வணக்கம் நண்பர்களே !
ஒரு நண்பர் என்னை நேற்று வந்து என்னை சந்தித்தார். அவர் பேசும்போது இந்த பதிவுகளில் ஆன்மீகத்தைப்பற்றி எழுதுவதால் என்ன நடந்தவிடபோகிறது ஒரு இன்ஜீனியர் கல்வியைப் பற்றி எழுதினாலும் அதன் மூலம் வருவாயை மக்கள் ஈட்டமுடியும் ஆன்மீகத்தை வைத்து என்ன செய்யமுடியும் என்று கேள்வி கேட்டார்.
இந்த கேள்வியை காலங்காலங்மாக பகுத்தறிவுவாதிகள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவரும் கேட்கிறார் இருந்தாலும் நானும் அவரின் கேள்விக்கு பதில் அளித்தேன். முதலில் கணிணி பெரும்பாலும் வந்தபோது நான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றேன் அப்பொழுது சொன்னார்கள் இனிமேல் திருவண்ணாமலையில் கிரிவலத்திற்க்கு கூட்டம் வராது என்று சொன்னார்கள் அனைத்தும் கணிணி செய்யும் என்றார்கள். ஒருவருடம் சென்று பார்த்தால் கணிணியில் வேலை செய்யும் அனைவரும் கிரிவலம் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். எதனால் இது ஏற்பட்டது.
நீங்கள் படிக்கும் கல்வி அறிவு என்பது உங்களின் வயிற்றுக்கு சோறு போடும். உங்களின் வாழ்க்கைக்கு வசதியை தரும் ஆனால் உங்களின் நிம்மதிக்கு ஆன்மீகம் தான் சோறு போடவேண்டும். மனிதனுக்கு சோறு தான் முக்கியம் என்றால் மாட்டிற்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் என்னவாக இருக்கும். மிருகத்திலிருந்து மனித மிருகத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அறிவால் தான். அந்த அறிவு சோறு போடுவது மட்டும் இருக்ககூடாது. அவனை பண்படுத்திக்காட்ட வேண்டும். மனிதனை பண்படுத்திக்காட்டுவது தான் ஆன்மீகம்.
மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் அமைதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு சாப்பாடு மட்டும் போதாது அவனை பண்படுத்திக்கொண்டு நிம்மதியாக வாழ அவனுக்கு ஆன்மீகம் வேண்டும்.
இன்று மக்களுக்கு சாப்பாட்டை விட ஆன்மிகம் தான் தேவை என்றாகிவிட்டது. ஏன் என்றால் அவ்வளவு பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த சிக்கலுக்கு ஆன்மீகம் வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகத்தை நாடுகிறார்கள்.
உண்மையில் இந்த ஆன்மிகம் இவர்களுக்கு வழிகாட்டுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்வி. ஆன்மிகத்தை வழிகாட்ட சரியான ஆள் இருக்கவேண்டும். மக்கள் தயாராக உள்ளார்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு வழிகாட்டி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆன்மிகத்தை நமது மக்களுக்கு கற்றுக்கொடுக்க ஆன்மிகவாதிகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நமது சாமியார்களும். சங்கராச்சாயர்களும், ஜீயர்களும் தன்னுடைய மனதை விரிவுப்படுத்தி தங்களுடைய ஆன்மிகத்தால் அவர்களை வழிநடத்தாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சினை. இவர்கள் ஒரு சிறிய கூட்டத்தை வைத்துக்கொண்டு அதிகபடியான மக்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இவர்களின் நினைப்பு என்ன என்றால் இறைவனின் அவதாரங்கள் நாங்கள் என்ற நினைப்பு வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவதாரங்களாகவே மாறிவிட்டார்கள்.
மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல. இந்த மக்களுக்கு பக்தியை பரப்பவேண்டுமே தவிர தன்னுடைய காலில் மக்களை விழவைக்க கூடாது. இன்று என்ன நடக்கிறது இவர்களின் காலில் மக்களை விழவைத்து பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்று மக்களுக்கு பாடம் நடத்த வேண்டியவர்கள் மாயையில் விழுந்துவிட்டார்கள்.
சில நாட்களுக்கு முன் ஒரு நபரை சந்திக்கும்போது அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் ஐயங்காரர் எங்களுடைய குலத்தில் கையில் சங்கு சக்கரம் சின்னம் குத்திவிடுவார்கள். அப்படி நாங்கள் குத்திவிட்டால் நாங்கள் நேரிடையாக இறைவனிடத்தில் சரணடைந்துவிடுவோம் என்றார். இதனை செய்பவர்கள் ஜீயர் என்றும் சொன்னார்.
இது ஒரு சடங்கு மாதிரி தெரிகிறது. இதனால் இறைவனிடம் செல்லமுடியும் என்றால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குத்திவிடலாம். அவன் அவன் எப்படியும் இறைவனிடம் போய் சேரலாம் என்று துடியாய் துடித்துக்கொண்டு இருக்கிறான். முதலில் இந்த ஜீயர் இறைவனிடம் போய் சேருவார என்பதே சந்தேகம். அப்புறம் இத்தனை மக்களை முட்டாளாக மாற்றினால் இவர் எப்படி போய் இறைவனிடம் சேரமுடியும். மிகச்சிறந்த அறிவாளிகளை மிகச்சிறந்த முட்டாள்களாக மாற்றுகிறார் இந்த ஜீயர். இப்படி பல உண்மை சம்பவங்களை உங்களுக்கு கூறமுடியும். இதை விடுவோம்.
இறைவனை உணர்ந்த பிறகு தான் அவனிடம் போய் சேரமுடியும் முதலில் உணர்வதற்க்கு பயிற்சியை கொடுத்து பிறகு சங்கு தான் குத்துங்கள் அல்லது சூலத்தை குத்துங்கள்.உங்களுக்கு எவன் உணர்வதற்க்கு வாய்ப்பை அளிக்கிறானோ அவன் தான் உங்களுக்கு இறைவனின் தூதுவர்.
இன்று பக்தியை பரப்பவேண்டியவர்கள் பணத்தின் பின்னால் போய்விட்டார்கள். பணத்தின் பின்பு போகிறவர்கள் பக்தியை பரப்பிக்கொண்டுள்ளார்கள். நமது தளம் என்பது குறைந்த எண்ணிக்கையில் உள்ள நபர்களை கொண்ட தளம் இது. இதில் பாதிப்பேர் ஆன்மீக பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் பாருங்கள். அந்தளவுக்கு தேவை இருக்கிறது. கொண்டு செல்ல ஆட்கள் இல்லை.
மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது எளிது. குற்றம் சாட்டுவதில் மட்டுமே நமது வேலை முடிந்துவிடகூடாது என்பதால் தான் இந்த பதிவு மூலம் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். குறைகளை நிறைகளாக மாற்ற வேண்டும். அந்த குறைகளை ஜாதககதம்பம் வழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். பல நல்ல பணியை செய்ய திட்டமிட்டு உள்ளேன் அதனைப்பற்றி விவரம் பின்பு தருகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.