Followers

Thursday, October 22, 2020

ஐப்பசி பெளர்ணமி



 வணக்கம்!

                   வருகின்ற 31 ஆம் தேதி ஐப்பசி பெளர்ணமி வருகின்றது. உலகத்திற்க்கு இறைவன் உணவை படியளந்த நாள். ,இந்த ஐப்பசி பெளர்ணமி அன்று நாம் நமது அம்மனுக்கு மாத பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாதம் நடைபெற இருந்த பூஜையை ஐப்பசி பெளர்ணமி இந்த மாத கடைசியில் வருவதால் அந்த நாளில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்க்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதற்க்கு அரிசி மற்றும் காய்கறிகளை தானம் அளியுங்கள். வருடம் முழுவதும் உங்களுக்கு அன்னம் தட்டுபாடு ஏற்படாது. அன்னத்தால் ஏற்படும் தோஷமும் விலகி உங்களுக்கு நல்லது நடக்கும். 

30 ஆம் தேதியே பெளர்ணமி வருகின்றது. பெரும்பாலும் கோவில்களில் 31 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. உங்களுக்கு அருகில் உள்ள சிவலாயங்களில் எந்த நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் செயல்பட்டுக்கொள்ளுங்கள்.

பெளர்ணமி அன்று பெரும்பாலும் அனைவரும் வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலும் ஐப்பசி பெளர்ணமி அன்று நிலவு முழு சக்தியோடு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதிகமான ஒளிகளை தரும் என்பதால் அந்த நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன் 

ராஜேஷ்சுப்பு






Wednesday, October 7, 2020

இராகு

வணக்கம்!                  

ஒருவர் சொத்து வாங்குவதற்க்கு செவ்வாய்கிரகம் உதவி செய்யும் அல்லது அவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு நான்காம் வீட்டு அதிபதி வழியாக சொத்தை சேர்ப்பார்கள். நிலத்தை வாங்கினாலும் அந்த சொத்தை அவர் இழப்பது அவரின் ஜாதகத்தில் இராகு கிரகம் சரியில்லை என்றால் அவர் அந்த சொத்தை இழக்க நேரிடும்.

உங்களின் ஊரில் ஒருவர் நன்றாக வாழ்ந்திருக்கலாம் அவர் நிறைய நிலங்களை வாங்கி போட்டு இருந்திருப்பார். கோடிக்கணக்கான நிலங்கள் அவர் வாங்கியிருப்பார். அவரின் வாரிசு ஆளுமைக்கு வந்தவுடன் அவரின் சொத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்று ஒரு கட்டத்திற்க்கு மேல் சொத்து இல்லை என்று நடுத்தெருவிற்க்கு வந்திருக்கலாம். 

நீங்கள் பல பேரின் வழியாக செவி வழி செய்தியாக கூட கேட்டிருக்கலாம். இதற்கு எல்லாம் காரணம் என்ன என்றால் அவர்களின் ஜாதகத்தில் இராகு கிரகம் படுமோசமான தீமை பலன்களை தந்த காரணத்தால் மட்டுமே இருக்கும்.

இராகு கிரகம் ஒரு நன்றாக இருக்கும் குடும்பத்தை அழிக்க நினைத்தால் அது அழித்தே தீரும். ஒன்றுமே இல்லாத ஒரு ஏழ்மையான நிலைக்கு தள்ளுவது இராகுவின் வேலையாக இருக்கும். இராகு போல் கொடுப்பார் இல்லை கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்ற கேள்விபட்டு இருக்கிறோம் என்று நினைக்கலாம் ஆனால் இராகுவும் கெடுக்கும் வல்லமை உடைய ஒன்று தான்.. நல்ல நிலையில் இருப்பவரை கீழே தள்ளிவிடுவதில் இராகுவை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லலாம்.

இராகு கிரகத்தைப்பற்றி ஒரு வீடியோ தந்து இருக்கிறேன். அதனை பார்ப்பதற்க்கு கீழே உள்ள லிங்க கிளிக் செய்யவும்.

https://youtu.be/8uFykV8_-jw

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Monday, October 5, 2020

சொத்துக்கள் வாங்கும் காலம்



 வணக்கம்!

          ஒருவர் சம்பாதித்து ஒரு சொத்தை வாங்கினால் அந்த சொத்து அதிகபட்சம் நூற்றியிருப்பது ஆண்டுகள் வரை இருக்கும் அதற்கு மேல் அந்த சொத்து அவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருக்கு சேர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று தலைமுறையை ஒரு சொத்து கடந்து போனாலே அது பெரிய விசயமாகவே இருக்கும்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் ஒருவர் கவனம் செலுத்தி வாங்கினால் அவர் வாங்கும் நேரத்தில் நல்ல காலமாகவே அவர்க்கு இருந்தால் அந்த சொத்து பல தலைமுறை கடந்து நிற்க்கும். பெரும்பாலான நிலைக்கும் சொத்துக்கள் சனி அதிகபலத்தோடு இருந்த காலத்தில் வாங்கிய சொத்துகள் தான் நீடித்து நிலைத்து நிற்க்கும்.

நீங்கள் சொத்துக்களை வாங்கும்பொழுது உங்களின் ஜாதகத்தில் சனி நன்றாக இருக்கின்ற காலம் தானா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். சொத்துக்கள் சேர்ப்பதற்க்கு செவ்வாய்கிரகம் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சனிகிரகத்தின் பலனையும் பார்த்து வாங்கவேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும் ஆனால் அந்த சொத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருக்கும் அதன் பிறகு அந்த சொத்து உங்களை விட்டு செல்வதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது அதனால் செவ்வாய் பலத்தோடு சனியின் பலத்தையும் சேர்ந்து இருக்கும் காலமாக பார்த்து வாங்கினால் நல்லது.

6-10-2020 செவ்வாய்கிழமை அன்று திருப்பூரில் என்னை சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

நவராத்திரி விழா ஹோமம்

 


வணக்கம்!

          ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அம்மன் ஹோமம் செய்து வழிபடுவது உண்டு. இந்த வருடமும் இதனை செய்ய இருக்கிறோம். அம்மனின் அருளை பெறுவதற்க்கு நவராத்திரியில் ஹோமம் செய்வது மிக சிறந்த ஒரு பலனை கொடுக்கும். 

இந்த வருடம் நவராத்திரி வரும் 17 ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த வருடத்தில் நவராத்திரிக்கு ஹோமம் செய்வதற்க்கு என்று நண்பர்கள் புக் செய்து இருக்கின்றனர். மீதியும் நாட்கள் இருப்பதால் இந்த நாளில் நீங்கள் புக் செய்துக்கொள்ளலாம். நவராத்திரி ஹோமத்திற்க்கு ஒரு நாள் கட்டணமாக ஆறாயிரம் ரூபாய் ( Rs 6000) செலுத்தி புக் செய்துக்கொள்ளுங்கள். உடனே கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புகொள்ளுங்கள்.


Google Pay Rajeshsubbu Cell 8940773309

அன்புடன்

ராஜேஷ்சுப்பு