Followers

Sunday, April 30, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          நண்பர் ஒரு கேள்வி கேட்ருந்தார். சித்தர்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றதா என்று கேட்டார். அவர் ஜாதகத்தில் ஏதாவது அதற்க்கு கிரகநிலையில் இருக்கின்றனவா என்பது போல் அந்த கேள்வி இருந்தது.

சித்தர்களை நாம் பார்க்கவேண்டும் என்பதற்க்கு எல்லாம் கிரகநிலைகளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. உங்களின் தேடுதல் நன்றாக இருந்தாலே போதும். உங்களின் தேடுதல் உண்மையாக இருந்து தேடினால் உங்களுக்கு இந்த உலகத்தில் கிடைக்காதா ஒன்று கிடையாது.

நாம் கொஞ்சநாள்கள் ஒரு விசயத்தை செய்வோம் அதன் பிறகு அதனை விட்டுவிட்டு வேறு ஒன்றுக்கு மாறுவோம். இப்படியே தேடிக்கொண்டே இருந்தால் ஒன்றும் கிடைக்காது. ஒரு விசயத்தை ஆழ்ந்த நம்பிக்கை வைத்து தேடும் குணம் இருந்தால் போதுமானது.

உண்மையில் நமக்கு கிரகநிலைகள் அதற்கு சாதகமாக இருக்கவேண்டும் என்பதில்லை. தேடுதல் மட்டும் தான்வேண்டும். உலகத்தில் கிரகநிலைகள் சரியில்லாதவர்கள் தான் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

சித்தர்களை காணவேண்டும் என்பது கூட தேவையில்லை. சித்தர்களை நாம் தொடர்ந்து வணங்கிக்கொண்டு அல்லது அவர்கள் சொன்ன வழியை பின்பற்றிக்கொண்டு இருந்தாலே போதும். அதுவே மிகப்பெரிய புண்ணியம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 29, 2017

சனி பாதிப்பு விலக


வணக்கம்!
          உங்களின் வாழ்நாள் நன்றாக இருக்கவேண்டும் நீண்டஆயுள் வேண்டும் என்றால் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்யவேண்டும். நல்லெண்ணெய் நன்றாக தேய்த்து குளித்தால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சனிக்கிரகம் நன்றாக உங்களுக்கு இல்லை என்றாலும் நல்லெண்ணெய் குளியல் செய்யும்பொழுது உங்களுக்கு நல்லது நடந்துவிடும். சனிக்கிரகத்தால் வரும் பாதிப்பு நீங்கிவிடும்.

நல்லெண்ணெய் குளியலில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. நமது நண்பர்களின் அனுபவமும் இருக்கின்றது. தொடர்ந்து நல்லெண்ணெய் குளியலை செய்துவருபவர்களை நான் நன்கு கவனித்து வந்திருக்கிறேன். சனியின் பாதிப்பு விலகிவிடுகிறது.

சனிக்கிரகத்தின் பாதிப்பை குறைப்பதற்க்கு திருநள்ளார் சென்று வணங்கி வருவதும் நன்மை அளிக்கும். நளதீர்த்தத்தில் நீராடிவிட்டு சாமியை தரிசனம் செய்தால் போதும். 

சனிக்கிரகத்திற்க்கு என்று ஒரு சில கிராமதேவதைகளை பற்றி சில வாரங்களுக்கு முன்பு ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அந்த தெய்வத்தையும் வணங்கி வாருங்கள். சனியின் பாதிப்பு குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கோவில்கள்


வணக்கம்!
          தமிழ்நாட்டில் உள்ள கோவில்களே ஒருவனை மிகசிறந்தவனாக மாற்றமுடியும். என்ன மனிதன் அந்த கோவில்களுக்கு எல்லாம் சென்று வணங்கி வரவேண்டும். 

நமக்கு அனைத்தையும் தருவதற்க்கு கோவில்களை நமது முன்னோர்கள் வைத்திருக்கின்றனர். நாம் அங்கு சென்று வணங்கி வர நமக்கு அனைத்தையும் தரும். வணங்ககூட வேண்டியதில்லை சென்று வந்தாலே போதுமானது.

மிகப்பெரிய கோவில் இருக்கும் அதற்கு அருகில் ஒரு வீட்டை கட்டி ஒருவன் வாழ்ந்துக்கொண்டு இருப்பான். அவன் அந்த கோவிலுக்குள் சென்று தினமும் வணங்கி வர அவனுக்கு முடியாது. அவனின் எண்ணம் வேறு விதமாக அமைந்துவிடுகிறது.

தஞ்சாவூரில் இருந்துக்கொண்டு தஞ்சை பெரியகோவிலை பார்க்காத எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். எல்லா ஊர்களிலும் அப்படி தான் இருக்கும். முடிந்தவரை நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் உங்களின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

நாம் கோவிலுக்கு செல்லும்பொழுது இது தெரியாது. கோவிலுக்கு சென்று வந்தபிறகு என்றோ ஒருநாள் நமக்கு இக்கட்டான நேரத்தில் ஒரு நல்ல புத்தியை கொடுத்து நல்ல வாய்ப்பையும் இந்த கோவில்கள் கொடுத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 28, 2017

மாந்தி பலன்


ணக்கம்!
          மாந்தி நான்கில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். மாந்தி நான்கில் இருந்தால் சுகம் கெடும் என்று சொல்லிவிடலாம். தாயாருக்கு கண்டம் வரும். தாயாரின் உடல்நிலை எப்பொழுது நோயில் இருக்கும். ஒரு சிலருக்கு இளம்வயதில் தாயை இழக்கநேரிடும்.

நான்காவது வீடு நாம் வசிக்கும் வீட்டை காட்டுவதால் வீடு அந்தளவுக்கு அமையாது. நாம் ஒரு வாடகை வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது போல இருக்கும். அப்படி ஒரு பீதியை தருவதாக இருக்கும்.

நான்காவது வீடு நம்முடைய சுகவாழ்க்கை காட்டக்ககூடிய வீடாக இருப்பதால் நமக்கும் சுகம் நன்றாக இருக்காது. ஒரு சிலர் சொல்லுவார்கள் அல்லவா ஏதோ ஆவி நுழைந்ததாக இருக்கின்றது என்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நான்காவது வீட்டில் மாந்தி அமர்ந்திருப்பார்.

உங்களுக்கு இளைய சகோத சகோதரிகள் இருந்தால் அவர்கள் கடுமையான வறுமையை சந்திப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பொருளாதார நிலையில் மிகவும் பாதிப்படைவார்கள். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருப்பார்கள்.

உங்களுக்கு வாரிசு இருப்பது கடினமாக இருக்கும். வாரிசு இருந்தால் அவர்களுக்கு கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நான்கில் மாந்தி இருப்பது பொதுவாக நல்லது அல்ல. அதற்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும்.

நாம் மாந்தி பலன் சொல்லுவது பொதுபலனை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு ஜாதகத்திற்க்கு தகுந்த மாதிரி பலன் மாறுபடும். அவர் அவர்களின் ஜாதகத்தை பார்த்து பலனை முடிவு செய்யவேண்டும்.

சேலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பூஜை


வணக்கம்!
          மாந்தி பூஜையைப்பற்றி நண்பர்கள் கேட்டனர். மாந்திக்கு பரிகாரத்திற்க்கு தற்பொழுது எழுதிக்கொண்டு இருக்கிறேன். பரிகாரம் என்பது தீயபலனை குறைத்து நல்ல பலனை கொடுப்பதற்க்காக இதனை செய்யவிருக்கிறேன்.

மாந்தியை வைத்து பூஜை செய்வது என்பது வேண்டாம். மாந்தி பூஜை செய்வது எந்த நிலையில் என்றால் ஒருத்தர் எந்தவிதத்திலும் உருபடவே இல்லை. ஒரு பிச்சைக்காரர் நிலைமையில் இருக்கிறார் என்ற நிலைமை வரும்பொழுது மாந்தி பூஜை செய்யலாம்.

நிறைய கோவில்கள் மற்றும் பூஜைகள் எல்லாம் செய்து ஒய்ந்து எதுவும் நடக்கவில்லை என்ற நிலை வந்தால் மாந்தி பூஜையை செய்ய ஆரம்பிக்கலாம். சாதாரணமாக இருக்கும் நபர் மாந்தி பூஜைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை.

மாந்தி கிரகம் இருக்கும் கிரகத்திலேயே அதிக கொடூரமான ஒரு கிரகம் என்பதால் அதற்க்கு நாம் பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம் நல்ல பலனை கொடுப்பதற்க்காக செய்யவேண்டும். 

மாந்திபலனை தற்பொழுது பார்த்துக்கொண்டு வருகிறோம். முழுமையாக எழுதி முடித்தவுடன் மாந்திக்கு பரிகாரம் செய்யலாம். அதுவரை உங்களின் ஜாதகத்தை எடுத்து வரும் பலனோடு உங்களின் ஜாதகத்தின் நிலைமையும் ஆராய்ந்து பார்த்துக்கொண்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 27, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி மூன்றில் நின்று நேராக ஒன்பதாவது வீட்டை பார்க்கும். மாந்தி மூன்றில் நின்றாலே அது பித்ருதோஷமாக தான் கருத்தில் கொள்ளவேண்டும். மாந்தி மூன்றில் அல்லது ஒன்பதில் நிற்க்கும் ஜாதகர்கள் பெரும்பாலும் பித்ருதோஷத்தால் அவதிப்பட்டவராக தான் இருப்பார்கள்.

பித்ருதோஷத்தை விட கொஞ்சம் அதிகமாகவே அவதிப்படுபவர்களாக இருப்பார்கள். ஆவிகள் அடித்தவன் போலவே இளமைகாலம் இருந்திருக்கும். ஊர் ஊராக பிச்சைக்காரன் போலவே திரிந்திருப்பார்கள்.

மூன்றில் நிற்க்கும்பொழுதே சுகஸ்தானம் அவுட் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது தான். சுகஸ்தானம் கெட்டால் அப்புறம் எப்படி நிம்மதியாக இருப்பார்கள். அலைச்சல் வாழ்க்கை அல்லவா வாழவேண்டும்.

ஒருவருக்கு பித்ருதோஷமும் இருந்து அதில் மாந்தி அமர்ந்தால் அவ்வளவு தான். அவன் பாடு பெரும்பாடாகிவிடும். அவன் கிறுக்குபிடித்தவன் போலவே இருப்பான்.

எப்படி இருந்தாலும் ஒரு காலத்திற்க்கு பிறக அவனின் வாழ்க்கை நன்றாக மாறிவிடும். கொஞ்ச காலம் எடுக்கும். அது முப்பது வயதாக இருக்கலாம் அல்லது அதற்கு கூட இருக்கலாம். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          சித்தர்கள் தான் கண்டு உணர்ந்த விசயத்தை எடுத்து தன் சீடனுக்கும் கொடுத்துவிட்டு மக்களும் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக கோவில்களை உருவாக்கியுள்ளனர். மக்களுக்கும் அனைத்தும் கிடைத்து அவர்களும் வரவேண்டும் என்பதற்க்காக என்ன செய்யவேண்டும் என்று யோசித்து கோவில்களை உருவாக்கியுள்ளனர்.

கோவில்கள் உருவாக்குவதற்க்கு காரணம் மக்களை இழுப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கோவில்களை உருவாக்கியுள்ளனர். தான் உணர்ந்தை கோவில்களில் உருவாக்கி அதற்க்குள் அந்தசக்தி வைத்திருக்கின்றனர்.

தான் உணர்ந்ததை அடுத்தவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்தார்கள் பாருங்கள். அது தான் தெய்வ தன்மை வாய்ந்த ஒன்று. அவர்கள் அன்று அதனை செய்யவில்லை என்றால் நாம் இன்று வரை தேடிக்கொண்டு தான் இருக்கவேண்டும் அல்லது புத்திமங்கிய கூட்டமாக இருந்துக்கொண்டு இருக்கவேண்டும்.

சித்தர்கள் உருவாக்கிய கோவிலாக நாம் பார்த்து வணங்கினால் ஒரு சாதாரண கோவில்கள் கிடைக்கும் சக்தியை விட சித்தர்கள் உருவாக்கிய கோவில்களில் சக்தி அதிகமாக இருக்கும்.

ஆன்மீகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் அனைவரும் சித்தர்கள் உருவாக்கிய கோவிலாக பார்த்து சென்று வணங்கி வருவார்கள். உங்களின் பகுதியிலும் சித்தர்கள் உருவாக்கிய கோவில்கள் இருந்தால் நீங்களும் அதனை சென்று வணங்கிவாருங்கள்.

இன்று சேலம் பயணம். நாளை சேலத்தில் இருப்பேன். அதன்பிறகு திருப்பூர் பயணம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 26, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
            மாந்தி மூன்றில் நின்றால் என்ன பலன் என்பதை பார்த்து வருகிறோம். மூன்றாவது வீடு இளைய சகோதரத்தை காட்டிக்கூடிய வீடு. உங்களுக்கு அதிகப்பட்சம் இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே அவர்கள் இருந்தாலும் உங்களுக்கும் அவர்களுக்கும் சரிப்பட்ட வராது.

ஒரு சில ஜாதகங்களில் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். இளைய சகோதர் பிறந்து வளர்ந்து இளம் வயதாக இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு மாரகம் வந்துவிடுகிறது. ஏதோ ஒரு நோய் அல்லது விபத்தில் மரணம் அடைந்துவிடுகிறார்கள்.

ஒரு சில ஜாதகங்களில் மாந்தி மூன்றில் நிற்பதால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கும் அவருக்கும் வெட்டு குத்து நடந்துவிடுகிறது. சாகும்வரை இருவரையும் சேர்ந்து வைப்பதில்லை. இறப்பிற்க்கு கூட செல்லாத அண்ணனையும் நான் பார்த்து இருக்கிறேன்.

மூன்றில் மாந்தி நிற்க்கும்பொழுது உங்களுக்கும் உங்களின் பக்கத்துவீட்டில் இருப்பவர்களுக்கும் சண்டையாக தான் இருக்கும். உங்களின் மீது பொறாமை அதிகமாக இருக்கும்.

மூன்றில் மாந்தி இருந்து உங்களின் காது பிரச்சினையாக இருந்தால் மேலே சொன்ன பலன் நடக்காது. உங்களை ஊனமாக மாற்றியதால் மேலே சொன்ன பிரச்சினைகள் வராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          சித்தர்கள் என்றாலே அவர்கள் சிவனை தான் கும்பிடுவார்கள் என்று பொதுவாக ஒரு கருத்தை நாம் வைத்திருப்போம். அதிகப்பட்சம் சிவனை தான் கும்பிட்டார்கள் என்று அதிகமாக பரப்புகிறார்கள்.  பெருமாளையும் அவர்கள் வணங்கியிருக்கிறார்கள்.

பல பெருமாள் கோவில்களை சித்தர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். பெயர் வித்தியாசப்பட்டாலும் அவர்களும் சித்தர்கள் தான். நிறைய ஊர்களில் பெருமாள் கோவிலை சித்தர்கள் உருவாக்கியதை நான் குருவின் வழியாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சித்தர்களால் உருவாக்கப்பட்ட பெருமாள் கோவில்கள் எல்லாம் இருக்கின்றது. பிரசித்துபெற்ற பெருமாள் கோவில்கள் கூட சித்தர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எப்படி சிவன் கோவில்களில் சக்தி இருக்கின்றதோ அதேப்போல் பெருமாள் கோவில்களிலும் சக்தி இருக்கின்றது.

நான் ஆதிகாலத்து பெருமாள் கோவிலில்களில் உள்ள விசயத்திற்க்கு செல்லவில்லை தற்பொழுது நமக்கு தெரிந்து குறைந்தது ஒரு நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பெருமாள் கோவில்களைப்பற்றி சொல்லுகிறேன். நமக்கு நன்கு தெரிந்த கோவில்களை நன்கு ஆராய்ந்துவிட்டு இதனை சொல்லுகிறேன்.

ஆதிகாலத்து பெருமாள் கோவில்கள் கூட சித்தர்கள் கட்டியது தான் என்று வாய்வழி சொல்லுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன். சித்தர்கள் அவர் அவர்களுக்கு பிடித்த தெய்வத்திற்க்கு கோவிலை கட்டி அதனை மக்கள் வணங்குபடி செய்திருக்கிறார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 25, 2017

சுத்தம் பணம் தரும்


வணக்கம்!
         இது பழைய பதிவில் உள்ள கருத்தாக இருந்தாலும் மறுமுறை இதனை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது எனது கடமை. உங்களின் வீடு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த கருத்து.

வீடு சுத்தமாக இருந்தால் தான் வீட்டிற்க்குள் லட்சுமி வாசம்புரிவாள். உங்களின் செல்வநிலை உயரும். உங்களின் வாழ்க்கை நன்றாக செல்லும்.

உங்களின் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை காட்டுங்கள். உங்களின் பூஜையறையில் உள்ள பொருட்கள் எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும். அதிகபடியான சுத்தத்தை பூஜையறையில் உள்ள பொருட்களில் காட்டவேண்டும்.

உங்களின் வீட்டில் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் அதனை உடனே தூக்கியிருந்துவிடுங்கள். அது வேறு காலத்தில் பயன்படும் என்று நீங்கள் நினைத்தால் பொருட்களை வைப்பதற்க்கு என்று உள்ள இடத்தில் அதனை வைத்துவிடுங்கள்.

வீடு நறுமணம் இருந்துக்கொண்டே இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பார்த்து செய்துக்கொண்டே இருங்கள். ஒரு சிலர் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யகூடாது என்பார்கள். அதனை பற்றி  நீங்கள் கவலைப்படவேண்டாம். சுத்தமாக இருந்தால் தான் காசு வரும்.

சேலம் திருப்பூர் கோயம்புத்தூர் பகுதிக்கு பயணம் இருக்கின்றது. விரைவில் எந்தநாள் என்பதை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி


ணக்கம்!
          மாந்தி என்றவுடன் நம்ம மக்களிடம் பயம் அதிகமாக இருக்கும். சனியின் புதல்வன் என்பதால் தீயபலனை தான் தருவார் என்று நினைப்பார்கள். எந்த ஒரு கிரகமும் அப்படிப்பட்ட ஒன்றல்ல. அனைத்தும் சரி சமமாகவே தரும்.

மாந்தியை கண்டு அச்சப்படதேவையில்லை அதுவும் நமக்கு நல்லதை தரும். மற்ற கிரகங்களுக்கும் மாந்திக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அனைத்து கிரகங்களுக்கும் தசாபலன் இருக்கின்றது. மாந்திக்கு தசாபலன் கிடையாது.

மாந்தி எப்பொழுது தன்னுடைய பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நாளிலும் குளிகன் வரும் நேரத்தில் இவரின் வேலை இருக்கும். ஒவ்வொருநாளிலும் இவருக்கு நேரத்தை ஓதுக்கி வைத்திருக்கிறார்கள்.

மாந்திக்கு பார்வை உண்டு என்றும் ஒரு சிலர் சொல்லுவார்கள். மாந்தி 2 7 12 பார்வை உண்டு என்று சொல்லுவார்கள். அனுபவத்திலும் பார்த்து இருக்கிறேன். ஒரளவு வேலையை செய்கிறது.

மாந்தி உங்களுக்கு சரியில்லை என்றால் நீங்கள் ஒவ்வொரு நாளும் வரும் குளிகன் நேரத்தில் கொஞ்சம் அமைதியாக செயல்படவேண்டும். அவசரகாரியமாக இருந்தால் கூட அமைதியாக இருந்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 24, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் KJ அவர்கள் கேது பனிரெண்டில் இருந்தால் அவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்று சொல்லுகின்றனர். அதற்க்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று வழிகாட்டிய சித்தர்கள் பதிவில் கேள்வி வந்தது.

வழிகாட்டிய சித்தர்கள் பகுதியில் சித்தர்கள் சொன்ன நல்விசயங்களை எடுத்து நமது பாணியில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக சித்தர்கள் பற்றி எழுதுபவர்கள் அவர்களின் சாகசங்களைப்பற்றி சொல்லுவார்கள். இந்த சித்தர் இதனை செய்தார் என்று ஒவ்வொரு சித்தரின் பெயரையும் சொல்லி சொல்லுவார்கள்.

நான் கொஞ்சம் வித்தியாசமாக அவர்கள் சொன்ன நல்ல கருத்தை எடுத்து மக்கள் பயன்பெறவேண்டும் என்ற விதத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஜாதக கதம்பத்தை முழுமையாக படித்தால் அதில் சொல்லிருக்கும் கருத்து அனைத்தும் கரையேற்ற என்ன வழி என்பதை மட்டும் சொல்லுவேன். கதை சொல்லுவது கிடையாது.

பனிரெண்டில் கேது இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கிறது என்பது தவறாகவே இருக்கின்றது. பல ஞானிகளின் ஜாதகத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

ஞானிகளின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு எல்லாம் கிரகங்கள் குண்டக்க மண்டக்க கணக்கில் தான் அமருகிறது. ஏகாப்பட்ட தோஷத்தோடு இருக்கின்றது. அந்த தோஷம் தான் அவர்களை ஞானிகளாக மாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

வழிகாட்டிய சித்தர்கள் பகுதியில் வரும் கருத்து. சித்தர்கள் சொன்ன நல்ல வழியை மட்டும் சொல்லுகிறேன். ஜாதகத்திற்க்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை. ஆன்மீக தேடுதல் இருப்பவர்களுக்காக அதனை எழுதிவருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


ணக்கம்!
          மாந்தி பலனைப்பற்றி பார்த்து வருகிறோம். கடந்த பதிவில் மாந்தி மூன்றாவது வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் பார்க்கலாம்.

மூன்றில் நின்றால் ஆயுளை அதிகரிக்க செய்யும் அதோடு நல்ல தைரியத்தையும் கொடுக்கும். தைரியம் என்றால் இவர்களால் பல பிரச்சினை உருவாகும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கமாட்டார்கள். ஏதாவது ஒரு வில்லங்கத்தை செய்துக்கொண்டே இருப்பார்கள்.

கலகம் உருவாக்கி அதில் மகிழ்ச்சி காணும் வகையில் சார்ந்தவராக இருப்பார். எப்படியும் இவருக்கு பணவரவு வந்துக்கொண்டு தான் இருக்கும். கையில் காசு வற்றாது. கொள்ளையடித்தாவது வாழவேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு முன்னோர்களின் சாபம் ஏற்பட்டு அதனால் சிக்கி தவிப்பராக இருப்பார்கள். ஒரு சிலருக்கு ஆவிகளின் தொல்லை இருக்கும். ஆவிகள் வந்தன பேய் பிசாசு என்று ஏதாவது ஒன்றைப்பற்றி சொல்லுவார்கள்.

இவர்கள் தொடர்பு வைத்திருக்கும் ஆட்கள் ஆவிகளாேடு பேசுகிறேன். பேயோடு வாழ்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஆட்களாக இருக்கலாம். ஒரு சிலர் காது கேளாதவர்களாக இருப்பார்கள்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 23, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          பூமியின் புவியிர்ப்பு விசையை விட மனிதனின் சக்தி அதிகமானது. இதனை நன்கு உணர்ந்திருந்தனர் சித்தர்கள். இந்த புவியிர்ப்பு விசையை மனிதனால் எளிதில் கடந்து செல்லமுடியும் என்பதை அறிந்திருந்தனர்.

இது எப்படி சாத்தியம் 
                      பெரும்பாலான மனிதனின் சக்தி கீழ் நோக்கியே சென்றுக்கொண்டு இருக்கும். இது காமம் சம்பந்தப்பட்ட ஒன்று. மனிதனிடம் இருக்கும் இந்த சக்தியை மேல்நோக்கி எழுப்பும்பொழுது மனிதன் புவியிர்ப்பு விசையை கடந்து செல்கிறான் என்று அர்த்தம். இதனை தான் குண்டலிணி என்று சித்தர்கள் சொன்னார்கள்.

உங்களின் சக்தி புவியிர்ப்பில் இருந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் பிறவி சக்கரத்தில் இருப்பீர்கள். நீங்கள் பிறந்துக்கொண்டே இருக்கவேண்டும். பல ஜென்மங்களாக நீங்கள் இப்படி தான் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள். 

புவியிர்ப்பு சக்தியை நீங்கள் தாண்டினால் உங்களுக்கு மறுபிறப்பு இருக்காது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த புவியிர்ப்பு சக்தியில் மாட்டிக்கொண்டு இருக்கிறான். இதனை கடக்க தான் சித்தர்கள் குண்டலிணி என்ற கலையை பயன்படுத்தினார்கள்.

நீங்கள் ஒரு முறை இந்த பயிற்சியை செய்துவிட்டாலே போதும் மறுமுறை நீங்கள் இந்த பூமிக்கு வருவதற்க்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மம் என்பது உங்களுக்கு இருக்காது. இதனை தொடர்ச்சியாக சித்தர்கள் செய்துவந்தனர். மக்களையும் செய்ய சொல்லினர்.

நீங்கள் எங்கு சென்று ஆன்மீகபயிற்சி எடுத்தாலும் இந்த கலையை தான் செய்யசொல்லுவார்கள். ஏதோ ஒரு ஆன்மீகபயிற்சிக்கு சென்று குண்டலிணி எழுப்பு பயற்சி செய்து வாருங்கள். நீங்களும் சித்தர்களாக மாறிவிடுவீர்கள். 

பிறப்பு சக்கரத்தில் இருக்கவேண்டும் என்பவர்கள் இதனை எடுக்கவேண்டாம். மறுபிறப்பு வேண்டாம் என்பவர்கள் இதனை செய்ய ஆரம்பித்துவிடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சூரியன் போல் செயல்படும் செவ்வாய்


வணக்கம்!
          ஒரு சில இடத்தில் நாம் முருகனை வணங்கினால் அது சூரியனின் வேலையையும் செய்துக்கொடுக்கிறது. நமக்கு நிறைய அரசாங்க வழியில் வேலை நடப்பதற்க்கு சூரியன் காரகம் வகிப்பார். சூரியனை சென்று வணங்கி வருவதை விட அருகில் இருக்கும் முருகன் கோவிலாக பார்த்து வணங்கினால் நமக்கு அரசாங்கவேலை நடைபெறுகிறது.

செவ்வாய் மற்றும் சூரியன் அக்னியாக இருப்பதால் இரண்டும் ஒரே பலனை தருகிறதா என்று தெரியவில்லை ஆனால் பலன் கொடுக்கிறது. நிறைய அரசாங்கவழியில் நடப்பதற்க்கு தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பலன் பெற வைத்தால் அது நடக்கிறது.

ஒரு சில காலத்தில் எல்லாம் நான் முருகன் கோவில் பக்கம் அதிகம் போவதில்லை. அனைவருககும் அரசாங்கவழியில் ஒரு தடவை சென்று பார்த்தால் நடைபெறும் வேலை எனக்கு பல நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு முருகன் கோவில் சென்று வழிபடும் வழக்கம் உருவானது. தற்பொழுது அது நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

நாம் போனால் ஒரளவு காரியத்தை சாதித்துவிட்டு வந்துவிடுகிறோம். நல்லபடியாகவும் அதிகாரிகள் நம்மிடம் நடந்துக்கொள்கிறார்கள். சூரியனை நான் சரி செய்யவில்லை செவ்வாய் கிரகத்திற்க்கு உரிய முருகனை தான் வணங்கினேன்.

நீங்களும் அரசாங்கவழியில் வேலை நடக்க அருகில் இருக்கும் முருகன் அல்லது பிரசித்திபெற்ற முருகன் கோவில் சென்று வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 22, 2017

நம்பிக்கை


வணக்கம்!
         மனிதனுக்கு எந்த ஒரு விசயத்திலும் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை தான் அவர்களை மேலே உயர்த்தும் விசயமாக இருக்கும். அம்மனிடம் கூட அப்படி தான் இருக்கவேண்டும். 

வாழ்வில் நம்பிக்கையில்லாமல் சென்று தான் நிறைய இழந்துவிட்டோமே இனிமேலாவது நம்பிக்கையோடு இருப்போம் என்று நினைப்பவர்களுக்கு தான் ஏதாவது வழி தெரியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு இருந்தால் போதுமானது தான்.

நிறைய நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நான் சொல்லுவது நம்பிக்கையோடு இரு அனைத்தையும் நடத்திக்கொடுத்துவிடுவேன் என்று சொல்லுவேன். 

மாந்தி மூன்றாவது இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

மாந்தி மூன்றாவது இடத்தில் இருந்தால் நிறைய தைரியம் இருக்கும். எந்த விதத்திலும் பயம் என்பதே இருக்காது. எதனையும் துணிந்து செயல்படுத்த எண்ணுவார்கள். மூன்றில் மாந்தி இருந்தால் பிரச்சினை என்பதை விட இது ஒரு நல்ல யாேகம் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 21, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          ஒரு சிலர் மாந்தி வழிபாட்டை செய்வார்கள். ஏதோ ஒரு இடத்தில் மாந்திக்கு கோவில் இருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு முறை நான் மாந்தியைப்பற்றி எழுதுவதால் என்னை தொடர்புக்கொண்டு இந்த கோவிலுக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அது எந்த ஊர் என்று கூட எனக்கு ஞாபகம் இல்லை.

ஒரு சிலர் வாய் பேசமுடியாத ஊமையாக இருப்பார்கள். அவர்களின் ஜாதகத்தில் மாந்தி இரண்டாவது வீட்டில் இருக்கும். இரண்டாவது வீடு வாக்குஸ்தானம் என்பதால் பேசமுடியாத ஒரு நிலை கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம்.

யாருக்கு இரண்டாவது வீடு கெடலாம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர் சோதிடர்கள் போன்றவர்களுக்கு இரண்டாவது வீடு கெட்டால் அவர்கள் சொல்லும் வாக்கு வேதவாக்காக இருக்கும். அவர்களின் வாக்கால் கூட பலன் நடக்கும்.

இன்றைக்கு பல நண்பர்களுக்கு இரண்டாவது வீடு கெட்டு இருக்கின்றது. இவர்கள் ஆன்மீகவாதிகளோ சோதிடர்களாே கிடையாது இவர்கள் இல்லறவாதிகள். அது எப்படி நடக்கிறது என்று கேட்கலாம்.

வீட்டில் பேசுவதே கிடையாது. வீட்டில் பேசினால் மனைவி தொல்லை தருவார் என்று பேசுவது கிடையாது. இவர்கள் ஊமைபோல வீட்டில் இருப்பதால் நன்றாகவே சோதிடம் வேலை செய்கிறது. மாந்தி இரண்டில் இருந்து கெடுத்து இவர்களின் வாயை அடைத்து இல்லறத்தில் வாழவைத்துவிடுகிறது.

நான் பேசினால் தானே பிரச்சினை பேசாமல் ஊமைபோல இருந்தால் இரண்டாவது வீடு கெட்டாலும் நல்ல பலனை நம்ம ஆட்கள் அனுபவித்துவிடுகிறார்கள். உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் மாந்தி இருந்தால் பேசாமல் இருங்கள். நல்ல பலனை நீங்களும் அனுபவிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

திருவிழா


வணக்கம்!
          வருடம் தோறும் இந்தமாதம் நான் எழுதும் பதிவு தான் இது. தொடர்ச்சியாக இந்த நிகழ்வுகளை மறக்காமல் நீங்கள் செய்வதற்க்காக இதனை எழுதுகிறேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் நடைபெறும் மாதமாக இருக்கும். சித்திரையை தொடர்ந்து வருகின்ற மாதங்களில் அந்தந்த ஊர்களுக்கு தகுந்தமாதிரி திருவிழாக்களை நடத்துவார்கள்.

ஒரு சாதாரணமான நாளில் கோவில் சென்று வழிபடுவதை விட திருவிழா காலங்களில் கோவில் சென்று வழிபடுவது அதிக நன்மையை தரும். சிறப்பான அலங்காரத்தில் சாமி இருக்கும்.

நம்ம ஆட்கள் கொஞ்சம் சொகுசு பேர்வழிகளாக இருப்பார்கள். திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் அதனை தவிர்த்துவிட்டு சாதாரண நாளில் வழிபடலாம் என்று நினைப்பார்கள். என்ன தான் கூட்டமாக இருந்தாலும் சரி திருவிழா காலங்களில் சென்றுவழிபடுவது அதிக நன்மையை தரும்.

திருவிழாவில் தேர் இழுப்பது அதிக புண்ணியத்தை தரக்கூடிய ஒரு செயல். தேர் இழுப்பது அனைவருக்கும் கொடுத்து வைத்துவிடாது. புண்ணியம் இருப்பவர்களுக்கு அது கிடைக்கும். புண்ணியம் புண்ணியத்தை சேர்க்கும். அதனால் புண்ணியத்தை பெறுவதற்க்கு திருதேர் வடம்பிடியுங்கள். மேலே சொன்ன கருத்தை உடனே செயல்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை தைலக்குளியல் குளிக்க சொல்லிருந்தேன். அதனை அனைவரும் கடைபிடித்து வாருங்கள். வெள்ளிக்கிழமை அன்று ஒரு அம்மன் கோவில் சென்று வழிப்பட்டு வாருங்கள். 

மாந்தியை பற்றி எழுதியவுடன் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தை பார்க்கவும் அதற்கு தீர்வும் கேட்டு வருகின்றனர். இன்னமும் நிறைய பதிவுகள் மாந்தியைப்பற்றி எழுதவேண்டும் அதனை எல்லாம் படித்து பயன்பெறுங்கள்.

இரண்டாம் வீட்டிற்க்கு பலனை நாம் சொன்னாலும் அதற்கு நேராக இருக்கும் எட்டாவது வீட்டு பலனும் ஒன்று போல தான் இருக்கும். அதாவது இரண்டிற்க்கும் எட்டிற்க்கும் ஒரு தொடர்பு இருக்கும். இரண்டாவது வீட்டிற்க்கு சொல்லும் பலன் போல எட்டாவது வீட்டில் இருந்தாலும் அதுபோல நடக்கும்.

எட்டாவது வீட்டில் மாந்தி இருக்கும் ஒரு ஆளை பார்த்தேன். அவர் வாயை திறந்து அந்தளவுக்கு பேசவில்லை. நானாகவே பல விசயங்களை கேட்டு அவர்க்கு பலனை சொல்லவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. வாய் தான் பேசவில்லை என்றாலும் அவர் செய்யும் குசும்பு வேலை அப்படிப்பட்டது. நிறைய வில்லங்கத்தை அவர் செய்தார். அதாவது அவர் தான் செய்வது என்று தெரியாமல் பல விசயங்களை செய்தார்.

மாந்தி இரண்டில் நின்றாலும் சரி எட்டில் நின்றாலும் சரி அவர்களின் செயல்பாடு அதிகப்பட்சம் வெளியுலகத்திற்க்கு தெரியாது போல செய்வார்கள். அது நல்லதல்ல என்று அவர்கள் புரிந்து செயல்பட்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Thursday, April 20, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
         இரண்டாம் வீட்டில் இருக்கும் மாந்தியை குரு பார்த்தால் நன்மையளிக்குமா என்று நண்பர் ஒரு கேள்வி கேட்டுருந்தார். அதற்கு பொதுவான பதில் நன்மையளிக்கும் என்று சொல்லலாம். 

குரு கிரகம் சுபக்கிரகம் அதன் பார்வை நன்மையுண்டு தான் ஆனால் குரு கிரகம் எந்த வீட்டில் இருக்கின்றது என்பது முக்கியம். குரு இருக்கும் ராசி முக்கியம். இரண்டாவது வீட்டில் இருக்கும் மாந்தியை குரு கிரகம் பகைவீட்டில் இருந்து பார்த்தால் பலன் மோசமாக இருக்கும் என்பதை சொல்லலாம்.

குரு கிரகம் வக்கிரம்பெற்று இருந்தாலும் அவர் செய்யும் வேலை கொஞ்சம் எதிர்மறையாகவே கையாள்வார். குரு கிரகம் தன்னுடைய வேலையை எதிர்மறையாகவே காட்டும். மாந்தியும் பொல்லாதவர் அவரை குரு வக்கிரம் பெற்று பார்த்தால் மோசத்திற்க்கு மோசம் என்று சொல்லிவிடலாம்.

சுக்கிரன் வேலையை குரு கூட செய்ய முடியும். அது எப்பொழுது என்றால் குருகிரகம் பகை அல்லது வக்கிரம் பெற்றால் சுக்கிரன் வேலையை குருவே செய்வது போல் அவர்க்கு இருக்கும்.

மாந்தியின் பொதுவான பலனை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அந்த பலன் எல்லாம் பொதுவானவை. உங்களின் ஜாதகத்திற்க்கு ஏற்ப பலன் மாறும். ஜாதகத்தை வைத்து தான் பலனை கணிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை பார்த்து கடந்த பதிவில் பார்த்திருந்தோம். மாந்தி இரண்டில் நின்றால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். அப்படியே அதிக குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் மாந்தி குடும்ப உறுப்பினர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கவிடுவார். சம்பந்தமே இல்லாமல் மரணநிகழ்வு அதிகமாக இருக்கும்.

ஒரு சில குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். மாந்தீரிகம் சம்பந்தப்பட்ட விசயத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள். தொழிலாக செய்யமாட்டார்கள் மாந்தீரிகத்தை நாடி செல்வார்கள். சின்ன வேலையாக இருந்தாலும் மாந்தீரிகம் செய்பவர்களை நாடி செல்வார்கள். 

மாந்தீரிகம் உண்மையா பொய்யா என்பதைப்பற்றி நான் கவலைப்படமாட்டார்கள். மந்திரம் எல்லாம் இவர்களின் கண்களுக்கு தான் உண்மை என்பது போல இருக்கும். இவர்களை அப்படி ஈர்ப்பதே மாந்தியின் வேலை.

மந்திரவேலைக்கு சென்றே தன்னுடைய பையில் உள்ள பணத்தை எல்லாம் வீண் செய்வார்கள். ஒரு சில காலக்கட்டங்களில் தன்னுடைய குடும்பத்தை கூட இந்த வேலையால் இழக்கவும் நேரிடும்.

பல அனுபவ ஜாதகங்களை பார்த்து தான் இதனை நான் எழுதுகிறேன். அவர்களின் வாழ்க்கையை நன்றாக உற்றுகவனிக்கும்பொழுது பல விசயங்கள் மாந்தீரிகத்தை சார்ந்தே இருக்கின்றது. உங்களுக்கும் இரண்டில் மாந்தி நின்றால் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இதனை எல்லாம் தவிர்க்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 18, 2017

யாரால் பிரச்சினை?


ணக்கம்!
         நம்முடைய பிரச்சினைக்கு நாம் பிறரை கைகாட்டுவோம். இவரால் தான் நான் நன்றாக இல்லை இவர் நன்றாக இருந்திருந்தால் நான் நன்றாக இருந்திருப்பேன் என்று நம்முடைய தந்தையை சொல்லுவோம். முக்கால்வாசி பிரச்சினைக்கு இவர் தான் காரணம் என்று தந்தை அல்லது தாயை கை காட்டுவார்கள்.

நம்முடைய பிரச்சினைக்கு நாம் தாம் காரணமாக இருக்கமுடியும். பிறரை கைகாட்டிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக அதற்கு நாம் விடை காணமுடியாது. நான் நிறைய பேர்களிடம் இந்த வார்த்தை தான் சொல்லுவேன். நான் இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு நான் தான் காரணமாக இருக்கமுடியும். பிறரை பழி சுமத்துவது முட்டாள் தனமான ஒன்று.

நாம் தான் காரணம் என்று எடுத்துக்கொண்டு நடந்ததை எல்லாம் அனுபவமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டாலே போதும் நம்முடைய பிரச்சினையில் இருந்து எளிதில் வெளிவந்துவிடலாம். கொஞ்ச காலம் எடுக்கும் ஆனால் கண்டிப்பாக அனைத்திலும் இருந்து வெளிவந்துவிடலாம். 

நம்முடைய தவறுகள் எல்லாமே தோஷங்களாக தான் இருக்கும். இந்த தவறுகளை நீங்கள் சரிசெய்யும்பொழுது கொஞ்சம் வலி இருக்கதான் செய்யும். இந்த வலிகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு நாம் செயல்பட்டால் வெற்றி என்பது கண்டிப்பாக வந்துவிடும்.

கிரகங்களின் தோஷம் எல்லாம் இந்த ஜென்மம் இதற்கு முன் உள்ள ஜென்மங்களின் பிரச்சினையை தான் கொண்டுள்ளது. இந்த தோஷங்களும் எல்லாம் காலத்திலும் வருவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வருகின்றது. அப்பொழுது மட்டும் கொஞ்சம் பிரச்சினை அதிகமாக இருக்கும். நல்ல குரு கிடைத்தால் அதுவும் வெற்றியாக மாற்றிக்கொள்ளமுடியும்.

நிறைய சோதிடர்கள் வறுமையில் இருக்கின்றனர். நானும் வறுமையில் தான் இருந்தேன் சோதிடம் பார்க்க ஆரம்பித்த பிறகு அது விலகிவிட்டது என்று சொல்லலாம். சோதிடதொழிலில் உள்ளவர்கள் வறுமையில் இருக்கின்றனர். ஏன் என்று சிந்தித்து பார்த்தால் அது சோதிடத்தை தவறுதலாக சொல்லுவதால் இவர்களுக்கே தோஷம் வந்துவிடுகிறது. இவர்களை போட்டு தாக்க ஆரம்பித்துவிடுகிறது. 

கிரகங்களை புரிந்துக்கொண்டு நன்றாக பலனை சொல்லவேண்டும். பலனை எதிர்மறையாகவே சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. நல்லவிதமாகவும் நடக்கும் அது எந்த காலம் என்பதையும் சொல்லவேண்டும்.

திறமையான சோதிடனாக இருந்தால் அவன் கொடுக்கும் அறிவுரையால் எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் விலக்கி அவனுக்கு நல்லதை கொடுக்கமுடியும். சோதிடனும் நன்றாக வாழ்வான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 17, 2017

பூஜைகள்


வணக்கம்!
          ஒரு சிலர் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைவதற்க்கு காரணமாக ஒரு சில பூஜைகள் தான் இருக்கின்றன. நான் இத்தனை வருடங்கள் கண்ட அனுபவம் இது. அவர்கள் செய்யும் பூஜை அவர்களை அந்தளவுக்கு உயர்த்துகின்றது. 

நம்மால் பூஜை செய்யமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு சில வழிபாடுகளையாவது தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும் என்று தான் பச்சைப்பரப்புதலை செய்துவாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு சில காலங்கள் நாம் தொடர்ந்து ஒரு சில பூஜைகளை அல்லது வழிபாட்டுகளை செய்துவந்தால் போதும் நாம் நினைக்காத அளவிற்க்கு நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடியும். 

நாம் செய்கின்ற ஒவ்வொரு விசயத்தை இறைசக்தி நம்மை தொடர்ந்து நன்றாக கவனித்து வருகின்றது. நாம் செய்யும் பூஜைகளையும் நன்கு செய்துவரும்பொழுது நாம் நினைக்காத வாழ்க்கையை மிக சிறந்த வாழ்க்கையை கொடுக்கின்றது.

உழைப்பு என்பது இருக்கவேண்டும். உழைப்பு என்பது இல்லாமல் எதுவும் நடக்காது உழைப்போடு பூஜையும் இருந்தால் போதும் சிறந்தது உங்களை நாடி வரும்.

உழைப்பு என்பதை நீங்கள் போட்டுவிட்டு எனக்கு ஏதோ ஒரு சிறந்த வழியை காட்ட நீங்கள் பூஜைகளை செய்து தாருங்கள் என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக உங்களுக்கு செய்துக்கொடுப்பேன். ஒரு அசூரவளர்ச்சியை நீங்கள் கண்டிப்பாக அடையலாம்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்க தான் மாதந்தோறும் ஒரு கிரகத்திற்க்கு என்று பரிகாரத்தையும் நாம் கொடுத்து வருகின்றோம். அதில் இணைந்து உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்கிக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை என்று உட்கார்ந்துக்கொண்டு இருப்பதைவிட கொஞ்சம் இதிலும் கவனத்தை செலுத்த ஆரம்பியுங்கள். வாழ்க்கை வளம்பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



மாந்தி பலன்


வணக்கம்!
         மாந்தி இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை பார்த்து இருக்கிறோம். தொடர்ந்து அதனையே நாம் பார்க்கலாம். இரண்டாவது வீடு தனவீடு என்று சொல்லுகிறோம் அல்லவா. இரண்டாவது வீடு நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

இரண்டாவது வீடு இல்லை என்றால் பதினோறாவது வீட்டிற்க்கு வேலை இல்லாமல் போய்விடும். இரண்டாவது வீடு வழியாக பணம் வரும்பொழுது தான் பதினோறாவது வீடு பணத்தை லாபமாக மாற்றமுடியும்.

ஒரு சிலருக்கு மாந்தி பதினோறாவது வீட்டில் இருந்தால் பணம் வரும் என்று பொதுபலனாக சொல்லிவிடுவார்கள். நிறைய பணத்தை அவர்கள் சம்பாதிப்பார்கள் என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு இரண்டாவது வீடு நன்றாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களும் லாபத்தை பார்க்கமுடியும். 

இரண்டாவது வீட்டில் மாந்தி இருந்தால் அவர்களுக்கு பணமே வராது என்று சொல்லிவிடமுடியாது. அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்த விசயம் அது. ஒரு சிலருக்கு நான் பார்த்தவரையில் அள்ளி அள்ளி கொட்டிக்கொடுத்து கொண்டும் இருக்கின்றது.

மிகப்பெரிய அளவில் பணத்தை இரண்டாவது வீட்டில் உள்ள மாந்தி கொடுத்து இருக்கின்றது என்பது தான் உண்மை. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைவிட நிறைய பணத்தை அவர்கள் சம்பாதித்தது தெரிகிறது.

இரண்டில் உள்ள மாந்தி அடிக்கடி ஜாதகரை வெளியில் சென்று தங்கவும் வைப்பார். அது வேலை விசயமாகவும் இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்க்காகவும் வெளியில் தங்கவைக்கிறார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 16, 2017

சித்தர்கள்


வணக்கம்
          நமது நண்பர் ஒருவர் சித்தர்கள் பற்றிய தகவல்களை அனுப்பினார். ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வாக அதனை நடத்திக்கொண்டு இருப்பதை காண்பித்து கேட்டார். அந்த சித்தரைப்பற்றி நான் ஏற்கனவே நண்பர் ஒருவருக்கு சொல்லிருந்த காரணத்தால் அவர் அதனை கண்டு எனக்கு தகவல் கொடுத்தார்.

தமிழ்நாட்டிலும் சரி பிற மாநிலத்திலும் சரி நிறைய சித்தர்கள் வழிபட்ட பல இடங்களை மற்றும் நிறைய தகவல்களை நமது ஜாதக கதம்ப நண்பர்களிடம் சொல்லிருக்கிறேன். அவர்களும் அதனை சென்று பார்த்து இருக்கின்றனர்.

நான் சொன்ன இடங்கள் எல்லாம் யாராது உள்ளுர்க்காரர்கள் ஆக்கிரமித்து அதனை எடுத்துக்கொண்டு வருமானம் பார்ப்பது நடக்கும். இவர்கள் தொலைக்காட்சியை கூப்பிட்டு இந்த சித்தர் அல்லது நிறைய சித்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர் என்ற கதையை விடுவது நிறைய இடத்தில் நடக்கிறது. சம்பந்தமே இல்லாத தகவல்களை வெளியிடுவது உண்டு. 

நம்ம ஆட்கள் என்ன செய்வார்கள் என்பதை நமது ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களிடம் சொல்லிருக்கிறேன். அது எல்லாம் தற்பொழுது நடந்து வருவதை அவர்களும் கண்டுக்கொண்டுள்ளனர்.

குறை சொல்லவதற்க்காக இதனை எழுதவில்லை. பல கோவில்கள் மற்றும் சித்தர்கள் கோவில்கள் எல்லாம் அழிவதற்க்கு நம்ம ஆட்கள் செய்யும் வில்லங்கம் தான் காரணமாக இருக்கும். அதற்கு மீடியாக்களும் துணைபுரிந்து அழித்துக்கொண்டு இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 15, 2017

மாந்தி பலன்


 வணக்கம்!
          மாந்தி இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். மாந்தி இரண்டில் நின்றால் அதிகப்பட்சம் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தால் கூட திருமணவாழ்க்கை அந்தளவுக்கு வெற்றி பெறாது.

இரண்டாவது வீடு என்பது வாக்கு ஸ்தானம் என்பதால் அதிகம் பேசமாட்டார்கள் அப்படியே பேசினாலும் வம்பு சண்டை வந்துவிடுவதும் உண்டு. ஒரு சிலர் எந்த நேரமும் பேய் பிசாசு என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். வாயிலிருந்து வரும் வார்த்தை அப்படி இருக்கும்.

பணப்புழக்கத்திற்க்கு உரிய வீட்டில் மாந்தி நிற்பதால் பணம் அந்தளவுக்கு வராது. ஒரு சில காலக்கட்டங்களில் பணம் வரலாம். ஒரு சிலர் மாந்திக்கு என்று பூஜை செய்து பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவார்கள். அதுவும் அவர்களின் பூர்வபுண்ணியத்தை பொறுத்து விசயம்.

மாந்தி பூஜை என்பது கொஞ்சம் சிக்கலான ஒன்று. இதனை வைத்து ஒரு சிலர் பெரியளவில் வந்து இருக்கின்றார்கள். நிறைய கர்மம் இதன் வழியாக வரும். என்பதால் கொஞ்சம் பார்த்து நீங்கள் செய்துக்கொள்ளலாம்.

பொதுவாக இரண்டாவது வீட்டில் மாந்தி நிற்பது அந்தளவுக்கு நன்மையளிப்பது கிடையாது. குடும்பமும் நன்றாக இருக்காது. எதுவும் சரியில்லை. வாழ்க்கை வெறுத்து போகின்றது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பரிகார பூஜையை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 14, 2017

நல்வாழ்த்துக்கள்


ணக்கம்!
          அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியோடு இருக்கவும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும் நான் வணங்கும் அம்மனை இந்த நல்லநாளில் வேண்டிக்கொள்கிறேன். இந்த வருடம் முழுவதும் அம்மன் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்.



ஜாதககதம்பம் இன்று எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆதரவை தரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிமேலும் தொடர்ந்து உங்களின் நல்ஆதரவை தாருங்கள். அம்மன் அருளால் உங்களுக்கு நல்லது நடக்க என்னால் முடிந்தளவுக்கு உங்களுக்கு சேவை செய்யவேண்டும். தொடர்ந்து பல சேவைகளை உங்களுக்கு அளிக்க உள்ளேன். தொடர்ந்து நல்ல ஆதரவை தாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 13, 2017

குரு


வணக்கம்!
          உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கும் அனைத்து தொழிலுக்கும் காரகம் வகிப்பவர் குரு கிரகம். ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் அவர்க்கு அனைத்து காலங்களிலும் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிப்பதில்லை. குருகிரகம் வலுபெறும்பொழுது மட்டுமே அவர் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கலாம்.

குரு கிரகம் எனது ஜாதகத்தில் ஒரளவு நன்றாக தான் இருக்கின்றது ஆனால் ஆரம்பகாலத்தில் இருந்தே உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கவில்லை. தற்பொழுது தான் உட்கார்ந்துக்கொண்டு சம்பாதிக்கிறேன்.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற ஒரு சின்ன ஆசை இருந்தது. ஒரு வருடகாலம் பங்குவர்த்தகம் நடைபெறும் இடத்தில் இருந்து பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் அதனை நடத்திவந்தார். ஒரு இருபத்திதைந்தாயிரம் பணம் ஏற்பாடு செய்து அதில் கணக்கை துவங்கினேன்.

பங்கு வர்த்தகத்தில் கணக்கை துவங்கியது அவர்களே டிரேடிங் செய்து கொடுப்பார்கள் என்ற டீலில் துவங்கினேன். மனிதனுக்குள்ள ஆசை எனக்கும் வந்தது. கணக்கை துவங்கியவுடன் ஏகாப்பட்ட மனகோட்டை கட்டினேன். 

முதல்நாள் டிரேடிங்கில் இரண்டாயிரம் லாபம் என்றார்கள்.இரண்டாவது நாளில் ஆயிரம் நஷ்டம் என்றார்கள். மூன்றாவது நாளில் பணமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கணக்கு போய்விட்டது பணமும் போய்விட்டது.

பங்குவர்த்தகத்திற்க்கும் நமக்கும் சரிப்பட்ட வராது என்று அன்று முதல் இன்று வரை அந்த பக்கம் தலைவைத்தது கிடையாது ஆனால் ஒன்று செய்தேன். அம்மனை வைத்து நிறைய வேலை பங்கு வர்த்தகத்தில் செய்திருக்கிறேன். நண்பர்கள் வழியில் பங்கு வர்த்தகத்தில் இருந்து இன்று வரை பணம் வருகின்றது. 

குரு நன்றாக இருக்கின்றது என்று அனைத்திலும் ஈடுபடமுடியாது. சரியான வழியை தேர்ந்தெடுத்து செயல்படும்பொழுது நாம் வெற்றிபெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 12, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தியைப்பற்றி பார்த்து நீண்டநாள்களாகவிட்டது. மாந்தியைப்பற்றி பார்க்கலாம். ஒருவருக்கு மாந்தி கிரகம் லக்கினத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். சம்பந்தப்பட்ட ஜாதகரின் குணம் கொஞ்சம் மோசமாக இருக்கும்.

லக்கினத்தோடு சம்பந்தப்படும்பொழுது அவர் அதிகம் பேசாதவர்களாக அதே நேரத்தில் வெட்கப்படும் நபராக இருப்பார். வெட்கப்படுவதால் இவர் மென்மையானவர் என்பது எல்லாம் கிடையாது. படுமோசமான செயல் எல்லாம் செய்பவர்களாக இருப்பார்கள்.

உள்குத்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களால் கலகம்  விளையும். பெரும்பாலும் இவர்களுக்கு திருமணம் அமைவது கிடையாது. திருமணம் நடைபெற்றாலும் அந்தளவுக்கு திருமண வாழ்வு இருப்பதில்லை.

திருமணம் செய்யாமல் பல பேர்களோடு தொடர்பு இருக்கும். தொடர்பு பெரும்பாலும் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் போல் இருப்பவர்களிடம் இவர்களின் தொடர்பு இருக்கும்.

எந்த லக்கினத்தில் மாந்தி அமைந்திருக்கின்றது என்பதை பொருத்து பல விசங்கள் மாறுப்படும். அவர்களின் ஜாதகத்தை வைத்து தான் முழுமையான பலனை நாம் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


புத்தியை கொடுக்கும் புதன்


வணக்கம்!
          புதன்கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக அமைந்துவிட்டால் போதும் அவர் தன்னுடைய மூளையை வைத்தே பல மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். பெரிய அளவில் தன் மூளையை வைத்து அறிவுரை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில தீயகிரகத்தின் காரணத்தால் இளமையில் தன்படிப்பு வீணாகபோயிருந்தால் கூட அதன்பிறகு ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். 

நான் நமது தொழில் காரணமாக பல பேர்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அப்படிப்பட்ட சந்திக்கும் வாய்ப்பில் இப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்து பேசியிருக்கிறேன். அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கும்பொழுது படித்தவர்கள் கூட அப்படி எல்லாம் சிந்தனை செய்து செயல்பட்டு இருக்கமுடியாது அந்தளவுக்கு செயல்படுகின்றார்கள்.

ஜாதகத்தை வாங்கி பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் புதன் நல்ல நிலைமையில் இருக்கின்றது. புதன் தீயகிரகங்களோடு சேராமல் நல்ல நிலைமையில் இருந்து அவர்களுக்கு இப்படிப்பட்ட அறிவை கொடுக்கின்றது தெரிகிறது.

ஒரு சிலருக்கு புதன் தசாவில் இப்படிப்பட்ட அறிவு கிடைக்கும். தசா முழுவதும் அவர்களுக்கு அப்படிப்பட்ட அறிவை பெற்று சிறந்து விளங்குவார்கள்.

புதன்கிரகம் உங்களின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அதற்கு பரிகாரம் செய்து உங்களின் நுட்பமான அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு தொழிலிலும் சிறந்து விளங்க புதன்கிரகத்திற்க்கு பரிகாரம் செய்தால் போதுமானது நல்ல முறையில் சிறந்துவிளங்கலாம். ஏஜென்ட் தொழிலாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சூட்சமஉடல்


ணக்கம்!
          நம்முடைய வாழ்வில் நிறைய சாதிக்கவேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய வளர்ச்சியை அடையவேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள் முதலில் தன்னுடைய வாழ்க்கையை ஆன்மீகவாதியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தால் பெரிய வளர்ச்சியை அடையலாம். ஆன்மீகத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்றால் உங்களின் சூட்சமஉடல் வளர்ச்சியை நோக்கி செல்லுகின்றது. ஆரா என்று சொல்லக்கூடிய சூட்சமஉடல் நன்றாக இருந்தால் அவர்களை நோக்கி அனைத்தும் செல்லும்.

சூட்சமஉடலை எப்படி வளர்ப்பது என்று கேட்கலாம். நாம் செல்லுகின்றது கோவில் நாம் செய்கின்ற ஆன்மீகபணி மற்றும் புனிதநீராடல் போன்றவற்றால் சூட்சமஉடலை நன்கு வளப்படுத்த முடியும். யோகா மற்றும் தியானம் செய்தும் இந்த சூட்சமஉடலை வலுப்படுத்தமுடியும். 

கார்ப்ரேட் சாமியார்களை நாம் திட்டிக்கொண்டு இருப்போம். அவன் ஏமாற்றுகிறான். அவன் ஒரு போலி என்று சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் இவர்களிடம் சக்தி இருப்பதால் தான் கார்ப்ரேட் அளவுக்கு உயர்ந்து இருக்கின்றார்கள் என்று நாம் நினைப்பதில்லை. இவர்களிடம் செல்லும் நபர்களும் நன்கு படித்தவர்கள் தான் செல்வார்கள். இவர்களும் சூட்சமஉடலை மேம்படுத்த வழியை சொல்லுவதால் தான் வேலை நடக்கிறது.

வளர்ச்சியை நோக்கி செல்பவன் எல்லாவற்றையும் பயன்படுத்தினால் தான் அவன் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லமுடியும். என்னை தேடிவருபவர்களுக்கும் அவர்களின் சூட்சமஉடல் சக்தியை மேம்படுத்தும்பொழுது தான் அவர்களிடம் பெரிய ஆள்கள் வருகின்றார்கள். இதனையும் நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். மேலே சொன்ன வழிகளை எல்லாம் பின்பற்றினால் நீங்கள் ஒரு நாளில் மிகப்பெரிய அளவில் வருவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 11, 2017

கிருஷ்ணர் சொன்ன வழி


வணக்கம்!
          ஒரு ஆன்மீகவாதியோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒன்றைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். அதாவது நீங்கள் பரிகாரம் செய்கின்றீர்கள் ஆனால் அந்த பரிகாரம் வேலை செய்யவேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் உழைப்பு அதிகமாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் உங்களின் பரிகாரம் வேலை செய்யும் என்றார்.

பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்ன விசயம் தான் உண்மை. கடமையை செய்துவிடு பலனை எதிர்பார்க்காதே. உழைப்பை நீங்கள் போட்டுவிட்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். அது இன்றே கிடைப்பதற்க்கு பரிகாரம் கைகொடுக்கும்.

நீண்டநாள்கள் காத்திருக்காமல் உடனே பலனை கொடுப்பதற்க்கு பரிகாரம் நல்ல துணை புரியும். நான் தொழில் செய்பவர்களுக்கு கூட சொல்லுவது இது தான் உங்களின் வேலையை முடித்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள் உங்களை தேடி பலன் வந்துவிடும் என்று சொல்லுவேன்.

பல பேர்கள் இப்படி தான் செய்வார்கள். எங்களின் வேலை முடிந்துவிட்டது இனி உங்களின் வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லுவார்கள் அதன் பிறகு நான் பூஜை செய்து கொடுப்பது வழக்கம். 

நமது தளத்தில் செய்யப்படுகின்ற பரிகாரபூஜையில் கலந்துக்கொள்ளும் நபர்களுக்கு சொல்லுவது நீங்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பிவிட்டு இருந்துவிடாமல் உங்களின் உழைப்பை போட்டுவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலைமலரில் நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவரும் குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதலை வெளியிட்டார்கள். நமது தளத்தின் அனுமதி பெற்று அதனை அவர்கள் வெளியிடவில்லை நமது பதிவில் இருந்து எடுத்து போட்டுவிட்டார்கள். நண்பர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார் அதனை வாட்ஸ்அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

ஒரு விதத்தில் அது மகிழ்ச்சி அளிக்ககூடிய ஒன்று பச்சைப்பரப்புதலை அனைவரும் செய்வார்கள். அவர்களின் குலதெய்வத்தின் அருளால் நன்றாக வாழ்வார்கள். பச்சைப்பரப்புதலை முடிந்தளவுக்கு உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்திற்க்கு சொல்லிக்கொடுங்கள்.

பரிகாரம் செய்தவர்கள் மற்றும் தளத்திற்க்கு வரும் அனைவரும் ஒன்றை செய்யுங்கள். எந்த விதத்திலும் எதிர்ப்பு மனநிலையை பிறரிடம் காட்டாதீர்கள். நானும் ஒரு சில காலக்கட்டத்தில் எதிர்ப்பு மனநிலையில் வாழ்ந்து இருக்கிறேன். அதில் இருந்து எனக்கு நல்லது நடக்கவில்லை ஆனால் கெடுதல் தான் நடைபெற்றது.

உங்களின் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உங்களின் உறவினர்கள் மற்றும் பழகுபவர்களிடம் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினால் உங்களின் வாழ்க்கை நல்ல விதமாக செல்லாது. நாம் எந்த மனநிலையில் இருக்கின்றோம் என்பதை பொறுத்து தான் நமது வாழ்க்கையும் அமையும் என்பதால் இதனை எல்லாம் கடைபிடிக்கவேண்டும்.

இந்த உலகத்திற்க்கு என்ன கொடுக்கிறோம் என்பதில் தான் நமது வாழ்க்கையும் அமையும். நான் நல்லதை கொடுத்தால் எனக்கு நல்லது நடக்கும். நான் தீயதை கொடுத்தால் எனக்கு தீயவை தான் நடக்கும். நன்றாக நினையுங்கள் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Monday, April 10, 2017

சந்திரன் பரிகாரம்


வணக்கம்!
          கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி பழனி சென்றேன். சனிக்கிழமை அதிகாலையில் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். நேற்று முதல் பரிகாரம் ஆரம்பித்து இன்று காலை அம்மன் ஹோமம் செய்தேன். சந்திரன் பரிகாரத்திற்க்கு ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றுவந்தது நல்ல மனநிறைவையும் தந்தது.

சந்திரன் பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகருர்களுக்கு சந்திரன் பரிகாரம் செய்யப்பட்டது. சந்திரன் பரிகாரத்திற்க்கு அனுப்பிய வாட்ஸ்அப் எண்ணிற்க்கு படங்கள் அனுப்பி வைத்துள்ளேன். படம் வராதவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன்.

சந்திரன் பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு அம்மன் அருளாலும் உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷம் நிவர்த்தி செய்யபட்டதால் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

பரிகாரத்தில் கலந்துக்கொண்டு விட்டோம் ஒன்றும் இனி செய்யவேண்டியதில்லை என்று இருந்துவிடாமல் தொடர்ந்து பல முயற்சிகளை எடுங்கள். உங்களை தேடி நல்ல காலம் வரும். முயற்சி செய்பவர்களுக்கு உடனே கிடைத்துவிடும்.

ஒரு சில ஜாதகர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டு வழக்கம்போல் அப்படியே எதுவும் செய்யாமல் இருகின்றார்கள். புண்ணியம் செய்து பலனை பெறலாம். இலவசமாக அனுப்பிய ஜாதகர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். 

ஏதோ பரிகாரம் என்று செய்துவிடாமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பரிகாரம் செய்தேன். சிறந்த முறையில் மனநிறைவோடு இந்த பரிகாரத்தை செய்தேன். பலன் உங்களுக்கு கண்டிப்பாக நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 8, 2017

பரிகாரம்


வணக்கம்!
          பொதுபரிகாரம் நமது ஜாதககதம்பத்தில் அளித்தபிறகு பலர் நன்றாக பயன் அடைக்கின்றார்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் ஒவ்வொருவரும் பயன்பெறவேண்டும் என்ற நல்நோக்கத்தில் இதனை அறிவித்து செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஏதோ ஜாதகத்தை அனுப்புகிறோம் இது எங்கு நடக்க போகின்றது என்ற கவலைபடதேவையில்லை. இத்தனை வருடங்கள் ஆன்மீக சேவை செய்துக்கொண்டு வந்த நல்ல நோக்கத்திற்க்காக இறைவன் எனக்கு நல்ல சக்தியை கொடுத்து அதனை பிறர் பயன்பெற வைத்திருக்கிறான். கண்டிப்பாக அனைவருக்கும் நல்லது நடக்கும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு அமைப்பில் ஜாதக கிரகங்கள் இருக்கும். ஒன்று அல்லது இரண்டு கிரகங்களுக்கு பரிகாரம் செய்தாலே தானாகவே நல்லது நடக்க ஆரம்பிக்கும். கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று இறுதியிட்டு என்னால் சொல்லமுடியும்.

ஒரு சில ஜாதகங்களில் மட்டும் அதிகப்படியான வில்லங்கம் இருக்கும். அதனை சரி செய்ய கொஞ்ச காலம் தான் ஆகும் அதன் பிறகு நல்லது நடக்க ஆரம்பித்து விடும். 

குறைந்தது ஒரு மாதத்திற்க்கு ஒரு பரிகாரத்தை அறிவிப்பு வெளியிட்டு செய்துக்கொண்டு இருக்கிறேன். அனைத்திலும் பங்குபெற்று பயன்பெறுங்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவருக்கும் அம்மன் அருனால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 7, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          குரு கிரகம் சரியில்லாத ஆட்களுக்கு எல்லாம் வெள்ளிக்கிழமை ஒரு உகந்தநாளாகவே இருக்கும். இரண்டு குருவில் ஒரு குருவாது உங்களுக்கு உதவவேண்டும் அல்லவா. அந்த வகையில் குரு கிரகம் சரியில்லை என்பவர்க்கு வெள்ளிக்கிழமையை கெட்டியாக பிடித்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் உங்களுக்கு வாரி வழங்குவார். பல பேர்கள் சுக்கிரனின் சாரஅம்சத்தில் தான் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். குரு கிரகம் ஒரு மாதிரியான பணவளத்தை கொடுத்தால் சுக்கிரன் வேறு விதமான பணவளத்தை கொடுப்பார்.

சுக்கிரன் என்றவுடன் அசுரகுரு அதனால் கெட்டவழியில் தான் பணம் வரும் என்று கெட்டவழியை தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. சுக்கிரன் பல நல்ல வழிகளையும் கொடுத்து செல்வவளத்தை கொடுக்கிறார்.

சுக்கிரன் நல்ல பலத்தை கொடுக்கவேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்றால் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ஒரு அம்மன் கோவில் சென்றுவருவது நல்ல பலனை கொடுக்கும்.

எந்த விசயத்தையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது தான் அந்த விசயத்தின் உண்மையான பலனை நாம் அனுபவிக்கலாம் என்பதை புரிந்துக்கொண்டு தொடர்ச்சியாக அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 6, 2017

குருவும் சந்திரனும்


வணக்கம்!
           சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இன்று இறுதிநாள். இதுவரை ஜாதகத்தை அனுப்பாத நண்பர்கள் உடனே அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குரு சந்திரன் இணைந்து ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். குரு மட்டும் இதனை வழங்குவதில்லை சந்திரனும் முதன்மையாக இருக்கும் காரணத்தால் குரு சந்திரயோகம் செயல்படும்.

பெரும்பாலும் சந்திரனோடு சேரும் குரு மிகச்சிறந்த வாழ்க்கை அந்த ஜாதகருக்கு வழங்குவார். பெரிய பணக்காரர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் இந்த யோகம் இருக்கின்றது. அதனால் அவர்கள் பெரும் பணக்காரர்களாக திகழ்கிறார்கள்.

நிறைய பணம் தேவைப்படுபவர்கள் இந்த காலத்தில் என்ன யோசிப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம் என்று அதில் முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கும் யோகம் கூட சந்திரன் குருவும் சேர்ந்து இருந்தால் தான் கிடைக்கும்.

குருவும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு எப்படியாவது பணம் வந்துக்கொண்டு தான் இருக்கின்றது. உங்களுக்கு பணம் என்பதே வரவில்லை என்றால் இந்த இரண்டு கிரகங்களும் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்தால் உங்களின் நிலையை புரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 5, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
         மனிதன் என்ன தான் உழைத்தாலும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கவேண்டும். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டு மணலில் படுத்து உருண்டால் ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும் என்பார்கள்.

நல்ல சாப்பாடு என்ற ஒன்றை பதிவை தந்தேன். அதனை நம் நண்பர்கள் படித்துவிட்டு ஒரு சில கருத்தை சொன்னார்கள். அதாவது நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு இருந்தால் நமக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்றவாறு கேட்டார்கள்.

பட்டினி கிடந்தால் மட்டும் நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்று தான் கேட்க தாேன்றுகிறது. அதாவது பட்டினி கிடந்து நல்ல நிலைக்கு ஒரு காலத்தில் வந்துவிடும் நேரத்தில் உடல் நோய் தந்தால் என்ன செய்வது என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.

சாப்பிடும் சாப்பாடு அதிகமாகவும் இருக்ககூடாது. அதே நேரத்தில் மிக மிக குறைவாகவும் இருந்துவிடகூடாது. நடுநிலையில் இருந்து பராமரித்து வருவது போல் செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கையை எதிர்காலத்தில் கொடுக்கும்.

மூட்டை தூக்குபவர்கள் கூட நல்ல முறையில் தான் உடலை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்றும் நாம் நினைக்கலாம். உழைகின்றவர்களுக்கு ஒரு நாளைக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும்.

உங்களின் மனவலிமையை அதிகரித்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும். மனசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்வீர்கள் யோகா செய்யவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லுவீர்கள். யோகாவில் என்ன நடக்கும் என்றால் உங்களின் முதுகெலும்பு வலுப்படுத்த யோகா துணைபுரியும். அனைத்தையும் நன்றாக கவனித்து பார்த்தால் உங்களின் முதுகெலும்புக்கு தான் அதிகமான பயிற்சியாக அது இருக்கும்.

முதுகெலும்பை ஏன் வலுப்படுத்துகின்றார்கள் என்றால் முதுகெலும்பு வலிமை அடைய அடைய உங்களின் மனசக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். மனசக்தி அதிகமாக இருந்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும். 

யோகா செய்வர்கள் அதிக செல்வந்தர்களாக இருக்கின்றார்களா என்று நினைக்கலாம். அவர்கள் செய்யும் யோகாவை பொறுத்த விசயம் அது. கற்றுக்கொடுக்கும் ஆசானின் திறமையும் இதில் இருக்கின்றது

ஒரு நாள் நீங்கள் பட்டினி இருந்தால் உங்களின் இடுப்பு வலி ஏற்பட ஆரம்பிக்கும். முதுகெலும்பு பலன் குறைவதை அது வெளிப்படுத்துகின்றது. சாப்பாட்டை சாப்பிட்டவுடன் அந்த வலி போய்விடும்.

என்னை தேடிவருபவர்களிடம் நீங்கள் என்ன உணவை மேற்க்கொள்கின்றீர்கள் என்று நான் கேட்பதில்லை. நீங்கள் நன்றாக சாப்பிடவேண்டும் என்பதை தான் சொல்லுவேன். மனித உடலின் ஆதாரம் முதுகெலும்பு அந்த முதுகெலும்பை நீங்கள் வலுப்படுத்தும் விசயத்தில் நீங்கள் நன்றாக கவனம் செலுத்தினால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறலாம். மனசக்தியை அதிகரிக்க அதிகரிக்க உங்களை நோக்கி இந்த உலகம் வரும். 

சித்தர்கள் பட்டினியாகவே இருந்து தியானம் செய்கின்றார்கள் என்றால் அது வேறு கதை அது என்ன என்று வரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு