Followers

Wednesday, November 30, 2016

ராகு கேது பரிகாரம்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரத்திற்க்கு என்று அனுப்பிய ஜாதகங்களை இனிமேல் தொடர்ந்து பார்த்து உங்களுக்கு பதிலை அனுப்புகிறேன். நண்பர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க ராகு கேது பரிகாரம் நாட்களை அதிகரித்து உள்ளேன். உங்களுக்கு ராகு கேது பிரச்சினை இருந்தால் உங்களின் ஜாதகத்தை அனுப்புங்கள். ஜாதகத்தை அனுப்பும்பொழுது கட்டணத்தையும் அனுப்பிவிடுங்கள்.

ராகு கேது பரிகாரத்திற்க்கு என்று ஆரம்பித்த காலத்தில் ஒரு சில ஜாதகத்திற்க்கு அமாவாசை அன்று ஒரு ஹோமத்தை முடித்துவிட்டு அதன் பிறகு ராகு கேது பரிகாரபூஜை செய்துவிட்டேன். அவர்களுக்கு அவசர நெருக்கடியால் அந்த பரிகாரபூஜை செய்யப்பட்டது. இனிமேல் என்னிடம் வந்த ஜாதகங்களுக்கு பூஜை செய்யப்படும்.

ராகு கேது பரிகாரத்திற்க்கு தேவையில்லாமல் ஜாதகத்தை அனுப்பி உங்களின் பலனை கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு நல்ல காரியம் நடைபெறும்பொழுது உங்களின் வில்லங்கவேலையை காட்டினால் அது தேவையில்லாமல் உங்களின் மேல் கர்மா சுமத்தப்படும்.

சும்மா ஜாதகத்தை அனுப்பி ஒரு மெயிலுக்கு ஒரு கேள்வியை கேட்கிறார்கள் அதனை தவிர்க்க பார்க்கலாம். உங்களை மதிப்பது போல் அனைத்திலும் நடந்துக்கொள்ளுங்கள்.

ராகு கேது பரிகாரம் என்பது பலருக்கு ஒரு நல்ல நிலையை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு ஜாதகமாக நன்றாக பார்த்து அவர்களுக்கு நல்ல நிலையை தருவதற்க்கு என்ன வழியே அதனை செய்கிறேன். ராகு கேது தோஷம் இருப்பவர்கள் அனைவரும் பங்குபெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசா மற்றும் புத்தி


வணக்கம்!
          ஒருவருக்கு புதன் தசா அல்லது புதன் புத்தி நடைபெற்றால் அவரின் தொடர்பு அதிகப்பட்சம் வாணிபம் செய்பவர்களோடு இருப்பது நன்மை பயக்கும். 

ஒரு தசாவை வலுப்படுத்த வழிபாடு பூஜை உண்ணும் உணவு மற்றும் கல் மோதிரம் போன்றவை அதிகம் பரிந்துரை செய்வார்கள். அதனை தவிர்த்து நம்மோடு பழகும் நண்பர்களை நாம் தொடர்புக்கொள்ளும் ஆட்களை அந்த தசாவுக்கு தகுந்த மாதிரி தொடர்பு வைத்துக்கொண்டால் எளிமையாக அந்த தசாவுக்கு பலன் சேர்க்கும் வழிகளாகும்.

புதன் தசா என்றாலே வாணிபம் செய்யும் நபர்களை குறிக்கும் ஒரு கிரகம் அதனால் நம்மோடு தொடர்புக்கொள்ளும் நபர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தால் மிகுந்த நன்மையை தரும்.

ஒரு சிலருக்கு அந்தந்த புத்தி காலத்தில் கூட இப்படிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். புதன் புத்தி காலத்தில் நீங்கள் இப்படிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தி அந்த புத்தியின் நன்மையை பெறலாம்.

ஒரு சிலருக்கு புதன் தசாவில் சோதிடர்களின் தொடர்பு இருக்கும். புதன் ஆளுமையின் கீழ் சோதிடர்கள் வருவதால் இப்படிப்பட்ட தொடர்பை தரும். இப்படி எல்லாம் தசா மற்றும் புத்திக்கு தகுந்தமாதிரி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 29, 2016

ராகு கேது பரிகாரம் பகுதி 2


வணக்கம்!
          ஒருவருக்கு லக்கினத்தில் ராகு கேது இருந்தால் என்ன பலன் தரும் என்பதைப்பற்றி பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் ஒரு சில கருத்தை பார்க்கலாம்.

ராகு கேது லக்கினத்தில் இருந்து பலனை தருகின்றது என்றால் முதலில் அவர்களின் தோல் கருப்பு நிறத்தில் இருக்கும். மாநிறமாக இருப்பார்கள். இது தான் முதல் விதி. கருப்பு பரம்பரையாக இருந்தால் இந்த விதி பொருந்தாது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ராகு லக்கினத்தில் இருந்து ஒரு சிலர் நல்ல கலராக இருப்பார்கள் அவர்களுக்கு பல் ஒழுங்காக இருக்காது. ஒரு சிலர் கலராக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உள்ள முகப்பொலிப்பு இருக்காது.

ராகு  லக்கினத்தில் இருந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஒரு சின்ன தலைவலி வந்தாலே உடனே படுத்துக்கொண்டு விடுவார்கள். உடலில் வலி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

ராகு  லக்கினத்தில்  இருந்தால் அவர்களுக்கு வாய்க்கும் துணை அவர்களை ஏமாற்றிவிடுவார்கள். அதாவது அவர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுவார்கள். 

ராகு கேது என்றாலே லக்கினம் என்று வரும்பொழுது அது ஏழாவது வீட்டோடும் சம்பந்தப்படுவதால் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட நிலையில் ராகு கேது இருந்தால் நீங்கள் ராகு கேது பரிகாரத்தில் பங்குகொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 28, 2016

தசாவும் ஆன்மீகமும்


வணக்கம்!
          ஒருவருக்கு ராகு தசா அல்லது குரு தசா நடக்கும்பொழுது மட்டுமே அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ராகு தசா மற்றும் குரு தசாவில் அதிகப்பட்சம் பூஜை மற்றும் ஹோம நிகழ்வுகளை நடத்துவார்கள்.

ஒரு சிலருக்கு ஒன்பதாவது மற்றும் ஐந்தாவது வீட்டு தசாவில் பூஜை மற்றும் ஹோம நிகழ்வுகளை நடத்துவார்கள். மற்றபடி வேறு யாரும் அந்தளவுக்கு இதில் விருப்பம் இருக்காது.

கேது ஞானக்காரகன் என்று சொல்லப்பட்டாலும் இவருடைய தசாவில் அதிக விருப்பம் இருக்காது. ஒரு சிலருக்கு தியானம் யோக இப்படி எண்ணம் செல்லுமே தவிர மற்றவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்காது.

ஆன்மீக நிகழ்வுகளை அதிகம் ராகுவும் குருவும் கொடுக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ராகுவும் குருவும் எதிர் எதிராக உள்ளவர்களாக இருந்தாலும் இருவரும் தனித்தனியாக பூஜைகளை செய்வார்கள். குரு கோவில்களில் அதிக ஈடுபாடு காட்டுவார். ராகு தனியாக பூஜை செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

இந்த இரண்டு தசா நடக்கும்பொழுது ஒருவர் நல்ல முன்னேற்பாட்டோடு ஒருவர் செயல்பட்டால் கண்டிப்பாக இந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கும் இந்த பூமியை விட்டு செல்லும் வாழ்வும் நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 27, 2016

சூரியன்


ணக்கம்!
          நாம் சோதிடத்தில் சூரியனை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டோம். சூரியனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலன் சொல்லவேண்டும் என்பதை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன்.

சூரியனை பற்றி எளிதாக நாம் கணக்கு போட்டுக்கொண்டு இருந்தோம் இன்று சூரியனைப்பற்றி பேச வைத்துவிட்டது அல்லவா. அரசாங்கம் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை தற்பொழுது பணபிரச்சினையில் அனைவருக்கும் புரிந்து இருக்கும்.

அரசாங்க வழியில் நாம் அனைத்தும் சாதிக்கவேண்டும் என்றால் அதற்கு சூரியனும் நன்றாக இருக்கவேண்டும். தற்பொழுது பணப்பிரச்சினையில் மாட்டியிருக்கும் பல பேர்களுக்கு சூரியன் நல்ல சிக்கலில் மாட்டியிருக்கும்.

சூரியன் கிரகம் நன்றாக இருந்தால் அவர்கள் அரசாங்கத்தால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் போய்க்கொண்டு இருப்பார்கள். சூரியன் பிரச்சினை கொடுத்தால் அரசாங்கத்தால் பிரச்சினை வந்துவிடும்.

தற்பாெழுது அனைவரும் சிக்கலில் இருக்கின்றார்கள் என்று கேட்கலாம். நாட்டிற்க்கே பிரச்சினை என்று வரும்பொழுது அது தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து சொல்லிவிடமுடியாது. நாட்டிற்க்கே பிரச்சினை வந்தாலும் ஒரு சிலர் வழக்கம்போல் நன்றாக இருப்பார்கள் அவர்களுக்கு சூரியன் நல்லமுறையில் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 26, 2016

ராகு கேது பரிகாரம் பகுதி 1


ணக்கம்!
          இனிமேல் ராகு கேதுவிற்க்கு ஜாதகங்கள் வந்து குவியும் ஏன் என்றால் அப்படிப்பட்ட பதிவை கொஞ்சம் கொடுக்கிறேன் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள் பரிகாரத்திற்க்கு ஜாதகங்களை அனுப்பலாமா இல்லையா 

முதலில் லக்கினத்தில் ராகு கேது நின்றால் என்ன பலன் என்பதை பார்த்துவிடலாம். அனைத்தும் பொதுபலன் தான் என்பதை முதலில் உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

லக்கினத்தில் ராகு நின்றால் ஏழில் கேது நிற்க்கும் லக்கினத்தில் கேது நின்றால் ஏழில் ராகு நிற்க்கும் என்பது சோதிடம் தெரியாதவனுக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாதா என்ன

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்துவிட்டால் பெரும்பாலும் சோதிடர்களின் கணிப்பு இவர்களுக்கு தோஷம் இருக்கின்றது என்பதை தான் முதலில் சொல்லிவிடுவார்கள். சோதிடவிதி அப்படி சொல்ல சொல்லும் ஆனால் உண்மையில் அது கிடையாது. பல நண்பர்களின் ஜாதகத்தை பார்த்து இருக்கிறேன் அவர்கள் நன்றாக வாழ்ந்து இருக்கிறார்.

பொதுவாக நீங்கள் எந்த லக்கினம் என்பதை பார்த்துவிட்டு முடிவு செய்வது நல்லது. லக்கினத்திற்க்கு தகுந்தமாதிரி காலத்திற்க்கு தகுந்தமாதிரி பலன்கள் மாறுப்படும் என்பது எனது கருத்து.

லக்கினத்தில் ராகு கேது இருந்து நல்லவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இருக்கின்றனர். லக்கினத்தில் ராகு கேது இருந்தால் ராகு கேது தோஷம் இருக்கின்றது அதனால் ராகு கேது ஜாதகத்தை பார்த்து திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்லுவார்கள். பலருக்கு இந்த தோஷம் இருப்பதில்லை என்பது உண்மையான ஒன்று.

ராகு கேது தோஷத்தை வைத்து பலர் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டும் இருக்கின்றனர். நல்ல சோதிடர்களாக பார்த்து இந்த ராகு கேது எப்படி செயல்படுகின்றது என்பதை பார்த்து தெரிந்துங்கள். ராகு கேது செயல்படுவதை பொறுத்து கடைசியில் நீங்கள் ராகு கேது தோஷம் என்பதை முடிவு செய்யலாம்.

ராகு கேது தோஷம் என்பது இருக்கின்றது ஆனால் நம்ம சோதிடர்கள் பயமுறுத்தும் விதத்தில் இல்லை என்பது தான் உண்மை.ராகு கேது இருந்தால் அதன் மாதிரியான பாதிப்பு இருக்கின்றதா என்பதை உங்களை சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

உங்களின் உடலின் நிறம் கருப்பு. கருப்பு நிறத்தில் உங்களின் முன்னோர்கள் இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருப்பு நிறம் இருக்கும் ஆனால் உங்களின் பெற்றோர்களுக்கு நல்ல நிறம் இருந்து நீங்கள் கருப்பு நிறமாக இருக்கும்பொழுது உங்களுக்கு இந்த தோஷம் இருக்கின்றது என்பது தெரியும்.

உங்களின் பற்கள் ஒழுங்காக இல்லாமல் கோரைப்பற்களாக இருக்க வாய்ப்பு அதிகம். உங்களின் உடலில் பாம்பு மச்சம் இருக்கும். மர்ம இடத்தில் கூட இந்த மச்சம் இருக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து பார்க்கலாம்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு கேது


ணக்கம்!
          ராகு கேது பரிகாரத்திற்க்கு என்று ஜாதகத்தை அனுப்பிய பல நண்பர்களுக்கு ராகு கேது தோஷம் என்பது இல்லை இருந்தாலும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். எந்த காரணத்தால் இப்படி அனுப்பியுள்ளனர் என்பதும் தெரியவில்லை.

ராகு கேது உங்களின் ஜாதகத்தில் ராகு கேதுவால் பிரச்சினை என்றால் மட்டும் அனுப்பவும். ராகு கேதுவால் பிரச்சினை என்று வரும்பொழுது அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் அதனைவிட்டுவிட்டு ஜாதகத்தை அனுப்புகிறார்கள்.

கோச்சார ராகுவால் பிரச்சினை என்று வந்தால் கோச்சார ராகுவால் எனக்கு பிரச்சினை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டு வந்த பிரச்சனை இது என்று சொல்லி அதற்கு பரிகாரம் செய்ய சொல்லுங்கள் செய்யலாம்.

ராகு கேது பரிகாரம் கொஞ்சம் தள்ளி வைத்தது நல்லது என்று நினைக்கிறேன். பலர் தற்பொழுது தான் ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளனர். அனைவரும் பங்கேற்கவேண்டும் என்பதற்க்காக தான் இதனை தள்ளிவைத்தேன் அதுபோல் நீங்களும் ஜாதகத்தை அனுப்பி வருகின்றீர்கள்.

ராகு கேது என்ன செய்யபோகின்றது என்று இருந்துவிடமால் உங்களின் ஜாதகத்தையும் எடுத்து பாருங்கள். எல்லாம் தெரியும் என்று பலர் இதனைப்பற்றி எல்லாம் கவலைபடாமல் இருந்துக்கொண்டு இருப்பார்கள் அப்படி எல்லாம் இருந்துவிடாமல் ஜாதகத்தை எடுத்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 25, 2016

அள்ளி தரும் சுக்கிரதசா


ணக்கம்!
         சுக்கிரதசா ஒருவருக்கு நடந்தால் அவர் நல்ல வெள்ளைநிற துணிகளை உபயோகப்படுத்துங்கள். அணியும் துணிகள் மற்றும் பயன்படுத்தும் அனைத்தும் வெள்ளிநிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

சுக்கிரதசா நடக்கும்பொழுது வீட்டிற்க்கு அடித்து இருக்கும் பெயிண்ட் கூட வெள்ளி நிறத்தில் இருந்தால் நல்லது. பயன்படுத்தும் வாகனமும் வெள்ளைநிறத்தில் இருந்தால் மிகவும் சிறப்பு.

சுக்கிரதசா நடக்கும்பொழுது நாம் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் அதனால் திருஷ்டி வருகின்றது என்று நண்பரின் வீட்டிற்க்கு செல்லும்பொழுது சொல்லிருந்தார். நீங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் திருஷ்டி கழித்துக்கொள்ளுங்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள் அதனால் திருஷ்டி கழித்துக்கொண்டால் நல்லது.

ஒரு வேஷ்டி ஐநூறு ரூபாய் சாதாரணமாக இருந்தால் நீங்கள் வாங்குவது இரண்டாயிரம் ரூபாய் வேஷ்டியாக இருக்கவேண்டும். அதிகவிலை இருந்தால் கூட பரவாயில்லை அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.

பெண்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது அவ்வளவு நல்லதல்ல என்பது நமது மதத்தின் வழக்கம். ஒரளவு வெண்மை வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் பளிச்சு என்று இருக்கும்படி இருந்தால் நல்லது.

வெள்ளை ஆடை தேர்வு செய்யும்பொழுது கொஞ்சம் அதிக விலை கொடுத்து அந்த ஆடையை தேர்வு செய்வது நல்லது. குறைந்த விலையில் உள்ள வெள்ளை ஆடை கொஞ்சநாளில் அது மாறி வறுமையில் உள்ளவர் போல் செய்துவிடுகின்றது.

எல்லையற்ற செல்வவளத்தை பெறுவதற்க்கும் சுக்கிரதசா நிறைந்த பலனை உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் பெறுவதற்க்கும் நமது அம்மனை வழிபாடு செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 24, 2016

பித்ருதோஷம்


வணக்கம்!
          இராகு கேது பரிகாரத்தைப்பற்றி சொல்லிருந்தேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் அதிகப்பட்சம் இந்த பரிகாரத்தில் பங்குக்கொண்டு இருக்கின்றனர். அதோடு புதிய ஜாதகங்களும் இந்த பரிகாரத்திற்க்கு வந்திருக்கின்றன. நம்ம நண்பர்கள் வங்கியில் பணப்பிரச்சினை இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார்கள். கொஞ்சநாள்கள் உங்களுக்கு அவகாசம் கொடுக்கிறேன்.

அனைவரும் பிரச்சினை என்று இருக்கும்பொழுது நானும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்று அவகாசத்தை கொடுத்து இருக்கிறேன். நன்றாக பயன்படுத்திக்கொண்டு இதற்கு வாருங்கள். அதிகப்பட்சம் பத்து நாட்கள் தரலாம் என்று இருக்கிறேன். அதற்குள் உங்களின் ஜாதகத்தை அனுப்பி உங்களுக்கான பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

பரிகார பூஜை ஆரம்பிக்கும் தேதி உடனே அறிவித்துவிடுகிறேன். இதுவரை வந்த ஜாதகங்களுக்கு அந்த பரிகாரபூஜையில் பூஜை செய்யப்படும். ஒரு சில ஜாதகர்கள் அனுப்பிய ஜாதகத்தில் தன்னுடைய பிரச்சினை என்ன என்று அனுப்பவில்லை உடனே அனுப்புங்கள்.

ராகு கேது பரிகாரத்தில் பித்ருதோஷத்திற்க்கு என்று சொல்லவில்லை. பித்ருதோஷத்திற்க்கு உங்களின் நேரடி பங்களிப்பு அதில் இருக்கவேண்டும். நீங்கள் அந்த பரிகாரத்தை எளியமுறையில் செய்வதாக இருந்தால் பித்ருதோஷத்திற்க்கு பரிகாரம் செய்யலாம். நீங்கள் ஒரு சின்ன விசயம் செய்துவிடவேண்டும் அதன்பிறகு நான் உங்களுக்கான பரிகாரத்தை செய்வேன். 

மேற்சொன்ன பித்ருதோஷத்திற்க்கு உடன்பட்டால் உங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு அதற்குள்ள பணத்தை அனுப்பிவிட்டு என்னை தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுயபரிசோதனை


ணக்கம்!
          ஒருவர்  தன்னுடைய வேலையை சரியாக செய்துவந்தாலே போதும். அவருக்கு அனைத்தும் தன்னாலே நடக்கும். குரு தசா வந்தால் ஒருவர் தன்னுடைய வேலையை மிகச்சரியாக செய்துவருவார். எந்த வேலையிலும் சொதப்பிக்கொண்டு இருக்காமல் சரியாக செய்து அவர் முன்னேற்றம் அடைந்துக்கொண்டு செல்வார்.

ராகு தசா வந்தால் ஒருவர் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யாமல் போய்விடுவார். எதிலும் குழப்பமாக இருப்பார். செய்கின்ற வேலையை சொதப்பி அனைத்தையும் கெடுப்பார். ராகு தசாவின் குணங்கள் இது.

உங்களுக்கு நல்ல தசா நடந்தால் நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். கெடுதல் தசா நடந்தால் நீங்கள் நல்லவராக இருக்கமுடியாது. ஒரு மனிதனை நல்லவனாகவும் தீயவனாக மாற்றுவதும் தசாவின் கையில் தான் இருக்கின்றது.

எனக்கு நல்ல தசா மற்றும் கெடுதல் தசா நடந்தாலும் நான் மிகச்சரியான திசையில் தான் செல்லவேண்டும் என்று ஆன்மீகத்தை நாடுகிறேன். ஆன்மீகம் எனக்கு சரியான வழியை காட்டும்.

தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். உலகத்தை திருத்தவேண்டியதில்லை தன்னை திருத்திக்கொண்டால் போதும். நிறைய பதிவுகள் தருவதின் நோக்கம் உங்களை திருத்திக்கொள்வதற்க்கு வாய்ப்பாக அமையவேண்டும் என்பதற்க்காக தான் பதிவுகளை தருகிறேன்.

பல பேர்கள் பல வருடங்களாக படித்து வருகின்றார்கள் அதில் முக்கால்வாசி பேர்கள் நன்றாக வந்துவிட்டார்கள். இன்னமும் கால்வாசி பேர் படிப்பதை மட்டும் செய்துவருகிறார்கள். தன்னை திருத்திக்கொள்ளவில்லை.

சோதிடத்தை எல்லாம் நான் படித்து அதனை உங்களுக்கு செல்லுவது கூட என்னை முதலில் தயார் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்ககாக தான் இதனை எல்லாம் தெரிந்துக்கொண்டேன். அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு விசயம் இல்லாமல் இல்லை அது என்றாவது ஒரு நாள் உங்களுக்கு பயன்படும். படித்துவிட்டு சிந்தித்து பார்த்தால் உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 23, 2016

புதனின் யோகம்


ணக்கம்!
          ஒருவருக்கு புதன் தசா நடந்தால் அவருக்கு நிறைய அறிவு ஆற்றல் ஏற்படும் என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். புதன் ஒரு கட்டமான நிபுணர் என்று அழைக்கப்படுவார். கட்டமான நிபுணர் என்றால் கட்டக்கலை மட்டும் அன்றி வேறு துறையிலும் ஒரு தலைமை பண்பை ஏற்படுத்தி கொடுப்பார்.

ஒரு சிலருக்கு குரு தசா புதன் புத்தியில் சொந்த வீட்டை கட்டுவார்கள். புதன் புத்தி அப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை பலரின் ஜாதகத்தில் நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன்.

ஒரு வீட்டை கட்டவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. பார்ப்பதற்க்கு எளிமையாக இருப்பது போல தோன்றும் ஆனால் அதற்குள் நிறைய விசயங்கள் இருக்கின்றன. தொழில்நுட்பம் மட்டும் இல்லை அதனை தாண்டி நிறைய சூட்சமங்களும் இருக்கின்றன.

உங்களுக்கு ஒரு பையன் இருந்தால் அவனிடம் நீ சொந்தமாக ஒரு வீட்டை கட்டு என்று சொல்லிபாருங்கள். அவன் அதனை கட்டினால் அவன் எந்த துறையிலும் வெற்றிபெறுவான். அந்தளவுக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும்.

புதனின் அறிவு வெளிப்படுத்த இது எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். புதன் தசா புதன் புத்தி காலங்களில் பலர் சொந்தவீடு கட்டியுள்ளார்கள்.எந்த ஒரு தசா வந்தாலும் சரி அதில் புதன் புத்தி உங்களை நன்றாக தயார் செய்யும் நல்ல வாய்ப்பையும் தரும் என்பது அனுபவத்தில் உண்மை.

புதன் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதையும் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு குறைவான யோகம் கொடுத்தால் தொடர்ந்து புதன்கிரக வழிபாட்டை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 22, 2016

யோகம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?


வணக்கம்!
          கிராமபுறங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் எண்ணெய் எடுத்து உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள். உனக்கு என்ன யோகம் இருக்கின்றதோ அது தான் உனக்கு கிடைக்கும்.

ஜாதகத்திலும் இது உண்மையான ஒன்று. இன்றைக்கு பலருக்கு நிறைய யோகங்கள் இருக்கின்றன ஆனால் அந்த யோகம் எல்லாம் வேலை செய்யாமல் போய்விடுகின்றன என்பது தான் உண்மை. நீங்கள் எல்லாம் திறமையானவர்கள் தான் ஆனாலும் கஷ்டப்பட்டுக்கொண்டு தானே இருக்கின்றீர்கள் இதற்கு எல்லாம் என்ன காரணம் உங்களுக்கு யோகம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நான் யோகத்தை எல்லாம் நம்புவதில்லை என்று சொன்னால் நீங்கள் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பார்த்தால் உங்களுக்கு புரிந்துவிடும். திறமை இருக்கின்றது யோகம் தான் இல்லை.

ஒரு ஜாதகத்தில் தோஷம் என்பது இருக்ககூடாது. உங்களின் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கிடைக்கின்ற யோகம் எல்லாம் போய்விடும். உங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து யோகத்தையும் முடிந்தளவுக்கு தடை செய்வது ராகு கேதுக்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றைக்கு இருக்கும் பணக்காரர்கள் எல்லாம் நிறைய பூஜைகளை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு யோகம் கிடைக்கவேண்டும் என்பதற்க்காக தான் செய்கின்றனர். 

உங்களின் ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருந்தால் கிடைக்கின்ற யோகம் உங்களுக்கு கிடைக்காது. நிறைய தோஷங்கள் இருந்தாலும் ஒரு சில யோகங்களும் உங்களின் ஜாதகத்தில் இருக்கும் அதனை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியது தோஷத்தை எப்படி குறைக்கலாம் என்பதை மட்டும் பார்க்கவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு கேது பரிகாரம்


வணக்கம்!
          ராகு கேது பரிகாரத்தை பற்றி சொல்லிருந்தேன். இதுவரை பல ஜாதகங்கள் வந்துவிட்டன. விரைவில் பூஜை செய்ய தொடங்கிவிடுவேன்.  அந்த தேதி என்ன என்பதை பதிவில் தெரிவிக்கிறேன். விரைவில் ராகு கேது பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப இறுதி தேதி முடிவு வெளியாகும்.

ராகு கேது உங்களின் ஜாதகத்தில் நல்லதை செய்யதால் அதற்கு பரிகாரம் செய்யதேவையில்லை. உங்களுக்கு ராகு கேது பிரச்சினை தருகின்ற மாதிரி இருந்தால் அதற்க்கு பரிகாரம் செய்யலாம்.

உங்களுக்கு எந்த வேலையை செய்ய தொடங்கினாலும் அந்த வேலையில் உங்களுக்கு பல குழப்பங்கள் இருந்தால் உங்களின் ஜாதகத்தில் ராகு கேது சரியில்லை என்று அர்த்தம்.

உங்களின் ஜாதகத்தில் ராகு கேது உங்களை பிடித்து உலுக்கிக்கொண்டு இருக்கும். அது உங்களுக்கு தெரியாது நான் பார்த்த ஜாதகத்தில் பலருக்கு இந்த கிரகங்களால் தான் பிரச்சினை என்று நான் சொன்னபிறகு தான் அவர்களுக்கு தெரியும்.

பலர் சோதிடத்தை பார்க்க தெரியாமல் வேறு ஏதோ ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் உங்களின் ஜாதகத்தை நன்றாக பாருங்கள். பார்த்துவிட்டு அதன் பிறகு பரிகாரத்தில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு அமைய என்ன செய்யவேண்டும்?


ணக்கம்!
          செவ்வாய் கிரகத்தை பலப்படுத்தும்பொழுது நமக்கு நிலம் இல்லை என்றால் நிலம் அமையும். ஒரு வீடு கட்டுவதற்க்கு நிலம் இல்லை என்றால் நிலம் சம்பந்தப்பட்ட செவ்வாய் வழிபாடு செய்யதால் நிலம் கிடைக்கும். அந்த நிலத்தில் வீடு எப்பொழுது கட்டவேண்டும் என்பதற்க்கு குருவின் கருணை இருந்தால் தான் வீடு கட்டலாம்.

செவ்வாய் கிரகத்தை மட்டும் வணங்கினால் போதாது அதோடு குருவின் அருளையும் பெறும் முயற்சியில் இறங்குங்கள். அப்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

பலருக்கு பூர்வபுண்ணியம் இருப்பதில்லை. பூர்வபுண்ணியம் இருக்கும் ஆனால் அது இந்த பிறவியில் கிடைப்பதில்லை. பூர்வபுண்ணியத்தை பலப்படுத்த குலதெய்வ வழிபாடு உதவி செய்யும். குலதெய்வத்தின் அருளும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வேறு விதமாக தான் இதனை எடுக்கவேண்டும்.

எல்லோருக்கும் வீடு அமைவதில்லை ஒருவர் வீடு கட்டுகிறார் என்றாலே அவருக்கு அந்த யோகம் வேலை செய்கிறது என்று அர்த்தம். நமக்கு எதுவும் அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு ஒன்று இருக்கிறது.

குருவின் அருளை பெறுதவற்க்கு முடியவில்லை என்றால் ஒரு ஆன்மீகவாதியின் அருளை பெற்று அவர்களின் வழியில் அனைத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பது அனுபவத்தில் நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 21, 2016

சந்திரன்


வணக்கம்!
          கோயம்புத்தூர் விசிட் முடித்துவிட்டு இன்று மதியம் தஞ்சாவூர் வந்தடைந்தேன். தொடர் பயணம் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொண்டு தற்பொழுது பதிவை எழுத ஆரம்பித்தேன்.

நமது சோதிடத்தில் சந்திரன் மிக மிக முக்கியபங்கு வகிக்கிறது என்று சொல்லிருக்கிறேன். பலர் அதனை அலட்சியமாக கருதிக்கொண்டு இருக்கின்றனர். பலருக்கு என்னுடைய அனுபவத்தை நான் பகிர்ந்து இருக்கிறேன். சந்திரன் தான் முக்கியம் என்று சொல்லிருக்கிறேன். அவர்களின் வாழ்க்கையோடு அதனை ஒப்பிட்டு சரி தான் என்று சொல்லிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் கெடுவது சந்திரனால் தான் என்று சொல்லிருக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அது இருப்பதற்க்கு தகுந்தபடி தான் பலனையும் கொடுக்கும் என்று சொல்லிருக்கிறேன். உங்களின் ஜாதகத்திலும் சந்திரன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

சந்திரன் ஆட்சி என்று சொல்லக்கூடிய கடகராசியினர் தற்பொழுது நிறைய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். கடகராசியினர்க்கு நிறைய செலவு மற்றும் மருத்துவசெலவும் வைத்திருக்கிறது. அவர்கள் அவர்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டிவிட்டு அதற்கு வழியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இன்று கார்த்திகை சோமவாரம் ஆரம்பம் ஆனது. சிவவழிபாடு செய்வதற்க்கு கார்த்திகை மாதம் சிறந்த நாள். இந்த வார திங்கள்கிழமை செய்யமுடியாதவர்கள் அடுத்த வாரத்தில் இருந்து துவங்குங்கள்.

சந்திரன் பிரச்சினை என்று இருப்பவர்கள் திங்கள்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பல ஊர்களில் சோமவாரம் விரதம் இருப்பார்கள். சந்திரனுக்காகவும் விரதம் இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 20, 2016

பூர்வபுண்ணியமும் ராகுவும்


வணக்கம்!
          இன்றைக்கு பல பேருக்கு குலதெய்வம் தெரியாமல் போனாதற்க்கும் இராகு கிரகம் காரணமாக இருக்கின்றது. ராகு கிரகம் ஐந்தில் அமர்ந்து உங்களை பூர்வபுண்ணியத்தோடு ஒட்டவிடாமல் செய்கிறது.

பூர்வபுண்ணியத்தை காலிசெய்யவேண்டிய ஒரு அமைப்பை ராகு கிரகம் வழங்கும் அது ஐந்தில் தான் நிற்கவேண்டும் என்பதில்லை எக்குதப்பாக உங்களின் ஜாதகத்தில் ராகு கிரகம் அமைந்தால் அது உங்களை உங்களின் பூர்வபுண்ணியத்தில் இருந்து விரட்டிவிடும்.

ராகு கிரகம் உங்களை பூர்வபுண்ணியத்தில் உள்ளவர்களை தொடர்புக்கொள்ளமுடியாமல் செய்து உங்களின் குலதெய்வத்தை தெரிந்துக்கொள்ள முடியாதபடி செய்துவிடும். ஏற்கனவே உங்களின் பெற்றோர்க்கு இந்த அமைப்பு இருந்த அவரை அங்கிருந்து துரத்தி தற்பொழுது உங்களுக்கு பிரச்சினையாக அமைந்து இருக்கும்.

உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கட்டும் என்பதற்காகவும் உங்களின் குடும்ப உறவுகள் சிறப்பாக அமையவும் ராகு கேதுவை சாந்தப்படுத்தலாம்.

ராகு கிரகத்திற்க்கு தற்பொழுது ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள் அதன்பிறகு ஒரு நல்ல மாற்றம் உங்களின் வாழ்க்கையில் நடக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 19, 2016

பிரிந்த துணை சேர


வணக்கம்!
          உங்களுக்கு திருமணம் முடிந்து உங்களின் துணை உங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டால் உங்களின் குடும்பத்தில் ராகு பகவான் அதிகமாக வாசம் செய்கிறார் என்று அர்த்தம்.

இன்றைய காலத்தில் அதிகமாக இது நடக்கிறது. பல குடும்பங்களில் இன்று ராகு பகவான் அதிகமாக ஆட்டம் போட்டு குடும்பங்களை சிதைத்து இருக்கிறார். ராகு பகவானால் சிதைந்த குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

உங்களுக்கு அமைந்த துணை இப்படி சென்றுவிட்டார் என்று சும்மா இருந்துவிடமுடியாமா அதற்கு எதையாவது செய்யவேண்டும் அல்லவா. அதற்கு உள்ள வாய்ப்பு தான் இந்த பரிகாரம்.

ராகு பகவானால் பிரிந்த திருமணம் ஆன தம்பதிகள் இந்த பரிகாரத்தில் பங்குபெற்று உங்களின் துணை தீயவழிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

உடனே உங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தை அனுப்பி இந்த பரிகாரத்தில் பங்குபெறலாம். மற்றும் உண்மையான வேண்டுக்கோளையும் சொல்லிவிடுங்கள்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் நாளை என்னை சந்திக்கலாம். விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனியும் கருப்புபணமும்


ணக்கம்!
          நமது நாடு இருக்கும் ராசி மகரராசி என்று சொல்லுவார்கள். மகரராசியை வைத்து பார்த்தால் ஒரளவு சரியாக தான் இந்தியாவிற்க்கு பொருந்துகிறது.

நமது ஆட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அனுப்பும் பணம் அனைத்தும் முறையான வழியில் வருவதில்லை என்பது பலருக்கும் தெரியும்.

அரசியல்வாதிகள் கருப்புபணம் வைத்திருக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள் அல்லவா. தனவீடு சனியாக இருக்கும்பொழுது பெரும்பாலும் கருப்புபணமாக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

ஒருவரிடம் கருப்புபணம் இருப்பதற்க்கு சோதிடத்தில் நான்காவது வீட்டை வைத்து சொல்லுவார்கள். நான்காவது வீட்டில் சனி சம்பந்தப்பட்டால் அவரிடம் கருப்புபணம் இருக்கின்றது என்பார்கள். பணம் வருவதே கருப்புபணமாக இருந்தால் இருக்கின்ற பணமும் கருப்புபணமாக தான் இருக்கும்.

சனி ஒரு நாட்டில் அதிகம் சம்பந்தப்பட்டால் அதிகமாக இப்படி பதுக்கி வைக்கும் சம்பவம் எல்லாம் நடைபெறுவது இயற்கை. நான் நாட்டிற்க்காக இதனை சொல்லவில்லை. சனியின் தன்மை இப்படிப்பட்டது என்பதற்க்காக சொன்னேன்.

மேலே சொன்ன மாதிரி சனி எனக்கு இருக்கிறது ஆனால் பணம் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன். உங்களுக்கு சனிக்கிரகம் பாதகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ஒரு சில பணமுதலைகள் என்று சொல்லுபவர்களின் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, November 18, 2016

ராகு கேது பொதுபரிகாரம்


ணக்கம்!
          தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த பரிகாரத்தை ஆரம்பித்திருக்கிறோமே எப்படி செல்லும் என்று தான் இருந்தேன் ஆனால் அதனை மீறி பல ஜாதங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 

ராகு கேது பொதுபரிகாரம் என்றவுடன் பல குடும்பத்தின் ஜாதகத்தை எல்லாம் அனுப்பியிருக்கின்றனர். அதனை எல்லாம் பார்த்தால் இவர்கள் எப்படி தான் காலத்தை தள்ளிக்கொண்டு வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏன் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ராகு கேதுவின் பாதிப்பு முழுமையாக இருக்கின்றன.

ராகு கேது பரிகாரம் பொதுவாக அனைவரும் அதில் பங்குக்கொள்ளவேண்டும் ஏன் என்றால் அதிகப்பட்சம் எல்லோருக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கும் என்று தான் சொல்லவேண்டும். நிறைய பேர்கள் இதனால் பாதிப்படைவதால் இதனை சொல்லுகிறேன்.

ஜாதகத்தில் ராகு கேது எப்படி செல்கிறது என்பதை பார்த்து நாம் வாழ்க்கையை நிர்ணயம் செய்துக்கொள்ளவேண்டும் என்பார்கள். ராகு கேது என்றாலே  ராகு கேது நகர்வு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதனைக்கொண்டு நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லது என்பது என்னுடைய அனுபவம்.

உங்களின் ஜாதகத்தில் எப்படி ராகு கேது சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை பாருங்கள் பார்த்துவிட்டு அது நல்லதை தருகிறதா அல்லது கெடுதலை தருகிறதா என்பதை முடிவு செய்துவிட்டு உங்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரதசா


ணக்கம்!
          சுக்கிரதசா நடந்தால் ஒருவருக்கு நல்லது செய்யும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. சுக்கிரதசா நல்லது கொடுக்கும் அது யாருக்கு நல்லது கொடுக்கும் என்று விதி வைத்திருக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு தான் நல்லது கொடுக்கும்.

ஒருவருக்கு சுக்கிரன் தசா ஆரம்பித்தால் அவர் சொகுசுவாழ்க்கைக்கு உள்ளே நுழைவார் ஆனால் அந்த சொகுசுவாழ்க்கையை கடைசி வரை தொடர்வாரா என்பது அவருக்கு வருகின்ற புத்தி தான் முடிவு செய்யவேண்டும். 

சுக்கிரனுக்கு ஏற்றவாறு புத்திநாதர்களும் நல்லபடியாக அமைந்தால் அவருக்கு கொடுக்கின்ற பலன் முழுமையாக கிடைத்துவிடும். புத்திநாதர்கள் சரியில்லை என்றால் சுக்கிரனின் முழுமையான பலனை பெறமுடியாது.

சுக்கிரதசா நடக்கிறது என்றால் அந்த ஜாதகர் நல்ல அம்மன் வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தால் அவருக்கு சுக்கிரதசாவின் முழுமையான பலனை பெற்று வாழமுடியும். அதோடு சுக்கிரனை எப்படி எல்லாம் பலப்படுத்தலாம் என்பதையும் கவனித்து செய்துவந்தால் அற்புதமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு சுக்கிரதசா நடந்தால் கூட போதும் அவரை வைத்தே அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மேம்பட்டு வந்துவிடலாம் என்பது என்னுடைய அனுபவத்தில் உள்ள கருத்து.

ராகு கேது பொதுபரிகார பூஜை இன்னும் ஆரம்பிக்கவில்லை ஜாதகத்தை அனுப்பமட்டும் சொல்லிருக்கிறேன். விரைவில் பூஜை ஆரம்பித்துவிடுவேன். உடனே உங்களின் ஜாதகத்தையும்  பிரச்சினை என்ன என்பதையும் மற்றும் பணத்தையும் அனுப்பிவையுங்கள்.

வரும் ஞாயிற்றுகிழமை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்களை சந்திக்க வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 17, 2016

என்ன காரணம்?


ணக்கம்!
ஒரு நல்ல பரம்பரை குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் தன்னுடைய பரம்பரையை விட்டுவிட்டு வேறு இடத்திற்க்கு சென்று திருமணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது என்ன ஆகும் அந்த பரம்பரை சங்கிலி தொடர் அறுபட ஆரம்பிக்கும். என்ன காரணம்?

இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் எது எதுவோ நடைபெறுகிறது அல்லவா அது நடைபெறுவதற்க்கு என்ன காரணம் அனைத்தும் பிற கலாசாரத்தின் மீது உள்ள ஒரு மோகம். என்ன காரணம்?

இன்றைக்கு ஒரு நல்ல குடும்பமாக உயர்ந்து சமுதாயத்தில் போராடி மேம்பட்டு வரும்பொழுது உங்களின் வாரிசுகள் ஒரு தரம்கெட்ட குடும்பத்தோடு உறவுக்கொண்டு அது தான் உலகம் என்று வாழ விரும்புகிறதா அதற்கு என்ன காரணம்?

உங்களுக்கு வாரிசு என்ற ஒன்று இல்லாமல் போவதற்க்கும் வந்த வாரிசும் உருபடவில்லை என்ற வருத்தத்திற்க்கும் அல்லது வாரிசு ஏதோ ஒரு குறையோடு இருப்பதற்க்கும் என்ன காரணம்?

ஆசையாக வளர்த்த பெண் யாரோ ஒருவனோடு ஓடிபோகிறதா அதனால் நீங்கள் தற்கொலை செய்ய நினைக்கிறீர்களா அதற்கு காரணம் ?

மேலே சொன்ன அனைத்திற்க்கும் காரணம் ராகு கேது என்பதை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து ராகு கேது எங்கு இருக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பொதுபரிகாரம்


ணக்கம்!
          செவ்வாய் பரிகாரத்தின்பொழுது ஒரு நண்பர் எனக்கு ஒரு ஜாதகத்தை அனுப்பியிருந்தார். அவரின் உண்மையான ஜாதகம் எனக்கு தெரியும் ஆனால் அவரின் ஜாதகம் என்று ஒரு சார்ட்போட்டு அனுப்பினார். அவரின் ஜாதகம் கிடையாது. ஏதோ ஒரு கோபத்தில் எதிர்ப்பை காட்டுவதற்க்கு அனுப்பினாரா அல்லது விளையாட்டிற்க்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை நானும் அதனைப்பற்றி அவரிடம் கேட்கவும் இல்லை.

பொதுபரிகாரம் செய்வது தனியாக பரிகாரத்தை செய்யமுடியாத நபர்களுக்கு என்பதற்க்காக இந்த பரிகாரத்தை பரிந்துரைக்கிறேன். அதில் எந்த வித தவறும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன் நிறைய எதிர்ப்பு காட்டுவது விளையாட்டு தனம் செய்வது எல்லாம் நானும் ஒரு காலத்தில் செய்தேன். அது எல்லாம் எனக்கு பட்டு தெரிந்தபிறகு தான் அது தவறு என்பது எனக்கு புரிந்தது.

எந்த காலத்திலும் எதிர்ப்பை காட்டுவது ஒரு நல்ல செயல் நடக்கும்பொழுது அதனிடம் போய் விளையாட்டு தனம் செய்வது எல்லாம் செய்தால் இந்த பிரபஞ்சம் நமக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. இதனை எந்த காலத்திலும் செய்யாமல் இருக்க கற்றுக்கொண்டேன்.

தற்பொழுது ஆரம்பித்துள்ள ராகு பரிகாரத்திற்க்கும் நீங்கள் சரியான ஜாதகத்தை அனுப்பி அதற்கு பரிகாரம் செய்யுங்கள். இதில் எந்த வித சம்பாதிப்பதும் இல்லை. இதனை எல்லாம் சரியான ஒரு முறையில் செலவு செய்கிறேன். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று ஒரு நண்பர் தேவையான பணஉதவி செய்தவுடன் பலரிடம் நான் வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன் நீங்கள் கோவிலுக்கு செய்தால் போதும் அதனை செய்துவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள் என்றேன்.

பொதுபரிகாரம் ஒரு பொதுசேவை போல் செய்துக்கொண்டு இருக்கிறேன். இது தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு கடினம்


வணக்கம்!
          இன்றைக்கு இருக்கும் கலியுககாலத்தில் ஒரு வித்தையை குரு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அதனை லைவ்வாக வெளியில் காட்டிவிடுவார்கள். ஒரு குருவிற்க்கு உண்மையான சீடன் என்பவன் கிடைப்பது அரிது என்று சொல்லுகிறேன்.

குரு காரத்துவம் உடைய வேலை எல்லாம் தற்பொழுது முடங்கிக்கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். அனைத்தும் தீயகிரகங்களின் கைக்கு போய்விட்டது என்று நம்ப தோன்றுகிறது. குரு கிரகத்தின் காரத்துவம் உடையவராக வாழ்வது என்பது அந்தளவுக்கு ஒரு எளிமையான விசயம் கிடையாது என்றே சொல்லாம்.

நிறைய பேர் குருவின் தசாவில் பிரபலமாக இருக்கின்றார்கள். அவர்களின் ஜாதகத்தை பார்த்தாலும் குரு கிரகம் கெட்டு ஏதாவது மறைவிடத்தில் இருக்கின்றது. மறைவிடத்தில் இருந்தாலும் அவர்கள் பிரபலமாக இருப்பதற்க்கு காரணம் அவர்கள் செய்யும் தொழிலும் மறைமுகமாக இருப்பதால் தான் பிரபலமாக இருக்கின்றனர்.

குருவின் காரத்துவத்தோடு ஒருவர் இந்த உலகத்தில் வாழ்வது என்பது அவ்வளவு கடினமான ஒரு வேலை. அப்படி இருந்து அரிதாக எங்கோ ஒரு முலையில் ஒருவர் கண்டிப்பாக வாழ்ந்துக்கொண்டு தான் வருகிறார் என்றும் தெரிகிறது. அதாவது அப்படிப்பட்டவர்கள் வெளியில் தன்னை காட்டிக்கொள்வதே கிடையாது.

வெளிஉலகத்தில் தன்னை காட்டிக்கொண்டு குருவின் காரத்துவத்தோடு வாழ்வது என்பது கடினம் தான். அப்படி வாழ்ந்தால் கண்டிப்பாக அது மோட்சத்தை கொடுக்கும். மோட்சம் யாருக்கு வேணும் பணம் தான் வேணும் என்று இருப்பவர்கள் குருவின் மறைவிடத்தில் இருந்து பலனை கொடுத்தால் எப்படி நடக்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தமாதிரி தன்னை மாற்றிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 16, 2016

ஆன்மீகம்


ணக்கம்!
          ஆன்மீகத்திற்கு நாம் சென்றவுடன் முதலில் என்ன செய்கிறோம் யாராவது சாமியார் இருக்கின்றார்களா என்று பார்த்து அவர்களை நாடி எனக்கு ஆன்மீகம் கற்றுகொடுங்கள் என்று சொல்லிவிடுகிறோம். அவர்கள் நம்மை வைத்து நல்ல வேலை வாங்கிவிடுவார்கள்.

நமக்கு ஆன்மீக தாகம் வந்தால் சாமியாரை நாடலாம் முதலில் நமக்கு இருப்பது பிரச்சினை அதனை தீர்க்க நாம் செல்லவேண்டியது கோவில்கள் தான். ஆன்மீக தாகம் இருந்தால் கூட நாம் செல்லவேண்டியது முதலில் நாம் ஆலயங்களை நாடி வணங்கவேண்டும். 

முதல் பதிவில் நாம் சொன்னது குலதெய்வத்தை. இந்த பதிவில் சொல்லுவது புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வணங்கவேண்டும். புகழ்பெற்ற ஆலயங்கள் சென்று வணங்கவேண்டும். அந்த ஆலங்களை வணங்கினால் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் கண்டிப்பாக போகும்.

கோவில்களுக்கு சென்று ஆன்மீகமும் வளர்த்துக்கொள்ளமுடியும் அது நாம் செல்லும் கோவிலை பொறுத்து அது வளரும். யாருக்கு எங்கு எது நடக்கும் என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

இதுவரை நீங்கள் எந்த கோவில்களை எல்லாம் தரிசனம் செய்து இருக்கின்றீர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்துபாருங்கள். அதில் முக்கால்வாசி கோவில்களுக்கு நீங்கள் சென்று இருக்கமாட்டீர்கள். அதனை எல்லாம் நீங்கள் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பித்ருதோஷம்


ணக்கம்!
          இராகு கேதுவில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. பித்ரு தோஷம் நிவர்த்தி. பித்ரு தோஷ நிவர்த்தி மட்டும் அவர் அவர்களே செய்ய வேண்டிய பரிகாரம். அதனை நான் மட்டும் செய்துவிடமுடியாது.

உங்களின் முன்னோர்கள் மற்றும் உங்களின் இரத்தவழியில் உள்ளவர்கள் மட்டும் நீங்கள் பங்கு பெறவேண்டும் என்பதால் இதனை தவிர்க்கலாம். இதனை செய்வதும் கொஞ்சம் கடினமான வேலை. அதாவது குறைந்த செலவில் செய்யமுடியாது என்பதால் தான் சொன்னேன். 

பித்ருதோஷம் இருப்பவர்கள் தங்களின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி அதனை தனிப்பட்ட பரிகாரமாக செய்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்களின்  பித்ருக்கு நீங்கள் மட்டும் செய்யும்பொழுது மட்டுமே உங்களின் பித்ருக்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

பித்ருதோஷம் இல்லாமல் அது வேறு விதமாக செயல்பட்டால் அதற்கு நாம் பொதுபரிகாரம் செய்துக்கொள்ளலாம். மூன்றாவது வீடும் ஒன்பதாவது வீடும் பித்ருதோஷத்தில் சம்பந்தப்படும். மூன்றாவது வீடு தைரியத்தை கொடுக்கிற ஒரு ஸ்தானம் உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் அதற்கு பரிகாரத்தில் இடம் உண்டு.

பித்ருதோஷத்தை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் முதலில் உங்களுக்கு எதுவும் நடக்காது. எந்த ஒரு காரியமும் நடக்காது. அப்படியே இல்லை என்றால் பிறவியில் நீங்கள் ஏதாவது உங்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது பித்ருதோஷத்தின் முதல் நிலை.


ராகு கேது பரிகாரம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான ஒரு வேலை என்பதால் தான் இதனை உடனே ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஜாதகமும் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல விசயமும் நடைபெறவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டுள்ளேன்.

ராகு கேது பொதுபரிகாரம் என்று உங்களின் மெயிலில் குறிப்பிட்டு மெயில் அனுப்புங்கள்.  உங்களின் ஜாதகத்தை எடுத்து உடனே அலசிவிட்டு உங்களின் ஜாதகத்தை அனுப்புங்கள். 

இதில் ஒன்றை சொல்லவேண்டும் எந்த ஒரு காரணம் கொண்டும் ராகு கேதுவிற்க்கு ஜாதகம் அனுப்பி பலனை கேட்ககூடாது. பலன் வேண்டும் என்றால் ஜாதகத்திற்க்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு அதன்பிறகு கேளுங்கள். பலர் செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது ஜாதகத்தை அனுப்பி பொதுபலனை கேட்டார்கள். பரிகாரம் என்று வந்தால் அது தனி. பலன் என்பது தனி என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு கேது பொதுபரிகாரம் ஆரம்பம்


ணக்கம்!
          பொதுவான பரிகாரம் செவ்வாய் பரிகாரத்திற்க்கு பிறகு ராகு கேது பரிகாரம் என்று சொல்லிருந்தேன். ராகு கேது பொது பரிகாரத்தை தற்பொழுது ஆரம்பித்துவிடலாம். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு ஏகாப்பட்ட ஜாதகங்கள் வந்தன. கடைசி நேரத்தில் பாதி ஜாதகங்களை திருப்பிவிட்டு அவர்களை பணம் செலுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நிறைய ஜாதகங்கள் வரும்பொழுது அதனை செய்வது எனக்கு கடினமாக இருந்தன. அதற்கு போதிய நேரம் இல்லை என்பதால் இப்படி செய்தேன்.

ராகு கேதுவிற்க்கு என்று தற்பொழுதே பரிகாரத்தை ஆரம்பித்த காரணம் இது தான். நல்ல காலம் எடுத்து ஒவ்வொருவருக்காக நன்றாக செய்துக்கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தோடு இதனை செய்துவிடலாம் என்று இருக்கிறேன். அம்மன் துணையோடு இது நடக்கும்.

முதலில் வருபவர்களுக்கு எதிலும் நல்ல முன்னுரிமை கிடைப்பது போல இந்த பரிகாரத்திற்க்கும் கிடைக்கும். வங்கியில் பணத்திற்க்கு பிரச்சினை வரும்பொழுது இந்த பரிகாரத்தை ஆரம்பித்து இருக்கிறேன். ராகு கேது என்றாலே இடைஞ்சல் தானே இந்த நேரத்தில் ஆரம்பித்து இருக்கிறேன்.

ராகு கேது என்றாலே அது பூச்சிகளை குறிக்கும் ஒரு கிரகம். தற்பொழுது நிலவும் சூழ்நிலையும் நிறைய வைரஸ்கள் வரும் அப்படியே இல்லை என்றாலும் வரக்கூடிய ஒரு தட்பவெப்ப சூழ்நிலையாக இருக்கும். இந்த காலத்திற்க்காக இதனை ஆரம்பித்தேன்.

உங்களின் ஜாதகத்தில் ராகு கேது பிரச்சினை இருந்தால் மட்டுமே அவர்கள் ஜாதகத்தை அனுப்பவேண்டும். ராகுவிற்க்கும் கேதுவிற்க்கும் தனி தனியாக பரிகாரம் செய்யமுடியாத காரணத்தால் இரண்டையும் சேர்த்து இந்த பரிகாரத்தை செய்கிறோம். கேதுவால் பிரச்சினை வந்தாலும் நீங்களும் இதில் பங்கு பெறலாம்.

பொதுபரிகாரத்திற்க்கு பணத்தை நிர்ணயம் செய்வதில்லை. அவர்கள் விருப்பட்டு அனுப்பும் பணத்தில் இதனை செய்கிறோம். ஒவ்வொருவரும் அனுப்பும் பணத்தை பொறுத்து பரிகாரம் செய்யப்படும். 

செவ்வாய் பரிகாரத்திற்க்கு கோவிலுக்கு பணம் அனுப்ப சொல்லிருந்தேன். இதற்க்கு கோவிலுக்கு பணம் அனுப்பமுடியாது. ராகு கேது என்று சொல்லப்படும் கோவில்கள் எல்லாம் ராகு கேதுவிற்க்கு உரியது அல்ல. பரிகாரம் என்றாலே நாம் கோவிலுக்கு செய்வது உண்டு. அதனைப்பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

இன்றைய தேதியில் இருந்து இந்த பரிகாரத்திற்க்கு தேதி ஆரம்பம் ஆகின்றது. வரும் ஜாதகத்தை பொறுத்து இறுதி தேதி முடிவு செய்யப்படும். 

அம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவர்கள் இந்த பரிகாரபூஜைக்கு என்று பணம் அனுப்பவேண்டாம். உங்களுக்கு ராகு கேது தோஷம் இருந்தால் உங்களின் ஜாதகத்தை அனுப்பினால் போதுமான ஒன்று. ராகு கேதுவைப்பற்றி இனி தொடர்ந்து நிறைய கருத்துகளை தருகிறேன் படித்துவிட்டு நீங்கள் பங்குபெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சாமியே சரணம் ஐயப்பா


ணக்கம்!
         இன்று கார்த்திகை முதல் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் மாலை அணிந்திருப்பீர்கள். நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்களும் மாலை அணிந்து இருப்பீர்கள். 

மாலை அணிந்து விரதம் இருக்கும் நாளில் நல்ல ஆச்சாரியமாக கடைபிடியுங்கள். மாலையணிந்துவிட்டு ஏனோ தானாே என்று இருந்துவிடாமல் விரத முறையை கடுமையாக கடைபிடித்து ஐயப்பனின் அருளை பெறுங்கள்.

சமீபகாலமாக பேப்பரில் படித்த செய்தி பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று இருந்தது. நம்ம ஆட்கள் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்கபோவதில்லை என்பது மட்டும் இதனை காண்பிக்கிறது. 

கேரளாவில் பெண்களுக்கு என்று ஒரு சபரிமலையையும் ஆண்களுக்கு என்று ஒரு சபரிமலையும் உருவாக்கி இருக்கிறார்கள். தெரியாமல் இதனை செய்து இருக்கமாட்டார்கள். நமது சக்தி பீடத்தை எல்லாம் உடைக்கவேண்டும் என்ற காரணத்தால் இது நடத்தப்படுகிறது. இதற்கு மேல் இதனைப்பற்றி சொல்லவேண்டாம் நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

சபரிமலைக்கு செல்லும் நண்பர்கள் பத்திரமாக சென்று வாருங்கள். பயணம் செய்யுமபொழுது பகலில் செல்லுங்கள். வாகனத்தை மிகுந்த கவனத்தோடு இயக்குங்கள். இரயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்று வருவது நல்லது. சாலை மார்க்கம் விபத்தை தரும் என்பதால் இதனை அதிகம் தவிர்க்கபாருங்கள். ஐயனின் அருளை பெற்று நன்றாக வாழ அம்மனை பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புதன்


ணக்கம் !
          புதன் கிரகம் ஒரு அற்புதமான நன்மையை அளிக்ககூடிய ஒரு கிரகம் ஆனால் நாம் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை என்பது தான் உண்மையான விசயம்.

அறிவு என்பது படிக்க படிக்க நிறைய அனுபவத்தை பெற்று அதன் வழியாக தான் நல்ல அறிவை பெறமுடியும். நாம் என்ன செய்வோம் என்றால் படிப்பதை விட்டுவிட்டு தேவையில்லாத விசயங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிடுவோம்.

புதன்கிரகத்தின் பலனை அதிகப்படுத்தவேண்டும் என்றாலும் நாம் படித்து கூட புதன்கிரகத்தின் பலனை அதிகப்படுத்தலாம். நம்மை படிக்கவிடாமல் தடுக்கும் அதிகவிசயங்களை வேறு கிரகங்கள் செய்துவிடுவது உண்டு.

புதன்கிரகத்தின் பலனை நாம் வழிபாட்டில் தான் பெறமுடியும் என்பதில்லை நல்ல அறிவாளியோடு சேர்ந்தாலும் நமக்கு அந்த கிரகத்தின் பலன் கிடைத்துவிடும். நமக்கு வாய்க்கும் நண்பர்கள் நல்ல அறிவாளிகளாக இருந்தால் தானாகவே இது கிடைத்துவிடும்.

நல்ல அறிவு உள்ள நண்பனை தேர்ந்தெடுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதன்கிரகத்தின் ஆளுமையில் நீங்கள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்துக்கொண்டே செல்லலாம்.

இன்று கோயம்புத்தூர் வரமுடியவில்லை. வேலைக்கு செல்லும் நண்பர்கள் சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் வந்தால் சந்திக்க வசதியாக இருக்கும் என்றார்கள் அதனால் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 15, 2016

செவ்வாய் சனி


ணக்கம்!
          செவ்வாய் என்றாலே வீரத்திற்க்கு பெயர் போனாது அல்லவா. செவ்வாய் விளையாட்டுக்கும் பெயர் போனது என்று சொல்லுவார்கள். 

நமது இந்தியாவில் உள்ளவர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் எல்லாம் வாங்குவதில்லை என்று சொல்லுவார்கள். இந்தியாவின் இருப்பு இருப்பது மகரராசி என்று கேள்விபட்டு இருக்கிறேன். அடுத்தவர் சொன்னது தான் ஆனாலும் இந்த மக்களை எல்லாம் பார்க்கும்பொழுது சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்று தான் நம்பமுடிகிறது.

சீனா அதிகளவில் தங்கம் வாங்குகிறது அங்கு நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன. இதற்கு காரணம் அங்கு இருக்கும் நில அமைப்பு செவ்வாய் காரத்துவம் உடையதாக இருக்கின்றது.

செவ்வாய் காரத்துவதோடு இருக்கும்பொழுது அதிகளவில் பரிசுகளை வாங்கலாம். சனியின் காரத்துவத்தோடு இருப்பதால் சோம்பேறிதனமான விளையாட்டை வேண்டுமானால் நாம் விளையாடி வெற்றிபெறலாம். உட்கார்ந்துக்கொண்டு விளையாடும் விளையாட்டுகளாக இருந்தால் வெற்றி பெறமுடியும்.

சனியின் காரத்துவத்திற்க்கு ஊனமுற்றோர்கள் விளையாடும் விளையாட்டில் தங்கம் வாங்கலாம். சனியின் காரத்துவத்தை உடையவர்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் அடுத்தவர் ஒருவர் தூண்டவேண்டும்.

இந்தியாவை பாகிஸ்தான் உரியில் தாக்கியவுடன் நம்ம ஆட்கள் உடனே அடித்தார்கள் அல்லவா அதற்கு எல்லாம் காரணம் சனியின் காரத்துவம் உடையவர்களை சீண்டினால் சீண்டியவன் செத்தான்.

உங்களை விளையாட மற்றும் சண்டை போட எல்லாம் போகவேண்டாம். உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் பலன் இருந்தால் எப்படி இருக்கும். சனி பலன் பெற்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்வதற்க்காக இதனை எல்லாம் சொன்னேன். 

ஒரு கிரகத்தை எப்படி எல்லாம் டியூன் செய்தால் நமக்கு தகுந்தமாதிரி கொண்டு வரலாம் என்பதற்க்காகவும் இதனை சொன்னேன். கடைபிடித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


ணக்கம்!
          நமது நண்பர்கள் இன்று இல்லை என்றாலும் எதிர்காலத்தில் எப்படியும் ஒரு சோதிடர்களாக இருப்பார்கள். ஏன் இன்றைய காலத்தில் கூட இதனை செய்துக்கொண்டு வரலாம். பரிகாரம் என்ற ஒன்றை செய்யும்பொழுது கவனிக்க வேண்டிய ஒன்று தான் இந்த பதிவு.

சோதிடர்களாக இருந்தாலே பரிகாரத்தை சொன்னால் தான் உங்களை சோதிடர்களாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பரிகாரம் சொல்லவில்லை என்றால் அந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 

சோதிடர்கள் பரிகாரத்தை செய்தும் கொடுப்பது உண்டு  அல்லவா. இலவச பரிகாரம் செய்யகூடாது என்பது எனது அனுபவம். நான் நிறைய பேருக்கு இலவச பரிகாரம் செய்துக்கொடுத்து இருக்கிறேன். முக்கால்வாசி பேருக்கு இலவச பரிகாரம் தான் செய்துக்கொண்டு இருந்தேன்.

இலவசமாக செய்யும்பொழுது அவர்களின் கர்மா நம்மை தாக்குகிறது என்பதை அனுபவத்திலும் உணர்ந்து இருக்கிறேன். இலவசமாக செய்தாலும் அவர்களிடம் ஏதாவது பணத்தை வாங்கி ஏதோ ஒரு கோவிலுக்கு செய்துவிட்டு அவர்களுக்கு செய்யுங்கள்.

ஒன்றை கவனிக்கவேண்டும் அதாவது நாம் செய்வது சோதிட தொழில் தவிர வேறு எந்த ஒரு தொழிலையும் நாம் செய்யகூடாது என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியது. தனியா வேறு தொழில் செய்தாலும் முதன்மை தொழிலாக சோதிடம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையாக இருக்கவேண்டும். 

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் முதன்மை தொழிலாக இதனை செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் பரிகாரம் செய்யும்பொழுது அந்த பரிகாரம் வேலை செய்யும்.

இன்றைக்கு இருக்கும் அனைத்து தொழில்களும் சரி அவர்களின் ராசி வேலை செய்கிறது. அவர்களிடம் சென்றாலே அந்த வேலை நடக்கும் என்பதின் தாரகமந்திரம் அது தான். ஒரு டாக்டரிடம் செல்லும்பொழுது அவரின் ராசி முக்கால்வாசி வேலை செய்யும் அதன் பிறகு தான் அவர்களின் தொழில் திறமை.

முதன்மையாக இந்த தொழிலை செய்தால் கண்டிப்பாக நீங்கள் செய்யும் பரிகாரம் வேலை செய்யும். இது என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்.

நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 14, 2016

ஆன்மீகம்


ணக்கம்!
          நமது ஜாதககதம்பத்தில் ஒரு சில ஆன்மீக தகவல்களும் அவ்வப்பொழுது வெளியிடுங்கள் உங்களின் ஆன்மீக கருத்தும் எங்களை போல் உள்ள ஒரு சில ஏழை மக்களுக்கும் பயன்படவேண்டும் என்று அந்த மெயிலில் எழுதியிருந்தார்.

ஆன்மீகம் என்பது ஏழை பணக்காரன் என்பது எல்லாம் கிடையாது. அவர் அவர்கள் முயற்சி செய்தாலே போதும் அது கிட்டிவிடும். ஜாதககதம்பத்தில் எழுதாதற்க்கு காரணம் இதில் வரும் பதிவுகள் பல காப்பி அடித்து அவர் அவர்களின் தளத்தில் வெளியிட்டுவிடுகின்றார்கள் என்பதால் இதில் எழுதுவதில்லை.

ஆன்மீகத்தில் ரகசியமாக இருக்கும் பல விசயங்கள் வெளிபடையாக செய்ய கூடாது என்பதாலும் இதில் எழுதுவதில்லை என்பது தானே தவிர மற்றபடி பணம் இருப்பவன் தான் ஆன்மீகம் பயிலவேண்டும் என்று ஒதுக்கவில்லை. 

ஒரு ஏழை என்னை சந்தித்து எனக்கு ஒரு ஆன்மீகப்பயிற்சியை சொல்லி தாருங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக நான் உங்களுக்கு சொல்லிக்கொடுப்பேன். போனிலேயே அனைத்தும் கேட்டுக்கொள்ளவேண்டும் என்றால் கண்டிப்பாக அது முடியாத காரியம். உங்களுக்காக ஒரு சில ஆன்மீக விசயங்களை தருகிறேன்.

இன்றைக்கு ஆன்மீகவாதிகள் எல்லாம் சொல்லும் ஆன்மீகம் உங்களுக்கு பிரச்சினையா என்னை வந்து சந்தியுங்கள் உங்களின் பிரச்சினை தீரும் என்பார்கள். ஒரு சிலர் சித்தர்களின் வழிபாட்டு முறையைப்பற்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய காலத்தில் ஒரு சிலர் நான் தான் ஒரு சில சித்தர்களின் பெயரை சொல்லி இந்த சித்தராக பிறந்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். முதலில் இதனை எல்லாம் விட்டுவிடுங்கள்.

நமக்கு பிரச்சினை என்றால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்களின் குலதெய்வ வழிபாடு செய்து இருக்கின்றீர்களாக என்பதை பாருங்கள். குலதெய்வத்திற்க்கு நீங்கள் மாதம் மாதம் செய்யவேண்டிய வழிபாட்டை செய்து இருகின்றீர்களாக என்பதை முதலில் உற்றுநோக்குங்கள். இதனை மீறி தான் அடுத்த பிரச்சினையே இருக்கின்றது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு இன்று பச்சைப்பரப்புதல் செய்யலாம். பச்சைப்பரப்புதலை எழுதி நீண்டநாள்கள் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதனை நினைவுகூறும் விதத்தில் ஒரு நண்பர் கேள்வி கேட்டார் உடனே பதிவை தந்துவிட்டேன்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு என்று செய்யும்பொழுது அந்த குலதெய்வத்திற்க்கு என்ன செய்யவேண்டும் என்பது உங்களின் குடும்பத்தினர்க்கு மட்டும் தெரிந்த ஒன்று. உங்களின் குலவழக்கபடி என்ன செய்யகின்றார்களோ அதனை கடைபிடித்து செய்து வாருங்கள்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு அசைவம் தான் படைக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் அசைவ உணவை செய்து படைக்கவேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது. குலதெய்வதெய்வத்திற்க்கு அசைவம் தான் கொடுக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அசைவ உணவை கொடுக்கும்பொழுது உங்களுக்கு அது நிறைய கொடுக்கும்.

குலதெய்வத்திற்க்கும் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கும் பச்சைப்பரப்புதலை இளைஞர்களும் செய்துக்கொண்டு வருவது மகிழ்ச்சியான ஒரு விசயமாக இருக்கின்றது. இளைஞர்கள் செய்யும்பொழுது தவறுதல் நடந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை தொடர்ந்து செய்து வாருங்கள் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு சரியான திசையில் சென்றுக்கொண்டு இருப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன்


ணக்கம்!
          பெரும்பாலும் சமீபகாலமாக சந்திரனைப்பற்றி பார்த்து வருகிறோம். பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள் என்ன சார் சந்திரனைப்பற்றியே நிறைய எழுதிகிறீர்கள் என்று கேட்டார்கள். 

நம்மை பொறுத்தவரை ஒவ்வொரு தலைப்பிலும் அந்தந்த கிரகங்களை வைத்தே நிறைய எழுதிக்கொண்டு தான் வருகிறேன். சந்திரன் உங்களுக்கு வீக்காக இருப்பதால் இதனை கண்டு பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு மனிதன் பிறக்கும்பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதாே அதனை தான் சோதிடத்தில் பிறந்த நட்சத்திரம் என்று வைத்து தசாபுத்திகளை கணக்கீடு செய்கிறோம். தசாபுத்திகள் தான் ஒரு மனிதனை இயக்குபவையாக இருக்கின்றன. அதனால் சந்திரன் ஒவ்வொருவருக்கும் மிக மிக முக்கியமாக இருக்கிறார்.

சந்திரன் ஒருவருக்கு நன்றாக இல்லை என்றால் அவருக்கு பிறரோடு ஒத்துபோகாத ஒரு நிலையை உருவாக்குவார். இன்றைக்கு பலர் இந்த நிலையில் இருப்பார்கள். ஒவ்வொருவரும் அலுவலகத்தில் பணியாற்றும்பொழுது இந்த நிலையில் இருக்கின்றார். சமுதாயத்திலும் அப்படி இருக்கின்றார்கள்.

சந்திரன் தன்னை தவறாக வழிகாட்டுவதால் தான் என்னால் பிறரோடு ஒத்துபோகமுடியவில்லை என்று நீங்கள் நினைத்து நடந்தால் போதும் அதிகமான பிரச்சினை தீர்ந்துவிடும்.

மனநிலையில் ஒருவரோடு ஒத்துபோகாத ஒரு நிலை இருக்கும்பொழுது தானே அனைத்து பிரச்சினையும் வருகின்றது. இன்றைக்கு இருக்கும் ஜாதகத்தில் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை இருக்கும். சந்திரனை சரிசெய்யும் வழிமுறையை பின்பற்றலாம்.

விரைவில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அன்னாபிஷேகம் சந்திரன்


ணக்கம்!
          நேற்று தனிப்பட்ட முறையில் அம்மன்பூஜை இருந்த காரணத்தால் பதிவை தரமுடியவில்லை. இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவை படைத்த சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்கின்ற நாள். உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்று வழிபட்டு வாருங்கள்.

இன்று பெளர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பு. திங்கள்கிழமை பெளர்ணமி வருவதால் சந்திரன் பாதிப்படைந்த நபர்கள் அனைவரும் அருகில் இருக்கும் சிவலாயங்கள் சென்று வழிபட்டு வாருங்கள்.

சந்திரன் பிரச்சினை பொதுவாக அனைவருக்கும் வரும். சந்திராஷ்டம் ஏற்படும் நாளில் அதிக பிரச்சினை வரும். அதே நேரத்தில் ஒரு சில மாதத்தில் வரும் சந்திராஷ்டம் ஒரு சிலருக்கு நல்லதையும் வழங்கி இருக்கின்றது.

சந்திராஷ்டம் வரும் நாளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சந்திராஷ்டமத்தால் வருகின்ற பிரச்சினை குறையும். அதிகபட்சம் ஒவ்வொருவரின் வீட்டில் நடக்கும் தீயகாரியங்கள் அனைத்தும் சந்திராஷ்டம் வருகின்ற நாளில் நடக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்து தான் சந்திராஷ்டம தினத்தில் கொடுக்கின்ற பலனும் நடக்கும் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எங்கு உள்ளது என்று பாருங்கள். அதன் அடிப்படையில் சந்திராஷ்டம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு