Followers

Saturday, May 31, 2014

நல்ல இல்லறத்திற்க்கு ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எத்தனை தடவை சொன்னாலும் ஆன்மீகப்பயிற்சியை ஒரு சிலரை தவிர மீதி இருக்கும் நண்பர்கள் செய்ய மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இவ்வளவு எழுத தெரிந்த எனக்கு இவர்கள் ஏன் இதனை செய்ய நினைப்பதில்லை என்பது தெரியாமல் இல்லை. காரணம் என்ன என்றால் நாம் ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் இல்லறவாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போய்விடும் என்ற தவறான நினைப்பால் பல பேர் பயந்துக்கொண்டு ஈடுபடுவதில்லை.

எந்த காலத்திலும் ஆன்மீகம் இல்லறவாழ்க்கைக்கு எதிரியாக இருக்காது ஒரு சிலர் எதிரிபோல் உங்களிடம் சொல்லுவதால் நீங்கள் பயம்கொள்கிறீர்கள். ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே சிறந்த இல்லறவாழ்க்கை வாழமுடியும். வாழ்வை நன்றாக வாழ கற்றுக்கொடுப்பது ஆன்மீகமே மட்டுமே. 

காமத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே சிறந்த முறையில் காமத்தில் ஈடுபடமுடியும். எப்படி எல்லாம் காமத்தில் உச்சத்தை தொடமுடியும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். சாதாரணமான ஒரு ஆண் காமத்தில் ஈடுபடுவதற்க்கும் ஆன்மீகவாதி காமத்தில் ஈடுபடுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

காமத்தில் நிறைய விசயங்களை ஆன்மீகவழியில் மட்டுமே செய்யமுடியும். உடனே எப்படி சார் என்று கேட்காதீர்கள். ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்துவிடும். ஆராேக்கியமான காமத்திற்க்கு நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியம்.

உடனே இல்லறத்தில் இருப்பவர்கள் ஆன்மீகப்பயிற்சியை ஆரம்பித்து உங்களின் இல்லறத்தை நல்லறமாக மாற்றுங்கள். வயது ஏற ஏற இளமைக்கு திரும்பும் யுக்தி ஆன்மீகத்தால் மட்டுமே முடியும். உங்களுக்கு எந்த வயதனாலும் காமத்தில் ஈடுபட ஆன்மீகப்பயிற்சியை செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, May 30, 2014

நீங்கள் கோடிஸ்வர் ஆக வேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!
                    இந்த பதிவு உங்களுக்குள் மாற்றத்தை தந்தால் எனக்கு மிகப்பெரிய வெற்றி. நான் தொழில் அதிபர்களிடம் பேசும்பொழுது ஒரு சில விசயங்களை பகிர்ந்துக்கொள்வேன் அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். 

இன்றைய குடும்பங்கள் வறுமையில் சிக்குவதற்க்கு முதல் காரணம் அவர்கள் செய்யும் செலவுகள் அவர்களுக்கே தெரியாமல் இருக்கின்றது. ஒரு குடும்பதலைவியிடம் உங்களிடம் தரும் பணத்தை என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டால் வரும் பணம் எங்களின் தேவைக்கு சரியாகவே இருக்கின்றது என்பார்கள். ஒரு லட்சத்தை கொடுத்தாலும் வரும் பணம் செலவுக்கே போதவில்லை என்பார்கள்.

ஒரு குடும்பம் நன்றாக கவனித்தால் போதும் அவர்களின் செலவை குறைக்கமுடியும். மளிகைப்பொருட்களை பற்றி முதலில் உங்களிடம் நான் சொல்லிவிடுகிறேன். இன்றைய காலத்தில் குடும்பத்திற்க்கு மளிகைப்பொருட்களுக்கு செய்யும் செலவு அதிகம். மளிகைப்பொருட்கள் அத்தியாவசியமான ஒன்று தானே அதில் எப்படி செலவை குறைக்கமுடியும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

இன்றைய காலத்தை அவசரஉலகம் என்று நாம் சொல்லிக்கொண்டு நமக்கு நாமே தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். ஒரு ஐம்பது கிராம் மஞ்சள்பொடி பனிரெண்டு ரூபாய் என்று பாக்கெட் போட்டு அடைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் வாங்கி உபயோகிக்கிறோம். வெளியில் சந்தையில் நல்ல மஞ்சளை வாங்கினால் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும்.

பாக்கெட் என்று வந்தாலே அதில் கெமிக்கல் இல்லாமல் பாக்கெட் செய்யமுடியாது. நல்ல மஞ்சளை நாம் நேரிடையாக விவசாயிடமே வாங்கினால் இன்னும் குறைவாக வாங்கலாம். விவசாயிக்கும் நேரிடையாக வியாபாரம் செய்யும்பொழுது அவர்களுக்கும் ஒரு ஊக்கம் அளிப்பதுபோல் ஒரு ரூபாய் கூடுதலாக கூட கொடுத்து வாங்கலாம். இந்தியா விவசாயத்தை நம்பி தான் உள்ளது. விவசாயம் நன்றாக இருக்கும்.

வருடத்திற்க்கு ஒரு முறை நாம் இதனை வாங்கி வைத்துக்கொண்டாலே போதும். பொதுவாக மளிகைப்பொருட்கள் வருடம் முழுவதும் கெடாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியும். தஞ்சாவூரில் மிளகாய் விளையும் அதனை வாங்கி வைத்துக்கொண்டால் போதும் வருடம் முழுவதும் அதனை நான் பயன்படுத்திக்கொள்ளமுடியும் ஆனால் தஞ்சாவூரில் விளையும் மிளகாயை சென்னையில் உள்ள பிரபலமான கம்பெனி வாங்கி அதனை பாக்கெட் போட்டு எனது ஊரில் உள்ள கடையில் விற்றால் அதனை நான் வாங்கி உபயோகப்படுத்தினால் மட்டுமே எனக்கு திருப்தி அளிக்கிறது என்றால் என்னைப்போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் கிடையாது.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள பிரபல கம்பெனிகள் எல்லாம் மளிகைப்பொருட்கள் மீது கண் வைக்கிறத்திற்க்கு காரணம் இதில் அந்தளவுக்கு வருமானம் இருக்கிறது. இன்றைக்கு பெண்கள் பிக்பஷாரில் பொருட்கள் வாங்கினால் தான் பேஷன் என்று நினைக்கிறார்கள். இப்படி வாங்கினால் நீங்கள் வாங்கும சம்பளம் இந்த கம்பெனிக்கே போய்க்கொண்டிருக்கும். அப்புறம் நீங்கள் எப்படி பணக்காரர்களாக ஆகமுடியும்.

நீங்கள் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்றால் முதலில் உங்கள் குடும்பத்தை சேமிக்கவேண்டும் அதன் பிறகு நீங்கள் பணக்காரர்களாக மாறலாம்.ஒவ்வொரு குடும்பமும் இப்படி தேவையற்ற முறையில் பொருட்களை வாங்கி வீணாக செலவு செய்கிறார்கள்.மளிகைப்பொருட்கள் நேரிடையாக நீங்கள் வாங்கும்பொழுது உங்களின் உடல் பாதுகாக்கப்படுகிறது. உங்களின் பணமும் சேமிக்கப்படுகிறது.

இன்றைக்கு நான் அம்மன் ஹோமம் செய்வதாக இருந்தால் ஒரு லிட்டர் நெய் தேவைப்படுகிறது என்றால் கம்பெனி பொருட்களாக இருந்தால் அதன் விலை 530 ரூபாய் வருகிறது. அதே ஊரில் நெய் தயாரிக்கும் இடத்தில் 250 ரூபாய்க்கு கிடைக்கும். எனது நண்பர்களிடம் நீங்கள் உள்ளூரிலேயே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

நீங்கள் மளிகைப்பொருட்களுக்கு செலவு செய்யுங்கள் ஆனால் அதனை நான் சொல்லும் விதமாக வாங்கி பயன்படுத்தினால் உங்களின் பணம் தேவையில்லாமல் செலவு ஆகாது. பெண்களிடம் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அது பெண்களின் இயல்பான குணம். நான் சொல்லுவதை போல் உங்களின் மனைவிக்கு இப்படி சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் அவர்கள் அதனை கடைப்பிடிப்பார்கள். உங்களின் பணம் சேமிக்கமுடியும்.

வசதியாக வாழவேண்டும் என்பது மனிதனின் இயல்பான குணம். சேமித்து வரும்பொழுது உங்களிடம் இருக்கும் பணம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அப்பொழுது நீங்கள் விரும்பியதை வாங்கிக்கொள்ளலாம்.

பணத்தை சேமித்த பிறகு ஒரு கோடிக்கு நீங்கள் கார் வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி தேவையற்ற செலவை தெரியாமல் செய்து வந்தால் தெருக்கோடியில் தான் நீங்கள் இருக்கவேண்டும்.

மளிகைப்பொருட்கள் எல்லாம் இயற்கையில் உள்ளவற்றை நீங்கள் வாங்கி பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் நோய் இல்லாமல் வாழலாம்.உங்களின் பணமும் சேமிக்கமுடியும்


எனது தொழில் நண்பர்களோடு இருக்கும்பொழுது விவாதித்த கருத்து இது. பல நண்பர்களின் ஆலாேசனையும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த பதிவை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அனுப்பி அவர்களையும் பின்பற்ற சொல்லுங்கள்.

நல்ல இயற்கையான ஒரு நாட்டை செயற்கையாக மாற்றுகிறார்கள் அதனை தடுப்பதற்க்கு இந்த முயற்சியாவது நாம் செய்வோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 17


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். எனது நண்பரின் அப்பாவிற்க்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் இருந்தது. ராசி அதிபதி என்பதால் தன்னுடைய தசாவை நன்றாக நடத்தும் என்று எதிர்பார்த்தார்கள்.

சந்திரன் தசா ஆரம்பித்தது கண்ணில் நீர் வடிய ஆரம்பித்தது இடது கண் பிரச்சினையை சந்தித்து. எத்தனையோ மருத்துவர் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. அப்பொழுது மருத்துவம் அந்தளவுக்கு வளர்ச்சியை காணவில்லை. அந்த ஊர் சிறிய ஊர் மருத்துவ வசதியும் குறைவு. 

கடைசியில் அந்த கண் பார்வை திறனை இழந்துவி்ட்டது. அவர்க்கு அதில் இருந்து பிரச்சினை இல்லை ஆனால் பார்வை திறனை இழந்துவிட்டார். பார்வை போய்விட்டது. எனக்கு அந்த நேரத்தில் பரிகாரம் செய்ய தெரியாது. சந்திரனுக்கு விளக்கு மட்டும் போட்டோம். அதில் ஒன்றும் நடைபெறவில்லை.

இப்பொழுது நாம் இருக்கும் நிலையில் இருந்தால் சந்திரனை ஆஞ்சநேயரை வைத்து சரிகட்டி இருக்கலாம். சந்திரனை சரிகட்டவேண்டும் என்றால் ஆஞ்சநேயர் ஒருவர் போதும்.

உங்களுக்கு சந்திரன் பிரச்சினை ஏற்படுத்தினால் ஆஞ்சநேயரை வைத்து சரி செய்துவிடலாம். ஆஞ்சநேயருக்கு ஒரு வெற்றிலை மாலை சாத்தினால் போதும். எந்த பிரச்சினைக்கும் அந்த பிரச்சினைக்கு தகுந்த பரிகாரத்தை செய்துவிடவேண்டும். அதன் பிறகு மருத்துவரை பார்த்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சோதிடத்தோடு ஆன்மீகத்தை சேருங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு அனைவருக்கும் சோதிடம் தெரியும். சோதிடம் தெரிந்தளவுக்கு மக்களுக்கு பிரச்சினையில் இருந்து தப்பிக்க தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதற்கு காரணம் சோதிடம் தெரிந்தளவுக்கு பரிகாரம் செய்ய தெரியவில்லை. 

ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அந்த பிரச்சினையை தடைசெய்ய தான் தெரியவேண்டுமே தவிர பிரச்சினை வருகிறது என்று பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. அந்த பிரச்சினையை தீர்க்க வழியை தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

முன்பு எல்லாம் சோதிடத்தில் இது தான் பிரச்சினை என்று சொல்லதெரியாமல் இருந்தார்கள். இன்று பிரச்சினை இது தான் என்று நன்றாக தெரிந்தும் அதனை தீர்க்க வழி தெரியவில்லை. இதற்கு காரணம் சோதிடத்தை படித்தளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய தெரியவில்லை. ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே பிரச்சினையை தீர்க்கமுடியும்.

சோதிடம் படிக்கும்பொழுதே ஆன்மீகத்தில் ஏதாவது ஒரு தெய்வத்தை எடுக்கமுயற்சி செய்யுங்கள். ஒரு தெய்வம் உங்களிடம் இருந்தால் ஜாதகம் வழியாக வரும் பிரச்சினையை எளிதில் தீர்க்கமுடியும்.

என்னிடம் வரும் வாடிக்கையாளர்க்கு எல்லாம் நான் அதிகப்பட்சம் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தே அனைத்தையும் முடித்து கொடுத்து அனுப்பிவிடுவேன். அதற்கு காரணம் என்னிடம் அம்மன் அந்தளவுக்கு சக்தியோடு இருப்பதால் எளிதில் நடைபெறுகிறது. சோதிடத்தோடு நீங்கள் ஆன்மீகத்தையும் இணைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புண்ணியம்


வணக்கம் நண்பர்களே!
                    புண்ணிய சேர்க்கும் வழியைப்பற்றி அவ்வப்பொழுது சொல்லி வருகிறேன். அதில் புதியதாக ஒன்றை பார்க்கலாம். 

நான் ஆன்மீகப்பயிற்சி செய்யும்பொழுது ஒன்றை செய்வேன். எங்கு ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்வேன். பெரும்பாலும் பண உதவியை செய்வேன். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஏன் அவ்வாறு செய்தேன் என்றால் அவர்கள் வைத்திருக்கும் சக்தியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்க்காக அப்படி செய்தேன். 

ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் உதவி செய்தால் அவர்கள் அறியாமல் அவர்கள் வைத்திருக்கும் சக்தி நமக்கு உதவி செய்யும். நாம் தினமும் ஆன்மீகப்பயிற்சி செய்தாலும் நமது கர்மா மற்றும் தீயசக்திகள் நம்மை தொடர்ந்து செய்யமுடியாதபடி செய்துவிடும். அதில் இருந்து நாம் தப்பிக்க இப்படி ஆசீர்வாதம் பெறவேண்டும். 

ஒரு பெரிய பணக்காரர்களாக கூட எளிதில் ஆகிவிடலாம் ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக மாறுவதாக இருந்தால் அவ்வளவு எளிதில் மாறிவிடமுடியாது. அப்படி ஒரு எதிர்ப்பு நமக்கு வரும். ஆன்மீகப்பயிற்சி செய்வதற்க்கு தடையை ஏற்படுத்திவிடும்.

பல சாமியார்களுக்கு நான் பணஉதவியை செய்திருக்கிறேன். ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் பணஉதவியை செய்தால் அவர்கள் எப்படியும் நமக்கு திருப்பிக்கொடுத்துவிடுவார்கள். அவர்கள் திருப்பிக்கொடுக்கும்பொழுது நாம் அதனைபெறக்கூடாது. ஆன்மீகவாதிகள் எதயையும் தன்னோடு கணக்கில் வைக்கமாட்டார்கள். எத்தனையோ பேர்க்கு இன்று வரை நான் உதவி செய்கிறேன். அவர்கள் என்னிடம் கொண்டுவந்து அதிகமாக பணத்தை கொடுப்பார்கள். ஒரு நாளும் அதனை பெறமாட்டேன். 

ஒரு ஆன்மீகவாதிக்கு நாம் செய்யும் பணஉதவி நமக்கு பல மடங்கு வேறு வழியில் வந்துவிடும் ஆனால் அவர்களின் ஆசீர்வாதத்தை நாம் இழந்துவிடகூடாது. நான் இன்று வேலையில் இறங்கி செய்தேன் அது உடனே நடைபெறுகிறது என்றால் அதற்கு காரணம் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களின் முழுஆசியும் எனக்கு கிடைத்த காரணத்தால் மட்டுமே.

நீங்கள் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு பல கோவில்கள் சென்று வருவீர்கள் அது தவறு இல்லை ஆனால் இப்படி சாமியார்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்க்கு முயற்சி செய்யுங்கள். சாமியாரை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்கள் வைத்திருக்கும் சக்தியின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

ஆசீர்வாதத்தை பெறலாம் என்று எனக்கு பணம் கொடுத்துக்கொண்டு இருக்காதீர்கள். வெளியில் எத்தனையோ நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 29, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு மாதத்திற்க்கு முன்பு ஒரு நண்பர் வழியாக ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். அவர் அந்த நேரத்தில் மிகுந்த கஷ்டத்தில் இருந்தார். அவர் என்னிடம் சோதிடம் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். சிரமபட்டு ஒரு தொழிலை தொடங்கினார். அவர் தொழில் தொடங்கும்பொழுது என்னிடம் சொல்லிவிட்டு தொடங்கினார். 

அவர் தொழில் தொடங்கும்பொழுது அவர் என்னிடம் சொல்லுவதற்க்கு முன்பே எனது வங்கி கணக்கில் சிறிய தொகையை செலுத்திவிட்டு எனக்கு போன் செய்தார். ஏன் இப்பொழுதே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை உங்களுக்கு செலுத்திவிட்டு தொடங்கினால் தான் எனது தொழில் நன்றாக நடக்கும் என்று சொன்னார். நான் நினைத்தேன் என்னடா இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா என்று இருந்தேன்.

அடுத்த மாதமும் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு சொன்னார். சரி என்று நான் அவர்க்கு என்று ஒரு சில சின்ன வேலைகளை செய்ய தொடங்கினேன்.அவர் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவரை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன். நானாக போன் செய்தால் மட்டுமே உண்டு. அவர் எனக்கு போன் கூட செய்யமாட்டார். 

அம்மன் அவருக்கு நிறைய செய்கிறது. இன்று கூட குரு அவர்கள் அவனுக்கு என்ன தேவையோ அத்தனையும் செய்துகொடு அவன் பணம் கொடுக்கிறானோ இல்லையோ அவனுக்கு அனைத்தையும் கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டார். 

பணத்தை அவர் அனுப்புகிறார் என்பதற்க்காக இல்லை அவரின் சரணாகதி நிலை அவரை உயர்த்துகிறது. அம்மனிடம் அப்படி ஒரு சரணாகதி அடைந்திருக்கிறார். அப்படி அவர் சரணாகதி அடையவில்லை என்றால் குரு எனக்கு சொல்லமாட்டார். 

பல பேர் எனக்கு நிறைய பணம் அனுப்பியுள்ளார்கள். அவர் எனக்கு அனுப்பிய தொகை 600 ரூபாய் மட்டுமே. யாருக்குமே கிடைக்காத பொக்கிஷத்தை பெற்றதற்க்கு காரணம் அம்மனின் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. 

அவர் ஜாதககதம்பம் எல்லாம் படித்தது இல்லை. அவரின் நண்பர் சொன்னார். ஒரு முறை என்னை சந்தித்து பேசினார். நம்பிக்கை எப்படி வைக்கவேண்டும் என்பதற்க்கு அவர் தான் ஒரு சிறந்த உதாரணம். இதுவரை யாருக்கும் செய்யாத விசயங்களை எல்லாம் அவருக்காக செய்ய போகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                   நண்பர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டுருந்தார். அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. செவ்வாய் கிரகத்திற்க்கு இரத்ததை தானம் செய்துவிட்டால் செவ்வாயின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாமா என்று கேட்டிருந்தார்.

ஒவ்வொரு கிரகத்தின் பாதிப்புக்கும் அந்தந்த கிரகத்தின் காரத்துவம் உள்ள விசயத்தில் நாம் அக்கறை காட்டினால் அதன் பாதிப்பு ஒரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. அதில் உள்ள அனைத்த பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது.

செவ்வாய்க்கு நீங்கள் இரத்தம் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள் ஆனால் உங்களின் இரத்தத்தை எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்ற விதி செவ்வாய்கிரகத்திற்க்கு கடவுள் விதித்திருப்பார். அந்த நேரத்தில் மட்டுமே இரத்தத்தை வாங்க செவ்வாய்கிரகத்திற்க்கு அதிகாரம் இருக்கும். மற்றபடி நாம் நினைத்த நேரத்தில் சென்று இரத்ததை கொடுத்தவிடமுடியாது.

நமக்கு சாவு வருகிறது என்று சோதிடத்தில் தெரிந்தால் நாம் சுடுகாட்டிற்க்கு சென்று படுத்துவிட்டு வந்ததால் நமக்கு சாவு வராது என்று சொல்லிவிடமுடியாது. இது எல்லாம் ஒரு சின்ன நம்பிக்கை அவ்வளவு தானே ஒழிய முற்றிலும் இது தீர்வாக அமையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    சக்தி என்றால் என்ன என்று கேட்டேன். பல்வேறு நபர்கள் அதனைப்பற்றி சொல்லிருந்தனர். உடலுக்கு தேவையான சக்தியைப்பற்றி சொல்லிருந்தனர்.

சக்தி என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அது எப்படி வேலை செய்கிறது. எத்தனை வகையான சக்தியை நாம் உணர்ந்திருக்கிறோம் என்று மட்டும் பிரித்து நாம் பார்க்க தெரியவில்லை. 

நான் உங்களுக்காக டைப் செய்துக்கொண்டிருக்கிறேன். இதனை நான் டைப் செய்வதற்க்கு எனக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியை நான் பெறுவதற்க்கு தினமும் நான் உணவுகளை சாப்பிட்டு பெற்றுக்கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக நான் டைப் செய்யும்பொழுது எனக்கு ஒரு சோர்வு ஏற்படுகிறது. அப்படி சோர்வு ஏற்படும்பொழுது சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொண்டு மறுபடியும் நான் டைப் செய்ய ஆரம்பிக்கிறேன். அதாவது நான் ஒய்வு எடுக்கிறேன் அல்லது தூங்குகிறேன். மறுபடியும் எனது உடல் தயாராகிவிடுகிறது. இந்த சக்தியை நாம் உணவு வழியாக பெறுகிறோம். இது முதல் வகையான சக்தி. உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ந்த விசயம் இது.

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் உணர்ந்த சக்தி இது. அனைவரும் அதிகப்படுத்தும் சக்தியும் இந்த சக்தி மட்டுமே. முதல் நிலையிலேயே முக்கால்வாசி மனிதர்கள் வாழ்ந்து மறைந்துவிடுகின்றனர்.

இரண்டாவது சக்தி 
                 நான் டைப் செய்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக டைப் செய்துக்கொண்டிருக்கும்பொழுது எனது முழுசக்தியும் இழந்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நான் சாப்பிட்டால் மட்டுமே சக்தியை பெறமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். முழு சக்தியும் இழந்து கண் சோர்வு அடைவதுபோல் இருக்கும் நிலையில் எனது அறை தீ பிடித்து எரிகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த நேரத்தில் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள உடனே ஒடுகிறேன் என்று வையுங்கள். அது இரண்டாவது வகை சக்தி. 

முழு சக்தியையும் இழந்து இருக்கும்பொழுது அவசரம் என்று வரும்பொழுது உடனே ஒடுவதற்க்கு எங்கு இருந்து எனக்கு சக்தி கிடைத்தது. அது தான் அவசரகால சக்தி என்கிறோம். இது அவசரகாலத்தில் மட்டும் வெளிப்படுத்தும். இதனையும் மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். அவசரகாலத்தில் மட்டுமே இது வெளிப்படுகிறது.

மூன்றாவது சக்தி

ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் மயக்கப்பட்டு விழுந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுபடியும் நீங்கள் எழும்பொழுது எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்லுகிறார்கள் அல்லவா.  இது தான் பிரபஞ்சசக்தி என்கிறோம். மயக்க நிலையில் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்கள் இறக்கவில்லை அந்த நேரத்தில் உங்களுக்கு பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்படுகிறது. புரியவில்லை என்று நினைக்கிறீகளா கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

நீங்கள் எதாவது ஒரு வண்டியில் செல்லுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த நேரத்தில் எதாவது ஒரு விபத்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நொடி பொழுதில் நீங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் செய்வீர்கள் அதாவது உயிர் போய் வருவது போல் இருக்கும் அல்லவா. அந்த நேரத்தில் உலகமே நின்றுவிடுவது போல் இருக்கும் அல்லவா. அப்பொழுது தான் கடவுளின் சக்தியை நீங்கள் உணர்கிறீர்கள். பிரபஞ்ச சக்தியோடு தொடர்புக்கொள்கிறீர்கள். கடவுளை நீங்கள் பார்கிறீர்கள் என்று அர்த்தம். 

மயக்க நிலையில் கூட நீங்கள் இருப்பது பிரபஞ்சசக்தியோடு தொடர்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடியும் உங்களிடம் பிறர் வந்து கேட்டால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்லுவீர்கள். நீங்களே மறைந்து போய்விடுகிறீர்கள். இது தான் மரணத்தில் நடைபெறும் நிகழ்வு கூட. இதனை நாம் தியானத்தில் உணரலாம்.


ஒரு வண்டி எடுத்துக்கொண்டு நான் கடவுளை பார்க்க போகிறேன் என்று சென்று தவறாக சென்றுவிடாதீர்கள். எதுவும் திட்டம் போட்டு நடக்ககூடாது அதுவாகவே நடக்கும்பொழுது மட்டுமே இது நடைபெறும்.

எப்படி எல்லாம் அடையலாம் என்பதை வரும் பதிவில் பார்க்கலாம்.

கடவுளை காண தயாரா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 28, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பல நண்பர்களே தொழில் மேல் ஆசை வந்துள்ளது என்று நினைக்கிறேன். எனக்கு போன் செய்து எனது தொழிலுக்கு உதவுங்கள் என்று கேட்கின்றனர். நல்ல விசயம் இது அதே நேரத்தில் அந்த தொழிலைப்பற்றி நடத்தும் நபர்களுக்கே அதனைப்பற்றிய அறிவு குறைவாக இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

தொழில் செய்பவர்களிடம் நான் கேட்கும் பணம் பத்து சதவீதம். பொதுவாக ஒரு தொழில் என்றாலே பத்து சதவீதம் லாபம் வருவதே மிக கடினமான ஒரு விசயமாக இருக்கும். அதனை நான் கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். 

தொழிலுக்கு செய்வது என்பது முதலில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. எப்படி என்றால் ஒரு பூஜை செய்வது என்றால் கேரளாமுறைப்படி குறைந்தது இரண்டு லட்சம் பணம் கேட்பார்கள். இதனை எல்லாம் நான் இவர்களுக்காக செய்யவேண்டும். 

இதனை செய்யும்பொழுது என்னுடைய இடத்தி்ல் நான் செய்கின்ற பூஜைக்கும் அதிக செலவு ஏற்படுகிறது. இதனை எல்லாம் ஜாதககதம்பத்தில் இருந்து வரும் நபர்களுக்கு இலவசமாக செய்துக்கொடுக்கிறேன். இவர்கள் லாபம் பார்த்து எனக்கு பணத்தை தந்தால் தான் எனக்கு பணம் வரும். இவர்கள் வந்த வழியை பார்த்து சென்றுவிட்டால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.

தொழிலுக்கு செய்வது முதலில் எனக்கு பெரிய நஷ்டத்தை தந்தது. இப்பொழுது அளவோடு செய்து வருகிறேன். பெரிய தொழில் அதிபர்களுக்கு மட்டும் நிறைய செய்கிறேன். பெரிய தொழில் அதிபர்கள் என்று வரும்பொழுது அவர்கள் நிறைய பணத்தை தந்துவிடுகிறார்கள்.  ஜாதககதம்பத்தில் வந்த சின்ன தொழில் அதிபர்களால் அந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட முடிவதில்லை. இவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் முன்னேற்றம் ஏற்படுவதற்க்கு கடினமாக இருக்கின்றது.

நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உதவி செய்யும்பொழுது மிகப்பெரிய அளவில் பணம் அவர்களுக்கு கிடைக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே பணத்தை சம்பாதிக்கமுடியும். குறைவாக பணம் வைத்துக்கொண்டு ஆன்மீகவழியில் தொழிலில் சம்பாதிப்பது கடினமாக இருக்கும்.நிறைய பணம் போட்டு தொழில் செய்கிறேன் அதனை பல மடங்கு பெருக்கவேண்டும் என்று வாருங்கள். கண்டிப்பாக அதனை செய்து தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவாம்சம்


வணக்கம் நண்பர்களே!
                    ராசியை வைத்தே பல ஆண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் பல வருடங்கள் இதனைப்பற்றியே சொல்லலாம். ஒரு  மாறுதலுக்காக நவாம்சத்தைப்பற்றி பார்க்கலாம். பொதுவாக அந்த காலத்தில் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் கட்டம் இந்த இரண்டும் தா்ன் இருக்கும் இப்பொழுது உள்ளதுபோல் இருபது கட்டங்களுக்கு மேல் இருக்காது. இரண்டு கட்டங்கள் இருக்கும்பொழுது சொன்ன பலன்கள் எல்லாம் உடனே பலித்தது. இருபது கட்டங்களை வைத்துக்கொண்டு தவறாக பலனை சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

நவாம்சத்தைப்பொறுத்தவரை அதில் என்ன இருக்கின்றது என்பதை விட அனுபவத்தில் நடந்த விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒரு நபர் ஒரு தொழில் செய்துவந்தார். அவர் என்னிடம் வந்து தொழில் நன்றாக இல்லை என்று சொன்னார். அவரின் ஜாதகத்தில் அவர் செய்து வந்த தொழிலுக்கும் அவரின் ஜாதகத்தின் கிரகநிலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அவரின் தொழிலை நிர்ணிக்கும் கிரகநிலைகளை முதலில் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னேன்.

ராசி கட்டத்தில் பத்தாவது வீட்டின் கிரகத்தை வைத்து நாம் தொழிலை சொன்னாலும்  இராசிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அவரிடம் சொன்னால் அது தவறாக போய்விடும். ராசியில் பத்தாவது வீட்டு அதிபதியான புதன். நவாம்சத்தில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்தது. அது எங்கு இருக்கின்றது என்பதைப்பற்றி நாம் கவலைப்படதேவையில்லை. புதன்கிரகம் நவாம்சத்தில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்தது.

அவரிடம் துணிசம்பந்தப்பட்ட தொழிலில் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். துணியிலும் கடைபோல் இல்லாமல் ஏஜென்சி தொழில் போல் செய்து வாருங்கள் என்று சொன்னேன்.இராசியின் பத்தாவது வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த கிரகங்களோடு சேர்ந்து இருக்கின்றது என்பதை பார்த்து நாம் தொழிலை முடிவு செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீக அனுபவங்கள் 164


வணக்கம் நண்பர்களே!
                    இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் சாமியார்களைப்பற்றி உங்களுக்கு தெரியும். இவர்கள் உங்களிடம் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று கற்பிப்பார்கள் ஆனால் அவர்களின் ஒழுக்கம் கேள்வி குறியாக இருக்கும்.  எப்படி இவர்கள் சக்தி உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று ஒரு நாள் நீங்கள் யோசித்து இருந்தால் நீங்களும் கார்ப்பரேட் அளவுக்கு உயர்ந்து இருப்பீர்கள்

நிறைய சாமியார்கள் கொலை கூட செய்து இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் போதிப்பது அன்பு என்ற ஒன்றை போதிக்கிறார்கள். கொலை கொள்ளை இருக்கின்ற அனைத்து தீய செயல்களும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். கார்ப்பரேட் சாமியார்களிடம் சென்று நீங்கள் எதிர்த்தால் அவர்கள் உங்களை கொல்லுவதற்க்கு கூட தயங்கமாட்டார்கள். இதனை எல்லாம் செய்துக்கொண்டு ஆன்மீகத்திலும் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் ஒரு சின்ன சக்தி இருந்தால் மட்டுமே இப்படி எல்லாம் மக்களை கூட்டமுடியும். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் எந்த நேரத்தில் எதனை செய்யவேண்டும் என்பதை சிறப்பாக கற்று இருக்கிறார்கள். நீங்கள் எந்த நேரத்தில் எதனை செய்யவேண்டும் என்பதை தவறாக செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.

நீங்கள் பூஜை செய்துக்கொண்டு இருக்கும்பொழுது வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள். அவர்கள் பூஜை செய்யும்பொழுது பூஜையை மட்டும் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தந்த இடத்தில் உங்களின் மனநிலை இருந்தால் நீங்கள் எப்படி இருந்தாலும் ஆன்மீகத்திலும் இருக்கமுடியும். 

நம்ம மனது இருக்கும் இடத்தில் இல்லாமல் அலைகின்றது அவர்களின் மனது அவர்கள் இருக்கும் இடத்தில் இருப்பதுபோல் வைத்திருக்கின்றனர். மனதை வென்று ஆன்மீகத்தில் நீங்கள இருந்தால் நீங்கள் தான் உலகத்தில் மிகப்பெரிய ஆன்மீகவாதி. தவறுகளைப்பற்றி அவர்களே கவலைப்படாமல் அதனை செய்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு என்ன அதனைப்பற்றி கவலை

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஜாதககதம்பம் சொல்லும் ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் முதல் கேள்விக்கே பதில் அளிக்காமல் இருந்து வந்தேன். இதில் அடுத்த கேள்வியும் கேட்டுவிட்டேன். முதல் கேள்வியை கேட்கும்பொழுது பல நண்பர்கள் என்னைப்பற்றி பெருமையாகவும் மற்றும் அவர்களுக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை சொன்னார்கள். யாரும் இதுவரை சரியான பதிலை சொல்லவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. பங்குபெற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

உங்களுக்கு தெரிந்த சேதியை அப்படியே சொல்லுகிறேன். இரண்டு நண்பர்கள் வழியில் சந்தித்துக்கொண்டனர். ஒருவன் சொன்னான் நான் கோவிலுக்கு செல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான். அடுத்தவன் சொன்னான் நான் வேசி வீட்டிற்க்கு செல்லுகிறேன் என்று சென்றான். 

கோவிலுக்கு சென்றவனின் மனநிலை தன் நண்பன் இந்த நேரம் சந்தோஷமாக இருந்துக்கொண்டு இருப்பான் என்று கோவில் நின்று சிந்தனை செய்துக்கொண்டு இருந்தான். வேசி வீட்டிற்க்கு சென்றவன் தன் நண்பன் இந்த நேரம் கடவுளை நன்றாக தரிசனம் செய்துக்கொண்டு இருப்பான் என்று நினைத்தான். கடவுள் வேசி வீட்டிற்க்கு சென்றவனுக்கு மோட்சத்தை கொடுத்தார் என்று சொல்லுவார்கள். 

நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை எல்லாம் நான் கவலைப்படுவதில்லை எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் கடவுளை நினைத்தால் போதும் என்ற நிலையை நான் முதலில் சொல்லுகிறேன். 

நோய் உள்ளவனிடம் சென்று நீ குளித்துவிட்டு மிக அழகாக சட்டை போட்டுக்கொண்டு நீ வந்தால் மட்டுமே நான் உனக்கு மருத்துவம் பார்ப்பேன் என்று ஒரு மருத்துவர் சொன்னால் அந்த நோயாளியின் நிலை எப்படி இருக்கும்.  நோய் உள்ளவனை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சையை கொடுத்து அவனை காப்பாற்றினால் மட்டுமே அவன் சிறந்த மருத்துவர். 

இந்தியாவில் உள்ள ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் உங்களை நான் சொல்லும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருந்தால் மட்டுமே உங்களை நான் ஏற்றுக்கொண்டு எனது அடிமையாக வைத்திருப்பேன் என்பார்கள். 

நான் உங்களிடம் எந்த சட்டதிட்டங்களும் மற்றும் அடிமையாக வைத்திருக்கமாட்டேன் என்று சொல்லுவேன். இந்த காலத்திற்க்கு  ஏற்ற ஒரு ஆன்மீகத்தை ஜாதககதம்பம் உங்களுக்கு கொடுக்கிறது.ஜாதகதம்பத்தின் ஆன்மீகம் எந்தவிதத்திலும் உங்களை கட்டுபடுத்தாது மற்றும் அடிமைப்படுத்தாது. உங்களை உங்களின் இயல்போடு ஏற்றுக்கொள்ளும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விரைய தசா பகுதி 16


வணக்கம் நண்பர்களே!
                    இன்று காலை சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். விரைய தசாவை முதலில் பார்த்துவிடலாம். ஒரு முறை சங்கரன்கோவில் பக்கத்தில் இருந்து ஒரு நபர் என்னை சந்திக்க வந்தார். அவரின் சித்தப்பா ஜாதகத்தை கொண்டுவந்து காட்டினார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மருத்துவர்கள் இவரை கைவிட்டுவிட்டார்கள் என்று சொன்னார்.

சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜாதகத்தை பார்த்தேன். பனிரெண்டாவது வீட்டில் ராகு சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் அமர்ந்து இருந்தன. அவருக்கு ராகுவின் தசா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவருக்கு காமத்தின் வழியாக வரும் நோய் அவரை தாக்கிருப்பது தெரிந்தது.

சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுதாசவின் கடைசியில் தான் அவரின் ஜாதகத்தை பார்க்க நேர்ந்தது. அவருக்கு என்ன பரிகாரம் செய்தாலும் சரிப்பட்டு வராது. வந்த நபர் என்னிடம் பரிகாரம் இருந்தால் செய்யுங்கள் என்று சொன்னார். அவரை வைத்து நாம் பிழைப்பை நடத்தகூடாது என்று என்ன செய்தாலும் முடியாத ஒன்று சொல்லிவிட்டேன். இறப்பின் இறுதியில் நின்றுக்கொண்டிருக்கும் மனிதனுக்கு என்ன பரிகாரத்தை செய்வது.

கடவுளிடம் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டேன். அவரின் ஜாதகத்தில் விரைய ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் செவ்வாய் மூன்று கிரகங்கள் அமர்ந்து இருந்தன. விரையஸ்தானத்தில் அமர்ந்த கிரகங்கள் கண்டிப்பாக காமத்தில் இழுத்துக்கொண்டு விட்டுவிடும். அதுவும் முறைதவறிய இடத்திற்க்கு இழுத்து செல்வதில் மூன்று பேரும் வல்லவர்கள். இப்படி அமர்ந்ததால் அவர்க்கு அந்த நோய் வந்தது.

இவருக்கு பொருத்தமாக ராகு தசா வேறு நடைபெறுகிறது அல்லவா. ராகு எங்கு அமர்ந்து தசா நடத்தினாலும் அது பிரச்சினையை தரும். அவர் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து நடந்தால் பெரிய பிரச்சினை தான் வரும். சுக்கிரன் மற்றும் செவ்வாய் அதிகமான காமத்திற்க்கும் இழுத்து செல்லவைக்கும் கிரகம் என்பதால் இவருக்கு இப்படிபட்ட நோய் வந்திருக்கிறது. தற்பொழுது இவர் உயிரோடு இல்லை.

கிரகங்கள் இப்படி அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தான் சரியாக இருக்கவேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் விதியை வென்று இருக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 27, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது எல்லாம் நமது நண்பர்கள் கேள்வி கேட்டவுடன் உடனே பதிலை அனுப்பிவிடுகின்றனர். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. ஜாதககதம்பத்தில் எழுதும் விசயங்கள் எப்படி புரியபோகின்றன என்று பல்வேறு நிலையில் நான் சிந்தித்தது உண்டு. இன்றைய காலகட்டத்தில் நான் சொல்லும் விசயங்களை அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்கின்றனர். 

சக்தியைப்பற்றி நான் கேள்வி கேட்டவுடன் பல்வேறு தகவல்களை நமது நண்பர்கள் எனக்கு எழுதி அனுப்பியுள்ளனர். ஒரு சிலருக்கு சக்தியைப்பற்றி புரிந்துக்கொள்ளமுடியவில்லை என்று சொல்லியுள்ளனர். உடல்சக்தியா அல்லது கடவுள் சக்தியா என்று கேட்கின்றனர். உடல் சக்தியில் ஆரம்பித்து கடவுள் சக்தி வரையும் சொல்லுங்கள். 

உங்களுக்கு தெரிந்த விசயத்தை இதில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஆன்மீகஅறிவு எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளவும் இது உதவும் அல்லவா.

சக்தி என்றால் அம்மனை மட்டும் குறிக்கிறது என்று இருக்கின்ற அம்மனைப்பற்றி எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்துவிடாதீர்கள். உங்களுக்கு எப்படி சக்தி அதாவது உடலில் சக்தி எப்படி வேலை செய்கிறது என்று கூட சொல்லுங்கள் அது போதும்.

உங்களைப்பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியவரும். அதே நேரத்தில் இதுவரை நாம் எப்படி எல்லாம் அந்த கடவுளின் சக்தியை உணர்ந்திருக்கிறோம் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ளமுடியும். உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி பேர் கடவுளின் சக்தியை உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் அது தான் கடவுளின் சக்தி என்று தெரியாமல் இருந்திருக்கின்றனர். இதனைப்பற்றி உங்களுக்கு தெரிந்த விசயத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 26, 2014

கேள்வி



வணக்கம் நண்பர்களே!
                    சக்தியைப்பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் நீண்டநாட்களாக நினைத்த இருந்தேன். அதனை டைப் செய்யவேண்டும் என்று நினைப்பதற்க்கு மறந்தவிடுவேன். இன்று எப்படியாவது அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்பதற்க்காக உங்களுக்கு கொடுத்துவிட்டேன். முதலில் நாம் ஒரு கேள்வியோடு இதனை தொடங்கலாம் என்று நினைத்து உங்களிடம் கேள்வியை முன் வைக்கிறேன்.

ஆன்மீகத்தைப்பற்றி நான் கேள்வி கேட்கும்பொழுது பல விசயங்கள் என்னை நோக்கி வந்தது. அதைப்போல் சக்தி என்றால் எப்படி எல்லாம் வேலை செய்யும். உடலில் எப்படி சக்தி இருக்கின்றது அதனைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள்.

சக்தி என்றாலே ஒரு இடத்தில் நாம் அதனை பிடித்து வைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அது ஒரே இடத்திலும் நின்றவிடகூடியதும் அல்ல என்று உங்களுக்கு தெரியும் ஆனால் நான் சக்தி வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். சக்தி என்பதை தேவைப்பட்டால் மட்டுமே நான் பெற்றுக்கொள்வது போல் வைத்திருக்கிறேன்.

இந்த சக்தியை பற்றி நீங்கள் சொல்லுங்கள். அதன் வழியாக உங்களுக்கு அதாவது உங்களின் ஆன்மீகமுன்னேற்றத்திற்க்கு ஒரு நல்ல வழியை சொல்லிதருகிறேன். இதனை யார் சொல்லுகின்றார்களோ அதாவது எனக்கு டைப் செய்து அனுப்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பகிர்ந்துக்கொள்வதாக எனக்கு ஒரு எண்ணம். 

சக்தி என்றால் என்ன?
சக்தியை எப்படி நமது உடல் பெறுகிறது?
சக்தியின் நிலைகள் எத்தனை?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆத்மபலம்



வணக்கம் நண்பர்களே!
                    இந்த பிரபஞ்சசக்தியை விட உங்களின் ஆத்மாவின் சக்தி அதிகம் என்று நான் சொல்லிருக்கிறேன். ஆத்மாவின் சக்தியை நாம் உயர்த்திக்கொண்டி இருந்தால் மட்டுமே நாம் அடைய நினைக்கும் இலக்கை நாம் அடையமுடியும்.

நமது ஆத்மா பல பிறவிகளை எடுத்து வந்ததால் அது கழைப்பை அடைந்துள்ளது. ஆத்மாவிற்க்கு பலம் சேர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று உங்களிடம் சொல்லுவது எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே. காயத்ரி மந்திரம் என்பது ஆத்மாவிற்க்கு பலம் சேர்க்கும் விதம் என்று உங்களிடம் சொல்லி அதனை செய்ய சொல்லி வருகிறேன்.  விடியற்காலையில் எழுந்து பிராத்தனை செய்யுங்கள்.

நான் பார்த்தவரையிலும் ஜாதககதம்பம் வழியாக வந்த நண்பர்கள் அனைவரும் ஆத்மபலம் குறைந்தவர்களாக தான் இருக்கின்றார்கள். அதே நேரத்தில் அவர்கள் அடைய நினைக்கும் இலக்கு வெகுதொலைவில் இருக்கின்றது அவர்கள் அடைய நினைக்கும் இலக்கிற்க்க மிக அதிகமான ஆத்மபலம் வேண்டும்.

அவர்களிடம் ஆத்மபலத்தை அதிகரிக்கும் வழியை சொல்லுவேன். இல்லை என்றால் அவர்களுக்கு எப்படி அம்மனை வைத்து ஆத்மபலத்தை உயர்த்துவது என்பதை யோசித்த செய்துக்கொடுப்பது வழக்கம்.

நீங்கள் அடைய நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் சரியானது தான் ஆனால் உங்களின் ஆத்மாவில் அந்த பலம் இருக்கின்றதா என்று பார்த்து உங்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்கும்பொழுது உங்களின் இலக்கை எளிதில் அடையமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஆன்மீக அனுபவங்கள் 163


வணக்கம் நண்பர்களே!
                    பெரும்பாலும் அனைவருக்கும் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனை நோக்கி முக்கால்வாசி பேர் ஓடிக்கொண்டு இருப்பார்கள். இதில் யார் வெற்றி அடைகிறார்கள் என்பது அவர்களின் முயற்சி மற்றும் அவர்கள் செய்த புண்ணியத்தை பொருத்த விசயம் என்று சொல்லுவோம். இதனை மீறி ஒரு செயல் ஒன்று இருப்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

உங்களின் ஆத்மாவில் அனைத்து விசயங்களும் படிந்து இருக்கலாம். உங்களின் முன்னோர்களின் ஆத்மா உங்களுக்கு உதவி புரியவேண்டும். பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களின் முன்னோர் ஒருவர் இருந்து அவர் முயற்சி எடுத்து தோற்று இருந்தால் அவர் உங்களின் வழியாக முயற்சி எடுப்பார். இறந்த அவரின் ஆத்மா உங்களுக்கு உதவி புரியும். அவரின் ஆத்மா உங்கள் ஆத்மா வழியாக அவரின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.

பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாகவே இருக்கின்றார்கள் அல்லவா. அவர்களின் ரகசியம் இது தான். ஒருத்தர் அந்த வீட்டில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் அவர்களின் பரம்பரைக்கு தங்களின் எண்ணங்களை கடத்துகிறார்கள்.

ஒரு சில குடும்பங்களின் தொடர்ந்து இசை வல்லுனர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளும் அதனை பின்தொடர்ந்து அதே துறையில் வருவதற்க்கு காரணம் இது தான். அவர்களின் ஆத்மா இவர்களுக்கு உதவி புரியும்.

உங்களின் முன்னோர்கள் கோவில் கோவிலாக ஆண்டிபோல் சுற்றிக்கொண்டு இருந்தால் நீங்களும் அது போல் தான் இருப்பீர்கள். அவர்களின் நிறைவேறாத எண்ணம் உங்களின் மீது பாய்ந்து உங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.

நான் உங்களை பணக்காரர்கள் இருக்கும் இடத்திற்க்கு செல்ல வைப்பதும் இந்த முறையில் தான். நீங்கள் பணக்காரர்களாக இல்லை என்றாலும் உங்களின் மகன் பணக்காரன் ஆகிவிடுவான். இன்றைக்கு நீங்கள் செய்யும் செயல் பல கோடி ஆண்டுகள் உங்களை பின்தொடர்ந்து வருகின்றது என்பது உங்களுக்கே தெரியாது.

உங்களின் முன்னோர்களுக்கு திதி எல்லாம் நான் செய்ய சொல்லுவதற்க்கு காரணம் யாராவது நல்ல பணக்காரர்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு இறந்து இருந்தால் அவர்களின் புண்ணியம் மற்றும் எண்ணங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குலதெய்வ ஆண்டு பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    தற்பொழுது தஞ்சாவூர் அருகில் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். அம்மனின் வருடாந்திர பூஜை இன்று திங்கள்கிழமை நடைபெறுகிறது. பங்காளிகள் அனைவரும் சேர்ந்து பூஜை போடும் விழா.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த பங்காளிகள் அவர்களின் குலதெய்வத்திற்க்கு என்று பூஜை செய்வார்கள் அல்லவா. அதைப்போல் நமது அம்மனின் குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் சேர்ந்து பூஜை செய்யும் விழா இது.

மாதம் தோறும் நாம் செய்யும் பூஜை என்பது வேறு. குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பூஜை செய்யும் விழா இது. இந்த விழாவில் பலவித நிகழ்ச்சிகள் இருக்கும். அனைத்தும் இரவில் மட்டுமே நடைபெறும். விடியவிடிய பூஜைகள் நடைபெறும்.

இந்த பூஜையில் பங்கேற்பதற்க்காக மறுபடியும் நமது அம்மன் கோவிலுக்கு வந்து இருக்கிறேன். உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். இந்த பூஜையை படம் எடுப்பதில்லை. மனதார உங்களுக்காக பிராத்தனை மட்டும் செய்கிறேன்.

உங்களின் குலதெய்வத்திலும் இந்த பூஜையை வருடத்திர்க்கு ஒரு முறை செய்வார்கள். அதில் கண்டிப்பாக நீங்கள் கலந்துக்கொண்டு உங்களின் குலதெய்வத்தின் ஆசியை பெறவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 24, 2014

ஆன்மீக அனுபவங்கள் 162


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக அனுபவங்களை பார்த்து நீண்ட நாள்களாகவிட்டது. இன்று பார்த்துவிடலாம். மனிதனின் எண்ணங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லுவது உண்டு. உங்களின் எண்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வழியை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதைப்பற்றி மறுமுறை சொல்லி மேலும் ஒரு தகவலையும் தருகிறேன்.

உங்களின் வீட்டில் நாய் இருந்தால் அதனை நீங்கள் பார்க்காமல் உங்களின் மனதில் அந்த நாயை இப்பொழுது அடிக்கபோகிறேன். அந்த நாயை கொல்லபோகிறேன் என்று உங்களின் மனதில் கோபத்தை காட்டுங்கள். அந்த நாயை பார்க்காமல் சொல்லிபாருங்கள். அந்த நாள் உங்களை பார்த்து குரைக்க ஆரம்பித்துவிடும். இதில் இருந்து என்ன தோன்றுகிறது என்றால் உங்களின் எண்ணங்கள் அந்த நாயை சென்று தாக்குகிறது. உங்களுக்கும் அந்த நாய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை ஆனால் நாய் உங்களைப்பார்த்து குரைக்க ஆரம்பிக்கிறது. இது தான் எண்ணங்களின் சக்தி.

இந்த எண்ணங்களை மேம்படுத்த மேம்படுத்த அது இந்த பிரபஞ்சம் முழுவதும் செல்லுகிறது. நான் சென்னையில் அமர்ந்து இந்த எண்ணங்களை அமெரிக்காவில் உள்ளவனுக்கு அனுப்பமுடியும். ஏன் இந்த பிரபஞ்சம் முழுவதும் அனுப்பமுடியும். இதனை தான் நான் செய்துக்கொண்டு இருப்பேன். 

உங்களின் எண்ணங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கும். அதனை நீங்கள் மேம்படுத்தி மேம்படுத்தி வெளி எல்லைகளுக்கும் அனுப்ப ஆரம்பித்தால் நீங்களும் பெரிய சக்தி படைத்த ஆள். உங்களின் ஆத்மசக்தியை மேம்படுத்த மேம்படுத்த இந்த எண்ணங்களை பரப்பும் சக்தி அதிகரிக்கும். காயத்ரி மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க உங்களின் ஆத்மா பலம் பெறும். உங்களின் எண்ணங்களை எளிதில் கடத்தமுடியும்.

காயத்ரி மந்திரம் ஜெபிக்காமல் கூட இதனை நீங்கள் செய்திருப்பீர்கள். நீங்கள் காதலில் விழுந்திருந்தால் உங்களின் காதலியை நினைக்கும்பொழுது உங்களின் காதலி உங்களுக்கு போன் செய்து பேசி இருப்பாள். இது எல்லாம் நடப்பது உங்களின் ஆத்மாவின் சக்தியால் என்பதை அப்பொழுது உணர்ந்திருக்கமாட்டீர்கள். 

காதலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அடுத்தவிசயத்தில் நீங்கள் கொடுப்பதில்லை. உண்மையில் அனைத்து விசயத்திலும் நீங்கள் முக்கியதுவம் கொடுத்தால் இது எல்லாம் உங்களுக்கு எளிதில் நடைபெறும். பயிற்சி செய்யவேண்டிய ஒரு விசயத்தை கடவுள் இயற்கையாக நமக்கு கொடுக்கிறார். நாம் உணரும் நிலையில் இருப்பதில்லை. உடனே நீங்கள் ஆத்மாவின் சக்தியை மேம்படுத்த ஆரம்பியுங்கள். 

உலகத்தில் உள்ள சக்திகளிலேயே உங்களின் ஆத்மா தான் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒன்று அதற்கு பிறகு தான் அனைத்தும் என்பதை முதலில் உணர்ந்தால் போதும். 

பிரபஞ்சம் முழுவதும் தேடிப்பார்த்தாலும் உங்களின் ஆத்மாவிற்க்கு ஈடு வேறு ஒன்றும் கிடையாது. என்ன அதனை நீங்கள் உணர்வது கிடையாது. உணர்ந்தால் போதும். நான் சொன்ன விசயத்தை கடைபிடித்து பாருங்கள் அப்பொழுது நான் சொல்லுவது உண்மை என்று தெரியவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அவசியமான பதிவு


ணக்கம் ண்பர்களே!
                    பல நண்பர்கள் என்மீது கோபத்தோடு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்த ஒன்று. அது என்ன என்றால் வாடிக்கையாளர்களை சந்திப்பது கிடையாது. பரிகாரத்தை செய்வது கிடையாது இவர் ஏன் இப்படி திமிராக இருக்கிறார் என்று மனதிற்க்குள் நீங்கள் கேட்பதை என்னோடு நெருங்கிய நண்பர் என்னிடம் வெளிப்படுத்தியுள்ளார். 

இதனைப்பற்றி நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மேலும் புரிகின்ற மாதிரி சொல்லவேண்டும் என்று தான் இந்த பதிவை தருகிறேன். உங்களை சந்திக்ககூடாது. பரிகாரம் நான் வந்து உங்களுக்கு செய்யகூடாது என்று சொல்லுவதால் எனக்கு தான் நஷ்டம். பணம் வரவு இருக்காது என்பது எனக்கு நன்றாக தெரியும். பணத்தின் தேவையை நாம் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் உங்களுக்கு இதனை எல்லாம் செய்துக்கொண்டு இருந்தால் எத்தனை பேருக்கு செய்துக்கொண்டு இருக்கமுடியும். எத்தனை காலம் தான் செய்துக்கொண்டு இருக்கமுடியும். மாறாக உங்களுக்கு இதனை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டால் நீங்களே பல பேரை உருவாக்கிவிடுவீர்கள். ஒரு குரு என்பவர் ஒரு நல்ல குருவை தான் உருவாக்கவேண்டுமே தவிர ஒரு சிஷ்யனை உருவாக்ககூடாது என்று சொல்லுவார்கள். உங்களை நான் அடிமைப்படுத்த நினைக்கவில்லை. மாறாக உங்களுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுக்கிறேன்.

கொஞ்ச காலம் கஷ்டப்பட்டால் நீங்களே என்னைப்போல் உருவாகிவிடுவீர்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் தனி சுதந்திரமானவன். அவனை அடிமைப்படுத்தகூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். எதற்கு ஒவ்வொரு ஆன்மீகவாதிகளிடம் சென்று நீங்கள் அடிமைப்படவேண்டும். நீங்களே ஆன்மீகவாதியாக மாறிவிடமுடியும் என்ற நிலை இருக்கும்பொழுது அடுத்தவன் சொல்லுவதை கேட்டுவிட்டு அவனுக்கு ஏன் கொடிபிடிக்கவேண்டும்.

என்னை சந்திக்ககூடாது என்பதின் அர்த்தம் இது மட்டுமே. உங்களை எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக சந்திக்கிறேன். அடுத்தது உங்களின் பயிற்சியை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் அது தான் உங்களை மேம்படுத்தும்.

நான் சாகவேண்டும் என்றால் நான் தான் சாகவேண்டும் உங்களுக்காக நான் சாகமுடியாது. அதைப்போல் நீங்கள் சாகவேண்டும் என்றால் நீங்கள் தான் சாகவேண்டும். பிறர் வந்து உங்களின் சாவை ஏற்கமுடியாது. வாழும் காலம் குறைவு. பிறந்த நாளை திரும்பி பார்த்தால் இறப்பு உங்களின் முன்வந்து நிற்க்கும். என்னடா அதற்குள் இவ்வளவு காலம் சென்றுவிட்டதே என்று தோன்றும்.

இறப்பிற்க்குள் இறைவனின் சுவையை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதில் நீங்கள் விடாபிடியாக இருக்கவேண்டும். எனக்கு இந்தளவுக்கு ஆன்மீகம் வந்ததற்க்கு காரணம் நான் இளம்வயதில் ஆன்மீகபயிற்சியை தொடங்கியதால் மட்டுமே அதிக சக்தியை எடுக்கமுடிந்தது. அதேப்போல் நீங்களும் வாழ்க்கையை வீணடிக்காமல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

இளம்வயதில் அல்லது இல்லறத்தில் இருந்தால் ஆன்மீகத்திற்க்கு செல்லகூடாது என்று பல பேர் உங்களை பயமுறுத்துவார்கள் அது தவறான கருத்து. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவைப்படும். உங்களின் இல்லறம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக ஆன்மீகம் தேவை. நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 23, 2014

விரைய தசா பகுதி 15


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவில் ஒரு அனுபவத்தை சொல்லுகிறேன். படித்து பாருங்கள். ஒரு நபர் சோதிடம் பார்க்க வந்தார். அவரின் ஜாதகத்தில் விரைய வீட்டில் புதன் அமர்ந்து இருந்தது. புதனோடு சூரியனும் சேர்ந்து அமர்ந்து இருந்தது. இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இப்பொழுது எல்லாம் திருமணம் நடந்தால் பெண்களின் நினைப்பு என்ன என்றால் அந்த பையன் வீட்டில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளகூடாது என்று நினைக்கிறார்கள். வரும் கணவன் தன் பேச்சை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர். சொந்த வீட்டில் வீட்டில் இருந்து பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

இதனை எல்லாம் காலத்தின் கோலம் தான் சொல்லவேண்டுமே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இவரின் மனைவியும் இவரை தன் வீட்டோடு இருக்க வேண்டும் நீங்கள் வந்துவிடவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். பையன் முடியாது என்று சொன்னவுடன் ஏகாப்பட்ட பிரச்சினை உருவாக்கிவிட்டது அந்த பெண்.

பையனின் வீட்டில் சொத்து இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களை துரத்திவிடவேண்டும் என்று நினைப்பார்கள். அதனாலேயே வீட்டில் பிரச்சினையை கிளப்பிவிடுவார்கள். பையனின் வீட்டில் சொத்து இல்லை என்றால் அந்த பையனின் சம்பளத்தை முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து பிரித்து கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

இவரின் வீட்டில் சொத்து இல்லை பையனை பெண்ணின் வீட்டிற்க்கு வா என்று சொல்லி வற்புறுத்தியுள்ளார். பையன் முடியாது என்று சொன்னவுடன் பெண்ணின் தந்தை வந்து அவரும் பிரச்சினையை கிளப்பிவிட்டார். புதன் மாமனுக்கு காரகம் வகிக்கிறார். புதனின் தசாவில் இவர் பிரச்சினையை சந்திக்கிறார். விளைவு பஞ்சாயத்து வரை சென்று இருக்கிறது. பஞ்சாயத்து செய்தும் ஒன்றும் பிரச்சினை தீரவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து கேட்டுவிட்டது அந்த பெண். இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைக்காதீர்கள். இதைவிட பெரிய அளவில் எல்லாம் பிரச்சினை நடக்கிறது. கோர்ட்டிற்க்கும் வீட்டிற்க்கும் இழுத்து அடித்து இவரை உண்டு இல்லை என்று செய்துவிட்டது அந்த பெண்.

திருமண வாழ்க்கையே வேண்டாம் பா என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த பிரச்சினைக்கு முதல் காரணமாக அந்த பெண்ணின் தந்தையை தான் சொல்லவேண்டும். அவர் தான் பெரிய அளவில் பிரச்சினையை உருவாக்கிவிட்டார். புதன் பனிரெண்டில் இருந்து தசா நடந்தால் திருமணம் நடந்து இருந்தால் பெண்ணின் தந்தை வழியாக மிகப்பெரிய இழப்பை சந்திக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                    பெரும்பாலான நண்பர்கள் எதிர்பார்க்கும் விசயம் ஏதாவது பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று தான் இருக்கின்றது. எத்தனையோ வழிபாட்டு முறைகளை சொல்லிக்கொடுத்தாலும் மக்களிடம் இருக்கும் சோம்பேறி தனம் அடுத்தவர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைக்கிறது.

நான் பரிகாரம் செய்யும்பொழுது விஷேசமாக ஒன்றும் செய்வதில்லை. பதிவில் இருக்கும் விசயங்களை அப்படியே பரிகாரமாக உங்களுக்கு செய்யபோகிறேன். உங்களிடம் இருந்து கூடுதலாக பணம் வாங்கபோகிறேன் வேறு ஒன்றும் கிடையாது.

உங்களின் மனநிலை எனக்கு பணம் கொடுத்து செய்தால் உங்களுக்கு காரியம் வெற்றி அடையும் என்ற நிலையில் வைத்திருக்கிறீர்கள்.என்னுடைய வழிபாட்டு முறைகளை நீங்கள் பின்பற்றி முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்க்காக தான் இதனை கஷ்டப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு வழிபாட்டு முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் போதும் உங்களுடைய பிரச்சினைகள் குறைய ஆரம்பித்துவிடும்.

நான் பரிகாரம் சொல்லும்பொழுது அதனை எப்படி செய்யவேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிடுகிறேன். அதனை நீங்கள் செய்துக்கொள்வது உங்களுக்கு பணம் செலவை குறைக்கும். தேவையற்ற பணச்செலவை உங்களுக்கு வைத்துவிடகூடாது என்பதற்க்காக நான் சொல்லுகிறேன். 

நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நான் சொல்லும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுங்கள். என்னை கூப்பிட்டு செய்துக்கொடுங்கள் என்று கேட்காதீர்கள். உங்களின் பணத்தை சேமித்து உங்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 22, 2014

ஜாதககதம்பம் என்ற போதை


வணக்கம் நண்பர்களே!
                    பல பேருக்கு ஜாதக கதம்பம் இப்பொழுது ஒரு பாேதை போல் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். ஆன்மீகம் என்றாலே படிப்பது என்ற நிலையில் உள்ளனர். ஆன்மீகம் படித்து வருவதில்லை. படிப்பதை நிறுத்துவது மட்டுமே ஆன்மீகம். எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருப்பது மட்டுமே ஆன்மீகம்.

ஜாதககதம்பத்தை ஒருவர் ஒரு நாளில் பத்து முறை வந்து படிக்கின்றனர். இது எங்கு கொண்டுவிடும் என்றால் உங்களை பைத்தியமாக்கிவிடும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்கு பதில் பைத்தியத்தை உருவாக்குவது என்ற நிலை ஏற்பட்டால் நான் கஷ்டப்படுவது அனைத்தும் வீணாகப்போய்விடும்.

டிவி பார்ப்பது மொபைல் போனில் பேசிக்கொண்டிருப்பது எல்லாம் உங்களின் சுயஇருப்போடு இருப்பதை தவிர்க்கிறது. உங்களின் சுய இருப்போடு இருக்கும்பொழுது உங்களுக்கு ஆன்மீகம் என்ன என்றால் தெரியவரும். தினமும் ஒரு தடவை வந்து என்ன எழுதியுள்ளார் என்று பார்த்தால் போதும். ஏன் என்றால் இது ஒரு வியாதியாக மாறிவிடும். மனதை விட்டு ஆன்மீகத்திற்க்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோள். நீங்கள் மனதோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள். 

ஜாதகதம்பத்தை எழுதும்பொழுது குரு என்னிடம் சொல்லுவார். பல பேரை கெடுத்துக்கொண்டிருக்கிறாய் அவர்கள் தன்னோடு இருப்பதற்க்கு பதில் உன்னோடு இருக்க வைக்கிறாய் என்பார். அது உண்மையான சொல். உங்களை உங்களோடு இருக்க வைக்கவேண்டும். உங்களை மேம்படுத்துவதற்க்கு தான் இதனை எழுதுகிறேன். இது தான் பிழைப்பு என்று இருக்ககூடாது. என்னை போல் ஒரு ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்றால் அனைத்தையும் விட்டுவிட்டு உங்களின் பயிற்சியை செய்ய ஆரம்பியுங்கள்.

அம்மன் பூஜையை முடித்துவிட்டு நேற்று திருப்பூர் வந்துவிட்டேன். திருப்பூரில் இரண்டு நாட்கள் தங்க வேண்டியுள்ளது. அவ்வப்பொழுது ஒய்வு கிடைக்கும்பொழுது உங்களுக்கு பதிவை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

விரைய தசா பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு முறை தமிழ்நாட்டில் தென்பகுதியில் இருக்கும் ஒரு ஊருக்கு சோதிடம் பார்க்க சென்று இருந்தேன். கிராமங்கள் நிறைந்த பகுதி. ஊர் தலைவரின் வீட்டிற்க்கு என்னை ஒரு நண்பர் அழைத்துச்சென்றார். ஊர் தலைவரின் ஜாதகத்தை பார்க்க சொன்னார். நானும் வாங்கி பார்த்தேன். 

கிராமங்கள் என்றால் ஒரு கட்டுபாட்டோடு இருக்கும். சம்பந்தம் இல்லாமல் வெளி ஆட்கள் கூட ஊருக்குள் சென்றுவிடமுடியாது. ஒவ்வொருவரும் யாரை பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று விசாரிப்பார்கள். அதிலும் பெண்கள் விசயத்தில் அதிகமான கட்டுபாடு இருக்கும்.  இன்றைய காலத்திலும் அந்த கட்டுபாடு உள்ள கிராமங்கள் நிறைய இருக்கின்றன. 

இப்படிபட்ட கட்டுபாடு உள்ள கிராமத்தின் தலைவர் என்றால் அவருக்கு எந்தளவுக்கு மரியாதை இருக்கும். அப்படிப்பட்ட தலைவரின் விதி வித்தியாசமாக இருந்தது. ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. ஐந்தாவது வீட்டு அதிபதியோடு சனிக்கிரகம் பனிரெண்டாவது வீட்டில் சேர்ந்து இருந்தது. 

தலைவருக்கு ஒரு ஆண் வாரிசு ஒரு பெண் வாரிசு இருந்தது. பெண் வாரிசு மூத்த மகள். நான் அவரிடம் உங்களின் மகளின் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ளுங்கள். உங்களின் மகளுக்கு நீங்கள் திருமணத்தை உடனே நடத்திவிடுங்கள். திருமணத்தை நடத்திவிட்டால் உங்களின் மரியாதை அப்படியே இருக்கும். நடத்தவில்லை என்றால் உங்களின் மகள் வழியாக உங்களுக்கு அவமானம் வந்துவிடும் என்று சொன்னேன்.

அவர் சின்ன வயது தானே ஆகின்றது அதற்குள் எப்படி திருமணத்தை நடத்த முடியும் என்று கேட்டார். முடிந்தளவுக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லிவிட்டேன்.

நாம் சோதிடம் சொல்லும்பொழுது அந்த ஊரின் பழக்கவழக்கத்தை எல்லாம் நன்றாக கவனித்து பலன் சொல்லுவது நன்றாக இருக்கும். அதே நேரத்தில் அந்த ஊரின் கட்டுபாடுகள் அதாவது அந்த ஊரைப்பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களின் கட்டுபாடுகளுக்கு பிரச்சினை வராத மாதிரி நாம் முன்கூட்டியே ஆலோசனை வழங்கிவிடுவது நல்லது.

காதல் திருமணம் ஒரு புரட்சி தான். சாதி ஒழியும் என்று சொல்லிக்கொண்டு சொல்ல வேண்டிய மேட்டரை மறைத்து சொல்லிவிட்டு வந்துவிடகூடாது. புரட்சி எல்லாம் சோதிடனுக்கு தேவையில்லாத ஒன்று. உன் பிழைப்பு நன்றாக நடக்கவேண்டும் என்றால் சோதிடத்தை அப்படியே அவர்களுக்கு நல்ல ஆலோசனை தரும் விதத்தில் பலனை சொல்லிவிடவேண்டும்.

தலைவரின் பெண் ஒரு நாள் வீட்டில் வேலை செய்தவனோடு சென்றுவிட்டது. ஓடிபோய்விட்டது என்ற சொன்னால் நன்றாக இருக்கும். தலைவரின் மானத்தை வாங்கிவிட்டது. வீட்டில் வேலை செய்தவன் அந்த ஊரின் கீழ்சாதியில் உள்ள பையன்.  பிரச்சினை எப்படி இருக்கும். அந்த பெண் ஓடினாலும் அவன் தான் ஏதோ செய்து இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று சொல்லிவிடுவார்கள். 

தலைவர் சும்மா இருந்தாலும் ஊரில் உள்ளவர்கள் சும்மா இருப்பார்களாக ஊரை கூட்டி பிரச்சினையை கிளப்பி எதிர் தரப்பில் உள்ளவர்களை அழைத்து பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்துவிட்டார்கள். 

ஆறாவது வீட்டு அதிபதி அல்லது சனிக்கிரகத்தோடு ஏழாவது வீட்டு அதிபதி சம்பந்தப்பட்டால் உங்களின் மனைவி அல்லது மகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டில் வேலைக்காரர்களை வைக்ககூடாது. தலைவரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதி விரையத்தில் சென்று அமர்ந்து அதில் சனியோடு சேர்ந்து அமர்ந்தது. சனியும் வேலைக்காரர்களை குறிக்கும் கிரகம் அல்லவா. நமக்கு அவமானத்தை தரும் வீடாக விரைய வீடும் வரும். விரையாதிபதி தசாவில் அவருக்கு இப்படி நடந்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு