Followers

Monday, December 21, 2020

சனி பெயர்ச்சி பலன்கள் ரிஷபம்



 வணக்கம்!

         ரிஷப இராசிக்கு அஷ்டமசனியில் இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பாக்கியசனி நல்ல பலனை கொடுக்குமா அல்லது தீய பலனை கொடுக்குமா என்பதைப்பற்றி இந்த வீடியோ பதிவில் சென்று பாருங்கள். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

https://youtu.be/lyDOG3rhUQk

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Friday, December 18, 2020

சொகுசு வாழ்க்கை இல்லை சுக்கிரன் நிலை



 வணக்கம்!
         ஒருவருக்கு சுக்கிரன் தசா வந்தால் நன்றாக இருக்கும் என்று பொதுவாக சொல்லுவது உண்டு. அனைத்து செல்வவளங்களையும் சொகுசு வாழ்க்கையும் கொடுதது அவர்களை இந்த பிறவியை ஒரு சொகுசு வாழ்க்கையை கொடுக்ககூடிய கிரகம் சுக்கிரன். சுக்கிர தசா நடக்கும் அனைவரும் இதனை எதிர்பார்ப்பார்கள்.

ஒரு சில ஜாதகருக்கு சுக்கிர தசா நல்லதை கொடுத்தாலும் ஒரு சிலருக்கு சுக்கிர தசா பெரிய பிரச்சினையை கிளப்பிவிடுவதும் உண்டு. சுக்கிர கிரகம் ஜாதகத்தில் நன்றாக அமையவில்லை என்றால் பிரச்சினையை கொடுக்கும். சுக்கிரனோடு சேரும் கிரகம் சரியில்லை என்றாலும் சுக்கிர தசாவில் பிரச்சினை வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

குரு கிரக இராசியான தனுசு மற்றும் மீன இராசியினர்க்கு சுக்கிர தசா நடந்தால் அவர்களுக்கு அது பிரச்சினையாக வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. குருவிற்க்கும் சுக்கிரனுக்கு ஒத்து வருவதில்லை. சுக்கிர தசா  வந்தவுடனே அவர்கள் பிரச்சினையை சந்திப்பார்கள். சுக்கிர தசா சுக்கிர புத்தியிலேயே அதிக பாடு படுத்திவிடுவது உண்டு.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா ஆரம்பித்த உடனே ஏதாவது ஒரு நோய் வந்து அவர்களை பாடாய் படுத்தி எடுப்பதும் உண்டு. உங்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது அந்த தசா நடந்தால் அது எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்பதை அறிந்து அதற்க்கு தகுந்தார் போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு சுக்கிர தசா நடக்காமல் சுக்கிரன் மோசமாக ஜாதகத்தில் அமர்ந்தால் கூட பிரச்சினை வருவது உண்டு. சுக்கிரன் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் உண்டு. உங்களின் சுய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து அதற்கு தகுந்தார்போல் பரிகாரத்தை மேற்க்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் காலம் முழுவதும் கஷ்டத்தை அனுப்பவிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 14, 2020

தலைமுறையை காக்கும் விரதங்கள்



 வணக்கம்!
                     விரதம் இருப்பது மிக முக்கியமான காரணமாக இருப்பது தன் உடலை சுத்தப்படுத்திகொள்வதும் அதோடு நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்க்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது. தன் உடலை சுத்தப்படுத்தி விரதம் இருக்கும்பொழுது அதனுள் இருக்கும் ஆத்மாவும் சுத்தப்படுத்தப்படுகின்றது.

ஒருவர் வறுமையில் இருக்கும்பொழுது ஏதோ ஒரு விரதமுறையை மேற்க்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு காலத்திற்க்கு பிறகு அவர் சிறந்த முறையில் வாழ்க்கை வாழ்வார். நிறைய செல்வ வளங்களை கொண்டு வாழ்வது போன்ற ஒரு அமைப்பை அவர் இருந்த விரதமுறை அவர்க்கு ஏற்படுத்திக்கொடுத்து இருக்கும்.

விரதம் இருக்கும் நபர்களின் வாரிசுகள் நல்ல வாழ்க்கை  வாழ்வதற்க்கு விரதங்கள் துணை நிற்க்கும் என்பதை பல பேர்களின் அனுபவத்தில் நானே பார்த்து இருக்கிறேன். ஒரு வீட்டில் இருக்கும் இல்ல தலைவர் மட்டும் விரதம் இருக்காமல் அவரின் வாழ்க்கை துணைவியும் விரதம் இருந்தால் விரைவிலேயே அந்த குடும்பம் ஒரு நல்ல நிலைக்கு வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மிக கஷ்டமான ஒரு நிலையில் நீங்கள் இருந்தால் அந்த நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விரத முறையை நீங்கள் பின்பற்றி வாருங்கள். நிறைய விரதங்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக விரைவில் அது உங்களை காப்பாற்றி அந்த நிலையில் இருந்து மாற்றிவிடும். 

இந்த பதிவை நான் தரும்பொழுது கூட கடை சோமவார விரதமுறையை நான் மேற்க்கொண்டு இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்திற்க்கு விரதங்கள் இருப்பது ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 13, 2020

கடை சோமவாரம் மற்றும் அமாவாசை

வணக்கம்!

          நாளை கடைசி சோமவாரம் மற்றும் அமாவாசையும் சேர்ந்து வருகின்றது. சோமவாரம் என்றாலே அது சிவனுக்கு உகந்த ஒரு நாள். சிவனின் அருளை பெறுவதற்க்கு கார்த்திகை மாதத்தில் திங்கள்கிழமை தோறும் விரதம் இருந்து கடைசி திங்கள் கடை சோமவாரம் எ்னறு அழைப்பார்கள். அன்றைய தினத்தில் சிவாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  ஒரு சில கோவில்களில் திருவிழாவும் நடைபெறும்.

அமாவாசை மற்றும் கடைசி சோமவாரம் என்பதால் நல்ல சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகவே அதனை நாம் எடுத்துக்கொண்டு சிவனின் அருளை நாம் பெறலாம்.  விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருபவர்களும் இருக்கின்றனர். அதனை மேற்கொண்டவர்கள் அதனை செய்யுங்கள். 

நாம் அமாவாசை மற்றும் கடைசோமவாரம் என்பதால் ஒரு சிறப்பு பூஜை ஒன்றை செய்ய இருக்கிறோம். ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர பூஜை செய்ய இருக்கிறோம் இதில் கலந்துக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக இது Rs 500 என்று தீர்மானித்து இருக்கிறோம்.

கலந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் மட்டும் Rs 500 செலுத்தி தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை அனுப்ப வேண்டும். தங்களுக்காக சிறப்பு பூஜை செய்யப்படும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


மோசமான கிரக அமைப்பு

 


வணக்கம்!

          நாம் பார்த்த ஜாதகத்திலேயே மிக மோசமான கிரக அமைப்பு என்றால் அது மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமரும் ஜாதகமாகவே இருக்கும். மூன்று மற்றும் ஒன்பதில் இராகு கேது அமர்ந்தால் அவர்களின் வாழ்க்கை இளமை காலம் என்பது மிக மோசமான ஒரு அமைப்பாகவே இருக்கும்.

மூன்று மற்றும் ஒன்பதாவது வீட்டில் இராகு கேது சம்பந்தப்படுவதால் மட்டுமே இந்த பிரச்சினை நாம் பித்ருசாபம் என்று எடுத்துக்கொள்ளலாம். இராகு கேது என்றாலே அது அதிகமான கர்மா கொடுக்கும் கிரகம் அது மூன்று ஒன்பதில் சம்பந்தம் ஏற்படும்பொழுது அது நிறைய கர்மாவை கொடுத்துவிடுகின்றது.

இராகு கேது மூன்று மற்றும் ஒன்பதில் அமரும்பொழுது அவர்களுக்கு கடுமையான ஒரு பித்ரு சாபத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அவர்களின் முற்பிறவி மற்றும் அவர்களின் தந்தை பாட்டான் வழியில் உள்ள கர்மத்தையும் சேர்த்து கொடுத்துவிடும்.

இளமை காலத்தில் கடுமையான வறுமையை கொடுத்தால் அது உயிர் பிரச்சினையை ஏற்படுத்தாது. இளமை காலத்தில் வசதி வாய்ப்பு இருந்தால் அது உயிர் பிரச்சினையை அதிகமாக ஏற்படுத்தும். இளம் வயதிலேயே நிறைய கண்டங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

ஒரு சில ஜாதகர்களுக்கு அவர்களின் குலதெய்வம் நல்ல அருளை தந்தால் அவர்களுக்கு பிரச்சினையை கொடுக்காமல் சிறு கண்டத்தோடு விட்டு விடும். ஒரு சில ஜாதகர்களுக்கு ஜாதகத்தில் நடக்கும் தசா நன்றாக இருந்தால் அவர்களை தப்ப வைக்கும். தசா மோசமாக இருந்தால் பிரச்சினை அதிகமாகவே இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 12, 2020

ஏழரைச்சனி என்ன செய்யும்?



 வணக்கம்!

         ஒருவருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்தால் அவர்க்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏழரைச்சனி ஒருவருக்கு இரண்டாவது சுற்று வரும்பொழுது அதிக பாதிப்பை தரும். இரண்டாவது சுற்று என்பது பெரிய அளவில் நன்மை செய்யும் என்று சொல்லுவார்கள் ஆனால் அனுபவத்தில் பெரிய அளவில் பிரச்சினையை சந்திப்பதும் இந்த காலமாகவே இருக்கின்றது.

ஏழரைச்சனியின் காலத்தில் உங்களுக்கு எந்த வழியில் உங்களின் பிழைப்பு நடக்கின்றதோ அந்த வழியில் முதலில் பிரச்சினையை ஆரம்பிக்கும். உங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலில் தான் முதலில் கவனத்தை கொண்டு வரும் அதில் பிரச்சினையை கிளப்பி உங்களை பிழைக்க விடாமல் செய்வதில் சனிக்கு அதிக மகிழ்ச்சி இருக்கும்.

இதுவரை இராஜாவாக வலம் வந்துக்கொண்டு இருந்தால் சனி அதில் கவனத்தை செலுத்தும். உங்களை அசிங்கப்படுத்தி உங்களை அடுத்தவர் முன்பு தலை குனிய வைக்கும். அடுத்தவர்கள் முன்பு கெத்து காட்டிக்கொண்டு இருந்த நீங்கள் அடுத்தவர்கள் முன்பு தலைகுனிய செய்ய வைத்து நீங்கள் செல்லும்பொழுது உங்களின் மனம் அந்தபாடுபடும் அதனை வார்த்தையால் வெளியில் சொல்லமுடியாது அனுபவத்தில் நடக்கும்பொழுது மட்டுமே அது என்ன என்பது உங்களுக்கு புரிய வரும்.

உங்களுக்கு நோய் என்பது இதுவரை இல்லாமல் இருந்திருந்தால் நோய் வரும். உங்களின் உடலில் உள்ளுக்குள் வலியை கொடுப்பதில் அதிக கவனம் சனி செலுத்தும். உங்களின் உள் உடலில் அதிக வலியை காட்டிவிடும் இதனால் மனக்கவலையை அதிகம் ஏற்படுத்தி கொடுத்துவிடும்.

திருமணம் முடிந்து நீங்கள் சந்தாேஷமாக வாழ்ந்திருந்தால் ஏழரைச்சனியின் காலத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு அதிகமாக உருவாக்கிவிடும். நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பிறரோடு தொடர்புப்படுத்தி பேசுவது போல உங்களை காட்டிவிடும். இருவருக்கும் பிரச்சினை இதனாலே வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வாழ்க்கையில் ஆசைப்பட்டு வாங்கிய வாகனம் பழுதாகி உங்களை ஆழ்ந்த கவலைக்குள் கொண்டு சென்றுவிடும். ஒரு சிலருக்கு வாகனம் விபத்து ஏற்பட்டுவிடுவதும் உண்டு. கை அல்லது கால்களில் முறிவு ஏற்படுவதற்க்கு வாய்ப்பையும் ஏழரைச்சனி செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு