வணக்கம் நண்பர்களே !
பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுத ஆரம்பித்தபிறகு பல நண்பர்கள் பாராட்டினார்கள் பாதி பேருக்கு மேல் குழப்பத்தில் இருக்கிறார்கள். நான் முடிந்தவரை தெளிவுப்படுத்தி எழுதுகிறேன். நீங்கள் படித்துக்கொள்ளலாம்.
ஒருவருடைய முன்ஜென்மத்தில் உங்களால் பாதிக்கப்பட்ட நபரை நான் அடையாளம் காட்டுவதற்க்கு பலவிதத்திலும் முயற்சி எடுத்து உங்களுக்கு கொடுத்துக்கொண்டுருக்கிறேன். இதனை ஏன் நான் செய்கிறேன் என்றால் ஏதோ சோதிடத்தை நடத்தினோம் காசு பார்த்தோம் என்று இல்லாமல் இந்த இயற்கையின் சுழற்ச்சிக்கு என்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்று எண்ணி எழுதிவருகிறேன்.
நான் காசு மட்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்து இருந்தால் ஷேர்மார்க்கெட்டில் மட்டுமே சோதிடத்தை பயன்படுத்தி அள்ளி கட்டிக்கொண்டு போய் இருக்கலாம். ஷேர்மார்க்கெட்டில் சோதிடம் மட்டும் அல்ல. என்னுடைய டெக்னிக்கல் மூளையை வைத்தே ஒரு நாளைக்கு குறைந்தது பத்தாயிரம் வரை சம்பாதிக்கமுடியும். நான் சம்பாதித்தால் என்னுடைய குடும்பம் மட்டும் நன்றாக இருக்கும். பிற குடும்பங்களைப்பற்றி நமக்கு கவலையும் இருப்பதால் பூர்வபுண்ணியம் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
நான் பூர்வபுண்ணியம் எழுதுவதால் எனக்கு தான் லாபமாக இருக்கிறது. ஆன்மீகத்தில் எந்தளவுக்கு பொதுசேவை செய்கிறோமே அந்தளவுக்கு உயரமுடியும் அதனை எனது வாழ்க்கையில் பார்த்தேன். உங்களுக்கு இதனை எழுதியதால் கடவுள் எனக்கு வேறுவிதத்தில் உதவிச்செய்கிறார். ஆன்மீகவழியில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
என்னுடைய எண்ணமும் ஏதோ நீங்களும் பிளாக்கை படித்தோம் அப்படியே சென்றோம் என்று இருக்ககூடாது என்று எண்ணித்தான் உங்களையும் ஆன்மீகத்தில் உயர்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தில் பல விசயங்களை புகுத்தி எழுதிவருகிறேன். இன்று இண்டர்நெட்டில் ஆயிரம் விசயங்கள் இருக்கும்போது இந்த பிளாக்கை படிக்க வேண்டும் என்று நீங்கள் வருவது கண்டிப்பாக அனைவருக்கும் அந்த இறைவனிடம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தேனீக்கள் பூக்கள் மீது தான் அமரும். ஈக்கள் அசுத்தம் மீது தான் அமரும். இண்டர்நெட்டில் ஆயிரம் அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கள் வந்து அமருவது இந்த பிளாக்கில் தான் அதனால் என்னிடம் இருக்கும் சக்தி உங்களின் ஆத்மாவை மகிழ்விக்கிறது. நான் ஒவ்வொரு நாளும் புது மனிதனாக இந்த பூமியில் பிறப்பது போல் உணர்கிறேன்.
ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார் உங்களின் பூர்வஜென்மத்தில் சம்பந்தப்பட்டவர் நம்முடன் பனிரெண்டு வருடங்கள் வாழ்ந்தால் தான் நம் முன்ஜென்மத்தில் வாழ்ந்தவர் என்று ஒரு கருத்தை தந்திருந்தார். அப்படி எல்லாம் கிடையாது உங்களின் முன்ஜென்மத்தில் உங்களுடன் நெருக்கமாக இருந்தவர் உங்களின் முன் ஒரு கணநேரத்தில் கூட வந்துவிட்டு செல்வார். இப்படியும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன்.
பூர்வபுண்ணிய சொந்தம் என்பது மிகவும் உணர்வு பூர்வமானது. உங்களின் முன்ஜென்மத்தின் உங்களின் துணைவரின் ஆத்மா உங்களை பார்த்துவிட்டால் அந்த ஆத்மாவிற்க்கு கிடைக்கும் சக்தி அளவில் அளக்கமுடியாது அப்படி ஒரு சந்தோஷத்தை அது அடையும் இதனை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த இருவருக்கும் ஏதோ ஒரு நிகழ்வால் இருவருக்கும் பிரிவு நிகழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த இரு ஆத்மாவும் படும் வேதனை எழுத்தில் எழுதமுடியாது. உண்மையில் இருவரின் ஆத்மாவும் அப்பொழுது இருந்தே தொடர்பில் இருந்துக்கொண்டே இருக்கும். எனக்கு இதனைப்பற்றி அனுபவம் இருப்பதால் சொல்லுகிறேன்.
எனக்கு முன்ஜென்மத்தில் துணைவராக இருந்தவரின் ஆத்மா என்னை ஒரு நாள் கூட வந்து பார்க்காமல் இருந்ததில்லை. ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள் ஆத்மாவிற்க்கு ஒன்றும் தெரியாது அது ஒரு வஸ்து போல் இருக்கும் என்று ஆனால் நான் சொல்லுகிறேன் ஆத்மாவிற்க்கு அனைத்தும் தெரிகிறது.
அந்த நபர் எங்கு இருக்கிறார் அவர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார். ஒரு தகவலையும் தவறவிடாமல் அனைத்தையும் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கிறது. அப்பொழுது தான் நான் நினைத்தேன் இவ்வளவு சக்தி இதற்கு இருக்கிறதா. அதனுடைய ஏக்கம் தான் என்ன என்று இப்பொழுது பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நான் எதுவும் செய்யவில்லை அதுவாகவே வந்து செல்கிறது. அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் ஆயிரம் இருக்கிறது இது போதும்.
என்னுடைய அனுபவத்தில் இருந்து உங்களுக்கு தரும்போது உங்களுக்கு எளிதில் புரியும் என்பதற்க்காக எழுதுகிறேன். உங்களுடைய துணைவர் மட்டும் அல்ல உங்களின் முன்ஜென்ம உறவுகள் அனைத்தும் இப்படி தான் செய்யும். ஆத்மாக்களின் உலகத்தில் பல விந்தைகள் நடைபெறுகின்றன. அதனைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் இவன் பைத்தியம் ஆகிவிட்டான் என்று நினைக்கதோன்றும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நான் சொல்லுவது அனைத்தும் உங்களுக்கு புரியும்.
நாம் வெளிகண்களால் பார்க்கும் உலகம் வேறு. அககண்களால் பார்க்கும் உலகம் வேறு. இந்த அககண்களால் பார்க்கின்ற உலகம் அற்புதம் நிறைந்த உலகம். அந்த உலகத்தை காண உங்களுக்கு ஜாதககதம்பம் வழி செய்யும்.கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அனைத்திற்க்கும் காலம் என்பது இருக்கிறது அல்லவா அதனால் பொறுமையாக இருங்கள் வழியை நான் தருகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.