Followers

Thursday, March 31, 2016

ராகு பலன்

ணக்கம்!
          ஒருவருக்கு ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு அந்த நோயை குணப்படுத்த மருந்து கொடுத்தால் அந்த மருந்தால் மேலும் ஆபத்தை சந்தித்தால் அவருக்கு ராகு கிரகம் சரியில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.

இன்றைய காலத்தில் ஒருவருக்கு நோய் வரக்கூடாது என்பது தான் நமது பிராத்தனை ஆனாலும் காலசூழல் காரணமாக நமக்கு நோய் வருகின்றது என்றாலும் அந்த நோய்க்கு மருந்து எளிதாக கிடைக்கவேண்டும். குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் நாம் அந்த மருந்தை சாப்பிட்டால் நமக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு ராகு கிரகம் இரண்டாவது வீட்டில் இருக்கும். அந்த கிரகம் ஒரு சில நேரத்தில் வில்லங்க வேலையை செய்துவிடும் நாம் ஏதோ ஒரு வியாதிக்கு மருந்தை எடுத்தால் இந்த ராகு அந்த மருந்தை விஷமாக மாற்றிவிடும்.

ஒரு சிலர் இறந்துக்கூட போய் இருக்கிறார்கள். ராகு மற்றும் கேது விஷத்தை உடலில் செலுத்தவதில் வல்லவர் என்பதால் இதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          நீங்கள் உங்களில் ஊரில் தொழிலில் நசிந்த வியாபாரிகள் தொழில் அதிபர்களை பார்த்தால் அவர்கள் தொழில் நடத்திய காலக்கட்டத்தில் அவர்களின் வேலையாட்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுத்து இருக்கமாட்டார்கள்.

சம்பளம் கொடுக்காதற்க்கும் அவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்ததற்க்கும் என்ன காரணம் என்று கேட்கிறீர்களாக இருக்கின்றது. ஒருவர் தனக்கு வேலை பார்த்தால் அவர்களுக்கு சம்பளம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.

சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினால் சனிக்கிரகம் உங்களுக்கு பெரிய சரிவை கொடுத்துவிடுவார். தொழிலாளி மற்றும் தொழில்களுக்கு எல்லாம் காரத்துவம் சனிக்கிரகத்தின் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் தொழிலாளியை ஏமாற்றினால் சனி கிரகம் உங்களின் தொழிலில் கைவைத்துவிடுவார். நஷ்டத்தை சந்திக்க இந்த ஒரு காரியம் போதுமான ஒன்று அதனால் நீங்கள் தொழிலில் உங்களின் தொழிலாளிக்கு ஒழுங்காக சம்பளம் கொடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

என்னை மாற்றிய வார்த்தை


ணக்கம்!
          வாழ்வில் நினைத்து பார்த்தால் வாழுகின்ற வாழ்க்கை கொஞ்சநாள் தான் இந்த வாழ்வில் நாம் என்ன செய்தோம் என்று கடைசிநேரத்தில் சிந்தித்து பார்த்தால் கண்டிப்பாக அதில் முக்கால்வாசி பேருக்கு திருப்தி என்பது இருக்காது. வாழ்வை வீணடித்துவிட்டோம் என்று நினைக்கதோன்றும்.

நம்மால் எத்தனை நிகழ்வை நாம் நடத்தி இருப்பாேம் எத்தனை பேருக்கு நம்மால் உதவமுடிந்தது என்று நினைத்து பார்க்கும்பொழுது அதில் ஒன்றும் இல்லை என்றால் வெறுப்பு வந்துவிடும். 

ஒரு சின்ன காரியம் நடைபெறுவதற்க்கு கூட நாம் பல தடைகளை பிறர்க்கு வழங்கி இருப்போம். நாம் எதுவும் உதவவேண்டியதில்லை அந்த இடத்திற்க்கு சென்றால் ஒரு காரியம் நடைபெற்று இருக்கும் ஆனால் நாம் செல்லாமல் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் அந்த காரியம் நடைபெறாமல் போய் இருக்கும்.

மேலே சொன்னது நான் உங்களுக்கு சொல்லவில்லை நான் அப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருந்தேன். இந்த உலகம் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக படைத்தும் இருக்கின்றது நமக்கு கற்றுக்கொடுக்கவும் ஆளை அனுப்புகிறது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு பெரியவர் ஒருவர் நிறைய வேலையை இழுத்துபோட்டு செய்துக்கொண்டிருப்பார். அவரிடம் நான் உங்களுக்கு தான் எல்லாம் செட்டிலாகிவிட்டதே நல்லதானே இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் இது எல்லாம் தேவையா என்று கேட்டேன். அவர் என்னிடம் ஒன்றைச்சொன்னார் அதாவது இந்த பூமிக்கு வந்துவிட்டோம் ஏதோ நம்மால் ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டும் அல்லவா அதனால் செய்கிறேன் என்றார். உண்மையில் என்னை செருப்பால் அடித்து போல் இருந்தது.

அவர் சொன்ன நாளிலில் இருந்து இன்று வரை நான் ஏதாவது ஒன்றை லாபநோக்கின்றி நல்லதற்க்காக செய்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுக்கும் இது உதவும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 30, 2016

ராகு பலன்

ணக்கம்!
          ராகு பலத்தை இரவு நேரத்தில் நாம் பார்த்து வருகிறோம். காலையில் நாம் பார்த்த ஒரு மாதிரியான தசா நடைபெற்று வரும்பொழுது என்ன நடக்கும் என்பதைப்பற்றி பார்த்தோம். ராகு தசா ஒரு குடும்பத்தில் நடந்தது என்றால் ஒரே திருட்டு சம்பந்தமான விசயம் நடக்கும். பொருட்கள் திருடுபோகும். 

நம்ம ஆட்கள் கஷ்டப்பட்டு உழைத்து மேலே வருவார்கள். ராகு தசா வரும் கொஞ்சம் கையில் பணம் இருந்தால் தான் போதுமே நம்ம ஆட்களுக்கு பல வேலைகள் வந்துவிடும். இவர்கள் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். 

இவர்கள் ஏதாவது ஒரு கம்பெனி நடத்திக்கொண்டு இருப்பார்கள். அந்த கம்பெனியை கவனிக்க ஆள் இல்லாமல் கம்பெனியில் வேலை பார்க்கும் ஆட்களே அந்த கம்பெனியில் உள்ளவற்றை திருட்டுதனமாக விற்றுக்கொண்டு இருப்பார்கள்.

ராகு தசா நடக்கிறது கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள் என்று சோதிடர்காரன் சொல்லுவான் சோதிடக்காரன் பேச்சை கேட்பதற்க்கு அவர்களின் மூளை தயாராக இருக்காது. அழிந்து ஒன்றும் இல்லாமல் தெருவுக்கு வரும்பொழுது தான் அப்பொழுதே சொன்னான் அந்த சோதிடக்காரன் என்பார்கள்.

ராகு தசா மற்றும் ராகு பலம் உங்களின் ஜாதகத்தில் இருக்கும்பொழுது கொஞ்சம் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் கவனியுங்கள் அதுவே உங்களை பாதுகாக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுகிறேன். ஒருவர் எனக்கு தெரிந்தவர் இருந்தார். அவர் நிலத்தில் ஒரு வைரவர் கோவில் இருந்தது. வைரவர் கோவில் என்றால் ஒரு மரம் தான். அந்த மரத்தில் வைரவரை கோவிலாக கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வணங்கிவந்தனர்.

மரம் கொஞ்சம் அவரின் விவசாய நிலத்தில் இருந்தது. இவர் அந்த மரத்தை வெட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வந்து கேட்கும்பொழுது உங்களுக்கு புதிய கோவில் கட்டி தருகிறேன் என்று சொல்லிவிட்டார். 

ஒவ்வொரு வருடங்களாக சென்றது ஆனால் கோவிலை மட்டும் கட்டவே இல்லை. அவர்களை ஏமாற்றிவிட்டார். அவர்களும் கேட்டுப்பார்த்தார்கள் கோவிலை கட்டிதாருங்கள் என்று கேட்டார்கள். இவர் அதனை செய்யவே இல்லை.

காலங்கள் சென்றது தன் கடைசி காலத்தில் ஏதோ நாய் ஒன்று என்னை கடிக்கவருகின்றது என்று சொல்லி புலம்பஆரம்பித்தார். கொஞ்சநாளில் அவர் இறந்தார். அவரின் வாரிசுகள் இன்றுவரை ஒரு நல்ல வேலையில் அமரமுடியவில்லை ஒரு தொழில் கூட செய்யமுடியாமல் இருக்கின்றனர். அவர்களின் வாரிசுகளிடம் நான் சொல்லிப்பார்த்தேன் கேட்பது போல தெரியவில்லை.

விதி அவர்களை சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது நாம் சொல்லி புரியவைக்கமுடியாது. காலம் சென்றவுடன் அவர்களுக்கு ஒரு நல்ல தசா வந்து திருந்தி இதனை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பலன்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செவ்வாய் கிரகத்தின் அருள் இல்லை என்றால் அதிலும் ஆண்களாக இருந்தால் அவன் ஆண்பிள்ளை என்றே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இருப்பான்.

செவ்வாய் கிரகத்தின் வலிமை இருந்தால் தான் ஆண்கள் அழகாவும் ஆண்மைதன்மையோடு இருப்பார்கள். செவ்வாயின் அருள் இல்லை என்றால் அவனின் செயல் கொஞ்சம் பெண்மை தன்மையாக இருக்கும்.

செவ்வாய்கிரகம் என்றாலே போர்கிரகம் தானே. இன்றைய காலத்தில் எங்கு போர்க்கு செல்லுகின்றார்கள் தெருவில் சண்டை போடுவதை வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.  ஆண்கள் எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி என்று சண்டை போடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் கிரகத்தின் அருள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளலாம்.

இன்றைக்கு பல ஆண்களுக்கு எல்லாம் செவ்வாய் கிரகத்தின் அருள் என்பது துளியும் இல்லாமல் இருக்கின்றனர். எழுந்து உட்காருவது கூட கடினம் என்று சொல்லுபவர்களாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் கூட பல வீட்டில் சாமியார் மாதிரி தான் இருக்கின்றனர். செவ்வாய் வழிபாட்டை விட்டுவிட்டு வேறு வழிபாட்டிற்க்கு சென்றதால் இப்படி நடந்து இருக்கின்றது.

ஒரு சில பெண்களுக்கு செவ்வாயின் வலிமை அதிகமாக இருக்கின்றது. ஆண்களை போல் சண்டை போடுபவர்களாக இருக்கின்றனர். எது எப்படியே செவ்வாய் கிரகத்தின் வலிமை இருந்தால் ஒரு நல்ல ஆண்தன்மை உள்ளவன் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஒரே மாதிரியான தசா


ணக்கம்!
          ஒரு சில நண்பர்களின் குடும்பத்தில் ஒருவரைப்போல் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான தசா நடைபெறும். அவர்களுக்கு வரும் பலனும் சமமான பலனாக வரும்.

ஒருவருக்கு குரு தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரின் குடும்பத்தில் நான்கு நபர் இருந்து மூன்று நபர்களுக்கு குரு தசா நடந்தால் அந்த ஊரில் அந்த குடும்பத்தை சாமியார் குடும்பம் என்று தான் அழைப்பார்கள்.

அனைவருக்கும் குரு தசா என்கிறபொழுது வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் கவனம் ஆன்மீகத்தை நோக்கி தான் இருக்கும். பெரும்பான்மையான தசாவாக இருக்கின்றபடியால் இது நடக்கின்றது. இன்றைய காலத்தில் குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சுற்றபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களின் அனைவருக்கும் ஏறதாழ இப்படிப்பட்ட ஒரே மாதிரியான தசா நடைபெறும்.

ஒரு குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கி இருக்கின்றது என்றால் பெரும்பாலானவர்களுக்கு சனி தசா நடந்துக்கொண்டு இருக்கும். அவர்கள் அனைவரும் சேர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு மாதிரியான பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.

ஒரு குடும்பத்தின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் பெரும்பாலான கிரகங்கள் ஒரே மாதிரியாக அமைந்து இருக்கும். நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தசாவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருவிழா காலம்

ணக்கம்!
          பல ஊர்களில் திருவிழா காலம் இது. திருவிழா காலம் என்பதால் இந்த காலத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்றால் இந்த விழாவில் பங்கேற்பது மூலமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

எந்த காலத்திலும் கடவுளை தரிசனம் செய்தாலும் திருவிழா காலத்தில் நாம் தரிசனம் செய்தால் கூடுதல் சக்தி நமக்கு கிடைக்கும். திருவிழா காலங்களில் நீங்கள் கடவுளின் ஊர்வலம் செல்லும்பொழுது அதனை தூக்குவது அல்லது இழுப்பது போன்ற காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம். தெய்வங்களின் புறப்பாடு இருக்கும் புறப்பாடு சமயத்தில் நீங்கள் கலந்துக்கொண்டு அதில் பங்குக்கொள்ளலாம்.

பாக்கியஸ்தானத்தைப்பற்றி நாம் பார்த்து இருக்கிறோம் அதில் பாக்கியஸ்தானம் பலப்பட்டால் நமக்கு வரும் தடைகள் அனைத்தும் விலகும். பாக்கியஸ்தானத்திற்க்கு திருவிழாவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது கூட பாக்கியஸ்தானம் வலுபெறும். 

திருவிழா காலங்களில் தேர்திருவிழா என்று ஒன்று இருக்கும். பெரும்பாலான பெரிய கோவில்களில் இந்த தேர்திருவிழா நடைபெறும். தேர்திருவிழாவில் கலந்துக்கொண்டு தேரை இழுங்கள். நல்ல புண்ணியம் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 29, 2016

ராகு பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்பது பற்றி இரவில் பார்த்து இருக்கிறோம். ராகு என்ன சார் பெரிய கிரகமாக என்று கேட்கலாம். உண்மையிலேயே பெரிய கிரகம் தான். இதனை அவ்வளவு எளிதில் நாம் எடை போட்டுவிடமுடியாது.

ராகுவின் பலத்தை நாம் சோதிடத்தில் கூட கணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.  ஏதோ கணித்து சொல்லுகிறோம் அவ்வளவு தான். உண்மையிலேயே அது அடிப்பதை கண்டுபிடிப்பது எளிதான காரியம் இல்லை.

ஒரு சில நண்பர்களுக்கு நான் சொல்லுவேன். இந்த விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லிவிடுவேன் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். கொஞ்ச நாளில் நான் எதனை சொல்லி அனுப்பி விசயத்தில் அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். நான் ராகுவை வைத்து அந்த பலனை சொல்லியிருப்பேன்.

ஒவ்வொருவருக்கும் நான் சொல்லுவதை கூர்ந்து கவனித்துவிட்டு அந்த விசயத்தில் கவனமாக எடுத்துக்கொண்டு வழியை தேடிக்கொள்ளுங்கள்.கவனம் குறைந்தால் ராகு உங்களை சாப்பிட்டுவிடும். எல்லாவற்றிக்கும் நான் சொல்லிருப்பேன். ராகு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் ராகுக்கு என்று தனியாக சொல்லுவேன் அதனை செய்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாநாதன்



ணக்கம்!
          ஒரு சில பேரை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஊரில் அவன் எந்த வேலைக்கும் சரியில்லை என்பார்கள். அவன் ஒரு மோசமான ஆள் என்று சொல்லுவார்கள். எந்தளவுக்கு திட்டவேண்டுமோ அந்தளவுக்கு திட்டி இருப்பார்கள்.

அவனுக்கும் ஒரு வாய்ப்பை கடவுள் கொடுப்பார். ஏதாவது ஒரு தசா வந்து அவனை தூக்கி நிறுத்திவிடும். ஊரே அவனின் பேச்சை கேட்கிற அளவுக்கு இருக்கும். இது எல்லாம் எப்படி என்றால் அவன் மோசமான காலகட்டத்தில் அவனுக்கு மோசமான தசா நடந்து இருக்கும். ஒரு நல்ல தசா வந்தவுடன் அவனின் செயல் மாறிவிடும்.

கிரகங்கள் ஒருவனை தூக்கி நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவனை யார் தடுத்தலாம் அவனின் வெற்றியை நிறுத்தமுடியாது. கிரகங்களின் வலிமை அப்படிப்பட்டது.

அனைவருக்கும் தசாநாதன் வேலை செய்வான் ஆனால் அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதை தான் நாம் பார்க்கவேண்டும். வேலை செய்கிறான் என்றால் ஒன்று அடித்து கீழே தள்ளவேண்டும் அல்லது உயர்த்திக்கொண்டு இருக்கும். ஒரு சிலருக்கு பொதுவில் இருந்துக்கொண்டு மவுனம் சாதிப்பார்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் தசாநாதன் எப்படி சென்றுக்கொண்டு இருக்கிறான் என்று பாருங்கள். அதாவது எந்த வீட்டில் அமர்ந்து செல்லுகிறான். தசாநாதனுக்கு எப்படிப்பட்ட கிரகங்களின் பார்வை கிடைக்கிறது என்று பாருங்கள். மறைவு வீட்டில் இருந்து தசாநாதன் தசாவை நடத்துகிறானா என்று பாருங்கள். இதனைபார்த்துவிட்டு அதன் பிறகு எப்படி உங்களின் வாழ்வு வேண்டும் என்பதை பாருங்கள். அதற்கு தசாநாதன் ஒத்துழைப்பு இருக்கின்றதா என்று பாருங்கள். 

உங்களுக்கு தசாநாதன் ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தசாநாதனுக்கு ஏதாவது பரிகாரம் செய்யமுடியுமா என்று பாருங்கள். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் தசாநாதனின் காரத்துவம் காட்டும் விசயத்தில் உங்களின் மனதை செலுத்துங்கள். ஒரளவு தசாநாதன் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 28, 2016

ஜாதகத்தின் தலைவன்

ணக்கம்!
          நாம் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை சோதிடத்தில் பத்தாவது வீட்டை வைத்து தான் சொல்லவேண்டும். உண்மையில் பத்தாவது வீட்டை மட்டும் வைத்து தொழில் இது தான் என்று ஒருவருக்கு சொல்லி அவர் அந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் பெருமையான ஆட்கள் தொழிலில் தோல்வியை தான் சந்திப்பார்கள். 

பொதுவாகவே சோதிடத்தைப்பொறுத்தவரை எல்லாம் கிரகங்களும் எல்லா வீடுகளும் வேலை செய்தாலும் தசாநாதனின் வேலை அதிகமாக இருக்கும்.தசாநாதன்  தலைவர் போல் செயல்பட்டுக்கொண்டு இருப்பார்.

ஒருவருக்கு ஒரு தசா வேலை செய்துக்கொண்டு இருந்தால் அந்த தசாநாதன் யார் என்பதை பார்த்துவிட்டு அவரின் காரத்துவம் உடைய வேலைகளில் இறங்கினால் தோல்வி என்பது இருக்காது. வெற்றியை எப்படியும் தந்தே தீரும்.

உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் தசாநாதன் யார் என்பதை பார்த்துவிட்டு அவரின் காரத்துவம் உடைய காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குருவின் அருள்


வணக்கம்!
          நமது ஜாதககதம்பத்திற்க்கு வரும் நண்பர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக குரு கிரகத்தின் அருள் கொஞ்சமாவது இருக்கும். குரு கிரகத்தின் அருள் இல்லாமல் கண்டிப்பாக ஜாதககதம்பத்தை படிக்கவே முடியாது.

பல நண்பர்கள் தற்பொழுது தான் இந்த பிளாக்கை படிக்க நேர்ந்தது இது நாள் வரை எனக்கு தெரியவில்லை என்று சொல்லியுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் தற்பொழுது தான் குருவின் அருள் கிடைத்து இருக்கின்றது என்று அர்த்தம்.

இதற்கு முன்னால் நெட்டில் உட்கார்ந்துக்கொண்டு எதையோ படித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு தற்பொழுது தான் இந்த தளம் பற்றி தெரிந்தது என்று சொல்லியுள்ளனர். இந்த தளம் ஏற்கனவே எங்களுக்கு தெரிந்து இருந்தால் எப்பொழுதே தன்னை ஒழுங்குபடித்துக்கொண்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

எப்படியோ வந்துவிட்டீர்கள் இனிமேலாவது உங்களை மேம்படுத்திக்கொள்ளும் வழியில் கவனம் செலுத்துங்கள். ஒரு சிலருக்கு படிக்க மட்டும் அருள் கிடைக்கும் அதன் பிறகு எதையும் செய்யாமல் போய்விடுவார்கள் அப்படி இல்லாமல் குரு கிரகம் எதை எல்லாம் காரகம் காட்டுகிறதோ அதனை எல்லாம் செய்ய தொடங்குங்கள்.

இந்த பிறவியில் கிடைத்த அற்புதவாய்ப்பை தவறவிடாமல் செய்ய தொடங்கினாலே போதும். என்ன கிடைக்கும் என்பதை நான் சொல்லதேவையில்லை அது கண்டிப்பாக உங்களுக்கு கிடைத்தே தீரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 27, 2016

ராகு பலம்


வணக்கம்!
          ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அந்த வீட்டில் உள்ளவர்களின் வயதானவர்கள் மற்றும் வாயில்லா ஜீவராசிகள் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் இதனைப்பற்றி நான் ராகு தசா எழுதும்பொழுதே சொல்லிவிட்டாலும் ஒரு சிலர் அலட்சியமாக இருந்துவிடுவார்கள் என்பதால் மீண்டும் மீண்டும் இதனை சொல்லுகிறேன்.

ராகு தசாவில் எப்படியும் உயிரை காவுவாங்காமல் விடாது. நம்மால் பிறரின் உயிர் பிரிவதற்க்கு நாம் ஒரு காரணமாக இருக்ககூடாது என்பதால் சொல்லுகிறேன். ராகு தசா ஒருவருக்கு நடந்தால் அவர்கள் விளிப்புடன் இருங்கள்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் கொஞ்சம் எடுத்து பாருங்கள். அதாவது வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் யாருக்காவது ஒருவருக்கு ராகு தசா நடந்தால் உங்களின் சோதிடர்களை அணுகி அதற்கு பரிகாரத்தை கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை செய்துவிடுங்கள்.

எப்பொழுதுமே நம் ஆட்கள் காரியம் முடிந்தபிறகு தான் சோதிடத்தை எடுத்து ஆராய்வார்கள். சோதிடம் என்ற ஒன்று இருப்பதே முன்கூட்டியே தெரிந்துக்கொள்வதற்க்காக தான். உங்களின் ஜாதகத்தை எடுத்து ஒவ்வொன்றையும் தெரிந்துக்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில்கள்


வணக்கம்!
          எத்தனையோ சாமியார்கள் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருந்துள்ளனர். தற்பொழுதும் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். நீங்கள் ஒன்றை மட்டும் கவனித்தால் இதில் உள்ள உண்மை புரியும்.

இதுவரை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் கோவில்கள் மட்டுமே இருந்து இருக்கின்றது. பல கோடி சாமியார்கள் வந்துவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் சிலகாலம் தான் இருப்பார்கள் அதோடு போய்விடுவார்கள் காலம் காலமாக கோவில்கள் மட்டுமே இருக்கின்றது.

சாமியார்களிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சாமியார் வழியை சொல்லலாம் நான் தான் கடவுள் என்னை மட்டுமே வணங்குங்கள் என்று சொன்னால் அங்கு தான் பிரச்சினை வரும்.

ஆன்மீகத்தில் உள்ளவர்களை சந்தியுங்கள் அதோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யுங்கள். கோவில்களில் உள்ள இறைவனை தரிசனம் செய்யும்பொழுது நீங்கள் மேம்படலாம். கோவில்களில் உள்ள சக்தி உங்களின் உண்மையான இயல்புக்கு கொண்டு செல்லும்.

திருச்சிக்கு இன்று வருகிறேன். திருச்சியில் உள்ளவர்களை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 26, 2016

ராகு பலம்


ணக்கம்!
          இராகு பலத்தைப்பற்றி பார்க்கலாம். இராகு என்றாலே பாம்பு கிரகம் தானே. நம்முடைய அனுபவத்தையே தருகிறேன். நான் வளர்ந்தது எல்லாம் கிராமபுறங்களில் தான். கிராமபுறங்கள் என்றாலே பாம்புக்கு குறைவு இருக்காது. 

இளம்வயதில் நமக்கு சோதிடத்தைப்பற்றி எல்லாம் தெரியாது. நான் ரொம்ப மோசமான காட்டுபகுதியாக இருக்கும் இடத்திற்க்கு எல்லாம் சென்று இருக்கிறேன். அங்கு எல்லாம் பாம்பு என்பது ராஜ்ஜியமாக தான் இருக்கும். அங்கு சென்றப்பொழுது எல்லாம் என்னை பாம்பு கடித்து கிடையாது.

கிராமபுறங்களில் மிகவும் சுத்தமாக இருக்கும் இடத்தில் நான் ஒரு நாள் இருக்கும்பொழுது பாம்பு என்னை கடித்துவிட்டது. எங்களின் ஊரில் எல்லாம் பாம்பு கடித்தால் ஒரே தீர்வு மந்திரிப்பது மட்டுமே. ஒரு பாம்புக்கு மந்திரப்பவரிடம் சென்று காட்டினார்கள். அவர் ஒரு அரைமணி நேரத்திற்க்கு மந்திரித்தார் அதன் பிறகு வீட்டுக்கு செல்ல சொல்லிவிட்டார். நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கிராமபுறங்களில் எல்லாம் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றுவிடுவார்கள். எனக்கும் அப்படி தான் சாேதிடம் பார்க்க எனது அம்மா சென்றார். சோதிடர் சொல்லிருக்கிறார் ராகு இவருக்கு தற்பொழுது சரியில்லை அதனால் பாம்பு கடித்திருக்கிறது என்று சொல்லிருக்கிறார்.

விதித்தால் பாம்பு கடிக்கும் அல்லது மிதித்தால் பாம்பு கடிக்கும். நான் மிதிக்கவில்லை ஆனால் விதித்ததால் எனக்கு பாம்பு கடித்தது.  ராகு பலம் என்பது இது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் பிறர்களை விட ஒரு ஆசிரியர்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. இதனை இன்றைய காலத்திலும் முக்கால்வாசி பேர் நல்லதாக செயல்புரிந்துள்ளார்கள். ஒரு சிலர் மட்டும் இதில் தவறாக இருக்கின்றனர்.

பல கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் வட்டி தொழிலை செய்பவர்களாக இருக்கின்றனர். வட்டி விடுவது தவறு என்று நான் சொல்லவில்லை. எல்லா தவறும் ஏதாே ஒரு கிரகத்தால் வந்தாலும் ஆசிரியர்கள் இதனை செய்வது தான் கொஞ்சம் தவறுதலாக இருக்கின்றது.

பல ஆசிரியர்களின் குடும்பங்கள் உருபடவில்லை அவர்களின் வாரிசுகள் சரியில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கின்றதை நான் பார்த்து இருக்கிறேன். இன்றைய காலத்திலும் பல ஆசிரியர்கள் இந்த தொழிலை செய்கின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை ஒழுங்காக நடத்துவதும் இல்லை. அதனாலும் அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது.

கடவுள் ஒரு நீதிமான் என்று சொல்லவில்லை. இதனை எல்லாம் அவர் பார்த்துக்கொண்டு இருந்தால் அவர் பையித்தியமாக மாறிவிடுவார். இயற்கையான ஒரு விதி  இதனை எல்லாம் கவனித்து தீர்ப்பை வழங்குகிறது. செய்கின்ற வேலையை ஒழுங்காக செய்யவேண்டும் என்பது விதி அதனை செய்யவில்லை என்றால் அது தான் பிரச்சினை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 25, 2016

ராகு பலம்

ணக்கம்!
          ராகு தன்னுடைய தசாவில் அதிகம் சூதாட்ட வழியில் அதிகம் பணத்தை கொடுப்பவரா இருப்பார். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களின் ஜாதகத்தை பார்த்து ராகு தசாவாக இருந்தால் இதனை கொஞ்சம் செய்து பாருங்கள் என்று சொல்லுவது உண்டு.

ராகு கிரகம் ஒரு சில நேரத்தில் திடீர் பணவரவை கொடுத்துவிடும். தமிழ்நாட்டில் சூதாட்டம் இல்லை என்று நினைக்கிறேன். வெளிநாட்டில் இது நடைபெறுகிறது என்று சொல்லுவார்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நான் சொல்லுவது உண்டு.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு ராகு பலம் இருக்கும். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தில் இதுபோல உள்ள சூதாட்ட விளையாட்டில் பணத்தை போட்டு பாருங்கள். அதன் வழியாக ஒரு பெரிய பணம் கிடைக்க ராகு வழி செய்யும்.

வெளிநாட்டு நண்பர்கள் அனைத்தை பணத்தையும் போட்டுவிடாதீர்கள். நம் நாட்டில் டீ செலவு செய்வது போல் செய்துக்கொள்ளுங்கள். அதில் இருந்து ஏதாவது பணவரவு இருக்கும். ராகு பலத்தை பொறுத்து இது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செல்வவளம் :: தைலக்குளியல்


ணக்கம்!
          வெள்ளிக்கிழமை மதியநேரத்தில் தைலகுளியல் குளிக்க சொல்லிருந்தேன். பழைய பதிவில் இதனைப்பற்றி நாம் பார்த்து இருக்கிறோம். இதனை இதுவரை எத்தனை பேர் கடைபிடித்து வருகின்றீர்கள் என்பது தெரியவில்லை மீண்டும் இந்த பதிவை எழுத ஒரு சில நண்பர்கள் காரணமாக இருந்தனர். அவர்கள் இதனை கடைபிடித்து நல்ல நிலைக்கு வந்ததாக சொன்னார்கள்.

வெள்ளிக்கிழமை மதியத்திற்க்கு பிறகு ஏதாவது ஒரு தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து விட்டு கொஞ்சம் நேரம் சென்றபிறகு குளித்துவிடுங்கள். தைலத்தை பொறுத்து அது தலைக்கும் தேய்த்து குளிப்பதாக இருந்தால் குளிக்கலாம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி செய்து வந்தால் கொஞ்ச நாளில் எல்லாம் உங்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். இது எனது அனுபவபூர்வமாக நான் செய்தது உண்டு மற்றும் பல நண்பர்களுக்கும் நல்ல அனுபவம் இதில் இருக்கின்றது.

சுக்கிரனின் காரத்துவம் நன்றாக அதிகரித்து அதன் வழியாக நல்ல சொகுசான வாழ்வை கொடுக்கிறது. ஒரு சிலர் சுக்கிரனின் வாழ்வுக்காக தவிப்பவர்களாக இருப்பார்கள் அவர்கள் இதனை செய்யலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு சொல்லும் பாடம்


ணக்கம்!
          ஒரு நல்ல ஆன்மீகவாதிக்கு குரு கிரகம் தனித்து நிற்க்கும். குரு கிரகம் மறைவில் நின்றால் கூட அந்த கிரகம் தனித்து நின்றுவிட்டால் சிறந்த ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்கள்.

குரு கிரகத்தோடு தீயகிரகங்கள் இணைந்துவிட்டால் அவரின் ஆன்மீகவாழ்வு அந்தளவுக்கு சிறக்காது. முழுமையாக கற்றுக்கொள்ளமுடியாது. நமது தந்தை நல்லது செய்து இருந்தால் குரு கிரகம் தனித்து நிற்க்கும்.

பல குடும்பங்களில் ஏதாவது தீவினையை இழுத்து வைத்திருப்பார்கள். தீவினையை இழுத்தாலே அவர்களின் வாரிசுகளுக்கு குரு கிரகம் கெட்டுவிடும். குரு கிரகம் தனித்து நிற்கவேண்டும் அதனோடு சுபர்கள் சேரலாம். தீயகிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல.

ஒரு மனிதனுக்கு ஆன்மீகம் மட்டும் இல்லை. அவனின் வாழ்வும் எந்தவித சிக்கலும் இல்லாமல் செல்லவேண்டும் என்றால் அவனுக்கு குரு கிரகம் நான் சொல்லுவது போல் இருக்கவேண்டும்.

குரு கிரகம் கெட்டது என்றால் அந்த ஆளோடு பழகுவது கூட கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவரால் நமக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          ஒரு சிலர் செய்யும் வேலையை பார்த்தால் இப்படி எல்லாம் செய்வார்களாக என்றும் தோன்றும். அதனை இவர் எல்லாம் ஏன் செய்தால் என்றால் கிரகத்தின் கோளாறாக இருக்கும். தமிழ்நாட்டில் பல கோவில்கள் பூட்டை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றார்கள் அல்லது சிலையை உடைத்து சென்றார்கள் என்று செய்தி வரும்.

இதனை படிக்கும் நமக்கு என்னடா இதனை எல்லாம் செய்வார்களா என்று தோன்றுகிறது அல்லவா. இதற்கு எல்லாம் காரணம் கிரகங்கள் தான். கிரகங்கள் ஒருவனை தூண்டுகிறது இப்படி செய் என்று அதற்கு அவர்களும் செய்துவிடுகிறார்கள்.

திருடுவதை நான் நியாயப்படுத்தவில்லை அவர்களை தூண்டுவதே கிரகம் தான் என்பது புரியாமல் செய்கின்றனர் என்பது தெரிகிறது. ஒரு கோவிலில் திருடினால் அது எப்பேர்பட்ட தோஷத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் நான் கேள்விபட்டு இருக்கிறேன். கோவிலில் உள்ள மணியை ஒருவர் திருடி இருக்கிறார். அவரின் குடும்பம் இன்றுவரை உருபடவில்லை. ஒரு மணிக்கே இப்படி என்றால் மற்றவைக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் இப்படி தூண்டசொல்லும் அதனை புரிந்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும் அப்படி இல்லை என்றால் வாங்கி கட்டிக்கொள்ளவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 24, 2016

எதிர்பார்ப்பு


வணக்கம்!
          எந்த ஒரு செயல் செய்யும்பொழுதும் அதனை எப்படியாவது நடத்திக்கொடுக்கவேண்டும் என்பதில் தான் எனது முழுகவனமும் இருக்கும். நம்மை நாடி வந்தவர்களுக்கு எப்படியாவது ஒரு வழியை காட்டிவிடவேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவேன்.

பணம் மட்டும் தான் குறிக்காேளாக கொண்டால் இத்தனை வருடங்கள் இந்த தொழிலை நான் செய்து இருக்கவே முடியாது. மக்கள் நம்மை ஓரங்கட்டுகிறார்களோ இல்லையோ கடவுள் நம்மை ஓரங்கட்டிவிடுவார். 

ஒவ்வொருவருக்கும் என்று பரிகாரத்தை தனிகவனத்தோடு செய்து தான் வருகிறேன். நம்ம ஆட்கள் பல பேர் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் நம்மை நாடி வரும்பொழுது அவர்களின் பரிகாரத்தை நாம் இங்கு தான் செய்யவேண்டியுள்ளது. அதனையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

ஒரு நபர் கூட விட்டுவிடாமல் ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொண்டு செய்கிறேன். அவர்களுக்கு என்று முறையான தகவல் அனுப்பி அவர்களுக்கு செய்கிறோம்.

பல தவறுகளை மக்கள் மறைத்துவிட்டு தான் இதற்கு பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறு வெளியில் தெரியகூடாது என்று மறைக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட தவறு செய்து இருந்தாலும் அதனை நீங்கள் என்னிடம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அந்த தவறுக்கும் சேர்த்து நாம் வழித்தேடி ஒரு நல்லதை நாம் பெறலாம். 

நீங்கள் மறைத்தால் அது நீண்ட நாள்கள் இழுத்துக்கொண்டு செல்லும். நான் செய்யவேண்டியதை செய்துவிடுவேன். நடப்பது கால தாமதம் ஏற்படும். முன்கூட்டியே அனைத்தையும் சொல்லிவிட்டு வழிதேட சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கருகலைப்பு பரிகாரம்


ணக்கம்!
          காலையில் எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டனர். அந்த பதிவில் உள்ளவர்க்கு நான் தான் நல்லவழி செய்துக்கொடுத்தேன்.

அவர் ஒரு மருத்துவமனை அமைத்து தான் இந்த வேலை எல்லாம் செய்துவந்தார். அந்த மருத்துவமனையின் பெயரை மாற்றினேன். மருத்துமனையின் பெயர் சிவனின் பெயர் வருவது போல் செய்தேன். அதன் பிறகு அவர்களை அதாவது கணவன் மனைவி இருவரையும் சிவனின் பக்தர்களாக மாற சொன்னேன்.

நான் செய்த நேரத்தில் அவருக்கு என்று தனியாக அம்மனை வைத்து ஹோமம் செய்தேன். இது எனது அறையில் செய்தேன் அதில் அவர்கள் பங்குகொள்ளவில்லை அதற்கு உரிய தொகையை மட்டும் கொடுத்தார்கள். ஏன் என்றால் அவர்களை விடாமல் சிவன் கோவிலுக்கு செல்ல சொல்லிருந்தேன்.

மருத்துவமனையில் சிவனின் உருவம் பொறித்த வெண்கலசிலை வைக்க சொன்னேன். பொதுவாக நடராஜ சிலை வைத்திருப்பார்கள் ஆனால் நான் சிவனின் உருவசிலையை வைக்க சொல்லிருந்தேன். அதுவும் அவர்களுக்கு நன்றாக வேலை செய்தது என்று சொல்லலாம்.

அம்மனை வைத்து நான் அவர்களுக்கு வேலை செய்தாலும் அவர்களின் சிவவழிபாடு அவர்களின் பாவங்களை போக்கி அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்று சொல்லலாம். தற்பொழுது அவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தை இருக்கின்றது.

நீங்கள் இப்படிப்பட்ட பாவம் செய்து இருந்தால் சிவனின் பக்தர்களாக மாறி பல கோவிலுக்கு செல்லவேண்டும். புண்ணிய நதியில் நீராடவேண்டும். அப்படி செய்யும்பொழுது மட்டுமே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இது எல்லாம் எவன்டா செய்துக்கொண்டிருப்பது என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் என்றால் நம் ஆட்களுக்கு உடனடியாக சொன்னவுடன் அது போகவேண்டும் சின்ன பரிகாரமாக சொல்லுங்கள் என்பார்கள்.

முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்து இருந்தால் நீங்கள் ஒரு கொலைக்காரன் என்பதை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள். உலகமாக பாவம் என்ன என்றால் உங்களின் குழந்தையை நீங்கள் கொன்று இருக்கின்றீர்கள் என்பது உண்மை. இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி இது தான் உண்மை. அளவில் சிறியது பெரியது எல்லாம் கிடையாது அது உங்களின் குழந்தை என்பது தான் நான் சொல்லமுடியும்.

என்னோடு பழகிய நண்பர்கள் எல்லாம் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டனர் அதாவது என்னை தொடர்புக்கொண்டு பேசிவிட்டனர்.  அவர்களுக்கு எல்லாம் இதனை நான் சொல்லி இருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒரு வாடிக்கையாளரின் அனுபவத்தை வைத்து உங்களுக்கு இதனை சொல்லிருக்கிறேன். ஒவ்வொரு சோதிடர்களுக்கும் பரிகாரம் வித்தியாசப்படலாம். ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கிறதோ அதனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தசாவை கவனியுங்கள்


ணக்கம்!
          தசாவைப்பற்றி சொன்னவுடன் பத்து நண்பர்கள் அவர்களின் ஜாதகத்தை அனுப்பி விளக்கம் கேட்டனர். மீதி உள்ள நண்பர்கள் அவர்களே பார்த்துக்கொண்டுவிட்டனர் என்று நினைக்கிறேன் அல்லது வேறு ஒரு சோதிடர்களிடம் காட்டிவிளக்கம் கேட்டு இருக்கலாம்.

ஒரு சில விசயத்தைப்பற்றி நாம் சொல்லி தான் ஆகவேண்டும். தசாவைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாக தான் இருக்கின்றது. அந்த விழிப்புணர்வு குறைவதற்கும் கடவுள் காரணமாக இருக்கலாம். எதனை வைத்து நம்மை கடவுள் பந்தாடுகிறாரோ அதனைப்பற்றி வெளியில் தெரியாமல் போய்விடும்.

உங்களின் தசா உங்களின் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு தசாவும் உங்களின் வாழ்வை ஒன்று மேம்படுத்தும் அல்லது புரட்டிபோட்டுக்கொண்டிருக்கும். வாழ்வை மேம்படுத்தினால் நல்லது. வாழ்வை பிரச்சினைக்குள்ளாகினால் மட்டுமே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு நடக்கும் தசா அதிபரி யார் என்று பாருங்கள். தசா அதிபதி எந்த வீட்டில் இருந்து தசாவை நடத்துக்கிறார் என்பதை பாருங்கள். தசா அதிபதியின் பலன் என்ன என்பதை தீர்மானித்துவிட்டு அதற்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்தால் நடக்குமா என்று மனதைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்காமல் தசாவிற்க்கு இதனையாவது செய்யவேண்டும் என்ற நினைப்போடு காரியத்தில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          தமிழ்நாட்டில் உள்ள டவுன் என்ற சொல்லக்கூடிய பேராருட்சிகள் நிறைய இருக்கின்றன என்பது நீங்கள் அறிந்த ஒன்று. அந்த டவுன்களில் ஒரு சில மருத்துவர்கள் இருப்பார்கள். அதாவது ஒரு வில்லங்க வேலை செய்வதற்க்கு என்றே மருத்துவர்கள் இருக்கின்றனர்.

இந்த மருத்துவர்களைப்பற்றி தான் இந்த பதிவு. இந்த மருத்துவர்கள் செய்யும் செயல் என்ன என்றால் பணத்திற்க்காக கருகலைப்பு செய்வது. கருகலைப்பிற்க்கு பின்னால் ஏதோ காரணம் இருந்தாலும் அழிப்பது ஒரு உயிர் என்பதை யாரும் நினைப்பதில்லை.

எனது ஊருக்கு அருகில் ஒரு மருத்துவர் இதனை செய்துக்கொண்டிருந்தார் அவருக்கு திருமணம் ஆனவுடன் பார்த்தால் அவருக்கு குழந்தை இல்லை. அவரின் மனைவியும் மருத்துவர். மருத்துவத்தில் பிரச்சினை இல்லை என்று அவர்கள் சொல்லாமலே தெரிகிறது.

இதனைப்போல் எல்லாம் ஊர்களிலும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது. காலம் கடந்து தான் இது தவறு என்பது அனைவருக்கும் புரிகிறது. இதனைப்போல் தனிமனிதர்களும் செய்துக்கொண்டு இருப்பீர்கள். அது தவறு என்பதை உணர்ந்துக்கொண்டு அதற்கு பரிகாரத்தை தேடுங்கள்.

வாழ்க்கையில் ஒருமுறை தான் கருவை அழித்து இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் அதற்கும் நீங்கள் பரிகாரம் தேடவேண்டும் இல்லை என்றால் அந்த பாவம் உங்களை பின்தொடர்ந்து வரும்.

அடுத்த பதிவு 1 மணிக்கு

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 23, 2016

திருமணத்தை தாமதப்படுத்தும் சனி

ணக்கம்!
          பெண்களுக்கு கடகலக்கனமாக வந்தால் அந்த பெண்கள் திருமண காலத்தில் கொஞ்சம் அதிகம் அவதிப்படவேண்டியிருக்கும். இது ஆண்களுக்கு கூட அப்படி தான் செய்கிறது. ஆண்களும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

கடகலக்கனத்திற்க்கு ஏழாவது மற்றும் எட்டாவது வீடாக சனி வருகின்றது. சுயஜாதகத்தில் சனிக்கிரகம் நன்றாக அமைந்தால் ஒரளவு இளமையில் திருமணம் நடந்துவிடும். சனிக்கிரகம் கொஞ்சம் எக்குதப்பாக அமைந்தால் திருமணத்திற்க்கு கஜனி போர் புரிந்த கதையாகிவிடும். 

கடகராசிக்கும் இப்படி தான் இருக்கின்றது. சனிக்கும் சந்திரனும் ஏகாப்பொறுத்தம் இரண்டும் சண்டைப்போட்டுக்கொண்டு ஜாதகருக்கு ஒரு நல்ல திருமணத்தை கொடுப்பதில்லை.

கடகலக்கனத்தை கொண்ட ஜாதகருக்கு ஒரு சிலருக்கு காதல் தோல்வியை ஏற்படுத்தும். அந்த காதலை நினைத்துக்கொண்டு திருமணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

கடக லக்கனத்திற்க்கு அல்லது கடக ராசிக்கு திருமண பரிகாரமாக பிரதோஷ காலத்தில் சிவனுக்கு அபிஷேகத்திற்க்கு அபிஷேக பொருட்களை வாங்கி கொடுங்கள். வசதி இருந்தால் திங்கள் தோறும் ஏதோ ஒரு சிவலாயத்திற்க்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 22, 2016

ராகு பலம்


ணக்கம்!
          ராகு பலனைப்பற்றி இரவு நேரத்தில் பார்த்து வருகிறோம். இராகு ஒருவருக்கு பலமாக அமைந்துவிட்டால் அவர் வெளிநாட்டு பயணங்களை அதிகம் மேற்க்கொள்வார் என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்க்கு வாய்ப்பு அமையாது ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் தொடர்பு அதிகமாக இருக்கும்.

கிராமபுறங்களில் இப்படிப்பட்டவர்களை நான் அதிகம் பார்த்து இருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இவர்களுக்கு பணமாக அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இங்கு நிறைய நிலங்களை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். கிராமபுறங்களில் உள்ளவர்களின் அளவுக்கோல் என்பது நிலத்தை வைத்து தான் இருக்கும்.

நகரத்தில் பல பேர்களை நீங்களே பார்த்து இருக்கலாம். அவர்களின் தொடர்பு அனைத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை சார்ந்தே இருக்கும். அவர்கள் இங்கு இருந்துக்கொண்டு அனைத்து வியாபாரத்தை யும் செய்துக்கொண்டு இருப்பார்கள்.

ராகு வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை என்றாலும் வெளிநாட்டு தொடர்புகளை வைத்து இவர்கள் வாழ்வு நன்றாக அமைவது போல் செய்து கொடுத்துக்கொண்டிருக்கும்.

ராகு என்றாலே நாம் பயப்பட்டுக்கொண்டு தான் இருப்போம். ராகு நல்லது செய்ய தொடங்கிவிட்டால் அது நிறைய செய்துக்கொடுக்கும். அதனை வைத்து மிகப்பெரிய ஆளாக மாறிவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருமண பரிகாரம்


ணக்கம்!
          ஜாதககதம்பம் ஆரம்பித்த நாட்களில் இருந்து இந்த பதிவில் சொல்லுகின்ற நல்லவற்றை எடுத்து நமது நண்பர்கள் அவர்களின் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு இப்படி செய்தால் இந்த பிரச்சினை தீரும் என்று சொல்லுவார்கள். இதுவே எனக்கு பல வருடங்கள் சென்றபிறகு தான் தெரிந்தது. நண்பர்கள் என்னிடம் இதனை சொன்னார்கள்.

சிறந்த சமூக சேவை செய்கிறேன் என்று நான் சொல்லவில்லை என்னிடம் ஒரு சக்தி இருந்துக்கொண்டு இதனை எல்லாம் நீ செய் என்று சொல்லுகிறது அதனை நான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

நாளை பங்குனி உத்திரம். நமது மக்கள் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பல பரிகாரம் செய்து திருமணம் நடைபெறவில்லை என்று இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நாளை ஒரு வரபிரசாதமான ஒரு நாள். நாளை தினத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாளை முழுவதும் விரதம் இருந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வாருங்கள். ஒரு வேளை விரதசாப்பாடு சாப்பிடலாம். விரதம் என்றாலே முடிக்கும் விதமாக விரத சாப்பாடு செய்து அதனை படைத்து விரதம் இருப்பவர்கள் உண்ணுவார்கள். விரதத்தை முடித்துவிட்டு கூட முருகன் கோவில் செல்லலாம்.

ஏழை பெண்கள் திருமணமாகாமல் இருப்பார்கள் அவர்களிடம் சென்று இதனை சொல்லுங்கள். ஏழைகளுக்கு இது எளிதில் நடக்ககூடிய பரிகாரம் தான். உங்களால் ஒரு ஏழைக்கு திருமணம் நடக்கும்.

இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கும் நண்பர்கள் இதனை செய்யலாம். பொதுவாக அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களால் பிறர்க்கு திருமணம் நடக்கவும் இந்த பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பங்குனி உத்திரம்


ணக்கம்!
          நாளை பங்குனி உத்திரம். முருகனுக்குரிய நாளாக இருந்தாலும் ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரக்கூடிய ஒரு நாளாக இருக்கின்றது.

நீங்கள் இருக்கும் பகுதியில் அருகில் முருகன் கோவில் இருந்தால் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். புகழ்பெற்ற கோவிலுக்கும் சென்று வரலாம். நாளை குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யலாம். மாதம்தோறும் செய்து வருபவர்கள் செய்வார்கள். புதிதாக செய்பவர்கள் நாளையில் இருந்து ஆரம்பிக்கலாம்.

பல பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்வார்கள். உங்களின் வழக்கம் அன்னதானம் செய்வது என்றால் நீங்கள் தாராளமாக செய்யுங்கள். 

முருகனுக்கு உரிய நாளில் மிகுந்த சுத்தமாக உங்களின் வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டில் தினந்தோறும் செய்யும் பூஜையை செய்யுங்கள்.நாளை விரதம் இருந்து முருகனை வணங்கிவந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          இந்தியாவில் உள்ள முக்கால்வாசி பேருக்கு அண்ணன் தம்பியாக இருந்தால் அவர்களின் குடும்பத்தில் கண்டிப்பாக சொத்து தகராறு இருக்கும். அண்ணன் தம்பி இல்லை என்றாலும் ஒரு தம்பி ஒரு அக்கா இருந்தாலும் அவர்களுக்குள் சொத்து தகராறு இல்லாமல் இருப்பதற்க்கு வாய்ப்பு இல்லை.

ஏன் இப்படி இருக்கின்றது. சொத்து இருந்தால் உழைக்காமல் முன்னேறிவிடலாம் அல்லது நாம் எப்பொழுது உழைத்து இந்த மாதிரியான சொத்தை வாங்குவது என்ற எண்ணம். அப்பன் சொத்தை அதிகம் பங்குப்பொட்டுக்கொள்ளலாம் என்ற கணக்காவும் இருக்கலாம். ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுகிறார்கள்.

நம்ம ஆட்கள் இப்படி எல்லாம் அடித்துக்கொள்வார்கள் என்று தெரிந்து இருந்து தான் தான் சம்பாதிக்கும் சொத்து தன்னுடைய பேரனுக்கு செல்லவேண்டும் என்று சொன்னார்கள். பையன் உழைத்து அவன் பேரனுக்கு சொத்துவாங்குவான் என்பதாலும் அடித்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் வைத்தார்கள்.

நம்ம ஆட்கள் எல்லாம் எவன் சாகுவான் நாம ஆட்டையை போடலாம் என்று இருக்கிறீர்களே. சொத்துக்கு சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதில் யார் அதிகம் வம்பு இழுத்து அநியாயம் செய்து சொத்தை பிடுங்குகிறார்களோ அவர்களின் வாரிசுகளுக்கு பல தோஷத்தை பரிசாக தருகிறார்கள்.

பல குடும்பங்களின் வாரிசுகள் உருப்படாம போனதற்க்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது. உங்களின் குடும்பத்திலும் இப்படி நடந்தால் உடனே அந்த சொத்தை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுத்துவிட்டு நீங்கள் நன்றாக வாழுங்கள். நானும் அப்படிதான் இருப்பேன் என்றால் தாராளமாக வாங்கி கட்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 21, 2016

அடிக்கும் கர்மவீடு


ணக்கம்!
          பத்தாவது வீட்டில் இருக்கும் கிரகம் நல்லது செய்வோம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். ஒரு சிலருக்கு இந்த பத்தாவது வீட்டு கிரகம் தன்னுடைய தசாவில் அடி அடி என்று அடித்து சம்பந்தப்பட்ட ஜாதகர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவதும் உண்டு.

நானே முதலில் இதனை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என்னடா பத்தாவது வீட்டு கிரகம் என்றால் நல்லதை செய்யவேண்டுமே தீமையை செய்கிறது என்று பார்த்து இருக்கிறேன். நாள்கள் ஆக ஆக பல பேர் இதில் மாட்டியிருப்பது தெரியவந்தது.

பத்தாவது வீட்டு தசாவில் அவர்கள் தொழிலில் மட்டும் கடனில் கூட சிக்கி தவித்து இருக்கிறார்கள். பல பேர்களுக்கு இராசி அதிபதியாகவும் பத்தாவது வீடு இருந்து இருக்கிறது அவர்களுக்கும் அடி விழுந்து இருக்கின்றது.

என்னடா என்று கவனித்து பார்த்தில் கர்மவீடு என்பது அவர்களின் முந்தைய கர்மத்தின் வேலையை செய்ய தொடங்கிவிடுகிறதோ என்று நினைக்க வைக்கிறது. 

சோதிடத்தில் சொல்லப்பட்ட விதிகளை விட ஒரு சிலருக்கு என்பதை தாண்டி பல பேருக்கு கெடுதலை கொடுத்து இருக்கிறது. கொடுத்துக்கொண்டும் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

உங்களை வழிநடத்தும் தசா


ணக்கம்!
          தசாவைப்பற்றி பார்த்துவந்தோம். பெரும்பாலான நண்பர்களுக்கு தசா நன்றாக வேலை செய்வதில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். நம்மிடம் சோதிடம் பார்க்க வந்தால் பெரும்பாலான கேள்விகள் உடனடி பிரச்சினை மட்டுமே கேள்விகளாக இருக்கும். எனக்கு இந்த பிரச்சினை வந்து இருக்கிறது இதனை தீர்க்க என்ன செய்வது என்று கேட்பார்கள்.

பிரச்சினை ஏற்பட்ட காரணத்தால் தான் ஜாதகத்தையே எடுத்துள்ளார்கள் இல்லை என்றால் கண்டிப்பாக அதனை எடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான் இதில் எல்லாம் மிகச்சரியாக இருப்பவர்களாக இருப்பார்கள்.நடந்துக்கொண்டிருக்க தசாவுக்கு என்ன செய்தால் அதன் முழுபயனையும் பெறலாம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு அதற்கு தீர்வையும் காணுபவர்களாக இருப்பார்கள்.

ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதனோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு வாழ்விலும் மிகுந்த ஏற்றத்தோடு இருப்பார்கள். ஒரு குறிப்பட்ட காலம் வரை உங்களின் தசா தான் உங்களின் தலைவிதியை நிர்ணக்கப்போகின்றது. படித்துவிட்டு அப்படியே போகாமல் ஜாதகத்தையும் எடுத்து என்ன தசா நடக்கின்றது எப்படி பலனை கொடுக்கின்றது என்பதையும் பாருங்கள்.

உங்களின் ஜாதகத்தை உங்களின் சோதிடர்களிடம் காண்பிக்கும்பொழுது எனக்கு நடக்கும் தசா எப்படி பலனை கொடுக்கிறது. அந்த தசாவிற்க்கு என்ன பரிகாரம் செய்தால் பலனை பெறலாம் என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          நேற்று ஒரு வாங்கிகட்டிய வரத்தைப்பற்றி பார்த்தோம். இன்று ஆன்மீகவாதிகள் வாங்கிகட்டிய வரத்தைப்பற்றி பார்க்கலாம். இறைவன் படைப்பில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்கபாடம் இருக்கின்றது. காலம் மட்டுமே வித்தியாசப்படுகிறது.

பல ஆன்மீகவாதிகளை பார்த்தால் நல்ல வளர்ந்து வருவார்கள் கொஞ்சநாளில் வீணாக போய்விடுவார்கள். ஆன்மீகவாதியை பார்ப்பதற்க்கே லட்ச ரூபாய் என்று கட்டணம் வசூல் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவருக்கே ஒரு பிரச்சினை வந்துவிடும். பிரச்சினை வருகின்றது என்றால் சும்மாவா வரும் ஏதோ வில்லகம் இருப்பதால் தான் வருகின்றது. 

லட்சரூபாய் பார்ப்பதற்க்கு கேட்டவர் கொஞ்சநாளில் வீதிக்கு வந்து கத்தினாலும் அவரை தேடி ஒரு பய செல்லமாட்டான். அவரிடம் கேட்டால் ஏதோ கர்மா இருந்திருக்கிறது அதனால் தவறு நடந்துவிட்டது என்பார். இவன் செய்த அட்டுழியத்திற்க்கு கர்மா மேல் பலியை போடுவான்.

ஆன்மீகவாதியாக இருந்தால் என்ன பிச்சைக்காரனாக இருந்தால் என்ன செய்த தவறுக்கு ஒரு நாள் மாட்டுவது இயற்கையான ஒன்று தான். உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு தண்டனையை கடவுள் கொடுக்கிறார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, March 20, 2016

நீதி தேவதை


ணக்கம் !
          சமீபத்தில் பொள்ளாச்சி மாசாணிஅம்மன் கோவிலுக்கு செல்லும்பொழுது நமது நண்பரும் நானும் ஒரு உரையாடலில் ஈடுபட்டோம். அது என்ன என்றால் அந்த கோவிலில் மிளகாய் அரைத்து பூசுவது ஒரு வேண்டுதலாக வைத்திருக்கிறார்கள். அது எதனால் என்று உரையாடல் இருந்தது.

ஒரு ஏழைக்கு அநீதி ஏற்பட்டால் அந்த ஏழை முறையிடபோகமுடியாது. இன்றைக்கு இருக்கும் உலகத்தில் கோர்ட்படி ஏறி ஒரு ஏழை வெற்றி பெறவேண்டும் என்றால் அவ்வளவு எளிதான ஒரு காரியமா?

ஏழைகளின் குறையை கேட்க கூட நாட்டில் ஆள்கள் கிடையாது. ஏழைகளுக்கு தெரிந்தது எல்லாம் கடவுள் மட்டுமே. தன்னுடைய குறையை போக்க கடவுளிடம் தான் முறையிடுவார்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பொருட்களை வைத்து வேண்டுதல் வைப்பார்கள். அதனை கொண்டு வேண்டுதலை வைப்பார்கள். அது முடிவடைந்தவுடன் மறுபடியும் காணிக்கை செலுத்திவிட்டு தெய்வத்தை வணங்கிவிட்டு வருவார்கள்.

இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு நீதி தேவதை இருந்து இருக்கிறது. அது அனைத்தும் இன்று வரை இருக்கின்றது. பல ஏழைகள் அதனிடம் சென்று முறையிட்டு தன்னுடைய காரியத்தை நடத்திக்கொள்கிறார்கள்.



ஒன்றும் இல்லாதவன் போலீஸ் ஸ்டேஷன் கூட போகதெரியாது. அவன் எப்படி கோர்ட்படி எல்லாம் ஏறமுடியும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே கோர்ட் அது கோவில் மட்டுமே. கோர்ட்டில் நீதி தவறும் ஆனால் கோவிலில் நீதி தவறவே தவறாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          ஒரு சில ஊர்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஒரு சிலர் தான் முன்காலத்தில் எல்லாம் ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். அதாவது ஒரு இருபது வருடத்திற்க்கு முன்பு இன்று அப்படி இல்லை. அனைத்தும் தொலைக்காட்சியின் உதவி மற்றும் நெட் உதவியால் நூற்றுக்கு 99 பேர் ஆன்மீகவாதிகளாக இருக்கின்றனர்.

இருபது வருடத்திற்க்கு முன்பு உள்ள காலத்தில் வசதியாக இருந்த குடும்பம் ஒரளவு ஆதிக்கத்தை அந்தந்த ஊர்களில் காட்டியுள்ளார்கள். பணம் வந்தால் குணம் எல்லாம் போய்விடுமே அந்த ஊரில் இருக்கும் யாராவது ஒரு ஆன்மீகவாதியிடம் பிரச்சினை செய்து இருப்பார்கள். ஏதாவது ஒரு குடைச்சலை அவர்களிடம் கொடுத்து இருப்பார்கள்.

நான் சொல்லுகின்ற காலத்தில் ஆன்மீகவாதியிடம் ஒரு பைசா கூட இருந்திருக்காது. இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகவாதியிடம் பிரச்சினை செய்தால் கொலை செய்துவிடுவார்கள். அவ்வளவு பணபலத்தோடு இருக்கின்றனர்.

அவர்கள் நிறைய சிவன் கோவில் மற்றும் இதர கோவில்களுக்கு சென்று இவர் பிரச்சினை செய்கிறார் இவர்களிடம் இருந்து என்னை காப்பாற்று என்று வேண்டி இருப்பார்கள். கடவுள் இல்லாதவனிடம் அதிகம் கருணையை காட்டுவான்.

நிறைய பணக்காரர்களாக இருந்த குடும்பங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் அட்ரஸ் இல்லாமல் சென்றதற்க்கு இப்படிப்பட்ட வாங்கிக்கட்டிய வரம் தான். இன்றைய காலத்தில் அனைவரும் ஆன்மீகவாதிகளாக மாறிவிட்டீர்கள் அதனால் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 19, 2016

காமன் பண்டிகை விழா

ணக்கம்!
          எங்கள் பகுதியில் தற்பொழுது காமாண்டி திருவிழா நடைபெற்று வருகின்றது. காமாண்டி திருவிழா என்றால் மன்மதன் கோவில் திருவிழா. மன்மதனுக்கு என்று கோவில் அமைத்து அதற்கு திருவிழா செய்வார்கள்.

மன்மதன் கோவில் தெருவிற்க்கு தெரு எங்கள் பகுதியில் இருக்கும். பெரிய கோவில் எல்லாம் கிடையாது. ஊருக்கு நடுபகுதியில் ஒரு இடத்தில் ஒரு விளக்கு கல் வைத்து அதனை மன்மதனாக வழிபட்டுக்கொண்டு வருவார்கள்.

காமன் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வானது, 'காமன் பண்டிகை திடல்' அல்லது 'காமன் பண்டிகை திட்டு' என்று வழங்கப்படும் பொது இடத்தில் நடைபெறும்.

காமதகனம் என்ற நிகழ்வு பங்குனி உத்திரம் அன்று (மன்மதனை எரிக்கும் நிகழ்வு )நடைபெறும். மிகவும் சிறப்பாக இங்கு திருவிழா நடைபெறும். ரதி மன்மதன் அலங்கரித்து ஊர்வலமாக எல்லாம் எடுத்து செல்வார்கள். இதனை எல்லாம் நேரில் பார்த்தால் தான் இது தெரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ராகுவின் பலம்


ணக்கம்!
          ராகு பலத்தை நாம் இரவில் பார்த்து வருகிறோம். ராகு என்றாலே ஏதாவது ஒரு தகாத உறவை ஏற்படுத்திவிடும். இன்றைய காலத்தில் பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருப்பது தகாத உறவுகள்.

ராகு ஒரு குடும்பத்திற்க்குள் உள்ள ஜாதகத்தில் பலம் பெறும்பொழுது அந்த குடும்பத்திற்க்குள் அழையா விருந்தாளியாக யாராவது ஒரு நபர் நுழைந்துவிடுகிறார். அவரால் பிரச்சினையை அதிகம் சந்திக்கவேண்டியிருக்கும்.

இன்றைய காலத்தில் செல்போன் வந்ததில் இருந்து ராகுவின் பலம் அதிகமாகவே இருக்கின்றது. எப்படி எப்படியே உறவுகள் வந்துவிடுகின்றன. மாடர்னாக வாழ்கிறேன் என்று குடும்பத்தை சிதைக்கும் உறவுகள் தான் அதிகமாக இருக்கின்றது.

தகாத உறவுகள் என்பதை நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். இன்று சொல்லவந்தது செல்போன் வழியாக தேவையில்லாத அழைப்பு வந்து அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அதனை ஏற்று அது தொடர்ந்து பல சிக்கல்களை குடும்பத்தில் வந்துவிடுகிறது.

உலகமே ராகுவின் பலத்திற்க்கு வரும்பொழுது நாம் கொஞ்சம் உஷாராக இருந்தால் நமது குடும்பம் சிதைந்துவிடமால் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!
         காலையில் வந்த பதிவை படித்துவிட்டு என்னங்க நீங்கள் அனைத்தையும் மறைத்து எழுதுகின்றீர்கள் என்று இரண்டு நண்பர்கள் கேட்டனர்.

அனைத்தையும் வெளிப்படையாக எழுதினால் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்து ஒரு பிளாக்கே எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதில் அனைத்தையும் நான் வெளிப்படையாக சொன்னால் என்ன நடக்கும். தற்பொழுது எல்லாம் காரணம் என்ன என்பதை சொல்லிவிடுகிறேன். அதில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் மறைக்கிறேன். 

என்ன பிரச்சினை என்பதை சொன்னவுடன் இது இதனால் தான் என்று மக்கள் புரிந்துக்கொண்டு என்னை தொடர்புக்கொண்டு அதற்கு ஆலாேசனையை கேட்டுவிடுவார்கள். ஜாதகத்தில் உள்ளே சென்றால் அந்த கிரகத்தைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்வது சோதிடர்கள் மட்டும் தான். வாடிக்கையாளர்கள் ஆராய்ச்சி செய்வது கிடையாது. பிரச்சினை இது தான் தெரிந்துக்கொண்டு வந்தால் போதுமானது.

இன்றைய காலத்தில் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் தெரியும் ஆனால் சோதிடர்களிடமும் நல்ல கூட்டம் இருக்கின்றது. என்ன காரணம் என்றால் தொழிலாக செய்பவன் அதனை செய்யும்பொழுது மட்டுமே சரியான ஒரு தீர்வு கிடைக்கும்.

ஒரளவு சோதிடத்தைபற்றி சொல்லிவிடுவேன். முழுமையான பலன் மற்றும் தீர்வு நம்மை தேடி வருபவர்களுக்கு கிடைக்கும். அப்படி தான் பதிவுகள் அனைத்தும் வருகின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தாய் வேண்டுமா ? தாய்பால் வேண்டுமா?


ணக்கம்!
          ஒரு குழந்தை பிறப்பதற்க்கு முன்பு அதனிடம் கடவுள் கேட்பாராம். உன்னுடைய கர்மா கணக்கு வழியாக இந்த பிறப்பு தரப்படுகிறது உனக்கும் உன்னுடைய தாய்க்கும் கர்மா என்று சரியில்லை. உன்னுடைய தாய் உன்னால் இறக்கபடவேண்டும் என்று இருக்கிறது.

உனக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். உன்னுடைய கர்மாவின் கணக்குப்படி உனக்கு தாய் வேண்டுமா அல்லது தாய்பால் வேண்டுமா என்று கேட்பாராம். 

அந்த குழந்தை எனக்கு தாய் வேண்டும் எனக்கு தாய்பால் வேண்டாம் என்று சொல்லி வரத்தை வாங்கிக்கொண்டு வந்துவிடுமாம். அந்த குழந்தை பிறந்த நாளில் இருந்து தாய்பாலை குடிக்கவே குடிக்காது. தாய் அந்த குழந்தையோடு இருக்கவேண்டும் என்ற காரணத்தால் அது குடிக்காது.

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து சோதிடம் பார்க்கும் சோதிடர்களிடம் பால்குடிக்காத குழந்தையின் ஜாதகத்தை காட்டினால் அவர் சொல்லுவார் இந்த குழந்தை தாய்பாலை குடிக்காது என்பார்.

இப்படிப்பட்ட ஜாதகத்தை நேற்று பார்த்தேன். குழந்தை அல்லவா அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி ஒரு சின்ன பரிகாரத்தை செய்தேன். மூன்று நாளில் பால்குடிக்கும் என்று சொல்லி அனுப்பினேன். கண்டிப்பாக பால் குடிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

முன்னோர்கள் வழிபாடு


வணக்கம்!
          ஒரு தெய்வ வழிப்பாட்டை விட உங்களின் மூத்தோர்களாகிய  உங்களின் தாத்தா மற்றும் உங்களின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களை வணங்கினால் நீங்கள் மிகஉயர்ந்த இடத்திற்க்கு செல்லமுடியும்.

தெய்வவழிபாட்டை விட இந்த வழிபாடு அதிகம் கைக்கொடுகிறது. அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன். பல ஊர்களில் தெய்வங்களே அந்தந்த ஊர்களில் உள்ள முன்னோர்கள் இருக்கின்றனர். அவர்கள் அவர்களின் குலத்தை காத்துக்கொண்டு வருகின்றனர்.

முன்னோர்களை எப்படி வணங்குவது என்று கேட்கதோன்றும். ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து வணங்கி வருவீர்கள் இது பொதுவான வழிபாடு. 

உங்களின் குடும்பத்தில் ஏதாவது ஒரு விழா நடந்தால் அந்த விழாவிற்க்கு உங்களின் வீட்டில் சாமி கும்பிடுவீர்கள் அல்லவா அந்த படையல் தான் மிக மிக முக்கியம்.

எப்படி இது முக்கியம் என்று கேட்கிறீர்களா அவர்களுக்கு பிடித்தமான உணவை மற்றும் உடைகளை எடுத்து வணங்குவார்கள் அல்லவா. அந்த காரணத்தால் அந்த வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு