Followers

Thursday, July 1, 2021

ஆன்மீக அனுபவங்கள் 11


 

வணக்கம்!

ஒரு எளிய பயிற்சியை நாம் மேற்க்கொள்ளலாம் அதுவும் என்ன என்றால் இதுவரை நாம் பார்த்த விசயத்தில் இருந்தே இதனை நாம் தொடங்கலாம். உங்களின் பூஜை அறை அல்லது உங்களுக்கு பிடித்த அமைதியான இடத்தில் அமர்ந்துக்கொள்ளுங்கள். தரையில் அமர்ந்துக்கொண்டு இதனை செய்யலாம்.

ஓம் என்ற மந்திரத்தை உங்களுக்கு தெரியும். ஓம் என்று மட்டும் உங்களுக்குள் சொல்லி பாருங்கள். ஓம் என்று சொல்லுவது உங்களின் வாயில் ஆரம்பித்து அது உங்களின் வயிற்றின் அடி வரை அந்த ஓசை செல்வதும் போல இருக்கவேண்டும். ஓம் என்ற வார்த்தையை நீங்கள் வாயை மூடிக்கொண்டு கூட சொல்லலாம் அப்படி சொல்லும்பொழுது அந்த வார்த்தையை நாம் நன்றாக கவனித்தால் நமது வயிறு வரை செல்லுவதை நீங்கள் உணரமுடியும்.

நான் பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் மூச்சு காற்று உங்களின் அடி வயிறு வரை செல்லும்பொழுது மட்டுமே அது நன்றாக இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லும்பொழுது கூட அது உங்களின் அடிவயிறு வரை செல்லும். இந்த இரண்டும் ஒன்றாகவே வேலை செய்வதை நீங்கள் கவனிக்கமுடியும்.

ஆத்மாவை உணரும் முதல்படியாக இதனை நீங்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கோவிலில் அமர்ந்து நீங்கள் இதனை செய்தால் நல்ல சக்தி நிலவுவதை நீங்கள் உணரலாம். இதனை தொடர்ச்சியாக செய்து வாருங்கள் உங்களுக்குள் நல்ல மாற்றம் நடைபெறுவதை நீங்களே உணரமுடியும். அன்புடன் ராஜேஷ்சுப்பு 9551155800,8940773309
astrovanakam.blogspot.com

Friday, May 21, 2021

செவ்வாய் தசாவில் தலையில் கண்டம்

 
வணக்கம்!
          என்னுடைய அனுபவத்தில் ஒன்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். எனக்கு 9 வயது இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு நடைபெற்றது செவ்வாய் தசா. செவ்வாய் தசாவில் எனக்கு தலையில் அடிப்படும் என்று என்னுடைய ஜாதகத்தை கணித்து எழுதிய சோதிடர் எழுதியிருந்தார். அவர் சொன்னது போலவே எனக்கு செவ்வாய் தசா நடைபெறும்பொழுது தலையில் அடிப்பட்டது அது எப்படி அடிப்பட்டது அதனைப்பற்றி முழுவிபரத்தையும் நமது யூடிப் சேனலில் சென்று பார்க்கவும்.


நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 11, 2021

சிறப்பு அம்மன் யாகம்



 வணக்கம்!
          உலகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது தளத்தின் வழியாக ஆன்மீக முயற்சியின் வழியாக இதனை உலக நன்மைக்காக அம்மனை வைத்து யாகம் செய்ய இருக்கிறோம். கொரானாவின் பாதிப்பை குறைக்கவும் அம்மனிடம் வேண்டுதலை வைத்து சிறப்பு யாகம் நடைபெற இருக்கின்றது. தனி நபர் மற்றும் குடும்பங்களாக இந்த யாகம் நடைபெற இருக்கின்றது. இது முற்றிலும் பொது நன்மைக்காவவே செய்யப்படுகின்றது.

உலக மக்களின் நன்றாக இருக்க அம்மன் துணை கொண்டு இதனை செய்ய போகிறோம். யாகத்திற்க்கு தேவையாக பொருட்களை வாங்குவதற்க்கு நமது நண்பர்கள் விருப்பட்டால் உதவி செய்யலாம். பொது நலனில் நாமும் அக்கறைக்கொண்டு இதனை செய்வதால் இதன் பங்கு உங்களுக்கு கிடைக்கும். உங்களின் பங்களிப்பை பொறுத்து யாகம் எத்தனை நாட்கள் செய்யப்படும் என்பதைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன். யாகம் விரைவில் ஆரம்பிக்கபடும் என்பதால் உடனே காணிக்கையை செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 14, 2021

நல்வாழ்த்துக்கள்


 
வணக்கம்!
          ஜாதககதம்பம் இன்று பனிரெண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. பனிரெண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சிக்கொள்கிறோம். என்னோடு பயணம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். சேனலில் வேலை அதிகம் இருந்த காரணத்தால் குறைவாக பதிவை தருகிறோம். இனிமேல் இந்த பக்கமும் கவனம் செலுத்தி உங்களுக்கு பதிவை தருகிறேன். ஜாதககதம்பத்திற்க்கு எப்படி ஆதரவை தந்தீர்களோ அது போல நமது சேனலுக்கும் ஆதரவை தரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 14, 2021

லாட்டரி யோகம்

 வணக்கம்!

         நமக்கு எவ்வாறு லாட்டரி யோகம் வரும் என்பதைப்பற்றி நமது வீடியோ பதிவில் சொல்லிருக்கிறேன். நமது சேனல் Rajeshsubbu சேனலில் சென்று பார்க்கவும். 

https://youtu.be/3RvLA_WCnS0


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 15, 2021

விரைய சனி

 
வணக்கம்!
          விரைய சனியால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. விரைய சனியில் உங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை கொடுக்கும் அதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம் என்பதைப்பற்றி ஒரு வீடியோ தந்திருக்கிறேன். கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
இதுவரை நமது சேனலைசப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் உடனே சப்ஸ்கிரைப் செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 13, 2021

பிரம்மஹத்தி தோஷம்

 

வணக்கம்!

          பிரம்மஹத்தி தோஷத்தைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன். பிரம்மஹத்தி தோஷம் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்

https://youtu.be/524MWoN7GlM


நன்றி

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Thursday, February 4, 2021

ஆரா

 வணக்கம்!

          ஆராவைப்பற்றி நாம் வெளியிட்ட வீடியோவில் நிறைய நண்பர்கள் தனது சந்தேகங்களை கேட்டனர். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நாம் ஒரு வீடியோவை வெளியிட்டோம் அதனை நாம் பார்ப்பதற்க்கு கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/PEfz_GEmtj4

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 30, 2021

ஜென்ம சனி

 வணக்கம்!

          ஒருவருக்கு ஜென்மசனி எப்படிப்பட்ட பாதிப்பை தரும் என்பதைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்து இருக்கிறேன்.ஜென்மசனியின் பாதிப்பு மற்றும் அதற்க்கு மேற்க்காெள்ளும் பரிகாரத்தையும் சொல்லியுள்ளேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.

https://youtu.be/p0qcNc2lE6I

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீகவாதி



 வணக்கம்!

         எப்பேர்பட்ட கஷ்ட காலத்திலும் ஆன்மீகவாதியாக இருக்கும் நபர்கள் அந்த கஷ்ட காலத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியை இறைவன் ஏற்படுத்திக்கொடுப்பார். ஆன்மீகவாதியாக இல்லாத நபர்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்கு அதிக கஷ்டம் வரும் என்று சொல்லுவது உண்டு ஆனால் அந்த கஷ்டத்தை கொடுத்து அதில் இருநது பல அனுபவங்களை கொடுப்பதற்க்கு தான் அந்த கஷ்டமே வருகின்றது.

ஆன்மீகவாதியாக இருந்தால் ஒரு பெரிய கஷ்டம் வரும்பொழுதே அதற்க்கு தீர்வாக ஒன்றை அனுப்பிவைக்கும். உதாரணமாக ஆன்மீகவாதிக்கு  ஏழரைச்சனி ஆரம்பித்தால் அந்த நபர்க்கு ஆஞ்சநேயருக்குரிய மந்திரத்தை ஜெபிக்க வைக்கும் ஆஞ்சநேயரை வழிபடவைக்கும். ஒரு சிலருக்கு பைரவரை வழிபடவைக்கும். ஒரு பிரச்சினை வருகின்றது என்பதை அறிந்து அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்ற வழியையும் கொடுத்துவிடும்.

ஆன்மீகவாதியாக இருப்பதில் என்பதை விட ஆன்மீகத்தை கடைசி வரை கொண்டு செல்ல என்ன வழி என்பதையும் நாம் அறிந்துக்கொண்டு இருக்கவேண்டும். ஒரு சிலர் இடையில் விட்டுவிடுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சிலரின் கர்மா அப்படி இருக்கலாம் ஆனால் தன்னுடைய மன உறுதி வழியாக எந்த சூழ்நிலையிலும் அதனை விட்டுவிட கூடாது இதில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒருவர் கடைசி வரை ஆன்மீகத்தை தன்னோடு இணைத்துக்கொண்டு இருந்தால் மட்டுமே அவர் இந்த ஜென்மம் எடுத்தற்க்குரிய நோக்கம் நிறைவேறும். ஆன்மீகத்தில் எந்தளவுக்கு இருப்பதை பொறுத்து அது மோட்சமாக இருக்கலாம் அல்லது மறுஜென்மம் எடுக்கலாம்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு கோயம்புத்தூர் வர இருக்கின்றேன்.  கோயம்புத்தூர் பகுதியில் சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 9551155800,8940773309

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 14, 2021

நல்வாழ்த்துக்கள்

 


வணக்கம்!

          அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல அம்மனிடம் பிராத்தனை செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு