வணக்கம்!
ஒருவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தால் அவர்க்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏழரைச்சனி ஒருவருக்கு இரண்டாவது சுற்று வரும்பொழுது அதிக பாதிப்பை தரும். இரண்டாவது சுற்று என்பது பெரிய அளவில் நன்மை செய்யும் என்று சொல்லுவார்கள் ஆனால் அனுபவத்தில் பெரிய அளவில் பிரச்சினையை சந்திப்பதும் இந்த காலமாகவே இருக்கின்றது.
ஏழரைச்சனியின் காலத்தில் உங்களுக்கு எந்த வழியில் உங்களின் பிழைப்பு நடக்கின்றதோ அந்த வழியில் முதலில் பிரச்சினையை ஆரம்பிக்கும். உங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் தான் முதலில் கவனத்தை கொண்டு வரும் அதில் பிரச்சினையை கிளப்பி உங்களை பிழைக்க விடாமல் செய்வதில் சனிக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும்.
இதுவரை இராஜாவாக வலம் வந்துக்கொண்டு இருந்தால் சனி அதில் கவனத்தை செலுத்தும். உங்களை அசிங்கப்படுத்தி உங்களை அடுத்தவர் முன்பு தலை குனிய வைக்கும். அடுத்தவர்கள் முன்பு கெத்து காட்டிக்கொண்டு இருந்த நீங்கள் அடுத்தவர்கள் முன்பு தலைகுனிய செய்ய வைத்து நீங்கள் செல்லும்பொழுது உங்களின் மனம் அந்தபாடுபடும் அதனை வார்த்தையால் வெளியில் சொல்லமுடியாது அனுபவத்தில் நடக்கும்பொழுது மட்டுமே அது என்ன என்பது உங்களுக்கு புரிய வரும்.
உங்களுக்கு நோய் என்பது இதுவரை இல்லாமல் இருந்திருந்தால் நோய் வரும். உங்களின் உடலில் உள்ளுக்குள் வலியை கொடுப்பதில் அதிக கவனம் சனி செலுத்தும். உங்களின் உள் உடலில் அதிக வலியை காட்டிவிடும் இதனால் மனக்கவலையை அதிகம் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.
திருமணம் முடிந்து நீங்கள் சந்தாேஷமாக வாழ்ந்திருந்தால் ஏழரைச்சனியின் காலத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகமாக உருவாக்கிவிடும். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பிறரோடு தொடர்புப்படுத்தி பேசுவது போல உங்களை காட்டிவிடும். இருவருக்கும் பிரச்சினை இதனாலே வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாகிவிடும்.
நீங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டு வாங்கிய வாகனம் பழுதாகி உங்களை ஆழ்ந்த கவலைக்குள் கொண்டு சென்றுவிடும். ஒரு சிலருக்கு வாகனம் விபத்து ஏற்பட்டுவிடுவதும் உண்டு. கை அல்லது கால்களில் முறிவு ஏற்படுவதற்க்கு வாய்ப்பையும் ஏழரைச்சனி செய்யும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு