Followers

Thursday, June 30, 2016

கண் திருஷ்டி


ணக்கம் !
          ஒருவருக்கு பிரச்சினை என்று வந்தவுடன் ஜாதகத்தை பார்ப்பதைவிட அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டால் போதும் அதிலேயே பிரச்சினை குறைந்துவிடும்.

இன்றைய காலத்தில் அதுவும் இந்தியர்களுக்கு இருக்கும் பொறாமை என்பது உலகத்தில் எவருக்கும் இருக்காது என்று நினைக்கிறேன். இந்தியர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் பொறாமைப்படுவார்கள். இந்த பொறாமையால் ஏற்படும் கண் அடி ஒருவரை வீழ்த்திவிடும்.

கிராமபுறங்களில் இது அதிகம் என்று சொன்னால் கூட இன்று நகர்புறத்திலும் இது அதிகமாக இருக்கின்றது. உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் கண்களால் உங்களை பார்த்தே வீழ்த்திவிடுவார்கள். உங்களை ஒருவர் நன்றாக உற்று நோக்க ஆரம்பித்தாலே நீங்கள் வீழ தொடங்கிவிடுவீர்கள். 

ஜாதககதம்பத்தில் பழைய பதிவுகளில் கண் திருஷ்டியைப் பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். அதனை படித்து பாருங்கள். உங்களின் ஜாதகத்தை பார்ப்பதற்க்கு முன்பு ஒரு முறை திருஷ்டி போட்டு பாருங்கள். திருஷ்டி வாரம் இருமுறை போடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் என்பது இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 29, 2016

தெய்வ அருள்


வணக்கம்!
          பல நண்பர்கள் நல்ல வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தாலும் அவர்களுக்கு அடி மேல் அடி விழும். சோதிடம் மற்றும் ஆன்மீகம் மேல் எல்லாம் நம்பிக்கையே போய்விடும் அளவிற்க்கு நம்ம நண்பர்களுக்கு விரக்தி வந்துவிடும்.

ஆன்மீக பக்கம் போகலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்க எல்லாம் வைத்துவிடும். உதாரணத்திற்க்கு என்னை எடுத்துக்கொள்ளலாம். பல அடிகளை நான் வாங்கி இருக்கிறேன் ஆனால் நம்பிக்கையை மட்டும் நான் இழக்கவே இல்லை. 

நிறைய காேவில்களுக்கு செல்லும்பொழுது எல்லாம் எனக்கு எந்த ஒரு விரக்தியும் தோன்றவில்லை. வாழ்க்கையில் விரக்தி வந்தது உண்டு ஆனால் கோவிலுக்கு செல்வதை விடவில்லை.

நமக்கு நடக்கும் தசாவின் காலம் அதிகமாக இருந்தது என்றால் நமக்கு கஷ்டம் அதிகம் போல் இருக்கும். கெடுதல் தரும் தசாவின் காலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். அந்த நேரத்தில் நான் கோவில் கோவிலாக அலையமட்டும் தான் முடியுமே தவிர எந்த ஒரு நல்லதையும் எதிர்பார்க்கமுடியாது. 

கஷ்டகாலத்தில் நாம் கும்பிட்ட தெய்வத்தின் அருள் ஒரு நல்ல தசா வரும்பொழுது அள்ளி அள்ளி கொடுக்கும் என்பது மட்டும் அனுபவ உண்மை.எந்த நிலையிலும் தெய்வத்தை மட்டும் மறக்காமல் இருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல நிலைக்கு நாம் வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தர்மம்


ணக்கம்!
         நாம் ஒரு கோவிலுக்கு செல்கிறோம். கோவிலுக்கு வாசலில் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்துவிட்டு அதன் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறோம். 

ஒரு கோவில் வழிபாடே இப்படி இருக்கும்பொழுது நாம் பரிகாரம் செய்வது என்றால் எப்படி இருக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகள் இருந்தாலும் அந்த ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு தர்மத்தை வைத்து அதனை நடத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

பாக்கியஸ்தானத்திற்க்கு நீங்கள் செய்யவேண்டியது இது தான். பாக்கியஸ்தானம் என்று சொல்லும்பொழுது அதன் அதிபதிக்கு சென்று பூஜை செய்வது கிடையாது. பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய தர்மத்தை செய்துவிட்டு அடுத்தது உங்களின் பூஜை மற்றும் வழிபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் முடிந்தளவுக்கு உங்களின் வீட்டில் ஒருவருக்கு அதிகமாக சமைத்து அதனை அன்னதானமாக செய்யவேண்டும். ஆண்கள் நினைத்தால் கூட சில பெண்கள் இதனை செய்வதில்லை. இவர்க்கு வேலை இல்லை ஏதாவது சொல்லுவார் என்று அலுத்துக்கொண்டு இதனை செய்யாமல் விட்டுவிடுவார்கள். என்னிடம் பேசிய பல நண்பர்கள் இதனை சொல்லியுள்ளனர். அவர்கள் எல்லாம் வெளியில் உணவத்தில் வாங்கி இதனை செய்துள்ளனர்.

நிறைய தர்ம காரியங்களை செய்தாலே போதும் உங்களுக்கு ஏற்படும் செலவுகள் குறைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. தேவையில்லாமல் கொண்டு சென்று சம்பந்தம் இல்லாமல் செலவு செய்வதைவிட இப்படி தர்ம காரியம் செய்து வாழ்வை வளமாக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 28, 2016

பரிகாரம்

ணக்கம்!
          ஒவ்வொரு பதிவுக்கும் நமது நண்பர்கள் கேட்பது சார் பரிகாரம் சொல்லுங்க சார் என்று தான் கேட்பார்கள். எளிமையாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் அந்த கிரகத்திற்க்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யுங்கள் அல்லது தீபம் ஏற்றுங்கள் என்பதை தான் சொல்ல முடியும்.

இன்றைய தேதியில் அனைவரும் இதனை ஒவ்வொரு கோவிலும் செய்வார்கள். தினமும் கோவிலுக்கு சென்று ஏதாவது ஒன்றை செய்துக்கொண்டு தான் வருகின்றார்கள். அனைவரும் இதனை செய்தாலும் பரிகாரம் என்பது வேறு விதமாக அமைகிறது.

பல வருடங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று பயிற்சி செய்து அம்மன் வழியாக அனைத்து பரிகாரமும் வேலை நடக்கிறது. அம்மனின் சக்தியை பயன்படுத்தி செய்கிறேன். அம்மன் சக்தி இல்லை என்றால் கண்டிப்பாக பரிகாரம் வேலை செய்யாது.

பல இடங்களில் ஜாதகத்தை மீறி வேலை நடப்பது எல்லாம் அம்மனின் சக்தியை தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்றைக்கு பல பேர்கள் நன்றாக வாழ்வதற்க்கு அம்மன் சக்தி தான். 

ஒன்றை மட்டும் செய்வது உண்டு கிரகத்தை சாந்தப்படுத்த அந்தந்த கிரகத்திற்க்கு சம்பந்தப்பட்டவரேயே ஒரு பரிகாரம் அதாவது ஏதாவது அபிஷேகம் அர்ச்சனை அல்லது தீபம் ஏற்றசொல்லுவேன். அதன் பிறகு அம்மனை வைத்து அவர்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு. வெளிநாட்டு நண்பர்களுக்கு எதுவும் சொல்லாமல் செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.

நான் எழுதும் அனைத்து கிரகங்களின் பாதிப்பிற்க்கும் தனிப்பட்ட பரிகாரம் எல்லாம் இல்லை என்பது மட்டுமே உண்மை. சரி அம்மனை வைத்து செய்வது என்றால் பணம் கேட்பீர்கள் அதற்கு நாங்கள் என்ன செய்வது என்று கேட்கலாம்.  

தன்னை ஒருவன் சரி செய்துக்கொள்ளவேண்டும் என்றால் கண்டிப்பாக அவன் தனக்கு என்று கொஞ்சம் செலவு செய்தே ஆகவேண்டும். எனக்கு ஜாதககதம்பத்தில் இருந்து வருபவர்களை விட நான் நேரிடையாக சோதிடம் பார்த்து வருபவர்கள் அதிகம். அவர்கள் ஒரு சிலர் ஏழையாக இருந்தவர்கள் தான் அவர்களுக்கு எல்லாம் இலவசமாக தான் செய்துக்கொடுத்து இருக்கிறேன். ஜாதககதம்பத்தில் இருந்து நேரிடையாக என்னை வந்து சந்தித்து கண்டிப்பாக நீங்கள் ஏழையாக இருந்தால் இலவசமாக செய்துக்கொடுத்துவிடுவேன்.

தன்னை சரிசெய்துக்கொண்டால் தான் நாம் முன்னேற்றம் அடையமுடியும் என்பதை தெரிந்துக்கொண்டு ஏதோ என்னுடைய வளர்ச்சியை தடுக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு தேடுதல் செய்யும்பொழுது தான் எனக்கு இது எல்லாம் கிடைத்தது. 

உங்களின் தோஷத்தை சரி செய்யாமல் எதுவும் பெரியதாக நடந்துவிடாது என்பதை புரிந்துக்கொண்டு அதனை சரிசெய்துக்கொண்டு உங்களின் வாழ்க்கையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம். தோஷத்தை நீ்க்காமல் எதுவும் நடக்காது என்பது மட்டும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

செவ்வாய் பலன்


ணக்கம்!
          எந்த இடத்திலும் தவறு செய்தாலும் செவ்வாய் காரத்துவம் உடைய இடத்தில் தவறு செய்தால் செவ்வாய் கிரகத்தால் வரும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். 

நிலத்தின் மீது ஆசை அனைவருக்கும் மிக அதிகமாக இருக்கும். நிலத்தின் மீது ஆசை இருந்தால் அதனை பெறுவதற்க்கு செவ்வாய் கிரகத்தை வழிப்பட்டு நேர்மையான வழியில் அதனை பெறவேண்டும்.

ஒரு சிலருக்கு நிலத்தின் மீது ஆசைப்பட்டு அதனை பெறுவதற்க்கு தவறான வழியில் முயற்சி செய்து பெறுவார்கள். அடுத்தவர்களின் நிலத்தின் மீது ஆசைப்பட்டு அதனை குறுக்குவழியில் பெறுவார்கள். அப்பொழுது தான் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

ஒரு சில ஜாதகங்களுக்கு தீர்வு பெறாமல் போவதற்க்கு இது முக்கிய காரணமாக இருக்கின்றது. பல ஜாதகர்களின் தந்தை குறுக்குவழியில் பிறர் நிலத்தை ஏமாற்றி பெற்று இருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தற்பொழுது பிரச்சினையில் சிக்கி தவிப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் தீர்வு பெறுவது கடினம்.

நிலத்தின் மீது ஆசைபடுங்கள் அதனை பெறுவதற்க்கு செவ்வாய் கிரகத்தினை வழிபட்டு அதனை நல்ல வழியில் பெறுங்கள். செவ்வாய் கிரகத்தை வழிபடும்பொழுதே நல்ல வழியில் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 27, 2016

நட்சத்திரம்


வணக்கம்!
          நம்முடைய ஆட்கள் இந்த நட்சத்திரத்தை படித்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து பேராவது இதனைப்பற்றி கேட்காமல் இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு ஈடுபாடு நட்சத்திரத்தின் பேரில் உங்களிடம் இருக்கின்றது. 

பல நண்பர்கள் எப்படியும் நன்றாக வாழவேண்டும் என்று முயற்சி செய்வது வரவேற்கதக்கது. கண்டிப்பாக என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்வேன். ஒவ்வொருவரும் ஜாதகத்தை காண்பித்து அதனைப்பற்றி  தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வளர்ச்சி கண்டிப்பாக நன்றாக இருக்கவேண்டும் என்றால் எங்களின் பூஜை உதவி செய்யும். ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் நாமே கட்டமுடியாது கொத்தனார் தேவை அல்லவா. அதுபோல தான் எங்களின் வேலையும். எங்களை கொண்டு தான் இது எல்லாம் செய்யமுடியும். 

நீங்களே செய்துக்கொள்கிறேன் என்று வரும்பொழுது அதற்கு நான் தடை சொல்லுவதில்லை. அதற்கு உள்ள வழியை சொல்லுவேன். கண்டிப்பாக உங்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டி அதற்கு வழி தேடிக்கொள்ளுங்கள்.

பூஜை முறைகளை மட்டும் கேட்கவேண்டாம். எங்களின் பூஜை முறை நான் செய்தால் மட்டுமே வெற்றி பெறும். நான் செய்யாமல் எப்படி செய்தாலும் வெற்றி பெறவே பெறாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சந்திரன் கேது கூட்டணி


ணக்கம்!
          சந்திரன் கேது இணைவுப்பற்றி பார்க்கலாம். ஒரு ஜாதகத்திற்க்கு அனைத்து கிரகங்களும் முக்கியம் என்றாலும் சந்திரனின் நிலை கொஞ்சம் அதிகமாகவே கவனிக்கவேண்டிய ஒன்று. நமது ஜாதகமே சந்திரனை வைத்து தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்திரனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அல்லவா. அதனால் தான் அவ்வவ்பொழுது சந்திரனைப்பற்றி எழுதி வருகிறேன்.

சந்திரன் கேதுவோடு இணையும்பொழுது அவர்களின் வாழ்வு அதிகப்பட்சம் துறவறம்போல் தான் இருக்கும். ஞானக்காரன் கேது என்பதால் சொல்லவரவில்லை அவர் பட்ட கஷ்டத்தால் இதனை சொல்லுகிறேன்.

வாழ்க்கையில் நிறைய அனுபவத்தை பெற்ற ஆட்கள் என்று சொல்லுகிறோம் அல்லவா அது எல்லாம் இவர்கள் போன்ற ஆட்களாக தான் இருப்பார்கள். அனுபவம் பட்டால் தான் வரும். நிறைய கஷ்டப்பட்டு இருப்பார்கள் அதனால் வந்து இருக்கும்.

மனக்காரகனோடு கேது இணையும்பொழுது இரண்டு மனம் போல் செயல்படும். பையித்தியம் என்பது ராகுவோடு சந்திரன் சேரும்பொழுது சொல்லுவோம் ஆனால் கேதுவோடு இணையும்பொழுது அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் இருப்பார்கள்.

சந்திரன் அம்மாவை காட்டும் கிரகம் என்பதால் அம்மாவிற்க்கு பிரச்சினையாக இருக்கும். ஒரு சில ஜாதகர்களுக்கு அம்மா இல்லாமலும் இருப்பார்கள்.  அம்மா இருந்தாலும் அவர்களால் எந்தவித பயனும் இல்லாமல் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 26, 2016

பொது பரிகாரம்


ணக்கம்!
          திடீர் என்று ஒரு சில பரிகாரங்கள் செய்ய வேண்டிய காரணத்தால் உங்களுக்கு பதிவை அளிக்கமுடியவில்லை. இனி தொடர்ந்து பார்க்கலாம். தினமும் பதிவை எதிர்நோக்கி பல பேர் இருக்கின்றனர் அவர்களுக்கு கொடுக்கமுடியவிலலை என்ற காரணத்தால் சொன்னேன்.

அம்மன் அருளால் அடுத்த வாய்ப்பை உங்களுக்கு தருகிறேன். பொதுவாக நமது நண்பர்கள் தொடர்ந்து ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்க சார் என்பார்கள். அதாவது பொதுவாக ஒரு பரிகாரத்தை சொல்லுங்க என்பார்கள். 

பொதுவான ஒரு பரிகாரம் என்பது அனைவருக்கும் வேலை செய்யாது. ஏதாவது ஒரு சில நேரத்தில் வேலை செய்யும். எல்லாருக்கும் வேலை செய்துவிடாது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்பொழுது உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த கிரகம் பிரச்சினை தருகிறது என்பது முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த கிரகத்தால் தான் பிரச்சினை வருகிறது என்றால் உடனே அந்த கிரகத்திற்க்கு சென்று அது எந்த நாளாக இருந்தாலும் சரி ஒரு தீபம் ஏற்றிவிட்டு அதன் பிறகு அந்த கிரகத்திற்க்கு ஒரு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வாருங்கள்.

கண்டிப்பாக அந்த பிரச்சினையில் இருந்து ஒரளவு விடுபட்டுவிடலாம். நாம் என்ன டா இது எல்லாம் பரிகாரமா என்று கேட்க தோன்றும். உண்மையாகவே இது நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 24, 2016

கிரக பாதிப்பு குறைய

ணக்கம் !
          நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் அவர்களின் அனுபவத்தை சொல்லிருக்கின்றனர். பலர் இதனை செய்யபோய் நிறைய கஷ்டப்பட்டு அதன் பிறகு அதனை நடத்தி இருக்கின்றனர்.

ஒரு ஆன்மீக நிகழ்வு நடைபெறுவதற்க்கு நமது பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியம் இருக்கவேண்டும். நமது பூர்வபுண்ணியம் நமக்கு வாய்ப்பை வழங்கும் அதனை நிறைவேற்ற பாக்கியஸ்தானம் வேலை செய்யவேண்டும்.

இன்றைய காலத்தில் நாம் பத்தாயிரம் கூட எளிதில் செலவு செய்துவிடலாம். அந்த பணத்தை எடுத்து ஒரு ஆன்மீகநிகழ்வு நடத்தவேண்டும் என்றால் அது எளிதில் நடந்துவிடமுடியாது. நடத்துவதற்க்கும் நமது பூர்வபுண்ணியம் வழிவிட்டுவிடாது. முதலில் அப்படிப்பட்ட வாய்ப்பு வருவது கூட கடினமான ஒன்று தான்.

ஒவ்வொருவருக்கும் நாம் சொல்லுவது ஏதாவது ஒரு ஆன்மீகநிகழ்வில் சென்று பங்குக்கொள்ள பாருங்கள். இப்படி எல்லாம் நாம் பங்குபெற்றுவிட்டால் அதிகபட்சம் கிரகத்தில் இருந்து வரும் பாதிப்பு குறைந்துவிடும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது நமது கர்மா குறையும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு கூட நம்மால் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வரமுடியாது. அப்படிப்பட்ட கர்மாவில் எல்லாம் நம்ம ஆட்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 23, 2016

ஆன்மீக நிகழ்வு


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் அதிகம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயத்தை பார்ப்பதில்லை அதற்கு காரணம் ஆன்மீகத்திற்க்கு என்று கட்டண பதிவு இருப்பதால் இதில் எழுதுவதை விட்டுவிட்டேன். அவ்வப்பொழுது ஒரு சில கருத்துக்களை சொல்லிவருகிறேன். 

ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வை நீங்கள் நடத்தமுடியுமா என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு நிகழ்வை நாம் நடத்தி வைத்துவிட்டால் அதுவே நமக்கு பெரிய பாக்கியம்.

உங்களின் ஊரில் ஏதாே ஒரு கோவில் நிகழ்ச்சியை நீங்கள் நடத்தமுடியுமா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு அதில் சென்று ஈடுபடுங்கள். அந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தும்பொழுது தான் அதில் உள்ள நல்லது கெட்டது தெரியும் எது வந்தாலும் அதனை நாம் நடத்திவிட்டால் அது தான் பெரிய பாக்கியமாக நமக்கு இருக்கும்.

கோவில் என்று வரும்பொழுது அதில் நிறைய சிக்கல் மற்றும் தடைகள் வரும் அதனை மீறி நாம் நடத்தவேண்டும். நல்லது நடக்க பல தடைகளை நமக்கு கொடுப்பது இயற்கையான ஒன்று. அதனை நாம் நடத்திவிட்டால் அதுவே பாக்கியமாக நமக்கு கிடைத்துவிடும். 

கோவில் நிகழ்ச்சி என்று வரும்பொழுது பல சூட்சமமான விசங்கள் நமக்கு கிடைக்கிறது என்பது அனுபவ உண்மை. ஒவ்வொறு ஆன்மீகநிகழ்வுகளிலும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.இதனை படிக்கும் நீங்களும் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வில் பங்குபெற்று நடத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 22, 2016

புதன்


வணக்கம்!
          புதன் கிரகத்தை எல்லாம் நாம் சோதிட கணக்கில்  எடுத்துக்கொள்வது எல்லாம் இருக்காது. பொதுவாக நீங்கள் சோதிடம் பார்க்க சென்றால் உங்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சனி குரு இத்தோடு கதை முடிந்துவிடும். அவ்வப்பொழுது வரும் கோச்சாரபலன்களை வைத்து பலனை சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

லக்கினாதிபதி சனி குரு மற்றும் கோச்சாரபலன்கள் மட்டும் தான் முதன்மை என்றால் பிறகு உள்ள கிரகங்கள் எல்லாம் எதற்க்கு சம்பந்தமில்லாமல் வைத்திருப்பார்களா நாம் சோம்பேறி பட்டுக்கொண்டு அதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. 

உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் வேலை செய்யும் ஆனால் நாம் தான் அதனை பார்ப்பதில்லை என்பது மட்டும் உண்மை. 

இன்றைக்கு நாட்டில் பல சோப்பு கம்பெனிகள் வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கின்றன. இது அனைத்தும் பல கோடிகளை அள்ளி கட்டிக்கொண்டு இருக்கின்றது அதற்கு காரணம் உங்களின் உடலில் உள்ள தோல். உங்களின் தோல் நன்றாக இருப்பதற்க்கு புதன் காரகமாக இருக்கிறார். பல காரத்துவம் உடையவர் தான் புதன் நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.

தோல் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நாம் சோப்பு மற்றும் அழகுசாதனம் எல்லாம் பயன்படுத்துகிறோம் அது எல்லாம் புதன் என்ற கிரகத்திற்க்கு தான் என்பதை மறக்கவேண்டாம். இப்படி பல காரத்துவம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் இருக்கின்றது. அதனை எல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களின் ஜாதகத்தை கணியுங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 21, 2016

பாக்கியாதிபதி நாளில் தர்மம்


ணக்கம்!
          பணம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்று ஓடிக்கொண்டு இருக்ககூடாது கொஞ்சம் கோவில் பக்கமும் நாம் போகும்பொழுது தான் நமது வாரிசுகள் நன்றாக இருக்கும்.

பாக்கியஸ்தானத்தை வைத்து தான் தந்தையை சொல்லுகிறோம் இன்றைய தலைமுறைக்கு பலருக்கு பாக்கியஸ்தானம் கெடுவதற்க்கு காரணம் அவர்களின் தந்தை கோவில் குளங்களுக்கு செல்லாமல் இருந்த காரணத்தால் தான் பாக்கியஸ்தானம் கெடுகிறது.

இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் விழிப்பாேடு இருக்கின்றனர். அதாவது கோவில் குளங்களுக்கு அடிக்கடி சென்று புண்ணியத்தை தேடுகின்றனர். ஒரு சிலர் மட்டும் கொஞ்சம் மாறாமல் இருக்கின்றனர் அவர்களும் மாறிவிட்டால் எதிர்காலத்தில் தீயகிரகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

உங்களின் பாக்கியஸ்தானம் எது என்று பாருங்கள். அந்த பாக்கியஸ்தானத்திற்க்கு அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் தானத்தை அதிகம் செய்யுங்கள் உங்களுக்கு நல்லது அதிகம் நடக்கும்.

பாக்கியஸ்தான அதிபதி கிரகத்தின் நாளில் செய்யவேண்டும். உதாரணத்திற்க்கு உங்களுக்கு லக்கினம் மகரம் என்றால் கன்னி வீடு உங்களின் பாக்கியஸ்தானம். அதன் அதிபதி புதன். புதன் கிழமை அன்று தானம் மற்றும் ஆன்மீக காரியங்கள் அதிகம் செய்யும்பொழுது உங்களின் வாழ்க்கை மற்றும் உங்களின் வாரிசுகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 20, 2016

நட்சத்திர வழி


வணக்கம்!
          நட்சத்திரம் என்ற ஒன்றை சொன்னவுடன் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி கேட்கின்றனர். உண்மையில் நல்ல பலன் கிடைக்கிறது அதாவது நீங்கள் சொன்னதை வைத்து எங்களின் ஜாதகத்தை சோதனை செய்யும்பொழுது அது நல்ல பலனாக இருக்கிறது. இதுநாள் வரை தெரியாத பல விசங்கள் தெரிகிறது என்றார்கள்.

நான் சொல்லுவதை அப்படியே நீங்கள் நம்பவேண்டாம் உங்களின் வாழ்க்கையில் நடக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு சொல்லுங்கள் என்று நான் பலமுறை சொல்லிருக்கிறேன்.  உண்மையை நீங்கள் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் உங்களின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.

ஜாதகம் என்பது நமக்கு ஒரு நல்லவழிகாட்டி இதனை மிகச்சரியாக பார்த்து அதனை நாம் பயன்படுத்தும்பொழுது அது நமக்கு பொக்கிஷமாக அமைந்துவிடுகிறது. இன்றைக்கு பல பேரின் பிரச்சினையை தீர்க்க இந்த நட்சத்திர வழியைதான் நான் பயன்படுத்தி இருக்கிறேன்.

நட்சத்திரம் மட்டும் அல்லாமல் அதற்குள் சென்று எந்த பாதம் என்பதை அறிந்துக்கொண்டு அதனையும் நன்றாக கவனித்தால் இன்னமும் பல நல்ல விசயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பல ஜாதகங்களை எடுத்து நீங்களே சோதனை செய்து பாருங்கள். அனைத்தும் மிகசரியான பலன்களை நீங்களை தெரிந்துக்கொள்ளலாம். அதனோடு பரிகாரத்தையும் செய்து பாருங்கள் நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நட்சத்திர பாதம்


ணக்கம்!
          ராகு கேதுவை பொறுத்தவரை எந்த வீட்டில் இருப்பது என்பதை விட எந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை நன்றாக கவனித்தால் அந்த நட்சத்திர அதிபதியின் பலனை அப்படியே கொடுக்கும்.

இன்றைய தினத்தில் ராகு சென்றுக்கொண்டு இருக்கும் நட்சத்திரம் பூரம். பூரம் நட்சத்திரம் 3 ம் பாதத்தில் ராகு செல்கிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் . சுக்கிரனின் குணத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பூரம் 3 ம் பாதத்தில் குருவும் செல்கிறது. ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் இரண்டு கிரகமும் செல்கிறது.

தோராயமான பலன் என்று பார்த்தால் நட்சத்திர அதிபதி மற்றும் அதே நேரத்தில் செல்கின்ற குருவின் பலனையும் சேர்த்து கொடுக்கலாம். அதே நேரத்தில் குருவுக்கும் ராகுக்கும் ஒத்துவராது. பலனை சரியாக கொடுக்கமுடியாமலும் போகலாம்.

சுக்கிரனின் குணத்தை கொடுக்கவேண்டும். சுக்கிரனின் குணம் கொடுக்க முடியாமல் இருப்பதற்க்கு அதில் செல்லும் குருவின் கிரகம் தன்னுடைய பகைமையை காட்டுவதால் முழுபலன் கிடைக்காவிட்டாலும் ஒரளவு பலனை கொடுக்கும்.

நட்சத்திரம் என்று வந்தால் துல்லியமான பலனை எதிர்பார்க்கலாம். அதற்கும் தற்பொழுது இன்றைய நாளில் செல்வது போல் சென்றால் கொஞ்சம் பிரச்சினையான பலனை கொடுக்கும். தெய்வீக அருளோடு பலன் சொல்லும்பொழுது மிக சரியான பலனை கொடுத்துவிடலாம்.

உங்களின் ஜாதத்தை எடுத்து அதனை நன்றாக பொறுமையாக பார்த்தால் நமக்கு தேவையானபடி ஒரு சரியான திசையை நோக்கி சென்றுவிடமுடியும். சோதிடம் சொல்லுபவர் சரியாக இருந்தால் எல்லாம் நடக்கும் அவர் சரியில்லை என்றால் பார்க்கிறவன் பாடு திண்டாட்டம் தான் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 19, 2016

குரு பெயர்ச்சி


ணக்கம்!
          குரு பெயர்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறபோகிறது. பொதுவாக கோச்சாரபலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால் ஒரு சில விசங்களை மட்டும் உங்களிடம் சொல்லிவிடவேண்டும்.

தற்பொழுது ஏழரை மற்றும் அஷ்டமனியில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் சின்னதாக ஒரு எச்சரிக்கையை விடுக்கவேண்டும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

முதலில் தனுசு ராசிக்கு ஏழரை நடந்துக்கொண்டு இருக்கின்றது. அவர்களுக்கு தற்பொழுது ஏழரை சனி நடக்காது போல் ஒரு உணர்வு இருக்கும் அதற்கு காரணம் குரு கிரகம் உங்களின் ராசியை ஐந்தாவது பார்வையால் பார்ப்பதால் அப்படி இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆனவுடன் இந்த பார்வை விலகிவிடும் அப்பொழுது உங்களுக்கு அதிகமாக ஒரு கஷ்டத்தை உணரவேண்டும்.

உங்களின் தசா நாதன் நன்றாக இருந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் தசாநாதன் சரியில்லை என்றால் ஏழரை கொஞ்சம் அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உங்களை நான் பயமுறுத்தவில்லை கொஞ்சம் எச்சரிக்கையோடு தற்பொழுது இருந்தே செயல்பட துவங்குங்கள். ஒரு மாதம் மட்டுமே இடையில் உள்ளது.

அஷ்டமசனியாக இருக்கும் மேஷராசியினரும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் உங்களின் ராசிக்கும் குரு பார்வை விலகிவிடுகிறது. அஷ்டமசனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

என்ன பயமுறுத்துக்கிறிர்கள் என்று நினைக்கவேண்டாம். வருவதற்க்கு முன் சொல்லிவிடுவது தான் சோதிடத்தின் தன்மை. சரியாக குரு பெயர்ச்சி அன்று உங்களுக்கு பிரச்சினை ஆரம்பம் ஆகாது அதற்கு முன்கூட்டியே நடக்க ஆரம்பிக்கும் என்பதால் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சூரியன்


வணக்கம்!
          சூரிய கிரகத்தை எல்லாம் சோதிடம் பார்ப்பவர்கள் கணக்கில் கூட எடுத்துக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். சூரிய கிரகம் எல்லாம் என்ன செய்துவிடபோகிறது என்ற நினைப்பில் தான். நாம் பிறந்துவிட்டோம் ஆத்மா வந்துவிட்டது அதனால் பெரியதாக ஒன்றும் அதனை கவனிக்கவேண்டியதில்லை என்ற நினைப்பும் இருக்கும்.

இன்று நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அது அதிகப்பட்சம் அரசாங்கத்தை சார்ந்து தான் இருக்கிறது. அரசாங்கம் வழியாக ஒருவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு சூரிய கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.

கொஞ்சம் நன்றாக சிந்தித்து பாருங்கள் கண்டிப்பாக தினமும் அரசாங்கத்தை வைத்து தான் நமது வேலைகள் அனைத்தும் இருக்கும். ஒரு நாள் பேங்க் இல்லை என்றால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. 

ஒரு செல்போன் அழைப்பு வருவதற்க்கு கூட அரசாங்கத்தை தான் நம்பி தான் இருக்கவேண்டும். தனியார் போனாக இருந்தாலும் கூட அதுவும் அரசாங்கத்தை நம்பி தான் இருக்கவேண்டும். நம்மோடு கலந்த ஒன்றை நாம் அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

சூரியன் என்ற கிரகம் உங்களுக்கு நன்றாக இருந்தால் ஒரளவு நன்றாக அனைத்தும் நடக்க ஆரம்பிக்கும். சூரியன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 18, 2016

தர்மமும் வளர்ச்சியும்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் தர்ம சிந்தனை என்பது மட்டும் இல்லை என்றால் அந்த குடும்பம் முன்னேற்றம் என்பது காணமுடியாது. அதாவது ஒரு குடும்பத்தில் மூன்று நபர் இருந்தால் நான்கு பேருக்கு சாப்பாடு தயார் செய்து ஒருவருக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

நிறைய பேர்கள் தனக்கு எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை என்று சொல்லுவார்கள். அவர்களிடம் நான் சொல்லுவது உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் நீங்கள் இதுவரை எந்த விதமான தர்மம் செய்துக்கொண்டு இருந்தீர்கள் என்ற ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள். செய்து இருந்தால் கண்டிப்பாக அது உங்களை காப்பாற்றும்.

ஜாதகம் எப்படி இருந்தாலும் தர்மம் உங்களை காப்பாற்றும். தர்மம் செய்துக்கொண்டு இருந்த குடும்பங்கள் இன்று நல்ல நிலைமையில் தான் இருக்கின்றது. தர்மம் செய்யாத குடும்பங்கள் இன்று பிரச்சினையை பெருமளவு சந்தித்துக்கொண்டு இருக்கின்றது.

ஜாதகம் எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் உங்களின் குடும்பத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். குடும்பம் செய்துள்ள தர்மம் என்ன என்பதை பார்த்தாலே புரிந்துவிடும். நாம் முன்னேற்றம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது தெரிந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விதி தவறு


ணக்கம்!
          சோதிடத்தை வைத்து செய்வதற்க்கு அனைத்திலும் எனது குரு தான் வழிகாட்டி. ஒருவர்க்கு சனி பிரச்சினை கொடுத்துக்கொண்டிருக்கும் எனது குரு சொல்லுவார் செவ்வாய் கிரகத்தை வைத்து பரிகாரம் செய் என்பார். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு இது புரியவில்லை.

தற்பொழுது நான் பலருக்கு செய்யும்பொழுது இது எல்லாம் எனக்கு தெரியவருகிறது. அதாவது ஏதோ ஒரு கிரகம் பிரச்சினை கொடுக்கிறது என்றால் நாங்கள் எதாவது ஒரு கிரகத்திற்க்கு பரிகாரம் செய்து சரி செய்வது உண்டு.

இது முற்றிலும் சோதிட ரீதியாக தவறாக இருந்தாலும் ஆன்மீக ரீதியாக சரியாக வருகின்றது. ஒன்று கடுமையாக வேலை செய்யும்பொழுது அதற்கு எதிர் திசையில் சென்று வேறு வேலையை செய்து அதனை மடக்குவது என்பது ஒரு கலை.

பல நண்பர்களுக்கு இதனை செய்து நான் வெற்றி கண்டு இருக்கிறேன். சோதிட ரீதியாக கண்டிப்பாக இது தவறாக இருக்கும் ஆனால் நல்ல பலனை கொடுக்கிறது.

நம்மை பொறுத்தவரை உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதை நமது நண்பர்கள் கேட்பதில்லை. ஜாதகத்தை கொடுத்து நல்லது நடக்கவேண்டும் என்று மட்டும் சொல்லுவார்கள் நானும் அவர்களுக்கு தகுந்தவாறு செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 17, 2016

நட்சத்திர கோவில்கள்


வணக்கம்!
          நட்சத்திர கோவில்களும் இருக்கின்றன என்று கேள்வி பட்டு இருக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து உங்களுக்கு எந்த கிரகத்தின் பலன் வேண்டும் என்பதை முடிவு எடுத்து அந்த நட்சத்திர கோவில்கள் சென்றும் வழிபட்டுக்கொண்டு பலனை அடையலாம்.

நட்சத்திர பரிகாரம் எங்களின் வழியாக செய்யவேண்டும் என்றால் அதற்கு பணம் கொஞ்சம் அதிகம் செலவாகும் என்று ஏற்கனவே சொல்லிருந்தேன் ஆனால் அதனை எல்லாம் பொறுப்படுத்தாமல் பல நண்பர்கள் இதனை செய்யவேண்டும் என்று தொடர்புக்கொள்கிறார்கள். 

சோதிடம் மட்டும் பார்த்தால் நமக்கு வேலை நடக்காது. ஒரு ஜாதகத்தை வாங்கி வைத்துக்கொண்டு அதனை வைத்து எந்தந்த வழிகள் எல்லாம் முயற்சி செய்யவேண்டுமோ அந்த வழி எல்லாம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சரி செய்துகொடுப்பது நமது வழக்கம்.

ஒரு ஜாதகத்தை எடுக்கும்பொழுது அவர்களுக்கு சரியான ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அவர்களின் பாக்கியஸ்தானத்தை சரி செய்யும் வேலையில் இறங்கவேண்டும். அதற்கு தான் பணம் நாங்கள் வாங்குவது. அதனை சரி செய்துவிட்டு அதன் பிறகு ஜாதகத்தில் உள்ள வேலையை செய்வது உண்டு. 

நீங்களே வழிபாடு செய்தால் கூட நீங்கள் பாக்கியஸ்தானத்திற்க்கு உள்ள வேலையை செய்துவிட்டு அதன் பிறகு நட்சத்திரத்தை வழிபாடு செய்ய ஆரம்பியுங்கள். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நல்ல வழி


ணக்கம்!
          பணத்திற்க்கு குரு காரகன் வகிக்கிறார் என்றாலும் ஒரு சிலர் குருவை மதிக்காமல் நல்ல சொத்துக்களை சேர்த்து செல்வவளத்தோடு திகழ்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி சேர்த்தார்கள் என்று கேட்கலாம் அல்லவா.

குரு கிரகத்திற்க்கு எதிராகவும் கிரகங்கள் இருக்கின்றனவா அல்லவா அவர்கள் அப்படி கொடுப்பார்கள். குரு கிரகத்திற்க்கு எதிராக உள்ள கிரகங்களும் கொடுக்கும் ஆனால் என்ன என்றால் திடீர் என்று அது ஆபத்தில் கூட கொண்டு சென்று விட்டுவிடலாம்.

நீங்கள் பல பேரை இப்படி பார்த்து இருக்கலாம் அதாவது நல்ல பணக்காரர்களாக இருந்துவிட்டு திடிர் என்று மரணம் எய்துவிடுவார்கள். அவர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள்.

நாம் சம்பாதிப்பது பல தலைமுறைக்கு செல்லவேண்டும் நமது வாரிசுகளுக்கும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான ஒரு வழியை தேர்ந்தெடுப்பார்கள்.

குரு கிரகம் வழியாக அதாவது பாக்கியஸ்தானம் வழியாக நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வையுங்கள் அது தான் உங்களுக்கும் உங்களின் வாரிசுகளுக்கும் நல்லது.

இன்று திருச்சி செல்கிறேன். திருச்சியில் உள்ளவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 16, 2016

பணம் பணம் பணம்

ணக்கம்!
          இன்றைய காலத்தில் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று பணம். பணத்திற்க்காக தான் அதிக போராட்டம் நடக்கிறது. பணத்தைப்பற்றி நிறைய நானும் சொல்லிருக்கிறேன்.

பணம் வேண்டுமானால் நாம் சோதிட ரீதியாக நிறைய ஆலோசனை சொல்லுவதும் உண்டு. நட்சத்திரத்தை வைத்து ஒன்றையும் நாம் சொல்லிவிடவேண்டும். பணத்திற்க்கு முதலில் குரு கிரகம் தான் வரும். நம்முடைய ஜாதகத்தில் குரு கிரகம் சரியில்லை என்றால் நமக்கு அவ்வளவு எளிதில் பணம் வந்துவிடாது.

முதலில் குரு கிரகம் நமக்கு நன்றாக இருக்கவேண்டும் என்றால் நம்முடைய முன்னோர்கள் ஆன்மீகத்தில் இருந்து இருக்கவேண்டும் அல்லது ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்து இருக்கவேண்டும். 

நம்ம ஆட்கள் ஒன்று கோவிலை இடிக்க கோவிலுக்கு சென்று இருப்பான் அல்லது ஐயர் தட்டில் இருப்பதை பிடிங்கி தின்பதற்க்கு கோவிலுக்கு போயிருப்பான். நமக்கு எப்படி குரு நன்றாக இருக்கும்?

ஐாதககதம்பம் படிக்கும் உங்களின் குழந்தைகள் அனைவருக்கும் குரு கிரகம் நன்றாக இருக்கும். நீங்கள் ஆன்மீகவாதி என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

குரு கிரகம் தான் சரியில்லை நமக்கு எப்படியாவது பணம் பார்க்கவேண்டும் அதாவது நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்று நினைப்பு இருக்கும் அல்லவா. அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் அதாவது இரண்டாவது வீட்டுக்குரிய கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை பார்த்து அதற்கு பரிகாரம் செய்தால் போதும்.

இரண்டாவது வீட்டுக்குரிய நட்சத்திர அதிபதிக்கு நீங்கள் பரிகாரம் செய்யும்பொழுது உங்களின் தன வீடு நன்றாக வேலை செய்து உங்களுக்கு பணம் வர ஆரம்பிக்கும்.

விரைவில் மதுரையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 15, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். திருவோண நட்சத்திரத்தில் எந்த கிரகம் சென்றாலும் அது நன்மை செய்யும் என்று சொல்லியுள்ளீர்கள். சனிக்கிரகம் அதில் சென்றால் நல்லது நடக்குமா என்று கேட்டார்.

உண்மை சொல்லவேண்டும் என்றால் நட்சத்திரம் என்பது உங்களிடம் சொல்லுவதே அது பரிகாரத்திற்க்காக தான் சொல்லுகிறேன். நம்மை தேடி வருபவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதற்க்காக சோதிடத்தை பல வழிகளிலும் கையாண்டு அவர்களுக்கு நல்லது செய்துக்கொடுத்துக்கொண்டு வருகிறேன். 

நட்சத்திரம் என்பதும் ஒரு வழி அதாவது நட்சத்திரம் வழியாக பரிகாரம் செய்வதற்க்கு பயன்படுத்தும் வழி. இதனை நீங்கள் பரிகாரமாக செய்ய மட்டும் பயன்படுத்துங்கள். 

நீங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அந்தந்த நட்சத்திரம் வரும்பொழுது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும் உங்களுக்கு ஒரளவு நன்மை வந்துவிடும்.

கொஞ்சம் பெரிய அளவில் நாம் சாதிக்கவேண்டும் என்றால் நட்சத்திர பரிகாரம் செய்யவேண்டும் அதற்க்கு நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டி ஜாதகம்


வணக்கம்!
          நட்சத்திரத்தை பற்றி எழுதிய பதிவை படித்துவிட்டு ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு எனக்கு இதனை செய்து தாருங்கள் என்று கேட்டார். உடனே நான் அதனை செய்ய மறுத்துவிட்டேன். காரணமும் என்ன என்றால் ஒரு புதிய நபர் வந்து உடனே எனக்கு இதனை செய்து தாருங்கள் என்றாலும் அதனை செய்வதில்லை. 

ஒருவர் பணம் தருகிறார் என்றாலும் அதற்கு போவதில்லை. கடவுள் எனக்கு நன்றாக அளக்கிறார். எதற்கு முன் பின் தெரியாதவர்களிடம் சென்று செய்யவேண்டும் என்ற காரணத்திற்க்காக இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

ஒருவருக்கு ஒரு ஜாதகத்தை எடுத்து ஒரு நல்லது செய்யவேண்டும் என்றாலும் அவர் ஏதாவது ஒரு வழியில் புண்ணியம் செய்து இருக்கவேண்டும். புண்ணியம் செய்து இருந்தால் அவருக்கு இயற்கையாகவே இதனை செய்ய தூண்டுதல் இருக்கும். 

இன்றைக்கு இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் சும்மா சென்று நீங்கள் உங்களின் நட்சத்திரத்திற்க்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள். அதற்கே நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். இதற்கே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்பொழுது நட்சத்திரத்தை வைத்து பல வேலைகள் செய்யும்பொழுது பயன் எப்படி கிடைக்கும்.

இருட்டில் இருக்கும் உங்களுக்கு ஜாதகம் உங்களுக்கு ஒரு வழிகாட்டி. அந்த வழிகாட்டியை மிகச்சரியாக பயன்படுத்தும் ஒரு லைட் நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தை வைத்து இருட்டு உலகத்தை வெளிச்ச உலகமாக மாற்றமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 14, 2016

விமோசனம் எப்பொழுது?


வணக்கம்!
          ஒருவர் சோதிடம் பார்க்க வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் ஜாதகத்தை நாம் பார்க்க தேவையில்லை அவரை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும். இதுநாள் வரை இந்த தொழிலை செய்து வந்தாலும் அம்மனின் அருள் இருப்பதாலும் நமக்கு கிடைத்த அனுபவம் அது.

உங்களின் குடும்பத்தை நன்றாக கவனித்து பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். நன்றாக வளர்ச்சி நோக்கி வந்தால் எந்த வித சிக்கலும் இல்லாமல் செல்கிறது என்று தெரியும். ஏதோ சிக்கல் இருந்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் தடை வந்துவிடும்.

இதனை எல்லாம் நாம் கவனிப்பதில்லை அந்த காரணத்தால் தான் நாம் முன்னேற்றம் என்ற ஒன்று கிடைக்காமல் தவிக்கிறோம். உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கின்றது என்றால் நீங்கள் உடனே சென்று உங்களின் தந்தை அல்லது தாயாரிடம் கேளுங்கள். ஏதாவது தவறு பிறர்க்கு செய்து இருக்கிறீர்களா என்று கேளுங்கள். கண்டிப்பாக இதனை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

மனிதனின் கெட்ட குணம் இது தான். தன்னுடைய தவறு இது தான் என்பதை ஆராய்ந்து அதனை சரி செய்ய துணிபவன் தான் வாழ்வில் மேல்நாேக்கி செல்வான். சரி செய்யாதவன் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பான். 

உங்களின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதாவது என்ன தவறு என்பதை சொல்லவில்லை என்றால் உங்களின் குடும்பத்திற்க்கு நெருக்கமானவர் அல்லது நெருக்கமான உறவினர்களிடம் விசாரித்து பார்த்தால் கண்டிப்பாக சொல்லுவார்கள்.

அதனை கண்டுபிடித்த உடனே தான் உங்களுக்கு விமோசனம் என்பது கிடைக்கும். அதனை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு விமோசனம் என்பது கிடைக்காது.

இன்று திருச்சி செல்கிறேன். திருச்சியில் உள்ளவர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 13, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          நட்சத்திர பதிவை படித்துவிட்டு பல புதியவர்கள் குழம்பி பாேய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். பல நண்பர்கள் இதனைப்பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். 

நட்சத்திரம் என்ற ஒன்றை எழுதுவது ஒரு சிலர் இதனை பயன்படுத்தகூடும் என்பதால் இதனை எழுதுகிறேன். புரியவில்லை என்றால் அதனை விட்டுவிடுங்கள். நமக்கு என்ன புரிகிறதோ அதனை வைத்து நன்றாக இருக்கலாம்.

நட்சத்திர பதிவு அனைத்தும் உங்களை மேம்படுத்துவதற்க்காக எழுதுகிறேன். தற்பொழுது இருக்கும் பொருளாதார நிலையை உயர்த்தி மேம்படுத்துவதற்க்கு உள்ள ஒன்று. 

சோதிடத்தை பல வருடங்களாக படித்து வருபவர்களுக்கும் அதனை வைத்து என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கும் உள்ள ஒன்று.  பலன் சொல்லும்பொழுது மட்டும் நட்சத்திரத்தை வைத்து ஒரு சிலர் சொல்லுவார்கள்.

தற்பொழுது நீங்கள் ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தில் செல்கிறது என்பதை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொன்றாக பார்த்துக்கொள்ளலாம்.

நாளை திருச்சியில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நட்சத்திர வழிபாடு


வணக்கம்
          நட்சத்திரத்தில் திருவோணம் நட்சத்திரம் ஒரு நல்ல நட்சத்திரம். திருவோணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் இருப்பார்கள். திருவோணம் மகர ராசிக்குள் வரும் உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்கள் எல்லாம் மகர ராசியாக இருப்பார்கள்.

நான் பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். திருவோண நட்சத்திரம் வரும் நாளில் நல்ல காரியம் செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் என்று ஒரு தனிசிறப்பு இருக்கும்.

பெரும்பாலும் நமது கோவில்களில் நட்சத்திரத்தை வைத்து தான் கோவில் திருவிழாக்கள் கூட நடக்கும். அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் வழிபாடு செய்தால் அந்த நட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் வலுமை பெறும்.

நமது ஆட்கள் உடனே சென்று இதனை செய்யவேண்டும் என்று நினைக்க வேண்டாம். நன்றாக ஜாதகத்தை பார்த்து விட்டு அதன் பிறகு உங்களுக்கு இந்த கிரகம் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அந்த கிரகம் செல்லும் நட்சத்திரத்தில் சென்று கோவிலில் வழிபாடு நடத்திக்கொள்ளலாம்.

திருவோண நட்சத்திரத்தில் பொதுவாக அனைத்து கிரகத்திற்க்கும் வழிபாடு செய்யலாம். சந்திரனின் நட்சத்திரம் என்பதால் இதனை செய்யலாம். எது செய்தாலும் சரி உங்களின் ஜாதகத்தை நன்றாக கணி்துவிட்டு அதன் பிறகு செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 12, 2016

பேய்க்கும் மருத்துவம் நோயுக்கும் மருத்துவம்


ணக்கம்!
          இரண்டு மாதத்திற்க்கு முன்பு ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். அவருக்கு உடல்நிலையில் பெரிய பிரச்சினை பல மருத்துவமனையை பார்த்தும் சரியில்லை என்று சொன்னார். நிறைய பணம் செலவாகிவிட்டது என்றார்.

அவரின் ஜாதகத்தை பார்த்தால் அவரின் ஜாதகத்தில் ஆறாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டு அதிபதியோடு தொடர்புக்கொண்டு இருந்தது. அவருக்கு அது சம்பந்தப்பட்ட தசாவும் நடந்துக்கொண்டிருந்தது. 

அவருக்கு என்று ஒரு பரிகாரம் செய்தேன். அந்த பரிகாரம் நன்றாக வேலை செய்தது. இன்று ஒரளவு அந்த வியாதியில் இருந்து விடுதலையாகி வருகிறார். 

முற்காலத்தில் ஒரு வியாதி வந்தால் சொல்லுவார்கள். பேய்க்கு மருந்துவம் பார்க்கவேண்டும் அதோடு மருத்துவத்தையும் பார்க்கவேண்டும் என்பார்கள். உங்களுக்கும் ஏதாவது ஒன்று நடந்தால் அதாவது ஏதாவது நோய் வந்தால் உங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிட்டு அதற்கு பரிகாரம் செய்துவிடுங்கள். அதன் பிறகு மருத்துவத்தையும் பாருங்கள்.

இன்று மருத்துவம் நன்றாக இருந்தால் கூட முதலில் நீங்கள் ஜாதகத்திற்க்கு பரிகாரம் செய்துவிட்டு மருத்துவத்தை ஆரம்பித்தால் உங்களின் நோய் உடனே தீரும். பேய்க்கு மருத்துவம் என்று சொன்னது ஜாதகத்திற்க்கு தான். ஜாதகத்திற்க்கு மருத்துவம் பார்க்கவில்லை என்றால் எத்தனை மருத்துவம் பார்த்தாலும் நோய் தீராது.

மருத்துவமனைக்கு செய்யும் செலவில் ஒரு சதவீதமும் கூட பரிகாரத்திற்க்கு என்று வராது. நம்ம ஆள்கள் பரிகாரத்திற்க்கு ஏன் செலவு செய்யவேண்டும் என்று இதனை விட்டுவிட்டு மருத்துவமனையே கதி என்று கிடைப்பார்கள். அப்படி இருக்கும் நபர்களுக்கு பணம் தான் செலவு ஆகுமே தவிர நோய் தீராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 11, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

ணக்கம்!
                      நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள். அம்மனை அலங்காரம் செய்தவர் திரு இராசிபுரம் இராஜ்குமார் அவர்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

ணக்கம்!
          நமது அம்மன் பூஜையில் வாணவெடிகளும் நடைபெறும். அதாவது வெடிவழிபாடு. அந்த படத்தையும் இணைத்துள்ளேன்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 10, 2016

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

ணக்கம்!
                       இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்,





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 9, 2016

வாழ்க்கை இரகசியம்


ணக்கம்!
          இன்றைய காலத்தில் துல்லியமான ஒரு ஜாதகத்தை கணித்துவிடமுடியும். நிறைய சாப்ட்வேர்கள் அதற்கு உதவகின்றன. அதனை வைத்து நீங்கள் துல்லியமான நட்சத்திரம் எது எந்த பாதத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று பல விசயங்களை நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஏனோ வாழ்ந்தால் போதும் என்றும் நினைப்பவர்களுக்கு சோதிடம் எல்லாம் தேவையில்லை. நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சோதிடம் தேவை. இருக்கின்ற கொஞ்ச காலத்தை நன்றாக அனுபவித்துக்கொண்டு செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக உங்களின் ஜாதகத்தை எடுத்து அலசி ஆராயவேண்டும்.

இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் அவசர சூழ்நிலை மாதிரி வாழ்க்கை சென்றாலும் நிதானமாக இதனை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு செல்லும் நபர்களுக்கு மட்டுமே சோதிடம் வழி வகுக்கும்.

சோதிடத்தை நன்றாக ஆராய்வதற்க்கே அதாவது நீங்கள் பார்ப்பதற்க்கு கூட உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களின் வாழ்க்கை இரகசியத்தை ஆராயமுடியும்.

குரு கிரகம் சரியில்லை என்றால் அவரின் அப்பா அல்லது அவரின் தாத்தா நல்லது செய்து இருந்தால் அவர்களுக்கும் இந்த இரகசியத்தை அறியமுடியும். இதனை நீங்கள் படிக்கும் உங்களுக்கு கண்டிப்பாக குரு கிரகம் அல்லது உங்களின் முன்னோர்கள் நல்லது செய்து இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 8, 2016

நட்சத்திரம்


ணக்கம்!
          நட்சத்திரத்தைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டனர். இதனை எல்லாம் பார்த்து முடித்தவுடன் பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்னமும் பல ஜாதகங்கள் இருக்கின்றன.

நட்சத்திரத்தைப்பற்றி நாம் பார்த்தாலும் அதனை அதிகம் பயன்படுத்துவது பரிகாரத்திற்க்கு மட்டுமே. என்னிடம் பரிகாரம் செய்யவேண்டும் என்றால் மட்டும் நட்சத்திரத்திற்க்கு தொடர்புக்கொள்ளுங்கள். அனைவரும் நட்சத்திரம் என்று வரவேண்டியதில்லை.

வித்தியாசமாக சிந்தனை செய்து பரிகாரம் செய்யும் முறை இதில் இருக்கின்றது. இந்த நட்சத்திரத்தை வைத்து இதனை செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு எடுத்து அதனை செய்து வெற்றிக்கு வழி செய்வது உண்டு. 

ஒவ்வொரு ஜாதகத்திலும் பல புதிர் இருக்கும். இதனை எல்லாம் குருவின் வழிகாட்டுதலோடு செய்வது உண்டு. இதனை நான் உங்களுக்கு சொல்லி நீங்கள் செய்தால் கூட நடக்காது. அதனை எல்லாம் நாங்கள் செய்யும்பொழுது மட்டுமே நடக்கும். அதற்கு குரு பரம்பரை தான் காரணமாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்பேன். அதற்கு வழி இருக்கின்றதா என்பதை பார்த்து அவர்கள் கேட்பதை செய்துக்கொடுப்பது உண்டு. அதற்கு எல்லாம் இந்த நட்சத்திரம் தான் பயன்படுகிறது. ஒரு கிரகத்தின் முழுமையான காரத்துவம் அதிகரிக்க நட்சத்திரத்தை வைத்து தான் செய்யமுடியும். பரிகாரம் செய்யவேண்டும் என்று வரும்பொழுது கண்டிப்பாக தொடர்புக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Tuesday, June 7, 2016

அம்மன் பூஜை


ணக்கம்!
          இந்த மாத அம்மன் பூஜை வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இந்த மாத அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்

சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்
துறையூரை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு கதிரேஷன் அவர்கள்.

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் (USA)அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
மதுரையை சேர்ந்த திரு பாண்டிதுரை அவர்கள்.

பெங்களுரை சேர்ந்த திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
ஓடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்

வழக்கம் போல்
                              திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தியுள்ளார்கள். அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, June 6, 2016

சந்திர தசா


வணக்கம்!
          சந்திர தசா ஒருவருக்கு நடந்தால் சந்திரன் இருக்கும் வீட்டை பொறுத்து பலன் அமையும். சந்திரனுக்கு எந்தவித தீயகிரகங்களின் பார்வை இல்லை என்றால் பலன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்துவிடும்.

சந்திர தசாவில் நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கின்றார்கள். அதே சந்திரதசாவில் வீணாக போனவர்களும் இருக்கின்றார்கள். சந்திர தசா நடக்கும்பொழுது கோச்சாரப்படி தீய கோச்சாரபலன்களும் நடக்காமல் இருந்தால் நல்ல பலனை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

சந்திரதசாவில் ஒருவருக்கு ஏழரை சனி நடைபெறகூடாது. ஏழரைசனி நடக்கும்பொழுது சந்திரதசாவாக இருந்தால் அதிகமான தீயபலன்களை கொடுத்துவிடுகிறது.

சந்திரதசாவில் ஏழரை ஆண்டுகள் சனிக்கு சென்றுவிட்டால் அப்புறம் பலனை எப்படி எதிர்பார்க்க முடியும். சரி ஒரு சிலருக்கு அப்படி ஏழரை நடந்தால் அவர்கள் என்ன செய்வது என்று கேட்கலாம். உங்களின் ஜாதகத்தை பார்த்து அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, June 5, 2016

நட்சத்திரம்


வணக்கம்!
          பல பேர்கள் தற்பொழுது நட்சத்திரம் என்பதைபற்றி அதிக கேள்விகள் கேட்கிறார்கள். பல நண்பர்கள் ஜாதகத்தையும் அனுப்பியுள்ளார்கள்.

இது ஒன்றும் பெரிய விசயம் எல்லாம் கிடையாது. உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்தந்த நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பதை காட்டுவது தான் நட்சத்திரம். பெரும்பாலும் சோதிடர்கள் இதனை கணித்து சொல்லுவார்கள்.

என்னைப்பொறுத்தவரை நட்சத்திரத்தை வைத்து பரிகாரம் செய்வதற்க்கு பயன்படுத்துவது உண்டு. கொஞ்சம் பெரிய இடத்தில் உள்ளவர்கள் இதனை வைத்து நிறைய காரியங்களை சாதிக்க வழி செய்ய சொல்லுவார்கள். நானும் அதனை செய்துக்கொடுப்பது உண்டு.

எல்லாவற்றையும் சோதிட ரீதியாக அலசி செய்யும் வேலை நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு செய்யும் வேலை. இதனை நீங்களே பார்த்து அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் என்னை அணுகி இதனை செய்துக்கொள்ளலாம். கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 4, 2016

சனிக்கிரகம்

ணக்கம்!
          சனிக்கிரகம் தன்னுடைய வேலையை மெதுவாக செய்தாலும் மிக சரியாக செய்யக்கூடிய ஒரு கிரகம். ஒருத்தருக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் முதலில் அவர்க்கு சனியின் பிடிப்பில் இருக்கின்றதா என்பதை பற்றி தான் பார்ப்போம்.

ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டமனி கண்டசனியாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிரகத்திற்க்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு அவரின் வேலை என்னவே அதற்கு பரிகாரம் செய்வோம். 

எந்த ஒரு நல்ல வேலையையும் தடை செய்கின்ற ஆற்றல் சனிக்கிரகத்திற்க்கு உண்டு. நாம் எதனை செய்தாலும் அதனை தடுத்துவிடும். காரியம் தடை ஏற்பட்டவுடன் நாம் என்ன செய்யமுடியும் அதனால் சனிக்கு பரிகாரம் செய்துவிடுங்கள்.

ஏழரை சனியாக இருந்தாலும் அதனை முதலில் நம் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு அந்த ஏழரைக்கு தகுந்தவாறு பரிகாரத்தை செய்யவேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஏற்படும் தடை விலகி உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

சனி என்ற கிரகம் செயல்படும் விதம் அப்படிப்பட்டது. அதற்கு கடிவாளம் நாம் போடவேண்டும் என்றால் தெய்வ அருள் அதற்கு துணை வேண்டும். தெய்வ அருளோடு பரிகாரத்தை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 3, 2016

பணம் தரும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரனின் காரத்துவம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணம் என்ற ஒன்று எந்தவித தடங்களும் இல்லாமல் இருந்துக்கொண்டே இருக்கும். இன்று உலகத்தில் இருக்கும் ஒரு மதத்தினர்க்கு அதிகளவில் பணம் வருவதற்க்கும் சுக்கிரன் தான் காரணமாக இருக்கிறார். வெள்ளிக்கிழமை வழிபாடு செய்பவர்களுக்கு சுக்கிரன் காரத்துவம் இல்லை என்றாலும் பணம் என்பது வரும்.

ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் எடுத்து சுக்கிரனின் காரத்துவம் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். சுக்கிரன் கெட்டு போயிருந்தால் அல்லது சுக்கிரன் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி இருந்தாலும் உங்களுக்கு பணம் என்ற ஒரு விசயம் மிகவும் கடினமாக இருக்கும்.

அதிகமான நபர்களுக்கு சுக்கிரன் கண்டிப்பாக கெட்டு இருக்கும். கெட்டு விட்டது நாம் எப்படியும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கிறோம் அல்லவா. இந்த நினைப்பு இருந்தால் சுக்கிரனை சரி செய்துக்கொள்ளமுடியும்.

நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். சுக்கிரனின் காரத்துவம் உடைய ஒரு சில பரிகாரத்தை செய்தால் போதும். பணம் வருவதற்க்கு என்று நிறைய பரிகார முறையை சொல்லியுள்ளார்கள். அதனை எல்லாம் செய்துக்கொள்ளுங்கள்.

என்னிடம் வந்து பணத்திற்க்கு என்று பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அதற்கு செய்துக்கொடுப்பது உண்டு. அதனை செய்துக்கொண்டு பணத்தை சேர்த்துக்கொள்ளலாம். அனைவருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்று தான் தாராளமாக செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு