Followers

Friday, September 30, 2016

சுக்கிரன் மற்றும் சந்திரன்


வணக்கம்!
          சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைந்து இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷம் என்று சொல்லிருந்தேன். சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இருந்து அது தவறாக பலன்களை கொடுக்க ஆரம்பித்தால் மிகவும் கடினமாக இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கை.

பெரும்பாலும் காமத்தில் அழியும் நபர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்கள் காமத்திற்க்காக செலவு செய்து அனைத்தையும் இழப்பார்கள். 

ஒரு சிலருக்கு பனிரெண்டாவது வீட்டு அதிபதியோடு இணையும்பொழுது அல்லது பார்வை படும்பொழுது எதிர்பாலினர்க்காக அனைத்தையும் இழந்து கடைசியில்  தன் உயிரையும் இழந்துவிடுவார்கள்.

ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டு அதிபதியோடு அல்லது ஆறாவது அதிபதியின் பார்வையில் இருக்கும்பொழுது காமத்திற்க்காக கொலை கூட செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர் அவர்கள் வந்த வழி அப்படி இருக்கும்பொழுது இதற்கு என்ன செய்யமுடியும் என்று விட்டுவிடலாம். ஜாதகம் பார்க்க தெரிந்தவர்கள் இந்த கிரகங்களின் தாக்கத்தால் தான் இது வருகிறது என்று எண்ணி எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் விதியில் இருந்து வெளியில் வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


ணக்கம்!
          இன்று பல பிராமணர்களுக்கு கூட சுக்கிரன் தான் குருவாக இருக்கின்றார். ஏன் என்றால் மிகுந்த ஆச்சார்யத்தோடு ஒருத்தர் இருப்பது கடினம் என்பதால் இப்படி சொல்லுகிறேன்.

நான் பள்ளியில் படித்தபொழுது ஐயர் வீடுகளில் தினமும் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருப்பார்கள். நிறைய விஷேசம் நடந்துக்கொண்டே இருக்கும். இன்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.

பிராமணர்களுக்கு உள்ள நியதிபடி நடக்கவேண்டும் என்றால் அவர்கள் வேலைக்கு கூட செல்லமுடியாது. அதனால் தான் அவர்களும் சுக்கிரனின் காரத்துவம் உடையவர்களாக இருக்கின்றனர்.

பிராமணர்கள் இதற்காக வருந்தவேண்டாம் காலம் அப்படி இருக்கும்பொழுது என்ன செய்யமுடியும். நீங்களும் சுக்கிரன் காரத்துவம் உடைய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம் அதனால் உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படாது.

பழைய காலத்திலும் பிராமணர்கள் அம்மனை எல்லாம் வழங்கி வந்துள்ளனர். இன்றைய காலத்தில் கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது என்று சொல்லலாம். பெரும்பாலும் இன்று அனைவருக்கும் குருவாக இருப்பவர் சுக்கிரன் தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 29, 2016

குரு


ணக்கம்!
          எப்பொழுதும் நான் வெளியில் சென்று வந்தாலும் அதன் சம்பந்தப்பட்ட விசயத்தை பதிவில் தருவது வழக்கம். என்னை சந்தித்த நண்பர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை அப்படியே பதிவில் கொடுத்துவிடுவது உண்டு.

ஒருவருக்கு குரு தசா நடந்தால் அவர் அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்ளலாமா அல்லது வேறு ஏதாவது வழிபாட்டை மேற்க்கொள்ளலாமா என்று நண்பர் கேட்டார். பொதுவாக இந்துக்கள் அனைவரம் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று வரலாம். ஒன்றும் தவறு இல்லை ஆனால் தொடர்ச்சியாக ஒரே கோவிலை தொடர்ந்து வழிபடும்பொழுது மட்டும் அந்தந்த தசாவிற்க்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலத்தில் குரு கிரகத்தை போல் சுத்தமாக மிகவும் ஆச்சாரியமாக இருக்கவேண்டும் என்றால் நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லாத ஒன்று என்றால் அதனை நம்புவது கடினம் தான். சுத்தமான பிராமணன் என்று ஒருவரையும் நாம் கண்டுபிடிப்பது கடினம்.

குரு தசா நடந்தாலும் நீங்கள் சுக்கிரனின் குருவை ஒத்தவர்களையும் ஏற்றுக்கொண்டு அவர்களை பின்பற்றினாலும் ஒன்று தவறு இல்லை. தாராளமாக அம்மன் வழிபாட்டை மேற்க்கொண்டு வரலாம். 

நவராத்திரி நெருங்கி வருகின்றது. நவராத்திரி ஹோமத்திற்க்கு முன்பு பதிவை செய்தவர்கள் பணத்தை செலுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

நவராத்திரியை பொறுத்தவரை ஒன்பது நாட்கள் என்றாலும் முதல் மூன்று நாட்கள் விஷேசம். நவராத்திரி முதல் மூன்று நாட்களை மட்டும் நீங்கள் நன்றாக அம்மனை வணங்கினால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 28, 2016

புதனின் திறமை


ணக்கம்!
          இன்றைய காலத்தில் நிறைய திறமையாக இருக்கவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறோம். புத்திசாலிதனம் அதிகம் இருந்தால் தான் திறமை இருக்கும். புத்திசாலிதனத்திற்க்கு புதன் காரகம் வகிக்கிறார்.

நமக்கு புதன் கிரகம் நன்றாக அமைந்த திறமையாக இருந்தாலும் கூட நமது வாரிசுகளுக்கு அந்த புதன் கிரகம் நன்றாக இருக்காது. புதன் கிரகம் கொஞ்சம் சரியில்லாமல் அமைந்து நமது வாரிசுகள் திறமையின்மை இல்லாமல் இருக்கும்.

உலகத்தில் உள்ள அறிவியல் மேதையாக இருக்கட்டும் அல்லது உங்களின் ஊரில் நன்றாக திறமையாக இருப்பவர்களின் வாரிசுகளை பாருங்கள் அவர்கள் வாழ்க்கையில் சைன் ஆகாமாட்டார்கள். ஒவ்வொருவர்களின் திறமை அவர்களின் வாரிசுகளை பாழ் ஆக்கிவிடுகிறது.

திறமை இருக்க வேண்டும் அதே நேரத்தில் ஒரு சில இடத்தில் கொஞ்சம் விட்டு கொடுத்து போகவேண்டும் அதாவது முட்டாள் தனமாக இருக்கவேண்டும். 

எந்த ஒரு இடத்திலும் பேலன்ஸ் வாழ்க்கை வாழ ஆரம்பித்தால் அனைத்து கிரகத்தின் வழியாக நல்லது கெட்டதை சரியாக பயன்படுத்திக்கொண்டு செல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 27, 2016

தர்மத்தில் எது சிறந்தது?


ணக்கம்!
          நண்பர் ஒரு கேள்வி கேட்டார் அதாவது நாம் செய்யும் தர்மம் பூர்வபுண்ணியத்திற்க்கு சேருமா அல்லது பாக்கியஸ்தானத்திற்க்கு சேருமா என்று கேட்டார்.

நாம் தெருவில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் அந்த வழியில் ஒருவர் கையை ஏந்தி பிச்சை கேட்கிறார் என்றால் அவர்க்கு நாம் பிச்சை போடுவது பூர்வபுண்ணியத்திற்க்கு போய் சேரும்.

நாம் கோவிலுக்கு செல்கிறோம் அங்கு அமர்ந்து காவி உடையணிந்து ஒருவர் உங்களிடம் பிச்சை கேட்கிறார் என்றால் அது பாக்கியஸ்தானத்திற்க்கு போய் சேரும்.

தெருவில் உள்ளவர்களுக்கு எல்லாம் நாம் சாப்பாடு போட்டால் அது நமது குழந்தைகளுக்கு செல்லும். நம்முடைய புண்ணியம் நமது குழந்தைகளுக்கு சேரும். கோவிலில் அன்னதானம் செய்தால் அது நமக்கு கிடைக்கும்.

இன்று நமக்கு வேண்டியது பாக்கியஸ்தானம் கொஞ்சம் நல்ல முறையில் நாம் வளர்ந்தவுடன் நமது குழந்தைகளுக்கு புண்ணியம் செய்துவிடவேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தாலும் நல்லது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புகழின் உச்சம் ராகு


வணக்கம்!
          விவேகானந்தரைப்பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். விவேகானந்தரைப்பற்றி தெரியாத ஆள் இருக்கமுடியாது அந்தளவுக்கு அவர் சிறந்து விளங்கியவர். அவர் சிறந்து விளங்குவதற்க்கு காரணம் ஒன்பது கிரகத்தில் ஏதோ ஒரு கிரகம் என்ற தான் ஒரு சோதிடர்களின் பார்வையாக இருக்கமுடியும்.

அவரின் ஜாதகத்தை நாம் அலச போவதில்லை. ஒரு சில விசயத்தை வைத்து சொல்லலாம் என்று இதனை உங்களிடம் சொல்லுகிறேன். விவேகானந்தர் ஒரு அறையில் தியானம் செய்துக்கொண்டு இருந்தார் அந்த அறையினுள் பாம்பு ஒன்று வந்தது கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு அந்த பாம்பு வெளியில் சென்றது என்று அனைவரும் அவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்பொழுது தெரிந்துக்கொண்டு இருக்கமுடியும்.

பாம்பு வந்து சென்றபிறகு அவரின் வாழ்க்கையில் பெரிய மாறுதல் உலக புகழ் சாமியாராக இருந்தார். பாம்பு வரவில்லை ராகு உள்ளே வந்தார் உலகபுகழாக மாறிவிட்டார் என்பது தான் உண்மை.

உலகபுகழாக மாறுவதற்க்கு எல்லாம் ராகு தான் காரணம். ராகு என்ற கிரகம் மட்டும் ஒருவனை தூக்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அவன் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவான் என்பது மட்டும் உண்மை. அந்தளவுக்கு ஒருவனை தூக்கும் ஆற்றல் பெற்ற கிரகம் ராகு.

நீங்கள் வசிக்கும் தெருவில் நீங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும் என்றாலும் அதற்கும் கிரகத்தின் பலன் இல்லாமல் ஒன்றும் நடக்காது. கிரகங்கள் விளையாடும் விளையாட்டு தான் மனிதவாழ்க்கை மனிதனிடம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் உண்மை.

மனிதனால் ஒரு சில விசயங்களை செய்ய முடியும் அதாவது நாம் ஒரு சில வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தால் ஒரு கிரகத்தின் ஆற்றலை பெற்று சிறந்து விளங்கமுடியும். 

என்னால் உங்களின் ஜாதகத்தை பார்த்து ஒரு சில விசயங்களை மட்டும் செய்து உங்களின் வாழ்க்கையை மாற்றமுடியும் என்பது எனது தொழில் திறமை. எனது தொழிலில் நம்பிக்கை வைத்து சொல்லுகிறேன் உங்களின் வாழ்க்கையில் ராகு வைத்து உங்களை பெரிய ஆளாக மாற்றமுடியும். ராகு என்ற கிரகத்தை வைத்து பல பேரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறேன். நீங்களும் மாறவேண்டும் என்றால் தகுதியோடு என்னை வந்து சந்தியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயண அனுபவம் பகுதி 2


வணக்கம்!
          திருசெந்தூர் சென்றடைந்து கடலில் குளித்துவிட்டு நாழி குணற்றில் குளித்துவிட்டு செந்தூர் முருகனை வழிபட சென்றோம். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலைப்பற்றி விபரம் தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு சென்றால் தான் நாம் அனைத்தையும் தரிசனம் செய்யலாம் அந்தவிதத்தில் நண்பர் ஆழ்வார்திருநகரி விஜயராகவன் அவர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி சென்றார். முதலில் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு தான் முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்று அழைத்துக்கொண்டு சென்றார். கோவிலுக்கு வெளியில் அந்த விநாயகர் கோவில் இருக்கிறது. விநாயகரை தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்குள் சென்றோம்.

கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை. சரி இலவச தரிசனத்தில் சென்று தரிசனம் செய்துவிடலாம் என்று சென்றோம். முருகனை தரிசனம் செய்துவிட்டு பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம் என்று சென்றால் நீங்கள் இலவசத்தில் வந்துவிட்டீர்கள் கட்டணத்தில் வந்தால் தான் அதற்கு நீங்கள் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மறுபடியும் கட்டண தரிசனம் டிக்கெட் வாங்கிக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு பஞ்சலிங்க தரிசனத்திற்க்கு தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டு பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்தோம்.

உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் எழுதினேன். திருசெந்தூரை பொறுத்தவரை இந்த பஞ்சலிங்கம் தான் மிக மிக முக்கியமாக நீங்கள் தரிசிக்க வேண்டும். இதனை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து வள்ளிகுகை சென்று தரிசனம் செய்தோம்.

திருசெந்தூர் முருகன் கோவிலுக்குள் சட்டை போடகூடாது என்று சொல்லுகின்றனர். சட்டை இல்லாமல் சென்று தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்கிறார்கள். நம்ம கோவிலில்களில் ஒரு தனிதன்மை என்ன என்றால் அங்குள்ள வெப்பம் தான். இந்த கோவிலுக்குள் சென்றால் ஏசி குத்து குத்து என்று குத்துகிறது. அந்தளவுக்கு குளிர் எதற்கு சட்டையை கழட்ட சொல்லுகின்றார்கள் என்பது மட்டும் விளங்கவில்லை.. 

தமிழ்கடவுள் தற்பொழுது மலையாள கடவுளாக மாறிக்கொண்டு வருகிறார். பழனி திருசெந்தூர் எல்லாம் அவர்களின் வசம் சென்றுவிட்டது என்பது மட்டும் உண்மை. முருகனைவிட பஞ்சலிங்கம் சூப்பர் என்பது மட்டும் என்னால் உங்களுக்கு சொல்லமுடியும்.

திருசெந்தூரை முடித்துக்கொண்டு திரும்பிவரும் வழியில் அம்மன்புரம் என்ற ஒரு ஊர் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் நின்று பார்த்தால் எதிராக மணிவிலாஸ் காரசேவு என்ற ஒரு கடை இருக்கின்றது. அங்கு சென்று 100 கிராம் காரசேவு வாங்கிக்கொண்டு அதனை சாப்பிட்டுக்கொண்டே ஒரு காபியை குடித்தால் அடடா பார்த்த கோவிலை விட இது சூப்பராக இருக்கின்றதே என்று தோன்றவைத்தது.

அம்மன்புரத்தில் இருந்து கிளம்பி வனதிருப்பதி கோவில் சென்றோம்.  வனதிருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி வந்தோம். 

அடுத்த பதிவோடு பயணபதிவை முடித்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 26, 2016

பயண அனுபவம் பகுதி 1


ணக்கம்!
          பயணத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். எந்த ஒரு பயணத்திலும் இல்லாத ஒரு தனிசிறப்பு இந்த முறை தென்தமிழக பயணத்தில் இருந்தது. முதல்நாள் மாலை நெல்லை இறங்கியவுடன் முதலில் எப்படியும் நெல்லையப்பரை சந்தித்துவிடவேண்டும் என்று நண்பரிடம் சொன்னேன். அவரும் அதற்கு ஏற்பாடு செய்துக்கொடுத்து தரிசனம் செய்ய வைத்தார். நெல்லையப்பர் கோவிலை முழுமையாக தரிசனம் செய்தேன்.

நெல்லையை நான் சென்றடைந்தது நேரமாகிவிட்டது. மாலையில் யாரும் என்னை சந்திப்பார்கள் என்று எண்ணி தான் பதிவில் சொல்லிருந்தேன். பதிவு அந்தளவுக்கு பாேய் சேரவில்லை என்று நினைக்கிறேன். யாரும் கூப்பிடவில்லை.

ஒவ்வொருவரும் தன்னுடைய ஆன்மீகபயணத்தை வாழ்வில் பெறவேண்டும் என்பது எனது ஆசை அந்த ஆன்மீகபயணத்தை நீங்கள் செல்லும்பொழுது மறக்காமல் நெல்லையில் உள்ள காந்திமதி நெல்லயப்பர் கோவிலையும் தரிசனம் செய்யுங்கள். 

நெல்லையப்பரை தரிசனம் செய்துவிட்டு நேராக ஸ்ரீவைகுண்டத்திற்க்கு சென்று தங்கிவிட்டேன். மறுநாள் காலையில் நான் சென்றதின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தேன். 

நவதிருப்பதி என்ற சொல்லக்ககூடிய பெருமாள் கோவிலில் நான்கு கோவிலை தரிசனம் செய்தோம். மீதியை அடுத்த முறை செல்லும்பொழுது தரிசனம் செய்யவேண்டும். ஒவ்வொரு பெருமாள் கோவிலும் பார்க்க நன்றாக இருக்கின்றது. நல்ல தரிசனம் கிடைத்தது.

ஆள்வார்தோப்பு என்று சொல்லக்கூடிய ஊரில் அமைந்திருக்கும் ஒரு சில ஜீவசமாதியை தரிசனம் செய்தோம்.  ஒரு சமாதியில் திருசெந்தூர் கோபுரத்தை கட்டிய ஒரு மகானின் சமாதியும் இருக்கின்றது. 

ஜீவசமாதியை முடித்துவிட்டு அருகில் உள்ள ஏகாந்த லிங்க சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று சென்றோம். கோவில் நடைசாத்திவிட்டார்கள் அப்படி இருந்தும் அந்த கோவிலை பார்த்தோம் அதில் பல விசங்கள் நமக்கு கிடைத்தது.

கருவூர் சித்தருக்கு காட்சி தந்த ஸ்தலம் என்ற பெருமை உடையது. கருவூர் சித்தரின் நாய்க்கு மோட்சம் அளித்த தலம் என்ற பெருமையும் உடையது இந்த தலம். ஏதோ முற்பிறவியில் நாம் புண்ணியம் செய்து இருக்கவேண்டும் இப்படிப்பட்ட இடத்திற்க்கு நம்மை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தேன்.

இந்த தரிசனம் முடித்துவிட்டு நேராக நண்பரின் வீட்டிற்க்கு சென்று மதியம் உணவை முடித்துவிட்டு சிறிய நேரம் உட்கார்ந்துவிட்டு மறுபடியும் பயணம் திருசெந்தூரை நோக்கி இருந்தது.

பயணம் தொடரும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 25, 2016

சூரியனை வரவேற்போம்


வணக்கம்!
          பொதுவாக நம்ம ஆளுங்க ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து இருப்பது சந்திரன் வந்தபிறகு தான் எழும்புவார்கள். ஞாயிறு அன்று காலையில் எழுந்து கதிரவனை வணங்கினால் நமக்கு பல நல்ல விசயம் நடக்கும்.

இன்றைய காலத்தில் ஆத்மா சக்தியும் அரசாங்க சக்தியும் இல்லை என்றால் ஒருவன் தேறமாட்டான். தன்னை ஒழுங்காக வளர்த்தால் தான் தன்னுடைய குடும்பம் வளரும் என்று ஒருத்தருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் இளைஞர்கள் சனிக்கு அடிமையாகிவிடுகின்றார்கள். சனிக்கிழமை முழுவதும் குடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை எழும்புவது கிடையாது. சந்திரன் வரும்பொழும் எழுந்தால் ஞாயிற்றுக்கிழமையின் உள்ள நல்ல சக்தி கிடைக்காமல் சென்றுவிடுகின்றது.

சூரியனை நீங்கள் வரவேற்க தயாராக இருங்கள். குறைந்த காலத்தில் நீங்கள் ஒரு நல்ல வளர்ச்சிக்கு வந்துவிடுவீர்கள். சூரியனை சூரிய ஒரையில் வரவேற்கவேண்டும் என்பது நியதி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 24, 2016

சனிக்கு பரிகாரம்


ணக்கம்!
          பல நண்பர்களுக்கு தற்பொழுது ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நடைபெறும் இவர்கள் எல்லோரும் கொஞ்சம் கடினமான ஒரு வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும்விதமாக ஒரு சில விசயங்களை சொல்லுகிறேன். அதனை நீங்கள் கடைபிடித்து வாருங்கள்.

யாராவது பிச்சை என்று உங்களிடம் கேட்டு வந்தால் அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்க்கு பிச்சை போடுங்கள். ஒரு சில நேரத்தில் பிச்சை எடுத்து வரும் நபர் சனி ஈஸ்வரராக கூட இருக்கலாம். அதனால் அவர்க்கு உங்களால் முடிந்த பிச்சையை போட்டுவிடுங்கள்.

ஒரு சிலருக்கு மருத்துவசெலவு பிச்சிக்கொண்டு போகும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனை என்று சென்று வந்துக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் செய்யவேண்டியது உங்களின் ஊரில் உள்ள வறுமையில் உள்ள நோயாளிக்கு உங்களின் செலவில் வைத்தியம் பாருங்கள் அல்லது வைத்தியத்திற்க்கு பணம் கொடுங்கள்.

ஒரு சிலருக்கு ஏழரையில் ஜெயிலுக்கு செல்லவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும். பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் நேரம் சரியில்லை என்றால் திகார் சிறைக்கு சென்று அங்கு பரிமாறப்படும் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு வருவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நீங்கள் திகார் ஜெயிலுக்கு எல்லாம் செல்லபோகபோறதில்லை. உங்களின் ஊரில் இருக்கும் சப் ஜெயிலில் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து அந்த உணவை வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.

தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு உதவியை செய்யுங்கள். அது எப்படிப்பட்ட உதவியாக இருந்தாலும் செய்யலாம். அதுபோல ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு சனியையும் ஈஸ்வரனையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 23, 2016

சுக்கிரனுக்குரிய மூலிகை


ணக்கம்!
          தைலக்குளியலைப்பற்றி ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தேன். தைலக்குளியலை எல்லாம் குளிக்கிறீர்களா என்பதற்க்கு மறுபடியும் ஞாபகம் ஊட்டுவதற்க்கு தான் இந்த தகவல் பேசிவேண்டியுள்ளது என்பதால் இதனை மறுமுறை சொல்லுகிறேன்.

வெள்ளிக்கிழமை மதியம் தைலக்குளியலை செய்ய சொல்லிருந்தேன். ஒரு சிலர் தைலத்தை தயாரித்தால் என்ன என்று கேட்டார்கள். உங்களுக்கு பிடித்த தைலத்தை நீங்கள் தயாரித்துக்கொள்ளலாம். சுக்கிரனுக்கு சம்பந்தப்பட்டு செய்கின்ற ஒரு பரிகாரம் தான் இது என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.

சுக்கிரன் என்று சொன்னாலே அது மூலிகை சம்பந்தப்பட்ட ஒன்றாக தானே இருக்கும். எந்த ஒரு மூலிகையும் நீங்கள் வைத்து இந்த தைலத்தை தயாரித்து அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தான் என்று வரையறை கிடையாது. எல்லாம் மூலிகைகளும் சுக்கிரனுக்கு கீழ்தான் வருகிறது. அதனால் எந்த மூலிகைகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தைலக்குளியலை பயன்படுத்தும்பொழுது கொஞ்சமாக பயன்படுத்தி படிப்படியாக அதனை அதிகரித்துக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு மூலிகைகளை உடல் ஏற்றுக்கொள்ளாது. அதனால் படிப்படியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தைலக்குளியல் மட்டும் சுக்கிரனுக்கு கிடையாது. நிறைய விசயங்கள் சுக்கிரனுக்கு என்று பரிந்துரை செய்வது உண்டு. அதனை எல்லாம் நீங்கள் என்னை சந்திக்கும்பொழுது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 22, 2016

பத்தில் குரு


ணக்கம்!
          குரு பகவான் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து பத்தாவது வீட்டில் அமைந்தால் அவருக்கு ஒரு நிரந்தரமான வேலை அமையாது என்று சொல்லுவார்கள். கோச்சாரபடி பத்தில் குரு வரும் காலம் பதவி போய்விடும் என்றும் சொல்லுவார்கள்.

பத்தாவது வீட்டில் குரு அமைந்தவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்து இருக்கின்றது. ஒரு சிலருக்கு வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் சென்று வரும் வாய்ப்பும் இருக்கின்றது. அதே நேரத்தில் மாதம் ஒரு ஊரில் தங்கி வேலை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் அவ்வளவு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்காது. நிறைய அல்லல்படுவது போல் நடக்கிறது அதனாலும் கவலைபடதேவையில்லை குருவிற்க்கு வழிபாடு செய்து அந்த பிரச்சினையை சரி செய்துக்கொள்ளலாம்.

பத்தில் குரு இருந்தால் பிறரை வழி நடத்திச்செல்லும் வேலையை பார்த்து சேர்ந்துக்கொள்ளவேண்டும். அப்படி சேரும்பாெழுது அந்த வேலையை தொடர்ந்து செய்யலாம்.


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கு இன்று பயணம். நாளை ஆழ்வார்திருநகரியில் என்னை சந்திக்கலாம். இன்று மாலை திருநெல்வேலி வந்துவிடுவேன். திருநெல்வேலியில் உள்ள நமது நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் உடனே தொடர்புக்கொள்ளவும்.

இரண்டு நாட்கள் தென்தமிழகம் தான் பயணம் இருக்கும். சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 21, 2016

பரிகார பூஜை


வணக்கம்!
          சென்னையில் என்னை சந்தித்த நபர் ஒருத்தர் சொன்னார். சார் ஒவ்வொரு சோதிடர்களும் உடனே என்னிடம் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள் நீங்கள் கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லுகிறீர்களே என்று சொன்னார்.

அவரிடம் அதற்க்கான விளக்கத்தை கொடுத்தேன். இன்றளவும் நம்மை தேடி வரும் அனைவருக்கும் முதலில் பரிகாரத்தை ஒரு காலும் பரிந்துரை செய்வதில்லை. பரிகாரம் செய்வதாக இருந்தால் கூட உங்களின் ஊரில் யாராவது இருந்தால் அங்கு போய் இப்படி செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது உண்டு.

முக்கால்வாசி பரிகாரம் ஒரு சில பிரசித்துபெற்ற கோவிலுக்கு சென்று வந்தாலே அது நடந்துவிடும். அந்த கோவிலுக்கு செல்லாமல் அவர் அவர்களின் நகரத்திற்க்கு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்துவிட்டு எனக்கு நடக்கவில்லை என்று சொல்லுவார்கள்.

பிரசித்து பெற்ற கோவில்களில் உள்ள சக்தி சாதாரண கோவில்களில் இருப்பதில்லை என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்றுவர சொல்லுவது உண்டு. கடைசி நேரத்தில் தான் பரிகாரம் செய்வதை ஊக்குவிக்கிறோம்.

உங்களால் முடிந்தளவு முயற்சி செய்துவிட்டு அதன் பிறகு பரிகாரபூஜை பக்கம் செல்லலாம். ஒரு சில கோவில்களுக்கு நாம் செல்லும்பொழுது நமது ஜாதகத்தில் உள்ள தோஷம் முழுமையாக போய்விடும்.

பரிகாரபூஜை என்பது கொஞ்சம் அதிகளவில் எந்த விசயத்தையும் எதிர்நோக்கும் நண்பர்களுக்கு மட்டும் பரிகாரபூஜையை சொல்லுவது உண்டு. அனைவரும் பரிகாரபூஜை என்று கேட்கவேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களின் மாமனார் எப்படி?


ணக்கம்!
          புதன்கிரகம் மாமாவுக்கு காரத்துவம் உடைய ஒரு கிரகம். உங்களின் மாமா வழியில் நல்லது நடக்குமா அல்லது அவரின் வழியில் பிரச்சினை வருமா என்பதை காட்டக்கூடிய ஒரு கிரகமாகும். இராசியில் புதனுக்குக்கு என்று மிதுனம் மற்றும் கன்னி ராசியாகும்.

மிதுனராசியினர்க்கு மட்டும் மாமனார் வீட்டில் ஆகாது என்று சொல்லுவார்கள். மாமனார் வழியில் அதிக பிரச்சினையை இந்த ராசியினர் சந்திக்க நேரிடும் என்று சொல்லுவார்கள்.

ஒன்று சொல்லவேண்டும் என்று நீண்ட நாள்கள் ஆசை அதற்கு இன்று தான் வாய்ப்பு அமைந்தது. இன்றைய காலத்தில் மாமனார் வீட்டில் இருந்து அதிக வருமானத்தை பார்க்கும் எந்த ஒரு மருமகனும் உருப்பட்டது கிடையாது. மாமனார் வீட்டில் பணம் நிறைய வாங்கிய மருமகன் அனைவரும் வீணாகதான் போய் உள்ளனர்.

நான் நிறைய இடத்திற்க்கு சென்று அந்த அனுபவத்தை வைத்து தான் சொல்லுகிறேன். மாமனார் வீட்டில் எதுவும் எதிர்பார்க்காமல் திருமணத்தை முடித்தவர்கள் நன்றாக இருக்கின்றனர். மாமனார் வீட்டில் நிறைய பணத்தை வாங்கியவர்கள் வீணாக போய்விட்டனர்.

எது எப்படியே போகட்டும் உங்களுக்கு புதன் கிரகம் நன்றாக இருந்தால் மாமனார் வீட்டில் இருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லலாம்.இளைஞர்கள் உங்களின் ஜாதகத்தில் புதன் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள்.

திருச்சிக்கு செல்லுகிறேன். இன்று திருச்சியில் என்னை சந்திக்கலாம்.

நவராத்திரி ஹோமத்தை பற்றி பதிவில் சொல்லிருந்தேன். கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 20, 2016

எதிரும் புதிரும்


வணக்கம்!
          செவ்வாய் கிரகத்தைப்பற்றி காலையில் பார்த்தோம். செவ்வாய் கிரகத்தோடு சனிக்கிரகம் இணையும்பொழுதும் அல்லது பார்வை படும்பொழுதும் அப்படி நடக்கிறது என்று சொன்னோம்.

ஒரு சிலருக்கு சனியின் வீடான மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு செவ்வாய் காரத்துவம் உடைய ஆள்கள் பிரச்சினையை கொடுப்பார்கள். ஏட்டிக்கு போட்டி என்று சொல்வார்கள் அல்லவா அது போல் செய்வார்கள்.

உதாரணத்திற்க்கு மகரராசியினர் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது வீடு கட்டுபவர்கள் மகரராசியினர்களிடம் வம்பு செய்துக்கொண்டு வேலை செய்யாமல் செய்வார்கள்.

வீடு கட்டுவதற்க்கு மட்டும் இல்லை எந்த வேலை என்றாலும் அந்தளவுக்கு ஈடுபாடு காட்ட மாட்டார்கள். அதாவது வேண்டும் என்றே செய்பவர்களாக இருப்பார்கள். சனிக்கும் செவ்வாய்க்கும் அப்படி ஒரு சண்டை சச்சரவு என்றே சொல்லலாம்.

செவ்வாய் ராசியை உடையவர்களுக்கும் சனியின் ராசியை உடையவர்கள் இல்லாத வேலையை எல்லாம் செய்து அவர்களை கவிழ்ப்பார்கள். இது பொதுவான ஒரு பலன் மட்டுமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாயில் சனியின் காரத்துவம்


ணக்கம்!
          சோதிடம் என்பதை முன்கூட்டியே நாம் பலனை தெரிந்துக்கொண்டு அதன்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்துக்கொள்ளுவதற்க்காக உள்ள ஒரு கருவி என்றே சொல்லலாம்.

சோதிடத்தை வைத்தே ஒவ்வொருவரின் குணத்தையும் தெரிந்துக்கொண்டு அவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ளலாம். 

செவ்வாய் காரத்துவம் உடைய ஆட்கள் பெரும்பாலும் உயரமாக தான் இருப்பார்கள். அதிவேகமாக செயல்படக்கூடிய ஒரு ஆட்களாக இருப்பார்கள். இவர்கள் தான் செவ்வாயின் காரத்துவம் உடைய ஆட்கள் என்று சொல்லுவார்கள்.

செவ்வாய் காரத்துவம் உடைய வேலையை செய்யக்கூடிய ஆட்கள் பெரும்பாலும் நான் பார்த்தவரை உயரம் குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள் இது எப்படி லாஜிக் இடிக்குதே என்று நான் நினைத்தது உண்டு.

கட்டடம் கட்டுவதற்க்கு செவ்வாயின் காரத்துவம் உடைய ஆள்கள் வேண்டும். இன்றைய காலத்தில் செவ்வாயின் காரத்துவம் உள்ள கட்டிடத்தை கட்டகூடிய ஆள்கள் குறைவான உயரம் உடையவர்களாக இருகின்றனர். என் எப்படி என்றால் சனியின் காரத்துவமும் இவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது.

இன்றைக்கு ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களை கவனித்து பாருங்கள் அவர்கள் உயரம் குறைவாக இருப்பார்கள். பெரும்பாலும் ரியல் எஸ்டேட் துறையில் அதிக பிரச்சினை அதாவது பிராடு தனம் நடப்பதற்க்கு இவர்கள் தான் காரணமாக இருக்கும்.

செவ்வாயின் காரத்துவத்தோடு சனியின் காரத்துவமும் சேர்ந்து விடுவதால் அந்த துறையில் தில்லுமுல்லு நடக்கும். இது காலம் காலமாக நடந்த வருவதால் முடிந்தவரை எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

நாளை திருச்சியில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 19, 2016

முதல் வீட்டில் சந்திரன்


ணக்கம்!
          ஒருவருக்கு லக்கினத்தில் சந்திரன் அமைந்தால் அவருக்கு நிறைய விசயங்கள் பிடிபடும். அதாவது சந்திரன் அவர்களுக்கு நிறைய கற்பனை வளத்தை மற்றும் அறிவையும் கொடுப்பார். சந்திரன் லக்கினத்தில் அமைந்தால் நிறைய பெண்களோடு தொடர்பு ஏற்படும் அதாவது நட்பாக தான் தொடர்பு ஏற்படும்.

சந்திரனை பொறுத்தவரை வளர்பிறையா அல்லது தேய்பிறையா என்பதை எல்லாம் பார்த்துவிட்டு தான் நாம் சொல்லமுடியும் என்பதால் உங்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு பலனை முடிவு செய்யவேண்டும்.

லக்கினத்தில் சந்திரன் அமைந்தால் உடனே காதல் திருமணம் நமக்கு நடக்கபோகின்றது என்று நினைப்போம் அப்படி எல்லாம் கிடையாது. நமக்கு சொந்தத்தில் அல்லது நமது இரத்தம் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கும் ஊர்களில் திருமணம் பெரும்பாலும் நடக்கும். இதனை வைத்து மட்டும் சொல்லிவிடமுடியாது அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து அது மாறும்.

லக்கினத்தில் சந்திரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் பெரும்பாலும் மனதில் நிறைய கனவை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள். அது சந்திரன் அமைந்த வீட்டை பொறுத்து அவர்களின் கனவு இருக்கும். எதிர்காலம் அல்லது இறந்தகால கனவாக இருக்கும்.

லக்கினத்தில் சந்திரன் அமையபெறுவது நல்லது தான் ஆனால் அந்த சந்திரனுக்கு தீயகிரகத்தின் பார்வை மட்டும் இருக்காமல் இருந்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கப்பெறுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயணத்தை தரும் சந்திரன்


வணக்கம் !
          சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்து முடித்துவிட்டு இன்று காலை தஞ்சாவூர் வந்துவிட்டேன். பல நண்பர்கள் தொடர்புக்கொண்டனர் அனைவரையும் சந்திக்கமுடியவில்லை அடுத்தமுறை வரும்பொழுது உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

சந்திரனை பற்றி பார்க்கலாம். சந்திரன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் பல ஊர்களுக்கு சென்று வரமுடியும் என்று ஏற்கனவே சொல்லிருந்தேன். என்ன தான் இன்று நெட்டில் தகவல்களை சேகரித்தாலும் நாம் நேரில் சென்று பார்த்து அனுபவித்து வரும் தகவல்கள் என்பது ஒரு அற்புதம் என்றே சொல்லலாம்.

பழைய காலத்தில் எல்லாம் வாகன வசதி எல்லாம் கிடையாது. அந்த காலத்தில் ஒவ்வொரு இடத்திற்க்கும் நடந்து சென்று இருக்கின்றார்கள். ஒருவர் நன்றாக நடந்து செல்வதற்க்கும் சந்திரன் தான் காரணமாக இருந்து இருக்கின்றது. ஒருவருக்கு சந்திரன் நன்றாக இருந்தால் நடப்பதற்க்கு அலுப்புபடமாட்டார்.

இன்று சொகுசான வாகனவசதி எல்லாம் வந்தாலும் அடுத்து ஒரு தொலைவு தூர ஊர்க்கு சென்று வந்தாலும் பலருக்கு அது பெரிய உடல்வலியே எடுத்துவிடும் ஆனால் சந்திரன் நன்றாக இருக்கும் நபர்களுக்கு பல ஊர்களுக்கு தொடர்ந்து பயணம் சென்றுவருவார்கள்.

உங்களின் ராசிக்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் வரும்பொழுது அதாவது கோச்சாரபடி வரும் நேரத்தில் நீங்கள் ஒரு பயணத்தை மேற்க்கொள்ள வேண்டிவரும். வீட்டிலேயே அடைப்பட்டு இருப்பவர்களுக்கு கூட ஒரு பயணத்தை கொடுக்கும். 

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் நீங்கள் அடிக்கடி பயணம் மேற்க்கொண்டு பல நல்ல தகவல்களோடு உங்களின் வாழ்க்கையை நன்றாக செலுத்தமுடியும்.

நவராத்திரி ஹோமம் செய்வதற்க்கு பங்களிப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 18, 2016

சூரியன்


ணக்கம்!
          சூரியன் என்ற கிரகத்தை பார்த்து நாம் ஜாதகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு நல்ல சோதிடர்களாக இருந்தால் சூரியனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும். 

சூரியனை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் இன்று நாம் அரசாங்கத்தை நம்பி தான் நிறைய செய்யவேண்டியுள்ளது. உதாரணத்திற்க்கு ஒரு குடும்ப அட்டை தொலைந்துவிட்டால் அதனை நாம் திரும்ப பெறவேண்டும் என்றால் அதற்கு அந்தளவுக்கு அலையவேண்டும்.

ஏதோ ஒரு காரணத்திற்க்காக நமது குடும்ப அட்டை தொலைந்து அதனை நாம் பெறுவதற்க்கு விண்ணப்பித்து உடனே கிடைத்தால் நமக்கு சூரியன் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். சூரியன் தந்தையை மட்டும் காண்பிக்ககூடிய ஒரு கிரக மட்டும் அல்ல அது நமது ஆத்மாவையும் காண்பிக்ககூடிய கிரகம்.

நமது உடலில் உள்ள ஆத்மா எப்படி இருக்கின்றது அது பலம் வாய்ந்த ஒன்றா அல்லது பலம் இல்லாமல் இருக்கின்றதா என்பதை எல்லாம் பார்ப்பதற்க்கும் சூரியன் என்ற கிரகம் முக்கியமான ஒன்று.

இன்று அரசாங்கத்தை வைத்து சம்பாதிப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அரசாங்கத்தை நம்பி பிழைக்கும் அத்தனை பேருக்கும் சூரியன் ஜாதகத்தில் நன்றாக இருக்கும்.

இன்றைக்கு அப்பன் வழி உறவுகள் எல்லாம் நம்மை வைத்து செய்து அனுப்பி விடுகிறார்கள் என்று சொல்லுகிறோம் அல்லவா. சொத்து எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு செல்கின்றார்கள் அல்லவா அவர்களுக்கு கூட சூரியன் ஜாதகத்தில் சரியில்லை என்று தான் அர்த்தம்.

அரசியல்வாதிகளுக்கு சூரியன் நன்றாக அமைந்தால் கூட சூரியன் அமையும் வீடு கொஞ்சம் வில்லங்க வீடாக இருந்தால் அரசாங்கத்தை கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள்.

நவராத்திரி ஹோமத்திற்க்கு புக் செய்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

சென்னையில் உள்ளவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, September 17, 2016

நவராத்திரி விஷேசம்


ணக்கம்!
          அம்மனுக்கு உகந்தநாளாக உள்ள நவராத்திரி வரப்போகின்றது. நவராத்திரி விஷேசமான நாள் இந்த நாளில் அம்மனுக்கு உகந்த பூஜைகள் மற்றும் சிறப்பான ஹோமம் வருடம் வருடம் நடத்தப்படுவது உண்டு.

சென்ற வருடம் இதனை நான் வெளியில் சொல்லாமல் நடத்திக்கொடுத்தேன். இந்த வருடம் அனைவரும் இதில் கலந்துக்கொள்ளட்டும் என்று சொல்லுகிறேன். 

ஒவ்வொரு நாளிலும் அம்மனுக்கு சிறப்பான ஹோமம் நடைபெறும். இந்த ஹோமத்தில் நீங்கள் தனியாக பங்குபெறவேண்டும் அதாவது கட்டணத்தை செலுத்தி உங்களின் குடும்பத்திற்க்காக செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

ஒன்பது நாள்களில் எந்த நாள்களில் நீங்கள் செய்ய சொல்லுகின்றீர்களோ அந்த நாளில் நடத்தப்படும். உடனே என்னை தொடர்புக்கொண்டுவிடுங்கள். அற்புதமான நாளில் உங்களுக்காக செய்யப்படும் சிறப்பான ஹோமத்தில் பங்கு பெற்று அம்மனின் அருளை பெறுங்கள். கட்டணம் மற்றும் மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொள்ளவும்.

இன்று சென்னை பயணதிட்டம் இருக்கின்றது. சென்னையில் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Friday, September 16, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!

இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.

                   





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
                       இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 15, 2016

வேலை கிடைக்க என்ன செய்யலாம்?


ணக்கம்!
          ஒரு சில ஜாதகங்களில் ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் வந்து அமர்ந்தால் அவர்களுக்கு வேலை என்பது பெரிய கடினமாக தான் இருக்கும். என்னிடம் இப்படிப்பட்ட பல ஜாதகங்கள் வந்து இருக்கின்றன அதனை எல்லாம் சரிசெய்து கொடுப்பதற்க்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ஒரு சிலருக்கு குரு பகவான் வேலைக்கு காரணமாகிவிடுவார் அவர் இப்படி அமர்ந்தால் அதனை சரி செய்வதற்க்குள் அவ்வளவு கடினமாக இருக்கும். நாம் எப்படியும் ஒவ்வொரு ஜாதகத்தையும் சரி செய்துக்கொடுப்பது தான் நமது வேலை தான் என்றாலும் கொஞ்சம் அதிக நாள் எடுத்து வேலை நடக்கிறது.

இன்றைக்கு எல்லாருக்கும் வேலைக்கு செல்லவேண்டும் என்பது ஒரு கட்டாயமான சூழ்நிலை இருக்கின்றது. வேலைக்கு செல்லவேண்டும் என்றாலும் அதற்கு ஜாதகம் கைகொடுக்கவேண்டும் அல்லவா. ஜாதகம் சாதகமாக இருந்தால் தான் நல்ல வேலையும் கிடைக்கும்.

உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உடனே ஜாதகத்தை எடுத்து பாருங்கள். ஜாதகத்தை பார்த்தவுடன் அதில் ஆறாவது வீட்டையும் நன்றாக பாருங்கள். ஆறாவது வீடு கொஞ்சம் சப்போர்ட் செய்தால் நீங்கள் வேலைக்கு செல்லமுடியும். அப்படி இல்லை என்றால் வேலை கிடைப்பது கடினமாக இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி மற்றும் ஆறாவது வீட்டு அதிபதி இருவரையும் நாம் சரி செய்தாலே பெரும்பாலும் நல்ல வேலைக்கு சென்றுவிடலாம். இது எல்லாம் கொஞ்சம் கடினமான ஒன்று தான் ஆனால் விடாமுயற்சி வெற்றியை தரும்.

நமது நண்பர்கள் வேலை கிடைக்கவில்லை என்றால் என்னை நேரில் சந்தித்து அதற்கு என்ன செய்யலாம் என்பதை ஆலோசனை கேட்டு அதன் படி செய்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, September 14, 2016

சனியின் பிடி


ணக்கம்!
         பொதுவாக ஏழரை சனி நடக்கும் நண்பர்கள் தன்னுடைய முயற்சியை வைத்து நிறைய சாதனை செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். முயற்சியை மட்டும் வைத்துக்கொண்டு நிறைய சாதித்துவிடவேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நடக்கும் காலத்தில் தெய்வீகசக்தி கொஞ்சம் விலகிவிடும். தெய்வீகசக்தி விலகிவிட்டால் நாம் எதனையும் செய்துவிடலாம் என்ற ஒரு பொய்யான தன்னம்பிக்கை வளர்த்து காலி செய்துவிடும் தன்மை சனி கிரகத்திற்க்கு உண்டு.

சனி பிடிக்கும்பொழுது மனிதனிடம் நாத்தீகத்தை வளர்த்துவிடும் தன்மை உண்டு. நாத்தீகம் ஆத்திகம் என்பதை விட நமது நேரம் மற்றும் நமது செல்வத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும். இழந்துவிட்டால் அதனை மறுபடியும் திரும்ப பெறுவது கடினமான ஒன்று என்பதால் சனிக்கு உரிய பரிகாரத்தை முறைபடி செய்துக்கொண்டு வேலையை தொடங்குங்கள்.

இன்றைக்கு இருக்கும் பெரிய பணக்காரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் சனியின் பிடியில் தான் இருந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் ஆன்மீகத்தை எப்பொழுதும் விடமாட்டார்கள். உங்களுக்கு சனியின் பிடியில் இருந்தால் அதற்குரிய வழிபாட்டை மேற்க்கொண்டுவிட்டு அதன்பிறகு உங்களின் வேலையை தொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தந்திரமூளைக்கு புதன்


வணக்கம்!
          புதன் கிரகம் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் தன்னுடைய புத்தியை வைத்து நன்றாக பிழைத்துவிடுவார் என்று அடிக்கடி சொல்லுவது உண்டு.

இன்றைய காலத்தில் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கும் நபர்கள் அடிக்கடி என்னை தொடர்புக்கொண்டு வேலை பிரஷ்சர் அதிகமாக இருக்கின்றது சமாளிக்கமுடியவில்லை என்று என்னிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

வேலை என்று சென்றால் கண்டிப்பாக அங்கு அதிகமாக பிரஷ்சர் இருக்கதான் செய்யும். அதிலும் இந்தியன் சும்மா இருக்கவே மாட்டான். ஏதாவது ஒரு தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கிக்கொண்டு தான் இருப்பான்.

இதனை எல்லாம் சமாளித்து தான் நீங்கள் மேலே வரவேண்டும். இந்த உலகத்தில் எதுவும் நிலை இல்லை அதனால் இந்த வேலை பளு ஒரு விசயமே இல்லை என்று நீங்கள் நினைத்தால் அனைத்தையும் சாதித்துவிடலாம்.

இன்றைய வேலைக்கு நேர்மை மட்டும் இருந்தால் போதாது ஒரு சில தந்திர மூளையும் தேவைப்படும். தந்திரமூளை எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் புதன்கிரகம் நமக்கு சாதகமாக வேலை செய்யவேண்டும்.

பெரும்பாலும் ஒரு சிலருக்கு தான் இப்படி வேலை செய்கின்றது என்றாலும் நாமும் அதனை வழிபட்டு இப்படி தன்னுடைய மூளையை பலப்படுத்திக்கொள்ளலாம். புதன்கிரகத்திற்க்கு வாரம் ஒரு முறை சென்று வழிபட்டு வாருங்கள் அனைத்திலும் நீங்கள் ஜொலிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 13, 2016

செவ்வாய்+சந்திரன்



ணக்கம்!
          சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகம் இணைந்து இருந்தால் அவர்களின் குணம் பெரும்பாலும் சண்டை போடுவது போல தான் இருப்பார்கள். அதிகமாக சத்தம் போட்டு பேசி சண்டை போடுபவர்கள் எல்லாம் சந்திரன் செவ்வாய் சேர்ந்து இருக்கின்ற ஆள்களாக தான் இருப்பார்கள்.

சந்திரன் செவ்வாய் கிரகம் இணையும்பொழுது உடல் அதிகமாக சூட்டோடு இருக்கும் அதோடு உடல் வியர்வையும் அதிகமாக இருக்கும். எப்பொழுதும் ஒரு வித டென்ஷன் இருப்பதால் இப்படி இருக்கலாம்.

சந்திரன் செவ்வாய் இணையும்பொழுது தனக்கு வருகின்ற துணையோடு அதிகமாக வாய்தகராறு ஏற்படும். இது ஏழில் சம்பந்தப்படும்பொழுது இன்னும் அதிகமாக சென்று விவாகாரத்து வரை செல்லும்.

செவ்வாய் சந்திரன் இணைந்த ஜாதகர்கள் நல்ல தைரியத்தோடு இருப்பார்கள். அதனை வைத்து நிறைய நல்லதை செய்யமுடியும். பலர் இதனை வைத்துக்கொண்டு நன்றாகவும் இருக்கின்றனர்.

செவ்வாய் சந்திரன் இணைந்த ஜாதகர்கள் அதிகம் விரதம் இருக்கவேண்டும். செவ்வாய்க்கும் மற்றும் சந்திரனுக்கு சேர்ந்து அர்ச்சனை செய்யவேண்டும். தியானமும் செய்யலாம்.

செவ்வாய் சந்திரன் இணைந்து உங்களுக்கு பிரச்சினை இருந்தால் வீட்டில் முருகனுக்காக செவ்வாய் அல்லது திங்கள்கிழமையில் அன்னதானம் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 12, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
         இந்த மாத அம்மன் பூஜை கொஞ்சம் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது அதாவது பத்தாம் தேதிக்குள் நடைபெறவேண்டிய பூஜை  16.09.2016 வெள்ளிக்கிழமை அன்று அம்மன் பூஜை வைத்திருக்கிறேன். 

இந்த மாத அம்மன் பூஜைக்கு என்று பங்களிப்பை அளித்தவர்கள்

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்திய சீத்தாராமன்(USA) அவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள்.
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.
திரு அழகப்பன் அவர்கள்.

வழக்கம் போல் 

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாள் அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 11, 2016

பிடிவாதத்தை தரும் சனி சந்திரன் சேர்க்கை


வணக்கம்!
          நேற்று காலையில் திருச்சியில் இருந்து ஒரு நண்பர் நேரிடையாக வந்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. நேற்று எழுதவேண்டும் என்று நினைத்த பதிவை இன்று தருகிறேன்.

சனி மற்றும் சந்திரன் சேர்ந்து இருந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு ஒரளவு தெரியும். மேலும் சில விசயங்களை தருகிறேன். மனிதனுக்கு ஏற்படும் வாதத்திற்க்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்திற்க்கு மருந்து இல்லை என்று சொல்லுவார்கள் அல்லவா. 

சனி மற்றும் சந்திரன் சேர்க்கை பிடிவாதத்தை அதிகம் தரும். எந்த காரியத்திலும் பிடிவாதத்தோடு இருந்தால் என்ன நடக்கும் நமக்கு வரும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கு செல்லும். இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு பிடிவாதம் இருந்தால் முடிந்தது கதை என்றே சொல்லலாம். இங்கு மக்கள் அதிகம் ஒரு விசயத்திற்க்கு ஒருத்தரை அணுகினால் நாம் பிடிவாதமாக இருந்தால் அடுத்தவரை பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் சரி இங்கு கிடைக்கவில்லை என்றால் அடுத்த இடத்தில் அது கிடைக்கும் என்று சென்றுவிடுவார்கள். சனி மற்றும் சந்திரன் சேர்க்கை உள்ளவர்கள் இப்படி தான் பிடிவாதமாக இருந்து வாழ்க்கையை சீரழித்துக்கொள்வார்கள்.

திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைக்கு அதிகம் காரணம் பிடிவாதமாக தான் இருக்கும். இந்த பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

சந்திரன் சம்பந்தப்படுகின்ற மகரம் மற்றும் கும்ப ராசியில் உள்ளவர்களில் கும்ப ராசி மட்டும் கொஞ்சம் அதிகமாக பிடிவாதமாக இருப்பார்கள். நீங்களும் இதனை அறிந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

நேராக இருக்கும் மரத்தை தான் முதலில் வெட்டுவார்கள். பிடிவாதமாக இருந்தால் நமக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 9, 2016

அமைதி என்னும் மார்க்கம்


ணக்கம்!
          அமைதியாக இருக்கும் மனிதன் தான் அதிகம் சாதிக்கிறான். அமைதியாக இல்லாத மனிதன் அதிகம் சாதிப்பதில்லை என்பது உங்களின் ஊரில் அல்லது உங்களோடு பழகிக்கொண்டு இருப்பவர்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

பொறுமை இல்லாத மனிதன் அதிகம் சாதிப்பதில்லை. பொறுமை இருப்பதற்க்கும் கிரகங்கள் தான் துணை புரிகின்றன அப்படி கிரகங்கள் துணை புரியவில்லை என்றாலும் நாமே அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பொறுமையாக இருப்பதற்க்கு ஆன்மீகம் துணை புரியும் அதுவும் பழக பழக தான் அந்த பொறுமை கைகூடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையாக  இருக்க கற்றுக்கொண்டால் போதும் இறைவனிடம் நீங்கள் கேட்கும் வரம் கிடைத்துவிடும்.

உலகத்தில் உள்ள அனைத்து ஞானிகளும் சொல்லியுள்ளார்கள். கடவுளிடம் நாம் பேசக்கூடிய மொழி மவுனம் தான் என்று சொல்லியுள்ளார்கள். எப்பொழுதும் மவுனமாக இருப்பவனிடம் நிறைய சக்தி இருக்கின்றது.

தோஷம் அதிகம் இருப்பவர்களுக்கு அமைதி என்பது இருக்காது. எதையாவது செய்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள் தானும் அமைதியாக இல்லாமல் பிறரையும் அமைதியாக இல்லாமல் செய்வார்கள். உங்களின் தோஷத்திற்க்கு நீங்கள் அடிமை என்றால் நீங்கள் எதையாவது செய்யுங்கள். தோஷத்திற்க்கு அடிமையில்லை என்றால் அமைதியாக இருங்கள் உலகம் உங்களுக்கு தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீக அனுபவங்கள் விளக்கம்


ணக்கம்!
          அனைவரும் கட்டண சேவையைப்பற்றி கேட்கிறார்கள். அதில் அப்படி என்ன இருக்கின்றது என்றும் கேட்டார்கள். ஜாதககதம்பத்தில் ஆன்மீக அனுபவங்கள் படித்து இருப்பீர்கள். நிறைய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன்.

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிறைய தகவல்களோடு மற்றும் பயிற்சியும் அதில் இருக்கின்றது. செல்வவளம் குறித்த நிறைய தகவல்கள் இருக்கின்றன. நிறைய ஆன்மீக பயிற்சியை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஆன்மீகத்தில் பயிற்சியை செய்யவேண்டும் நினைப்பவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இன்றைய காலத்தில் ஒருவர் ஆன்மீகபயிற்சியை செய்யவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு ஆன்மீக குருவின் கீழ் சென்று அதாவது அவரின் இடத்திற்க்கு சென்று கற்கவேண்டும். நம்மிடம் அப்படி இல்லை நீங்களே உங்களிடம் இருந்து அனைத்தையும் பயிற்சியை செய்யமுடியும்.

எந்த ஒரு பயிற்சியிலும் மூடநம்பிக்கை மாதிரி உள்ள விசயத்தை சொல்லவே இல்லை அனைத்தும் அறிவியல் என்பது உங்களே தெரியும். எந்த ஒரு இடத்திலும் நீங்கள் இருந்தாலும் அந்த இடத்திலேயே இதனை செய்வது போல இருக்கும். அறிவியல் அடிப்படையில் அனைத்தும் இருக்கும்.

பெண்கள் எந்த ஒரு சக்தியும் எடுக்கமுடியாது என்று ஜாதக கதம்பத்தில் சொல்லிருக்கிறேன். பெண்கள் சக்தி உடையவர்களாக மாற்றும் பயிற்சி இதில் இருக்கின்றது. தாராளமாக பெண்கள் அனைத்து நாளும் இந்த பயிற்சியை செய்யலாம். பெண்கள் கட்டணசேவையில் சேர்ந்து படித்து பயிற்சியை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆன்மீகபயிற்சி செய்தால் இல்லறத்தில் இருக்கமுடியாது என்று ஒரு   சிலர் நினைக்கலாம். தம்பதினர்கள் ஆன்மீகபயிற்சியை செய்யலாம். ஆன்மீகத்திற்க்கு என்று தனி பதிவு தொடங்குவதற்க்கு காரணமாக இருந்ததே காமம் சம்பந்தப்பட்ட பதிவு என்பதை தொடர்ந்து ஜாதககதம்பத்தை படிப்பவர்களுக்கு தெரியும். 

ஜாதககதம்பத்தை தொடர்ந்து படிப்பவர்கள் ஆன்மீகபயிற்சியை செய்யவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன். எளிமையான வழியில் ஆன்மீக பயிற்சியை செய்யலாம். உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

முதலில் ஆறாயிரம் பணத்தை செலுத்தி படிக்க தொடங்குங்கள் அதன் பிறகு மீதி ஆறாயிரத்தை செலுத்தலாம். உடனே பணத்தை செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரனும் சந்திரனும்


ணக்கம்!
          சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இரண்டாவது வீட்டில் ஒருவருக்கு இருந்தது. எப்பொழுதும் அவரிடம் பணம் இருந்துக்கொண்டே இருக்கும். எப்படியாவது அவருக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும். 

குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தானே வரும் இது என்ன சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் வருகிறது என்கிறீர்கள் என்று நினைக்கலாம் ஆனால் உண்மையாக அவருக்கு பணம் வருகின்றது. இரண்டு கிரகங்களும் நல்ல நிலைமையில் இருப்பதால் அவர்க்கு பணம் வருகிறது.

அவர் நல்ல செலவும் செய்வார். அடிக்கடி வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பார். மிகவும் தரமான ஹோட்டலில் தான் சாப்பிடுவார். இரண்டாவது வீடு சாப்பிடும் சாப்பாட்டை காட்டுவதால் அவர் நன்றாக சாப்பிடுவார். வெளியில் சாப்பிடும்பொழுது அதிக விலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்.

சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்தால் அவர்களுக்கு சுகபோகவாழ்வு போல் வாழ்வை அமைத்துக்கொடுத்துவிடும். சுக்கிரனும் நன்றாக அமைந்து சந்திரனும் நன்றாக அமையும்பொழுது இப்படிப்பட்ட வாழ்வு கிடைக்கும்.

இரண்டில் ஒரு கிரகம் அடிப்பட்டால் கூட நல்லது நடக்காது. சுகபோகவாழ்வு வாழ வேண்டும் என்று புத்தி குறுக்கு வழியை தேடி பிடிக்கும். வாழ்வில் கெட்டுபோய்விடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, September 8, 2016

குருவும் சந்திரனும்


ணக்கம்!
          குரு கிரகத்திற்க்கு மட்டும் ஒரு தனி அந்தஸ்து இருக்கின்றது என்றால் அது ஒரு சுபக்கிரகம் என்பதால் தான். ஒன்பது கிரகங்களில் முழுசுபர் குரு ஒருவரே. ஒருவருடைய ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் அவருக்கு எல்லாம் நல்லவையாக நடக்கும்.

குரு சந்திரனும் சேர்ந்து இருப்பவர்கள் சொல்லும் யோசனை எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். நல்ல யோசனையை சொல்லுவார்கள் அவர்கள் சொல்லும் அறிவால் பலர் பயன்பெறும் படி இருக்கும். 

இன்றைய காலத்தில் ஒருவர் அறிவுரை சொல்லுகிறேன் என்று சொல்லி பலருக்கு பிரச்சினை தருவதாக தான் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் சொல்லும் கருத்தாக இருக்கும். உங்களுக்கு ஒருத்தர் அறிவுரை சொன்னால் அது எப்படியும் உங்களை சிக்க வைப்பது போலவே இருக்கும்.

ஒவ்வொருவரும் தான் வாழவில்லை என்றால் பிறரை சிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். முக்கால்வாசி பேருக்கு கிரகங்கள் அப்படி இருக்கின்றது. அவர்களை சொல்லி குற்றம் இல்லை கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் அப்படி வேலை செய்கிறது.

குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் சொல்லும் அறிவுரை நம்மை உயர்த்துவதாக இருக்கும். அதனை நாம் பின்பற்றினால் பலருக்கு நல்லது நடக்கும் என்பது மட்டும் அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குருவின் அருள்


ணக்கம்!
          இந்த உலகத்தில் நம்மை விட்டு எது சென்றாலும் சரி நம்மோடு குருவின் தொடர்பு மட்டும் செல்லவே செல்லக்கூடாது அப்படி சென்றால் நமது வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைக்கு விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு விழித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

நம்முடைய குருவை காட்டக்ககூடிய ஒன்பதாவது வீடு மற்றும் குரு கிரகம் சரியாக இருந்தால் நமக்கு வழிகாட்ட ஒரு ஆள் இருப்பார். என்ன தான் நான் பெரிய வேலைகளை எல்லாம் செய்தாலும் எனக்கு பின்பு ஒரு குரு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. அவர் இல்லை என்றால் எதுவும் நடக்கவாய்ப்பில்லை.

நம்மை சுற்றி இருக்கும் சொந்தம் மற்றும் நட்பு எல்லாம் எதோ ஒரு விருப்பதற்க்காக நம்மை சுற்றி இருப்பார்கள். நம்முடைய குரு மட்டும் நமது முன்னேற்றத்திற்க்காக இருப்பார். எதுவும் எதிர்பார்க்காமல் நமக்கு நல்ல வழியை சொல்லிக்கொண்டு இருப்பார்.

குரு கிரகம் சரியில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எந்த ஒரு வழிகாட்டியும் இல்லாமல் நிறைய கஷ்டபடுவார்கள். நமது வாழ்க்கைக்கு குரு அவசியம் தேவையான ஒருவர்.

இன்றைய காலத்தில் நிறைய பேர் இறைவனோடு ஐக்கியமான அதாவது இறந்தவர்களை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். அது தவறு இல்லை என்றாலும் நாம் நமக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி அவர்களோடு கலந்துரையாட ஒரு உயிரோடு இருக்கும் மனிதர் அவசியம் தேவை. 

ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு வழிகாட்ட ஒரு ஆளை நாம் வைத்திருக்கிறோமா என்பதை மட்டும் பாருங்கள். அந்த ஆளை இதுவரை தேடி கண்டுபிடிக்கவில்லை என்றால் உடனே அந்த ஆளை தேடி உங்களுக்கு ஆலோசனை செய்ய வைத்துக்கொள்ளுங்கள். எல்லாம் நல்லவையாக உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு