வணக்கம்!
உச்ச கிரகத்தைப்பற்றி நாம் பார்த்து வந்தோம். அதில் ஒரு கருத்தை இப்பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு ஒரு கிரகம் உச்சம் பெற்றாலே போதும் அவர் நல்ல முறையில் வாழ்க்கையை ஓட்டிவிடுவார் என்று சொல்லுவோம்.
ஒரு கிரகம் உச்சம் பெறும்பொழுது அந்த கிரகத்தை வேறு தீய கிரகங்கள் பார்வையை செலுத்தாமல் இருந்தால் உச்சம்பெற்ற கிரகம் நல்ல பலனை கொடுக்கும். உச்சம் பெற்ற கிரகத்தை தீய கிரகங்கள் பார்த்தால் நல்ல நிலைக்கு உயர்த்தி அதில் சிக்கலை உருவாக்கி விடும்.
பல பேர்களின் வாழ்க்கையை நீங்களே பார்த்து இருக்கலாம். இவர்கள் எல்லாம் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள் என்று உங்களுக்கு தோன்றும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சில நாட்களிலேயே அதில் நிறைய பிரச்சினை சந்திப்பார்கள். உச்சம்பெற்ற கிரகம் கொடுத்த வாழ்க்கை அதில் சிக்கலை ஏற்படுத்தியது தீயகிரகங்களின் பார்வையால் வந்த பிரச்சினை.
ஒரு சில கிரகங்கள் உச்சம் பெற்று இருக்கும். அந்த உச்சம்பெற்ற கிரகம் தன்னுடைய தசா காலத்தில் அல்லது புத்தி காலத்தில் கூட நல்லது செய்வது கிடையாது. அதற்கும் இது மாதிரியான தீயகிரகங்களின் பார்வை தான் காரணமாக இருக்கமுடியும்.
உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையில் கிரகங்கள் இருந்தால் நீங்கள் நல்ல பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. எப்படி வேலை செய்யவேண்டும் என்று பரிகாரம் செய்யும் நபருக்கு தெரியும் அவரிடம் சென்று இதனை சொல்லி செய்துக்கொள்வது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு