Followers

Wednesday, January 31, 2018

கண்திருஷ்டி பகுதி 3


வணக்கம்!
          கடகராசி
                   உங்களை பார்த்து எப்படி இப்படி அழகாக ஆடைகளை அணிந்துள்ளார். எப்படி மெடுக்காக இருக்கிறார். எப்படி தன்னுடைய அம்மாவை பார்த்துக்கொள்கிறார். தன்னுடைய குடும்பத்திற்க்காக நன்றாக உழைக்கின்றார் என்று உங்களைப்பார்த்து கண் வைப்பார்கள்.

நல்ல பேச்சாற்றலை பெற்று அனைவரிடம் எப்படி இப்படி பழகுகின்றார். கலையான முகத்தை உடையவராக எப்படி இவர் இருக்கின்றார் என்று உங்களின் மேல கண் வைக்கலாம்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                                                    
                         நீங்களே இந்த வேலையை அடிக்கடி செய்வீர்கள். ஒரு சூடத்தை எடுத்து மாலை நேரத்தில் உங்களின் வீட்டின் வாசலில் ஏற்றி வைப்பீர்கள். அதோடு உங்களுக்கு பிடித்தமான சாம்பிராணியை நெருப்பில் போட்டு உங்களின் வீடு முழுவதும் காட்டிவிட்டு அதன் பிறகு அதனை தெருவாசலில் போட்டுவிடுங்கள்.

சிம்மராசி
          பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பார்கள். நாம் எல்லாம் தனியார் கம்பெனியில் கஷ்டப்பட்டு வேலை செய்யும்பொழுது இவர் மட்டும் அரசாங்க வேலையில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றாரோ என்று கண் வைக்கலாம்.

சிம்மராசியினர் காலையிலேயே எழுந்துவிடுவார்கள். காலையில் அதுவும் விடியற்காலையில் எழுந்துவிடுகிறாரோ என்று கூட உங்களின் மேல் கண் வைத்துவிடுவார்கள். 

திருஷ்டி எப்படி கழிப்பது
                         உங்களுக்கு உகந்த ஞாயிற்றுகிழமையிலேயே இதனை செய்யலாம். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களின் வாயிற்படியில் கட்டி வையுங்கள். அடுத்த ஞாயிற்றுகிழமை அதனை எடுத்து தெருவில் போட்டுவிடுங்கள். 

உங்களின் மேல் அதிக திருஷ்டி வந்தால் நீங்கள் செவ்வாய்கிழமை அன்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களை சுற்றிவிட்டு அதனை இரண்டாக வெட்டி தெருவில் போட்டுவிடுங்கள். உங்களின் திருஷ்டி கழிந்துவிடும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309 
What'sApp Number: 9551155800   

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 30, 2018

தைபூசம்


ணக்கம்!
          நாளை தைபூசம் கடந்த ஆண்டு நாம் செவ்வாய் பரிகாரம் இந்த நேரத்தில் செய்து இருந்தோம். அந்த நேரத்தில் உங்களின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு நீங்கள் ஏதாவது ஒரு நற்பணி செய்துவிடுங்கள் என்று சொல்லிருந்தேன். உங்களுக்கும் ஞாபகம் இருக்கும். 

இந்த வருடம் இந்த நேரத்தில் பரிகாரம் ஏதும் இல்லை. தற்பொழுது நாளை நடைபெறும் தைபூசத்தில் உங்களால் முடிந்த ஒன்றை உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செய்யுங்கள். அது எந்த உதவியாகவும் இருக்கட்டும். 

பூஜை பூக்களை வாங்கிக்கொடுப்பது, அன்னதானம் செய்வதற்க்கு மளிகைப்பொருட்களை வாங்கிக்கொடுப்பது, பூஜைகளுக்கு தேவையான பூஜைப்பொருட்களை வாங்கிக்கொடுப்பது என்று வாங்கிகொடுங்கள். 

உங்களால் பூஜைப்பொருட்களை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை என்றால் உங்களின் முடிந்த உடல் உழைப்பை கொடுக்க பாருங்கள். ஏதாவது ஒன்றை முருகனுக்கு செய்ய பாருங்கள். முருகனின் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

ஒரு வருடத்திற்க்கு தேவையான முருகனின் அருளை பெறுவதற்க்கு இதனை செய்யலாம். அனைவரும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309 

What'sApp Number: 9551155800  


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கண்திருஷ்டி ராசி பகுதி 2


வணக்கம்!

          ரிஷபராசி  

                    ரிஷபராசியினர் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். உங்களின் அழகை பார்த்தே ஆளை பாரு எப்படி அழகாக இருக்கிறார் என்று பார்த்து கண் வைத்து விடுவார்கள்.

ரிஷபராசியினர் அடிக்கடி ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்தவர்கள் கூட அவர்கள் இதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.நகை வாங்குவது மொபைல் போன் வாங்குவது வீட்டிற்க்குள்ள பொருட்களை வாங்குவது என்று ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். இதனை பொறுக்காமல் உங்களின் மேல் கண் வைத்துவிடுவார்கள்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                         வேப்பம்மரத்து இலை மிளகாய் கொஞ்சம் உப்பு இதனை உங்களின் வீட்டில் ஒரு சின்ன சட்டியை எடுத்து நெருப்பை வளர்த்து இந்த பொருளை போட்டுவிடுங்கள். புகை நன்றாக வந்தபிறகு உங்களின் தெருவாசலில் சென்று இதனை போட்டுவிடுங்கள். உங்களுக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்துவிடும்.

மிதுனம்
        உங்களின் திறமையை பார்த்து அடுத்தவர் கண் வைத்திடுவார்கள். ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊர் மற்றும் அடுத்த நாடு என்று சென்று தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். இதனை பார்த்து உங்களை கண் வைத்துவிடுவார்கள்.

ஒரு சிலர் நிறைய பண வசதிகளை பெருக்கிக்கொள்வார்கள். எப்படி தான் இப்படி பணத்தை சம்பாதிக்கிறார் என்று அடுத்தவர்கள் கண் வைத்துவிடுவார்கள். 

திருஷ்டி எப்படி கழிப்பது
                         ஒரு எலுமிச்சைபழத்தை எடுத்து உங்களை சுற்றி போட்டுவிட்டு அதன் பிறகு வாரத்திற்க்கு ஒரு முறை தேங்காய் எடுத்து அதன் குடிமி எல்லாம் எடுத்துவிட்டு உங்களை வலது பக்கம் மூன்று முறை சுற்றி இடது பக்கம் மூன்று முறை சுற்றிவிட்டு அந்த காயை சூறைகாய் உடைப்பது போல தெருவில் போட்டு உடைத்துவிடுங்கள். உங்களின் திருஷ்டி போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 29, 2018

திருஷ்டியும் அமாவாசையும்


வணக்கம்!
         அமாவாசை அன்று கண்திருஷ்டி அதிகமாக போடுவார்கள். ஏன் அமாவாசை அன்று கண்திருஷ்டி போடுகின்றார்கள் என்றால் அன்று கிரகத்தின் பலன் அனைத்தும் குறைந்து தீயசக்திகள் அதிகமாக தலைதூக்ககூடிய ஒரு நாள்.

அமாவாசை அன்று இப்படிப்பட்ட தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் நாம் கண்திருஷ்டி போடுகிறோம். அமாவாசை அன்று கிரகங்களின் பலன் குறைந்துவிடும். அனைத்து கிரகத்தின் பலனும் இல்லாத ஒரு நாளாகவே அன்றைய நாள் இருக்கின்றது.

அமாவாசை அன்று நாம் தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருக்க ஒரு சில அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அந்த அம்மன் பூஜையில் கலந்துக்கொள்வதும் நம்முடைய வாழ்வை நன்றாக மாற்றும்.

நமது சூட்சம உடல் பாதிப்படையாமல் இருக்க திருஷ்டி நமக்கு பல வகையிலும் உதவி புரிகிறது. சூட்சம உடல் பாதிப்படைந்தால் நமது வாழ்வு தரமும் மோசம் அடையும். அமாவாசை அன்று திருஷ்டி கண்டிப்பாக போட சொல்லுவதும் அந்த நேரத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ளவதற்க்காக தான் செய்கின்றனர்.

மாதம்தோறும் அமாவாசை அன்றும் திருஷ்டி போடுங்கள் அதோடு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் போடவேண்டும். உங்களுக்கு எந்த நேரத்தில் பிரச்சினை வருகின்றதோ அந்த நேரத்திலும் திருஷ்டி சுற்றி போடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 28, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 1


வணக்கம்!
          ஒவ்வொரு ராசிக்கும் தகுந்தமாதிரி அவர்களுக்கு கண்திருஷ்டி வருகின்றன. அவர்களின் ராசியின் பண்பை வைத்து அவர்களுக்கு கண்திருஷ்டி ஏற்படும். ராசியின் பண்பை வைத்து பிறர் மனதில் ஏற்படும் எண்ணம் நம்மை தாக்கும். ஒவ்வொரு ராசியினரும் எப்படி கண்திருஷ்டி வரும் என்பதை இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களின் ராசிக்கு தகுந்தமாதிரி பரிகாரம் சொல்லுகிறேன். அதனை தனித்தனியாக செய்துக்கொள்ளுங்கள்.

மேஷ ராசி
           உங்களை பார்த்து பிறர் எப்படி இப்படி உடல்வாகு இருக்கின்றது. எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார். நோய் என்று மருத்துவமனைக்கே செல்லாத நபராக இருக்கின்றாரே, எந்த வேலையை எடுத்தாலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு விரைந்து முடிகின்றார். எதற்கும் பயப்படமால் செயல்படுகிறார் என்று உங்களின் மேல் கண்திருஷ்டி வரும்.

பரிகாரம்
         வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களை வலது புறமாக மூன்று சுற்று இடது புறமாக மூன்று சுற்று சுற்றி அந்த பழத்தை நான்காக பாகமாக கட் செய்துக்கொண்டு நான்கு திசையிலும் வீசி விடுங்கள்.

நீங்கள் மட்டும் சென்று தனியாக ஒரு ஒதுக்குபுறத்தில் கூட இதனை செய்துக்கொள்ளலாம். நீங்கள் குடியிருக்கும் பகுதியில் கூட இதனை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 27, 2018

திருஷ்டி


வணக்கம்!
         நீங்கள் ஒரு தொழில் செய்யபோகிறேன் என்று உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களிடமும் உங்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் சொன்னால் உடனே அவர்கள் நல்லபடியாக ஆரம்பியுங்கள் என்று சொல்லிவிட்டு அவர்களின் மனதில் ஒரு வித எதிர்மறையான எண்ணமும் உருவாகும். இவன் ஆரம்பித்து எங்கு வெற்றி பெறபோகிறான் என்று அவர்களின் மனம் பொறாமைப்படும்.

ஒரு நல்லதை செய்தால் அதற்கு எதிர்மறையான ஒரு சக்தியை தான் நமது மக்கள் காட்டுவார்கள். நேர்மறையான ஒரு சக்தியை யாரும் காட்டுவதில்லை. உலகமே அப்படி தான் இருக்கும். இது எல்லாம் ஒரு தீய எண்ணம். இப்படிப்பட்டவர்களிடம் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. 

இப்படிப்பட்ட தீய எண்ணங்களில் இருந்து விடுபட தான் உங்களிடம் கண்திருஷ்டி போடவேண்டும் என்று சொல்லுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவர்களின் பதிவுகள் உங்களின் மேல் விழுந்து அந்த தொழிலும் மற்றும் உங்களின் உடல்நலமும் பாதிப்படைந்துவிடகூடாது என்பதற்க்காக கண்திருஷ்டி போடவேண்டும்.

திருஷ்டி எத்தனை நாள்களுக்கு ஒரு நாள் போடவேண்டும் என்ற கேள்வி எழும். வாரத்திற்க்கு செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை போடலாம் அதே நேரத்தில் எப்பொழுது எல்லாம் உங்களின் உடல் களைப்படைகிறது அல்லது ஏதாவது ஒரு தடை ஏற்படுவது போல் தோன்றுகிறதோ அப்பொழுது எல்லாம் நீங்கள் நாள்களை பார்க்காமல் உடனே திருஷ்டி சுற்றி போட்டுவிடுங்கள்.

எதிர்மறையான பதிவுகளை அவ்வப்பொழுது எடுத்துக்கொண்டே இருந்துவிட்டால் உங்களின் மேல் தேவையற்ற சுமை இல்லாமல் நீங்கள் எளிமையாக அனைத்தையும் செய்துக்கொண்டே இருக்கலாம். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309  
 What'sApp Number: 9551155800 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 25, 2018

கண்திருஷ்டி பரிகாரம்


வணக்கம்!
          பனிரெண்டு வருடத்திற்க்கு முன்பு ஒரு அறையில் தங்கியிருந்தபொழுது பக்கத்து அறையில் இருப்பவர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சிகப்பு கலரில் உள்ள இனிப்பு வகைகளை கொடுப்பார். 

அவர் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அலுவலகத்தில் ஏதோ ஒரு விழா என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இனிப்பை கொண்டு வந்து கொடுப்பார். எனக்கு மட்டும் அல்ல என்னோடு இருந்த நண்பர்களுக்கும் இதனை கொடுப்பார். இதனைப்பற்றி அந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை.

ஒரு நாள் என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் வந்து சொன்னார். இவர் இனிப்பை கடையில் வாங்கி உங்களுக்கு கொடுக்கிறார். அலுவலகத்தில் விழா எல்லாம் கிடையாது என்று சொன்னார். அதோடு அவர் இவர் மேல் விழும் கண்திருஷ்டிக்கு தான் இதனை கொடுக்கிறார் என்று சொன்னார்.

உண்மையில் உங்களின் ராசிக்கு ஏற்ற கலரில் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்களின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு நீங்கள் இனிப்புகளை வாங்கிக்கொடுத்தால் உங்களின் மேல் விழும் கண்திருஷ்டியை எடுத்துவிடலாம்.

இந்த இனிப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். உங்களை போல் உள்ள வயதில் உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்கவும். உங்களின் ஜென்மநட்சத்திரம் அன்றும் இதனை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 24, 2018

பித்ருதோஷம்


ணக்கம்!
          பித்ருதோஷத்தைப்பற்றி பார்த்தோம். பித்ருதோஷத்தைப்பற்றி ஒரு சில கேள்விகளும் வந்திருக்கின்றன அதற்கு இதனை எழுதிய பிறகு கண்டிப்பாக பதில் தருகிறேன். பித்ருதோஷம் என்றாலே அது அமாவாசையில் விரதம் இருந்து பூஜை செய்வது என்று அர்த்தம் இல்லை. அமாவாசை விரதம் இருக்கவேண்டுமானால் அதற்கு தந்தை தாய் இறந்த பிறகு தான் செய்யமுடியும்.

பித்ருதோஷம் என்பது நம்மோடு இருக்கும் தந்தை தாய் உயிரோடு இருக்கும்பொழுதே நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்போம். தாய் தந்தையை இதில் முடிச்சு போடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

பித்ருதோஷத்தைப்பற்றி ஒரு நண்பர் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். தாய் தந்தைக்கு உணவு அளிக்காமல் அவர் இறந்த பிறகு பூஜை செய்வது மடத்தனம் என்று அந்த வீடீயோ சொல்லுகின்றது. 

பித்ருதோஷத்திற்க்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் ஏற்படுவதில்லை.  நீங்கள் பிறக்கும்பொழுது உங்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தந்தை தாய் உங்களோடு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அமாவாசை விரத்தை இதில் கொண்டு வந்து சேர்க்கவேண்டாம் என்பது தான் நான் சொல்லுகிறேன்.

ஒரு சில கடமை இருக்கின்றது. அந்த கடமையை செய்வது தோஷத்தில் வராது. தாய் அல்லது தந்தை இறந்தால் அவர்களுக்கு அமாவாசை விரதம் இருக்கவேண்டும் என்பது கடமை. தோஷம் என்பது நீங்கள் பிறக்கும்பொழுது வருகின்ற ஒன்று அதற்கும் இதற்கும் சம்பந்தம் ஏற்படுத்தவேண்டாம்.

தொடர்புக்கு :
 9551155800 
 8940773309 

What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, January 23, 2018

கண் திருஷ்டி


ணக்கம்!
          கண் திருஷ்டியைப்பற்றி சொல்லிருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக கண்திருஷ்டி வந்துக்கொண்டே இருக்கும். அதனை எல்லாம் மீறி நாம் செயல்பட்டு தான் நாம் சம்பாதிக்கிறோம். 

சோதிடத்தில் ஆறாவது வீடு மற்றும் எட்டாவது வீடு கண் திருஷ்டியை உருவாக்கிவிடுகிறது. இதன் வழியாக தான் நமக்கு வரும் கெடுதல் அதிகமாக இருக்கும். மற்ற வீடுகளில் இருந்து வருவது குறைவாக தான் இருக்கும்.

ஒருவருக்கு ஆறாவது வீடு மற்றும் எட்டாவது வீடு தசா நடக்கும்பொழுது அவர்க்கு நிறைய கண்திருஷ்டி வரும் என்று சொல்லுவது உண்டு. இந்த தசாவில் ஒரு சிலருக்கு பணமாக வந்து கொட்டக்கூடிய ஒரு அமைப்பும் ஏற்படுவது உண்டு.

பணம் வந்தால் என்ன செய்வார்கள். நாம் சும்மா இருக்கிறோம் இவனை பார் பணமாக சம்பாதித்துக்கொண்டே இருக்கிறான் என்று கண் வைப்பார்கள். இது எல்லாம் உங்களின் வளர்ச்சிக்கும் தடை ஏற்படுத்தும் அதோடு உங்களின் உடலுக்கும் பிரச்சினையை கொடுக்கும்.

நீங்கள் உங்களின் வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் உடனே உங்களின் உடல் அசதியாக படுக்கலாம் அல்லது உடல் வலிக்கிறது கை கால் வலி ஏற்படுவது எல்லாம் கண்திருஷ்டி வழியாக வந்தது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

எனது தொடர்பு எண் ஏர்செல் கம்பெனி உடையது. நான் இருக்கும் பகுதியில் சரியாக வேலை செய்வதில்லை அதனால் கூடுதலாக ஒரு எண்ணை வைத்திருக்கிறேன். அதிலும் நீங்கள் தொடர்புக்கொள்ளலாம்.

தொடர்புக்கு 

9551155800
8940773309

What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருஷ்டி



ணக்கம்!
          ஒருவருக்கு கிரகதோஷம் அதிகபாதிப்பை தருகின்றதோ இல்லையோ அவர்களுக்கு கண்திருஷ்டி அதிகமாக பாதிப்பை தந்துவிடும். கண்திருஷ்டியால் வீழ்ந்தவர்கள் அதிகமாகவே இருப்பார்கள். இதனை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தான் இதனைப்பற்றி தெரியவரும்.

எப்பேர்ப்பட்ட ஹோமம் செய்தாலும் அதில் உங்களுக்கு கண்திருஷ்டி போக்க ஒரு வழிபாட்டை கண்டிப்பாக செய்வார்கள். சுத்திபோட்டு கண்திருஷ்டியை எடுப்பார்கள். இதனை முதலில் அல்லது கடைசியில் செய்வார்கள்.

கண்திருஷ்டியை எடுப்பதற்க்கு பலவித சடங்குகளை பின்பற்றி வந்தாலும் அதில் ஒன்றை பெரியதாக செய்வீர்கள். கற்பூரத்தை வைத்து சுத்தி போடுவது ஒரு முறை. அமாவாசை காலத்தில் பூசணியை வைத்து சுத்தி போடுவது ஒரு முறை. செவ்வாய் வெள்ளிக்கிழமையில் உப்பு மிளகாய் போட்டு சுத்தி போடுவார்கள். ஒரு சிலர் எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டியை எடுத்து பலி போடுவார்கள்.

எப்படி திருஷ்டி போட்டாலும் அது நாளுக்கு நாள் வந்துக்கொண்டே தான் இருக்கும். அதனை நீங்கள் தொடர்ந்து எடுத்து தான் ஆகவேண்டும். ஒரு புதிய முறையையும் கீழே கொடுத்து இருக்கிறேன். இது பழையமுறை தான் இதனை சொல்லாமல் இருந்தேன். தற்பொழுது சொல்லிருக்கிறேன் செய்து பாருங்கள்.

உங்களின் வீட்டில் காய்ந்த வேப்பிலை இலையை வைத்து கொஞ்சம் நெருப்பில் அந்த இலைப்போட்டு புகையை வீடு முழுவதும் பரப்பி கதவு ஜன்னல் எல்லாம் சாத்தி புகை உள்ளே கொஞ்சம் நேரம் இருக்க வைத்து மறுபடியும் கதவு ஜன்னலை திறந்துவிடுங்கள். கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கர்மா


ணக்கம்!
          நீங்கள் ஒரு ஆன்மீகவாதிகளாக இருந்து உங்களின் வீட்டில் மற்றோருவர் ஆன்மீகவாதிகளாக இல்லாமல் இருந்து ஏழரை சனி உங்களுக்கு நடந்து அல்லது ஏதாவது ஒரு தீமை கிரகங்கள் பலனை உங்களுக்கு தந்தால் உங்களின் வீட்டில் உள்ள ஆன்மீவாதிகளாக இல்லாமல் இருப்பவர்களுக்கு பிரச்சினை வந்து அவர்கள் கஷ்டப்படுவார்கள்.

எடுத்துக்காட்ட உங்களுக்கு ஏழரை சனி நடக்கும் காலத்தில் ஒரு கால் உடையும் கர்மா இருந்தால் உங்களுக்கு நடக்காமல் உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிப்பட்டு அவர்கள் கஷ்டபடுவார்கள். உங்களை தாக்காமல் உங்களின் கர்மா அடுத்தவர்களுக்கு செல்லுகின்றது.

இதனை யார் செய்வது என்ற கேட்கலாம். பெரும்பாலும் உங்களின் குரு இதனை தவிர்த்து உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம் அல்லது உங்களிடம் இருக்கும் தெய்வம் உங்களுக்கு கிடைக்கவேண்டியதை தடுத்து உங்களின் குடும்பத்தினர்க்கு கொடுக்கலாம்.

உங்களின் குடும்பமே காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு உங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் . கண்டிப்பாக இது சாத்தியப்படாத ஒன்றாக தான் இருக்கும். யாராவது ஒரு ஆள் உங்களின் சிந்தனையில் இருந்து மாறி தான் இருப்பார்கள்.

கர்மா எதோ ஒரு வழியில் சரிசெய்வதற்க்கு இப்படிப்பட்ட காரியங்களை நடத்தலாம். நீங்கள் அவர் கூட அல்லல்படும்படி அலைய நேரிடலாம். ஏதோ ஒரு வகையில் தீமை நடந்தால் அந்த கர்மா முடிவடைந்துவிட்டது என்று நினையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 22, 2018

நம்பிக்கை


வணக்கம்!
          நமக்கு வருகின்ற எந்த பிரச்சினையும் அது அடுத்தவர்களிடம் இருந்து வந்தது என்று நாம் அதனை நாடதேவையில்லை. பித்ருதோஷமும் அப்படிப்பட்ட ஒன்று தான் நாம் முன்னோர்களை குறைச்சொல்லிக்கொண்டு இருப்போம்.

முன்னோர்களை நாம் குறைச்சொல்ல தேவையில்லை அதற்கு மாற்றுவழி நம்மால் தான் முன்னோர்களுக்கு கூட மோட்சம் கிடைக்கும் என்று எண்ணி செயல்பட்டால் போதும். அவர்களுக்கு நாம் நல்ல வழியை ஏற்படுத்திவிட்டு நமக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்திவிடலாம்.

பிரச்சினை அடுத்தவர்களால் தான் வருகின்றது என்று நாம் குறைச்சொல்லிக்கொண்டு தவிர்க்காமல் என்னால் இதனை எல்லாம் களைவதற்க்கு சக்தி எனக்கு இருக்கின்றது என்று நீங்கள் உங்களை நம்பினால் போதும் எப்படியும் நீங்களை இதனை சரி செய்துவிடமுடியும்.

பித்ருதோஷம் வந்த அனைவரும் சொல்லுகின்ற வார்த்தை இது தான் நானே அனைத்து கோவிலுக்கும் சென்று இதனை எல்லாம் சரிசெய்தேன் என்று சொல்லிருக்கின்றனர். அவர்கள் போலவே நீங்களும் இதனை சரிசெய்துக்கொள்ளமுடியும்.

சளிப்பு தட்டாமல் காரியத்தில் இறங்கி செயல்புரியவேண்டும். வெற்றி பெறுவது வெகு எளிதில் உங்களுக்கு நடந்துவிடும். இதனை பலருடைய வாழ்க்கையில் நானே பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பித்ருதோஷம்


வணக்கம்!
          ஜாதகத்தை பலர் அவர்களே பார்த்துக்கொள்வது உண்டு. தற்பொழுது அனைவருக்கும் ஜாதகம் பார்க்கும் ஒரு நிலையில் தான் இருக்கின்றனர். ஒரு விதத்தில் நல்லதாக இருந்தாலும் ஒரு விதத்தில் அது தீமையாகவும் இருக்கின்றது.

பித்ருதோஷம் இருப்பவர்களின் ஜாதகத்தை எடுத்து உங்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது என்று சொன்னால் அதனை நம்பாமல் இருக்கின்றனர். எனக்கு அது கிடையாது என்பது தெரியும் நீங்கள் அதனை விட்டுவிட்டு சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள்.

பித்ருதோஷம் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டும் தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட வார்த்தையும் சொல்லக்கூடிய நிலை உருவாக்கிவிடுகிறது. ஒருவர்க்கு பித்ருதோஷம் இருந்தால் அவர் சோதிடம் படிக்கவேண்டும் என்று இல்லை அவரே ஒரு பெரிய அனுபவசாலியாக மாற்றிவிடும். அது அறிவு இல்லை அவர் பட்ட அனுபவம் அப்படி மாற்றுகிறது.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்கு முதலாக அவருக்கு தம்பிகள் இருக்ககூடாது. தம்பிகள் இருந்தால் அவர்கள் யாரும் உருபடமாட்டார்கள். அவர்களுக்கு நல்லது என்று வாழ்க்கையில் ஒன்றும் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்காது. 

பித்ருதோஷம் இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஒரு வித அலைச்சல் இருந்துக்கொண்டே இருக்கும். சம்பந்தமே இல்லாமல் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அலைச்சல் இருக்கும் என்பதும் ஒரு விதத்தில் உங்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது என்பதை காட்டுக்கூடிய நிலை.

மேற்படி சொன்னமாதிரி உங்களுக்கு இருந்தால் ராகு கேது உங்களின் ஜாதகத்தில் எப்படி செல்கிறது என்று பார்த்தால் தெரிந்துவிடும். உங்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது என்பதை உறுதிசெய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 21, 2018

திருமணம்


வணக்கம்!
          பெரும்பாலும் சனியின் வீட்டை களத்திர இடமாக கொண்டவர்களுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடாது. போராடி திருமணத்தை நடத்தவேண்டியிருக்கும். திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் வந்துவிடும்.

கடகராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கும் சிம்மராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கும் சனியின் வீடு களத்திர வீடாக அமையும். இந்த இரண்டு நபர்களுக்கும் வேறு கிரகங்கள் ஏதாவது துணைபுரிந்து இளைமையில் திருமணம் நடந்தால் தான் உண்டு.

களத்திர இடத்திற்க்கு சனியின் பார்வை வந்தாலும் அவர்களுக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் உருவாகிவிடும். திருமணத்தில் தாமதம் ஏற்பட்டுவிடுவது உண்டு.

மகரராசி மற்றும் கும்பராசிக்கும் திருமணம் செய்வதில் கொஞ்சம் இழுபறி இருக்கும். மகரராசியாவது திருமணம் பேசியவுடன் கை கூடிவிடும். கும்பராசி இழுத்தடித்து கொண்டே செல்லும். மற்ற ராசிகளுக்கு எல்லாம் விரைவில் திருமணம் நடக்கும்.

சுயஜாதகத்தில் ஏழாவது வீட்டை பொறுத்தும் குருவின் நிலைப்பொறுத்தும் கோச்சாரப்பலன்களை பொறுத்தும் திருமணம் எளிதில் நடைபெறுமா அல்லது இழுக்குமா என்று கணிக்கவேண்டும்.

தற்பொழுது தை மாதம் ஆரம்பித்துவிட்டது. திருமண பேச்சை எல்லாம் தொடங்கி உடனே நடத்தலாம். இதுவரை பொறுமையாக இருந்தவர்கள் உடனே செயல்படதொடங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 20, 2018

தீட்டு


வணக்கம்!
          பிற மதங்களில் இறந்தவர்களை அவர்களின் கோவிலுக்கு சென்று கொண்டு அங்கு வழிபாடு நடத்திவிட்டு அதன் பிறகு அவர்களை அடக்கம் செய்வார்கள். நம்ம மதத்தில் அதனை தீட்டாக நாம் பார்க்கிறோம்.

இறந்த உடலுக்கு செய்யவேண்டிய அனைத்தையும் சுடுகாட்டிலேயே நம்ம ஆளுங்க செய்துவிடுகிறார்கள். இருக்கின்ற சடங்குகளில் சுடுகாட்டில் செய்யப்படுகின்ற சடங்கு தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு சிலர் அதனை செய்வதில்லை.

முதலில் தீட்டு என்பதை கடைபிடிக்கும் பழக்கமும் நம்மிடம் இருக்கின்றது. ஒரு சில தெய்வங்களுக்கு தீட்டு என்பது ஏற்றுக்கொண்டாலும் அதிலும் ஒரு சில தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

எடுத்துக்காட்டாக நமது அம்மனை கூட எடுத்துக்கொள்ளலாம். நமது அம்மனுக்கு இறந்த தீட்டு என்பது கிடையாது. ஒருவர் இறந்தநாளிலேயே நாம் அதனை வணங்கலாம். எந்தவித தீட்டும் ஒன்றும் செய்யாது.

ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் சுடுகாட்டில் அமர்ந்து அல்லது அங்கு இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் போது அற்புதமான சக்தியை ஒருவரால் எளிதில் எடுத்துக்கொள்ளமுடியும். பத்து வருடம் கோவிலுக்கு சென்ற புண்ணியத்தை ஒரே தடவையில் சுடுகாட்டில் எடுத்துக்கொள்ளமுடியும்.

இறந்ததை தீட்டு என்று ஒதுக்காமல் சிவன் வாழும் இடம் புண்ணிய இடம் என்று நல்ல தரிசனத்தையும் புண்ணியத்தை பெறலாம் என்பதை அறிந்துக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகு


ணக்கம்!
          ராகு என்றாலே அது வெளிநாடுகளில் உள்ளவர்கள் மற்றும் மாற்று மொழி பேசும் மக்கள் மீது ஒரு ஈர்ப்பை கொடுக்ககூடிய கிரகம் என்பது உங்களுக்கு தெரியும். ராகுவைப்பற்றி பல விசயங்களை நான் ஜாதக கதம்பத்தில் அனுபவ ரீதியாக சொல்லிருக்கிறேன்.

ராகு என்ற ஒரு கிரகத்தை நாம் எடுத்து அதற்கு மட்டும் நாம் வழிபாட்டு முறைகளை மேற்க்கொண்டால் நமக்கு ராகுவின் பலனை பெறமுடியும். அதிகப்படியான பணம் வரத்து வேண்டும் என்பவர்கள் எல்லாம் ராகுவை பிடித்துக்கொண்டு வரலாம்.

ராகு என்றாலே அது கள்ளமார்க்கெட் குறிக்கும் கிரகம் என்பதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் எல்லாம் ராகுவை பின்பற்றலாம். அரசாங்கத்திற்க்கு தெரியாமல் பணவரவை மேற்க்கொள்ளும் பார்ட்டி என்று இதனை சொல்லுவார்கள்.

ராகு கிரகத்திற்க்கு பரிகாரம் மற்றும் பூஜைகளை எல்லாம் செய்வது மட்டும் அல்லாமல் கொஞ்சம் வீடுகளையும் அதற்கு தகுந்தார்போல் மாற்றிக்கொள்ளவேண்டும். ராகுவின் பலன் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகப்பட்சம் கோவில்களுக்கு செல்வதும் ஒரு தவறான ஒன்று. ராகு என்பவர் கோவில்களை காட்டக்கூடிய கிரகம் இல்லை என்பதால் அதிகமாக கோவிலுக்கு சென்றால் ராகுவின் பலன் முழுமையாக அனுபவிக்கமுடியாது.

ராகுபலன் கொடுக்கின்றது என்று நீங்கள் நினைக்கும்பொழுது ஒரளவு நீங்கள் சம்பாதித்துவிட்டால் அதனை வைத்து வேறு தொழில் ஆரம்பித்துவிட்டு அந்த தொழிலை மறந்துவிடுங்கள். ஏன் என்றால் பணம் வருகின்றது என்றால் அதே தொழிலை செய்துக்கொண்டு இருந்தால் சிறைச்சாலையும் செல்லவேண்டிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 19, 2018

குலதெய்வத்தை குளிர்வித்தல்


வணக்கம்!
          ஒருவருக்கு அதிகப்பட்சமாக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கின்றது என்றால் அவர் செய்யவேண்டியது அவரின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்தை குளிர்விக்க ஏதாவது ஒரு வேலையை செய்யலாம்.

குலதெய்வ கோவில் கட்டாமல் இருந்தால் அந்த கோவிலை கட்டும்பணியில் ஈடுபடலாம். உங்களால் கோவில் கட்டுவதற்க்கு எல்லாம் கையில் பணம் இல்லை என்றால் கோவில் கட்டுவதாக இருக்கும் நபர்களோடு சேர்ந்துக்கொண்டு இந்த பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

சுத்தமாகவே கையில் பணம் இல்லை பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு அபிஷேகத்தை செய்யலாம். அபிஷேகம் செய்வதால் அந்த தெய்வம் குளிர்ந்து உங்களுக்கு நல்லது செய்யும்.

ஒரு சிலருக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்றாலே பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் உங்களின் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம்.

குலதெய்வ கோவில் என்றாலே அதில் பல குடும்பங்கள் இருக்கும். அவர்கள் சண்டைபோட்டுக்கொண்டு குலதெய்வ வழிபாட்டை அதாவது வருடபூஜை செய்யாமல் இருப்பார்கள். அதனை நீங்கள் எடுத்து குடும்பங்களை ஒன்றிணைத்து நீங்கள் அந்த பூஜையை செய்ய வைக்கலாம். இதனை எல்லாம் செய்தால் உங்களின் பிரச்சினை ஓய்ந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பித்ருதோஷம்


வணக்கம்!
            ஜாதகத்தில் மூன்று ஒன்பதில் இராகு கேது இருந்தால் அது பித்ருதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இது பலருக்கு வேலை செய்யாது என்றாலும் ஒரு சிலருக்கு கடுமையாக வேலை செய்துவிட்டுவிடும். இளைமையில் கடுமையான கஷ்டத்தை கொடுத்துவிடும் என்பது தான் உண்மையான ஒன்று.

இளைமையில் ஒருவர் அதிகமாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தோஷம் இருக்கின்றது என்பதை சொல்லலாம். அதிகப்பட்சம் இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை அனுபவத்தில் நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.

பித்ருதோஷம் என்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லிருப்பார்கள். இதில் தந்தையால் வந்தது என்று சொல்லுவார்கள். தந்தையால் வந்தது மட்டும் கிடையாது. உங்களின் தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் வழி மற்றும் உங்களின் முன்ஜென்ம தொடர்பு இது எல்லாம் சேர்ந்து வரும்.

தோஷம் என்று சொல்லி சோதிடர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வி எழும். சோதிடர்கள் சொல்லுவது உங்களின் முன்னோர்கள் வழியாக சொத்து உங்களின் உடல்வாகு எல்லாம் வரும்பொழுது உங்களுக்கு அவர்கள் செய்த தோஷம் மட்டும் வராது என்று சொல்லமுடியாத காரணத்தால் தோஷம் வரும் என்று சொல்லுகிறோம்.

நீங்கள் உருவாவது இவர்கள் சம்பந்தம் இல்லாமல் வருவது கிடையாது. இவர்கள் எல்லாம் சம்பந்தப்படும்பொழுது கண்டிப்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட பாவமும் உங்களுக்கு வரும். அதனையும் நாம் அனுபவிக்கதான் வேண்டும்.

ராகு கேதுவை வைத்து தான் பித்ருதோஷத்தை அதிகப்பட்சம் சோதிடர்கள் சொல்லுவார்கள். ராகு என்றால் பாட்டன் கேது என்றால் பாட்டி இது எதனை காட்டுகிறது என்றால் உங்களின் அப்பாவைவிட எல்லாம் உங்களின் தாத்தா மற்றும் பாட்டி முக்கியம் வகின்றனர்.

சட்டத்தில் கூட தாத்தா சொத்து பேரனுக்கு என்று சொல்லுகின்றனர். தாத்தாவை வைத்து உங்களுக்கு அதிகப்பட்சம் நல்லது கெட்டது எல்லாம் வரும். இதனை வைத்து பித்ருதோஷமும் கணக்கிட்டு சொல்லுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆலய தரிசனம்


வணக்கம்!
          நேற்று நீண்ட நாள்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நான் தஞ்சாவூர் பகுதியில் இருந்தாலும் இந்த கோவிலுக்கு செல்ல நேற்று தான் எண்ணம் உருவானது. 

தஞ்சாவூர் பெரிய கோவிலை பெரும்பாலும் அனைவரும் சென்று தரிசனம் செய்து இருப்பீர்கள். இந்த கோவிலுக்கு செல்லும் மக்களின் எண்ணம் எல்லாம் எப்படி இருக்கும் என்றால் அந்த கோவிலை பார்த்து பிரமிப்பாக தான் பார்ப்பார்கள்.

நான் சென்ற கோவில்களிலேயே புகைப்படம் எடுப்பதற்க்கு என்று ஒரு கோவில் இருக்கின்றது என்றால் அது இந்த கோவிலாக தான் இருக்கும். போகின்ற அனைவரும் கிளிக் செய்வதில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். திரும்புகின்ற பக்கம் எல்லாம் ஒரே கிளிக் செய்வதில் தான் மக்கள் ஈடுபடுவார்கள்.

உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லுகிறேன். இந்த கோவிலில் உள்ள சக்தியை தரிசனம் செய்வதற்க்கு மட்டும் செல்வது மட்டும் தான் என்னுடைய எண்ணம் எல்லாம் இருக்கும். அற்புதமான எனர்ஜீயை தன்னுள் செலுத்த இந்த இடம் ஒரு நல்ல இடம்.

குடும்பத்தோடு சென்றால் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். தனியாக சென்றால் அங்குள்ள சக்தியை நல்ல தரிசனம் செய்து நம்முள் ஏற்றிக்கொள்ளலாம். மக்கள் பிரம்பிப்பை பார்ப்பார்கள். நாம் சக்தியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு வரலாம். அடுத்தமுறை நீங்கள் செல்லும்பொழுது இவ்வாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

இந்த கோவிலுக்கு சென்றால் எனக்கு ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லுவார்கள் இருக்கின்றார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பது தான் உண்மையான ஒன்று. நம்மை பார்த்து நாமே கெட்டவன் என்று சொல்லிக்கொண்டால் வெளியில் உள்ள சக்தியும் அவ்வாறு தான் வேலை செய்யும். அதனால் அதனை எல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அனைவரும் சென்று வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 18, 2018

கிரகபலன்


வணக்கம்!
          ஒவ்வொருகிரகத்தையும் பற்றி சொல்லிவிட்டு அதற்கு பரிகாரமும் அறிவித்து செய்து இருக்கிறோம். ஒரு சிலர் ஒரு கிரகத்தின் சார அம்சத்திலேயே அனைத்தையும் செய்துக்கொண்டு விடுவார்கள்.

ஒருவர் ஒரு தொழில் செய்யவேண்டும் என்றால் அந்த தொழில் சம்பந்தப்பட்ட கிரகத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு பூஜை பரிகாரங்கள் மற்றும் உணவு விசயத்தில் கவனம் செலுத்தி வந்தால் அந்த கிரகத்தின் தன்மை கொஞ்சநாளில் வந்துவிடும். அதன் பிறகு அவர் அந்த தொழிலேயே செய்துக்கொண்டு இருக்கலாம்.

சுக்கிரன் சம்பந்தமாக ஒரு தொழில் செய்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் சுக்கிரனுக்குரிய அனைத்து பரிகார வேலையும் செய்துவிட்டு அந்த தொழிலை அவர் நடத்திக்கொண்டு இருக்கலாம். அதே நேரத்தில் அவர் சுக்கிரனுக்கு செய்கின்ற பரிகாரத்தை நிறுத்திவிடகூடாது.

ஒரு கிரகம் ஒரு பலனை கொடுத்துக்கொண்டு இருந்தால் அது காலம் முழுவதும் அந்த பலனை கொடுத்துக்கொண்டு இருக்காது. ஒரு சில காலத்தில் பலனை குறைக்க ஆரம்பிக்கும். அதனால் தான் தொடர்ந்த அந்த குறிப்பிட்ட கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

தசாநாதன் யார் என்பதையும் பார்த்து அதற்க்கு தகுந்த மாதிரி செய்யவேண்டும். தசாநாதன் சரியில்லை என்றால் எவ்வளவு கொடுத்தாலும் அது கொடுக்காது. தசாநாதனுக்கு செய்யவேண்டிய விசயத்தை கொடுத்துவிட்டு அதன்பிறகு சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு செய்தால் பலன் கிடைக்கும்.

இதனை எல்லாம் செய்தால் தான் வேலை நடக்குமா என்று கேட்கலாம். தானாக கூட நடக்கும் ஆனால் அதற்கு நம்முடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் கிரகங்கள் அமைந்து இருக்கவேண்டும். நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக அமையவில்லை என்றால் இதனை எல்லாம் செய்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

பணத்தை கூட விட்டுவிட்டு பிடித்துவிடலாம் ஆனால் காலத்தை விட்டுவிட்டால் அதனை திரும்ப பெறவே முடியாது. காலத்திலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதற்க்காகவும் இதனை எல்லாம் செய்யுங்கள் என்று அடிக்கடி சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 17, 2018

விளக்கம்


வணக்கம்!
         நேற்று கரிநாள் அமாவாசைபபற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதனை பல நண்பர்கள் செய்தனர். பொதுவாக திடீர் அறிவிப்பு அறிவிப்பதற்க்கு காரணம் அந்த நேரத்தில் அந்த தகவல் நம்மிடம் உதயம் ஆகும்பொழுது அதனை உடனே தருவது உண்டு. முன்கூட்டியே தரமுடியாதற்க்கு சின்ன வருத்தம் இருக்கின்றது. நேற்றைய தினத்தில் நான் சொந்த வேலையில் இருந்த காரணத்தால் இதனை மறந்துவிட்டேன்.

பொதுவாக அமாவாசை தினத்தில் நீங்கள் வெளியில் செல்வதை கொஞ்சம் தவிர்க்க பாருங்கள். பல நண்பர்கள் லீவு கிடைத்துவிட்டது என்று கிளம்பி போய்விட்டார்கள். பலர் நான் குடும்பத்தோடு வெளியில் இருக்கிறேன் நான் என்ன செய்வதும் என்று கேட்டார்கள்.

அமாவாசை பெளர்ணமி நாட்களில் வெளியில் செல்வது தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக தவிர்க்கமுடியாத வேலை இருந்தால் மட்டுமே வெளியில் செல்லவேண்டும் என்பதை முதலில் புரிந்துக்கொள்வது நல்லது.

ஆன்மீகத்தில் நீங்கள் கடைசியாக செய்யவேண்டிய ஒரு வேலையாக  எது இருக்கும் என்றால் அனைத்தும் முன்னோர்களுக்கு செய்யவேண்டியதாக தான் இருக்கும். இராஜகுளியல் என்று சொல்லக்கூடிய புண்ணிய தீர்த்ததில் குளிப்பது எல்லாமே உங்களின் முன்னோர்களுக்காக செய்யவேண்டிய ஒன்று தான் அது என்பது ஆன்மீகத்தில் முத்திய நிலையில் உங்களுக்கு தெரியவரும்.

என்னைப்பொறுத்தவரை முன்னோர்களுக்கு மற்றும் முன்ஜென்மத்திற்க்கு செய்யவேண்டியதை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து செய்யச்சொல்லுவேன். அது தான் உண்மையான ஆன்மீகம் என்பதும் போக போக உங்களுக்கு தெரியவரும்.

ஜாதககதம்பத்தை படிப்பது எல்லாம் ஏனோ படிக்கிறோம் என்று மட்டும் படிக்கவேண்டாம். என்னுடைய எண்ண ஓட்டத்தில் நீங்கள் இணைந்து இருந்தால் நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு நொடிக்கு நாெடிக்கு உணர்வு பூர்வமாகவே தெரிந்துவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 15, 2018

மாட்டுப்பொங்கல்


வணக்கம்!
          இன்று மாட்டுப்பொங்கல். மாட்டுப்பொங்கல் நமது மாடுகளுக்கு மட்டும் நன்றி செலுத்தும்விதமாக கொண்டாடினாலும் இன்று மாலை நடைபெறும் படையல் என்பது நமது முன்னோர்களுக்கு செய்யும் ஒரு விருந்தாககூட அமையும்.

திதி மற்றும் வருடந்தோறும் செய்யும் தெவசம் எல்லாம் அவர்களுக்கு செய்யும் சடங்காக அமையும். வருடத்தில் மாட்டுப்பொங்கல் அன்று செய்யும் படையல் என்பது அவர்களின் விருப்பட்ட உணவை சமைத்து அவர்களுக்கு செய்யும் ஒரு விருந்தாக கூட அமையும். அவர்களுக்கு வேண்டியதை வைத்து படைத்து அவர்களின் ஆசியை பெற்று நாம் வருடம் முழுவதும் நன்றாக வாழ வழி செய்யும்.

எனக்கு தெரிந்த பல நகரத்து நண்பர்கள் மாட்டுப்பொங்கலை கண்டுக்கொள்வதே கிடையாது. நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே இருப்பார்கள். பல நண்பர்களிடம் பேசினேன் அவர்களும் நாங்கள் செய்வதில்லை என்றே சொன்னார்கள்.

நீங்கள் பல கோவில்களுக்கு செல்லலாம் பல பரிகாரங்களை எல்லாம் செய்யலாம் ஆனால் இப்படிப்பட்ட படையல் செய்யும்பொழுது தான் பெரியளவில் நாம் சாதிக்க முடியும். பெரியளவில் நமக்கு கைகொடுத்து உதவ நமது முன்னோர்களின் ஆசி வேண்டும்.

தற்பொழுது நீங்கள் நினைத்தால் கூட உடனே தயார் செய்து இன்று மாலை நீங்கள் இந்த படையலை செய்து ஆசி வாங்கிவிடலாம். ஒரு சில வீட்டில் அவர்களின் முன்னோர்கள் தெய்வமாக கூட இருப்பார்கள் அவர்களுக்கும் இன்று தான் படையல் செய்வார்கள். ஒரு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 14, 2018

நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
         அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 12, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
         உணவை பற்றி தாங்கள் கூறுவது தினை , வரகு, சாமை , குதிரைவாலி , மற்றும் கம்பு சோளம் ஆகியவையும் அடங்குமா இதை தான் கடந்த இரு மாதமாக உன்கிறேன் இதுவும் சுக்கிரன் காரகத்துவமா தயவு செய்து கேள்வி பதில் பகுதியில் தெரிய படுத்தவும் அடுத்தவர்களுக்கும் உதவும்.
ரவி

தாங்கள் சொன்ன உணவையும் உண்ணலாம். இதனையும் நான் எடுத்து இருக்கிறேன். உணவைப்பற்றி நான் முழுமையாக கூற இயலவில்லை. உணவைப்பற்றி உள்ள தகவல் கடல் போல இருக்கின்றது. இதனை நான் தற்பொழுது தேடி படித்தும் அறிந்தும் வருகிறேன்.

சுக்கிரனுக்கு மட்டும் இல்லை அனைத்து கிரகத்திற்க்கும் உணவு வழியாக சரி செய்ய இயலும். ஒன்பது கிரகத்திற்க்கும் உள்ள உணவையும் நாம் எடுத்துக்கொள்வதும் நல்லது தான். இன்றைய காலகட்டத்தில் நெட்டில் நாம் தேடினால் கூட நல்ல உணவுகளை பரிந்துரை செய்கின்றனர்.

நம்முடைய உடலுக்கு எதனை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது உணவு ஆலோசகரின் ஆலோசனை கண்டிப்பாக தேவையான ஒன்று தான். அவர்கள் கொடுக்கும் ஆலோசனை நம்முடைய ஊட்டசத்தை விரைவில் அதிகப்படுத்திக்கொள்ள உதவும்.

உணவு விசயத்தில் ஒன்றை கண்டுபிடித்து அதனை விற்கவேண்டும் என்ற ஒரு ஆவல் என்னிடம் கிடையாது. உணவு விசயத்தில் நான் தற்பொழுது தான் முறையாக பின்பற்றி வருகிறேன். அதனை எல்லாம் உன்னிப்பாக கவனித்தும் வருகிறேன். எது எப்படி வேலை செய்கிறது என்பதையும் கவனிக்கிறேன். அதனை எல்லாம் உங்களுக்கு இலவசமாக தருகிறேன் கவலைப்படவேண்டாம்.

நீங்கள் தற்பொழுது இருந்தே உங்களுக்கு எது ஊட்டசத்து நிறைந்த உணவு என்று தெரிகிறதோ அதனை எல்லாம் எடுத்துக்கொண்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பெரியளவில் வேலை செய்யும் என்பதை மட்டும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பொங்கல் பண்டிகை


வணக்கம்!
          பொங்கல் பண்டிகையைப்பற்றி ஒன்றை சொல்லவேண்டும் என்று பல வருடங்களாக நினைப்பேன். அதனை சொன்னால் பிறர் ஏற்பார்களாக என்பதையும் கொஞ்சம் ஐயம் இருந்தது. இந்த வருடம் இதனை சொல்லியே தீர்வது என்று சொல்லுகிறேன்.

பொங்கல் பண்டிகை என்றாலே அது சூரியனுக்கு சம்பந்தப்பட்ட ஒன்று தான் அனைவருக்கும் தெரியும். சூரியனோடு சக்தி காலையில் நன்றாக இருக்கும். மதியத்திற்க்கு மேல் அதன் சக்தி குறைந்துக்கொண்டே போகும்.

பெரும்பாலும் பொங்கல் பண்டிகையை காலையில் கொண்டாடுவார்கள். பொங்கல் வைப்பது காலையில் வைத்துவிடுவார்கள். காலையில் வைப்பது சூரியனுக்கு உகந்த ஒன்று.

ஒரு சில தொழிலாளிகள் அவர்களின் வீட்டில் பொங்கல் வைப்பது மாலை வேளையில் வைப்பார்கள். மாலை வேளையில் வைப்பது அது சந்திரனை குறிக்ககூடிய ஒன்றாக இருக்கும். சந்திரனுக்கு வைப்பது போல அவர்கள் செயல்படுவார்கள்.

மாலை வேளையில் பொங்கல் வைத்து அவர்கள் சாமி கும்பிடுவார்கள். மாலை வேளை வந்தாலே அது சந்திரனை குறிக்ககூடிய ஒன்றாகவே இருக்கும். சூரியனுக்கு வைப்பதற்க்கு பதிலாக சந்திரனுக்கு பொங்கல் வைத்து படைக்கி்ன்றனர். இது அவர்களின் வழக்கம் அல்ல அவர்கள் சார்ந்திருக்கும் இனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 11, 2018

மது உடலுக்கு நல்லது


வணக்கம்!
          நாம் பல பேர்களை பார்த்து அந்த அனுபவத்தை எல்லாம் சேகரித்துவிட்டு அதன் பிறகு தான் அந்த கருத்தை ஜாதககதம்பத்தில் எழுதுவது உண்டு. சுக்கிரன் கிரகத்தைப்பற்றி எழுதி அதில் உடல்நிலையைும் பற்றி எழுதினேன். உடல்நிலையில் ஒன்றைப்பற்றி சொல்ல வேண்டும்.

நான் பார்த்தவரையில் மது அருந்துபவர்களை விட மது அருந்தாமல் இருப்பவர்களுக்கு நோய் அதிகம் தாக்குகிறது. மது அருத்துபவர்கள் வாழ்நாள் நீண்டநாள்களாகவே இருக்கின்றது. மது அருந்தாமல் இருப்பவர்கள் இறப்பு வெகு சீக்கிரமாக நடந்து விடுகிறது. 

பல இடத்தில் நான் இதனை பார்த்து இருக்கிறேன். பல மருத்துவர்களிடம் இதனைப்பற்றி கேட்டு இருக்கிறேன். அவர்கள் சொன்னதை வைத்து இந்த கருத்தை தருகிறேன். மாதம் ஒரு முறை அல்லது இரு முறை மது அருத்தினால் உடலுக்கு நன்மையை தான் அதிகம் செய்யும். உடலில் உள்ள கெட்டதை வெளியே தள்ளிவிட்டு உடல் நோய் வராமல் பார்த்துக்கொள்கிறது என்று சொன்னார்கள்.

வாழ்நாள் நீட்டிப்பு செய்ய மது ஒருவருக்கு அதிகம் பயன்படுகிறது என்பதை சொன்னார்கள். நான் மது அருந்தவில்லை எனக்கு உடல்நிலையைப்பற்றி சொன்னவர்கள் ஆறு மாதத்திற்க்கு பிறகு நீங்கள் மது அருந்தவேண்டும் என்று சொன்னார்கள். ஊட்டசத்து நிறைந்த உணவை நன்றாக எடுத்துக்கொண்டு அதன்பிறகு குடிக்கலாம் என்று சொன்னார்கள். இதுவரை நான் குடிக்காமல் தான் இருக்கிறேன்.

மாதத்திற்க்கு ஒன்று அல்லது இரண்டு முறை நாம் மதுவை அளவோடு எடுத்துக்கொண்டால் வாழ்நாளை நீண்டநாளாக கொண்டு செல்லமுடியும் என்பதை பற்றி கேட்டதால் உங்களிடம் சொல்லுகிறேன்.

எனக்கு தெரிந்தவரை முக்கால்வாசி சோதிடர்கள் குடித்து தான் சாவுகின்றனர் என்பதும் தெரிகிறது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தான். எனக்கு தெரிந்த பல சாமியார்கள் வாரம் ஒரு முறை நன்றாக குடிக்கின்றனர். இந்த பதிவை காரணம் காட்டிக்கொண்டு தினமும் நீங்கள் குடித்தால் ஜாதக கதம்பம் பொறுப்பு ஏற்காது. 

பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் குடிக்க ஆரம்பித்தவிட்டனர். பெண்களுக்கு குடிக்க தேவையில்லை. மாதம் ஒரு முறை அவர்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு அவர்களின் உடலை சுத்தம் செய்யும். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் மாதம் ஒரு முறை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 10, 2018

முன்னோர்களுக்கு செய்யும் படையல்


வணக்கம்!
          நமது முன்னோர்களுக்கு செய்யக்கூடிய ஒன்று அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இறந்தவர்களுக்கு நாம் காட்டக்கூடிய நன்றி விசுவாசம் தான் அதிகமாக நம்முடைய மதத்தில் எல்லாம் பரவலாக அதிகமாக இருக்கும். எல்லா மதத்திலும் இதனை கடைபிடித்து வருவார்கள்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி போன்றவற்றை விட அவர்களுக்கு பிடித்த விசயத்தை வைத்து செய்யக்கூடிய ஒன்றை நாம் செய்யும்பொழுது நமக்கு நமது முன்னோர்கள் நல்ல ஆசியை வழங்குவார்கள். அவர்களின் ஆசியை நாம் பெற்றுவிட்டால் நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அனைத்தும் வெற்றி பெற்றுவிடும்.

நமது முன்னோர்களை நினைவுகூறும் ஒரு வகையில் ஒரு விசயத்தை செய்ய வேண்டும். அது நமக்கு சாத்தியப்படக்கூடிய வகையில் விரைவில் வர இருக்கின்றது. வருகின்ற மாட்டுப்பொங்கல் அன்று எல்லா ஊர்களிலும் நடைபெறுகின்ற விசயத்தை சொல்லுகிறேன். நகர்புறத்தில் இதனை செய்வதில்லை என்பதற்க்காக இதனை சொல்லவேண்டியிருக்கின்றது.

மாட்டுப்பொங்கல் அன்று இரவு உங்களின் முன்னோர்கள் இறந்தவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைத்து ஒரு வேஷ்டி அதற்கு சட்டை ஒரு சேலை எடுத்து வைத்து படையலை போட்டு சாமி கும்பிடவேண்டும்.

உதாரணமாக உங்களின் தாத்தா இறந்துவிட்டால் அவர்க்கு ஒரு உணவு பிடித்து இருந்தால் அந்த குறிப்பிட்ட உணவையும் நீங்கள் சமைக்கவேண்டும். அதனை படையலில் வைத்து சாமி கும்பிடவேண்டும்.

மாட்டுப்பொங்கல் மாலை வேளையில் இதனை செய்யவேண்டும். கிராமபுறங்களில் இது நடைமுறையில் இருக்கின்றது. நகர்புறத்தில் இதனை செய்வதில்லை நீங்களும் கண்டிப்பாக இதனை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரனின் பலன்


வணக்கம்!
          உணவைப்பற்றி சொன்னவுடன் ஒருவர் கேள்வி அனுப்பியிருந்தார். சுக்கிரன் பலப்பட உணவில் அசைவ உணவை எடுத்துக்கொண்டால் நல்ல சத்தா அல்லது சைவ உணவை எடுத்தால் நல்லதா என்று கேட்டார்.

சுக்கிரன் பலப்பட சைவ உணவு அல்லது அசைவ உணவு என்பதை விட உங்களுக்கு எந்த உணவு நன்றாக இருக்கின்றது என்பதை பாருங்கள். ஒரு சிலருக்கு சைவ உணவை எடுக்கும்பொழுது நல்ல சத்து நிறைந்ததாக உணர்வார்கள். ஒரு சிலருக்கு அசைவ உணவை எடுக்கும்பொழுது நல்ல சத்து நிறைந்ததாக உணர்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்வாகுக்கு ஏற்றார்போல் ஒரு சில உணவுகள் செயல்படும். அதனை பார்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல சத்து கிடைத்துவிடும். 

எது சத்து நிறைந்தது என்பதை உணர நீங்கள் ஒரு சோதனை செய்து பார்த்தால் உங்களுக்கு புரியும். உடல் களைப்பு ஏற்படாமல் இருக்கவேண்டும். சோர்வு வந்துவிடகூடாது. முடி நரைக்க கூடாது என்று பல சோதனைகள் வழங்குகின்றனர் அதனை எல்லாம் பார்த்து முடிவு செய்யவேண்டும்.

நடைமுறை வாழ்விலும் நிறைய சோதனைகளை செய்து பார்த்துவிட்டு தான் அனைத்தையும் முடிவு செய்யமுடியும். உங்களின் ஆலோசகர்களை கேட்டு இதனை எல்லாம் தெரிந்துக்கொள்ளமுடியும். என்னை சந்திக்கும்பொழுதும் இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள்.

உணவினால் சுக்கிரன் மட்டும் இல்லை அனைத்து கிரகத்தையும் சரி செய்துக்கொண்டு நன்றாக வாழமுடியும். இதற்கு ஆலோசனை கொடுக்கின்ற ஆளைப்பொறுத்த விசயமாக தான் அது இருக்கும். இதனைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து தான் இதனை பதிவில் இடுகிறேன். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
          வீடு வாசல் சுத்தமாக வைத்துக்கொண்டு தன் வீட்டில் சமைப்பதற்க்கு பெண்களுக்கு ஒன்று ஒன்றை கொடுத்து இருக்கின்றார்கள் என்பதற்க்கு நமது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லிருந்தனர். பங்குக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரியான விடை
                பெண்களுக்கு என்று தனியாக சிறப்பான ஒரு இடம் என்பது சுடுகாட்டில் ஒதுக்கியுள்ளனர். ஆண்களுக்கு சுடுகாட்டில் எரிப்பதற்க்கு கட்டையை அடுக்கும்பொழுது எட்டு அடி அடுக்குவார்கள். பெண்களுக்கு எட்டைரை அடி அடுக்குவார்கள்.

பல பகுதியில் இப்படி தான் இருக்கின்றது. சுடுகாட்டில் நடைமுறைப்படுத்தும் சடங்கு என்பது அனைத்தும் விதிப்படி வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்கு என்று எட்டு அடி கட்டையை அடுக்கிறார்கள். 

பெண்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்வதால் அவர்களுக்கு அரை அடி கூடுதலாக ஒதுக்கி அவர்களுக்கு இந்த சிறப்பை கொடுத்திருக்கிறார்கள். என்னங்க இது என்று கேட்கலாம். இது ஒரு பெரிய சிறப்பு என்பது ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நன்றாக தெரியும்.

ஒரு சில இடத்தில் பெண்களை குப்புறபடுக்க வைத்து எரியூட்டுகிறார்கள். இது தவறான ஒன்று. ஆண்களை போல தான் மல்லாக்க படுக்க வைத்து எரித்தால் நல்லது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 9, 2018

கேள்வி?


வணக்கம்!
        உங்களுக்கு வரும் துணைவியார் சரியாக சமைத்தால் உங்களுக்கு உடல்நிலையில் பிரச்சினை வராது என்று சொல்லிருந்தேன். பலர் அதனை ஆதரித்து சொல்லிருந்தனர். உலகத்தில் நன்றாக சமைக்ககூடியவர்கள் ஆண்கள் தான் என்றும் சொல்லிருந்தனர்.

பெண்கள் நன்றாக சமைப்பார்கள் ஆனால் அவர்களுக்கு இருக்கின்ற வெறுப்பை காட்டக்கூடிய ஒரு இடம் சமையல்கூடம். சமைப்பதில் அவர்கள் வெறுப்பை காட்டுவதால் சமையலில் பிரச்சினை வந்துவிடுகிறது.

உண்மையில் இன்றைக்கு அனைவருக்கும் சமையல் தெரியும். யூடிப்பில் பார்த்து அதனை தெரிந்துக்கொள்ளமுடியும். செய்யும் சமையலில் ஒரு ஈடுபாட்டை காட்டினால் கண்டிப்பாக அந்த சமையல் அமிர்தமாக உங்களுக்கு இருக்கும்.

ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் இதற்கு விடையை எனக்கு அனுப்பியுங்கள்.

பெண்கள் சமைப்பதாலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதாலும் அவர்களுக்கு என்று ஒரு சிறப்பான ஒரு நிலையையும் ஒரு இடத்தில் கூடுதலான ஒரு சிறப்பையும் கொடுப்பார்கள். கேள்வி இது தான் எந்த இடத்தில் பெண்களுக்கு விஷேசமான சலுகையை கொடுத்திருக்கிறார்கள் என்பதை எனக்கு தெரியப்படுத்துக்கள். 

சாஸ்திரத்தில் இதனை சொல்லி பல இடத்தில் இதனை பின்பற்றி வருகின்றனர். பெண்களுக்கு விஷேசமான ஒன்றை கொடுத்த இடம் எது என்பதை சொல்லுங்கள். 

பதிலை எனது வாட்ஸ்அப் நம்பரிலும் தெரியப்படுத்தலாம்

வாட்ஸ்அப் எண்  9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 8, 2018

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரனைப்பற்றி எழுதிய கருத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு நல்ல பலனை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் உணவு விசயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதில் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.

சுக்கிரன் உங்களுக்கு வரக்கூடிய துணையை காட்டக்கூடிய ஒன்று. சுக்கிரன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் உங்களுக்கு வரும் மனைவி உங்களுக்கு சரியாக உணவை சமைத்து போடமாட்டார்.

உணவு சமைப்பதில் அதிக அன்பை காட்டக்கூடிய ஒரு நிலையில் இருந்து சமைத்தால் தான் அந்த உணவு உணவாக இருக்காது மாறாக அந்த உணவு உங்களுக்கு அமிர்தமாக இருக்கும். அமிர்தமாக சாப்பிட்டால் உங்களுக்கு உடல் நோய் வராது. 

எந்த உணவையும் சமைப்பதில் தான் இருக்கின்றது. நன்றாக சமைத்து அதனை சாப்பிட்டால் நோய் என்பதும் வராது. ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை என்றால் உங்கள் வீட்டில் சமைக்கும் உணவே உங்களுக்கு விஷமாக தான் இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லை என்றால் நீங்களே சமைக்க கற்றுக்கொண்டு சமைக்க ஆரம்பியுங்கள். கொஞ்ச காலத்தில் அனைத்தும் சரியாகிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 7, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
                      இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு