வணக்கம்!
ஒருவர் தன்னுடைய ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் சார்ப்பில் வாழ்ந்துவிடலாமா என்று பார்த்தால் தாராளமாக வாழ்ந்துவிடலாம் என்று சொல்லலாம். ஒரு கிரகத்தினை மட்டுமே சார்ந்து வாழ்வதற்க்கு என்ன தேவை என்று கேட்கலாம்.
ஒரு நோக்கம் மட்டும் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு நபர்க்கு எனக்கு இப்படி தான் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அவரின் ஆசைக்கு தகுந்த படி கிரக நிலை அவரின் ஜாதகத்தில் இல்லை என்றால் அவர் ஒரு கிரகத்தின் காரத்துவத்தை சார்ந்து வாழ்ந்து அவரின் ஆசையை தீர்த்துக்கொள்ளலாம்.
ஜாதகத்தில் உள்ள எல்லா கிரக நிலையும் வேலை செய்தாலும் ஒரு கிரகத்தின் உள்ள காரத்துவத்தை மட்டும் அதிகமாக நாடி அதில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார் என்றால் அவர்க்கு ஒரு சில காலத்திற்க்கு பிறகு அந்த கிரகத்தின் காரத்துவம் அதிகமாக வேலை செய்ய தொடங்கிவிடும். இது சாத்தியப்படுமா என்றால் கண்டிப்பாக இது சாத்தியப்படும்.
ஒருவருக்கு நான் எதிர்காலத்தில் இப்படி தான் வாழவேண்டும் என்று நினைத்தால் அவர் எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்படுவதையும் பார்த்தால் அது ஒரு கிரகத்தின் காரத்துவத்தை தான் காட்டும் அப்பொழுது அவரின் ஆசை ஒரு கிரகத்தோடு சம்பந்தப்படுகின்றது. இவர் ஆசைப்படும் கிரகத்தின் காரத்துவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அதற்கு சமப்பந்தப்படி தன்னுடைய அன்றாட நிகழ்வை மாற்றிக்கொண்டால் அவர் நினைத்தபடி எதிர்காலத்தில் மாறமுடியும்.
ஒருவர் தன்னை முழுமையாக அந்த கிரகத்திற்க்குள் மாற்றிக்கொள்வதற்க்கு நாட்கள் எடுத்தாலும் ஒரு சில காலக்கட்டத்தில் அவர் நினைத்த காரியத்தை அடைந்துவிடலாம். அவர் நினைத்த காரியத்தின் காரத்துவம் உடைய கிரகத்தின் வேலை நடந்து இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு