினால் நல்லது. ஏன் என்றால் வழக்கமாக அனுப்புவர்கள் அம்மனின் சக்தியை ஏற்கனவே அனுபவித்துவிட்டவர்கள். நீங்கள் அனுபவிக்கவில்லை அதனால் நீங்கள் அனுப்பி பாருங்கள். கண்டிப்பாக நடைபெறுவதற்க்கு வாய்ப்பு அதிகம்.
பணம் அனுப்புவர்கள் தயவு செய்து உங்களின் பெயரை எனக்கு மெயிலில் தெரிவித்து விடுங்கள். உங்களின் வேண்டுக்கோளை நான் அங்கு வைப்பதற்க்கு உதவும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
தந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை
வணக்கம் நண்பர்களே!
அம்மன் ஒரு வார காலமாக கொஞ்ச கோபத்தோடு இருக்கின்றது. யார் மாட்டி இருக்கிறார் என்று மட்டும் தெரியவில்லை. கத்தரிக்காய் முற்றினால் வீதிக்கு வந்துவிடும். யார் வருகிறார் என்று பார்க்கலாம்.
எந்த ஒரு மந்திரப்பிரயோகம் செய்தாலும் அதில் ஒரு தந்திர வேலை இல்லாமல் இருக்காது. தந்திர வேலைகள் செய்யாமல் மந்திரம் வேலை செய்யாது. ஒருவருக்கு நாம் எதனை செய்தாலும் அவரின் தொடர்பு நமக்கு இருக்கவேண்டும். அப்படி அவர் தொடர்பு இல்லை என்றால் அந்த வேலையை முடிக்க பல மாதங்கள் கூட எடுக்கும்.
நானே ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டும் என்றாலும் அவர்களை என்னை வந்து சந்திக்க வைப்பேன். அப்படி சந்திக்கவில்லை என்றால் போனில் பேச சொல்லுவேன். அப்படி பேச சொல்லும்பொழுது தான் அந்த வேலை நடைபெறும்.
ஒருத்தரை சந்திக்காமல் மற்றும் அவரோடு தொடர்பு இல்லாமல் அவர் வழியாக ஒரு வேலை செய்யவேண்டும் என்றால் நமது உயிர் போய் வந்துவிடும். மொத்த சக்தியையும் விரையம் செய்து அந்த வேலையை நடத்திக்கொடுக்கவேண்டும்.
ஒவ்வொரு அவதார புருஷர் என்று சொல்லப்படும் கடவுள் அவதாரம் கூட தந்திரம் இல்லாமல் இருக்காது. அந்த கடவுள் ஏதாவது ஒரு தந்திரத்தை கையாண்டு செய்வார். தந்திரம் செய்யும்பொழுது மட்டுமே மந்திரம் வெற்றி அடையும். தந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
இராசி அதிபதி
வணக்கம் நண்பர்களே!
இன்று ஒரு சோதிடம் பார்த்தேன். அவருக்கு குரு கிரகம் தற்பொழுது எட்டாவது வீட்டில் கோச்சாரப்படி மறைந்து இருக்கிறது. அவரின் ராசிக்கிரகம் மறைவது அவருக்கு பிரச்சினையை தந்துவிடும். அவரும் பிரச்சினையில் இருந்ததால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்.
அவருக்கு உடனே சென்று உங்களின் ராசி அதிபதிக்கு ஒரு அர்ச்சனை மற்றும் தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள் என்று சொன்னேன். எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் ராசி அதிபதி கோச்சாரப்படி மறைவது நல்லதல்ல. அவர் பிரச்சினை செய்யாமல் இருந்தாலும் பிற கிரகங்கள் போட்டு தாக்க ஆரம்பித்துவிடும்.
அவருக்கு ஏழரை சனி ஆரம்பிக்க போவதால் அவரை சனிபகவான் மோட்டார் வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். சனி பகவான் தான் தள்ளிவிட்டார் என்றாலும் அவருடைய ராசி அதிபதி வலுவிழந்ததால் அவருக்கு பிரச்சினையை எளிதில் தந்துவிட்டது.
எந்த ஒரு ஜாதகமாக இருந்தாலும் உங்களுக்கு பிரச்சினை என்று ஒன்று வந்தால் முதலில் ராசி அதிபதியின் நிலையை நீங்கள் கவனித்து பார்த்தால் முதலிலேயே அந்த பிரச்சினையை சரிசெய்துவிடலாம்.
கோச்சாரப்படி தானே என்று மட்டும் விட்டுவிடாதீர்கள். ராசி அதிபதி அனைத்திற்க்கும் உதவுவார். அவரை வைத்து தான் நிறைய விசயங்கள் நடைபெறும். உங்களுக்கு ராசி அதிபதி மறைந்தாலோ அல்லது வக்கிரம்பெற்று இருந்தாலோ முதலில் நீங்கள் அவருக்கு ஒரு தீபத்தையாவது ஏற்றிவிட்டு வணங்கி வாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
நன்றாக ஒடுங்கள்
வணக்கம் நண்பர்களே!
உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள நிறைய கருத்துக்களை நான் சொல்லி இருக்கிறேன். பல நண்பர்கள் அதனை கடைபிடித்து வருகின்றனர். காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு முன்பு ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்துவிட்டு செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளேன்.
உங்களின் உடலை பாதுகாக்கவில்லை என்றால் நீங்கள் இந்த பூமியில் நீண்டநாட்கள் வாழமுடியாது. நோய் வந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்துக்கொள்வது முட்டாள் தனம். அந்த நோயை வரவிடாமல் உங்களை பாதுக்காத்துக்கொள்வது நல்லது.
உடற்பயிற்சியில் நீங்கள் தினந்தோறும் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் போதும். உங்களின் உடலில் இருக்கும் அத்தனை நோயும் உங்களைவிட்டு ஓடிவிடும். இதனை நான் பல காலங்களாக செய்துக்கொண்டு வருகிறேன்.
வியர்வை வெளியேறும் வரை ஒடுங்கள் போதும். உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. முதலில் உங்களின் உடல் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கொஞ்ச தூரம் ஓடுங்கள் அதன் பிறகு நடந்து செல்லுங்கள். நாள்கள் செல்ல செல்ல உங்களின் உடல் அதற்கு சம்மதிக்கும்.
நான் நன்றாக உடலுக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு அதன் பிறகு தான் பூஜையில் அமருவேன். அப்படி அமரும்பொழுது நமது சக்தியும் அம்மனின் சக்தியும் மிகப்பெரிய ஆற்றலாக வரும். நமது உடலில் நரம்புகள் எந்தவித தடையும் இன்றி வேலை செய்யும்பொழுது நமது உடலில் தெய்வீகசக்தி இணையும். உங்களின் வாழ்க்கையில் பிரச்சினை என்பது வராது.
இதுவரை செய்யாதவர்கள் இனிமேலாவது செய்ய ஆரம்பியுங்கள். உங்களின் ஆத்மா உங்களின் உடலை நன்றாக விரும்பும். உடலுக்கு உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் உங்களின் உடலில் தங்கியிருக்கும் ஆத்மா உங்களை வெறுக்க ஆரம்பித்துவிடும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Monday, July 21, 2014
அம்மன் அருள்
வணக்கம் நண்பர்களே!
நமது அம்மனின் கோவிலில் பூஜை செய்யும்பொழுது பொதுவாக எந்தவித மந்திரங்களையும் சொல்லுவதில்லை. ஏன் அப்படி சொல்லுவதில்லை என்றால் ஒரு சக்தி நிலைக்கொண்டு இருக்கும் இடத்தில் நாம் சொல்லும் மந்திரங்கள் அந்த சக்திக்கு இடையூறு ஏற்படும்.
நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலில் அதிகசக்தி வெளிபடுகிறது என்று தெரிந்தால் நன்றாக வணங்கிவிட்டு மட்டும் வாருங்கள். மந்திரங்களை சொல்லவேண்டாம்.
சக்தியின் வெளிப்பாடு அதிகம் வெளியிடுகிறது என்றால் அந்த இடத்தில் நாம் எந்த தவறையும் செய்யகூடாது. நன்றாக பார்த்து வணங்கிவிட்டு வரவேண்டும். நமது அம்மனின் கோவிலும் சக்தியின் வெளிபாடு நன்றாக இருக்கும்.
ஒரு சில விசயங்களை செய்து நான் போட்டோ எடுப்பது போல் செய்து வைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட அம்மனின் சக்தியை நீங்கள் வணங்கவேண்டும். உங்களின் குறைகளை உடனே அது நிறைவேற்றிக்கொடுத்துவிடும்.
நான் பூஜை செய்யும்பொழுது தவறு ஏதாவது நடைபெற்றால் அதனை விரைவில் வெளிப்படுத்தி காட்டிவிடும். நான் அதனை திருத்திக்கொள்வது உண்டு. ஒவ்வொரு பூஜையிலும் நான் போட்டாேவை போட்டு இருப்பேன் அதனை எடுத்து பாருங்கள். சக்தியின் வெளிப்பாட்டைப்பற்றி கொஞ்சமாவது புரிந்துக்கொள்ளலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
நன்றி
வணக்கம் நண்பர்களே!
எனக்கு பல இளைஞர்கள் பெரும் துணையாக இருக்கின்றார்கள். ஜாதககதம்பம் எழுத தொடங்கிய நாட்களில் முதல் இன்று வரை தொடர்ந்து இளைஞர்கள் என்னை ஊக்கவித்து எழுதசொல்லுவார்கள்.
பச்சைப்பரப்புதலைப்பற்றி நான் எழுதிய காலத்தில் இருந்து அதனை பல பேர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்க்கு இளைஞர்கள் பெரும் உதவி செய்து வருகின்றனர். முதலில் திருவாரூரை சேர்ந்த சரவணன் அங்குள்ள நியூஸ் பேப்பரில் இதனை வெளியிட்டு ஒரு நல்ல துவக்கத்தை தொடங்கி வைத்தார்.
அவர் செய்தவுடன் இப்பொழுது பல நண்பர்கள் அதுப்போல் நாங்களும் பிரிண்ட் எடுத்த நோட்டீஸாக வெளியிடுகிறோம் என்று சொல்லுகிறார்கள். அனைவருக்கும் நான் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளேன். அந்தந்த ஊர்களில் நடக்கும் பிரதோஷ விழாக்களில் கொடுக்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள்.
பச்சைபரப்புதலை பொறுத்தவரை நோட்டீஸ் மற்றும் வாய்வழியாக சொல்லுவதற்க்கு என்னிடம் அனுமதி வாங்க தேவையில்லை. நோட்டீஸ் போடும்பொழுது ஜாதககதம்பத்தின் அட்ரஸ் மட்டும் போடுங்கள். ஏன் அப்படி போடச்சொல்லுகிறேன் என்றால் உனக்கு யார் இதனை சொன்னது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களை பாடாய்ப்படுத்திவிடுவார்கள் நமது மக்கள். என்னிடம் கேள்வி வரும்பொழுது அதற்கு தகுந்த பதில் தந்துவிடுவேன்.
உங்களின் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் அதில் இணைத்துவிடுங்கள். சந்தேகம் வரும்பொழுது உங்களை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்வார்கள்.
மக்கள் இதனை நம்பவில்லை என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். அவர்களுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது இது ஞாபகம் வரும். அப்பொழுது செய்ய தொடங்குவார்கள். மக்களுக்கு எப்படியும் ஆறு மாதத்திற்க்குள் பிரச்சினை வந்துவிடும். அப்பொழுது இதனை தான் முதலில் எடுப்பார்கள்.
உங்கள் பகுதி மக்களை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும். அவர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும்பொழுது அவர்களே இதனை ஒரு நாள் செய்யதொடங்குவார்கள். நான் ஒருவன் அனைவருக்கும் இதனை கொண்டுசெல்வது கடினம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நமது நண்பர்கள் இதனை பரப்புங்கள்.
நம் மக்கள் கடன் வாங்கினாலும் பரவாயில்லை சாமிக்கு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். நமது மக்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லையை தவிர அவர்கள் செய்யமாட்டேன் என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.
நம்பிக்கையோடு செய்யுங்கள். நீங்கள் இதனை வெளியிடும்பொழுது என்னிடம் சொல்லிவிட்டால் உங்களின் செயலை ஊக்குவிக்க அம்மனிடம் பிராத்தனை வைப்பேன். பொருள் உதவி செய்வதற்க்கு கொஞ்ச நாட்கள் ஆகும் அதுவரை அம்மனை வைத்து உங்களை ஊக்குவிக்கமுடியும்.
அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்பவர்கள் மறக்காமல் என்னிடம் தெரிவித்துவிடுங்கள். மெயிலில் உங்களைப்பற்றியை தகவல்களை அனுப்பவிடுங்கள்.
அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்பவர்கள் மறக்காமல் என்னிடம் தெரிவித்துவிடுங்கள். மெயிலில் உங்களைப்பற்றியை தகவல்களை அனுப்பவிடுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Sunday, July 20, 2014
ஏன் பூஜை செய்யவேண்டும்?
வணக்கம் நண்பர்களே!
நாம் ஏன் ஒவ்வொரு மாதத்திலும் பூஜை செய்கிறோம் என்றால் நமக்கு உதவிக்கொண்டிருக்கும் அந்த அம்மனுக்கு ஒரு நன்றி கடனை செலுத்துவதற்க்காக இதனை செய்கிறோம்.
உங்களின் ஜாதகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் ஆசைப்படுவது ஒரு தடவை மட்டும் நடைபெறும். மேலும் விளக்கமாக பார்க்கலாம். இப்பொழுது அனைவரும் பணத்திற்க்காக அதிகமாக ஆசைப்படுகிறார்கள். பொதுவாக ஜாதகத்தில் ஒருத்தருக்கு வாழ்க்கையில் அதிகப்பட்சமாக ஒரு தடவை மட்டும் பணம் வந்து கொட்டும். நமது மக்கள் அதனை சரியாக பயன்படுத்த மாட்டார்கள். ஊதாரிதனமாக செலவு செய்வார்கள்.
பணம் வந்துக்கொண்டு இருப்பது ஒரு சில காலகட்டத்தில் அது நின்றுவிடும். அப்பொழுது இவர்களுக்கு வறுமை வந்தவுடன் மறுபடியும் பணத்தின் மீது ஆசை வரும். இவர்களுக்கு ஆசை வருவதால் உடனே கிடைத்துவிடாது.ஏன் என்றால் இவர்களின் கோட்டா முடிந்துவிட்டது. பிறகு எங்கிருந்து பணம் வரும் மறுபடியும் கடவுளிடம் தான் கேட்கமுடியும். அப்படி தான் ஒவ்வொரு ஆசைகளுக்கும் நாம் கடவுளிடம் கேட்டு தான் பெறமுடியும். அப்படி பெறுவதற்க்கு ஒரு வழி தான் நமது பூஜைகள்.
ஒரு சில ஜாதகத்தில் ஒரு சில விசயங்கள் மறுக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட நபர் அது எனக்கு வேண்டும் என்று நினைக்கும்பொழுது கடவுளிடம் பூஜைகள் செய்து பெறமுடியும். அதற்கு தான் பூஜைகள். நமது தேவைகள் மற்றும் நமது பாதுகாப்பு இரண்டுக்கும் தான் அதிகமான பூஜைகள் நடைபெறும்.
உங்களின் ஜாதகத்தை பாருங்கள் உங்களின் ஆசைக்கு அது வழிவிடுமா என்று பார்க்கவேண்டும் பார்த்த பிறகு அது வழிவிடவில்லை என்றால் நீங்கள் பூஜைகளில் இறங்கி அதனை சாதித்துக்கொள்வது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
சோதிட அனுபவம்
வணக்கம் நண்பர்களே !
ஒரு சில நாட்களுக்கு முன்பு அடையாரில் ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்று இருந்தேன். அடையாரில் அவர் பெயரை சொன்னால் அனைவருக்கும் நன்றாக தெரியும். மிகப்பெரிய தொழில் அதிபர் அவர். அவரின் பையனுக்கு திருமணம் செய்வதற்க்கு சோதிடம் பார்க்கவேண்டும் என்றார்.
அவரின் மகனின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து நான் அனைத்து கோவிலுக்கும் சென்று வந்துவிட்டேன். எல்லா பரிகாரத்தையும் முடித்துவிட்டேன் என்றார். நான் அவரிடம் இப்பொழுது தானே ஜாதகத்தை கொடுத்து இருக்கிறீர்கள். அதற்கு முன்பே பரிகாரம் என்று சொல்லுகிறீர்களே என்றேன். அவர் சிரித்தார். ஜாதகத்தை பார்த்த பிறகு அவர் சொன்னார்.
நான் எந்த ஒரு சோதிடர்களிடம் சென்றாலும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கிறது இதனை கழிக்கவேண்டும் என்று சொல்லி பணத்தை வசூல் செய்துவிடுகிறார்கள். அதனால் பயமாக இருக்கிறது என்றார். கவலைப்படாதீர்கள் நான் அப்படி ஏதும் சொல்லமாட்டேன் நீங்கள் பெண்ணின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னேன்.
இப்பொழுது எல்லாம் சோதிடர்கள் ஆன்மீகவாதிகளை கண்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். என்ன செய்வது சோதிடம் பார்த்தால் நூறு ரூபாய் கிடைக்கும். பரிகாரம் செய்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சோதிடர்களின் கணக்கு.
சோதிடம் பார்ப்பவர்கள் ஆன்மீகவாதிகள் மற்றும் மந்திரவாதிகளை எல்லாம் அந்த காலத்தில் அரசன் அவர்களுக்கு பணத்தை கொடுத்து காட்டில் வாழுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவான். அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்வான். ஏன் அப்படி அனுப்பி வைத்தான் என்றால் இவர்கள் ஊருக்குள் வந்தால் நாடு தாங்காது என்று அவனுக்கு தெரியும்.
இன்றைய காலத்தில் அரசன் கிடையாது. இவர்கள் எல்லாரும் ஊருக்கு வந்துவிட்டார்கள். ஊரை போட்டு காலி செய்கிறார்கள். எப்பொழுது இவர்கள் ஊருக்குள் வந்தார்களோ அன்றே நாடு அழியும் என்பது உண்மையான ஒரு விசயம். நானும் விதிவிலக்கல்ல நான் வாடிக்கையாளர்களிடம் பணம் பறிப்பது கிடையாது. தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்கிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
Subscribe to:
Posts (Atom)