வணக்கம்!
நான் பல இடங்களுக்கு செல்லும்பொழுது நடக்கும் ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லுகிறேன். நான் எந்த இடத்திற்க்கு சென்றாலும் அந்த வந்து ஒரு சிலர் என்னிடம் வந்து நான் காசியில் இருந்து வருகிறேன். இராமேஷ்வரத்தில் இருந்து வருகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பார்கள்.
என்னிடம் உதவி கேட்கும் நபர்களை பார்த்தால் சாமியாராக இருப்பார்கள் அல்லது புரோகிதம் பார்க்கும் ஐயர்களாக இருப்பார்கள். நான் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் என்னிடம் மட்டும் வந்து உதவி கேட்டுவிட்டு நான் கொடுப்பதை பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். பிறர்களிடம் எந்த உதவியும் பெறாமல் சென்றுவிடுவார்கள்.
என்னை பார்ப்பதற்க்கு ஆன்மீகத்தில் இருப்பதற்க்கான எந்த ஒரு வேஷமும் இருக்காது. சாதாரணமானவர்கள் போல் தான் நான் இருப்பேன் ஆனால் என்னிடம் வந்து தான் இப்படிப்பட்ட உதவிகளை கேட்பார்கள். நானும் அவர்களுக்கு தேவையான உதவியை செய்துவிடுவேன்.
ஜாதக கதம்பத்தில் இருந்து வந்த நண்பர்களோடு கூட இப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள். சார் எப்படி உங்களை அடையாளம் கண்டு வந்து கேட்கிறார்கள் என்று கேட்டுள்ளனர்.
நம்மை இயக்கும் அம்மன் மற்றும் குருவின் வேலை தான் இது எல்லாம். நம்மிடம் இருக்கின்றபொழுது அதனை பெறுவதற்க்கு இறைவனே இப்படிப்பட்ட லீலைகளை நடத்துக்கிறான் என்பதை பல காலத்திற்க்கு பிறகு தான் நான் கண்டுக்கொண்டுள்ளேன்.
உங்களிடமும் சக்தி இருந்தால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழம். நீங்களும் அதனை புரிந்துக்கொள்ளலாம். சும்மா வந்து மது அருந்துவதற்க்காக ஒரு சிலர் கேட்பார்கள் அதனை தவிர்த்துவிடுங்கள். அவர்களை நீங்கள் பார்த்தாலே உங்களே புரியும்.
சாமியார்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் வந்தாலே உங்களுக்குள் உள்ள உள்ளுர்ணவு காட்டிக்கொடுக்கும். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்.
மதுரைக்கு நண்பரை சந்திக்க செல்லுகிறேன். நாளை மதுரையில் இருப்பேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு