வணக்கம் நண்பர்களே!
நான்கு வருடங்களாக குலதெய்வத்தை வணங்கி வருகிறேன். எந்த பயனும் இல்லை என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டுருந்தார் அவருக்கான பதில்.
நான்கு வருடங்கள் எப்படிப்பட்ட ஆராதனைகளை செய்து வருகின்றீர்கள் என்று சொல்லவில்லை. பச்சை பரப்புதல் செய்தீர்களா. பச்சை பரப்புதல் செய்யவில்லை என்றால் உடனே பச்சை பரப்புதலை செய்யுங்கள்.உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த கோவிலின் நிலை தற்பொழுது எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும்.
ஒரு சில கோவில்கள் வழிபாடு இல்லாமல் இருக்கும். வழிபாடு இல்லை என்றால் வழிபாட்டை தொடங்க உதவி செய்யுங்கள். வழிபாடு இருந்தால் மட்டுமே அதிகமான சக்தியோடு கோவில் இருக்கும்.
ஒரு சில கோவில்களில் இருக்கும் சக்தியை கட்டி வைத்துவிடுவார்கள். அப்படி கட்டி வைத்திருந்தால் அந்த கோவிலில் இருந்து உங்களுக்கு அருள் கிடைக்காது.
கோவில் கட்டினாலும் அந்த கோவிலுக்கு என்று செய்யவேண்டியதை செய்து வைத்திருந்தால் மட்டுமே அந்த கோவிலின் சக்தி அப்படியே அங்கு இருக்கும். ஒரு சில கோவில்களை முறைப்படி செய்வதில்லை அதனாலும் சக்தி கிடைக்காமல் இருக்கிறது.
உங்களின் பங்காளிகள் உங்களின் கோவிலில் இருக்கும் சக்தியை அவர்களுக்கு மட்டும் திருப்பி வைத்துவிடுவார்கள். அப்படி இருந்தாலும் உங்களுக்கு வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்டதை நீங்கள் உணர்நதால் ஒரு நல்ல ஆன்மீகவாதியை வைத்த சரிசெய்துக்கொள்ளுங்கள்.
நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை பத்து பேர் மட்டுமே. பார்க்கலாம்
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.