வணக்கம்!
சித்தர்கள் வழியை பின்பற்றுபவர்கள் முதலில் சறுக்குவது அவர்கள் போலவே எண்ணுவது தான் பிரச்சினையே. ஒரு சித்தரை பின்பற்றினால் அவரின் பெயரை இவர்கள் வைத்துக்கொண்டு அவரின் பெயருக்கு அவபெயரை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைய சித்தர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கொஞ்சம் பாருங்கள். அகத்தியர் சித்தர் என்று பெயர் வைத்திருப்பார்கள். கோரக்கர் போகர் என்று ஒவ்வொரு சித்தர்களின் பெயரை வைத்துக்கொண்டு இருப்பார்கள். உண்மையான சித்தர்களின் பெயரை கலங்கப்படுத்துவது இந்த மாதிரியான வேலையாள் தான் நடைபெறுகிறது.
நீங்கள் போகர் சித்தரை பின்பற்றினால் கொஞ்சநாளில் அவரின் பெயரை உங்களுக்கு பின்னால் அல்லது முன்னால் இணைத்துக்கொண்டு விடுவீர்கள். அதன் பிறகு அனைத்தும் வீண் தான்.
இன்னமும் சில பேர் இருக்கின்றனர். நான் போகர் வந்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குறிபார்ப்பது அல்லது ஏதாவது செய்வது என்று இருக்கின்றனர். இது அனைத்தும் ஒரு பித்தலாட்ட வேலை மட்டுமே.
நாம் எது செய்தாலும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது மனது என்ன செய்யும் என்றால் அதுபோலவே மாறும் என்பது மட்டுமே உண்மை. சித்தர்களின் வழியில் நீங்கள் முயற்சி செய்யும்பொழுது அந்த சித்தராகவே உங்களை உருமாற்றம் செய்யும் இது மனம் செய்யும் ஒரு தந்திரவேளை இதனை நீங்கள் நம்பாமல் இருந்தால் போதும்.
ஒரு மனிதன் பிறப்பு இருந்தால் அவரை போல இந்த பூமியில் வேறு ஒருவரும் இல்லை என்பது மட்டுமே உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அகத்தியர் என்ற ஒருவர் இருந்தால் கண்டிப்பாக அந்த அகத்தியர் என்ற ஒருவர் போல பலர் இருப்பதில்லை.
சித்தர்களின் வழியை பின்பற்றுங்கள் ஆனால் அவர் தான் நான் என்று சொல்லவேண்டாம். சித்தர்கள் கண்டுபிடித்து அனைத்து வழியையும் பின்பற்றினாலும் அவர்கள் உங்களுக்காக இதனை எல்லாம் கண்டுபிடித்து உதவியிருக்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அந்த சித்தரே நான் தான் என்றால் அங்கு தான் பல பிரச்சினை உருவாகும்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களிடத்தில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு ஆள். ஒரு மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்று எழுதுகிறேன். நான் தான் ராஜேஷ்சுப்பு என்று நீங்கள் சொன்னால் எப்படி இருக்கும் உலகத்தில் இதனை விட வேறு அபத்தம் இருக்கமுடியாது.
சித்தர்களின் வழியை மேற்க்கொள்ளும் அனைவரும் அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும். அதோடு அவர்கள் குருவாக இருந்து எனக்கு வழிகாட்டவேண்டும் என்று நினைத்தால் நல்லது. அனைத்து சித்தர்களும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அதனை விட்டு வேறு எதனை செய்தாலும் உங்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு